பிபோர் ஒரு இயர்( நாட் காது... தட்ஸ் மீன் வருஷம். ஆங் நாட் பிஸ்... தட்ஸ் மீன் அர்த்தம்... ஓ மை கடவுளே) .. ஐயாம் வாசிச்சிங்  3 பாகம் ஆப் தொடரிங் ஸ்டோரி. பட் கான்ட் தொடரிங் பிகாஸ்  மை டைம் இன்மை அன்ட் சோம்பேறிதனம். பட் 4 டேஸ்க்கு பிபோர் அந்த ஸ்டோரி ரைட்டர கேட்சிங் அன்ட்   லிங்க் வாங்கிங். சோ இன்னைக்கு புல் ப்ரீத்திங் ல புல்லா  வாசிச்சுடு (பாஸ்ட் டென்ஸ் ஹி..ஹி..ஹி..) அதாகப்பட்டது எ குட் ஒன் ப்ரம் தி வலைபதிவர்... ஐ வான் ஸ்பீக் அபவுட்  ஹிஸ் நினைவுகள் தொடரிங் ஸ்டோர்ரி. ( வீடியோல நல்லா தெரியுறேனா? ஆங்... ஓக்கே... இனி ஐ ஆம் தொடரிங் இன் மை மம்மி லாங்வேஜ் டமில்... எவரிபடி க்ளாப் பார் மை வேல்யுஅபிள் ஸ்பீச் ப்ளீஸ்.. அட கைத்தட்டுங்கப்பா... எல்.கே கிட்ட சொல்லி பிரியாணி வாங்கிதரேன்)

கதையின் ஆசிரியர்:-
நம் அனைவருக்கும் நன்கு பரிச்சயமான பதிவர் எல்.கேயின் கதை தான் இது (நிஜமல்ல கதை. அதுக்கு மேல உங்க இஷ்ட்டம். அவர் மழைக்கு கூட ஸ்கூல் பக்கம் ஒதுங்குனதில்லன்னு சொன்னா கேக்கவா போறீங்க?? என்னது? அவர் தான் கதையோட ஹீரோவா????? நேக்கு தெரியாது  ஹி...ஹி...ஹி...). ஜனவரி 6ல் ஆரம்பித்து மார்ச் 24ல் முடிச்சாரு. மொத்தம்  20 பாகம். ஆனா நீங்க ஒரு மணி நேரம் செலவு செய்தால் போதும். மொத்த கதையினையும் ருசிபார்க்கலாம்.


அருமையான கதை :-
காதலை அடிப்படையாக கொண்ட தொடர். அதனாலோ என்னவோ சளிப்பை ஏற்படுத்தவில்லை :-) மேலும் ஒவ்வொரு பாகமும் 2 நிமிடங்களில் முடிக்கும்படி செய்தது படிப்பவர்களுக்கு சளிப்பை ஏற்படுத்தாத அதே வேளையில் அடுத்து என்ன நடக்க போகும் என்ற எதிர்பார்ப்பை அதிகரிக்கும்  என்பதில் சந்தேகமே இல்லை.

கதையின் நாயகி சரஸ்வதி என்கிற சாருவிற்கு வரன் தேடும் சமயம் அவளுடன் படித்த வெங்கட்டின் போட்டோவும்,ஜாதகமும் வருகிறது. ஆனால் அவள் வேண்டாம் என்று அதை நிராகரிக்க வெங்கட் சோகமடைகிறான். அதே சமயத்தில்,அவளுடைய கல்லூரித் தோழன் ரமேஷ் அவளை சந்திக்க, அந்த சந்திப்பில் வெங்கட்டைப் பற்றிய பழைய நினைவுகள் அவள் மனதில் ஓட ஆரம்பிக்கின்றன. ஏன் சாரு வெங்கட்டை நிராகரிக்கிறாள்? அவர்களுக்குள் நடந்தது என்ன?  சாருவிற்கும் வெங்கட்டிற்கும் நடுவில் இருக்கும் ரமேஷினால் நடக்க போவது என்ன? அவன் நல்லவனா கெட்டவனா???? என்பது தான்  கதை... இந்த மூவருக்குள் நகரும் ஒவ்வொரு காட்சிகளையும் ரசித்து ரசித்து செதுக்கியிருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும்.

பாத்திர அமைப்பு :-
வெங்கட்டை விட சாருவிவை அதிகமாக வர்ணித்த போதிலும் கவனிக்கப்படாமல் விட்டுவிட்ட வெங்கட் தான் மனசுல நிக்கிறார்.  வெங்கட்டின் உருவத்தையோ அல்லது அவனின் குணங்களை பற்றியோ அதிகமாக சொல்லப்படாவிட்டாலும் ஈரம்-ஆதியை நியாபகப்படுத்த வைக்கிறார். ரமேஷ் ஒரு இடத்தில் 2 பேருக்கும் இடையில் மாட்டிட்டு நாம முழிக்கிறோமே என்ற எண்ணம் தோன்றியதை வெளிப்படையாக அதிகம் சொல்லாவிட்டாலும் சிரிப்பை வரவழைத்தது. ஒரு நல்ல நண்பனாய்(அதே நேரத்தில் சராசரி ஆணாய்) எதார்த்தமாய் அந்த பாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. 3 பேருமே மனசுல நீங்காத இடத்தை பிடிக்கிறாங்க.

வர்ணனைகள் :-
சாருவிற்கு கொடுக்கப்பட்ட வர்ணனைகள் அவளின் அழகினை மனதில் பதிய செய்தது. ஆனா ஏன் நம்ம ஹீரோவ மட்டும் கவனிக்காம விட்டுட்டார்ன்னு தெரியல ஹி...ஹி...ஹி.. 
 எல்.கே!  மை பூசிய கண்கள் மேல அப்படி என்ன உங்களுக்கு காதல்? ஹி...ஹி..ஹி.. சென்னை பித்தன் ஐயா சியாமளா தொடர்கதையில் ஒரு இடத்தில் சொன்ன போது இப்படியான கற்பன தான் ஓடுச்சு..

 ***********************
அம்மா- ஏன் டா ஸ்கூல்க்கு போக மாட்ற?

எல்.கே- அந்த மிஸ் கண்ணுக்கு மை போடல

ஒரு பெண்- ஏன் டா நா கொடுத்த லவ் லெட்டர கிழிச்சுட்ட?

எல்.கே- உன்  கண்ணுல மை இல்ல

அம்மா- இந்த பொண்ணாவது ஓக்கேன்னு சொல்லுடா

எல்.கே- கருப்பா, குள்ளமா, இருக்குற பொண்ண வேணும்னா கட்ட சொல்லுங்க.. ஆனா கண்ணுக்கு மை போடாத பொண்ணு வேணாம்

எல்.கே நண்பர்கள்-  உன் வருங்கால மனைவிக்கு என்ன கிப்ட் வாங்கி வச்சுருக்க??

எல்.கே-  10 கிலோக்கு மை டப்பா, ஐலைனர், மஸ்காரா வாங்கி வச்சுருக்கேன் மச்சான்
 ***********************
அந்த பெண் காலேஜ்ஜில் படிக்கும் போது மை போட்டுக்கிட்டா சரிதான்.  மாடர்ன்னா மாறிய பிறகும் தொடர்ந்ததா? (சாரு கிட்ட கேட்டு சொல்லுறேன் -எல்.கே) அதன் பிறகு வார்த்தைகளில் இன்னும் அதிகமா கவனம் செலுத்தியிருக்கலாமோ எல்.கே? தெளிந்த நீரோடை- கல் பட்டு குழம்பும் குளம் என அவளின் மனதின் நிலையை எடுத்துகாட்டியது பாராட்டுக்குரியதே.. அதே வேளையில்,அதே மனநிலையை பிறிதொரு முறை சுட்டும் போது வேவ்வேறு உவமைகளை கையாளலாம்.  இது போல் நிறைய இடங்களில்  அதிகமா ஒரே வார்த்தை ரிப்பீட் ஆகுது.. இப்ப எழுதுற தொடரில் கவனமா இருங்க !

(தெளிவாய் இருந்த குளத்தில் கல் எறிந்தால் எப்படி ஆகுமோ அப்படி இருந்தது அவள் மனம்.

அதுநாள் வரை நிற்காமல் செல்லும் தெளிந்த ஆற்று நீராய் இருந்த அவள் மனது, கல் பட்டுக் குழம்பும் குட்டையாய் ஆனது)


என் பார்வையில் (மட்டும்) :-
நான் கூட முதல் 4 பாகங்களை படித்த போது முன்பு அவர்களுக்குள் பெரிய பிரச்சனை ஒன்று நடந்திருப்பதாகவே நினைத்தேன். ஆனால் சாதாரண விஷயத்திற்காகவா ஒருவனை வெறுக்கும் அளவுக்கு பிரிவு? இந்த பிரிவுக்கு மட்டும் இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்கான விஷயம் இருந்திருந்தால் இன்னும் அழகு கூடியிருக்குமோ என தோன்றியது. "நீ கேட்ட மாதிரியே நா கேட்கவா" என சொன்னதும் ஸ்ட்ராங்கான காரணம் தான் அவள் கோபப்பட அந்த ஒரு வார்த்தை போதுமானது... ஆனால் கொஞ்சூண்டு என்  மனசு ஏத்துக்கல.....   அப்பறம் ரொம்ப கட்டுப்பாடான குடும்பத்தில் வளரும் பெண்ணாக காட்டி விட்டு வெங்கட்டை பார்த்த அடுத்த நாளே அவனிடம் காதலை சொல்வது போல் காட்டியது உலக சினிமா வரலாற்றில் முதன் முறையாக  என்றாலும் லாஜிக் இடிச்சது அவ்வ்வ்வ்வ்வ்வ் ( நீ பாராட்டுறீயா திட்டுறீயா- எல்கே).

ஹாப்பி என்டிங் :-

//அப்பொழுதுதான் அவனுடைய உதட்டை அருகில் பார்த்தவள் "அடப்பாவி மறுபடியும் ஸ்டார்ட் பண்ணிட்டியா ?//

பயபுள்ளைக.. சண்ட போடுறதையே ஒரு பொழப்பால வச்சுருக்குதுக! இதுக்கு இதுங்க பிரிஞ்சே இருக்கலாம் ஹி...ஹி...ஹி..

மென்மையான  காதலையும் அழகான ஆண்-பெண் நட்பையும்  தாங்கி வந்த அருமையான படைப்பு இது. காதல், நட்பு, பிரிவு, ஊடல், பிடிவாதம், காதலில் சந்தேகம்  என கதையில் கோர்க்கப்பட்ட ஒவ்வொரு விசயங்களும்  ஒன்றாய் சேர்ந்து ஒரு அழகிய மாலையாக நினைவுகளாக உருவாக்கியிருக்கிறார் பதிவர். க்ரேட் எல்.கே... முதல் முயற்சியிலேயே உங்கள் திறமையை காட்டிட்டீங்க.  ஒருவனின் படைப்புக்கான வெற்றி என்ன தெரியுமா? பல காலம் ஆனாலும் அந்த படைப்பை பற்றிய  எண்ணம் வாசகரின் மனதில் இருக்க வேண்டும். 3 பாகங்களை மட்டுமே படித்துவிட்டு தொடர முடியாமல் போன போதும் அந்த கதை மனதினை விட்டு மறையவில்லை (7 ஜனவரி 2011 அன்று முதல் பாகத்தை படித்தேன். இத்துடன் சரியாக ஒருவருசம் ஒரு மாசம் ஆய்டுச்சு). மனதினை வசீகரிக்கும் நினைவுகளை கொடுக்கும் அந்த திறமை எல்.கே கிட்ட இருக்கு. இன்னும் நீங்க நிறையா நிறையா எழுதி நல்லதொரு கதாசிரியராக, எழுத்தாளராக வர என் வாழ்த்துக்கள்

நினைவுகள்- உங்கள் பழைய நினைவுகளை அசைபோட வைக்கும். அல்லது உங்களை ஏங்க  வைக்கும்.... சவால்!

டிஸ்கி- மொத்த கதையும் படிச்சு கமென்ட் போட்டால் பெருசா வந்துச்சு... அதுனால நானே என் ப்ளாக்கில் போட்டுட்டேன். எல்.கேயை எவ்வளவு தான் திட்டினாலும் அவர் கோபப்படமாட்டார் என்பதால் தகிரியமா  என் விமர்சனத்தை முன் வைக்கிறேன்(திட்டிடுவாராக்கும்...???? நாங்களாம் யார்ரு???).  இவை அனைத்தும் முழுக்க முழுக்க ஒரு வாசகியின்  கண்ணோட்டம் மட்டுமே... தேர்ந்த ஒரு விமர்சகரால் எழுதப்பட்டது அல்ல என்பதை நினைவில் கொள்ளவும் :-)  அந்த அழகிய படைப்பினை படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

நினைவுகளை படிக்க:-


,

30 comments:

 1. //நினைவுகளை படிக்க:-//
  //பாகம் 1 .......20//

  அவ்வ்வ்..

  இப்படி பக்கம் பக்கமா பாகத்தைப் படிக்க சொன்னா எப்புடி???
  மீ எஸ்கேப்..

  ReplyDelete
 2. //Your comment will be visible after approval. //


  இது வேறயா???

  ReplyDelete
 3. @இந்திரா
  //
  இப்படி பக்கம் பக்கமா பாகத்தைப் படிக்க சொன்னா எப்புடி???
  மீ எஸ்கேப்..//

  நீங்க நல்லவங்கன்னு தெரியும்.. படிச்சுடுவீங்கன்னு தெரியும்... இல்லைன்னா உங்க வேண்டுகோளை நீங்களே நிறைவேத்தலன்னு சொல்லி போராட்டம் பண்ணுவேனாக்கும்!

  ReplyDelete
 4. @இந்திரா

  ////Your comment will be visible after approval. //


  இது வேறயா???//

  உங்க அளவுக்கெல்லாம் எங்களுக்கு தெகிரியம் இல்லைங்கம்மணி

  ReplyDelete
 5. நல்ல பகிர்வு படித்துவிட்டால் போச்சு

  ReplyDelete
 6. /////பிபோர் ஒரு இயர்( நாட் காது... தட்ஸ் மீன் வருஷம். ஆங் நாட் பிஸ்... தட்ஸ் மீன் அர்த்தம்... ஓ மை கடவுளே) .. ஐயாம் வாசிச்சிங் 3 பாகம் ஆப் தொடரிங் ஸ்டோரி. பட் கான்ட் தொடரிங் பிகாஸ் மை டைம் இன்மை அன்ட் சோம்பேறிதனம். பட் 4 டேஸ்க்கு பிபோர் அந்த ஸ்டோரி ரைட்டர கேட்சிங் அன்ட் லிங்க் வாங்கிங். சோ இன்னைக்கு புல் ப்ரீத்திங் ல புல்லா வாசிச்சுடு (பாஸ்ட் டென்ஸ் ஹி..ஹி..ஹி..) அதாகப்பட்டது எ குட் ஒன் ப்ரம் தி வலைபதிவர்... ஐ வான் ஸ்பீக் அபவுட் ஹிஸ் நினைவுகள் தொடரிங் ஸ்டோர்ரி. ( வீடியோல நல்லா தெரியுறேனா? ஆங்... ஓக்கே... இனி ஐ ஆம் தொடரிங் இன் மை மம்மி லாங்வேஜ் டமில்... எவரிபடி க்ளாப் பார் மை வேல்யுஅபிள் ஸ்பீச் ப்ளீஸ்.. அட கைத்தட்டுங்கப்பா... எல்.கே கிட்ட சொல்லி பிரியாணி வாங்கிதரேன்)////

  கதையை படிங்க என்றால் படிச்சிட்டு போறம் அதுக்கு ஏன் அக்கா இப்படி திட்டுறீங்க அவ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 7. Yes u telling i'm ketting!
  Nice story
  excelent vimarchanam but i think neengaley why oru story ezhutha koodathu ? :) :) :)
  by tanglish'il pesi ezhuti aalai kollum amina akkavin pasamika pasarai :)

  ReplyDelete
 8. ஏற்கனவே பாகீரதியில் படிச்சுட்டேன் ஆமி.

  ReplyDelete
 9. சரிங்க நானும் படிக்கிறேன்.

  ReplyDelete
 10. நன்றி ஆமினா . இதுவரை புத்தங்களுக்கு விமர்சனம் வந்துதான் பார்த்துள்ளேன். முதல்முறையா என் கதைக்கு ஒரு விமர்சனம். குறைகளைக் கண்டிப்பா நிவர்த்தி செய்வேன்

  அப்புறம் அந்த மை விஷயம், எப்பவும் மையிட்ட விழிகள் மேல் மையல் உண்டு

  ReplyDelete
 11. இந்த வீகென்ட் வாசிப்பு...நன்றி ஆமீனா..

  ReplyDelete
 12. ஆனா நீங்க ஒரு மணி நேரம் செலவு செய்தால் போதும்///அவ்வ்...இங்கே தான் கொஞ்சம் இடிக்குது. வேலை எல்லாம் முடிச்சுட்டு வாறன்.

  ReplyDelete
 13. வணக்கம் ஆமினா அக்கா, மற்றும் எல்.கே அண்ணர்,

  எல் கே அண்ணரின் திரிலிங் கதை ஒன்றினை தொடராகப் படித்திருக்கேன்.
  நல்ல எழுத்து நடையில் எழுதுவார்.
  பதிவினை அலட்டல் இன்றி விடயப் பரப்பிற்குள் சுருக்கமாக எழுதக் கூடியவர். அத்தோடு எல் கே அண்ணரின் மழலையின் குரலில் வெளியான ஓர் பதிவினையும் கேட்டிருக்கிறேன்.

  அவரின் படைப்புக்கள் பற்றிய விமர்சனப் பார்வை என்பதை விட, இத் தொடரைத் தவற விட்ட எமக்கு நீங்கள் இங்கே கொடுத்திருக்கும் அறிமுகப் பதிவு அருமை.

  ReplyDelete
 14. எல் கே அண்ணாவின் இந்த தொடரை நான் படிக்கலை. ஆனால் உங்கள் விமர்சனம் + அறிமுகம் அவர் தொடரை படிக்க தூண்டுகிறது.

  ReplyDelete
 15. Nice review. நல்லா எழுதி இருக்கீங்க. நானும் தொடர்ந்து வாசிச்ச கதை "நினைவுகள்"... எந்த டைப் கதைனாலும் எபிசொட்'க்கு எபிசொட் சஸ்பென்ஸ் இருக்கும் எல்.கே'வின் கதையில். As a friend, வம்புக்கு சும்மா கலாய்ச்சாலும் விடாம படிக்கும் கூட்டத்தில் நானும் உண்டு. Well deserved review...:)

  அந்த மை மேட்டர் சூப்பர்... கலாய்க்க ஒரு புது பாயிண்ட் கிடைச்சு இருக்கு...அதுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி உங்களுக்கு...:)

  ReplyDelete
 16. நல்ல விமர்சனம்... அருமை தொடருங்கள் சகோதரி.

  ReplyDelete
 17. உங்க கொள்கையில் முதல் நபராக எல்.கே அவர்களை வைத்து துவங்கியுள்ளீர்கள்.வாழ்த்துகள்.நல்ல அலசல்+விமர்சனம்

  ReplyDelete
 18. @ராஜ்
  //நல்ல பகிர்வு படித்துவிட்டால் போச்சு//

  படிச்சுடுங்க :-)

  ReplyDelete
 19. @ராஜ்
  //கதையை படிங்க என்றால் படிச்சிட்டு போறம் அதுக்கு ஏன் அக்கா இப்படி திட்டுறீங்க அவ்வ்வ்வ்வ்//

  மிரட்டல் தான் இப்ப நான் கடைபிடித்திருக்கும் புதியதோர் கொள்கை ஹி...ஹி...ஹி...

  ReplyDelete
 20. @ஜாப்பர்.கான்
  //but i think neengaley why oru story ezhutha koodathu ? :) :) :)//

  ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்ப்ப்ப்பா..

  வைதிஸ் கொலவெறி?

  ReplyDelete
 21. @லெட்சுமி மாமி
  //ஏற்கனவே பாகீரதியில் படிச்சுட்டேன் ஆமி.//

  தொடர்ந்து வந்த உங்க கமென்ட் பார்த்தேன் மாமி

  ReplyDelete
 22. @பாலா
  //சரிங்க நானும் படிக்கிறேன்.//
  நன்றிங்க :-)

  ReplyDelete
 23. @எல்.கே
  ஸ்கூல்ல கொடுக்குற புத்தகத்தையே வாசிக்கிறதில்ல... அதுல புத்தக விமர்சனம்லாம் நெனச்சு கூட பார்க்க முடியாது.. ஆனா விமர்சனமே எழுதலங்குற கொறைய போக்கணுமே :-)

  ReplyDelete
 24. @ரெவரி
  நன்றி ரெவரி.. படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க

  ReplyDelete
 25. @வானதி
  //ஆனா நீங்க ஒரு மணி நேரம் செலவு செய்தால் போதும்///அவ்வ்...இங்கே தான் கொஞ்சம் இடிக்குது. வேலை எல்லாம் முடிச்சுட்டு வாறன்.//

  இடிச்சாலும் பரவாயில்ல... தலைல ரத்தம் கொட்டினாலும் பரவாயில்ல... படிச்சுடுங்கோ ஹி...ஹி...ஹி...

  ReplyDelete
 26. வாங்க நிரூபன்

  ஆம் நிரூ.. அழகா எடுத்துச்செல்வார் கதையை...

  படிச்சுபாருங்க. இந்த கதையும் அருமையா இருக்கும்

  ReplyDelete
 27. @நிரூபன்
  // எல் கே அண்ணாவின் இந்த தொடரை நான் படிக்கலை. ஆனால் உங்கள் விமர்சனம் + அறிமுகம் அவர் தொடரை படிக்க தூண்டுகிறது.
  //
  நிச்சயம் படிச்சு உங்க கருத்தை சொல்லுங்க

  ReplyDelete
 28. @அப்பாவி தங்கமணி
  இதான் உங்களின் முதல் வருகை என நினைக்கிறேன். அனாமிகா துவாரகன் சொன்ன நீண்ட கதை எழுதுபவர் தானே நீங்க :-)

  //எந்த டைப் கதைனாலும் எபிசொட்'க்கு எபிசொட் சஸ்பென்ஸ் இருக்கும் எல்.கே'வின் கதையில்//
  அந்த சஸ்பென்ஸ் தான் நகத்தை கூட கடிச்சு துப்பிட வைக்குது ஹி...ஹி...ஹி...

  //
  அந்த மை மேட்டர் சூப்பர்... கலாய்க்க ஒரு புது பாயிண்ட் கிடைச்சு இருக்கு...அதுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி உங்களுக்கு...:)//

  தொலஞ்சார் ஹி...ஹி...ஹி..

  ReplyDelete
 29. @சே.குமார்
  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 30. @திருமதி ஶ்ரீதர்
  அடுத்தவிங்க சரக்கு சொல்றீங்களா??? அதில்லை இது :-) ஆனா விமர்சனம் என்ற ஒன்றை முதன் முதலில் எல்.கே மூலமா தொடங்குறேன்.

  மிக்க நன்றி ஆச்சி

  ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)