கடைவீதிக்கு  துணி எடுக்க போகலாம்னு கிளம்பி பாதி வழியில் போன போது தான்  எந்த கடைன்னு குழப்பம்ஸ்.... சரி பழக்கப்பட்ட மக்கள்கிட்டையே விஷாரிக்கலாம்னு  (பெரியம்மா மகன்)அண்ணாக்கு போன் போட்டா  “இந்த ஏரியாவுலேயே அதான் பெஸ்ட் கட. அத விட்டா எங்கேயும் சீப் அண்ட் பெஸ்ட்டா இருக்கவே முடியாது. எக்கசக்க வெரைட்டி. அங்கே போ”ன்னு ஓசிக்கி  ஏகத்துக்கும் விளம்பரம்.... கொடுத்த காசுக்கு தான் வேல பாப்பாங்க. இவன் காசு வாங்காமலேயே நல்லா வேல செய்றான்னு பொழம்பிட்டே கடைய கண்டுபிடிச்சு போயாச்சு....
வாசல்லையே மகாராணிய வரவேற்குற மாதிரி வாங்கோ...வாங்கோனு (அப்படியே கொஞ்ச நேரம் ஜோதா அக்பர் படம் பார்த்த எபெக்ட் தான்.... ) சரிக்கி விடுற மாதிரி உபசரிப்பு.... பொதுவா இது எல்லா கடைகளும் உபயோகிக்கும் யுக்தி தான். ஆனாலும் குளுகுளுன்னு இருந்துச்சு ;)

உள்ளே நுழைஞ்சதும் 60 அல்லது 65 வயசு மதிக்கத்தக்க பெரியவர் என்னைய பார்த்ததும் எந்துருச்சு பக்கத்துல வந்தாரு. நமக்கு தான் ஊர் பூரா சொந்தக்காரங்க இருக்குற அளவுக்கு எதிரிகளும்(ஸ்கூல்ல டுக்கா போட்ட புள்ளைங்க தான். அந்தளவுக்குலாம் நம்ம தாதா கிடையாது) இருக்காங்களே.... சிரிச்ச மொகத்தோட (அதுவும் நம்ம தாத்தா வயசு) வரதுனால இவர் சொந்தக்காரரா தான் இருப்பார்ன்னு நெனச்சுகிட்டேன். 


பெரியவர்- நீங்க ஆமினம்மா தானே?

ஆமி- இல்லையே....யாரோ தப்பா சொல்லியிருக்காங்க.... நான் ஷாம்க்கு அம்மா...!! ஹி...ஹி...ஹி.....

பெரியவர்- ஹ்ஹ்ஹா.....ஹ்ஹா....ஹ்ஹ்ஹா...... (சிரிக்கிராராம்) 

நம்ம கடை தான்.... என்ன வேணுமோ பொறுமையா பாருங்க

ஆமி- நம்ம கடையா????? அப்ப பில் பே பண்ண தேவையில்லையா? இந்த சிஸ்ட்டம் நல்லா இருக்கே.....பொறுமையா பாத்து என்ன செய்ய? சேல வாங்கிட்டு தான் போகணும்.

பெரியவர்- ஹா....ஹா....ஹா...ஹா.... (மறுபடியும் சிரிக்கிறாராமாம்)
இப்ப எங்கே இருக்கீங்க??

ஆமி- இப்ப நம்ம கடைல தான்

பெரியவர்- நல்ல பொண்ணுமா நீ......

ஆமி- அது என்னமோ உண்மை தான். பட் உங்களுக்குக்கும் எப்படி தெரிஞ்சது தான் தெரியல. அந்தளவுக்கா பேமஸ் ஆய்ட்டோம்?

(2 சேலை எடுக்க கிட்டதட்ட 20 நிமிஷம் எல்லாரையும் தொந்தரவு பண்ணி டயர்டானது பார்த்துட்டு........)

பெரியவர்- எதாவது குடிக்க எடுத்துட்டு வர சொல்லவாமா?

ஆமி- பில்லுல சேர்த்து போடமாட்டீங்கன்னா ஒரு சர்பத் இல்லைன்னா ஜிகர்தண்டா மட்டும் கொடுங்க.... போதும்
(சும்மா கேட்டும் ஒடனே வந்துடுச்சு... தெரிஞ்சுருந்தா  ஆப்பிள் ஜூஸ்  சொல்லியிருக்கலாம்.(ஜூஸ் போச்சே.......அவ்வ்வ்வ்வ்வ்வ்) ஒரு வழியா  கடைய விட்டு  காலி பண்ணிடலாம்னு அந்த இடத்த காலி பண்ணிட்டு பில் போடும் இடத்துக்கு போனேன். அங்கும் அந்த பெரியவர் வந்தார்)

பெரியவர் (பில் போடுபவரை நோக்கி அதிகார தொனியில்)- நம்ம சொந்தக்கார பொண்ணு தான்...பாத்து கொறச்சு போடு...

ஆமி- அச்சச்சோ.....நான் எடுத்ததே 2 சேல தான். அதுலையும் கொறைக்க சொன்னா எப்படி? 2 சேலையையும் அப்படியே தாங்க!!

பெரியவர்- ஹா...ஹா...ஹா...ஹா..... (வராத சிரிப்பையும் வம்படியா வர வச்சு சிரிக்கிறது தெரியுது)

பெரியவர்- சரி மா. வீட்ல எல்லாரையும் விஷாரிச்சதா சொல்லுங்க.  தொழுது முடிச்சுட்டு 10  மணி போல  பெரியத்தா கிட்ட ஊசி போட வரேன்னு சொல்லுங்க

ஆமி- ஏன்ப்பா....? என்ன ஆச்சு?? ஒடம்புக்கு   முடியலையா...

பெரியவர்- ஆமினம்மா நல்லா பேசும்னு தான்  உங்க பெரியம்மா சொன்னாங்க... பயங்கரமா கடிப்பீங்கன்னு இப்ப தானே தெரியுது. ஊசி போட்டா தான் சரியா வரும்.......ஹா...ஹா...ஹா....ஹா....ஹா.....

ஆமி- ............???????????!!!!!!!!!?????????????..................



தேவையா ? தேவையா? தேவையா?
ஐ ஆம் பாவம் இல்லையா? இதுக்கு தான் எங்கே போனாலும் வாய்க்கு ஒரு பூட்டு போடணும்ங்குறது..... க்ரேட் இன்சல்ட்.....!!! அவர் ஸ்டைல்ல வராத சிரிப்பை வம்படியா வர வச்சு வழிஞ்சுகிட்டே அந்த இடத்த விட்டு தப்பிச்சோம் பிழைச்சோம்னு வெளியே வந்தாச்சு. கீழே விழுதாலும் மீசைல மண்ணு ஒட்ட கூடாதே......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் (யாராவது உங்களுக்கு எங்கே மீசைன்னு கேட்டா பழமொழில கூட ஆணாதிக்கமான்னு கேள்வி கேட்பேனாக்கும்;)

,

64 comments:

  1. ஐயோ ஆமி நல்ல ஆலுகிட்ட மாட்டிகிட்டீங்களே. வந்தாரா ஊசி போட்டாரா? அப்புரம் என்னாச்சி?

    ReplyDelete
  2. நல்லா ஜோக் எழுதுறீங்க..............
    ஹ ஹ ஹ

    ReplyDelete
  3. ஆமினம்மா நல்லா பேசும்னு தான் உங்க பெரியம்மா சொன்னாங்க... பயங்கரமா கடிப்பீங்கன்னு இப்ப தானே தெரியுது. ஊசி போட்டா தான் சரியா வரும்.......ஹா...ஹா...ஹா....ஹா....ஹா.....

    ReplyDelete
  4. சரி சரி சுணா பானா அப்படியே மெயின் டைன் பண்ணு யாரும் பாக்கல

    ReplyDelete
  5. //
    ஆமினம்மா நல்லா பேசும்னு தான் உங்க பெரியம்மா சொன்னாங்க... பயங்கரமா கடிப்பீங்கன்னு இப்ப தானே தெரியுது. ஊசி போட்டா தான் சரியா வரும்.......ஹா...ஹா...ஹா....ஹா....ஹா.....
    //
    உண்மை ..உண்மை ..

    ReplyDelete
  6. இதுக்கு பேருதான் பல்பு வாங்குறதா!!

    ReplyDelete
  7. கடைசியில் அவர் ஸ்டைலில் சிரிச்சிட்டீங்களா..:)))

    ReplyDelete
  8. @லெட்சுமி மாமி
    //ஐயோ ஆமி நல்ல ஆலுகிட்ட மாட்டிகிட்டீங்களே. வந்தாரா ஊசி போட்டாரா? அப்புரம் என்னாச்சி?//
    கடைவீதி பக்கம் போறதே இல்ல.... அவர் வீட்டுக்கு வந்தாலும் நா இல்லைன்னு சொல்லிடுங்கோன்னு எல்லாத்தையும் மிரட்டிட்டு இருக்கேன்... ஒரே சேம் தான் :(

    ReplyDelete
  9. @ஆகுலன்
    //நல்லா ஜோக் எழுதுறீங்க..............
    ஹ ஹ ஹ//
    எப்பா..... இங்கே பல்ப் வாங்குன கதைய சொன்னா.... ஜோக்கா இருக்கா :)

    ReplyDelete
  10. @ஹரிணி
    //ஹா...ஹா...ஹா....ஹா....ஹா.....//
    ;)

    ReplyDelete
  11. @ரியாஸ் அஹ்மத்
    //யாரும் பாக்கல//
    அதான் எல்லாரும் பாத்துட்டாங்களே சகோ... இதுக்கு மேல என்ன செய்ய? :)

    ReplyDelete
  12. @ராஜா
    //உண்மை ..உண்மை ..//
    அடப்பாவிமக்கா....

    ReplyDelete
  13. @ரியாஸ் அஹமது

    TAMIL MANAM 1//
    உங்களுக்கும் தமிழ்மணத்துக்கும் தான் பொருத்தமா இருக்கு போல... இணைக்கவே வரல.... இப்ப தான் நானும் ப்போட்டேன் ;)

    ReplyDelete
  14. @பிரபு
    //இதுக்கு பேருதான் பல்பு வாங்குறதா!!//
    கொஞ்சம் கௌரவமா சொன்னா அப்படி தான் ;)

    ReplyDelete
  15. @முத்துலெட்சுமி
    //கடைசியில் அவர் ஸ்டைலில் சிரிச்சிட்டீங்களா..:)))//
    வேற??
    மானம் கப்பல்ல ஏறி போனாலும் கௌரவமா கை அசச்சு வழியனுப்புறதில்லையா? :))

    ReplyDelete
  16. @ராஜா
    வந்தேன்... படித்தேன்......

    ReplyDelete
  17. ஆசைத்தம் சகோ..
    சிரிச்சு..சிருச்சி..வயருதான் வலிக்குது..

    இதைத்தான் பல்பு வாங்கறதுன்னு சொல்லுவாங்களோ?

    ReplyDelete
  18. வழிஞ்சு வழிஞ்சு ஜொள்ளு விடும் பார்ட்டிகளுக்கு, இறுதி வரிகளில் செம சாட்டையடி கொடுத்திருக்கிறீங்க.

    ReplyDelete
  19. //பயங்கரமா கடிப்பீங்கன்னு இப்ப தானே தெரியுது//

    yes , me too wondering!

    ReplyDelete
  20. ஊசி போட்டாச்சா???? எதுக்கும் வீட்டை விட்டு வெளியே வந்துடாதீங்க, அம்மிணி.

    ReplyDelete
  21. பல்பு வாங்கிய விதம் அருமை...ஹா ஹா ஹா வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. @கருன்
    //ஆசைத்தம் சகோ..//
    புதுவித லாங்க்வேஜ்ஜா இருக்கே.... :)

    நன்றி சகோ

    ReplyDelete
  23. @நிரூபன்
    //வழிஞ்சு வழிஞ்சு ஜொள்ளு விடும் பார்ட்டிகளுக்கு, இறுதி வரிகளில் செம சாட்டையடி கொடுத்திருக்கிறீங்க./

    எங்கே.... எங்கே........ :)

    ReplyDelete
  24. @ஷர்புதீன்
    //yes , me too wondering!//
    ஹா...ஹா...ஹா...
    என்னாத்துக்கு ஒண்டரிங் ஆனிங்கோ? :)

    ReplyDelete
  25. @வானதி
    //ஊசி போட்டாச்சா???? எதுக்கும் வீட்டை விட்டு வெளியே வந்துடாதீங்க, அம்மிணி.//
    அவர் தான் என்னைய பத்திரமா பாத்துக்கணும்.... அதானே மெடிக்கல் ரூல்ஸ்...
    ஹா...ஹா...ஹா...

    ReplyDelete
  26. @மாய உலகம்
    //ஹா ஹா ஹா வாழ்த்துக்கள்//
    பல்பு வாங்குனதுக்கு வாழ்த்துக்கள் சொன்ன முதல் பதிவர் நீங்க தான் :)

    ReplyDelete
  27. //என்னாத்துக்கு ஒண்டரிங் ஆனிங்கோ? :)//

    உங்களை பற்றிய மதிப்பீடு வேறு மாதிரியாக இருந்ததால் இந்த இடுகை wondering- ஆக இருந்தது ., உங்களது பழைய இடுகைகளை படித்திருந்தால் ஒரு வேளை உங்களை பற்றி புரிந்திருக்கலாம்

    ReplyDelete
  28. @ஷர்புதீன்
    //மதிப்பீடு//
    ஹா...ஹா....ஹா....

    //உங்களது பழைய இடுகைகளை படித்திருந்தால் ஒரு வேளை உங்களை பற்றி புரிந்திருக்கலாம்//
    பழைய இடுகைகளை இன்னும் படிக்கவே இல்ல.. அப்பறம் எப்படி அத பாத்தா புரியலாம்னு நம்பிக்கை வருது உங்களுக்கு?

    ReplyDelete
  29. படிப்பதற்கு தமாஷாக இருந்தது.
    வாழ்த்துக்கள்.

    தமிழ் மணம் ஓட்டும் போட்டாச்சு.

    ReplyDelete
  30. ஆய் மற்புதம் ஒரு படத்தின்ர காமடி trackகாக இதை பயன்படுத்தலாம்! நல்ல காமடியா இருந்திச்சு

    ReplyDelete
  31. பல்பு வாங்குறது... பல்பு வாங்குறது அப்படின்னு சொல்றாங்களே... அப்படின்னா இதுதானா... ஹா...ஹா..ஹாஹஹ...

    ReplyDelete
  32. @ பெரியவர்

    தங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் சகோ.'பெரியவர்'..!

    தங்கள் சமூக சீர்திருத்த திருப்பணிக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..!

    ReplyDelete
  33. பல பல்ப்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பார்த்ததுமே நினைச்சேன்.. எங்கயோ... சுறா, திமிங்கிலத்திடம் மாட்டிட்டீங்க என்று...:))..அவ்வ்வ்வ்வ்வ்:))

    ReplyDelete
  34. @அந்நியன்
    //படிப்பதற்கு தமாஷாக இருந்தது.
    வாழ்த்துக்கள்.

    தமிழ் மணம் ஓட்டும் போட்டாச்சு.//
    மிக்க நன்றி ஐய்யூப் அண்ணா

    ReplyDelete
  35. @கார்த்தி
    //ஆய் மற்புதம் ஒரு படத்தின்ர காமடி trackகாக இதை பயன்படுத்தலாம்! நல்ல காமடியா இருந்திச்சு//
    படம் ஓடாதே,... :)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  36. @சே.குமார்
    //அப்படின்னா இதுதானா..//
    இது தான் அப்படி :)

    ReplyDelete
  37. @சகோ ஆஷிக்
    //
    தங்கள் சமூக சீர்திருத்த திருப்பணிக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..!//
    இங்கே திருத்தம் நடந்தமாதிரியே எனக்கு தெரியல... தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் ஹி...ஹி...ஹி...
    இருப்பினும் உங்க நல்ல உள்ளத்துக்கு மனமார்ந்த நன்றிகள் :)

    ReplyDelete
  38. @அதிரா
    //பல பல்ப்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பார்த்ததுமே நினைச்சேன்.. எங்கயோ... சுறா, திமிங்கிலத்திடம் மாட்டிட்டீங்க என்று...:))..அவ்வ்வ்வ்வ்வ்:))//
    எவ்வளவு சந்தோஷம்.........
    நம்ம அடி வாங்குனா சிரிக்கிறதுக்கும் ஆளுங்க இருக்கதானே செய்றாங்க..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  39. பல்புன்னா பல்பு இதான் ஆயிரம் வாட்ஸ் பல்பு.ஹா ஹா ஹா...

    ReplyDelete
  40. @சாதிகா அக்கா

    அதுக்கு அவரே பரவால்ல போல :)

    ReplyDelete
  41. நகைச்சுவையான நிகழ்வு. அப்படியே சுவாரசியம் மாறாமல் பதிவாக்கி இருக்கிறீர்கள்.. இதே போன்ற பதிவுகளை இனி தொடர்ந்து எதிர்பார்க்கலாமா?

    ReplyDelete
  42. நிறைய பல்பு வாங்கிருப்பீங்க போல...தொடர்கிறேன்..பல்பு வாங்க இல்ல -:)

    ReplyDelete
  43. @பாரத் பாரதி
    //இதே போன்ற பதிவுகளை இனி தொடர்ந்து எதிர்பார்க்கலாமா?//

    மக்கா..... நல்ல எண்ணம் யா!!!

    :-)

    ReplyDelete
  44. @Reverie

    //தொடர்கிறேன்..பல்பு வாங்க இல்ல -:)//
    உங்களுக்கு ஏன் மூக்கு தலைல இருக்கு :-)
    முதல் வருகைக்கு மனமார்ந்த நன்றி சகோ

    ReplyDelete
  45. தினமும் பலரும் சந்திக்கிற ஜொள்ளுகேசுகளை இயல்பாக வெளிக்கொணர்ந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  46. நீஈளமான கடிடிடிடிடி காமெடி.

    ReplyDelete
  47. //தேவையா ? தேவையா? தேவையா?//

    YES!! YES!!!...
    //ஐ ஆம் பாவம் இல்லையா?//
    NO!!! NO!! NO!!!
    //இதுக்கு தான் எங்கே போனாலும் வாய்க்கு ஒரு பூட்டு போடணும்ங்குறது.....//

    //க்ரேட் இன்சல்ட்.....!!!//
    IS NOT ENOUGH!! WHAT TO DO???
    GIVE THAT UNCLES PHONE NUMBER..PLEASE.....

    //அவர் ஸ்டைல்ல வராத சிரிப்பை வம்படியா வர வச்சு வழிஞ்சுகிட்டே அந்த இடத்த விட்டு தப்பிச்சோம் பிழைச்சோம்னு வெளியே வந்தாச்சு.//

    NO WAY OUT...

    //கீழே விழுதாலும் மீசைல மண்ணு ஒட்ட கூடாதே......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் (யாராவது உங்களுக்கு எங்கே மீசைன்னு கேட்டா பழமொழில கூட ஆணாதிக்கமான்னு கேள்வி கேட்பேனாக்கும்;)///

    அனாவசியமா ஆண்களின் மீசை குறித்து பேச்சு...

    பெண்ணாதிக்கம்..பெண்ணாதிக்கம்...
    கடையடைப்பு,மறியல்...நாளைமுதல் லக்னோல பஸ் ஓடாது..லாரி ஓடாது...ஆரும் நடக்ககூட கூடாது..

    அடுத்து ஒரு பதிவு போடுறேன்..இருங்க..

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  48. @ ரஜின் அப்துல் ரஹ்மான்...

    //நாளைமுதல் லக்னோல பஸ் ஓடாது..லாரி ஓடாது...ஆரும் நடக்ககூட கூடாது..//

    மிஸ்டேக்... மிஸ்டேக்...

    லக்னோ இல்லை...

    இப்போ ராம்நாடு..!

    எத்தினிவாட்டி சகோ.ரஜின் பல்பு வாங்குவீங்க..? பாவம் சகோ நீங்க..!

    ReplyDelete
  49. @சகோ ஆஷிக்
    //எத்தினிவாட்டி சகோ.ரஜின் பல்பு வாங்குவீங்க..? பாவம் சகோ நீங்க..!//

    அண்ணா... இந்த நேரத்துல நீங்க என் பக்கம் தான் இருந்து சப்போர்ட் பண்ணனும். அதாவது தங்கைக்கு எடுத்து கொடுக்கணும்.....

    அப்பறம் அண்ணா.... எத்தினிங்குறது என்னா? அத எப்படி வாட்டணும் :) அது வெஜ்ஜா? நான்வெஜ்ஜா?
    ஹி....ஹி...ஹி....

    ReplyDelete
  50. @சகோ ரஜின்
    ஐய்யோடா........ ரொம்ப சந்தோஷத்துல இருக்கீக போல.....
    (பயபுள்ளைக எவ்வளவு வெறுப்ப மனசுக்குள்ளையே வச்சுட்டு அழையுதுக....)

    //GIVE THAT UNCLES PHONE NUMBER..PLEASE....//
    ஏன் ? வாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஊசி போட்டுக்கலாம்னு அப்பா கிட்ட கேக்குறதுக்கா??

    //UNCLES//
    பதிவை முழுசா படிக்கலையா? ஒரு அங்கிள் தான்.... ஒரே ஒரு அங்கிள் தான்..... :)நோட் திஸ் பாய்ண்ட் யுவர் ஆனர். ஹி...ஹி...ஹி....

    //நாளைமுதல் லக்னோல பஸ் ஓடாது..லாரி ஓடாது...//
    அப்போ நடக்க சொல்லுங்கோ...

    ReplyDelete
  51. @அம்பலத்தார்
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  52. @பிரகாஷ்
    //நீஈளமான கடிடிடிடிடி காமெடி//
    5 க”டி” வாங்கிட்டீங்களா? :)
    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  53. >ஆமி- பில்லுல சேர்த்து போடமாட்டீங்கன்னா ஒரு சர்பத் இல்லைன்னா ஜிகர்தண்டா மட்டும் கொடுங்க.... போதும்

    ஹா ஹா சந்தேகப்[பிராணி சச்சு

    ReplyDelete
  54. நீங்க செம காமெடி பேர்வழி போல. குட் டைமிங்க்

    ReplyDelete
  55. அட நிறைய பல்பா அப்ப வீடு கல்யாண வீடு தான் போங்க..

    ReplyDelete
  56. @ முஹம்மத் ஆஷிக்_citizen of world~ said.

    //மிஸ்டேக்... மிஸ்டேக்...//

    //...........பாவம் சகோ நீங்க..!//

    Something i wish to say about this comment..but....i don't.

    ReplyDelete
  57. @சிபி
    //ஹா ஹா சந்தேகப்[பிராணி சச்சு//
    பின்ன விட்டுகொடுக்கலாமா? அடிச்சு பிடிச்சு வெலைய கொறச்சு சேல வாங்குனதுக்கு என்ன பிரோஜனம் ? ;))

    ReplyDelete
  58. @சிபி
    //நீங்க செம காமெடி பேர்வழி போல. குட் டைமிங்க்//
    நிறையா பல்ப் வாங்குற பேர்வழி :)

    ReplyDelete
  59. @ரஜின் அண்ணா
    //Something i wish to say about this comment..but....i don't.//
    அப்படி எதையாவது சொல்லிட்டா அப்படியும் எதாவது நான் சொல்லிடுவேன்னு பயம் அப்டி தானே... ஹி...ஹி...ஹி....
    எந்த பக்கம் போனாலும் வம்பிழுப்பேன் :)

    ReplyDelete
  60. @ஜலீலாக்கா
    //அட நிறைய பல்பா அப்ப வீடு கல்யாண வீடு தான் போங்க..//
    என் முகம் மட்டும் பிரகாசமா இருக்கும். எங்க வீடு கல்யாண வீடு மாதிரி இருக்கும். அடுத்த மேட்டர் கிடைக்கிற வரைக்கும் பயங்கரமா என்னைய வச்சு ஓட்டுவாங்க. அதுவும் என்னவருக்கு தெரிஞ்சதோ...... செத்தேன் :)

    வருகைக்கு நன்றி அக்கா

    ReplyDelete
  61. அருமையான பதிவு. ஓய்வு நேரத்தில் என் வலைப்பக்கம் வந்து போங்கள்.பயனுள்ளதாக இருந்தால் உங்கள் வாசக நண்பர்களிடம் அறிமுகப்படுத்துங்கள்.

    ReplyDelete
  62. ஹாஹாஹாஹாஹாஹா.... செம பல்புதான்

    ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)