ஹாய் மக்கள்ஸ்..... எப்டி இருக்கீங்கோ???

நேரடியாவே விஷயத்துக்கு வரேன். தஞ்சாவூர் கல்வெட்டில் செதுக்கி பாதுகாக்கப்பட வேண்டிய இந்த பதிவு எழுதியதன் பிண்ணனி ரொம்பவே உணர்வுபூர்வமானது... உளவுபூர்வமானது, தமிழ்மணபூர்வமானது, இன்ட்லீபூர்வமானது... ஹி..ஹி...ஹி..

ஒரு மாசமா நானும் new post போறதும்,  தமிழ் எழுத்துக்கள் அப்ப மட்டும் என்கிட்ட ஸ்ட்ரைக் பண்றதுமா ஒரு மாசப்பொழுது ஓடி போச்சு! அப்ப தான் ஒரு உண்மை தெரிஞ்சது... அட ஆமி... சட்டியில இருந்தா தானே அகப்பைல வரும்... இப்போதைக்கு உன் கிட்ட சரக்கு இல்ல! நீ இன்று போயி நாளை வா'ன்னு ஹோம் தியேட்டர்  ஸ்பீக்கர் எபெக்ட்ல  மனசாட்சி  ஒப்பாரி வச்சுட்டிருந்துச்சு!

சரி நம்மல மாதிரி இன்னும் எத்தன பேரு மனசாட்சி இப்படி கேலி பண்ணி சித்ரவத பண்ணும்னு ச்சூ..ச்சூ...ச்சூ.... உச்சு கொட்ட ஆரம்பிச்சேன்! அந்த பரிதாபத்தின் விளைவே இந்த பதிவு  (நேரடியா விஷயத்துக்கு வரேன்னு மொத வரில போட்ட்டீயே இன்னும் அதுக்குள்ளையே தான் சுத்திட்டிருக்கீயான்னு யாரோ கல்லுலாம் எடுக்குறாங்க. நோ...நோ... நமக்கு அரசியலமைப்பு சட்டம் பேச்சுரிமை வழங்கியிருக்கு! உரிமையை ஏன் விட்டு கொடுப்பானேன்  ;-)

சரி உண்மையாவே விஷயத்துக்கு வரேன் (இது சரிபட்டு வராது)

பதிவு போட சரக்கில்லைன்னா என்னன்ன செய்யலாம்???

எதிர்பதிவு :-
dashboard பக்கமா கொஞ்ச நேரம் சுத்துங்க! எவுகளாச்சும் சூடான தலைப்புல ஒரு கட்டுரை போட்டிருப்பாக! இப்ப கண்ண மூடிக்கிட்டு,  "ஆதரிக்கிறேன்" என்ற இடத்தில் மறுக்கிறேன்னு போடுங்க. மறுக்கிறேன்னு சொல்ற எடத்துல ஆதரிக்கிறேன்னு போடுங்க. அவ்வளவு தான். எதிர் பதிவு தயார்! இதுக்கு என்னா தலைப்புன்னு யோசிக்கிறீங்களா? அதுகெடக்கு எழவு!  அந்த பதிவர் பேர போட்டு பக்கத்துல எதிர்பதிவுன்னு போடுங்க.. அவ்வளவு தான். (பதிவர் என்ற வார்த்தை ரொம்ப முக்கியம் :-) அப்ப தான் ஹிட்டு அள்ளலாம்....

உதாரணம்:
பதிவர் மெட்ராஸ் பவன் சிவாவின்  பதிவுக்கு எதிர்பதிவு
(சிவாவுக்கு மட்டும் யாராலும் எதிர்பதிவு போடவே முடியாது.. நான் வேணும்னா சவால் விடுறேன்! யாராச்சும் சிவாக்கு எதிரா ஒரு எதிர்பதிவு போடுங்க பாக்கலாம்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

ஒடனே சிராஜ் பொங்கி வருவாரு - எதிர்பதிவுக்கு எதிர்பதிவுன்னு தலைப்போட.. அப்படி உங்க பதிவுக்கு எதிர்பதிவு போட்டார்ன்னா  நீங்க பிரபலமாய்ட்டீங்கன்னு அர்த்தம் இல்ல... உங்க மூலமா அவர் ப்ரபலமாக போறாருன்னு  அர்த்தம். ஜாக்ரத மக்காஸ்.... பதிவுலகில் குழம்பிய குட்டைக்குள் திமிங்கலம்  பிடிக்கும் ஒரே பதிவர் அவுகதான்!

காப்பி பேஸ்ட் சேவை :-
அப்பறம் அப்படிக்கா பிரபலமாகாத ப்ளாக் பக்கம் போயி அவுக பதிவுகளை ஓபன் பண்ணுங்க. தப்பி தவறி படிக்கலாம் செஞ்சுடாதீங்க (அடப்பாவிப்பயலே.. உனக்கு இவ்வளவு தெறமையான்னு நீங்க கண்ணீர் வடிச்சு சென்டிமேன்ட்ல மேட்டர க்கோட்ட விட்டுடுவீக). கண்ண மூடிக்கிட்டு அப்படியே காப்பி-பேஸ்ட் பண்ணுங்க. அவ்வளவுதான். வெட்டி ஒட்டும் பதிவு தயார்!

இத செய்யும் போது கவனிக்க வேண்டியது:-
    1. நீங்க அவுகளுக்கு பாலோவர்ரா இருக்க கூடாது
    2. அவுக உங்களுக்கு பாலோவர்ரா இருக்க கூடாது.
அப்படியும் சில பயபுள்ளைக நம்ம இலவச சேவைய பொருக்காம அங்குட்டு போயி பத்த வச்சு, ஒருவேள உங்கள் சமூக நல சேவையை ஒரிஜினல் ரைட்டர் கண்டுபிடிச்சாங்கன்னா ஒடனே ஒலக சரித்திரம் வாய்ந்த பதிவுலக திருவாசகத்தை போட்டு இன்னொரு பதிவு தேத்தலாம்.

அவ்வாசகம் பின்வருமாறு :

இன்னைக்கு பிரபலமாய்ட்டிருக்குற பத்திரிக்கைங்க கூட இப்படிதான்யா சுட்டு போடுது. நீ என்ன பெரிசா பேச வந்துட்ட?"
அவ்வளவுதான்.. பிரச்சனை ஓவர். இந்த வாசகத்தை மையமா வச்சு நீங்க முன்கூட்டியே ஒரு பதிவை தயார் செய்து ட்ராப்ட்ல போட்டு வச்சுக்கிட்டா அடிக்கடி பிரச்சனை வந்தா அடிக்கடி  டைப் பண்ணிட்டிருக்க தேவையில்ல பாருங்க :-)

அடுத்தவிங்க சரக்கு-
இந்த புகழ்பெற்ற டிங்கரிங்க் பதிவை  அகில உலக பதிவுலக சாராஜ்யத்திற்கு அறிமுகப்படுத்திய பெருமை குட்டிசுவர்க்கத்திற்கே ! அதாகப்பட்டது என்னான்னா... ஒன்னுமில்ல... எதாவது ஒரு பதிவர் ராப்பகலா யோசிச்சு பதிவ தேத்தியிருப்பாரு.. கான்சப்ட்ட மட்டும் கற்பூரம்மா கப்புன்னு பிடிச்சுக்கிட்டு உங்க ஸ்டைலில் பதிவு போடணும்.. அவ்வளவுதேன். அடுத்தவிங்க சரக்கு எனும் டிங்கரிங் பதிவு தயார்!

உள்குத்து பதிவு!
என்ன மாயமோ தெரியல.. என்ன மந்திரமோ புரியல... நீங்க ஒரு உள்குத்து பதிவு போட்டு பாருங்களேன்... 24 மணி நேரத்துக்குள்ள 1500 ஹிட்ஸ் கரண்டி  ஓ அது கேரண்டியா :-)   சரி விடுங்க :-)))

இது  1500 ஹிட்ஸ் என்பது நம்மல மாதிரி பொடி பொடி ஆளுங்களுக்கு... பெரிய பெரிய தலைங்கலாம் போட்டா சொல்லவா வேண்டும்??? ... உள்குத்து யாருக்கு போடணும்னுலாம் வரைமுறையே வேணாம்.. நமக்கு தேவை சரக்கு! சோ சா பூ திரி போட்டு முடிவு பண்ணிக்கோங்க... யாரை தாக்கலாம்னு! நானும் சா பூ திரி போட்டு பார்த்ததுல சர்மிளாவ தாக்கலாம்னு முடிவு ஆகியிருக்கு! (நா என்ன சொன்னாலும் இவ தான் என்னை திருப்பி தாக்க மாட்டா... பிகாஸ் ஐயாம் ஹெர் லவ்வபிள் சிஸ்ட்டர் :-)

டிஸ்கி:ஓக்கே மக்காஸ்... இதான் மேட்டரு! இனி பதிவு போடல, சரக்கில்லைன்னு அழப்படாது!
அதோட முக்கியம்! இந்த பதிவுக்கு யாரும் உள்குத்தோ எதிர்பதிவோ போட்டுடாதீக நல்லா இருப்பீக!!புண்ணியமா போகும்!  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

,

24 comments:

 1. சர்மிளாவ தாக்கலாம்னு முடிவு ஆகியிருக்கு! (நா என்ன சொன்னாலும் இவ தான் என்னை திருப்பி தாக்க மாட்டா... பிகாஸ் ஐயாம் ஹெர் லவ்வபிள் சிஸ்ட்டர் :-)///

  எல்லோருக்கும் இப்படி ஒரு அடிமை இருக்காங்கப்பா...

  ReplyDelete
 2. ஸலாம் சகோ.ஆமினா,

  எதுகை மோனை சந்தி சாரியை விகாரம் கைக்கிளை பெருந்திணை எல்லாம் பொருத்தமாக அமைந்த இந்த கவிதை மிகவும் அருமை..! அசை பிரித்து சீர் எழுத மிகவும் எளிமையாக உள்ளது. இதுபோல இன்னும் நிறைய நல்ல நல்ல கவிதைகளை புனையுமாறு பாசத்தோடு கேட்டுக்கொள்கிறேன்..!

  ReplyDelete
 3. மொக்கை (!!!!????) தங்கைக்கு,

  அஸ்ஸலாமு அலைக்கும்,

  நானும் திரும்ப திரும்ப கடைசி வரை படிச்சு பார்த்தேன், இன்னா மேட்டர் இந்த பதிவுல இருக்குன்னு தெரில. :) :) உபயோகமா இதுல ஏதாவது இருக்குன்னு யாராவது சொன்னா அவங்களுக்கு குட்டிசுவர்க்கம் மூடுவிழாவில் சீல் வைக்கும் அருமையான வாய்ப்பு :) :) வழங்கப்படும்.

  அதுசரி, அண்ணன் முஹம்மது ஆஷிக் என்ன சொல்ல வரார்? உங்களுக்கு கௌண்டர் கொடுத்திருப்பதா எனக்கு தோணுது...சரியா?

  வஸ்ஸலாம்,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ

  ReplyDelete
 4. உயர்தரமான இலக்கிய பதிவு

  வார்த்தைகள் வறண்ட நிகழ்வை
  சொற்கள் தொலைந்த சோகத்தை
  நதியில் விழுந்த அம்புலியாய் பட்டு தெறிக்கிறது

  பொதுவாக ஒரு இலக்கியம் எந்த அளவு உயர்வாக இருக்குமே அந்த அளவுக்கு பாமர மக்களை விட்டு அந்நியப்படும் ஆனால் உங்கள் இலக்கியம் பாமர மக்களுக்கு புலப்படும் அடையாளத்தை விட்டு வைக்கிறது

  இதுபோன்ற இலக்கிய பதிவுகளை தொடர்ந்து படைக்கவும்.

  ReplyDelete
 5. @சௌந்தர்

  //எல்லோருக்கும் இப்படி ஒரு அடிமை இருக்காங்கப்பா...//

  ஓ உங்களுக்குமா.. கொடுத்து வச்சவருங்க நீங்க அவ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 6. வ அலைக்கும் சலாம் வரஹ்...

  //
  எதுகை மோனை சந்தி சாரியை விகாரம் கைக்கிளை பெருந்திணை எல்லாம் பொருத்தமாக அமைந்த இந்த கவிதை மிகவும் அருமை..! //

  தாங்களின் பாராட்டை கண்டு தரையில் கால்கள் காணவில்லை சகோதரரே...

  //அசை பிரித்து சீர் எழுத மிகவும் எளிமையாக உள்ளது. //
  நாங்களாம் யாரு... அப்படிதான் ஈசியா எல்லாரும் படிச்சு புரிஞ்சுக்குற மாதிரி கவிதை எழுதுவோம்

  //இதுபோல இன்னும் நிறைய நல்ல நல்ல கவிதைகளை புனையுமாறு பாசத்தோடு கேட்டுக்கொள்கிறேன்..!//
  இது போல் ரசிகர்கள் இருக்கும் வரை என் கவிதாகம் தீராது...

  அவ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 7. @ஆஷிக் அண்ணா

  வ அலைக்கும் சலாம் வரஹ்...

  நலம் நலமறிய ஆவல்லாம் காணாம்??? :-))))

  //
  நானும் திரும்ப திரும்ப கடைசி வரை படிச்சு பார்த்தேன், இன்னா மேட்டர் இந்த பதிவுல இருக்குன்னு தெரில. :) :)//

  உங்கள் தங்கையின் திறமைக்கு தகுந்தார்போல் யாரும் இன்னும் பிறக்கவில்லை என்பதை இன்றாவது புரிந்துக்கொண்டீர்களா ஹி..ஹி..ஹி...

  //உபயோகமா இதுல ஏதாவது இருக்குன்னு யாராவது சொன்னா அவங்களுக்கு குட்டிசுவர்க்கம் மூடுவிழாவில் சீல் வைக்கும் அருமையான வாய்ப்பு :) :)//

  ஒருவாரத்துக்குள்ள பதிவு போடலன்னா ஏலத்துக்கு விடப்படும்னு மிரட்டல் வந்ததுனாலதான் எதையாவது போட்டு வைப்போம்னு வந்தேன். அது கூட பொறுக்கலையா?? :-)

  //அதுசரி, அண்ணன் முஹம்மது ஆஷிக் என்ன சொல்ல வரார்? //
  என் புலமையை வியந்து வியந்து விழுந்து விழுந்து பாராட்டியுள்ளார் அண்ணா :-)))

  //உங்களுக்கு கௌண்டர் கொடுத்திருப்பதா எனக்கு தோணுது...சரியா?//

  அதான் தெரியுதுல? இத வேற பப்ளிக்ல சொல்லணுமா ஹி..ஹி..ஹி.. அதே அதே!!!

  ReplyDelete
 8. @ஹைதர் அண்ணா

  //உயர்தரமான இலக்கிய பதிவு//
  உங்கள் தங்கையாயிற்றே அவ்வ்வ்வ்

  //
  இதுபோன்ற இலக்கிய பதிவுகளை தொடர்ந்து படைக்கவும்.//

  வேணாம்... அழுதுடுவேன்.......

  //வார்த்தைகள் வறண்ட நிகழ்வை
  சொற்கள் தொலைந்த சோகத்தை
  நதியில் விழுந்த அம்புலியாய் பட்டு தெறிக்கிறது

  பொதுவாக ஒரு இலக்கியம் எந்த அளவு உயர்வாக இருக்குமே அந்த அளவுக்கு பாமர மக்களை விட்டு அந்நியப்படும் ஆனால் உங்கள் இலக்கியம் பாமர மக்களுக்கு புலப்படும் அடையாளத்தை விட்டு வைக்கிறது //

  ஐய்யோ......... எப்பா ராசாக்களா... எல்லாரும் சொல்லி வச்சு கமென்டுறீங்களாக்கும்???

  ஏதோ பயபுள்ள தெரியாத்தனமா இன்னைக்கு ஒரு பதிவு போட்டுடுச்சு! மன்னிச்சு விட்டுடுங்க அவ்வ்வ்வ்

  ReplyDelete
 9. அடடே...வித்தியாசமான பதிவு...பாராட்டுக்கள்.

  ReplyDelete
 10. @சுவனப்பிரியன்

  காலைல இருந்து நீங்க தான் சரியா பேசியிருக்கீங்க அவ்வ்வ்வ்

  பாராட்டுக்களுக்கு நன்றி அண்ணா...

  ReplyDelete
 11. இது எல்லாம் என் குரு சொல்லித்தரவில்லை அதுதான் தனிமரமாக இருக்கின்றேனா ஹீ எனக்கும் ஒரு அடியாள் கிடைக்கவில்லையே சர்மிளா அக்காள் போலஹீ!:))))))

  ReplyDelete
 12. ada makka!

  ஓ... தமிழல கமெண்ட் போடாம்ல....

  அது சரி இந்த பதிவு எதுக்கு????

  சரி விடுங்க நீங்க எழுதின பதிவுகளிலே இது ஓரளவு பரவாயில்ல....

  இதுக்கும் யாரும் எதிர்ப்பதிவு எழுதிடப்போறாங்க பாத்துக்குங்க :)

  ReplyDelete
 13. பதிவு போட மேட்டர் சிக்கல்ல என்னுறத்துக்காக இவ்வளவு பெரிய உண்மைகளை வெக்கப்படாம சொன்னா பதிவுலகம் என்னத்துக்காகும்............:)))

  ReplyDelete
 14. நல்ல பதிவு ஆஹா ஓஹோ பேஷ் பெஷ் ரொம்ப நன்னா இருக்கு

  ReplyDelete
 15. மிக அருமையான பதிவு, இந்தப்பதிவு பதிவுலகில் நிறைய பதிவர்களை தோற்றுவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. :D

  ReplyDelete
 16. ///உள்குத்து பதிவு!
  என்ன மாயமோ தெரியல.. என்ன மந்திரமோ புரியல... நீங்க ஒரு உள்குத்து பதிவு போட்டு பாருங்களேன்... 24 மணி நேரத்துக்குள்ள 1500 ஹிட்ஸ் கரண்டி ஓ அது கேரண்டியா :-) சரி விடுங்க :-))) உள்குத்து பதிவு!
  என்ன மாயமோ தெரியல.. என்ன மந்திரமோ புரியல... நீங்க ஒரு உள்குத்து பதிவு போட்டு பாருங்களேன்... 24 மணி நேரத்துக்குள்ள 1500 ஹிட்ஸ் கரண்டி ஓ அது கேரண்டியா :-) சரி விடுங்க :-))) உள்குத்து பதிவு!
  என்ன மாயமோ தெரியல.. என்ன மந்திரமோ புரியல... நீங்க ஒரு உள்குத்து பதிவு போட்டு பாருங்களேன்... 24 மணி நேரத்துக்குள்ள 1500 ஹிட்ஸ் கரண்டி ஓ அது கேரண்டியா :-) சரி விடுங்க :-))) உள்குத்து பதிவு!
  என்ன மாயமோ தெரியல.. என்ன மந்திரமோ புரியல... நீங்க ஒரு உள்குத்து பதிவு போட்டு பாருங்களேன்... 24 மணி நேரத்துக்குள்ள 1500 ஹிட்ஸ் கரண்டி ஓ அது கேரண்டியா :-) சரி விடுங்க :-))) உள்குத்து பதிவு!
  என்ன மாயமோ தெரியல.. என்ன மந்திரமோ புரியல... நீங்க ஒரு உள்குத்து பதிவு போட்டு பாருங்களேன்... 24 மணி நேரத்துக்குள்ள 1500 ஹிட்ஸ் கரண்டி ஓ அது கேரண்டியா :-) சரி விடுங்க :-))) உள்குத்து பதிவு!
  என்ன மாயமோ தெரியல.. என்ன மந்திரமோ புரியல... நீங்க ஒரு உள்குத்து பதிவு போட்டு பாருங்களேன்... 24 மணி நேரத்துக்குள்ள 1500 ஹிட்ஸ் கரண்டி ஓ அது கேரண்டியா :-) சரி விடுங்க :-))) உள்குத்து பதிவு!
  என்ன மாயமோ தெரியல.. என்ன மந்திரமோ புரியல... நீங்க ஒரு உள்குத்து பதிவு போட்டு பாருங்களேன்... 24 மணி நேரத்துக்குள்ள 1500 ஹிட்ஸ் கரண்டி ஓ அது கேரண்டியா :-) சரி விடுங்க :-))) /// இது உனக்கு இப்பவா தெரியும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்??? நீ ரொம்ப லேட்டுடா செல்லம் :))

  ReplyDelete
 17. //சர்மிளாவ தாக்கலாம்னு முடிவு ஆகியிருக்கு! (நா என்ன சொன்னாலும் இவ தான் என்னை திருப்பி தாக்க மாட்டா... // என்ன அடகு வச்சு உன் ப்ளாக்கை மீட்டு இருக்கே... அந்த ஒரே காரணத்துக்காக உன்ன மன்னிச்சு விடுறேன்...!!

  ஹைதர் அண்ணே , எதிர்குரல் அண்ணே கமென்ட் சான்ஸே இல்ல... ஹஹாஹா கல்வெட்டுல எழுதி வச்சுட்டு பக்கத்துல நீ உக்காந்துடு... ஹிஹிஹிஹி

  ReplyDelete
 18. அருமையா எழுதி இருக்கீங்க தொடரட்டும் உங்களது பணி

  ReplyDelete
 19. அருமையான பதிவு நல்லா இருக்கு.

  ReplyDelete
 20. ஆமி இங்க என்ன நடக்குது?

  ReplyDelete
 21. சிராஜுதீன் நேர்ல பண்ற லொள்ளு ஜாஸ்தி. இதுல எதிர் பதிவு வேறயாக்கும்...எப்பயாவது சட்டை கிழிய ற பதிவு போட்டுட்டு அந்தாளு காணாம போயிடறாரு. இருங்க வீராணம் குழாய்ல பம்மிட்டு இருந்தா அண்ணனை புடிச்சிட்டு வர்றேன்.

  ReplyDelete
 22. // சிவாவுக்கு மட்டும் யாராலும் எதிர்பதிவு போடவே முடியாது//

  நானே ஒரு உப்மா ஹோட்டல் நடத்திட்டு வர்றேன். அது பொறுக்கலையா? நல்லா வருவீங்க சிஸ்டர்.

  ReplyDelete
 23. அஸ்ஸலாமு அலைக்கும்

  பயனுள்ள பதிவு சகோ.! பகிர்வுக்கு நன்றி!

  :D :D :D

  ReplyDelete
 24. ஐடியா கொடுத்தமைக்கு நன்றி

  ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)