ஹாய் மக்கள்ஸ்...

ச்ச.. பிரபலமாகிட்டாலே ரொம்பா பேஜாராக்கீது... :-)))))) இதுலவேற இந்த சர்மிபொண்ணு  "நியூஸ் பேப்பர் பார்த்தீயா? அந்த செய்தி பத்தி பதிவு போடு, ஆனந்த விகடன்ல வந்த கட்டுரை பாத்தீயா? அது பத்தி பதிவு போடு"ன்னு எக்கசக்க ப்ரஷர்... (நம்மல இன்னுமா உலகம் நம்புது.. சரி நீயே ஒரு கட்டுரை எழுதி தாயேன் என் ப்ளாக்ல போடுறேன்னு சொன்னா, போன் போட்டு நான்-ஸ்டாப்பா அர்ச்சணை கொடுக்குறா! (எங்கக்காக்கு என்னா தெறம என்னா தெறம.. திட்டும்போது கூட எதுகை மோனைலாம் பாலோ பண்ணுறா :-)

சரி சர்மிளாவுக்காக பதிவு போடலாம்னு யோசிச்சா 'காத்திரமான பதிவு' எதுவும் இப்போதைக்கு  பொறிதட்டல..  சோ உங்கள் துரதிஷ்ட்டம்... குட்டிசுவர்க்கத்தில் இன்னுமொரு மொக்கை பதிவு :-)
________

ஒருமுறை  நான்பாட்டுக்கு அமைதியா (?! இத எழுதும் போது எனக்கே சிரிப்பு வருது பாஸ்ஸூ) இருந்தேனா.. அப்ப இந்த மெட்ராஸ்பவன் சிவா சாட்ல வந்தாரு! 

சிவா- How r u madam?

ஆமி- ஓ நல்லாயிருக்கேனே!

சிவா- enna saappaadu innaikku

ஆமி- ப்ரைட் ரைஸ்

சிவா - bright rice? surf'la wash pannadhaa?

ஆமி- அய்யே...

சிவா- உங்க சமையல் எக்ஸ்ப்ரஸ்ல வந்த குறிப்புகளை செய்து பார்த்த  பல குடும்பதலைவிகள் மோசமான நிலையில் இருக்குறதாக தகவல் வந்துச்சு

ஆமி- (கோபமாக) இனி நான் சமையல் பத்தி பதிவே போட மாட்டேன்..விடுங்க!

சிவா- (கூலாக) இந்தியாவுக்கு கிடைச்ச 2வது சுதந்திரம்

ஆமி- க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

(பயபுள்ளைக எவ்வளவு வெறுப்பா இருக்குதுங்க:-)
_____

ஷாம் பலநேரங்களில் பொறுப்பாய் நடந்துக்கொள்வான். அவனின் பெரியமனுஷத்தனமான வார்த்தைகள் கேட்கவே ஆசையாக இருக்கும். என் அம்மாவிற்கு ஒருமுறை  இருதயவலி ஏற்பட அம்மா சோர்ந்திருப்பதைப் பார்த்து  ஷாம் என் அம்மாவிடம் "கவலப்படாதம்மா... அல்லாஹ் இருக்கான்... ஷாம் இருக்கேன்.. ஒன்னுமாகாது" என்றான் இரண்டு வயதில்...

இந்த சம்பவத்தை மனசுல வச்சுக்கிட்டு நானும் ஷாம்மிடம் சொன்னேன்...
ஆமி- ஷாம்! அம்மாக்கு ரொம்ப  தல வலிக்குதுடா

ஷாம்- கம்யூட்டர் பாரும்மா சரியாகிடும்!

ஆமி- ???!!!!????!!!???!!!
(நம்மள பத்தி நல்லா புரிஞ்சு வச்சிருக்கானோ :-)

________________

நேற்று டீக்கடை குழுமத்தில் தம்பி இர்ஷாத்தும், தம்பி ஹசனும் என்னை கலாய்ச்சுட்டிருந்தாங்க.... ஒரு கட்டத்தில் ஒரு சகோதரி "ஆமினா ஏற்கனவே காரமா இருக்காங்க..ஏன் மேலும் கோபப்படுத்துறீங்க"(அவ்வ்வ்வ்) என கேட்க
இர்ஷாத்- ஆமினா அக்கா கோவமே படமாட்டங்க... இல்லக்கா :-) சும்மா விளையாட்டுக்கு ஆமினா அக்கா!

ஹசன் -வேணாம் இர்ஷாத்!  ஆமினா அக்காவுக்கு கோபம் வராது.. வந்துச்சுசுசு............ அவ்ளோ காமெடி-யா இருக்கும். :)

(நம்ம டெரர்ரா இருந்தாலும் பயபுள்ளைக நம்பமாட்டேங்குதுகளே... வா டூ டூ டூ டூ டூ....................)

________________

ஒரு மாலைபொழுது.. மொட்டை மாடியில் அம்மா மடியில் படுத்துக்கொண்டே வானத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். என் மேல் ஷாம் படுத்துக்கொண்டே வானத்தை பார்த்துக்கொண்டிருந்தான்... நீண்ட நேர வானியல் ஆராய்ச்சிக்கு பின் அம்மாவிடம் நான்...

ஆமி- ஏன் மா... முன்பெல்லாம் சாயங்கால நேரம் மாடியில் இருந்தால் கூட்டுக்கு திரும்ப எக்கசக்க பறவைகூட்டம் போகும்... பாக்கவே கொள்ள அழகா இருக்கும்.. இப்பலாம் அதுமாதிரி வரதில்லையே..

அம்மா- குருவிக்காரனுங்க எல்லாத்தையும் சுட்டுட்டானுங்க போல

ஆமி- ஙே... :( கேள்விகேட்டா ஒழுங்கா பதில் சொல்ல தெரியுதாம்மா உனக்கு.... போ மா!!


உடனே ஷாம் என்னிடம்...

ஷாம்- ஏன் ஆனி.. அந்த மூன் அன்னைக்கு பெரிசா இருந்துச்சுல? இப்ப ஏன் பாதியா இருக்கு... ஏன் இப்ப மட்டும் ஒயிட் கலர்ல இருக்கு? அன்னைக்கு எல்லோ கலர்ல தானே இருந்துச்சு!

ஆமி- அதுவா.. அது அப்படிதான் டா...

அம்மா செம கோபத்தோட என்னை முறைத்துவிட்டு,  திட்டின கதையெல்லாம் இங்கே வேணாமே அஹ்ஹூ அஹ்ஹூ:-)

டிஸ்கி : இனி ஆராச்சும் என்னை பதிவு போட சொல்லுவீங்க... மொக்க போட்டே கொலபண்ணிடுவேன் ... ஜெய்லானி  இஸ்கூலில் படிச்சவங்களாக்கும்:-)

, , ,

66 comments:

 1. Replies
  1. :-))

   வருகைக்கு நன்றி சகோ

   Delete
 2. ஹசன் -வேணாம் இர்ஷாத்! ஆமினா அக்காவுக்கு கோபம் வராது.. வந்துச்சுசுசு............ அவ்ளோ காமெடி-யா இருக்கும். :)///

  இர்ஷாத் நான் சொல்லல பாருங்க கோபத்துல எவ்ளோ காமெடி-யா பதிவு போட்டு இருக்காங்க.

  ReplyDelete
  Replies
  1. ஆமினா அக்கா பொறுமையின் சிகரம்ன்னு இப்பவாச்சும் நம்புறீயளா :-)

   Delete
 3. (நம்ம டெரர்ரா இருந்தாலும் பயபுள்ளைக நம்பமாட்டேங்குதுகளே... வா டூ டூ டூ டூ டூ....................)///

  இந்த காமெடி ரொம்ப நல்லா இருக்கு. :)

  ReplyDelete
  Replies
  1. @ ஹசன்

   //இந்த காமெடி ரொம்ப நல்லா இருக்கு. :)//

   :-x

   Delete
 4. Replies
  1. :-) :-)) :-)))


   எப்பூடி :-)

   Delete
 5. எல்லோருக்கும் எழுத வரும்.. சிலருக்கு மட்டுமே இந்த நகைச்சுவை உணர்வு உண்டு.. அதுல நீங்க ஸ்பெஷலிஸ்ட் ஆமி .. நல்லா சிரிச்சேன்... ஜசக்கல்லாஹ் சகோ..

  ReplyDelete
  Replies
  1. மும்தாஜ்... கை காலெல்லாம் நடுங்குது... என்ன இப்படி பயமுடுத்திறீக :-)

   வ இய்யாக்கும்.. வருகைக்கு நன்றி மும்தாஜ்

   Delete
 6. ஸ்...யப்பா முடியலக்க.

  ReplyDelete
  Replies
  1. அச்சச்சோ... என்னாச்சுண்ணா? டாக்டர பாத்தீயளா? என்ன சொன்னாவ்வ? :-)

   Delete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. இதுல என்னமோ ஒரு கமென்ட் இருந்துச்சே... என்னாது ....... மறந்துட்டேன்.. இருங்க ட்ராஸ்ல இருக்கு பாத்துட்டு வரேன் :-)

   Delete
 8. நடக்கட்டும். நடக்கட்டும்.

  ReplyDelete
  Replies
  1. ஏன் அண்ணா... ஓடினா ஒத்துக்கமாட்டீங்களா அஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்

   Delete
 9. பதிவு நகைச்சுவையோடு அருமை! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா

   Delete
 10. //சிவா- உங்க சமையல் எக்ஸ்ப்ரஸ்ல வந்த குறிப்புகளை செய்து பார்த்த பல குடும்பதலைவிகள் மோசமான நிலையில் இருக்குறதாக தகவல் வந்துச்சு//


  ஹா:)) ஆமீ நம்மளைபத்தி இன்னமும் யாரும் சரியா புரிஞ்சிக்கலை :)
  நாம சமச்சதை என்னிக்காவது நாம சாப்பிடுவோமா ..ஒன்லி டெஸ்டிங் நோ டேஸ்டிங்..
  ஆனா எங்க வீட்டில் உங்க ரெசிப்பி நாசி கோரங் ..பூண்டு முட்டை சாதம் ரொம்ப ஃபேமஸ் ..என் கணவருக்கு ரொம்ப பிடிக்கும் ..

  ReplyDelete
  Replies
  1. /ஒன்லி டெஸ்டிங் நோ டேஸ்டிங்..///

   அவ்வ்வ்வ்வ்

   //ஆனா எங்க வீட்டில் உங்க ரெசிப்பி நாசி கோரங் ..பூண்டு முட்டை சாதம் ரொம்ப ஃபேமஸ் ..என் கணவருக்கு ரொம்ப பிடிக்கும் ..//

   இது ஒன்னே போதும் ஏஞ்சலின்..அப்ப சமையல் தொடர்ந்து எழுதலாம்னு சொல்லுங்க... யாராச்சும் சீண்டினா இனி இந்த எவிடென்ஷ்ஸ் கொடுத்துடுறேன் :-)

   Delete
 11. இது ஒரு பதிவுனு போட்டு எங்களையெல்லாம் இம்சை பண்ணியதற்க்கு ரொம்ம்ம்ம்ம்ம்ப நன்றினு சொல்லமாட்டேன் ஆமி....

  ReplyDelete
  Replies
  1. இதெல்லாம் சாதனை தான் ஆஷா... :-)

   Delete
 12. யார் சொன்னது ஆமினா மொக்கைனு . really intereting . ஷாமின் பதில் நகைக்கவும் அவன் மேல் அன்பு கொள்ளவும் வைத்தது

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ருபினா...

   பேரன் வந்ததுல இருந்து நீங்க சின்னகுழந்தை குறும்புகளை ரசிக்க ஆரம்பிச்சுட்டீங்க :-)

   Delete
 13. ha ha ha azhakiya kavitai......!
  dont keep it up......!
  :)

  ReplyDelete
  Replies
  1. //ha ha ha azhakiya kavitai......!//

   ஏற்கனவே சொல்லப்பட்ட ஜோக் தான்.. சிரிப்பு வரல தம்பி...
   பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்! :-)

   Delete
 14. /ஆமி- ஷாம்! அம்மாக்கு ரொம்ப தல வலிக்குதுடா

  ஷாம்- கம்யூட்டர் பாரும்மா சரியாகிடும்!

  ஆமி- ???!!!!????!!!???!!!/// என்னமா புரிஞ்சு வச்சு இருக்கான்.. ஹிஹிஹி..!!

  ப்ரீ விளம்பரத்துக்கு நன்றி அம்மா நன்றி..!! :)))

  அப்புறம் இந்த கட்டுரைல இவ்வளவு அழகா நாட்டு நடப்புகளை அலசி ஆராய்ஞ்சு துவைச்சு காயப்போட்டு பாமர மக்களுக்கு கூட எளிதில் புரியும் வகையில் விளக்கோ விளக்கென்று விளக்கும் உங்கள் போன்ற தலை சிறந்த பதிவர்கள் இருக்கும் பதிவுலகில் நானும் இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்... :)))

  ReplyDelete
  Replies
  1. //உங்கள் போன்ற தலை சிறந்த பதிவர்கள் இருக்கும் பதிவுலகில் நானும் இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்... :))) //

   அஹ்ஹூ அஹ்ஹூ

   ஆனாலும் உண்மையை தெகிரியமாக சொன்னதுக்காக உன்னை பாராட்டியே ஆக வேண்டும் :-)

   Delete
 15. //ஆமி- ஏன் மா... முன்பெல்லாம் சாயங்கால நேரம் மாடியில் இருந்தால் கூட்டுக்கு திரும்ப எக்கசக்க பறவைகூட்டம் போகும்... பாக்கவே கொள்ள அழகா இருக்கும்.. இப்பலாம் அதுமாதிரி வரதில்லையே..

  அம்மா- குருவிக்காரனுங்க எல்லாத்தையும் சுட்டுட்டானுங்க போல//


  ஒருவேளை அப்படித்தான் இருக்குமோ..:))

  ReplyDelete
  Replies
  1. //ஒருவேளை அப்படித்தான் இருக்குமோ..:))//

   இருக்கலாம் சகோ... ஆனா முழுக்க முழ்க்க இதே ரீசன் இல்ல..

   சீசனும் ஒரு காரணம் :-)

   அம்மா தர்க்கபூர்வமாக சொல்லுவாங்கன்னு எதிர்பார்த்து ஏமாந்துட்டேன் :-)

   Delete
 16. நான் அழுதுடுவேன் ............

  ReplyDelete
  Replies
  1. அதான் எனக்கும் வேணூம் அஹ்ஹூ அஹ்ஹூ

   Delete
 17. \\இனி ஆராச்சும் என்னை பதிவு போட சொல்லுவீங்க... மொக்க போட்டே கொலபண்ணிடுவேன் \\

  தயவு செய்து இன்னொரு பதிவு எழுதுங்க!!

  ReplyDelete
  Replies
  1. சேவை நோக்கத்திற்கு பாராட்டுக்கள் :-)

   Delete
 18. சொல்ல வந்த விசயத்தை அருமையாக சொல்லி இருக்கீங்க எழுத்து நடை சான்சே இல்லை பின்னிட்டீங்க
  உங்களின் கள்ளம் கபடம் இல்லாத வெகுளித்தனத்தை உணர்த்துவதாக இப்பதிவு அமைந்துள்ளது

  ReplyDelete
  Replies
  1. உண்மையாவா சொல்றீங்க .... அப்பச்செரி அப்பசெரி :-))

   நன்றி சகோ

   Delete
 19. வேலைவெட்டி இல்லாம சும்மா இருக்கேன்னு காட்டுறதுக்காக ஒரு அருமையான பதிவு, சரிதானே சகோதரி

  ReplyDelete
  Replies
  1. என்ன இப்படி சொல்லிட்டீங்க... இன்னைக்கு டைம்க்கு பிசியா இருக்குற ஒரே பதிவர் நான் தான்... 20 மணி நேரம் ஆன்லைன்லையே இருக்கேன்னா பாத்துக்கோங்க ;-)

   Delete
 20. "கவலப்படாதம்மா... அல்லாஹ் இருக்கான்... ஷாம் இருக்கேன்.. ஒன்னுமாகாது" என்றான் இரண்டு வயதில்...
  ஷாம் குட்டியோட அலப்பரைய தான் நேரிலே பார்த்து ரசிச்சுருக்கேனே அவங்க அம்மா வேர எப்படி இருப்பாங்க?

  ReplyDelete
  Replies
  1. தாய போல பிள்ளையா மாமி ;-)

   Delete
 21. அப்பாவி முஸ்லீகளை பாத்தா டெரர்ரா தெரியுதே !!! ???

  சென்னையில் சொகுசு விமானமான
  `ட்ரீம் லைனர்' விமானத்தை செல்போனில் படம் பிடித்த 2 வாலிபர்கள் பிடிபட்டனர்

  தீவிரவாதிகளா என்று போலீசார் விசாரணை


  ஆலந்தூர், அக்.4-

  சென்னையில் இருந்து டெல்லி செல்லும் சொகுசு விமானமான `ட்ரீம் லைனர்' விமானத்தை செல்போனில் புகைப்படம் எடுத்த கேரளா வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  `ட்ரீம் லைனர்' விமானம்

  சென்னை மீனம்பாக்கம் காமராஜர் உள்நாட்டு முனையத்தில் இருந்து நேற்று காலை 10.45 மணிக்கு டெல்லிக்கு ஏர்-இந்தியா `ட்ரீம் லைனர்' விமானம் செல்ல இருந்தது. இதில் பயணம் செய்ய 206 பயணிகள் தயாராக இருந்தனர்.

  விமானம் புறப்பட இருந்த நேரத்தில் ரூ.36 ஆயிரம் மதிப்புள்ள சொகுசு இருக்கையில் பயணம் செய்ய இருந்த

  கேரளா மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த அமீத்தாவா (வயது 35), மன்சூர் (24) ஆகியோர்,

  "நாங்கள் இந்த விமானத்தில் பயணம் செய்ய விரும்பவில்லை'' எனக்கூறி வெளியே செல்ல முயன்றனர். விமானம் புறப்பட இருந்த கடைசி நேரத்தில் பயணம் செய்ய விரும்பவில்லை என்று கூறியதால் பாதுகாப்பு அதிகாரிகள் அவர்கள் மீது சந்தேகம் கொண்டு விசாரித்தனர்.

  செல்போனில் புகைப்படம்

  அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்கள்.

  மேலும் அவர்களிடம் இருந்த விலை உயர்ந்த செல்போன்களை, பாதுகாப்பு அதிகாரிகள் வாங்கி பார்த்தனர்.

  அதில் `டரீம் லைனர்' விமானத்தின் அனைத்து பகுதிகளும், விமானி அறைகளும் புகைப்படம் எடுக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.

  இதுபற்றி தகவல் அறிந்ததும் விமான நிலைய போலீசார், உளவுத் துறையினர் மற்றும் கிïபிராஞ்ச் போலீசார் வந்து 2 கேரளா வாலிபர்களிடமும் விசாரித்தனர்.

  அவர்கள் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருந்தார்களா? என பயந்து, விமானத்தில் இருந்த 204 பயணிகளையும் கீழே இறக்கி விமானத்தில் சோதனை நடத்தினார்கள்.

  அதில் வெடிகுண்டு ஏதுவும் இல்லை என தெரியவந்தது.

  தீவிர விசாரணை

  இதையடுத்து மீண்டும் பயணிகளை ஏற்றிக்கொண்டு சுமார் 13/4 மணி நேரம் தாமதமாக பகல் 12.30 மணிக்கு `ட்ரீம் லைனர்' விமானம் புறப்பட்டு சென்றது.

  கேரளா வாலிபர்களிடம் நடத்திய விசாரணையில், மன்சூர், சுற்றுலா நிர்வாக துறையில் இறுதி ஆண்டு படித்து வருவதாகவும், அமீத்தாவா கொச்சியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருவதும் தெரியவந்தது.

  இவர்கள் ஏன் `ட்ரீம் லைனர்' விமானத்தை புகைப்படம் எடுத்தனர்?.

  இவர்கள் தீவிரவாதிகளா அல்லது தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா? என 2 பேரையும் ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


  SOURCE: http://www.dailythanthi.com/article.asp?NewsID=762532&disdate=10/4/2012


  நூற்றுக்கணக்கான இணையதளங்களில் `ட்ரீம் லைனர்' விமானத்தை பற்றிய அனைத்து விபரங்களும்.


  விரிவாக `ட்ரீம் லைனர்' விமானத்தின் அனைத்து உட்பகுதிகளின் புகைப்படங்களும் காணொளிகளும் ஏர் இந்தியா `ட்ரீம் லைனர்' உட்பட‌ இருக்கின்றன.

  அதிலொன்று இதோ சொடுக்கி பார்க்கவும்.


  இதோ சொடுக்கி >>>> Air India 787-8 Dreamliner Cabin Walk-through <<<< பார்க்கவும்.


  சொடுக்கி >>>>> Photos and Videos: Air India's Boeing 787-8 Dreamliner cabin interiors revealed பார்க்கவும்.


  இந்த விடியோவில் உள்ளதை விடவா அமீத்தாவா (வயது 35),

  மன்சூர் (24) ஆகியோர் தங்கள் செல்போனில் படம் பிடித்திருப்பார்கள் ?

  ஆயிரக்கணக்கான மறுக்கமுடியாத சாட்சியங்கள் இமயமலை குவிந்து இருந்தும் கொலைகார அத்வானி, பால் தக்கரே, மோடி போன்றவர்களை கைது செய்து சிறையில் அடைக்காமல் இஸட் பாதுகாப்புடன் வள‌ர்க்கும் இந்திய அரசாங்கம்

  இந்தியாவில் முஸ்லீம் அப்பாவிகளை எந்த நொண்டிச்சாக்கிலும் கைது செய்யலாம் என்னும் வன் கொடுமையை இதிலிருந்து விளங்கி கொள்ளுங்கள்.

  ReplyDelete
 22. மோஸ்ட் வான்ட்டட்.... ஆமினா ....இல்லை.... ஷர்மிளா.....ஷர்மிளாவின் விபரம் தருபவர்களுக்கு .... தருபவர்களுக்கு..... என்னத்த கொடுக்க..... ஒண்ணும் கொடுக்க முடியாது....

  ஆமினா அவங்க பாட்டுக்கு பதிவுக்கு மேட்டர் கிடைக்காம ஒண்ணும் எழுதாம பதிவுலகுக்கு "சேவை" பண்ணிக்கிட்டு இருக்காங்க... அவங்கள எழுது எழுதுன்னு ஒரு மொக்க பதிவு எழுத வச்ச ஷர்மி மட்டும் என் கையில் கிடைச்சாங்க..... என்ன மரியாத வேண்டிக்கிடக்கு.... அவ மட்டும் என் கையில கிடச்சா.... சர்மி சட்னி ஆகிடுவா....க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......

  தாயை போல பிள்ளைன்றது தப்பு...ஏன்னா ஷாம் புத்திசாலித்தனமா பேசுறானே...!!!! ;)))

  ReplyDelete
  Replies
  1. பானு..

   நீங்க தேடிட்டிருக்குறதுனால தான் அம்மணி ஒளிஞ்சுட்டிருக்கு... விடாதீங்க! மெயில் போட்டு திட்டோ திட்டுன்னு திட்டுங்க...

   நீங்க போடுற மெயில்க்கு மலேசியால இருந்து ராம்நாட்க்கு பறந்து வரோணும் :-)

   Delete
 23. // ஆமி- ஷாம்! அம்மாக்கு ரொம்ப தல வலிக்குதுடா

  ஷாம்- கம்யூட்டர் பாரும்மா சரியாகிடும்!

  ஆமி- ???!!!!????!!!???!!!//


  ஹஹா..
  பயபுள்ள கரெக்டா தான் சொல்லியிருக்கு.

  ReplyDelete
  Replies
  1. என் புள்ள இல்லையா இந்திரா? அதான் என்னை மாதிரியே கரேக்ட்டா பேசுது :-)

   Delete
 24. bright rice? surf'la wash pannadhaa?
  ////////////////////////////////////////////

  செம மொக்கை........

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம்ம்ம்... மரண மொக்கைய கேட்டு ஒருவ்வாரம் வரைக்கும் சரியா சாப்பிடலன்னா பாத்துக்கோங்க...

   Delete
 25. Replies
  1. தேங்க்ஸ் அமுதா :-)

   Delete
 26. பதிவர்களுக்கு புதிய பதிவிட விஷயம் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்யலாம் என்று பதிவிட்டு காட்டிய சகோதரிக்கு எல்லாரும் ஒரு ஜே போடுங்க பார்க்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. என்ன ஒரு பரந்த சேவை மனப்பான்மை பாத்தீங்களா சகோ :-)

   Delete
 27. ஆமி...

  ஸலாம்.... :))

  இன்னும்.....இன்னும் உங்ககிட்ட அதிகமா எதிர்பார்க்கிறேன் :)))))

  ReplyDelete
  Replies
  1. இந்த மொக்கைக்கே சர்மிளாகிட்ட இப்பவரைக்கும் திட்டுவாங்கிட்டிருக்கேன்.. நீங்க வேற :-)

   Delete
 28. கம்யுட்டர்
  பாத்தீங்களா
  தலவலி
  போய்டுச்சா

  ReplyDelete
  Replies
  1. ஹி..ஹீ...ஹி...

   சின்னதா கொசு கடிச்சாலே பதினாறு மாடி கட்டடத்திலிருந்து குதிச்சவ மாதிரி பில்டப் கொடுப்போமாக்கும்... :-)

   Delete
 29. புதுகுடித்தனம் வந்தாச்சி .. புதுவீடு சூப்பரப்பு..

  டெரர் ஆமினா வாழ்க வாழ்க..

  ReplyDelete
  Replies
  1. ஆமாக்கா...

   இஸ்லாமிய பெண்மணி டெம்ளேட் மாத்துனாங்க.. சரி நாமலும் மாத்தலாம்னு ஏதோ ஆசப்பட்டு வச்சுட்டேன்.. ஆனா எக்கசக்க எரர் கெடக்கு! இன்னும் சரியாகல... ப்ளாக்கர் நண்பன் உயிர வாங்கிட்டிருக்கேன்.. சீக்கிரம் முழுவேலையும் முடியும்னு நெனைக்கிறேன்... இன்ஷா அல்லாஹ்...

   //டெரர் ஆமினா வாழ்க வாழ்க.. //

   குட் கீப் இட் அப் :-)

   Delete
 30. ஸலாம்

  அக்கா சான்சே இல்லை ... சூப்பர்ப் ... உங்களால மட்டும் எப்படித்தான் இப்படி பதிவு எழுத முடியோதா ... உக்காந்து ஒசிபீகலாக்கும் ... சிரிச்சுட்டேன்

  எதாவது பதிவு எழுதுறதுக்கு எனக்கு டிப்ஸ் கொடுங்க ...!!! FOLLOW பண்றேன்  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் வரஹ்...

   எப்படி இருக்கீங்க சகொ...

   //எதாவது பதிவு எழுதுறதுக்கு எனக்கு டிப்ஸ் கொடுங்க ...!!! FOLLOW பண்றேன் //

   எனக்கே ஆலோசணை சொல்ல குழு உருவாக்கிடிருக்கேன் :-) நீங்க வேற!

   Delete
 31. உங்களைத் தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.
  http://enrenrum16.blogspot.com/2012/10/blog-post_18.html

  ReplyDelete
 32. Hahaha sirippoo......siribbu .......ameena manathara siribbai kutuththathukku remba nanribba nalla nakaiccuvai unarvubba..... jappar annan mulamaha unkalukkun pen kulanthai birantha seythiye kelvibatten remba sanththosam alhamthulillih .......

  ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)