அன்புள்ளம் கொண்ட என் தம்பி மாயாவிற்கு,

           நீ இறந்துவிட்டதாய் நேற்று முதல் வந்த செய்தியை கேட்டு உள்ளம் நொந்து போனேன் சகோதரா. உன் ஆசை நிறைவேற்றப்படாமலேயே பாதியில் நிற்கும் போது எப்படி நீ இவ்வுலகம் விட்டு போயிருக்க முடியும்? உன் கனவுகள் மெய்ப்பட நீ ஆரம்பித்த வேலைகள் இலக்கை அடையாமல் பாதி வழியிலேயே நிற்கும் போது எப்படி உன்னால் உயிர்விட்டிருக்க முடியும்?

        பக்கத்துவீட்டு பாட்டியாம். சிறுவயதிலிருந்தே கவனித்து வருகிறேன். போனவாரம் இறந்து விட்டதை கண்டு அழுகாத மனம் உன் இழப்பை இன்னும் நம்ப முடியாமல் இருப்பது தான் நீ எங்களிடம் காட்டிய அன்பின் சாட்சியா மாயா? முகம் அறியவில்லை, முன்பின் குரல் கேட்டு பேசியதில்லை... ஆனாலும் ரத்த உறவாய் என் நெஞ்சில் இணைந்துவிட்ட என் சகோதரனை பிரிந்தது கண்டு உச்சி முதல் பாதம் வாரை சோகம் பாரங்களாய் பரவி மூளைக்குள் ஊறும் சிறு புழு   என்னை கொல்லும் அளவுக்கு  வேதனை அனுபவிக்கிறேன். இது தான்  நீ வாழ்ந்த வாழ்க்கையின் ஆதாரமா மாயா? இறக்கும் பொழுது ரத்தம் சம்மந்தமே இல்லாத ஒரு 100 பேராவது நமது சாவிற்காக கண்ணீர் விட்டு அழவேண்டும். அது தான் சாதனை என்று உன் நண்பர் சொன்னதாக சொன்னீயே... இன்று எத்தனை பேர் கண்ணீர் விட்டு கதறுகிறோம் என பார் மாயா. போதும்.விளையாட்டு இது என சொல்லிவிட்டு போ...

   
        நேற்று முதல் ஐந்தாறு முறை  மாத்திரையிட்டும்  போகாமல் இருக்கும் பாரத்தை சொல்லப்படாமல் மறைத்த அந்த ஒற்றை வார்த்தையை இறக்கிவிட்டால் மனம் லேசாகும்  சகோதரா. அதை என்னிடமிருந்து வாங்கிச்செல்லவாவது என் முன்னால் நீ தோன்றிட கூடாதா?

        உன்னுடன் பழக வாய்ப்பு அருகில் இருந்தும் அதை பயன்படுத்தாத எனக்கு எவ்வளவு தண்டனை கொடுத்தாலும் தகும் நண்பா. இப்படியான பிரிவை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது என நினைத்து தான் எனக்கு உன் நட்பை கொடுக்காமல் இருந்தாயா?

  
      காலை முதல் காத்திருக்கிறேன். அதெல்லாம் பொய் என சொல்ல நீ வருவாய் என. இதுவரை நடக்கவில்லை என்றாலும் மனம் ஒப்புக்கொள்ளவில்லையே. நீ இருக்கிறாய் என்றே என் மனதை தேற்ற துடிக்கிறேன். உன் பெயரிட்டு வரும் எந்த செய்தியும் படிக்க என் மனம் மறுக்கிறது. நீ வருவாய் என்ற என் உறுதியினை அவை சிதைத்துவிடுமோ என்ற பயம். இதை முட்டாள்தனம் என எவரேனும் எண்ணினாலும் பரவாயில்லை மாயா. எல்லாமே வதந்தி என சொல்ல வாயேன் ப்ளீஸ். இவ்வுலகை விட்டு மறையவில்லை; மாயமாய் சிலநாட்கள் இருக்கிறேன், தொந்தரவு செய்யாதீர்கள் என  என்றாவது சொல்லிவிட்டுபோயேன்

உன் வரவுக்காக காத்திருக்கும்
உன்னை தன் ரத்த உறவாய் பார்க்கும்
உன் அக்கா
ஆமினா முஹம்மத்
 

24 comments:

  1. கண்களை எச்சரித்து வைக்கிறேன்! அழுது தொலைத்து விடாதே! நீ எங்கேயும் போய்விடவில்லை மாயா.... உன் அக்காவுடன் நானும் காத்திருக்கேன் மாயா....

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்,

    மாய உலகம் என்ற பெயரில் வருவாரே? அவரா? என்னாயிற்று?

    இவரை பிரிந்து வாடும் இவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்..

    வஸ்ஸலாம்,

    ReplyDelete
  3. வருத்தமான பகிர்வு. நானும் மாயாவின் வரவுக்காக காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  4. @சகோ ஆஷிக் அஹ்மத்

    வ அலைக்கும் சலாம் வரஹ்

    அவர் தான் சகோ. மாய உலகம் ராஜேஸ்

    ReplyDelete
  5. இப்போதான் இப்பதிவு பார்க்கிறேன் ஆமினா.... மனத்தின் கனம் இன்னும் போகுதேயில்லை....

    நீங்கள் சொன்னபின்புதான் எனக்கும் நினைவு வருகிறது...

    //இறக்கும் பொழுது ரத்தம் சம்மந்தமே இல்லாத ஒரு 100 பேராவது நமது சாவிற்காக கண்ணீர் விட்டு அழவேண்டும். அது தான் சாதனை //

    இது உண்மையே... இச்சாதனையை நிலைநாட்டவென்றுதான் மாயா... வலைப்பதிவினுள் நுழைந்தாரோ..

    ReplyDelete
  6. ஆமி உருக்கமான அஞ்சலி. எல்லாருமே இந்த வேதனையை அனுபவிக்கரோம்.

    ReplyDelete
  7. ஓடி ஓடி வந்து அழகிய முறையில் கமெண்ட் இடுவாரே

    என்னால் அவர் இல்லை என்று சொல்லவே வரல..
    என்ன தான் ஆச்சு அவருக்கு யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்களே///

    ReplyDelete
  8. வருத்தமான பகிர்வு. நானும் மாயாவின் வரவுக்காக காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  9. வணக்கம் அக்கா,
    வேதனைகளை, மனதின் பாரங்களை வார்த்தைகளாக்கியிருக்கிறீங்க.

    மாயா விரைவில் வந்திடுவார் எனக் காத்திருப்போம்!

    அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

    ReplyDelete
  10. அன்பின் சகோதரிக்கு அஸ்ஸலாமு அலைக்கும்,மாயா யார் என்று எனக்கு தெரியாது.ஆமினா யார் என்றும் எனக்கு தெரியாது.ஆனால் முகம் தெரியாத மாயாவின் மறைவிற்காக முகமறியா சகோதரி.ஆமினாவின் கண்ணீர் கடிதம் என்னையும் கலங்க செய்கிறது.வார்த்தைகள் வரவில்லை.
    மரணம் எப்பொழுது வரும் என்று தெரியாது.ஆனால் என் மரணத்திலும் இது போன்ற உயிரை உருக்கும் கடிதங்கள் எனக்காகவும் யாராவது எழுதும்படி வாழ வேண்டும் என்று இப்பொழுது ஒரு எண்ணம் தோன்றுகிறது.அந்த சகோதரனின் மறைவிற்காக வாடும் அணைத்து தோழமை உள்ளங்களுக்கும் என் கண்ணீர் துளிகள் சமர்ப்பணம்...

    ReplyDelete
  11. அஞ்சலியை செலுத்திக்கொள்ளுகிறேன்

    ReplyDelete
  12. ஆமினா,திடிரென ஒருவர் எங்களுடன் இல்லாது போவது வருத்தமே!எல்லாம் அவன் செயல் என்று ஆறுதலடைய வேண்டியது தான்.இன்றிருப்போர் நாளை இல்லை.இது நியதி!பிரார்த்திப்போம்!

    ReplyDelete
  13. Verum kannirthulikaludan :-( :-( :-(

    ReplyDelete
  14. Verum kannirthulikaludan :-( :-( :-(

    ReplyDelete
  15. வருத்தமான பகிர்வு...நண்பர் மாய உலகம் ராஜேஸ்க்கு என் அஞ்சலி...

    ReplyDelete
  16. இன்னா லில்லாஹி வ இன்னா இலைகி ராஜிவூன் ...

    உங்கள் பதிவு நாம் நம்பி இருக்கும் கடவுள் கொள்கைக்கு முரணானது ...

    எனது வன்மையான கண்டனங்கள் ...

    இப்படிலாம எழுதுறது ...

    //உன் வரவுக்காக காத்திருக்கும்
    உன்னை தன் ரத்த உறவாய் பார்க்கும்
    உன் அக்கா
    ஆமினா முஹம்மத்//

    இறந்தவரை உயிர்பிபீங்க போல ... நீங்க பெரிய ஆளுங்க ...இறந்தவர் திரும்பி வருவார்னு வேற நினைக்குறீங்க ...

    கடவுளுக்கே சவால் விடுவீங்க போல ...

    என்னாத்த தேன் படிசீன்களோ ...

    கொள்கையே இல்லையா உங்களுக்கு ...

    பதிவு வெண்ணை மாதிரி இருக்கு ...

    எவனாது ஒரு மறுப்பு தெரிவிக்கிராககால அவிங்க வரட்டும் ...

    ReplyDelete
  17. @தெகிரிய அனானி அண்ணாச்சி

    வெண்ணெய் வெளக்கெண்ண மாதிரி ஒரு கமென்ட்... இப்படி கோழையா போயி தாக்குறது தான் உம் கொள்கையாக்கும் ஹி..ஹி..ஹி...

    ReplyDelete
  18. //வெண்ணெய் வெளக்கெண்ண மாதிரி ஒரு கமென்ட்...//

    வேற எப்படி கமெண்ட் போடுறது ... உங்கள மாதிரி சொன்னா "" செத்துட்ட ஆனால் நீ சாகல " [ இவிங்களுக்கு தர்கா கோஷ்டியே மேல் ] ..

    உமக்கு எல்லாம் பதில் சொல்ல திராணி இல்லை ... நல்லா மழுப்புறீங்க ..

    உங்க பதிவு இஸ்லாத்தின் படி தவறா இல்லையா ? அதற்க்கு பதில் சொல்ல வக்கில்லை ... அத விட்டு விட்டு சம்பந்தம் சம்பந்தம் இல்லாம பேசுறீங்க ..

    தப்பு செஞ்சா சொல்லத்தான் செய்வாங்க ...

    வேஸ்ட் ...

    ReplyDelete
  19. @அனானி அண்ணாத்தே

    //உமக்கு எல்லாம் பதில் சொல்ல திராணி இல்லை//
    தெரிஞ்ச்சே வாரீயளாக்கும்... ஹைய்ய்ய்ய்யோ ஹய்ய்ய்ய்யோ

    //உங்க பதிவு இஸ்லாத்தின் படி தவறா இல்லையா ? //
    இல்லை. ஏன்னா இந்த பதிவு எழுதும் போது அவர் இறந்துவிட்டதை உறுதிபடுத்தப்படவில்லை. முன்பே ஒரு பதிவர் தான் இறந்துவிட்டதாக கூறி ஒரு வாரம் பின் "சும்மா விளையாடினேன்" என சொன்னதாக நியாபகம். இந்த பதிவு எழுதும் போதும் அப்படியாக தான் நினைத்தேன். ஓரிரு தினங்களுக்கு பின் தான் அவரின் அண்ணா மூலம் இறப்பு செய்தி உறுதியானது!

    சோ தப்பு என் மேல் இல்ல! எதையும் ஆராயாம பேசிய உம்ம பார்வையில் தான் பயங்கர கோளாறு!

    //தப்பு செஞ்சா சொல்லத்தான் செய்வாங்க ... //
    அடடே... லாஜிக் அண்ணாத்தேயா நீங்க? தப்பு செய்றவுகள இப்படி தான் தட்டி கேப்பாய்ங்களாக்கும்?? போங்கப்ப்பாப்பா... காமெடி பண்ணாம!

    //அத விட்டு விட்டு சம்பந்தம் சம்பந்தம் இல்லாம பேசுறீங்க ..//
    நா அப்படிதேன் பேசுவேன்! உமக்கென்ன வந்துச்சு? எனக்கு பொழுது போக வேணாம்????!!!

    //வேஸ்ட் ...//
    நாங்களாம் கமென்ட் போட்டு முடிச்ச கடைசில எங்க பேரை போடுவோம். நீங்க அனானியா வந்தாலும் தெகிரியமா பேரை சொல்லிட்டீங்க! ரொம்ப நன்றிங்க சகோ.வேஸ்ட்!

    வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  20. //ஏன்னா இந்த பதிவு எழுதும் போது அவர் இறந்துவிட்டதை உறுதிபடுத்தப்படவில்லை//

    மீடியாவை விட இவுக தான் ரொம்ப ஸ்பீடு நு நான் இப்ப தான் தெரிஞ்சுகிட்டேன் ..

    இது தான் என் பதில்

    சோ தப்பு என் மேல் இல்ல! எதையும் ஆராயாம பேசிய உம்ம பார்வையில் தான் பயங்கர கோளாறு!

    ஒரு விஷயம் சரியாக வுருதியா தெரியல ... அதுக்குள்ள சங்கு நல்லா வூதுரீக ...

    உமக்கும் தான் இது

    ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 6

    ஓரிரு தினங்களுக்கு பின் தான் அவரின் அண்ணா மூலம் இறப்பு செய்தி உறுதியானது!...

    ஓகே.. இறந்து விட்டார் .. இப்போ சொல்லுங்க.. அப்ப ஏன் பதிவ திருத்தல ..

    உங்க பதிவு இஸ்லாத்தின் படி தவறா இல்லையா ? இறந்துட்டாரு நு சொல்றீங்க இறக்கலன்னு சொல்றீங்க ...

    முடிவா இறந்துட்டாரு...

    ம்ம்ம்ம் .. அப்புறம் ...

    ReplyDelete
  21. @சகோ வேஸ்ட்

    //

    ஓகே.. இறந்து விட்டார் .. இப்போ சொல்லுங்க.. அப்ப ஏன் பதிவ திருத்தல ..//

    உம்ம வேலை எதுவோ அத பாரும் ஒய்!

    //ம்ம்ம்ம் .. அப்புறம் ...//
    நீங்கதான் மாயான்னு நாளைக்கு ஒரு பதிவு போடுவேன்! இப்ப என்னாங்குறீங்க?!!!

    ReplyDelete
  22. //எனக்கு பொழுது போக வேணாம்????!!!//

    என்னுடைய கருத்து

    உங்களுக்கு பொழுது போகலைன நீங்களே notepad டைப் பண்ணி நீங்களே வாசிசுகோங்க ...

    //நீங்கதான் மாயான்னு நாளைக்கு ஒரு பதிவு போடுவேன்! இப்ப என்னாங்குறீங்க?!!!//

    ஒன்னும் சொல்ல வரல தாயி ...!!!!

    தெரியாம இந்த பக்கம் வந்துட்டேன் ...

    என்னாத்த சொல்றது ..

    காலம் பொன் போன்றது ..

    ReplyDelete
  23. @சகோ வேஸ்ட்

    //என்னுடைய கருத்து //

    இங்கே யாராச்சும் கருத்துகணிப்புக்கு உங்கள கூப்டாய்ங்களா??? இல்ல நீங்க கருத்து சொல்லியே ஆவோணும்னு கெஞ்சுனாய்ங்களா???!!!

    //தெரியாம இந்த பக்கம் வந்துட்டேன் ... //
    நா ஆரம்பத்துலேயே சொன்னேன்! உங்களுக்கு பார்வையில கோளாறு இருக்குன்னு!கேட்டீங்களா??? பாருங்க இப்ப நீங்களே ஒத்துக்க வேண்டியதா போச்சு!


    //என்னாத்த சொல்றது ..//
    அதான் சொல்லிட்டீரே!

    //காலம் பொன் போன்றது ..//
    நன்றிங்கோ
    இப்பவாவது புரிஞ்சதே!!

    எடத்த காலி பண்ணுங்க! காத்து வரட்டும்!

    ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)