"பேப்பர்லலாம் வெளம்பரம் கொடுத்து பாத்துட்டேன். ஆள் கிடைக்கல ஆமி.  உனக்கு தெரிஞ்சவங்க இருந்தா சொல்லி வை. எவ்வளவு கேட்டாலும் கொடுத்துடலாம்” -அண்ணாவின் மனைவி.
 
ட்வின்ஸ் வச்சுட்டு ரொம்ப சிரமமா இருக்கு. இன்னும் ஒரு மாசத்துல வேலைல ஜாய்ன் பண்ணனும். நல்ல ஆளா பாத்து அனுப்பேன்! ” -பெங்ளூரில் இருந்து சித்தி பொண்ணின் கெஞ்சல்.

வீட்ல வேல இல்லாம வெட்டியா தானே(இதுவே எவ்வளவு பெர்ர்ர்ர்ர்ர்ர்ரிய வேலன்னு அனுபவிக்கிறவங்களுக்கு தான் தெரியும்) இருக்கோம்.  நமக்கு தான் ஆள் கிடைக்கமாட்டாங்க(நம்ம ராசி அப்படி)கஷ்ட்டப்படுற(?!)மக்களுக்கு பொதுசேவை (?)பண்ணலாம்னு தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி வச்சு 4 மாசம் ஆச்சு. ஒரு ஆள் கூட சேதி சொல்லி விடல. அட கடுதாசி கூட போட்டுவிடலன்னா பாத்துக்கோங்களேன்.....வீட்டு வேலைக்கு ஆள் கிடைக்கிறது குதிர கொம்பாய்டுச்சு :( சரி நம்மளே களத்துல குதிச்சுடலாம்னு(மொட்ட மாடில இருந்து இல்ல)  அம்மா சொன்ன  பொன்னம்மா வீட்டுக்கு போனேன்.

முன்பு பொன்னம்மா  ஒரே சமயத்தில் 4 வீட்டுக்கு வேலை செய்ஞ்சவங்க. இன்னைக்கு கட்டட வேலைக்கு போய்ட்டு இருக்காங்க. நிறைய பேரோட உறவுக்காரங்க மாதிரி பழகுறவங்க. அவங்க மூலமா ஆள் கிடைப்பாங்கன்னு பெருஷா நம்பிக்கை. ஆக  நம்மல நம்பி கொடுத்த பொறுப்பான பொதுசேவைல  ஒன்றை செஞ்ச திருப்தியோட இன்னைக்கு நைட் நல்லா தூங்கலாம்னு நெனச்சு(ஓவர் பில்டப்ப்பா இருக்கோ???? கொஞ்சம் பொருத்தருள்க;) அவங்க கிட்ட மதனி,தங்கச்சி சொன்ன விஷயத்த சொன்னதும்  என் விஷயத்துக்கு பதில் சொல்லாம எந்துரிச்சு  “இருத்தா..... டீத்தண்ணி போட்டுதரேன்னு” சொன்னாங்க. நம்ம தப்பா எதுவும் கேக்கலையே? அப்ப ஏன் ஈழம் பத்தி கேட்டா எஸ்கேப் ஆகுற சிங் ஜீ, சோனி ஜீ மாதிரி பதில் சொல்லாம போகுதுன்னு மண்டைக்குள்ள  பயங்கர குடைச்சல்.  மண்ணெண்ணெய் அடுப்ப பத்தவச்சுட்டே (இந்த இடத்துல டீலாம்  வேணாம்னு நான் டயலாக் விடணும் தான்.... ஆனாலும் முடியல;) அவங்க பேச்சா பேசுனாங்க.  (அதிகார உச்சியில் இல்லாம நீங்க இருந்தா உங்களுக்கும் கண்டிப்பாக புரியும்) சாதாரண சராசரி ஆளா கேட்டுட்டு இருந்ததுனால எனக்கு அவங்க சொன்ன விஷயங்கள் புத்திய தட்டுச்சு.

”முன்ன மாதிரியாத்தா.... பக்கத்து தெருக்கு பொம்பள புள்ளைய கடைக்கு அனுப்புறதுக்கே பயமா கெடக்கு.  வெளியூர்ன்னா ஆரு வருவா?

முன்னல்லாம் வேலைக்கு போனோமா, சொன்ன வேலைய செஞ்சோமான்னு இருக்கலாம். அவங்க கொடுக்குற மிச்ச சாப்பாட்ட அப்படியே வீட்டுக்கு கொண்டாந்தா புள்ளகுட்டிலாம் சாப்டும். இப்ப அப்படியா? ஆளாளுக்கு ஒரு பிரிஜ்ஜ வாங்கி வச்சுட்டு  கா கோப்ப கொழம்பு கெடந்தாலும் அப்படியே உள்ள வச்சுடுறாங்க.   சாதத்த கூட விட்டு வைக்கிறாங்கல்ல. அதையும் பக்குவப்படுத்தி அடுத்த நாள் என்னன்னமோ செய்துக. இதுனால தான் சம்பளம் கட்டுபடியாகாதுன்னு ஏத்தி கேக்குறோம். அதுக்கு மொறைக்குதுக.

கரண்ட்ல உபயோகிக்கிற ஜாமான்லான் எப்படி சுத்தம் பண்ணனும்னு நமக்கா தெரியும் ?(ஓவன், புல் ஆட்டொமெட்டிக் வாஷிங் மெஷின், வாக்யூம் க்ளீனர், ஏசி பராமரிப்பு....etc) எப்படி அதுல வேல செய்றதுன்னு தெரியுமா? எசக்குபிசக்கா ஒரு தடவ தப்பு பண்ணிட்டா ஐய்யோ........ அவுக தான் அந்த கம்பெனிகே ஓனராட்டம் குதிப்பாங்க.

நாங்களும் மனுஷங்க தானே? எங்களுக்கும் ஆச பாசம்லாம் இல்லையா என்ன? ஆய்ர ரூபா சம்பளத்துக்கு வந்துட்டா நாங்க என்ன  பொம்மையாட்டமா த்தா? ஒரு நா கோயிலுக்கு போய்ட்டு வர லேட்டானா  வயசுல மூத்தவுகன்னு கூட பாக்காதுக. ஒரு நா முடியலன்னு லீவு எடுத்தா ஒடனே அடுத்த நா மூஞ்சையும் மொகத்தையும் காட்டுதுக. 

அவங்களால செய்ய முடியலன்னு தானே நம்மல கூப்டுதுக. இவ்வளவுலாம் செய்றோம். மாசக்கடைசில பணத்த கொடுக்கும் போது மனநெறைவாவா கொடுக்குதுகன்னு நெனைக்கிற?  கணக்கு போடுற மெசினையும், காகிதமும் லெட்டு பேனாவும் கைல வச்சுட்டு இத்தன நாளுக்கு நீ வரல, அதுக்கு இவ்வளவு பிடிச்சது போக இந்தா மீதின்னு  கணக்கு பண்ணி கொடுப்பாங்க.  என்ன செய்ய? நம்ம விதி அப்டி கெடக்குன்னு நொந்துக்க வேண்டியது தான்.

இந்தா........ வேலைக்கு போவுதுக பாரு... அதுக வீட்ல மட்டும் வேலைக்கு போவணும்னா கொஞ்சம் ஜாக்ரதையா யோசிச்சு தான் போவணும்.  நீ வீட்டுக்கு வர நேரமா  வேலைக்கு வரேன்... என்னைய வச்சுட்டு நீ ஜோலிக்கு போற ஜோலிலாம் இங்கே வேணாம்னு கண்டிஷனா சொல்லிபுட்றனும். அதுகலா எங்காவது மறதியா ஜாமான வச்சா கூட மொதல்ல நம்மள தான் கேக்குங்க. அப்படியே ஒடம்பெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுடும். அவங்க பாக்குற சந்தேகப்பார்வைல  ஒடம்பெல்லாம் கூனிகுறுகி தான் போவேன்.  இவ்வளவு எதுக்கு ?  கருப்பாயி இருந்துச்சே... உங்க டீச்சர் வீட்ல தான் வேல  பாத்துச்சு. எந்த களவாணிபயலோ வீட்ட பிரிச்சு நகைய களவாண்டதுக்கு கருப்பாயி மேல தானே கேஸ் கொடுத்துச்சுக?
(போலிஸ் அடி தாங்காம போலிஸ் ஸ்டேஷனிலேயே தூக்கு போட்டு செத்து போயிட்டாங்கன்னு ஊர் மக்களும் அவமானம் தாங்காம தூக்கில் தொங்கி இறந்ததாக செய்திதாள்களிலும்  பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நியூஸ் இது)

நம்ம புள்ளைகள அவுக புள்ளைகளோட விளையாட விடாதுக.  கொல்ல வாச வழியா தான் வரணும்.கொல்ல வாச வழியா தான் போவணும். இன்னும் இந்த கொடும நடந்துட்டு தான் இருக்கு.

விசேஷத்துக்கு ஒத்த சேல எடுத்து கொடுக்க அவ்வளவு யோசனையா இருக்கும்.  ஆடம்பரமா செலவு பண்ணா அதுக கண்ணுக்கு தெரியுமா? ஆயிரக்கணக்குல வெடி வாங்கி பணத்த கரியாக்குங்க. வருஷா வருஷம் வெளிநாட்டுக்கு சுத்திபாக்க போவாக. ஆனா போனஸ்ன்னு நாம்ம போயி நின்னா அவ்வளவு தான். திட்ட ஆரம்பிச்சுடுங்க. என்னமோ அவங்க சொத்தையே எழுதி கேட்டுட்டாப்ல.

ஆபிஸ்ல எக்ஸ்ட்ரா வேல பாத்தா பணம் கேட்டு வாங்குதுகள த்தா?  நாம மட்டும் ஜாஸ்தியா கேட்டுட கூடாது.  விருந்தாளிங்க அதிகமா வந்தா அதிகமா வேல பாக்குறாகளே,பத்து ரூபா சேத்து கொடுப்போமேன்னுலாம் மனசுல தோணாது. நாமளா கேட்டா பொல்லாப்பு.

இவ்வளவுலாம் இருக்கு தாயி. நாய விட கேவலமான பொழப்பு எங்களது...... வீட்டுக்காரம்மாளாம் இப்படி நடந்துக்கும் போது மனசுக்கு கஷ்ட்டமா இருந்தாலும் நம்ம கஷ்ட்டம் அந்த கஷ்ட்டத்தயெல்லாம் தூக்கி போட வச்சுடுது.  வேற வழி இல்லாம போறவுக தான் இப்ப வீட்டு வேலைக்கு போறாக. சொற்ப ஆளுங்களுக்கு தான் நல்ல வீட்டுக்காரம்மா கெடைக்கிறாங்க. பாவம் எதுக்கு கண்ணு(?) வச்சு அதுக பொழப்ப கெடுப்பானே? அதுகளாவது நல்லா இருக்கட்டும்.

இதுனாலையே இப்பலாம் ஆரும் வீட்டுவேலைக்கு போக ஆசபடுதுக இல்ல.  கட்டடவேலைக்கு போனா 200 ரூபாய். கஷ்ட்டப்பட்டாலும் திருப்தியா இருக்கலாம். காலைல 9 மணிக்கு மேல போனா போதும். சாயங்காலம் டான்னு வீடாந்து சேரலாம். மானங்கெட்ட பொழப்ப பொழைக்கிறதுக்கு இது தேவல இல்லையா த்தா????

எதுக்கும் நாலும் எடத்துல  சொல்லி வைக்கிறேன்”ன்னு சொல்லி முடிச்சாங்க.

கைல இருந்த டீ ஆறியதை கூட அறியாமல் அவங்க சொன்ன விஷயங்களில் உள்ள நியாயங்களை மனசு ஆராய ஆரம்பிச்சுது. இன்னும் பொதுவில் விவாதிக்க முடியாத பல பிரச்சனைகளும் அடங்கிய வேலை இது.  சாயங்கால நேரம் பொழுது போகாம தான் அங்கே போனேன். ஆனா கனத்த மனசோட  அந்த வீட்ட விட்டு வெளியே வந்தேன். வரும் போதே பல விஷயங்களில் தெளிவு பெற்றவளாய்.........

யாரும் யாருக்கும் அடிமை இல்ல. நாம்ம ஒரு இடத்துல வேலைல இருக்குற மாதிரி தான் அவங்களும் நம்ம கிட்ட வந்துருக்காங்க. ஒரே வித்தியாசம் தான்... அவங்களுக்கு ஒரு படிக்கு மேல நம்மளோட படிப்புக்கு தகுந்த வேல. நம்ம சீனியர் ஆபிஸர் நம்மகிட்ட நல்லபடியா நடந்துக்கணும்னு நாம்ம எதிர்பாக்குற மாதிரி தானே அவங்க எதிர்பார்ப்புகளும் நம்மல நோக்கி இருக்கும்? அது ஏன் நமக்கு தெரிய மாட்டேங்குது?   20 ஆயிரம் சம்பளம் வாங்கிட்டா நாம ஒசத்தி. 2000 ரூபாய் வாங்குனா அவங்க மட்டமா? தீண்டாமை கொடுமை இன்னும் அரங்கேறிட்டு தானே இருக்கு!!! :( மேல்ஜாதி,கீழ்ஜாதி என்ற பாகுபாடு,பிரிவினையை விட சம்பளத்தையும் வேலையையும் வைத்து நடத்தப்படும் பணக்கார ஏழை, முதலாளி/தொழிலாளி பிரிவினை மிகவும் கொடியதும் கண்டிக்க தக்கதும்.

 உங்க மனசாட்சியை நீங்களே கேளுங்க.  தயவு செய்து 5 நிமிஷம் ஒதுக்கி “நாம நல்லபடியா தான் நமக்கு கீழ் வேலை செய்பவர்களை நடந்துக்குறோமா??”ன்னு நெனச்சு பாருங்க. அப்படி நினைக்கும் போது கண்டிப்பா பிரிவினை அகன்று உங்கள திருப்திபடுத்தும் ஒரு வேலையாள்  நிச்சயமா கிடைப்பாங்க. “இன்றைய இந்த ஆடம்பர வாழ்க்கை விதியின் வலிமையால் தலைகீழாக மாறி ஏழையாக நாம் ஆனபிறகு அதே வேலையில்  நாம் இருக்க நேர்ந்தால்” (இறைவன் நம்மை பாதுகாப்பானாக) என கற்பனை பண்ணி பாருங்க. கண்டிப்பா  கல் மனசும் கரைஞ்சு புதிய சகாப்தம் படைப்பீங்க..... :) :) :)பிற்சேர்க்கை:- 
இக்கட்டுரை எழுதும் போதே நான் எழுதிய முந்தைய கட்டுரை லிங்க் கொடுக்க நினைத்தேன் (முதலாளியம்மாவின் பார்வையில் வேலைக்காராம்மா பத்தி அந்த பதிவில் புலம்பும் போதே வேலைக்காரம்மாவின் பார்வையில் முதலாளியம்மா பத்தி ஒரு பதிவுல புலம்ப போறதா சொல்லியிருந்தேன்) .... மறதி யார விட்டு வச்சுச்சு? ;) ஞாபகப்படுத்திய சகோ பலேபிரபுவிற்கு மிக்க நன்றி. 

என் முந்தைய புலம்பலை காண கீழே க்ளிக்குங்கோ
வேலைக்காரியை தேடி ஒரு பயணம்

, , , ,

72 comments:

 1. உங்க மனசாட்சியை நீங்களே கேளுங்க. தயவு செய்து 5 நிமிஷம் ஒதுக்கி “நாம நல்லபடியா தான் நடந்துக்குறோமான்னு நெனச்சு பாருங்க. அப்படி நினைக்கும் போது கண்டிப்பா பிரிவினை அகன்று உங்கள திருப்திபடுத்தும் ஒரு வேலையாள் நிச்சயமா கிடைப்பாங்க.

  மிகச்சரியாக சொல்லி இருக்கீங்க தோழி..

  ReplyDelete
 2. நல்ல அலசல் ஆமி. நல்ல உறைக்கும்படி
  சொன்னிங்க. வேலைக்காரங்களும் மனுஷங்க்தானே. ஒரு நா வெலைக்காரி
  வல்லைன்னா வீடே நாறிப்போகும்.
  அவங்களையும் மனுஷங்களா மதிக்கும்
  மனசு வேணும்.

  ReplyDelete
 3. வேலைக்கு ஆள் கிடைத்தாலும் கிடைப்பாங்க போல ஆனா இந்த தமிழ் மனத்தில் இன்னைக்க முடியல நானும் பல முறை இன்னைத்து பார்த்தேன் சகோ. என்ன கேடு அதுக்குன்னு தெரியல ....

  நல்ல பதிவ இன்னும் நாலு பெருக்கிட்ட கொண்டு போயி சேர்த்த சந்தோசம் கிடைக்கும்ன்னு பார்த்தேன் .
  நன்றி சகோ வரேன்

  ReplyDelete
 4. நீங்க சொன்ன மாற்றம் வந்தா சந்தோசம் ஆனா வராது . இது ஒரு சைத்தானின் அடிசுவடுகளுள் ஒன்று ...அதை என்று நாம் எல்லோரும் புரிந்து கொள்ள போறோமோ ..தெரியல

  ReplyDelete
 5. அமெரிக்காவில் பெரும்பாலும் யாருக்கும் வேலைக்காரி வைச்சு கட்டுபடியாகாது. எல்லா வேலைகளும் நாங்களே செய்யணும். சீப் லேபர் என்ற நிலமை இந்தியாவில் இருப்பதால் இப்படியெல்லாம் நடக்குது. மிஞ்சிய குழம்பு, சாதம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கிறாங்க.... உண்மைதான். அதை குடுத்த என்ன குறையப் போவுதாம்!!!

  ReplyDelete
 6. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  சகோ.ஆமினா...!

  வாவ்..!

  இந்த ரமலானில் இப்பதிவின் ஒவ்வொரு எழுத்துக்கும் பன்மடங்காக உங்களுக்கு நன்மை வந்து சேரட்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.


  //“இன்றைய இந்த ஆடம்பர வாழ்க்கை விதியின் வலிமையால் தலைகீழாக மாறி ஏழையாக நாம் ஆனபிறகு அதே வேலையில் நாம் இருக்க நேர்ந்தால்” (இறைவன் நம்மை பாதுகாப்பானாக) என கற்பனை பண்ணி பாருங்க. கண்டிப்பா கல் மனசும் கரைஞ்சு புதிய சகாப்தம் படைப்பீங்க..... :) :) :)//

  வார்த்தை இல்லை ஏதும் சொல்ல...

  ReplyDelete
 7. ம்ம்ம்ம்...... நியாயமான பேச்சு! இங்கேயெல்லாம், "தன் கையே தனக்கு உதவி" தான். இந்தியாவிலும் அந்த நிலைமை விரைவில் வந்து விடும்.

  ReplyDelete
 8. ஏற்கனவே "வேலைக்காரி தேடி ஒரு பயணம்" என்பதில் உங்கள் கஷ்டம சொல்லி இருந்தீங்க, இப்போ வேலைக்காரர்கள் கஷ்டம சொல்லி இருக்கீங்க.

  நம் வேலையை நாம் செய்வது தானே சரி?

  ReplyDelete
 9. உண்மைதான் ஆமினா
  முதலாளி வர்க்கம் எப்போதும் தொழிலாளிகளை பற்றி சிந்திப்பதில்லை.. நன்றாக உறைக்கும் படி சொன்னீர்கள்

  ReplyDelete
 10. அசத்தல் பதிவு!

  ReplyDelete
 11. அழகான ஒரு அலசல்.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. இந்த விஷயத்தில மட்டும் வெளிநாடு எவ்வளவோ பெட்டர்... அளவுக்கதிகமாக பணம் புரண்டால் மட்டுமே... தேவைக்கு ஆளை அழைக்க முடியும். மற்றும்படி நாங்கதான் வேலைக்காரர். இதனால்தான் வெளிநாட்டில், சரிக்குச் சரி ஆண்களும் வீட்டு வேலையைப் பங்குபோட்டுக்கொள்கிறார்கள்போலும்.

  ReplyDelete
 13. @கருன்
  //

  மிகச்சரியாக சொல்லி இருக்கீங்க தோழி..//

  மிக்க நன்றி கருன்

  ReplyDelete
 14. @லெட்சுமி மாமி
  நல்ல அலசல் ஆமி. நல்ல உறைக்கும்படி
  சொன்னிங்க. வேலைக்காரங்களும் மனுஷங்க்தானே. ஒரு நா வெலைக்காரி
  வல்லைன்னா வீடே நாறிப்போகும்.
  அவங்களையும் மனுஷங்களா மதிக்கும்
  மனசு வேணும்.///
  சரியா சொன்னீங்க மாமி... சம்பளம் குடுக்குறோம் என்ற ஒரு காரணத்தினால் யாரும் யாருக்கும் அடிமையாக முடியாது இறைவனை தவிர

  ReplyDelete
 15. @ரியாஸ் அஹ்மத்
  வேலைக்கு ஆள் கிடைத்தாலும் கிடைப்பாங்க போல ஆனா இந்த தமிழ் மனத்தில் இன்னைக்க முடியல நானும் பல முறை இன்னைத்து பார்த்தேன் சகோ. என்ன கேடு அதுக்குன்னு தெரியல ....

  நல்ல பதிவ இன்னும் நாலு பெருக்கிட்ட கொண்டு போயி சேர்த்த சந்தோசம் கிடைக்கும்ன்னு பார்த்தேன் .
  நன்றி சகோ வரேன்///
  என்ன சகோ ரொம்ப சளிச்சுட்டீங்க :)
  நானும் கவனிச்சுட்டு தான் இருக்கேன். கொஞ்ச நாளா என்கூட தமிழ்மணம் சண்டபோட்டுட்டு தான் இருக்கு.... கொஞ்ச நேரத்துல சரியாகிடுது.... இப்ப சரியாகிடுச்சு... முயற்சிக்கு மிக்க நன்றி
  ஆனாலும் நீங்க அநியாயத்துக்கு நல்லவரா இருக்கீங்க...ஹா....ஹா...ஹா.... (எனக்கு சகோதர் ஆச்சே:)

  ReplyDelete
 16. @ரியாஸ் அஹ்மத்
  //நீங்க சொன்ன மாற்றம் வந்தா சந்தோசம் ஆனா வராது . இது ஒரு சைத்தானின் அடிசுவடுகளுள் ஒன்று ...அதை என்று நாம் எல்லோரும் புரிந்து கொள்ள போறோமோ ..தெரியல//
  மனதில் சிறு மாற்றம் வந்தால் பெரு துளியாய் பரவ வாய்ப்புண்டு சகோ.... எவ்வளவு நாள் தான் ஒரே இடத்துலையே நிக்கும்? நிலமை கண்டிப்பா மாறும்

  ReplyDelete
 17. @வானதி
  //மிஞ்சிய குழம்பு, சாதம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கிறாங்க.... உண்மைதான். அதை குடுத்த என்ன குறையப் போவுதாம்!!!//
  பொருளாதார மந்த நிலை,பொருளாதார வீழ்ச்சியால சிக்கனத்த கடைபிடிக்கிறாகளாமாம் :)

  ReplyDelete
 18. @ஆஷிக் அண்ணா
  ஜஸக்கல்லாஹ் ஹைர்
  வார்த்தை இல்லை ஏதும் சொல்ல... :)

  ReplyDelete
 19. @சித்ரா
  //ம்ம்ம்ம்...... நியாயமான பேச்சு! இங்கேயெல்லாம், "தன் கையே தனக்கு உதவி" தான். இந்தியாவிலும் அந்த நிலைமை விரைவில் வந்து விடும்.//
  இப்பலாம் தான் வீட்டு வேலைய தானே செய்றது, மார்க்கெட்க்கு போறது,ஷாப்பிங் பண்றது, குழந்தைகள கவனிச்சுக்குறதுன்னு தன்னை பிசியா வச்சுக்குறது தான் பேஷனாகிட்டு வருது (சென்னையில் லக்னோவில் நான் பார்த்தமட்டில்). மெல்ல மெல்ல நிலமை மாறும் :)

  ReplyDelete
 20. @பலே பிரபு
  நியாபகப்படுத்தியமைக்கு மனமார்ந்த நன்றி சகோ...
  //நம் வேலையை நாம் செய்வது தானே சரி?//
  எது நல்லதோ அதானே நமக்கெல்லாம் கசக்கும் :)

  ReplyDelete
 21. @நாஞ்சில் மனோ
  //ஆமீனா அசத்துங்க...!//
  :-)
  சரிங்கண்ணா...........

  ReplyDelete
 22. @மதுரன்
  //உண்மைதான் ஆமினா
  முதலாளி வர்க்கம் எப்போதும் தொழிலாளிகளை பற்றி சிந்திப்பதில்லை.. நன்றாக உறைக்கும் படி சொன்னீர்கள்//
  மேகம் சூரியனை மறச்சு ஒளி வெளிவராம தடுக்குறது மாதிரி பணம் வந்ததால் ஆணவம் தலைக்கேறுவது தான் காரணம் சகோ
  வருகைக்கு நன்றிகள் பல

  ReplyDelete
 23. @ஜீ...

  //அசத்தல் பதிவு!//
  மிக்க நன்றி ஜீ

  ReplyDelete
 24. @அந்நியன்
  //அழகான ஒரு அலசல்.

  வாழ்த்துக்கள்.//
  நன்றி அய்யூப் அண்ணா

  ReplyDelete
 25. @ஆகுலன்
  //இதுதான் இன்றைய நிலைமை....
  ஒருநாள் விடியும்............//
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 26. @அதிரா
  //இதனால்தான் வெளிநாட்டில், சரிக்குச் சரி ஆண்களும் வீட்டு வேலையைப் பங்குபோட்டுக்கொள்கிறார்கள்போலும்.//
  எங்க வீட்டுக்கு வந்து பாருங்கோ..... அமெரிக்கால இருக்குற பீல் கிடைக்கும் :)
  இப்ப இதான் ட்ரெண்ட் இல்லையா?
  இங்கேயும் ஆளுங்க மாறிட்டாங்க... படிக்காதவங்க/பழமைவாதி கொள்கையுடன் அலையும் சில படித்தவர்கள் மட்டும் பிடிவாதமா இருக்காங்க :)

  ReplyDelete
 27. அஸ்ஸலாமு அழைக்கும்


  //“இன்றைய இந்த ஆடம்பர வாழ்க்கை விதியின் வலிமையால் தலைகீழாக மாறி ஏழையாக நாம் ஆனபிறகு அதே வேலையில் நாம் இருக்க நேர்ந்தால்” (இறைவன் நம்மை பாதுகாப்பானாக//


  நல்ல அருமையாக சொல்லி இருக்கீங்க.


  //கொஞ்ச நாளா என்கூட தமிழ்மணம் சண்டபோட்டுட்டு தான் இருக்கு....//

  என் கூடயும் சண்டைதான். என்னான்னு கேளுங்கோ

  ReplyDelete
 28. நல்ல அலசல் ஆமினா.அதே நேரம் வேலைக்காரகளால் அல்லலுறும் வீட்டுக்காரர்களும் நிறைய இருக்கின்றனர்.எல்லா வீட்டாட்களும் பொன்னம்மா சொல்வதைப்போல் இருக்க மாட்டார்கள்தானே?:-)

  உங்கள் பதிவை படிக்கும் பொழுதே எனக்குள் ஒரு கதைக்கான கரு உருவாகி விட்டது.அது கதையாக இருந்தாலும் உண்மைசம்பவங்களையே கதையாக கொண்டு வருகின்றேன்.

  ReplyDelete
 29. அஸ்ஸலாமு அலைக்கும் ஆமினா! எப்பவுமே கஷ்டப்படுறவங்க நிலமையில நாம் இருப்பதுபோல் நினைத்து பார்த்தால்தான் அந்த வலி நமக்கு புரியும். அதை தெளிவான வடிவில், உங்க நடையில் சொல்லியிருப்பது அருமை தோழி!

  ReplyDelete
 30. அசத்திட்டீங்க ஆமினா. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 31. //கடுதாசி கூட போட்டுவிடலன்னா பாத்துக்கோங்களேன்//

  போட்ட கடிதாசியை ஏன் விடணும். பொருட்பிழை உள்ளது சகோ!!

  ReplyDelete
 32. //முன்பு பொன்னம்மா ஒரே சமயத்தில் 4 வீட்டுக்கு வேலை செய்ஞ்சவங்க//

  ஒரே சமயத்தில்..... அவங்களுக்கு 8 கை இருந்துச்சா?

  ReplyDelete
 33. நம்ம ஒருவீட்டு வேலையையே செய்ய நமக்கு கஷ்டமாருக்குன்னுதானே உதவிக்கு ஆள் தேடுறோம்.அப்டீன்னா, நாலுவீட்ல வேலைசெய்யற அவங்க நிலையையும் கொஞ்சம் யோசிக்கணுமில்லையா....

  உதவியாளர்களால கஷ்டம் வர்றதும் உண்டுதான்.. அது, நாணயத்தோட ரெண்டாவதுபக்கம் போல:-))

  ReplyDelete
 34. Nalla alasal...

  ippollaa velaikku aal kidaippathillaithaan..

  kaaranam,avangalum padiccu munnerittathaa nenachen..

  ithuvum mukkiyamaana kaaranangal thaan

  anbudan
  Razin

  (No Tamil Typing)

  ReplyDelete
 35. ஆயிஷா
  வ அலைகும் சலாம் வரஹ்....
  //என் கூடயும் சண்டைதான். என்னான்னு கேளுங்கோ//
  கூடிய சீக்கிரமே ஊர கூட்டி ஒரு பஞ்சாயத்து நடத்திடலாம் ஆயிஷா... கவலபடாதீங்கோ.... யாரு நமக்கிட்டேயேவா? :))

  ReplyDelete
 36. @சாதிகாக்கா
  //எல்லா வீட்டாட்களும் பொன்னம்மா சொல்வதைப்போல் இருக்க மாட்டார்கள்தானே?:-)
  ஆமாமா.... என்னை மாதிரி ஆளுங்களும்(?!!) இருப்பாங்கக்கா... ஹா...ஹா...ஹா...
  பொன்னம்மாவே சொன்னாங்களே.... சிலருக்கு நல்ல வீட்டுக்காரம்மா கிடைக்கதான் செய்றாங்களாம். ஆனா எதுக்கு கண்ணு வைக்கணும்னு அத பத்தி சொல்ல மாட்டாகளாம் :)

  கதாசிரியர் விரைவில் கதை விருந்து கொடுக்க வேண்டுகிறேன் :)

  ReplyDelete
 37. @அஸ்மா
  வ அலைக்கும் சலாம் வரஹ்.....
  ஒவ்வொரு பிரச்சனையும் மனதால் தீர்க்க ஒரு வழி உண்டு அஸ்மா. இத்தகைய மன வியாதியை போக்க மனதால் அந்த வலியை நினைத்து பார்த்தால் தான் குணமாகும்.இல்லைன்னா இன்னும் புண்ணாகும் :)
  மிக்க நன்றி அஸ்மா

  ReplyDelete
 38. @இமா
  மிக்க நன்றி இமா

  ReplyDelete
 39. @சிவகுமார்
  //போட்ட கடிதாசியை ஏன் விடணும். பொருட்பிழை உள்ளது சகோ!!//
  சகோ சிவகுமார் தானா? இருங்க..... மறுபடியும் நல்லா பாத்துக்குறேன்...
  அட
  ஆமா
  சகோ சிவகுமார் தான்....
  என்ன சகோ இதெல்லாம்? என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன் இந்த கொலவெறி? யாரு உங்கள இந்த அளவுக்கு தீவிரவாதியாக்குனது? :)

  ReplyDelete
 40. @சிவகுமார்
  //ஒரே சமயத்தில்..... அவங்களுக்கு 8 கை இருந்துச்சா?//
  ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்பா........ :)
  அழுகாச்சி அழுகாச்சியா வருது சகோ....
  நீங்க விரைவில் பழைய நிலைமைக்கு வர என் ப்ரார்த்தனைகள் (அவ்வ்வ்வ்வ்வ்.... )
  ஆனாலும் பொன்னம்மாவை நீங்க பத்ரகாளின்னு சொல்லியிருக்க கூடாது :)

  ReplyDelete
 41. @அமைதிசாரல்
  கண்டிப்பாக
  எதையும் எந்த பக்கத்தையும் நியாயப்படுத்தவோ குறை கூறவோ முடியல.
  ஆனா நமக்கு மனதளவில் எந்த பிரச்சனையும் ஏற்படுவதில்லை அவங்க அளவுக்கு. சரி தானே?
  இன்னைக்கு ஒரு ஆள் தப்பு பண்ணா அடுத்த ஆளை வேலைக்கு அமர்த்தலாம். பழைய ஆள் செஞ்ச தப்பு மிஞ்சி போனா 1 வாரம் வரைக்கும் மனசுக்குள்ள இருக்கும். ஆனா அவங்க பிரச்சனை காலா காலத்துக்கும் அவங்க மனச விட்டு போறதில்ல. அப்ப குற்றவாளி நாம தானே? :)

  ReplyDelete
 42. ஆமி, நேத்து பதிவுபடிச்சு பின்னூட்டம் மட்டு போட்டுட்டு போயிட்டேன் .இன்னிக்கு எல்லா திரட்டியிலும்
  ஓட்டுப்போட வந்தேன். போட்டுட்டேன் வரேன்மா.

  ReplyDelete
 43. @சகோ ரஜின்
  //Nalla alasal...//
  புல்லி ஆட்டொமெட்டிக் வாஷிங் மெஷினாச்சே.... அதான் அப்படி..

  பதிவு பத்தி சொல்லுங்கன்னா துணி பத்தி சொல்றீங்க? என்ன ஆச்சு சகோ? :)

  //(No Tamil Typing)//
  நான் வேணும்னா உங்க இந்த கமெண்டை ட்ரான்ஸ்லேட் மூலமா தமிழ்படுத்தி தரட்டுமா? :))

  கல்வியால் முன்னேற்றம் உண்டானால் மிக சந்தோஷமே சகோ. அப்படியே இந்த முறை ஒழிந்தாலும் மிக சரியே

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 44. @லெட்சுமிம்மா
  //ஆமி, நேத்து பதிவுபடிச்சு பின்னூட்டம் மட்டு போட்டுட்டு போயிட்டேன் .இன்னிக்கு எல்லா திரட்டியிலும்
  ஓட்டுப்போட வந்தேன். போட்டுட்டேன் வரேன்மா.//

  ;-)

  ReplyDelete
 45. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

  ஆக்கப்பூர்வமான ஆக்கம் சகோதரி.

  அந்த சகோதரியின் ஆதங்கம் பல நியாயமான கேள்விகளை எழுப்புகின்றது. சிந்திக்க வைக்கின்றது. "ஒவ்வொருவரும் உங்கள் சகோதர சகோதரிகள். உங்கள் பணியாட்களுக்கு நீங்கள் உண்ணுவதிலிருந்து கொடுங்கள், நீங்கள் உடுத்துவதிலிருந்து உடுத்த கொடுங்கள்" என்று சொன்னார்கள் நாயகம் (ஸல்) அவர்கள்.

  நீங்கள் கூறியிருப்பது போல, இவ்வுலகில் ஒருவர் இன்னொருத்தருக்காக பணி புரிகின்றோம். அதற்காக அடுத்தவருக்கு அநீதி இழைப்பது இறைவனிடத்தில் மிகப்பெரும் தண்டனையை வாங்கி தரும் விசயம். நிச்சயம் அநீதி இழைப்பவர்களுக்கு இறைவனிடத்தில் கேடு தான். இறுதித்தூதர் மிக அழகாக கூறினார்கள்....

  "அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை”....அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள். நூல்: புகாரி.

  //நாம மட்டும் ஜாஸ்தியா கேட்டுட கூடாது. விருந்தாளிங்க அதிகமா வந்தா அதிகமா வேல பாக்குறாகளே,பத்து ரூபா சேத்து கொடுப்போமேன்னுலாம் மனசுல தோணாது. நாமளா கேட்டா பொல்லாப்பு.////

  நாயகம் (ஸல்) அவர்கள் 'நச்'-என்று சொன்னார்கள்

  “மூவருக்கெதிராக கியாமத் நாளில் நான் வழக்குரைப்பேன்! என் பெயரால் சத்தியம் செய்து மோசடி செய்தவன்; சுதந்திரமானவனை (அடிமையாக) விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்; கூலிக்கு ஒருவரை அமர்த்தி, அவரிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்' என்று அல்லாஹ் கூறினான்.” அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி). ஆதாரம்: புகாரி.

  நிச்சயம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். ஒரு உண்மையான இறைநம்பிக்கையாளன் தனக்கு வேலை செய்பவரை ஏற்றி பிழைக்கமாட்டான், அநீதி செய்ய நினைக்கமாட்டான். அவருக்கான மரியாதையை கொடுத்து அழகிய முறையில் உரையாடி இறைவனின் அருளை பெறவே விரும்புவான்.

  சிந்திப்போம்...இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வழிப்படி நடப்போம். மனிதத்தை காப்பாற்றுவோம்.

  நன்றி,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 46. //சி.பி.செந்தில்குமார் said...
  i think u r a psycology spl dr//


  Excuse me Junior Blogger cp senthil. what is this? I dont like people who write comments in english. Please use our mother tongue tamil. I am sincerely giving this advice to you. :)

  ReplyDelete
 47. @சிபி
  //i think u r a psycology spl dr//
  ஹா...ஹா...ஹா....
  நல்ல psycology டாக்டர தான் தேடிட்டிருக்கேன் என்னைய செக்கப் பண்ண... :)

  ReplyDelete
 48. @விக்கி
  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 49. @சிவகுமார் and சிபி
  //
  Excuse me Junior Blogger cp senthil. what is this? I dont like people who write comments in english. Please use our mother tongue tamil. I am sincerely giving this advice to you. :)//

  of course. i am also agree with what siva told :) Please use our mother tongue டமில்.......

  ReplyDelete
 50. //RAZIN ABDUL RAHMAN said...

  Nalla alasal...//


  //@சகோ ரஜின்
  //Nalla alasal...//
  புல்லி ஆட்டொமெட்டிக் வாஷிங் மெஷினாச்சே.... அதான் அப்படி..

  பதிவு பத்தி சொல்லுங்கன்னா துணி பத்தி சொல்றீங்க? என்ன ஆச்சு சகோ? :)//

  //(எங்கேயாவது நாம சிக்கிட்டா ஒடனே செட்டு சேந்துர வேண்டியது..ம்ம்..:)//

  ReplyDelete
 51. @ சகோ ஆஷிக் அஹ்மத்
  வ அலைக்கும் சலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

  சகோ !! அருமையான கருத்துக்கள்
  ஜஸக்கல்லாஹ் ஹைர்

  ReplyDelete
 52. @ஆயிஷா

  அதானே...

  கீப் இட் அப் :)

  ReplyDelete
 53. வேளையாள் ஒள்ளுக்கும் ஒரு மனசு உண்டென்றதை அழகா புரிய வெச்சிட்டீங்க

  ReplyDelete
 54. பாராட்டுக்கள். வேலைகாரர்கள் பாவம் தான்,ஆனா ஒரு சில வேலைக்காரர்கள் நம்மை ஏமாற்றுகிறார்கள் ! இது பற்றி நான் என் ப்ளோகில் பதிவு எழுதி உள்ளேன் http://udtgeeth.blogspot.com/2010/10/blog-post_08.html
  வேலை செய்பவர்கள் மற்றும் மொதலாளி அம்மா ஆகிய இருவரும் இடையே நல்ல புரிதல் இருந்தால் மட்டுமே ..வண்டி ஓடும் .

  ReplyDelete
 55. வணக்கம் சகோதரி,
  கடந்த வார இறுதி நாட்களில் கொஞ்சம் பிசியாகி விட்டேன்,
  ஆதலால் உங்கள் வலைக்கு வர முடியவில்லை,

  நவீன உலகிலும், அன்றாடக் கஞ்சிக்கு அல்லலுற்று,
  வீட்டு வேலைக்காரர்களாக வாழும்
  ஏழை உள்ளங்களின் உணர்வுகளை, பலருக்கு உணர்ந்து தெளியும் வண்ணம் பதிவாக்கியிருக்கிறீங்க.

  ReplyDelete
 56. ""தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா - இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!'' -என்ற பாரதியின் வரிகளுடன்..

  அனைவருக்கும் எமது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 57. இந்த பதிவுக்கு வாக்குகளும், வாழ்த்துக்களும்..

  ReplyDelete
 58. ஒவ்வொரு தொழிலாளியின் குரல்களும் வார்த்தைகளாக உங்கள் பதிவில், அருமை.

  ReplyDelete
 59. சொல்லவேண்டியதை நச்சுன்னு சொல்றிங்க வாழ்த்துக்கள் ஆமினா..

  ReplyDelete
 60. @nihaza
  //வேளையாள் ஒள்ளுக்கும் ஒரு மனசு உண்டென்றதை அழகா புரிய வெச்சிட்டீங்க //
  மிக்க நன்றி நிஹாஷா உங்க வருகைக்கும் கருத்துக்களுக்கும்

  ReplyDelete
 61. @மாலதி
  மிக்க நன்றி மாலதி

  ReplyDelete
 62. @கீதா
  //ஆனா ஒரு சில வேலைக்காரர்கள் நம்மை ஏமாற்றுகிறார்கள் ! இது பற்றி நான் என் ப்ளோகில் பதிவு எழுதி உள்ளேன் //
  நீங்க நொந்து நூடுல்ஸான கதைய படிச்சேன்....
  இப்படியும் ஆட்கள் இருக்காங்க தான்!!! :(

  ReplyDelete
 63. @நிரூபன்
  மறக்காம வந்ததுக்கு நன்றி சகோ நிரூ

  ReplyDelete
 64. @பாரத் பாரதி
  //""தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா - இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!'' -என்ற பாரதியின் வரிகளுடன்..

  அனைவருக்கும் எமது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.. //
  அட
  கவிதை கூட பாரதி சொன்னது தானா? :)

  ReplyDelete
 65. @பாரதி
  மிக்க நன்றி பாரதி வருகைக்கும் வாக்குக்கும் :)

  ReplyDelete
 66. @சத்யா
  //ஒவ்வொரு தொழிலாளியின் குரல்களும் வார்த்தைகளாக உங்கள் பதிவில், அருமை//
  அநேகமா எல்லார் மனதிலும் ஓர் ஓரத்தில் இந்த எண்ணம் இருக்கதான் செய்யும் என நினைக்கிறேன்
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சத்யா

  ReplyDelete
 67. @ரியாஸ்
  என்ன சார்... அடிக்கடி காணாம போய்டுறீங்க? :)
  மிக்க நன்றி ரியாஸ்!!

  ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)