சங்கை மிகு ரமலானை நம் அடைவதற்கு இன்னும் சில தினங்களே உள்ளன. மற்ற மாதங்களை போல் அல்லாமல் இப்புனித மாதத்தில் இறை நெருக்கம் பெற வேண்டி நம் இறைவழிபாடு இன்னுமின்னும் கூடுதலாகவே இருக்கும். ஆனால் பெண்களால் ஆசைபட்ட அளவிற்கு இறைவழிபாட்டில் ஈடுபட முடியாமல் போகிறது. காரணம் நோன்பின் சஹர் உணவையும் இப்தார் விருந்தையும் சேர்த்து இரவு உணவு மற்றும் குழந்தைகளை கவனிப்பது என நேரங்களை செலவழிப்பதில் கழிவதால் இறைவழிபாட்டிற்கான கால அளவு என்பது மிகவும் சிறிய அளவிலேயே இருக்கும்.  அப்படிப்பட்டவர்களுக்கான திட்டமிடுதல் ஆலோசனைகள் அடக்கியதே இந்த பதிவின் நோக்கம். 

என்னன்ன செய்யலாம்?

ப்போதே வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பிச்சுடுங்க. தூசி தட்டுவது, தேவையற்ற பொருட்களை அகற்றுவது, பெரிய பெரிய பெட்ஷீட், கார்ப்பெட், ப்ளாங்கெட் முதலியவற்றை சுத்தம் செய்துவிடுங்கள். ரம்ஜான்க்காக  வீடு அலங்கரிக்க கடைசி நோன்புகளில் மிகவும் சோர்வாக இருப்பதால் இவற்றை அன்று முறையாக செய்வது கடினமாகிவிடும் என்பதால் அனைத்தையும் இன்றிலிருந்தே ஒவ்வொன்றாக செய்ய ஆரம்பிக்கலாம்.

நோன்புக்கு தேவைப்படும் மளிகை பொருட்கள் என்னன்னன்னு இப்பவே லிஸ்ட் போட்டு வாங்கி ரெடியா வச்சுக்கோங்க. அப்பப்ப வெயிலில் அலைய வேண்டிய அவசியம் இல்லாமல் போகும்.

நோன்பு நேரங்களில் வேலை சுலபமாக முடிய அசைவ உணவையே விரும்புவார்கள். ஒரு கிலோ இஞ்சிக்கு இஞ்சி,600 கிராம்  பூடு என்ற விகிதத்தில்  முன்பே அரைத்து உப்பு தூவி  பாட்டிலில் எடுத்து வைத்து உபயோகிக்கலாம்.

சின்ன வெங்காயத்தை உறித்து பாட்டிலில் அடைத்து வையுங்கள். அதோட புதினா கொத்தமல்லி ஆகியவற்றையும் தனித்தனியே ஆய்ந்து எடுத்து வைங்க.

பாத்திரங்களை அவ்வபோது கழுவி கொண்டால் பாத்திரம் சேராமல் இருக்கும். மொத்தமாக சேர்த்து கழுவ நினைத்தால் நிறைய நேரம் செலவழியக்கூடும்.

டைக்கு 3 நாட்களுக்கு சேர்த்தார் போல் அரைத்தெடுத்து கைபடாமல், எடுப்பதற்கு சுபலமாக மூன்று பாகங்களாக பிரித்து டப்பாக்களில் அடைத்து ப்ரீசரில் வைக்கலாம். பொரிப்பதற்கு 3 மணி நேரத்தில் அறைவெப்பநிலையிலேயே குளிர் போய்விடும்.

ட்லெட், சமோசா போன்றவற்றை முன்பே தயாரித்து ஒன்றோடொன்று ஒட்டாத வகையில் அடுக்கி பிரீஜ் செய்து வைத்து நோன்பு திறக்க அரைமணி நேரம் முன் வெளியெ எடுத்து வைத்து பின்னர் பொரிக்கலாம்.

மோசா, ப்ரெட் சான்விச் போன்றவற்றிற்கான ஸ்டப்பிங் மசாலாவை முன்பே  அதிகமா செய்து வைத்துக்கொண்டு அவ்வபோது தேவைக்கு எடுத்துக்கொள்ளலாம். ஏற்கனவே பூரிக்கு மாவு தயாராக இருப்பதால் வேலை சுலபம் :-)

ப்தார்க்கு எண்ணெய் வகைகளை விட பழங்கள் அதிகமா சேர்த்துக்கொள்ளுங்கள். ப்ரூட்  கஸ்ட்டர்ட்  அதிகமாக செய்து ப்ரிஜ்ஜில் வைச்சுடுங்க.

ஜூஸ், ரோஸ் மில்க் போன்றவற்றை 2 நாட்களுக்கு சேர்த்து செய்துவிடலாம்.

சுண்டல் செய்வதென்றால் அரைகிலோ அளவிற்கு ஊறவைத்து வேகவைத்து எடுத்து ப்ரிட்ஜில் வைத்துக்கொண்டால் தேவைக்கு எடுத்து தாளித்துக்கொள்ளலாம்.

ப்பாத்தி, பூரி போன்றவற்றிற்கும் 3 நாட்களுக்கு சேர்த்தார் போல் மாவு பிசைந்து 3 பாகங்களாக பிரித்து ப்ரீசலில் வைக்கலாம்.

சிலர் சகருக்கு சாப்பிட சாதம் பிடிக்காது அவர்கள் உருண்டைகளை சப்பாத்திகளாக தேய்த்து    எண்ணெய் விடாமல் லேசாக  இரு பக்கம் திருப்பி போட்டு பின்னர்  ஆறவைத்து மொத்தமாக ப்ரிஜ்ஜில்  கொள்ளலாம். தேவைப்படும் வேளையில்  எண்ணை விட்டு சுட்டு சாப்பிடலாம்.

நோன்பில் சகரில் ஈசியாக சாப்பிட்டு முடிக்க கட்டு சாதம் (லெமென் ரைஸ், புளி சாதம், லைட் மசாலா கொடுத்து பிரியாணி, தக்காளிசாதம், தயிர் சாதம், மோர்குழம்பு, ரசம் வகைகள்) இதுபோலும் செய்து சாப்பிடலாம்.

புளியை கரைத்து ப்ரீஜ் செய்து வைக்கலாம். ரசம், புளிகுழம்பு  வகைகள் உடனே செய்துமுடிக்கலாம். புளி பேஸ்ட் செய்து வைத்துக்கொள்ளலாம் (1/4 கிலோ புளிக்கு 4 டம்ளர் நீர் விட்டு குக்கரில் 2 விசிலுக்கு வைத்து ஆறியதும் வடிகட்டி ஐஸ் க்யூப் டப்பாக்களில் ஊற்றி வைக்கலாம்.

ம்மூர்ல தேங்காய் பொடி கிடைக்காது. குருமா, குழம்பு வகைகளுக்கு தேங்காய், தேங்காய் பால் சேர்க்க வேண்டி வரும். தேங்காய், முந்திரி பாதம் சேர்த்து அரைத்து ஐஸ் கியுபுகளாக்கி பிரீஜரில் வைத்து கொண்டால் வேலை சுலபம். தேங்காய் பால் எடுத்து ப்ரீஜ் செய்து வைத்தும் உபயோகிக்கலாம்.

குழம்பு வகைகளை 2 நாட்களுக்கு சேர்த்தால் போல் அதிகமாக செய்துடுங்க.

ள்ளிவாசல் மூலமாக நோன்பு கஞ்சி கிடைத்துவிடும். அவ்வாறு கிடைக்கபெறாதவர்கள் நோன்பு கஞ்சி செய்ய அதிகமாகவே மெனக்கெடுவார்கள். அப்படி செய்யகூடியவர்கள் அரிசியை முன்பே பொடித்துக்கொள்ளுங்கள். பாசிபருப்பை கருகாமல் வறுத்துக்கொள்ளுங்கள். ஒரு கிலோ பொரித்த அரிசிக்கு கால் கிலோ பச்சை பருப்பு மற்றும் ஒரு மேசைகரண்டி வெந்தயம் கலந்து வைக்கவும். தேவைக்கு அரை டம்ளர் அல்லது ஒரு டம்ளர் எடுத்து உபயோகிக்கலாம்.

நோன்பு நேரத்தில் பல வீடுகளில் நோன்பு திறந்தவுடன் சாப்பிட ஒரு சமையல், ஷகருக்கு ஒரு சமையல்னு இருக்கும்.. அதற்கு பதிலாக நோன்பு திறந்தவுடன் நம்மால் அதிகம் சாப்பிட இயலாது அப்போது அதிக உணவு சாப்பிட வேண்டும் என்பதை விட, ஆரோக்கியமான உணவு சாப்பிட முயற்சிக் கொள்ள வேண்டும்..
நோன்பு திறக்க பழ வகைகள் தேவையான அளவு நறுக்கி வைத்து, ஜூஸ் மற்றும் சிம்பிள் ஆ செய்யக் கூடிய ஓட்ஸ் சூப், ஓட்ஸ் வெஜிடபிள் கஞ்சி, உப்புமா என்று எளிதில் சமைக்கக் கூடிய நேரத்தை தின்னாத சிம்பிள் சமையல் செய்யலாம். இதனால் இஃப்தாருக்கு சமைக்க வேண்டிய நேரத்தை மிச்சப்படுத்தி அந்த நேரத்தை ஷகருக்கு சமைக்க பயன்படுத்தலாம்

திலும் ஷகருக்கு தேவையான கொழம்பு, கூட்டு அனைத்தையும் நோன்பு திறக்கும் முன்பே செய்து வைத்துக் கொள்ளலாம். இதனால் நோன்பு திறந்த பின் செய்ய வேண்டிய அமல்களான குர்-ஆன் ஓதுதல், இரவுத் தொழுகை அனைத்தும் பாதிக்கப்படாது, சோறு வடிப்பதை மட்டும் இரவுத் தொழுகை முடிந்த பின்னோ அல்லது ஷகருக்கு சற்று முன் எழுந்தோ வைத்துக் கொள்ளலாம்.. நேரம் பற்றாத நிலையில் குக்கரில் சாதத்தை வைத்துக் கொள்ளலாம்..நேரத்தோடு தூங்க இயலும், தஹஜத்துக்கு எழுவதற்கு ஏதுவாகும்.

பெரும்பாலும் நாம் சஹர் செய்துட்டு உடனே படுத்துவிடுகிறோம். இதனால் பலவேளைகளில் பஜர் தொழுக முடியாமல் போய்விடுகிறது. சஹர் முடிந்ததும் வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பித்தால் பஜர் நேரம் வந்ததும் தொழுதுவிடலாம். தெம்பாக இருக்கும் போதே வீட்டுவேலை செய்துமுடிச்சுட்டா பின்னர் அலுப்பாக இருக்காது. டூ இன் ஒன் :-)

அப்பறம் இதையும் பாருங்க எக்கசக்கமான உபயோகமான ஆலோசணைகள் இருக்கு - ரமலானுக்கு தயாராவோமா?

அப்பறமென்ன? சமையல் செய்யும் நேரத்தை குறைத்து இம்மை வாழ்வின் நலத்திற்கும்  மறுமை வாழ்வின் வெற்றிக்கும் தேவையான அமல் செய்யும் நேரத்தை அதிகப்படுத்தி இறையன்பையும் இறை நெருக்கத்தையும் பெறுவோமாக

உங்கள் சகோதரி
ஆமினா முஹம்மத்


நன்றி- ஜலீலா அக்கா, முபி ஜன்னத், யாஸ்மின் மற்றும் டீக்கடை பேஸ்புக் குழுமம்

டிஸ்கி- இது தவிர வேறேதும் டிப்ஸ் இருந்தா சொல்லுங்க..

, ,

18 comments:

 1. Nalla pathivu in sha allah nadaimurai padutha allah uthavi puriyatu. aalosanaikku Jazakkallah khaira.

  ReplyDelete
 2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
  ///நன்றி- ஜலீலா அக்கா, முபி ஜன்னத், யாஸ்மின் மற்றும் டீக்கடை பேஸ்புக் குழுமம்///

  அனைத்து சகோதரிகளுக்கு என்னுடைய நன்றிகளும் வாழ்த்துகளும் ஜஸாக்கல்லாஹ் கைர

  ReplyDelete
 3. இன்ஷா அல்லாஹ் என் அன்புச் சகோதரி அஸ்மா ஒரு பதிவு எழுதியிருக்கிறார் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் முடிந்தால் படித்துப் பாருங்கள் http://payanikkumpaathai.blogspot.com/2012/07/blog-post.html

  ReplyDelete
 4. அருமையான , தேவையான குறிப்புகள்.... தக்க சமயத்தில்...

  எங்கள் இறைவா!!! இந்த ரமலானை சிறப்பானதாக, பயனுள்ளதாக ஆக்கித் தருவாயாக..

  எங்கள் அனைவரின் செயல்களையும் பொருந்திக் கொள்வாயாகா.... ஆமின்

  ReplyDelete
 5. அஸ்ஸலாமு அலைக்கும் ஆமினா! உங்கள் டிப்ஸ்களும் அனைவருக்கும் தேவையான ஒன்று.

  //ரம்ஜான்க்காக வீடு அலங்கரிக்க// இதுதான் கொஞ்சம் இடிக்குதுபா :) ஏன்னா சிலபேர் இதற்காக ரொம்ப செலவழிப்பாங்க. 'அப்படி செய்வது தேவையில்லாதது' என நீங்கள் சேர்த்து குறிப்பிட்டிருக்கலாம் என நினைக்கிறேன். மற்றபடி உங்கள் தொகுப்பினை பகிர்ந்துக் கொண்டமைக்கு ஜஸாகல்லாஹ் ஹைரா!

  ReplyDelete
 6. @ சகோ ஹைதர் அலி

  என்னுடைய டிப்ஸ்களும் மற்றவர்களுக்கு பயன்படும் வண்ணம் பகிர்ந்துக் கொண்டமைக்கு ஜஸாகல்லாஹ் ஹைரா! (இன்ஷா அல்லாஹ்) அதன்மூலம் கிடைக்கும் நன்மைகள் உங்களுக்கும், இந்தப் பதிவில் பகிர்ந்த ஆமிக்கும் குறைவில்லாமல் கிடைக்கட்டும்.

  ReplyDelete
 7. அதிலும் ஷகருக்கு தேவையான கொழம்பு, கூட்டு அனைத்தையும் நோன்பு திறக்கும் முன்பே செய்து வைத்துக் கொள்ளலாம். இதனால் நோன்பு திறந்த பின் செய்ய வேண்டிய அமல்களான குர்-ஆன் ஓதுதல், இரவுத் தொழுகை அனைத்தும் பாதிக்கப்படாது, சோறு வடிப்பதை மட்டும் இரவுத் தொழுகை முடிந்த பின்னோ அல்லது ஷகருக்கு சற்று முன் எழுந்தோ வைத்துக் கொள்ளலாம்.. நேரம் பற்றாத நிலையில் குக்கரில் சாதத்தை வைத்துக் கொள்ளலாம்..நேரத்தோடு தூங்க இயலும், தஹஜத்துக்கு எழுவதற்கு ஏதுவாகும்./////

  எங்க வீட்டுல இப்படித்தான் ரொம்பகாலமா செய்யுறாங்க.அதனால ஸகருக்கு அலுப்பும் இல்லை. ஃபஜர் தொழுகை தொழ சோம்பலும் இல்லை.

  ReplyDelete
 8. //குழம்பு வகைகளை 2 நாட்களுக்கு சேர்த்தால் போல் அதிகமாக செய்துடுங்க.
  ///

  //ஜூஸ், ரோஸ் மில்க் போன்றவற்றை 2 நாட்களுக்கு சேர்த்து செய்துவிடலாம்.///
  மொத்தமா முப்பது நாளைக்கு செஞ்சு வச்சிடலாமே அம்மு??? ஹிஹிஹிஹி இன்னும் ஈசி..

  மிகவும் உபயோகமான ஒரு பகிர்வு ஜசாக்கல்லாஹ் மா

  வஸ்ஸலாம்

  ReplyDelete
 9. நல்ல ஐடியாக்கள் ஆமி..
  ஜசகல்லாஹ் சகோ...

  ReplyDelete
 10. அனைத்து டிப்ஸூம் மாஷா அல்லாஹ் அருமை.. அனைவருக்கும் பாராட்டுக்கள்

  ReplyDelete
 11. சிநேகிதி said...
  அனைத்து டிப்ஸூம்......
  ========================================
  ஷர்மிளா ஹமீத் said...

  ஹிஹிஹிஹி
  ========================================
  மு.ஜபருல்லாஹ் said...
  எங்க வீட்டுல இப்படித்தான் ரொம்பகாலமா செய்யுறாங்க.
  =========================================
  அஸ்மா said...
  'அப்படி செய்வது தேவையில்லாதது'
  ==========================================
  ஹைதர் அலி said...
  என் அன்புச் சகோதரி அஸ்மா...
  ==========================================
  சிராஜ் said...
  எங்கள் இறைவா!!! இந்த ரமலானை சிறப்பானதாக, பயனுள்ளதாக ஆக்கித் தருவாயாக..
  ==========================================
  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

  ReplyDelete
 12. செம பிளான்னிங்கா இருக்கே, இப்போதுதான் பார்க்க முடிந்தது, அருமை சகோ

  ReplyDelete
 13. நல்ல குறிப்புகள் ஆமினா. என்றாலும், பகல்பொழுது முழுதும் உண்ணாத ரமலானில் மட்டும் ஏன் சமையலுக்கு அதிக நேரம் எடுக்கிறது, இவ்வளவு முன்னேற்பாடுகள் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது என்பதும் யோசிக்க வேண்டிய ஒன்று. :-)))))

  அத்தனை டிப்ஸ்களையும் ரமலானுக்கு மட்டும் என்றில்லாமல், மற்ற நேரங்களிலும் பயன்படுத்திக் கொண்டால், நேர மிச்சம்தானே!!

  ReplyDelete
 14. ஸலாம் ஆமினா, எல்லோருக்கும் தேவையான பதிவை தொகுத்து போட்டு இருக்கீங்க

  ”நன்றி ஜலீலா அக்கா” அப்படியே என் லின்கையும் கொடுத்து இருக்கலாம்.

  ReplyDelete
 15. SALLAAM

  நல்ல பயனுள்ள டிப்ஸ் கொடுத்துருக்கீங்க வாழ்த்துக்கள் ..


  அன்பான வேண்டுகோள்:இஸ்லாமிய சகோதர,சகோதரிகளே இப்பதிவை(பைத்துல்மால்-திருவாளப்புத்தூர்-அழகிய முன்மாதிரி ஊர்)அவசியம் படித்து நமது சமுதாயத்திற்கு உதவுங்கள்,அல்லாஹ் உங்களுக்கு உதவுவானாக.
  Read more: http://tvpmuslim.blogspot.com/2012/07/baitul-maal-thiruvalaputhur-A-beautiful-model.html

  ReplyDelete
 16. ஆமி இனிய ஈத் பெரு நாள் நல் வாழ்த்துகள் உனக்கும் உன் குடும்பத்தினருக்கும். உன் பக்கம் வரவே முடியரதில்லே.பேஜ் ஓபன் ஆகவே மாட்டேங்குது இன்னிக்கு கூட ரொம்ப டைம் ட்ரை பண்ணிட்டுதான் வந்தேன். என் டேஷ் போர்டுலயும் உன் பதிவு ஏதும் வரமட்டேங்குது.

  ReplyDelete
 17. அன்பு ஆமீனா,
  பதிவர் சந்திப்பில் உங்களைப் பார்த்தது மிகவும் மகிழ்ச்சி!
  எனது பதிவைப் படிக்க ranjaninarayanan.wordpress.com
  அன்புடன்,
  ரஞ்ஜனி

  ReplyDelete
 18. அன்புள்ள ஆமீனா,
  பதிவர் விழாவில் உங்களையும் உங்கள் குட்டி சுவர்க்கத்தையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி!
  என் பதிவைப் படிக்க:
  ranjaninarayanan.wordpress.com
  anbudan,
  ranjani

  ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)