உன் ஆணாதிக்கத்தில்
அடிமைபட்டிருக்கும் என் பெண்ணியம்

உன் சுயநலத்தில் 
சுட்டெரிக்கப்படும் என் சுயஅடையாளம்

உன் அனுமதிக்காய் காத்திருக்கும் நொடியில் -என்
சம்மதத்திற்காய் கதற  காத்திருக்கும் என் அழுகை

உன் நெருஞ்சி வார்த்தைகளில்
மரணத்தை துணைக்கழைக்கும் என் நெஞ்சம்

மொத்தத்தில்
சிறகுகள் அசையவிடாது
 சிறை செலுத்தும் உன் முயற்சியில்
 கைகளையே  துண்டிக்க துடிக்கும் என் காதல்

உன் தலைமைக்காய் 
 திணிக்கப்படும்  கட்டளைகளில்
மரணிப்பது  முற்போக்காகினும்
தலையசைக்கும்  பொம்மையாகவே  அவதாரமெடுக்க
வரம் கேட்கும் என் காதல்!


_______________
                          

சமையல் எக்ஸ்ப்ரஸ்ஸில்- கோபி ரைஸ்
இஸ்லாமிய பெண்மணியில்- இஸ்லாம் கற்று தரும் சுயநலம்?!!

,

33 comments:

 1. nice lines aapa!
  keep it up!!!!!!!!!!!

  ReplyDelete
 2. //இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-) //

  கட்டுரை சூப்பர் :-)

  ReplyDelete
 3. வணக்கம் அக்கா எப்படி சுகம்?

  அழகான ஒரு கவிதை மனதை வருடுகின்றது

  ReplyDelete
 4. உன் சுயநலத்தில்
  சுட்டெரிக்கப்படும் என் சுயஅடையாளம்

  உண்மையும் கூட :)

  ReplyDelete
 5. உன் சுயநலத்தில்
  சுட்டெரிக்கப்படும் என் சுயஅடையாளம்

  இது கொஞ்சம் ட்ட்டூமச்...:)

  ஆண்களின் சுயமே பெண்களாகிப்போக...அதனூடாய் இருக்கும் நலவும் அவர்களைச்சார்ந்தது தானே...

  அது எப்படிச்சுடும்...

  ReplyDelete
 6. @S.A. நவாஸுதீன்

  (Kadumaiyaana) Kaadhal.//

  கொடூரமானதும் கூட ஹி..ஹி..ஹி...

  வருகைக்கு நன்றி சகோ

  ReplyDelete
 7. @அப்சல்

  //nice lines aapa!
  keep it up!!!!!!!!!!!//

  தேங்க்ஸ் தம்பி :-)

  ReplyDelete
 8. @ஜெய்

  //கட்டுரை சூப்பர் :-)//

  பயபுள்ளைகளுக்கு பொறாம! பொறாம!

  ReplyDelete
 9. @ராஜ்


  நான் நலம் தம்பி. நீங்களும் நலம் தானே

  //அழகான ஒரு கவிதை மனதை வருடுகின்றது//

  ஓ அப்படியா :-)

  கேட்டுக்கோங்கப்பா... ஹி..ஹி..ஹி..

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தம்பி

  ReplyDelete
 10. @பஸ்மின்

  //உண்மையும் கூட :)//

  நாமலாம் எப்பவும் உண்மைய மட்டும் தானே பஸ்மின் பேசுவோம்?? :-) 'சில ஹராத்துங்க' மாதிரியா எப்ப பாத்தாலும் பொய்யாக பொண்ணுங்களையே கொற சொல்லிக்கிட்டு ஹி..ஹி..ஹி...

  ReplyDelete
 11. @உன் சுயநலத்தில்
  சுட்டெரிக்கப்படும் என் சுயஅடையாளம்

  இது கொஞ்சம் ட்ட்டூமச்...:)
  //

  ஆமா ரஜின் அண்ணா... செம டாப் ஓவர் மச்ச்சோ மச் தான்! எவ்வளவு கொடுமைய பெண் வர்க்கம் அனுபவிக்குது பாத்தீயளா... உங்களுக்காவது புரிஞ்சுருக்கே... உண்மைய ஒத்துக்கிட்டதுக்கு நன்றிங்க் ;-)

  //ஆண்களின் சுயமே பெண்களாகிப்போக...அதனூடாய் இருக்கும் நலவும் அவர்களைச்சார்ந்தது தானே...//

  இப்ப ஏன் ஹிந்தில பேசிட்டிருக்கீங்க? :-))))

  //அது எப்படிச்சுடும்...//
  அதான் சுட்டுச்சே அப்பறம் என்ன ஆராய்ச்சி! சுடும் சுடும்!

  ReplyDelete
 12. வணக்கம் சகோதரி நலமா??
  நீண்ட இடைவெளியின் பின் ஆமினா கவிதையில் சிந்திக்க வைக்கின்ற நிலை!ம்ம்
  பெண்கள் இப்படி காதலில் வரம் என்று மீண்டும் மீண்டும் காதல் என்ற சாபத்தில் அடங்கிப்போவது எல்லாம் சுயத்தை இழக்கத்தானா? 

  ReplyDelete
 13. /* சில ஹராத்துங்க' மாதிரியா எப்ப பாத்தாலும் பொய்யாக பொண்ணுங்களையே கொற சொல்லிக்கிட்டு */

  பொண்ணுங்கள கொற சொல்றவங்க ஹராத்தா?? நோ, ஏத்துக்க முடியாது... அவங்க நிச்சயம் பெரிய அறிவாளியா, ஞானியா இருப்பாங்க....

  ReplyDelete
 14. @ரஜின்

  /* ஆண்களின் சுயமே பெண்களாகிப்போக...அதனூடாய் இருக்கும் நலவும் அவர்களைச்சார்ந்தது தானே. */

  என்ன சகோ... சமீபத்துல இலங்கை ஏதும் போய்ட்டு வந்தீங்களா???? பாரிய முயற்சியா இருக்கே...
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

  ReplyDelete
 15. ஓக்கே...பேக் டு கவிதை....

  உண்மையிலே ரொம்ப அழகா இருக்கு... உங்களூக்குள்ள ஒரு கவிஞாயினி இருக்காங்க... அது மட்டும் நல்லா தெரியுது...

  ஆனால்..இத நீங்க தான் எழுதினீங்களான்னு மைல்டா ஒரு டவுட்டு இப்பயும் இருக்கு... ஏன் அப்டி ஒரு சந்தேகம் எனக்கு வருது????

  ReplyDelete
 16. ஸலாம் சகோ.ஆமினா,

  //..அனுமதிக்காய்...
  ....சம்மத்திற்காய்...
  ...தலைமைக்காய்...//

  ---இந்த மூணு காய்கறியும் சேர்த்து செய்யப்பட்ட சமையல்... புதுமை & அருமை சகோ..!


  உடனே மார்க்கட் சென்று மேற்படி காய்கறிகளை வாங்கி வந்து நாமும் இந்த ரெசிப்பி டிஷ் செய்து பார்க்கணும் என்ற ஆவலை தூண்டும் விதமாக...

  நீங்கள் இங்கே தந்த மிக எளிமையான இந்த சமையல் குறிப்பை 'சமையல் எக்ஸ்ப்ரசில்' தந்திருக்கலாமே..? #டவுட்டு..!

  ReplyDelete
 17. @தனிமரம்

  வாங்க சகோ. நான் ரொம்ப நலம்.

  //நீண்ட இடைவெளியின் பின் ஆமினா கவிதையில் சிந்திக்க வைக்கின்ற நிலை!//
  உங்களையெல்லாம் பாக்க பாவமாத்தான் இருக்கு. பட் வாட் டூ டூ ஹி..ஹி..ஹி..

  //சுயத்தை இழக்கத்தானா?//
  காதலுக்கு கண்ணில்லைன்னு சும்மாவா சொன்னாய்ங்க? மூளைய கூட மழுங்கடித்துவிடும். பெண்கள் மட்டும் என்ன விதிவிலக்கா :-)

  வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி சகோ

  ReplyDelete
 18. @ சிராஜ்

  /* சில ஹராத்துங்க' மாதிரியா எப்ப பாத்தாலும் பொய்யாக பொண்ணுங்களையே கொற சொல்லிக்கிட்டு */

  பொண்ணுங்கள கொற சொல்றவங்க ஹராத்தா?? நோ, ஏத்துக்க முடியாது... அவங்க நிச்சயம் பெரிய அறிவாளியா, ஞானியா இருப்பாங்க....//

  இதுக்கு நீங்க

  இதென்னடா ஞானிகளுக்கும் அறிவாளிகளுக்கும் வந்த சோதனை? இதுக்கு பேசாம நீங்க அவங்களையெல்லாம் நாடு கடத்த சொல்லியிருக்கலாம் :-)))

  பொண்ணுங்கள எப்ப பாத்தாலும் திட்டுறவங்களாம் ஹராத்து இல்ல... ஹைராத்து (ஹராத்த விட பெரிய மரக்கழண்ட கேசு) ஹி..ஹி..ஹி..

  ReplyDelete
 19. @சிராஜ்

  //என்ன சகோ... சமீபத்துல இலங்கை ஏதும் போய்ட்டு வந்தீங்களா???? பாரிய முயற்சியா இருக்கே...
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......//

  நீங்க பஸ்மின்னை திட்டலையே? எனக்கென்னமோ சைக்கிள் கேப்ல பஸ்மின்னின் இலங்கை தமிழை கலாய்க்கிற மாதிரி ஒரு பீலிங்க்...

  பஸ்மின் நீ என்ன சொல்லுற? :-))))

  ReplyDelete
 20. @சிராஜ்

  //ஓக்கே...பேக் டு கவிதை....

  உண்மையிலே ரொம்ப அழகா இருக்கு... உங்களூக்குள்ள ஒரு கவிஞாயினி இருக்காங்க... அது மட்டும் நல்லா தெரியுது...

  ஆனால்..இத நீங்க தான் எழுதினீங்களான்னு மைல்டா ஒரு டவுட்டு இப்பயும் இருக்கு... ஏன் அப்டி ஒரு சந்தேகம் எனக்கு வருது????//

  மொக்க ஸ்டேடஸ் போட்டிட்டிருக்குற புள்ளைக்குள்ள இவ்வளவு தெறமையான்னு உங்களுக்கெல்லாம் பொறாம! அதான் அப்படியெல்லாம் சந்தேகம் வருது :-))))

  ReplyDelete
 21. @சிட்டிசன்

  //நீங்கள் இங்கே தந்த மிக எளிமையான இந்த சமையல் குறிப்பை 'சமையல் எக்ஸ்ப்ரசில்' தந்திருக்கலாமே..? #டவுட்டு..!//


  என்ன கொடும சகோ இது?? இதுக்கு நீங்க என்னைய நாலு வார்த்த திட்டியிருக்கலாம்...

  ROFC (CRYINGகுறாகளாம் )

  :'( :'(

  ReplyDelete
 22. உன் அனுமதிக்காய் காத்திருக்கும் நொடியில் -என்
  சம்மத்திற்காய் கதற காத்திருக்கும் என் அழுகை//// செம்ம செம்ம செம்ம

  அம்மு உனக்குள்ள இவ்ளோ தெறமையா?? அடே அடே அடடே,.....
  வாழ்த்துக்கள் செல்லம் :)

  ReplyDelete
 23. @சர்மி

  நீ என்னை திட்டலையே... டவுட்டு ஹி..ஹி..ஹி...

  டேங்க்ஸ் சர்மி

  ReplyDelete
 24. நல்லா இருக்கு ஆனால் இந்த கவிதையின் கரு வை பார்த்தால் கசூர் என்ற ஹிந்தி படத்தில் வரும் பாடலை போன்று உள்ளது இந்த படத்தில் நாயகன் Aftab கெட்டவன் அவனை கெட்டவன் என்று தெரிந்தும் நாயகி அவன் மீது உள்ள காதலில் தன்னை இழந்து புலம்புவது போல் ஒரு பாடல் உள்ளது அது போல் இதன் கரு உள்ளது

  ReplyDelete
 25. @Rabbani அண்ணா

  அந்த படம் இன்னும் நான் பாக்கல...

  ஆனா இந்த கரு பொதுவா சினிமா, கதைகளில் படிச்சதா தான் இருக்கும். தாதா, ரவுடிய காதலிச்சுட்டு அவங்க பண்ற கொடுமைகள் அனுபவித்தும் காதலுக்காக எல்லாவற்றையும் தாங்கிக்குவாங்க. அந்த மாதிரி கவிதை தான் இதுவும்!

  முற்போக்கு பற்றி பேசும் ஒரு பெண் காதலில் விழுந்த பின்னோ அல்லது திருமணத்திற்கு பின்னோ தன் நிலையை அப்படியே தலைகீழாக மாற்றிக்கொண்டு ஆணுக்கு அடங்கி போவாங்க. காரணம் காதல்ன்னு சொல்லுவாங்க. இல்லைன்னா "என்னதான் இருந்தாலும் தொட்டுதாலி கட்டுனவராச்சே... அடங்கி தான் போகணும் வேற வழி?"ன்னு சொல்லுவாங்க. அந்த மாதிரியான சில பேரை பார்த்து நொந்து போனதன் விளைவே இந்த பதிவும்! (கவிதைன்னு சொன்னா சண்டைக்கு வருவாய்ங்க அவ்வ்வ்வ்) :-) :-) :-)

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா

  ReplyDelete
 26. sirajudhin..ungala oru naal thookki pottu midhikka poren.

  ReplyDelete
 27. @சிவா...

  புண்ணியமா போகும்... மொதல்ல அத செய்யுங்க!

  :-)))

  ReplyDelete
 28. /உன் அனுமதிக்காய் காத்திருக்கும் நொடியில் -என்
  சம்மதத்திற்காய் கதற காத்திருக்கும் என் அழுகை/

  யோசிக்க வைத்தன இந்த வரிகள்.

  ReplyDelete
 29. //ஒ.நூருல் அமீன் said...

  /உன் அனுமதிக்காய் காத்திருக்கும் நொடியில் -என்
  சம்மதத்திற்காய் கதற காத்திருக்கும் என் அழுகை/

  யோசிக்க வைத்தன இந்த வரிகள்.
  //

  உண்மை தான் சகோ... மிகவும் பரிதாபப்பட வைக்கும் நிலை....

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 30. @சிவகுமார்

  /* sirajudhin..ungala oru naal thookki pottu midhikka poren. */

  ஏன்பா..என்ன பிரச்சனை...??? கலவரம் நடக்கும் பரவாயில்லையா?????

  ReplyDelete
 31. ஆமா.. ஆமா.. இவுக ஆளும் கட்சில இருக்காக! மேல கை பட்டா ஒடனே கலவரம் வெடிக்கும்...

  அட ஆண்டவா...

  அலப்பறைக்கும் அளவில்லையா :-)))

  ReplyDelete
 32. நீங்க எழுதி இருப்பது படிக்க அருமை. ஆனால் அது பல ஆண்டுகளுக்கு முன் உண்மையாய் இருந்திருக்கலாம். இப்பொழுது பெண்ணுக்கு அடிமைப்பட்ட ஆண்களாக மாறி விட்டோம்
  பெண்கள் நலத்தில் முக்கியம் கொடுக்கப்பட்ட ஆண்மை அடங்கிப்போனது
  பெண்கள் அனுமதிக்காய் காத்திருக்கும் ஆண்மை

  ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)