படு பயங்கரமா கோபத்தில் இருக்கேன். எல்லாம் இந்த வீணா போன பவர் கட்-னால தான்...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நிம்மதியா தூங்க முடியல... நிம்மதியா காலைல எழ முடியல... பின்ன என்ன எழவுக்கு தான் மிச்ச நேர கரன்டையும் விடுறாங்க ??? :-x
2020ல வல்லரசாம். இங்கே எல்லாரும் கற்காலத்த நோக்கி பயணிக்க வைக்கும் போது 2020ல வல்லராகுறதெல்லாம் கேக்க இப்ப காமெடியா இருக்கு! நெனப்புபொழப்ப கெடுக்கும்... இந்த லட்சணத்துல இந்தியா ஒளிர்கிறதாம் :-\
முதன் முதலில் ஒருமணி நேர மின்வெட்டு அமலுக்கு வந்த போது சென்னையில் வழக்கம் போலவே மின்விநியோகம் செய்யப்பட்டது. 2 மணி நேர மின்வெட்டுக்கும் அதே நிலை தான். அம்மா ஆட்சிக்கு வந்த போது 4 மணி நேர மின்வெட்டில் நாங்கள் தத்தளிக்க அங்கே மட்டும் ஒரு மணி நேரமாம். சரின்னு அதையும் பொருத்துக்கிட்டா இங்கே இப்ப 8 மணி நேர மின்வெட்டு. ஆனா சென்னையில் மட்டும் அதே ஒருமணிநேர மின் வெட்டு!
தெரியாமத்தான் கேட்குறேன். சென்னைல உள்ளவிங்களாம் என்ன வானத்திலிருந்து குதிச்சு வந்தங்களா? அவங்களுக்கு மட்டும் என்ன ஸ்பெஷல் கவனிப்பு? அங்கே மட்டும் தான் தொழிற்சாலைகளும் இன்ன பிற வளர்ச்சிக்கு உதவும் அமைப்புகளும் இருக்கிறதா? அப்படியென்றால் சென்னைக்கு மட்டும் தேர்தல் நடத்தி அவிங்க கிட்ட மட்டும் ஓட்டு கேட்கவேண்டியது தானே? என்னத்துக்கு மொத்தமா எங்க உயிர வாங்கணும்? அதுலையும் ஒலக தமிழர்கள் சாட்டில் வந்து "ஓ ஆமி... பவர் கட்டா???? எங்க(?!) நாட்ல 2 நிமிஷம் கரன்ட் போனாலே பலபேரு செத்துடுவாய்ங்க தெரியுமா ஒனக்கு?ன்னு சொல்லும் போது கடிச்சு கொதற தோணும்... தூரமா போனதுனால தப்பிச்சீங்க மக்களே....
காலை 6 மணி முதல் 9 மணி வரை
மதியம்12 முதல் 3 வரை
சாயங்காலம் 6 முதல் 7 வரை
இரவு 8 முதல் 9 வரை
10.30 முதல் 11.20 வரை
நடுசாமம் அவங்களுக்கு விருப்பப்பட்ட நேரத்தில் ஒரு மணி நேரம்...
அடப்பாவிகளா?????? இதுல எங்கே 8 மணி நேர மின்வெட்டு?
இன்னும் சில தினங்களில் "இன்று முதல் 24 மணி நேர மின்வெட்டு அமலுக்கு வருகிறது"ன்னு அறிக்கை விட்டாலும் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை :-( பேன் ஓடுனா ஒலக அதிசயத்த பாத்த மாதிரி ஆச்சர்யப்பட்டுட்டிருக்கோம். வியர்வையிலேயே எங்கள் நாட்கள் போகிறது. கொசுக்கடியிலும் புழுக்கத்திலுமே எங்கள் இரவுகள் கழிகிறது. கரன்ட் போனப்பிறகு காத்துவாங்கலாம்னு வெளியே வந்தா போரினை நினைவுபடுத்தும் விதமா எங்கிங்கிருந்தோ குழந்தையின் அழுகுரல்கள்... கொசுகடியால் பாதிதூக்கத்தில் எழுந்து கத்தும் சிறுவர்கள்... காலையில் வெளியே வந்தால் கண்ணீர் சொட்ட சொட்ட தேர்வுக்காக அவசரவசரமாக புத்தகத்தை புரட்டும் பக்கத்துவீட்டு பத்தாம்வகுப்பு மாணவி.... வயதான குழந்தைகளின் நிலை இன்னும் பரிதாபம்... :-( பட்டபகலில் கொள்ளை என்பதே சர்வசாதாரணமா போன இந்த காலகட்டத்துல இரவு நேர திருட்டுக்களுக்கு பஞ்சமே இல்ல... எங்கிருந்தோ வரும் சிறுசிறு சத்தங்கள் கூட திருடன் வீட்டில் நுழைந்துவிட்டதான பயத்தை கொடுக்கிறது. நிம்மதியாய் தூங்கி பல நாட்கள் ஆச்சு! பராமரிப்பு பணிக்காக மாதத்தில் ஒருநாள் மின்சார விநியோகம் நிறுத்திவைக்கப்படும். அதெல்லாம் அப்ப எரிச்சலான விஷயம். ஆனா அதையும் சர்வசாதாரணமாய் ஆக்கிவிட்டது இந்த மின்வெட்டு! எலவசமா கிரண்டர் மிக்ஸிய வாங்கி ஷோகேஸ்ல தான் வைக்கணும் :'(
எங்களுக்கு கொடுக்கும் கட்டண அட்டையிலும் ரசீதிலும் மின்சார சிக்கனம் தேவை இக்கணம் என எழுதிதராதீர்கள். அந்த வசனங்களை பணம் படைத்தவன் வீட்டிலும் அரசியல்வாதிகளின் மதில்களிலும் பெய்ன்ட் மூலமா பதிச்சுடிங்க -அவ்வசனம் எங்களை போன்ற நடுத்தர மக்களுக்கு அல்ல... அரசியல்வாதிகளே முதலில் நீங்க செய்யுங்க... அரசியல் மேடைகளில், சட்டசபையில், உங்கள் பங்க்ளாக்களில், பொதுவிழாக்களில் என நீங்கள் செலவு செய்யும் மின்சாரத்தை மக்களுக்கு திருப்பிவிட்டாலே போதும். நீங்க சிக்கனமா இருந்தாலே உலகநாட்டுக்கு நாம கரன்ட் வாரிவழங்கலாம் போல! :'( :'( :'( :'( :'( :'( :'( :'(
5 வருஷத்துக்கு ஒரு முறை ஓட்டுபோடும் வழக்கத்தை கொண்டு வந்தவிங்க மட்டும் கைல கெடச்சா...........
Tweet | ||||
ரொம்ப வருத்தமான விசயம் ஆமீ.. சரியா சொன்னீங்க.. பவர் கட்டால் நிம்மதி இல்லாம போச்சி. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுது.. இதுக்கெல்லாம் தீர்வு தான் என்ன?.. அம்மா மனசு வைப்பாங்களா?..
ReplyDeleteஹா ஹா! என்ன ஆமினா கரண்கட்டில ரொம்ப சூட்டாயிட்டிங்கபோல, 24 மணிநேர கரண்ட் கட் நிஜமாவே வர சான்ஸ் இருக்கு எங்க தாயகத்தில பால ஊர்கள் போரினால் பல வருடங்களாக மின்சாரம் இல்லாமலே இருந்திருக்கு.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் தங்கை
ReplyDelete//2020ல வல்லரசாம். இங்கே எல்லாரும் கற்காலத்த நோக்கி பயணிக்க வைக்கும் போது //
2020ல் வல்லரசு இல்ல கல்லரசு
எங்கே எல்லோரும் ஒரு தடவ சொல்லுங்கோ
ஜிம்பகோ ஜிம்பகோ ஜிம்பல ஜிம்பல ஜிம்பகோ
//இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-) //
ReplyDeleteஎன்னங்க இது எப்ப பார்த்தாலும் இதையே சொல்லிட்டு இருக்கிறிங்க ஆமினா. நான் எப்பங்கோ அம்புட்டுதூரம் வந்தன். இங்கை ஜெர்மனியிலதானே உக்காந்திருக்கிறன். அதுசரி ஜெர்மனியிலை இருந்து உங்க ஊரு எப்புட்டு தூரமுங்கோ? haa haa tooooo much lol ampalathar.
திட்டுறது கேட்கிறது. escape
சலாம் ஆமினா!
ReplyDelete//அரசியல்வாதிகளே முதலில் நீங்க செய்யுங்க... அரசியல் மேடைகளில், சட்டசபையில், உங்கள் பங்க்ளாக்களில், பொதுவிழாக்களில் என நீங்கள் செலவு செய்யும் மின்சாரத்தை மக்களுக்கு திருப்பிவிட்டாலே போதும். நீங்க சிக்கனமா இருந்தாலே உலகநாட்டுக்கு நாம கரன்ட் வாரிவழங்கலாம் போல! //
பொட்டுல அடிச்ச மாதிரி இருக்கும் அவங்களுக்கு! ஆனாலும் 'வலிக்கலயே..'ன்னு சொல்லிட்டு நகர்ந்துடுவாங்க. இங்க இருப்பதால் அந்தக் கஷ்டத்தை இப்போ நாங்க அனுபவிக்கல. இருந்தாலும் உங்களைப் போன்ற எல்லோரும் சொல்லும்போது மனதுக்கு கஷ்டமா இருக்கு ஆமி :(
அட இப்பிடி வாற கரண்ட வைச்சே என்னமா கலக்கிறீங்க பதிவுலகிலும் குழுமங்களிலும். ஆமினா ஒரு ஆச்சரியம்தான்.!!! (ஊரில் இருக்கும்போது யுத்தத்தால் வருடக்கணக்கில் மின்சாரம் இல்லாமல் இருந்திருக்கிறோம் சகோதரி.) ;-(
ReplyDeleteஅட இப்பிடி வாற கரண்ட வைச்சே என்னமா கலக்கிறீங்க பதிவுலகிலும் குழுமங்களிலும். ஆமினா ஒரு ஆச்சரியம்தான்.!!! (ஊரில் இருக்கும்போது யுத்தத்தால் வருடக்கணக்கில் மின்சாரம் இல்லாமல் இருந்திருக்கிறோம் சகோதரி.) ;-(
ReplyDeleteஎதற்கு இவ்வளவு தொழில் நுட்பம் கண்டுபிடிப்பு.............? ஒழுங்கா கரண்ட் விட்டாலே போதும்னு மனசு சொல்லுது.
ReplyDeleteமீண்டும் கற்காலத்திற்கே நம்மை அழத்துக்கொண்டு போய்டுவாங்க போலிருக்கே......!!!
கடைசியில சென்னை மட்டுமே தமிழ்நாடு மற்றதெல்லாம் வெறும் காடுனு அறிக்கை கொடுத்தாலும் கொடுப்பாங்க.
எதற்கு இவ்வளவு தொழில் நுட்பம் கண்டுபிடிப்பு.............? ஒழுங்கா கரண்ட் விட்டாலே போதும்னு மனசு சொல்லுது.
ReplyDeleteமீண்டும் கற்காலத்திற்கே நம்மை அழத்துக்கொண்டு போய்டுவாங்க போலிருக்கே......!!!
கடைசியில சென்னை மட்டுமே தமிழ்நாடு மற்றதெல்லாம் வெறும் காடுனு அறிக்கை கொடுத்தாலும் கொடுப்பாங்க.
"5 வருஷத்துக்கு ஒரு முறை ஓட்டுபோடும் வழக்கத்தை கொண்டு வந்தவிங்க மட்டும் கைல கெடச்சா"
ReplyDeleteதலைவரே நானும் உங்கள் கட்சிதான்.
அக்கா, வணக்கமுங்கோ
ReplyDeleteமின்வெட்டால் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை பதிவில் சொல்லியிருக்கிறீங்க.
1989ம் ஆண்டின் இறுதிக் காலம் தொடங்கி, 2000ம் ஆண்டு வரை அண்ணளவாக 10 வருடங்களுக்கு மேலே ஈழத்தின் வடக்குப் பதியில் பெருமளவான பிரதேசங்கள் மின்சாரம் என்ற ஒன்றை காணாது இருந்திருக்கிறது.
நாமெல்லோரும் குப்பி விளக்கில், சிம்மினி லாம்பில் படித்தவர்கள். நான் ப்ளஸ் 2 பாஸ் பண்ணியது சிம்மினி லாம்பில். ஆனால் இன்றைய கால கட்டத்திற்கு இந்த பவர் கட் சரிவராது!
மக்களின் அன்றாடத் தேவைகள் மின்சாரத்தோடு பின்ணிப் பிணைந்து விட்டது! வருத்தமான விடயத்தினை மின்சார வாரியம் செய்து கொண்டிருக்கிறது. பார்ப்போம்.
ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும்
ReplyDeleteநாம் எதற்கும் வாழ்க் கற்றுக் கொண்டு விடுவோம்..
என்பது இதில் சரியாகி விட்டது..
எட்டுமணி நேரம் மின்சாரம் இருக்காது என்று
தெரிந்ததும் கோபமும் சலிப்புத் தன்மையும் வந்தாலும்
இப்போது மனம் சகித்துக் கொண்டு விட்டதுவே..
அரசியல் செய்றாங்க..
வேறென்ன சொல்ல.....
ஆமா, தமிழ் நாட்ல இப்படின்னா மும்பை புற நகர்பகுதிகளில் இருக்கும் நாங்கல்லாம் பாவப்பட்டவங்க. ரொம்பவருஷமா இங்க இருக்கேன் ஃபுல் டே கரண்ட் இருந்த நாட்களே கிடையாது இதுல வேடிக்கை என்னன்னா மும்பை சிட்டி சைடில் எல்லாம் கரண்ட் கட்டோ வாட்டர்சப்ளை கட்டோ கிடையாது புற நகருக்குமட்டுமே இந்த ஸ்பெஷல் எல்லாம். நாங்களும் மின்சாரபில் எல்லாம் சரியாதானே கட்டுரோம். தண்ணியும் ஒரு நாளுக்கு காலை ஒருமணி நேரம் மட்டுமே வரும் பிடிச்சு வச்சுதான் சமாளிக்கனும் ஏற்கனவே லோட் ஷெட்டிங்க் என்கிர தலைப்பில் கரண்ட்கட் பத்தி ஒரு பதிவு போட்டிருந்தேனே நினைவு இருக்கா. இதுக்கெல்லாம் விடிவே கிடையாதுதான்.
ReplyDelete:'( நாசமா போறவைங்க! இம்புட்டு அநியாயம் பண்ணுறாய்ங்களே?
ReplyDelete******, ******, நல்லா இருப்பாய்ங்களா? *****ங்க.....
அக்கா சென்னைக்கு வந்துடுங்கோவ்!
ReplyDeleteLakshmi said...
ReplyDeleteஆமா, தமிழ் நாட்ல
இப்படின்னா மும்பை புற
நகர்பகுதிகளில் இருக்கும்
நாங்கல்லாம் பாவப்பட்டவங்க.
ரொம்பவருஷமா இங்க இருக்கேன்
ஃபுல் டே கரண்ட் இருந்த
நாட்களே கிடையாது இதுல
வேடிக்கை என்னன்னா மும்பை சிட்டி சைடில்
எல்லாம் கரண்ட்
கட்டோ வாட்டர்சப்ளை கட்டோ கிடையாது புற
நகருக்குமட்டுமே இந்த ஸ்பெஷல்
எல்லாம். நாங்களும் மின்சாரபில்
எல்லாம்
சரியாதானே கட்டுரோம்.
////
ஏன் இப்பிடி மக்களோட வயித்தெரிச்சல கொட்டிக்கிறாங்கன்னே தெரியல....:'(
~முஹம்மத் ஆஷிக் citizen of world~ has left a new comment on your post ""இன்று முதல் 24 மணி நேர மின்வெட்டு அமலுக்கு வருக...":
ReplyDeleteஸலாம் சகோ.ஆமினா,
நீங்க லக்னோவில் இருப்பீங்க... தெரியும்...
ஆனா...
எப்போ சோமாலியா போனீங்க...?
பதிவு தந்த எபெக்ட் அப்படி இருக்கு சகோ..!
தையிலேயே நீங்க இப்படி தை..தை..ன்னா...
சித்திரையில் அக்னி நட்சத்திரம் எல்லாம் வந்தா...?
போகிற போக்கில்...
கோபத்திலே உங்க பிளாக் தலைப்பை ஆப்போசிட்டா மாத்திராதீங்க... சகோ.ஆமினா..!
சரியா சொன்னீங்க!
ReplyDeleteஉங்கள் கஷ்டங்கள் புரிகிறது ஆமினா! சென்னைக்கு ஒரு நீதி, உங்க மாவட்டத்துக்கு ஒரு நீதி சரியில்லைத்தான்! உங்களின் கோபமான குரல் உரியவர்களின் காதில் விழுந்தால் சரிதான்!
ReplyDeleteதாமரைக்குட்டி சொன்னது போல நீங்க பேசாம சென்னைக்கே போயிடுங்க! ஹா ஹா ஹா !!!
சென்னை அல்லாத ஊர்களில் உள்ளவர்களின் குமுறலை நல்லா வெளிப்படுத்தி இருக்கிறீங்க!!
ReplyDeleteசென்னையில் இருக்கும் பல நிறுவனங்களின் அலங்கார விளக்குகளே மின்சாரத்தின் பெரும்பகுதியை அடைத்துக் கொள்கிறது. ஆனால், தென்னகத்தில் இருக்கும் பள்ளியிலும், மருத்துவமனையிலும் மின்சாரம் இல்லை! என்ன கொடுமைங்க இது?
"மின் சிக்கனம் தேவை இக்கணம்"- இது அனைவருக்கும் பொருந்தும்...சென்னைக்கும்!!
கரண்டு கட்டானதுல்னால் எனக்கு விளைந்த நன்மை , பல... கரண்டு கட்டு பழையநிலமைக்கு வந்ததும் அது பற்றி சொல்றேன்
ReplyDelete:-)
அருமையான பதிவு.
ReplyDeleteநன்றி.
யோகா,தியானம் எல்லாம் பண்ணுங்க... டென்சன் குறையும். :) அத மட்டும்தான் நம்மளால பண்ண முடியும். :(
ReplyDeleteமின்சாரம் இல்லாமல் கற்காலத்துக்கு போக வேண்டியது தான் போல.இங்கே மின்சாரம் 1 மணி நேரம் இல்லாவிட்டாலே எனக்கு மூச்சு முட்டி விடும் போல இருக்கும்.
ReplyDeleteநம்மளோட செலவுகளை மிச்ச படுதுரான்கப்பா
ReplyDelete//தெரியாமத்தான் கேட்குறேன். சென்னைல உள்ளவிங்களாம் என்ன வானத்திலிருந்து குதிச்சு வந்தங்களா? அவங்களுக்கு மட்டும் என்ன ஸ்பெஷல் கவனிப்பு?////
ReplyDeleteஉஸ்ஸ்ஸ்ஸ் மெதுவா ஆமினா...:)) அவிங்கட காதில கேட்டிடப்போகுது:).
Salam aapa!
ReplyDeleteCovai'il current cut'ku ethirthu poratam nadatinal police thadi'adi nadathukinranar! :(
porada kooda namaku urimai ellaiya..........?
Saitan kaiyil tamilnadu eruntal eppadi'than nadakum!
Pavam ungaluku entha pathivu ezhutha ettanai time current pocho! :-(
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
ReplyDeleteரொம்ப கஷ்டம் தான். இந்த நேரத்தில் நம்மை விட குறைவாக மின்சார விநியோகம் இருக்கும் இடங்களை பார்த்து ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டியது தான்.
//சென்னைல உள்ளவிங்களாம் என்ன வானத்திலிருந்து குதிச்சு வந்தங்களா? அவங்களுக்கு மட்டும் என்ன ஸ்பெஷல் கவனிப்பு? அங்கே மட்டும் தான் தொழிற்சாலைகளும் இன்ன பிற வளர்ச்சிக்கு உதவும் அமைப்புகளும் இருக்கிறதா?//
ம்ம்ம். பொதுவாகவே மாநில தலைநகரங்களுக்கு இதில் அதிக முன்னுரிமையே. காரணம் ஒரு மாநிலத்தின் செயல்பாடுகளுக்கு ஆணிவேராக தலைநகரம் இருப்பதால், அங்கிருந்தே ஆட்சி அதிகாரம் உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுப்பதால், இந்த ஒரு நகரிலிருந்து அரசுக்கு வரக்கூடிய வருவாய் அதிகம் என்பதால் என்று பல காரணங்களை சொல்லலாம். இது உலக நியதி :)
சரி மாற்று வழிகள் குறித்து அரசாங்கம் யோசிக்காமல இருக்குமா..காற்றாலை, நீர், சூரிய சக்தி etc etc
இம்மாதிரியான சூழ்நிலையில் தான் கூடங்குளம் அணுமின் நிலையம் நினைவுக்கு வந்துவிடுகின்றது. மின் பற்றாக்குறையால் தவித்து கொண்டிருக்கும் தமிழகத்திற்கு நிச்சயம் இது ஒரு பயனுள்ள விசயமாகவே தெரிகின்றது. தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே என்றும் கூட சொல்லலாம். ஏனென்றால் அந்த நிலையம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் அளவு அப்படி. மக்களின் அச்சத்தை போக்கி கூடிய விரைவில் அந்த நிலையம் பயன்பாட்டுக்கு வர வேண்டுமென்றே விரும்புகின்றேன்.
பார்ப்போம் இறைவன் என்ன நாடுகின்றான் என்று..
அப்புறம், டென்ஷன் ஆகாதிங்க... எங்க ஊர்ல பவர் போகாது. :)
வஸ்ஸலாம்...
2020ல வல்லரசா??
ReplyDeleteமுதல்ல இத எவன் சொன்னான்னு சொல்லுங்க..
அவன....
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.
ReplyDeleteநீங்கள் சொல்வது உண்மை தான் சகோ,பவர் இல்லாமல் கஷ்டமா இருக்கு.சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளில் மிக சிரமப்படுகிறார்கள்.வீட்டில் இன்வர்ட்டர் வைத்து இருப்பவர்களுக்கும் பேட்டரி சார்ஜ் ஏற்றுவதற்கு பவர் வேணும் தானே.யார் என்ன கத்தினாலும் ஒன்றும் வேலைக்கு ஆக போவதில்லை..:(
\\இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)\\ நான் சும்மாதனுங்கோ வந்தேன், நீங்க இவ்வளவு கேட்கிறீங்க, நானும் மனசுல பட்டதைச் சொல்லிடறேன். உங்க பிளாக் தலைப்பு 'குட்டி சுவர்க்கம்' அப்படிங்கிறதுல நியூமராலஜிப் படி கடைசி மூணு எழுத்தை நீக்கிட்டீங்கன்னா பெயர் ரொம்ப பொருத்தமா இருக்கும், உங்க பிளாக் ஓஹோன்னு ஓடும், நீங்களும் எங்கியோ போயிடுவீங்க.
ReplyDeleteஇந்த பவர் கட்டினால் மக்கள அவரஹல் தாமஹாவே அனல் மின்நீன்லயத்தை
ReplyDeleteதிறக்க போராட்டம் நடத்த வீண்டும் என்று ஆல்பவர்ஹல் நினைக்கின்றர்ஹல் , நம்ம மக்கள் என்ன கேனையா ,
நெய்வேலி அனல் மின்நீன்லயம் இருந்தும் நமக்கு முழு நீஅரம் மின்சாரம் கேடைக்கவில்லை , அதனால் வரும் பா திப்பு மட்டும் நம் மக்களுக்கு பலன் நமக்கு கெடயாது , யன்ன சார் கொடுமை இது
படு பயங்கரமா கோபத்தில் இருக்கேன். எல்லாம் இந்த வீணா போன பவர் கட்-னால தான்...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ReplyDeleteநிம்மதியா தூங்க முடியல... நிம்மதியா காலைல எழ முடியல... பின்ன என்ன எழவுக்கு தான் மிச்ச நேர கரன்டையும் விடுறாங்க ??? :-x
Me too!!!!!!!!!!!!!!!!!!
5 வருஷத்துக்கு ஒரு முறை ஓட்டுபோடும் வழக்கத்தை கொண்டு வந்தவிங்க மட்டும் கைல கெடச்சா...........
ReplyDeletesalaam....
ReplyDelete//சரின்னு அதையும் பொருத்துக்கிட்டா இங்கே இப்ப 8 மணி நேர மின்வெட்டு. ஆனா சென்னையில் மட்டும் அதே ஒருமணிநேர மின் வெட்டு!//
ReplyDeleteha..ha..
OUR LIFE IS COOL.
chennaikaran.
//5 வருஷத்துக்கு ஒரு முறை ஓட்டுபோடும் வழக்கத்தை கொண்டு வந்தவிங்க மட்டும் கைல கெடச்சா....//
ReplyDeletehttp://en.wikipedia.org/wiki/Arcot_N._Veeraswami
//இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)//
ReplyDeleteநம்ம 4 தலை முறை முன்னால இருந்தவங்க என்ன கஷ்டப்பட்டு நம்ம தாத்தா பாட்டிகளை வளார்த்தாங்கன்னு யோசிச்சுப்பார்த்தா இப்போ இருப்பது ஜுஜுபி மேட்டர் :-)
மக்களை கூடங்குள அணுமின் நிலையத்திற்கு ஆதரவாக திருப்பவே இந்த மின்வெட்டு என்று நினைக்கிறேன்...
ReplyDeleteமின்சாரத்தை தடை செய்து கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு எதிராக போராட்டம் செய்யும் தமிழக மக்களை அடிபணிய வைக்கிற திட்டமாக இது இருக்கலாம் என நம்பப்படுகிறது.
ReplyDelete//ரொம்ப வருத்தமான விசயம் ஆமீ.. சரியா சொன்னீங்க.. பவர் கட்டால் நிம்மதி இல்லாம போச்சி. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுது.. இதுக்கெல்லாம் தீர்வு தான் என்ன?.. அம்மா மனசு வைப்பாங்களா?..//
ReplyDeleteஅம்மா மனசு வச்சதுனாலதான் இந்த பாடா இருக்கு போல...
தேர்தல் வாக்குறுதிபடி மின்வெட்டு இனி இருக்காதுன்னு சொன்னாங்க. ஆனா கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு மணீ நேரமா கூடிட்டே போகுது மின்வெட்டின் நேரம் :-(
அம்பலத்தார் said...
ReplyDeleteஹா ஹா! என்ன ஆமினா கரண்கட்டில ரொம்ப சூட்டாயிட்டிங்கபோல, 24 மணிநேர கரண்ட் கட் நிஜமாவே வர சான்ஸ் இருக்கு எங்க தாயகத்தில பால ஊர்கள் போரினால் பல வருடங்களாக மின்சாரம் இல்லாமலே இருந்திருக்கு.
//
இன்னும் கொஞ்ச நாளில் எங்க ஊரில் வந்தாலும் ஆச்சர்யம் இல்ல தான் அண்ணா...
நிரூபன் நாற்றில் போட்ட பாடலை கேட்டு ரொம்பவே நொந்துட்டேன்.. :-(
ஹைதர் அலி said...
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் தங்கை
//2020ல வல்லரசாம். இங்கே எல்லாரும் கற்காலத்த நோக்கி பயணிக்க வைக்கும் போது //
2020ல் வல்லரசு இல்ல கல்லரசு
எங்கே எல்லோரும் ஒரு தடவ சொல்லுங்கோ
ஜிம்பகோ ஜிம்பகோ ஜிம்பல ஜிம்பல ஜிம்பகோ
//
வ அலைக்கும் சலாம் வரஹ்...
வர வர உங்க பின்னூட்டம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கே அண்ணா ஹி...ஹி...ஹி...
//இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-) //
ReplyDeleteஎன்னங்க இது எப்ப பார்த்தாலும் இதையே சொல்லிட்டு இருக்கிறிங்க ஆமினா. நான் எப்பங்கோ அம்புட்டுதூரம் வந்தன். இங்கை ஜெர்மனியிலதானே உக்காந்திருக்கிறன். அதுசரி ஜெர்மனியிலை இருந்து உங்க ஊரு எப்புட்டு தூரமுங்கோ? haa haa tooooo much lol ampalathar.
திட்டுறது கேட்கிறது. escape//
என்ன ஆச்சு உங்களுக்கெல்லாம்... ஏன் என்னைய பார்த்தா அப்படியா தெரியுது ஹி...ஹி...ஹி...
செல்லம்மா கிட்ட சொல்லி கொடுத்துட்டா போச்சு அவ்வ்வ்வ்
பொட்டுல அடிச்ச மாதிரி இருக்கும் அவங்களுக்கு! ஆனாலும் 'வலிக்கலயே..'ன்னு சொல்லிட்டு நகர்ந்துடுவாங்க. இங்க இருப்பதால் அந்தக் கஷ்டத்தை இப்போ நாங்க அனுபவிக்கல. இருந்தாலும் உங்களைப் போன்ற எல்லோரும் சொல்லும்போது மனதுக்கு கஷ்டமா இருக்கு ஆமி :(//
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வரஹ்..
ஆமா அஸ்மா. மாற்று ஏற்பாடுகள் செய்ய முடியாத நடுத்தர மக்களும், தேர்வெழுதும் மாணவர்களுக்கும் கண்டிப்பாக இந்த மின்வெட்டு பெரும் அவதிக்குள்ளாக்கும். இரவில் கூட விட்டுவைப்பதில்லை... ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் :-(
காட்டான் said...
ReplyDeleteஅட இப்பிடி வாற கரண்ட வைச்சே என்னமா கலக்கிறீங்க பதிவுலகிலும் குழுமங்களிலும். ஆமினா ஒரு ஆச்சரியம்தான்.!!!
:-)
//(ஊரில் இருக்கும்போது யுத்தத்தால் வருடக்கணக்கில் மின்சாரம் இல்லாமல் இருந்திருக்கிறோம் சகோதரி.) ;-(
//
அந்த அவலத்தை குறிக்கும் பாடலை கேட்டதும் மனசுக்கு கஷ்ட்டமா இருந்தது :-(
Arasu said...
ReplyDeleteஎதற்கு இவ்வளவு தொழில் நுட்பம் கண்டுபிடிப்பு.............? ஒழுங்கா கரண்ட் விட்டாலே போதும்னு மனசு சொல்லுது.
மீண்டும் கற்காலத்திற்கே நம்மை அழத்துக்கொண்டு போய்டுவாங்க போலிருக்கே......!!!
கடைசியில சென்னை மட்டுமே தமிழ்நாடு மற்றதெல்லாம் வெறும் காடுனு அறிக்கை கொடுத்தாலும் கொடுப்பாங்க.
//
அப்படி விட்டு தொலைச்சாலும் பரவாயில்ல சகோ. என்னமோ அங்கே இருக்கறவங்க தான் மனுஷங்க மாதிரி பண்ற அலப்பறை தான் தாங்க முடியல ஹி...ஹி...ஹி...
விச்சு said...
ReplyDelete"5 வருஷத்துக்கு ஒரு முறை ஓட்டுபோடும் வழக்கத்தை கொண்டு வந்தவிங்க மட்டும் கைல கெடச்சா"
தலைவரே நானும் உங்கள் கட்சிதான்.
//
ஹி...ஹி...ஹி...
வாங்க விச்சு. வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்
@நிரூ
ReplyDeleteஅக்காலகட்டத்தில் நீங்கள் பட்ட துன்பம் கண்முன்னே நிற்கிறது :-(
@மகேந்திரன்
ReplyDeleteஆம் சகோ. இப்ப எளிதாக பழகிவிட்டது :-(அ
@லெட்சுமி
ReplyDeleteமாமி அங்கேயும் இந்த கொடுமையா :-( எங்கே போனாலும் விடாது போலையே அவ்வ்வ்
@தாமர
ReplyDelete//:'( நாசமா போறவைங்க! இம்புட்டு அநியாயம் பண்ணுறாய்ங்களே?
******, ******, நல்லா இருப்பாய்ங்களா? *****ங்க.....//
அவ்வ்வ்வ்
என்ன சொல்ல வர்ர தாமர ஹி...ஹி...ஹி...
அக்கா உன்னை விட்டுட்டு வந்த பொறவு சென்னை பாசை பேசுறதெல்லாம் நிறுத்திட்டேன் டா
@தாமரை
ReplyDelete//அக்கா சென்னைக்கு வந்துடுங்கோவ்!//
பொடலங்கா சாதம், பாவக்கா சாதம்னு என் கையால சாப்பிட உனக்கு அவ்வளவு ஆசைன்னா நா வேற என்ன சொல்ல? அடுத்த மாசமே வந்துடுறேன் வழியில் விழி வைத்து காத்திரும் :-)
@தாமரைகுட்டி
ReplyDelete//ஏன் இப்பிடி மக்களோட வயித்தெரிச்சல கொட்டிக்கிறாங்கன்னே தெரியல....:'(//
ம்ம் :-(
@சகோ ஆஷிக்
ReplyDeleteஅதுக்குள்ளையும் அம்மா மனசு வச்சுடுவாங்கன்னு நம்பிக்கை இருக்கு. பாக்கலாம். மாற்று வழிகளை தான் தேர்ந்தெடுக்கணும் :-)
@சிநேகிதன் அக்பர்
ReplyDeleteநன்றிங்க
@ஒ.தெ. ஐடியாமணி
ReplyDeleteஆம் ஐடியா. அதான் சில நேரங்களீல் எரிச்சலா வருது. அதுவும் இந்த தாமர பய எப்ப பார்த்தாலும் கரன்ட் எங்க ஏரியால இருக்கேன்னு சொல்லும் போது அவன மலைல இருந்து தள்ளிவிடலாம் போல இருக்கு அவ்வ்வ்வ்வ்வ்
@ஆளுங்க
ReplyDeleteவருகைக்கு நன்றி சகோ
ஆம். அங்குள்ளவர்கள் ஆடம்பர வாழ்க்கைக்கு மின்சாரத்தை பயன்படுத்துவதை தவிர்த்தாலே நலம். அதை விட்டுட்டு சாலையின் நடுவில் வைக்கப்படும் விளம்பர போர்ட்க்குள்ளலாம் லைட் போடுவதும், தேவையில்லாமல் விழாக்கள், அரசியல் வாதிகளின் வருகை போன்ற சப்ப மேட்டர்க்கெல்லாம் மின்சாரத்தை உபயோகிப்பதுன்னு வேஸ்ட் பண்ணாம இருந்தா நலம் தான் :-(
@ரத்னவேல்
ReplyDeleteமிக்க நன்றி ஐயா
@சேலம் தேவா
ReplyDelete//யோகா,தியானம் எல்லாம் பண்ணுங்க... டென்சன் குறையும். :) அத மட்டும்தான் நம்மளால பண்ண முடியும். :(//
ஹா..ஹா...ஹா..
வேற என்ன சொல்ல முடியும் :-)
@வானதி
ReplyDelete//இங்கே மின்சாரம் 1 மணி நேரம் இல்லாவிட்டாலே எனக்கு மூச்சு முட்டி விடும் போல இருக்கும்.//
க்ர்ர்ர்ர்ர்ர்ர்
இதானே வேணாங்குறது அவ்வ்வ்
@தாரிஹ்
ReplyDelete//நம்மளோட செலவுகளை மிச்ச படுதுரான்கப்பா//
ஹி...ஹி...ஹி.. நானும் அப்பப்ப இப்படி சொல்லி மனச தேத்திக்குவேன் :-)
@அதிரா
ReplyDelete//
உஸ்ஸ்ஸ்ஸ் மெதுவா ஆமினா...:)) அவிங்கட காதில கேட்டிடப்போகுது:).//
ஹா..ஹா....ஹா... அதுசரி :-)
@ஜாப்பர்
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வரஹ்
நலமா தம்பி
ஆமா நானும் கேள்விபட்டேன். சென்னையில் இருக்கும் தம்பியிடம் புலம்பிய போது நீயும் கோயமுத்தூர்காரங்கள மாதிரி போராட்டம் பண்ண வேண்டியது தானேன்னு கேட்டான். நம்ம போலீஸ்ட்ட அடி வாங்க வைக்கிறதுல அவ்வளவு கண்ணும் கருத்துமா செயல்படுதுங்க பயபுள்ளைங்க :-)
//Pavam ungaluku entha pathivu ezhutha ettanai time current pocho! :-(//
ம்ம் :'(
@சகோ ஆஷிக்
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வரஹ்
//இது உலக நியதி :) //
அப்படியெல்லாம் சொல்லிட முடியாது. நா ஒத்துக்க மாட்டேன். என்னோட சேர்ந்து சென்னைய திட்டுறவங்களுக்கு தான் இங்கே அனுமதி ஹி...ஹி...ஹி..
கூடங்குளத்தை திறக்க வைக்க தான் இத்தகைய ஏற்பாடுகள். கூடங்குளத்தை நம்பி தான் அம்மா வாக்குறுதியே கொடுத்தாங்க. அது மூடப்பட்டதும் அந்த கோபத்தை இப்படியாக பழிதீர்க்குறாங்க. இப்ப நடக்கும் போராட்டங்களில் பலர் அணு உலை திறக்கப்படவேண்டும் என குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். என்ன தான் நடக்குதுன்னு பார்க்கலாம்
//அப்புறம், டென்ஷன் ஆகாதிங்க... எங்க ஊர்ல பவர் போகாது. :)
//
நல்லா இருங்க மக்கா... நல்லா இருங்க
@இந்திரா
ReplyDelete//2020ல வல்லரசா??
முதல்ல இத எவன் சொன்னான்னு சொல்லுங்க..
அவன....
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//
ஹி..ஹி...ஹி.. கொஞ்ச நாளா அவங்கள தான் கொலவெறியோட தேடிட்டிருக்கேன். கைல கெடச்சா மதுரைக்கு பார்சல் அனுப்பிடுறேன் :-)
@ஆயிசா
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வரஹ்
ஆமா ஆயிசா. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கரன்ட் கட் பண்ணா என்ன தான் பண்ண முடியும்? மாவு அரைத்து பல மாசம் ஆச்சு! :-(
ganesan said...
ReplyDelete5 வருஷத்துக்கு ஒரு முறை ஓட்டுபோடும் வழக்கத்தை கொண்டு வந்தவிங்க மட்டும் கைல கெடச்சா...........
//
ஹி...ஹி...ஹி..
தேவையானத நானே என் இஷ்ட்டத்துக்கு பில் பண்ணிக்கிறேனுங்க
சிந்தனை said...
ReplyDeletesalaam....
//
வ அலைக்கும் சலாம் வரஹ்...
! சிவகுமார் ! said...
ReplyDelete//சரின்னு அதையும் பொருத்துக்கிட்டா இங்கே இப்ப 8 மணி நேர மின்வெட்டு. ஆனா சென்னையில் மட்டும் அதே ஒருமணிநேர மின் வெட்டு!//
ha..ha..
OUR LIFE IS COOL. //
யானைக்கு காலம் வந்துடுச்சு
பூனைக்கும் வந்துடும் :-)
! சிவகுமார் ! said...
ReplyDelete//5 வருஷத்துக்கு ஒரு முறை ஓட்டுபோடும் வழக்கத்தை கொண்டு வந்தவிங்க மட்டும் கைல கெடச்சா....//
http://en.wikipedia.org/wiki/Arcot_N._Veeraswami
//
என் சார்பில் என் எண்ணங்களை நிறைவேற்ற உங்களை அனுப்புகிறேன்
வெற்றியுடன் திரும்பி வாருங்கள்,
Jayadev Das said...
ReplyDelete\\இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)\\ நான் சும்மாதனுங்கோ வந்தேன், நீங்க இவ்வளவு கேட்கிறீங்க, நானும் மனசுல பட்டதைச் சொல்லிடறேன். உங்க பிளாக் தலைப்பு 'குட்டி சுவர்க்கம்' அப்படிங்கிறதுல நியூமராலஜிப் படி கடைசி மூணு எழுத்தை நீக்கிட்டீங்கன்னா பெயர் ரொம்ப பொருத்தமா இருக்கும், உங்க பிளாக் ஓஹோன்னு ஓடும், நீங்களும் எங்கியோ போயிடுவீங்க.
//
வாங்க பாஸூ
நீங்க வந்ததுனால தான் என் ப்ளாக்குக்கு ஒரு அர்த்தம் பொறந்துருக்கு!
எதுக்கு பாஸு மாத்தணும்? அதான் நீங்க கால் எடுத்து வச்சுட்டீங்கள? இனி தன்னால குட்டிசுவர்ரா தான் போகும். நீங்க கவலபடாதீங்க.. ஒடம்புக்கு ஆவாது. இப்பவே ஒத்தடம் கொடுக்க ஆள் ரெடி பண்ணி வச்சுக்கோங்க :-)
அடிக்கடி வாங்க ஜெயதேவ்...
அப்பறம் அதே நியூமராலஜிப் படி உங்க பேரும் மாத்தணுமாம். என்னான்னு கேட்டீங்களா?? தேவ்க்கு முன்னாடி இருக்குற ஜெயம் உங்களுக்கு இனி எமகண்டம். தேவ் என இரண்டெழுத்து வார்த்தையும் சரிபட்டுவராது. சோ "மூ"னு எழுத்துல உள்ள பேரா வச்சுக்கோங்க. பெயர் சூட்டு விழாவுக்கு கூப்டுவீங்கதானே???
@அனானி சார்
ReplyDelete//இந்த பவர் கட்டினால் மக்கள அவரஹல் தாமஹாவே அனல் மின்நீன்லயத்தை
திறக்க போராட்டம் நடத்த வீண்டும் என்று ஆல்பவர்ஹல் நினைக்கின்றர்ஹல் , நம்ம மக்கள் என்ன கேனையா ,
நெய்வேலி அனல் மின்நீன்லயம் இருந்தும் நமக்கு முழு நீஅரம் மின்சாரம் கேடைக்கவில்லை , அதனால் வரும் பா திப்பு மட்டும் நம் மக்களுக்கு பலன் நமக்கு கெடயாது , யன்ன சார் கொடுமை இது//
அதே தான் நானும் நினைக்கிறேன். ஆல்ரெடி இப்ப எல்லாரும் புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க. இன்னும் கொஞ்ச நாள் இதே பத்துமணி நேர மின்வெட்டு தொடர்ந்தா தமிழ்நாடே அணுமின்நிலையம் தொடங்க சொல்லி போராட்டம் நடத்தும் பாருங்க!
வருகைக்கு நன்றிங்க சகோ
@கணேசன்
ReplyDelete//ganesh said...
படு பயங்கரமா கோபத்தில் இருக்கேன். எல்லாம் இந்த வீணா போன பவர் கட்-னால தான்...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நிம்மதியா தூங்க முடியல... நிம்மதியா காலைல எழ முடியல... பின்ன என்ன எழவுக்கு தான் மிச்ச நேர கரன்டையும் விடுறாங்க ??? :-x
Me too!!!!!!!!!!!!!!!!!!
//
ஹி..ஹி..ஹி.. ஜோதியில் ஐக்கியாய்டுங்கோ
ஜெய்லானி said...
ReplyDelete//இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)//
நம்ம 4 தலை முறை முன்னால இருந்தவங்க என்ன கஷ்டப்பட்டு நம்ம தாத்தா பாட்டிகளை வளார்த்தாங்கன்னு யோசிச்சுப்பார்த்தா இப்போ இருப்பது ஜுஜுபி மேட்டர் :-)
//
ஏன் சொல்ல மாட்டீங்க?
சார்ஜால இருந்துட்டு பேசுனா இப்படி தான் பேச்சு வரும்!
எதாவது திட்டி கமென்ட் போடுங்க ஹி...ஹி...ஹி..
@ரெவரி
ReplyDelete//ரெவெரி said...
மக்களை கூடங்குள அணுமின் நிலையத்திற்கு ஆதரவாக திருப்பவே இந்த மின்வெட்டு என்று நினைக்கிறேன்...
//
ஆல்ரெடி முக்கால்வாசி மக்கள் சாஞ்சுட்டாங்க. இனி ஆண்டவன் கையில் தான் இருக்கு
@தீபிகா(Theepika)
ReplyDelete// மின்சாரத்தை தடை செய்து கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு எதிராக போராட்டம் செய்யும் தமிழக மக்களை அடிபணிய வைக்கிற திட்டமாக இது இருக்கலாம் என நம்பப்படுகிறது.
//
ம்ம்.
நடப்பதெல்லாம் பார்த்தால் அப்படிதான் இருக்கு
பொறுத்திருந்து பார்ப்போம்.
Hi Amina, I replied to your feedback in Nirupen's Blog, but that guy is not publishing my feedbacks immediately but takes few days approve them, I don't know why. you may read them when they are published, and post your replies. Bye.
ReplyDeleteஹாய் ஜயதேவ்
ReplyDeleteநல்லா இருக்கீங்களா?
இன்னைக்கு தான் உங்க கமென்ட் பார்த்தேன். நானும் பதில் போட்டிருக்கேன் சகோ.