நான்பாட்டுக்கு சும்மா தான் இருந்தேன்! சில நாட்களுக்கு முன் ஒரு மெயில் வந்தது! அதில் ஒரு லிங்கும் கொடுத்து "நீங்க இதை செய்தே ஆகணும் என உங்களை மிரட்டிக்கேட்கிறேன்"ன்னு சொன்னாங்க! செம ஷாக்! ம்ம்ம்ம்ம் என்ன செய்ய பிரபலமாய்ட்டாலே இதுபோன்ற பிரச்சனைகளை சமாளிச்சுதானே ஆகணும்! ஹி..ஹி..ஹி..

மொக்கைகளின் திலகம் என்றென்றும் பதினாறு பானு தான் என்னை மிரட்டிய பதிவர்! இதுக்கெல்லாம் விக்கிபிடியா  லிங்க் தர முடியாது! த்தோ... இங்கே காப்பி பண்றேன் பாருங்க
//1. ஆமினா (இந்த பதிவை நீங்க எழுதியே ஆகணும்னு உங்கள மிரட்டறேன்....:))) // ஆதாரம் காண


அதாகப்பட்டது, சின்ன வயசுல, அறியாத வயசுல ஏதாவதொரு விஷயத்திற்கு நாமலே மொக்கையா ஒரு புரிதல் வைச்சிருப்போம்.
உதாரணமா "டீவில நடிகைங்க எப்படி டக்குடக்குன்னு அடுத்தடுத்து சேலை வேற போட்டுக்குறாங்க- அவங்களுக்கு மேஜிக் தெரியும் அதான்!"
இது போல் நம் வயதுக்கேற்ற விளக்கங்களை நாமே நமக்கு நாமே கொடுத்திருப்போம். இப்ப நெனச்சா அதெல்லாம் சிரிப்பா தோணும். நாமலா இப்படி முட்டாள்தனமா யோசிச்சோம்னு!

இப்ப என்ன பிரச்சனைன்னா!!
நானும் யோசிச்சு யோசிச்சு பார்த்தேன்! சின்ன வயசுல இப்படி எந்த சந்தேகமும் எனக்கு வந்ததில்லை! இதுக்கு என்ன காரணம்னு யோசிச்சு யோசிச்சு சிந்திச்சு சிந்திச்சு அதுக்கு பிறகு தான் விடை கிடைச்சுச்சு!

"ஆமி! நீயெல்லாம் பானு, சர்மிளா மாதிரி கிடையாது! நீ பொறக்கும் போது பெரிய அறிவாளி! புத்திசாலி! அதான்  உன் சின்ன வயசுல இந்த மாதிரி மொக்கை ஆராய்ச்சிகள்லாம் நீ செய்யல! அதுனால தான் உனக்கு அந்த மாதிரி மொக்கை தத்துவங்கள் எல்லாம் தெரியல...."

மனசாட்சி சொல்றதும் சரிதான்!

ஆக

சாரி பானு! மனச கொஞ்சம் திடப்படுத்திக்கோங்க! இது உங்களுக்கு நிச்சயம் அதிர்ச்சி தரக்கூடியதா இருக்கும். ஆனாலும் உண்மையை எவ்வளவு நாள் தான் பீரோக்குள்ள பூட்டி வைக்கிறது???  அதாவது.....

நான் ரொம்ப அறிவாளியா இருந்தேனாம் (கல்லெடுக்கப்படாது!) ரொம்ப புத்தியாசலியா இருந்தேனாம் ( நோ நோ... அழப்படாது) , என்னை மாதிரி யாராலும் திங்க் பண்ண முடியாதாம் ( நோ! சிரிக்கப்படாது)....

சரி சரி! உங்களுக்காக நான் கட்டிகாத்து வைத்த சில ரகசியங்களை சொல்றேன்! இத பார்த்து 'ஆமி நீ அப்பவே அப்படியா?'ன்னு கேட்டு கண்ணு வைக்க கூடாது சொல்லிட்டேன்!

1. சின்ன வயசுல  ரோட்ல நடந்து போறச்ச, வானத்தை பார்த்தா அதுவும் நம்ம கூட வரும்...  ஷாம்க்கு கிடைச்ச அறிவாளி அம்மா (நானேதான்) மாதிரி ஆமினாக்கு கிடைக்காததால் ஆமினாவே சுயமா சிந்திக்க ஆரம்பிச்சா! விளைவு????? ஆராய்ச்சி செய்த அடுத்த 2 மணி நேரத்திற்குள் பதில் கிடைத்தது!


மனுஷபயபுள்ளைகளுக்கு கால் இருக்குற மாதிரி வானத்துக்கும் ஸ்பெசல் கால் இருக்கு! அதான் அதுவும் நடக்குது!!! - எப்பூடி :-) :-) :-)

2. அதே சின்ன வயசுல ,  சந்திரனுக்கு ராக்கெட் போச்சுன்னு அடிக்கடி பெரியவங்க பேசிக்கிட்டாங்க. ஒடனே என் விஞ்ஞான மூளை வேலை செய்துச்சு!  வாசல்லையே உக்கார்ந்து நிலாவையே  பாத்துட்டிருந்தேன்!

-நிலாவில் தரையிறங்கிய ராக்கெட்டை எப்படியாவது பார்க்கணும்னு! அவ்வ்வ்

பட் என்னால பாக்கவே முடியல... எவ்வளவுதான் நானும் முயற்சி பண்றது! சாப்பாடு டைம் நெருங்கியதால நானே முடிவுக்கு வந்தேன்!
நிலாக்கு பின்புறமா தரையிறங்கியிருக்கானுங்க!அதான் நம்மால பாக்க முடியல! :-) :-) :-)

என் அக்கா , என்னை விட அதிபுத்திசாலி!

அக்கா- " ஆமி!நிலால மனுஷன் எறங்கினதா சொல்றாங்களே!  நீ நம்புறீயா???"

ஆமி- "ஆமாக்கா... போட்டோலாம் எடுத்து அனுப்புறாய்ங்களே"

அக்கா- "அதெல்லாம் எங்கேயாவது ஒரு மலைல போயி எடுத்துட்டு வந்திருப்பானுவ! நம்மகிட்டையே கத அளக்குறானுக!

ஆமி-"நீ சொல்றதும் சரிதான்.  அந்த நிலால ராக்கெட்ட நான் பாக்கவே இல்ல..அப்ப நிலாக்கு அவங்க போகலன்னுதானே அர்த்தம்???!!!!??????


எப்படி என் விஞ்ஞான மூளை :-)

____

ஷாம் என்னை மாதிரி தான் கேள்வி கேட்பான்னு நெனச்சு நிம்மதியா இருந்தேன்! அவன் கேக்குறதெல்லாம் "நிலா ஏன் சின்னதா அப்பறம் பெருசா ஆகுது?, எப்படி அலைலாம் வருது? மீன் தண்ணீக்குள்ள தானே இருக்கு! அதுக்கு சளிபிடிக்காதா? தேங்காய்க்குள்ள தண்ணீ எப்படி வந்துச்சு?"

இவனுக்கு  பதில் சொல்றதுக்கு செரமப்படுறத விட தப்பிக்க ரொம்ப சிரமப்படுறேன்! முடியல... கடைசி வரைக்கும் விடமாட்றான்... தெரியாதுன்னு சொன்னா நெத்தியில் கையை வச்சுட்டு  "அய்யோ...உனக்கெல்லாம் ஒன்னுமே தெரியாதாம்மா? ஏன்ம்மா"ன்னு   மானத்தை வாங்குறான்! அவ்வ்வ்வ்வ் (அவன் உண்மையதான் சொல்றான் என்பது வேற விஷயம் ஹி..ஹி..ஹி..)

முக்கியமான விஷயம்! இஸ்லாமிய பெண்மணியில் கட்டுரை போட்டி பற்றிய அறிவிப்பு வெளிவந்திருக்கு! என்ன சொல்றாங்கன்னு ஒருக்கா போயி பாருங்க... க்ளிக்குக  அனைவரும் கட்டாயமாக கலந்துக்கோங்க!

தொடர்பதிவெழுத அழைக்கவிருக்கும் நபர்கள்

1. தல மெட்ராஸ் பவன் சிவா
2. சமீரா
3. ராஜி
4. அன்னு

, ,

56 comments:

 1. ஒரு கொடுமையயே தாங்க முடியல..இதுல அடுத்து சிவா, அன்னு இவங்க கொடுமைய எல்லாம் தாங்கனுமா?? கொடும....

  ReplyDelete
  Replies
  1. உலகபுகழ்பெற்ற கண்டுபிடிப்புகளை கொடுமை என சொன்ன சிமுக வைரஸ்ஸை வன்மையாக கண்டிக்கிறோம்!!! பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் எங்கள் கட்சி சார்பாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.... அஹ்ஹூ அஹ்ஹூ

   Delete
 2. நிலாக்கு பின்புறமா தரையிறங்கியிருக்கானுங்க!அதான் நம்மால பாக்க முடியல!
  akka engalalaum mudiyala vittudunga

  ReplyDelete
  Replies
  1. //akka engalalaum mudiyala vittudunga//

   அக்கா அறிவ கண்டு மெச்சுறீங்கன்னு புரியுது... அதான் சுருக்கமா முடிச்சுட்டேன்! பயபுள்ளைகளுக்கு பொறாம ஜாஸ்தி.. அப்பறம் அக்காவோட அறிவாளிதனத்த கண்ணு, காது, மூக்கு வச்சுடுவாங்க ஹி..ஹி..ஹி...

   Delete
 3. //ஆமி- "ஆமாக்கா... போட்டோலாம் எடுத்து அனுப்புறாய்ங்களே"

  அக்கா- "அதெல்லாம் எங்கேயாவது ஒரு மலைல போயி எடுத்துட்டு வந்திருப்பானுவ! நம்மகிட்டையே கத அளக்குறானுக!
  / உங்க அக்கா உன்ன விட அதி புத்திசாலியா இருந்து இருக்காங்களே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)

  ReplyDelete
  Replies
  1. பின்ன இல்லையா பின்ன???

   ஆமினா அக்கான்னா சும்மாவா??? ஏற்கனவே பதிவுலகில் நீ நிரூபிச்சுட்டிருக்க !! ஹி..ஹி...ஹி...

   Delete
 4. // நீ பொறக்கும் போது பெரிய அறிவாளி! புத்திசாலி! அதான் உன் சின்ன வயசுல இந்த மாதிரி மொக்கை ஆராய்ச்சிகள்லாம் நீ செய்யல! அதுனால தான் உனக்கு அந்த மாதிரி மொக்கை தத்துவங்கள் எல்லாம் தெரியல...."//

  அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி.. அவங்க செஞ்சது எல்லாம் மொக்கை ஆராய்ச்சினா? இப்போ நீங்க செஞ்சது?

  //அய்யோ...உனக்கெல்லாம் ஒன்னுமே தெரியாதாம்மா? ஏன்ம்மா"ன்னு மானத்தை வாங்குறான்! அவ்வ்வ்வ்வ் (அவன் உண்மையதான் சொல்றான் என்பது வேற விஷயம் ஹி..ஹி..ஹி..)

  அவன் உண்மையாதான் சொல்றான் என்பது வேற விஷயம் அல்ல அது தான் விசயமே...? அவ்வ்வ்வ்வ்வ்...

  மனம் விட்டு சிரிக்க வச்சிட்டிங்க.. நன்றிங்கோ...

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் வரஹ்...

   //அவங்க செஞ்சது எல்லாம் மொக்கை ஆராய்ச்சினா? இப்போ நீங்க செஞ்சது? //

   தட் இஸ் கால்டு படுமொக்கை ஆர் மரணமொக்கை ஆராய்ச்சி :-)

   //வேற விஷயம் அல்ல அது தான் விசயமே...? அவ்வ்வ்வ்வ்வ்...//

   சொந்த காசுலையே சூனியம் (???!!) வச்சுட்டேனோ அவ்வ்வ்வ்

   Delete
 5. //மனுஷபயபுள்ளைகளுக்கு கால் இருக்குற மாதிரி வானத்துக்கும் ஸ்பெசல் கால் இருக்கு! அதான் அதுவும் நடக்குது!!!//

  ஆத்தீ.....மிடியல...

  ReplyDelete
  Replies
  1. //புலழ்ச்சி அணியா.//

   ஐ திங் யூ ஆர் ப்ரம் டமில்நாட்!! ஆம் ஐ ரைட்?? ஹி..ஹி..ஹி..

   Delete
 6. அழைப்பிற்கு நன்றி ஆமினா!! இப்பவே ஒரு மொக்கைய ரெடி பண்றேன்...ஹிஹிஹி...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் உலகபுகழ்பெற்ற சரித்திர ஆராய்ச்சியை ஆவலுடன் எதிர்நோக்கும் உங்கள் ரசிகை ஆமினா முஹம்மத் :-)

   Delete
 7. ரசித்தேன் சிரித்தேன் - பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 8. தலைப்பை பார்த்துட்டு என்னவோ ஏதோனு பயந்துட்டு வந்தேன்.
  ஹஹா..

  ReplyDelete
  Replies
  1. எம் மேல அம்புட்டு அக்கறை கொண்ட உங்களை மனதார பாராட்டுறேன் இந்திரா... மனதார பாராட்டுறேன் (கேன்சர், ஆஸ்துமா வந்து போர்வை போத்திக்கிட்டு இருமிக்கிட்டே இருக்கும் சிவாஜி ஸ்டைல்ல சொல்லிப்பார்க்கவும் :-)

   Delete
 9. என்னை தொடர் பதிவுக்கு கூப்பிட்டதுக்கு நன்றி ஆமி. ஆனா, நான் 5 தரம் உன் பதிவை படிச்சேன். ஆனா, தலைப்பு என்ன? எதை வெச்சு நான் தொடர் பதிவு எழுதனும்ன்னு புரியவே இல்லை தங்கச்சி. இந்த நிலைமை எனக்கு மட்டுமா? இல்லை இந்த பதிவை படிக்குற எல்லாருக்குமான்னு புரியலை!!! அதனால, தயவு செஞ்சு எனக்கு மட்டும் மெயில் பண்ணிடேன்.

  ReplyDelete
  Replies
  1. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

   அக்கா... நானும் விஞ்ஞானி தான்- இதான் தலைப்பு!

   சின்ன வயசுல நம்ம விஞ்ஞானி ரேன்ச்க்கு கண்டுபிடிச்ச விஷயங்களை பகிரணும்! http://enrenrum16.blogspot.in/search?updated-max=2012-11-05T02:15:00%2B04:00&max-results=1&start=1&by-date=false

   இந்த லிங்க் பாருங்க... ஓரளவுக்கு :-) புரியும்!!

   Delete
 10. //"ஆமி! நீயெல்லாம் பானு, சர்மிளா மாதிரி கிடையாது! நீ பொறக்கும் போது பெரிய அறிவாளி! புத்திசாலி! அதான் உன் சின்ன வயசுல இந்த மாதிரி மொக்கை ஆராய்ச்சிகள்லாம் நீ செய்யல! அதுனால தான் உனக்கு அந்த மாதிரி மொக்கை தத்துவங்கள் எல்லாம் தெரியல...."//Yes.....ROFL

  //மனுஷபயபுள்ளைகளுக்கு கால் இருக்குற மாதிரி வானத்துக்கும் ஸ்பெசல் கால் இருக்கு! அதான் அதுவும் நடக்குது!!! - எப்பூடி :-) :-) :-)// ..... Super Thought Sister

  //இவனுக்கு பதில் சொல்றதுக்கு செரமப்படுறத விட தப்பிக்க ரொம்ப சிரமப்படுறேன்! முடியல...//
  ஆ ஹா பாவம் ஷாம் பெரியவான ஆனாதும் இதே போன்று //ஷாம்க்கு கிடைச்ச அறிவாளி அம்மா (நானேதான்) மாதிரி ஆமினாக்கு கிடைக்காததால்// சொல்லி புலம்புவார் ..... :)

  மொத்ததில் மனம் விட்டு சிரித்தேன் :) .... நன்றி சகோதரி

  ReplyDelete
  Replies
  1. //Super Thought Sister //

   நன்றி சகோ! என்னை நெனச்சா எனக்கே பெருமையா தான் இருக்கு... என்ன பண்ண சொல்றீங்க :-)))

   //சொல்லி புலம்புவார் ..... :)//

   இப்பவே அடிக்கடி நான் எதாவது செய்யும் போதெல்லாம் "எப்படிம்மா? எப்படிம்மா கண்டுபிடிச்ச? எப்படிம்மா உனக்கு தெரிஞ்சுச்சு இதெல்லாம்"ன்னு சொல்றான்! அவன் பாராட்டுறானா நொந்துக்குறானான்னு இப்ப வரைக்கும் கண்டுபிடிக்கமுடியல... அவ்வ்

   Delete
 11. நான் ரொம்ப அறிவாளியா இருந்தேனாம் (கல்லெடுக்கப்படாது!) ரொம்ப புத்தியாசலியா இருந்தேனாம் ( நோ நோ... அழப்படாது) , என்னை மாதிரி யாராலும் திங்க் பண்ண முடியாதாம் ( நோ! சிரிக்கப்படாது)..../// அருமை, அற்புதம், ஆஹா, ஒஹோ,,,, உங்களோட கற்பனை வளத்தை சொன்னேன்!!!! :-) :-)

  ReplyDelete
  Replies
  1. //அருமை, அற்புதம், ஆஹா, ஒஹோ,,,, உங்களோட கற்பனை வளத்தை சொன்னேன்!!!! :-) :-)//

   சரிவிடுங்க! விடுங்க !!!

   சூரியன் கிழக்கில் தான் உதிக்குதுன்னு சொல்லிடிருக்கணுமா என்ன?:-))

   Delete
 12. மனம் விட்டு சிரித்தேன்.... :)

  ReplyDelete
 13. நீங்க உலகமகா புத்திசாலிங்க ....

  ReplyDelete
  Replies
  1. சொன்னதொட விடாதீங்க.... அப்படியே தஞ்சாவூர் கல்வெட்டுல செதுக்க ஏற்பாடு செய்யுங்க! எங்கும் பரவட்டும் என் புகழ் :-)

   Delete
 14. @நிஜாம்

  தம்பி... இது உங்களுக்கே ஓவரா தெரியல???

  // Super Thought Sister //

  இத சொல்ல உங்களுக்கு எப்படி தம்பி மனசு வந்துச்சு??? ஒஹோ... வஞ்சப் புலழ்ச்சி அணியா??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
  Replies
  1. //புலழ்ச்சி அணியா//

   தமிழ் வாத்தியார் பைய்யன்னாம்... நோட் பண்ணிக்கோங்கப்பா!!

   தமிழுக்கு வந்த சோதனைய பாரேன்!!!

   Delete
 15. இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)
  >>
  மனசுல இருக்குறதுலாம் சொன்னா நீ தாங்க மாட்டே ஆமி

  ReplyDelete
  Replies
  1. //மனசுல இருக்குறதுலாம் சொன்னா நீ தாங்க மாட்டே ஆமி//

   ச்ச..ச்ச...

   பாராட்டுலாம் பொதுவுல வேணாம்க்கா.... மெயில்ல அனுப்புங்க!அப்பறம் ஒலகம் என்னை அமெரிக்காக்கு அதிபராக்க சொல்லி போராட்டம் பண்ணிட போறாங்க!! :-)))

   Delete
 16. ஆமி பொறக்கும் போதே இவ்வளவு புத்திசாலியா பொறந்துட்டியே இப்ப உன்ன எல்லாரும் எப்படி கோத்துவிடராங்க பாத்தியா. ஆனா கூட நல்லாவே சமாளிச்சிருக்கே. கீப் இட் அப்.

  ReplyDelete
  Replies
  1. ஆமா மாமி! உண்மைய சொன்னா ஒலகம் நம்பாது தான் :( :( :(

   ஹி..ஹீ..ஹி....

   Delete
 17. yennammaa romba naalaa pathive podaliye!!

  ReplyDelete
  Replies
  1. சரக்கு இல்ல சகோ! என்ன எழுதன்னு தெரியாம சுத்திட்டிருந்தேன்...

   நான் சின்ன வயசுல எவ்வளவு தெறமசாலின்னு பயபுள்ளைங்க தெரிஞ்சுக்க ஆவலா இருந்துச்சுங்க.. அதான் ஒடனே பதிவு போட்டேன் :-)

   அக்கறையாய் விஷாரிச்சதுக்கு நன்றி சகோ! கட்டுரை போட்டில கட்டாயம் கலந்துக்கோங்க :-)

   Delete
 18. ஆமி இப்ப சிங்க பூர்ல இருக்கேன் அறுசுவை ஃப்ரெண்ட்ஸ் கவிசிவ ராதா ஹரியை மீட் பண்ணலாம்னு காண்டாக்ட் நம்பர் கேடிருக்கேன்.ஹேமா ப்ரைஸ் இண்டியா வந்திருகாளாம்.இவல்லாம் உனக்கும் தெரிஞ்சவங்கதானே?

  ReplyDelete
  Replies
  1. ஆமா மாமி! எல்லாரும் நம்ம தோழிஸ் தான்...

   ஆனா மெயில் கான்டக்ட் மட்டும் தான் இருக்கு! :-)

   Delete
 19. /என்னை மிரட்டிய பதிவர்// என்று படிச்சுட்டு 'அச்சோ பாவம்..இந்த ஆமினாவை எத்தன பேர்தான் மிரட்டறாங்க... போகிற போக்கைப் பார்த்தா ஆமினாவோட உயிருக்கே ஆபத்தாயிடும் போலயே' அப்டின்னெல்லாஆஆஆம்... நினச்சு படிச்சு பார்த்தா.... ஆபத்து எங்க உயிருக்குன்னு தெளிவா புரிஞ்சுடுச்சு...:((....அவ்வ்வ்வ்வ்...

  /சாப்பாடு டைம் நெருங்கியதால நானே முடிவுக்கு வந்தேன்!

  நிலாக்கு பின்புறமா தரையிறங்கியிருக்கானுங்க!அதான் நம்மால பாக்க முடியல! :-) :-) :-)/// அப்பாடா... நல்ல வேளை...அதுக்கு மேல ஆராய்சி செய்யல....

  //பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் எங்கள் கட்சி சார்பாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.... /// அதே..அதே... அரசியல் ப்ளாக் ஆரம்பிச்சிடுங்க சீக்கிரமாக.... அப்புறம் பாருங்க... எங்கயோ போயிடுவீங்க.. ;-))

  //இப்பவே அடிக்கடி நான் எதாவது செய்யும் போதெல்லாம் "எப்படிம்மா? எப்படிம்மா கண்டுபிடிச்ச? எப்படிம்மா உனக்கு தெரிஞ்சுச்சு இதெல்லாம்"ன்னு சொல்றான்! அவன் பாராட்டுறானா நொந்துக்குறானான்னு இப்ப வரைக்கும் கண்டுபிடிக்கமுடியல... அவ்வ்/// உங்க வீட்லயும் இப்படித்தானா?... அப்பாடா...;))

  கூட நாலு பேர கப்பல்ல ஏற்றிவிட்ட சமூகசேவகி ஆமினா வாழ்க....

  ReplyDelete
  Replies
  1. //ஆபத்து எங்க உயிருக்குன்னு தெளிவா புரிஞ்சுடுச்சு...:((....அவ்வ்வ்வ்வ்...//

   நோ நோ... உங்க ப்ளாக்லாம் படிக்கிறதுனால எனக்கு மரத்து போச்சு!! சோ எவ்வளவு அடிச்சாலும் தாங்கலாம்... டோன்ட் வொர்ரி :-)

   //அதே..அதே... அரசியல் ப்ளாக் ஆரம்பிச்சிடுங்க சீக்கிரமாக.... அப்புறம் பாருங்க... எங்கயோ போயிடுவீங்க.. ;-))//

   ச்ச..ச்ச... நேரா களத்துல இறங்கலாம்னு ப்ளான்! அடுத்த சிஎம் க்கு இப்பவே முயற்சி பண்ணிட்டிருக்கேன் :-)

   //உங்க வீட்லயும் இப்படித்தானா?... அப்பாடா...;))//
   நான் கூட தெரியாத்தனமா நம்மளை நாமளே டேமேஜ் பண்ணிட்டோமேன்னு பீல் பண்ணேன்! இப்ப அந்த பீலிங்க்ஸூ போயிந்தி :-)

   //கூட நாலு பேர கப்பல்ல ஏற்றிவிட்ட சமூகசேவகி ஆமினா வாழ்க.... //
   பின்ன ?? இதவிட்டா பழிவாங்க நல்ல சான்ஸ் வேற இருக்குறதா எனக்கு தெரியல :-)

   Delete
 20. //ஆமி! நீயெல்லாம் பானு, சர்மிளா மாதிரி கிடையாது! நீ பொறக்கும் போது பெரிய அறிவாளி! புத்திசாலி! //

  இதென்னடா கொடும !

  ReplyDelete
  Replies

  1. //இதென்னடா கொடும !//
   யுனிவர்செல் ட்ரூ :-)

   Delete
 21. //நான் ரொம்ப அறிவாளியா இருந்தேனாம் (கல்லெடுக்கப்படாது!)//

  கல் எடுக்க மாட்டோம். பரங்கிமலைய தூக்கிட்டு ஓடி வருவோம்.

  ReplyDelete
  Replies
  1. //கல் எடுக்க மாட்டோம். பரங்கிமலைய தூக்கிட்டு ஓடி வருவோம்.//

   அதென்ன பரங்கிக்காயா?? :-)

   Delete

 22. //தொடர்பதிவெழுத அழைக்கவிருக்கும் நபர்கள்

  1. தல மெட்ராஸ் பவன் சிவா//

  என்னது தலயா?? வாலுக்கே வழியக்காணும்.

  ReplyDelete
  Replies
  1. //
   என்னது தலயா?? வாலுக்கே வழியக்காணும். //
   உங்களுக்கு புகழ்ச்சி பிடிக்காதுன்னு தெரியும் தல! அதெல்லாம் கண்டுக்காதீங்க கண்டுக்காதீங்க :-))

   புகழ்ச்சி விரும்பா தல வாழ்க வாழ்க :-)

   Delete
 23. //சின்ன வயசுல , சந்திரனுக்கு ராக்கெட் போச்சுன்னு அடிக்கடி பெரியவங்க பேசிக்கிட்டாங்க. ஒடனே என் விஞ்ஞான மூளை வேலை செய்துச்சு! வாசல்லையே உக்கார்ந்து நிலாவையே பாத்துட்டிருந்தேன்!//

  நிலாவுக்கு ராக்கெட் அனுப்பும்போது உங்களுக்குச் சின்ன வயசா? அப்பல்லாம் நான் பொறக்கவேயில்லை. அதனால, இன்னமேப்பட்டு, நீங்க எனக்கு “ஆமினா அக்கா”!! (அல்லது, “ஆண்ட்டி”னு சொல்லவா? :-)))))

  ReplyDelete
  Replies
  1. //நிலாவுக்கு ராக்கெட் அனுப்பும்போது உங்களுக்குச் சின்ன வயசா? அப்பல்லாம் நான் பொறக்கவேயில்லை. அதனால, இன்னமேப்பட்டு, நீங்க எனக்கு “ஆமினா அக்கா”!! (அல்லது, “ஆண்ட்டி”னு சொல்லவா? :-)))))//

   ச்ச..ச்ச.... சட்டுன்னு அப்படியெல்லாம் முடிவுக்கு வரப்படாது ஹுசைனம்மா... அதாகப்பட்டது என்னான்னா....

   நான் சின்ன வயசுல இருக்கும் போது அடிக்கடி அத பத்தி பேசிக்கிட்டாங்க... அதான் சொல்ல வந்தேன்

   (ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா... வெளக்கமா சொல்லலன்னா வயச எம்பதாக்கி தலைக்கு வெள்ள பெய்ன்ட் தடவிடுறாங்களே....)

   Delete
 24. //சொன்னதொட விடாதீங்க.... அப்படியே தஞ்சாவூர் கல்வெட்டுல செதுக்க ஏற்பாடு செய்யுங்க! எங்கும் பரவட்டும் என் புகழ் :-)// அடிங்க அடிங்க ஏண்டமட்டும் அடிங்கப்பு..ஹா ஹா

  //அதனால, இன்னமேப்பட்டு, நீங்க எனக்கு “ஆமினா அக்கா”!! (அல்லது, “ஆண்ட்டி”னு சொல்லவா? :-)))))// ஹுசைனம்மா உங்களுக்கே அக்காவோ அண்ணிட்யோன்னு இருக்கையில் அப்ப என்னக்கொஞ்சம் [உள்ளது உள்ளபடி ]நெனச்சுப்பாருங்க. எனக்கு உம்மம்மாவ இருக்குமோ ஆமிம்மா..

  ReplyDelete
  Replies

  1. /// ஹுசைனம்மா உங்களுக்கே அக்காவோ அண்ணிட்யோன்னு இருக்கையில் அப்ப என்னக்கொஞ்சம் [உள்ளது உள்ளபடி ]நெனச்சுப்பாருங்க. எனக்கு உம்மம்மாவ இருக்குமோ ஆமிம்மா..//

   பார்ரா... ஒருபுள்ள சந்தோஷப்பட்டுக்குறத! யார் என்ன சொன்னாலும் மலிக்கா எனக்கு அக்கா தான்:-))) அடிச்சு கேட்டாலும் இத தான் சொல்லுவேன்!!!

   Delete
 25. ரசித்துப் படித்துச்
  சிரித்து மகிழ்ந்தேன்!

  ReplyDelete
  Replies
  1. @அருணா

   மிக்க நன்றிங்க

   Delete
 26. மிகவும் குறும்பு!இரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. @ராமாநுசம் ஐயா

   வருகைக்கும் ரசித்ததற்கும் மிக்க நன்றி

   Delete
 27. Replies
  1. //
   Thala Siva :))//
   ம் ஆமா ஆமா... சீக்கிரமே ரசிகர் மன்றம் வச்சுடலாம்... நீங்க தான் தலைவர்.. நான் செயலாளரா இருக்கேன்!

   தல வாழ்க... :-)

   Delete
 28. என்னை மிரட்டிய பதிவர் - தலைப்பு படித்ததும் என்னவோ ஏதோன்னு வந்தால்-உலக மகா புத்திசாலியைப் பற்றிய பதிவு!
  ஆமீனா உங்க கட்டுரை படித்து சிரிப்பு தாங்கலை! பின்னூட்டம் எல்லாமே ஒண்ணையொண்ணு மிஞ்சி விட்டது.
  சிரிப்பு மழையில் நனைய விட்டதுக்கு நன்றி ஆமீனா!

  http://ranjaninarayanan.wordpress.com
  http://pullikkolam.wordpress.com

  ReplyDelete
  Replies
  1. //உலக மகா புத்திசாலியைப் பற்றிய பதிவு!//ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா... இந்த பதிவு பிறவிப்பயனை அடைஞ்சுடுச்சு!!!

   நன்றி ரஞ்சினி அம்மா

   Delete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)