பள்ளிகூடம் போற வயசுல எனக்கொரு எதிரி.....  ( மனப்பாடம்,ஹோம்வொர்க், பரீட்சைன்னு செய்ய சொல்றவங்க யாராக இருந்தாலும் எமக்கு எதிரி தான். ஆனாலும் ஸ்கூல் போக ஆரம்பிச்ச வயசுல எனக்கு தெரிஞ்ச  என் முதல் எதிரி இவர். 45 வயசு இருக்கும் அவருக்கு)


 என் நடிப்ப எல்லாரும் நம்புறதுக்காக விதியேன்னு சிவாஜி படம்லாம் பாத்து.......பக்காவா ப்ளான் பண்ணி வெங்காயத்த நறுக்கி கண்ணுல வச்சு கண்ணீர வரவழச்சு.....  உச்சி வெயில்ல கூட காஷ்மீர் ப்ளாங்கெட்க்குள்ள ஒழிஞ்சு  வைப்ரேஷன் கொடுத்து, மொனங்குற சத்தம் வர வைக்க அதாண்டா இதாண்டா அருனாச்சலம் நான் தான் டான்னு சத்தம் வராம பாட்டு படிச்சு......... ஐய்யோய்யோயோ......................... ஒரு காய்ச்சல் வந்த மாதிரி நடிக்கிறதுக்கு என்னமா ப்ராக்டிஸ் பண்ண வேண்டியிருக்கு. அம்மா,ஆடு,இலை,ஈட்டி,உரல்ன்னு ஓரல் எக்ஸாம அட்டன் பண்ணாம இருக்குறதுக்கு என்னமா பாடு படவேண்டியிருந்துச்சு........  ஆனாலும் எதிரின்னு சொன்னேனே..... அவர் வந்து எல்லா ப்ளானையும் மொக்கையாக்கிட்டு போவார். 


“ஏலா..... எங்கிட்டேயே  நடிக்கியாலா? மருவாதையா இப்ப எந்தீக்கலன்னா மாட்டாஸ்பித்திரிலருந்து கொண்டாந்த ஊசிய உனக்கு போட்ருவேன்.தெரியுமில்லோ என்ன பத்தி?  என்ன சேதி?”ன்னு  காதுல வந்து  தீவிரவாதி மாதிரி மெரட்டுவாரு....   டாக்டரா இருந்தும் பொழைக்க தெரியாத மனுஷன்.  காலரா, மஞ்ச காமாலை,டைபாய்டுன்னு எதாவது ஒரு பேர சொல்லி  அட்மின் பண்ண வச்சு, ஒரு வாரத்துக்கு நல்லா தீட்டி இப்படியாக எல்லா மக்களிடமும் காச பரிச்சு ஊருக்குள்ள 2 காம்ப்ளெக்ஸ், சினிமா தியேட்டர், பெட்ரோல் பங்க்,புள்ளகுட்டிகளுக்கு பங்க்ளா, 4 மாடி வச்சு ஒரு ஹாஸ்பிட்டல்ன்னு செட்டில் ஆகுறத  விட்டுட்டு  என்னைய ஸ்கூல் போக வைக்கிறதுலையே குறியா இருப்பார். (அந்த வயசுலையே இப்படி தான் அவர திட்டுன ஞாபகம்). இப்படி தான் எனக்கு முதல் எதிரி உருவானாரு.
சின்னதா ஒரு வீடு. வாசல் பக்கத்திலேயே சின்னதா ஒரு ரூம்ல தான்  இருப்பார். நோயாளிங்க வெளியே திண்ணைல வெயிட் பண்ணனும்.  குறைஞ்சது 30 பேராவது இருப்பாங்க. இந்த நேரம்னு இல்லாம எப்பவும் அவர தேடி அவ்வளவு கூட்டம் குமிஞ்சுட்டு தான் இருக்கும்.  டாக்டர் பீஸ்லாம் வாங்க மாட்டார். வெளியே அவர் வச்சுருக்குற மெடிக்கல்ல மாத்திர மருந்து வாங்கிக்கணும். அவ்வளவு தான். ஆனா அதுலையே பணத்த பறிச்சுடுவார்ன்னு நெனைக்கிறவங்களுக்கு பெரிய ஏமாற்றம். அதுவும் நியாயமா தான் கொடுப்பார் மனுஷன்.  கீழக்கரை, இளையான்குடி,  ஆர் எஸ் மங்கலம் ,மண்டபம் ன்னு பக்கத்து ஊர்ல இருந்தும் ஆள் வருவாங்களாம்.   ஜெம் ட்ரீஸ் பார்மஸி லேப்ரட்டரின்னு சொந்தமா லேப் வச்சுருக்கார்.  அந்த கம்பெனி  மூலமா தயாராகும் லேகியத்த வெளிநாடுக்கு போறவங்களும் வாங்கிட்டு போவாங்க/யாராவது வெளிநாட்டுக்கு போனாலும் குடுத்துவிட சொல்லும் அளவுக்கு பிரபலம். இதான் அவரின் சுருக்கமான வரலாறு :)


இப்ப இவர பத்தி ஏன் பேசுறேன்னு கேக்க தோணுதுல? படிக்கிற படிப்புல இருந்து பாசம் கூட வியாபாரமாகிட்டு போற இந்த காலகட்டத்துல இப்படி ஒரு டாக்டர போல இன்னும் யாரையும் நா பாத்தது இல்ல.    சின்னதா சளின்னு போனா கூட 500 ரூபாய் இல்லாம சான்சே இல்ல.....  டாக்டர் பீஸ் மட்டும் 150 ரூபாய்.  அதாவது இவங்களாம் பல லட்சம் கொடுத்து படிச்சுருக்காங்களாம். அதே மாதிரி பல லட்சம் கொடுத்து வேலையும் வாங்கியிருப்பாங்க. அவங்க கொட்டுன பணத்த எடுக்குறதுக்கு GH ல இருந்து வர மாச சம்பளம் பத்தாதுன்னு  மறுபடியும் பல லட்சங்கள் கொட்டி ஹாஸ்பிட்டல் கட்டியிருப்பாங்களாம். முக்கியமா 10 அல்லது 15 நர்ஸ், வார்ட் பாய், ரிசப்ஷன்ல வச்சுருக்குற ப்ளாஸ்மா டீவி, ஏசின்னு அது இதுக்குலாம்  நம்ம கிட்ட தான் பட்டைய தீட்டுவாங்களாம் (ஆனாலும் இவனுங்க பண்ற லொள்ளு தாங்க முடியல. அரை மணி நேர அலப்பறைக்கு ஆயிர ரூபா ரொம்ப ஜாஸ்தி :(


சென்னையில் இருக்கும் போது அம்மாக்கு கையில் சுடுநீர் கொட்டி கொப்புளங்கள் வர உடனே பல்லாவரத்தில் உள்ள ப்ரபலமான XXXX நர்ஷிங் ஹோம்க்கு கூடிட்டு போனேன்.  அந்தடாக்டரம்மாக்கு குடும்பத்துல என்ன கஷ்ட்டகாலம்னு தெரியல. ”இந்த தீப்புண் நரம்புல தாக்கியிருக்க வாய்ப்பிருக்கு. சோ வெரி டேன்ஜர். ஒரு வாரம் அட்மிட் பண்ணனும். அந்த ரூம்ல யாரையும் அலோ பண்ண மாட்டோம். ஏன்னா பக்குவமா இதுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கணும்”னு தீக்குளிச்சுட்டு கொத்துயிரும் கொலையுருமா  வந்தவங்ககிட்ட பேசுற மாதிரியே பேசுச்சு.  தனியா ஊசி போடுற மாதிரி  கூடிட்டு போயி ஒரு  நர்ஸ் பொண்ணு  “இந்த ஆயின்மெண்ட் மட்டும்  தடவிட்டே வாங்க சரியா வரும்னு”கண்ண காமிச்சதுக்கு அப்பறம் தான் சுதாரிச்சு அந்த இடத்த விட்டு காலி பண்ணோம். அதுவும் சாதாரணமா விடமாட்டேன்னுட்டாங்க. கைல பணம் இல்ல. ஏடிஎம்ல போய் தான் எடுக்கணும்னு பணத்த பத்தி சொன்னதும் தான் விட்டாங்க (என்ன கொடும சார் இது?)


அதே ஹாஸ்ப்பிட்டல்ல தான் என்னவரின் அண்ணாவை அட்மிட் பண்ணாங்க. நைட் வெயிட்டான ஆகாரம் சாப்பிட்டது ஒத்துக்காம  இருந்த மனுஷன், செக்கப் போன இடத்துல ஐசியூ ல சேர்த்து, அந்த ஸ்கேன் இந்த ஸ்கேன்னு 2 மணி நேரத்துல பத்தாயிரம் ரூபாய் காலி....  அதுக்கு பிறகு அந்த பக்கமே தல வச்சு கூட படுக்குறதில்ல :)


தொடர்ச்சியா பயணங்கள், திருமண விஷேசங்கள்னு சுத்திட்டு இருந்ததுனால டயர்ட்டாகி  எனக்கு லேசா தல சுத்துதுன்னு   டாக்டர்கிட்ட போனா குளுகோஸ் போடணும்னு சொல்லிட்டாங்க. வீட்டு அட்ரஸ்,டெலிபோன் நம்பர்ன்னு எல்லா விவரமும் எழுதி வாங்கிட்டாங்க. ஜூஸ் பழங்கள்ன்னு சாப்பிட்டா சரியாபோகும்னு என்னவர் சொல்லியும் நா கேக்கல.  முதல் மற்றும் இரண்டாவது நாளும் ட்ரீப் ... 3 வது நாளும் எந்த மாற்றமும் இல்ல. என்னத்த இனி போகன்னு  என்னவர் சொன்ன உடன்படிக்கைக்கு  ஒத்துகிட்டு அவரையே ஸ்நாக்ஸும், ப்ரூட்ஸும் வாங்கிட்டு வர சொல்லி அவரையே சின்ன சின்னதா கட் பண்ண சொல்லி ஊஞ்சல்ல உக்கார்ந்துட்டே  டீவி பார்த்துட்டு சாப்பிட்டிட்டு  இருக்கும் போது எல்லா தல வலியும் போய்ச்சு (ஹாய்ய்ய்ய்ய்யா இப்படிபட்ட  கவனிப்புகள்,உபசரிப்புகள் வாங்குறதுக்காகவே  மறுபடியும் சிவாஜி படம் பாக்கலாமான்னு யோசிச்சேன்)அப்ப தான் டாக்டர்கிட்ட இருந்து போன் “ஹாஸ்பிட்டல்க்கு வர முடியலன்னா சொல்லுங்க. 2 நர்ஸ் அனுப்பி வைக்கிறேன்... தொடர்ந்து போட்டா தான் சரியா வரும். இல்லைன்னா பிரஷர்,தலைசுத்தல்,மயக்கம்னு ஏகப்பட்ட பிரச்சனை காமிக்கும்”னு அபாய மணி அடிச்சார். என்னிடம் வாங்கிய அட்ரஸ வச்சு வீட்டுக்கு கூட ஆள் அனுப்பிவிட்டாங்க. (அடப்பாவிகளா.... பணம் பறிக்க இப்படியுமா இறங்கி வருவீங்க?????)


ஏதோ பூச்சி கடிச்சு உடலில் தடிப்பு வர ஷாம்’மை கூடிட்டு போனேன். அங்கே ஒடனே ப்ளட் டெஸ்ட் எடுக்கணும்னு சொன்னாங்க. ப்ளட் டெஸ்ட் ரிசல்ட் என்னான்னு கேட்க போனா “டெங்கு காய்ச்சல் முதல் ஸ்டேஜ் மா.. உடனே ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கணும்”னு குண்ட போட்டார்.... (போங்கடாங்..............)


இன்னொரு பிரலமான ஹாஸ்பிட்டல வயிறு வலின்னு போன  என் உறவினர்க்கு  3 நாளா என்ன பிரச்சனைன்னே சொல்லாம  ட்ரீட்மெண்ட் பண்ணாங்க. எங்களையும் உள்ள விடல. பேசவும் விடல.  1 மணி நேரத்துக்கு ஒரு தடவ  மட்டும் வாசல்ல நின்னுட்டு இருந்த எங்கிட்ட வந்து வார்ட் பாய் பில்லை காமிப்பான். அத கட்டிட்டு வரதுக்குள்ள மறுபடியும் இன்னொரு பில். ஒரு நாளைக்கு ஒரு டாக்டர்  வருவார். அடுத்த நாள் வேற டாக்டர். புதுசா வந்தவர்க்கு விஷயத்த சொல்லி புரிய வச்சு அவர் ட்ரீட்மெண்ட் எடுக்குறதுக்குள்ள  ச்சீப் டாக்டர்கிட்ட ரிப்போர்ட் கைமாறும் (கவனிக்க cheap டாக்டர் இல்ல). தாம்பரம் ல இருக்குற ஹெட் XXXXல கண்டினீவ் பண்ணிக்கிறோம்னு சொல்லி தப்பிச்சு வரதுக்குள்ள............ (தீவிரவாதிங்க கூட பரவால்ல போல. ஹாஸ்பிட்டல்ல நுழஞ்சாலே பிணைகைதியாகிடுறோம்)


இது போல சில்லரை டாக்டர்களுக்கு மத்தியில்  லட்சத்தில் ஒரு ஆள் இல்லையா என் முதல் எதிரி ?  :)


காய்கறி வாங்க அம்மா புறப்பட்ட போது ஓசி கறிவேப்பிலை,பச்ச மொளகா,
புதினா கொத்தமல்லிய சண்ட போட்டு வாங்குறதுக்காக நானும் உடன் சென்றேன் ஹி...ஹி...ஹி.... அந்த பக்கமா தான் என் எதிரியின் பொட்டிகட சைஸ் ஹாஸ்பிட்டல் இருக்கும். எப்பவும் மக்கள் ஈ மாதிரி மொச்சுட்டு இருக்குற  அந்த இடத்தில் ஈ ஓட்டிட்டு இருந்தார் மனுஷன். முதுமையின் அடையாளங்களை சுமந்துக்கொண்டிருந்தும் என்னை பார்த்ததும் புன்னகைத்தார் (பழசுலாம் ஞாபகம் வச்சுருப்பாரோ;) 

“இப்பலாம் ஆரு வாரா? Living standards and purchasing power மாறுனதுக்கு பிறகு  சனங்களும் இங்கே வரத கேவலமா நெனைக்கிறாங்க”ன்னு வேதனபட்டார். உண்மை தான். 

எங்கே அதிகமா பணம் பறிக்கிறாங்களோ அங்கே தான் நல்ல ட்ரீட்மெண்ட் கிடைக்கும்னு  Logic இல்லாத Thought  தலைவிரிச்சாடுது இல்லையா? “காசு அதிகமா வாங்குறார்ன்னா அதுக்கு தகுந்தாப்ல ட்ரீட்மெண்ட் இல்லாமலா இருக்கும்?ன்னு மக்கள் கேட்க பழகிட்டாங்க.
எதுவும் சொல்றதுக்கு இல்ல. இந்த லோகத்துல நல்ல மனுஷாளே இல்லையோ”ன்னு பொழம்புற நாம்ம தான் அவங்கள பொழைக்க தெரியாதவர்ன்னு முத்திரை குத்தி சமுதாயத்தின் பின் தங்கிய மூலைக்கு ஒதுக்குறோம். இத பாத்து வளருகிற இளைய தலைமுறையினரும் நம்மளுக்கும் இந்த கதி வந்துடுமோன்னு பயந்து  நடைமுறையில் மக்களால் கடைபிடிக்கப்படும்  கொள்கைக்கு தங்களையும் மாத்திகிறாங்க. சோ நல்லவாளே இல்ல.... அதுனால தான் மழை கூட பெய்ய மாட்டேனுட்டு அடம்பிடிக்குதுண்டு  யாராவது இயற்கை மேல பழி போடுற மாதிரி டயலாக் விட்டா, நம்மல விட்டா எந்த அரக்கரண்டும் லோகத்துல இருக்கவே முடியாது............

, , , ,

88 comments:

 1. என் நடிப்ப எல்லாரும் நம்புறதுக்காக விதியேன்னு சிவாஜி படம்லாம் பாத்து.......பக்காவா ப்ளான் பண்ணி வெங்காயத்த நறுக்கி கண்ணுல வச்சு கண்ணீர வரவழச்சு..... உச்சி வெயில்ல கூட காஷ்மீர் ப்ளாங்கெட்க்குள்ள ஒழிஞ்சு வைப்ரேஷன் கொடுத்து, மொனங்குற சத்தம் வர வைக்க அதாண்டா இதாண்டா அருனாச்சலம் நான் தான் டான்னு சத்தம் வராம பாட்டு படிச்சு......... ஐய்யோய்யோயோ......................... ஒரு காய்ச்சல் வந்த மாதிரி நடிக்கிறதுக்கு என்னமா ப்ராக்டிஸ் பண்ண வேண்டியிருக்கு.  ....... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... வெள்ளந்தியா சொல்லி இருக்கும் விதமே அழகு!

  ReplyDelete
 2. என்னோட கமென்ட் தான் முதலில் ..ஹஹா!!

  ReplyDelete
 3. புதினா கொத்தமல்லிய சண்ட போட்டு வாங்குறதுக்காக நானும் உடன் சென்றேன் ஹி...ஹி...ஹி.... அந்த பக்கமா தான் என் எதிரியின் பொட்டிகட சைஸ் ஹாஸ்பிட்டல் இருக்கும்.//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 4. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி!

  மருத்துவத்தை வியாபரமாக்கிக் கொண்டிருக்கும் பலருக்கு மத்தியில் அதனை சேவையாக கருதுபவர்களும் உள்ளனர். ஆனால் சொற்ப எண்ணிக்கையிலேயே உள்ளனர்.

  இந்த பதிவை படித்ததும் எங்கள் ஊர் டாக்டர் தான் ஞாபகத்துக்கு வந்தார். வயதானவர் தான். நீண்ட வருடமாக மருத்துவ சேவையில் இருக்கிறார். அவர் வாங்கும் ஃபீஸ் 10 ரூபாய் மட்டுமே! இன்றும் அவர் மருத்துவமனையில் கூட்டம் நிரம்பி வழியும்.

  பகிர்வுக்கு நன்றி சகோதரி!

  ReplyDelete
 5. வர வர டாக்டர்களின் இப்படி பட்ட மனோபாவம் எரிச்சலை தான் அதிகரிக்கிறது.பல்லாவரத்தில் எந்த ஆஸ்பத்திரி எனக்கு மட்டும் சொல்லுங்க..ஏனெனில்,அங்கு தான் குடி போக போகிறேன்.உஷாராக இருப்போம் இல்லையா..

  ReplyDelete
 6. ஆமினம்மா,

  அஸ்ஸலாமு அலைக்கும் வ‌ர‌ஹ்

  ர‌ம‌தான் முபார‌க்.

  ஆமினம்மா வழியே தனி வழி.
  இது ஒரு அலாதியான தனி பாணி

  யாவரும் பதிவை சிரித்துக்கொண்டு படிக்கும்பொழுதே ஊசிமுனை காதுக்குள்ளே ஒட்டகத்தை ஆமினா நுழைத்து விட்ட‌து.

  வாழ்த்துக்க‌ள். வ‌ள‌ருங்க‌ள்.

  வாஞ்சையுட‌ன் வாஞ்ஜூர்

  .

  ReplyDelete
 7. 2 நர்ஸ் அனுப்பி வைக்கிறேன்... தொடர்ந்து போட்டா தான் சரியா வரும். இல்லைன்னா பிரஷர்,தலைசுத்தல்,மயக்கம்னு ஏகப்பட்ட பிரச்சனை காமிக்கும்”னு அபாய மணி அடிச்சார். என்னிடம் வாங்கிய அட்ரஸ வச்சு வீட்டுக்கு கூட ஆள் அனுப்பிவிட்டாங்க. (அடப்பாவிகளா.... பணம் பறிக்க இப்படியுமா இறங்கி வருவீங்க?????)

  hahaaa


  நல்ல படங்களுடன்
  அருமையான கதை...
  பதிவுக்கு வாழ்த்துக்கள்..

  http://sempakam.blogspot.com/

  ReplyDelete
 8. மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்?

  மருத்துவர்களுக்கு நம்மிடையே எப்போதும் தனி மதிப்பு உண்டு.உயிர் காக்கும் கடவுள் அவர்கள்.

  பேராசையும் சுயநலமும் பெருகிவிட்ட இன்றைய சூழலில் அவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?

  பணம் சம்பாதிக்க என்னென்ன வித்தைகளை கையாளுகிறார்கள்?

  பத்ம பூஷண் விருது பெற்ற பேராசிரிய புகழ்பெற்றர் பி.எம்.ஹெக்டேவின் பகிர்வை நண்பர் ஒருவர் இ-மெயிலில் அனுப்பியுள்ளார்.

  மருத்துவர்கள்,மருத்துவமனைகளுடன் சாட் செய்து தான் அறிந்து கொண்டதை தருகிறார்.

  1. பரிசோதனைகளில் 40-60 சதவீத கமிஷன்.

  உடல்நிலை சரியில்லாமல் சென்றவுடன் ரத்தம்,சிறுநீர் பரிசோதனை,ஸ்கேன் செய்ய வைப்பதில் மட்டும் மேற்கண்ட தொகை.500 ரூபாய் பரிசோதனைக்கு கொடுத்தால் பாதி மருத்துவருக்கு சென்றுவிடும்.

  இதில் அவசியமானதும் உண்டு, சில நேரங்களில் கமிஷனுக்காக தேவையில்லாத டெஸ்டுகளும் இருக்கும்.

  2. பரிந்துரை செய்வதில் 30-40 சதவீதம்.

  சில நேரங்களில் சிறப்பு மருத்துவர்களுக்கு பரிந்துரை செய்வார்கள்.

  உதாரணமாக தைராய்டு தொடர்பான நோயென்றால் அதற்கான மருத்துவருக்கு பரிந்துரைத்தால் ஸ்பெஷலிஸ்ட்டிடம் நீங்கள் செலவு செய்யும் பணத்தில் அனுப்பி வைக்கும் மருத்துவருக்கு 30-40 சதவீதம் வந்து சேர்ந்துவிடும்.

  3. மருத்துவமனை கட்டணத்தில் 30-40 சதவீதம்.

  மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும்போது உங்களிடம் வசூல் செய்யும் கட்டணங்களில் மேற்கண்ட தொகை குறிப்பிட்ட மருத்துவருக்கு கிடைக்கும்.

  4. நெஞ்சுவலி என்று போனால்,

  சாதாரண வலியாக இருக்கும்.அனைத்து பரிசோதனை,சிறப்பு மருத்துவர்கள் அழைப்பது என்று பணம் பிடுங்குவது. நான்கு நாட்களுக்கு அட்மிட் செய்து கறந்து விடுவார்கள்.

  மேலும் அவசர சிகிச்சை பிரிவில் அட்மிட் செய்து விடுவார்கள்.ஆனால் சுத்தமில்லாத , விஷயம் தெரியாத பத்தாம் வகுப்பு படித்தவன் நர்சிங் வேலை செய்வார்கள்.

  குறைந்த சம்பளத்திற்கு பணியாட்கள் வைத்துக்கொள்வதில் லாபம்.

  தேவையில்லாமல் சிசேரியன் ஆபரேஷன் செய்வது,

  சினிமாவில் வருவது போல பிணத்திற்கு மருத்துவம் பார்ப்பது ,

  விளம்பரம் கொடுத்து காஸ்மெடிக் சர்ஜரி செய்வது,

  பணத்திற்காக பெரிய மருத்துவமனைகளுக்கு பரிந்துரைப்பது போன்றவை மற்ற வழிகள்.

  மருந்துகடை கமிஷனை விட்டுவிட்டார் போல தோன்றுகிறது.

  சேவை மனப்பான்மையுள்ள நல்ல மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

  இப்போது படித்து முடித்து வந்தவுடன் நிறைய கடன்வாங்கி நர்சிங்ஹோம் கட்டி விடுகிறார்கள்.கடனை அடைக்க அப்பாவிகள் கிடைத்து விடுகிறார்கள்.

  ஊழலில் எத்தனையோ வகை இருக்கிறது .அதில் இது ஒரு வகை.

  இருபது ரூபாய்க்கு,முப்பது ரூபாய்க்கு கிராமங்களில் சென்று மருத்துவம் செய்யும் எளிய மருத்துவர்களும் இருக்கிறார்கள். நல்ல டாக்டர்கள் கிடைத்துவிட்டால் நீங்கள் அதிர்ஷ்டசாலி!
  *** thanks cfa

  SOURCE: http://azhkadalkalangiyam.blogspot.com/2011/08/blog-post_8095.html

  THANKS TO : ஆழ்கடல் களஞ்சியம்

  ReplyDelete
 9. இத பாத்து வளருகிற இளைய தலைமுறையினரும் நம்மளுக்கும் இந்த கதி வந்துடுமோன்னு பயந்து நடைமுறையில் மக்களால் கடைபிடிக்கப்படும் கொள்கைக்கு தங்களையும் மாத்திகிறாங்க.//
  உண்மை..

  ReplyDelete
 10. உண்மைதான். தன்னுடைய மருத்துவ தொழிலை புனிதமாக கருதும் மருத்துவர்கள் இப்போது அரிதாகி விட்டனர்.

  மருத்துவச்செலவு என்றாலே, குடும்பத்தில் கிட்டத்தட்ட மரண கலக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. நோயை விட செலவு பயம் தான் சாமானியர்களை மூச்சு திணற வைக்கிறது.

  செலவு செய்தாலும் நீங்கள் சொன்ன மாதிரி "எதிரி" டாக்டரின் கவனிப்பு இப்போதெல்லாம் கொஞ்சம் கூட கிடைப்பதில்லை.

  ReplyDelete
 11. //இந்த லோகத்துல நல்ல மனுஷாளே இல்லையோ”ன்னு பொழம்புற நாம்ம தான் அவங்கள பொழைக்க தெரியாதவர்ன்னு முத்திரை குத்தி சமுதாயத்தின் பின் தங்கிய மூலைக்கு ஒதுக்குறோம்.//

  உண்மை தான் சகோ ..ரொம்ப உண்மை...
  பாருங்க எனக்கு கூட யாரும் நோபல் பரிசு தர மாட்டேன்குறாங்க ..ஹி ஹி

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள் இது ஒரு விழிப்புணர்வு பதிவு ..
  அதை நீங்க சொன்ன விதமும் அருமை ...
  வாழ்க உங்கள் பணி

  ReplyDelete
 13. ஆனா மச்சானை நினைத்தால் தான் ரொம்ப பாவமா இருக்கு ... இவ்வளவு ஏமாளியா இருக்காரே ..சகோ நீங்களே சொல்லுங்க அவரு பாவம் தானே ஹி ஹி

  ReplyDelete
 14. // எங்கே அதிகமா பணம் பறிக்கிறாங்களோ அங்கே தான் நல்ல ட்ரீட்மெண்ட் கிடைக்கும்னு Logic இல்லாத Thought தலைவிரிச்சாடுது இல்லையா?//கரெக்டா சொன்னீங்க ஆமினா.மருத்துவத்தில் மட்டுமல்ல அனைத்திலுமே நம் மக்களின் கண்ணோட்டம் அப்படித்தான்.

  ஒரு சாவு வீட்டில் வைத்து”இவரைக்காட்டிட்டு இருந்த ஹாஸ்பிடலை விட வேற நல்ல ஹாஸ்பிடலில் காட்டி நல்ல மருத்துவம் பார்த்தால் பிழைத்து இருப்பாராக்கும்”

  ஒரு மீன்மார்க்கெட்டில் மீன் வாங்குபவர் தன் மனடதிற்குள்ளாக’ விலை ரொம்ப குறைச்சலாக சொல்லுறானே .நொந்து போன மீனா இருக்குமோ’

  இதெல்லாம் நம் மக்களிடையே சகஜம்.

  ReplyDelete
 15. அஸ்ஸலாமு அழைக்கும்

  ஆமினா பதிவில் ஸ்கேன் சென்டரையும் சேர்த்து எழுதி
  இருக்கலாம்.இரண்டுபேரும் கூட்டணி வைத்து மக்கள் பணத்தை சுரண்டுகிறார்கள்.

  சில நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.எங்கள் ஏரியாவில்
  நிச்சானி ஹாஸ்பிடல் டாக்டர் ஹரிலால் அவர்கள் {வயது 70} நேர்மையான பீஸ்
  வாங்குவார்கள். அவரால் எத்தனையோ மக்கள் பயன் அடைகிறார்கள்.எப்பவும் கூட்டம்
  அலைமோதும்.

  அவருக்கு நீண்ட ஆயுளை கொடுத்து, அவர் சேவை இன்னும்
  தொடர அல்லாஹ் நாடுவானாக!

  ப்ரியா நர்சிங்க்ஹோம் சொத்தை காலி பண்ணி விடுவார்.


  விழிப்புணர்வு பதிவு ஆமினா. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. இது ஒரு விழிப்புணர்வு பதிவு :)

  வாழ்த்துக்கள் அருமை ...

  வாழ்க உங்கள் பணி

  :)

  ReplyDelete
 17. //“இப்பலாம் ஆரு வாரா? Living standards and purchasing power மாறுனதுக்கு பிறகு சனங்களும் இங்கே வரத கேவலமா நெனைக்கிறாங்க”ன்னு வேதனபட்டார். உண்மை தான்//

  பாருங்க, நீங்களே இப்படி ஒரு நல்ல டாக்டரைத் தெரிஞ்சிருந்தும், அவர மறந்துட்டு, வேற ஆஸ்பத்திருகளுக்குத்தானே போயிருக்கீங்க?

  ReplyDelete
 18. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

  என்ன எழுத்துடா இது

  அழகான என் இரம்நாட் பாஷையில் ம்ம்
  முடியால

  என் தங்கை பெரிய ஜர்ணலிஸ்ட் (அதாங்க பெரிய எழுத்தாளர்) என்று உரக்க கத்தனும் போல இருக்கு

  ReplyDelete
 19. பகிர்வுக்கு நன்றிங்க படம் கவிதை பேசுகிறது

  ReplyDelete
 20. உங்கள் வாழ்வை மேம்பட வைத்த...முதிய வைத்தியர் ஐயாவின் மிரட்டலுடன் கூடிய பள்ளிக்கு அனுப்பி வைக்கும் சம்பவம் சுவாரஸ்யம்...

  தனியார் ஹாஸ்பிட்டல் பண வசூலிப்பு: வேதனையான விடயம், இவற்றுக்கு அரசு கடுமையான சட்டங்களை அமுல்படுத்தி கன்சல்டன் சேர்விசுக்கு குறிப்பிட்ட தொகை என்று நிர்ணயம் செய்ய வேண்டும்.

  அவசர சிகிச்சையின் போது பண வசூலிப்பு: வேதனையான விடயம்,

  அருமையாக உபசரிக்கக் கூடியவர்கள் அருகே இருந்தால் நோய் வராது என்பதற்கு....பழங்கள் கொடுத்து கவனித்த விதம் சாட்சி,

  தீவிரவாதிங்களை விட..ஹாஸ்பிட்டல் தொல்லை...
  சம்மட்டியால் பணம் அதிகமாக வசூலிப்போருக்கு அடிப்பது போன்ற உணர்வினைக் கொடுக்கக் கூடிய பஞ்ச்.

  ReplyDelete
 21. @சித்ரா
  //ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... வெள்ளந்தியா சொல்லி இருக்கும் விதமே அழகு!//

  மொதல்ல நீங்க தான் வட சுட்டு சாப்பிட்டீங்களா???

  நன்றி சித்ரா

  ReplyDelete
 22. @கீதா
  //என்னோட கமென்ட் தான் முதலில் ..ஹஹா!!//
  இல்லையே...இல்லையே.....
  ஹா...ஹா....ஹா....

  ReplyDelete
 23. @மனோ
  //புதினா கொத்தமல்லிய சண்ட போட்டு வாங்குறதுக்காக நானும் உடன் சென்றேன் ஹி...ஹி...ஹி.... அந்த பக்கமா தான் என் எதிரியின் பொட்டிகட சைஸ் ஹாஸ்பிட்டல் இருக்கும்.//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....//

  பொகச்சல் இருமல் வந்திட போகுது சகோ..... அவ்வ்வ்வ்வ்வ்வ்......

  ReplyDelete
 24. @சிபி
  //wat a tittle!!!!!//
  after come to your blog.......!!!!!!!!!!
  ஹி...ஹி...ஹி....

  ReplyDelete
 25. @அப்துல்பாசித்
  அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி!

  மருத்துவத்தை வியாபரமாக்கிக் கொண்டிருக்கும் பலருக்கு மத்தியில் அதனை சேவையாக கருதுபவர்களும் உள்ளனர். ஆனால் சொற்ப எண்ணிக்கையிலேயே உள்ளனர்.

  இந்த பதிவை படித்ததும் எங்கள் ஊர் டாக்டர் தான் ஞாபகத்துக்கு வந்தார். வயதானவர் தான். நீண்ட வருடமாக மருத்துவ சேவையில் இருக்கிறார். அவர் வாங்கும் ஃபீஸ் 10 ரூபாய் மட்டுமே! இன்றும் அவர் மருத்துவமனையில் கூட்டம் நிரம்பி வழியும்.

  பகிர்வுக்கு நன்றி சகோதரி!//

  வ அலைக்கும் சலாம் வரஹ்...
  அத்தி பூத்தாற் போலன்னு சொல்லுவாங்களே... அப்படி தான் எங்கேயாவது தேடி கண்டுபிடிக்க வேண்டியதாயிருக்கு. ஊர்ல 100 டாக்டர் இருந்தாலும் நல்ல டாக்டர்ன்னு யாராவது கேட்டா விரல் விட்டு எண்ணினாலும் மீதி விரல்கள் அனாதையாய் மடங்காமல் நீண்டுக்கொண்டிருக்கும் அவல நிலையில் உள்ளோம் :(

  வருகைக்கு நன்றி சகோ

  ReplyDelete
 26. @அமுதா
  //வர வர டாக்டர்களின் இப்படி பட்ட மனோபாவம் எரிச்சலை தான் அதிகரிக்கிறது.பல்லாவரத்தில் எந்த ஆஸ்பத்திரி எனக்கு மட்டும் சொல்லுங்க..ஏனெனில்,அங்கு தான் குடி போக போகிறேன்.உஷாராக இருப்போம் இல்லையா..//

  பல்லாவரத்துக்கு வந்த பிறகு மறுபடியும் இந்த பதிவ படிங்க. உங்களுக்கு கண்டிப்பா எந்த ஹாஸ்பிட்டல்ன்னு புரியும். இல்லைன்னா வந்த பிறகு சொல்லியனுப்புங்க. புட்டு புட்டு வைக்கிறேன் :)

  ReplyDelete
 27. @வாஞ்சூர் அப்பா

  வ அலைக்கும் சலம் வரஹ்...

  உங்களின் பணி என்னை வியக்க வைக்கிறது. மென்மேலும் உங்கள் பணி தொடரவும் நீங்கள் நலமுடன் வாழவும் என்னாளும் என் பிரார்த்தனைகள் உங்களுக்காகவே.....

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் மனமார்ந்த ரமலான் நல்வாழ்த்துக்கள் அப்பா.

  ReplyDelete
 28. @விடிவெள்ளி
  //hahaaa


  நல்ல படங்களுடன்
  அருமையான கதை...
  பதிவுக்கு வாழ்த்துக்கள்..//

  :-)
  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 29. ஹா...
  ஹா...
  ஹா...
  ஹா... ஹா... ஹா.... ஹாஹாஹ...

  ReplyDelete
 30. நல்ல கட்டுரை அறிய தந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்
  //மருந்துகடை கமிஷனை விட்டுவிட்டார் போல தோன்றுகிறது.
  //
  இருக்குறதுலையே இதுல தான் அதிகமா பணம் பறிப்பாங்கன்னு நெனைக்கிறேன்.

  ஷாம்க்கு சளின்னு கூடிட்டு போன போது மருந்து மாத்திரை எழுதி கொடுத்து அனுப்புனார் டாக்டர். உறவினர் வீட்டுக்கு போன போது தவறுதலாக விட்டுவிட்டேன். மறுநாள் சீட் கொண்டு போனா கொடுக்கல....... மறுபடியும் 500 ரூபாய் தண்டம் கட்டி..........ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா...........இந்த கொசு தொல்ல தாங்க முடியல :(

  ReplyDelete
 31. @வேடந்தாங்கல் கருன்
  //இத பாத்து வளருகிற இளைய தலைமுறையினரும் நம்மளுக்கும் இந்த கதி வந்துடுமோன்னு பயந்து நடைமுறையில் மக்களால் கடைபிடிக்கப்படும் கொள்கைக்கு தங்களையும் மாத்திகிறாங்க.//
  உண்மை..//
  :-)
  நன்றி கருன்
  உங்கள பத்தி போன பதிவுல ஒருத்தர் ரொம்ப தப்பா பேசுனாரு பாத்தீங்களா???? விடாதீங்க... விடாதீங்க :))

  ReplyDelete
 32. @பாரத் பாரதி
  //செலவு செய்தாலும் நீங்கள் சொன்ன மாதிரி "எதிரி" டாக்டரின் கவனிப்பு இப்போதெல்லாம் கொஞ்சம் கூட கிடைப்பதில்லை.//
  ரொம்ப வேதனையான விஷயம் தான் பாரதி.....
  :(

  ReplyDelete
 33. @ரியாஸ் அஹ்மத்
  //
  உண்மை தான் சகோ ..ரொம்ப உண்மை...
  பாருங்க எனக்கு கூட யாரும் நோபல் பரிசு தர மாட்டேன்குறாங்க ..ஹி ஹி//
  அட நீங்க வேற....
  இந்த பதிவுக்குலாம் ஆஸ்கர் தாங்கன்னு சண்ட போட்டேன். குடுக்கல. அன்னா கூட உண்ணாவிரதம் இருந்தாவது வாங்கிடலாம்னு ப்ளான் பண்ணியிருக்கேன் சகோ :)

  ReplyDelete
 34. @விக்கியுலகம்
  //நச்!//
  :-)
  நன்றி சகோ

  ReplyDelete
 35. @ரியாஸ் அஹ்மத்
  //வாழ்த்துக்கள் இது ஒரு விழிப்புணர்வு பதிவு ..//
  யப்பா... எல்லாரும் கேலி பண்றாங்க..... பாருங்க! ப்ரபாதாமு கூட ஸ்மைலி போட்டுருக்காங்க!!!
  //வாழ்க உங்கள் பணி//
  இருக்கட்டும் இருக்கட்டும்
  உங்க தலைமைல கோவைல பாராட்டு விழா மட்டும் நடத்துடுங்க.. ஹி..ஹி...ஹி...

  ReplyDelete
 36. @ரியாஸ் அஹ்மத்
  //ஆனா மச்சானை நினைத்தால் தான் ரொம்ப பாவமா இருக்கு ... இவ்வளவு ஏமாளியா இருக்காரே ..சகோ நீங்களே சொல்லுங்க அவரு பாவம் தானே ஹி ஹி//
  உங்க மச்சான் ரொம்ப வெவரம். 3 நாள்லையே பர்ஸ் காலி. இவ ஹாஸ்பிட்டல் விட்டு வரதுக்குள்ள சொத்தையே வித்திடுவாரோன்னு உஷாரா அப்பவே வேணாம்னு சொன்னார் :)
  நம்மலாம் யார தான் நல்லவங்கன்னு மொத தடவ ஒத்துக்கிட்டுருக்கோம்? ஹி..ஹி...ஹி....

  ReplyDelete
 37. @ஸாதிகா
  /// எங்கே அதிகமா பணம் பறிக்கிறாங்களோ அங்கே தான் நல்ல ட்ரீட்மெண்ட் கிடைக்கும்னு Logic இல்லாத Thought தலைவிரிச்சாடுது இல்லையா?//கரெக்டா சொன்னீங்க ஆமினா.மருத்துவத்தில் மட்டுமல்ல அனைத்திலுமே நம் மக்களின் கண்ணோட்டம் அப்படித்தான்.

  ஒரு சாவு வீட்டில் வைத்து”இவரைக்காட்டிட்டு இருந்த ஹாஸ்பிடலை விட வேற நல்ல ஹாஸ்பிடலில் காட்டி நல்ல மருத்துவம் பார்த்தால் பிழைத்து இருப்பாராக்கும்”

  ஒரு மீன்மார்க்கெட்டில் மீன் வாங்குபவர் தன் மனடதிற்குள்ளாக’ விலை ரொம்ப குறைச்சலாக சொல்லுறானே .நொந்து போன மீனா இருக்குமோ’

  இதெல்லாம் நம் மக்களிடையே சகஜம்.//

  உண்மை தான் அக்கா....
  தானம் கொடுத்த மாட்டோட பல்ல பிடிச்சு பாத்தா??? தானம் கொடுகுறவங்க காசு கேட்க ஆரம்பிச்சுடுவாங்களே.... நல்லது செய்யும் போது ஆராய்ச்சி பண்றதுனால நல்லவங்களையும் கெட்டவங்களாக்கிவிடுறோம் :(

  ReplyDelete
 38. @ஆயிஷா
  அஸ்ஸலாமு அழைக்கும்

  ஆமினா பதிவில் ஸ்கேன் சென்டரையும் சேர்த்து எழுதி
  இருக்கலாம்.இரண்டுபேரும் கூட்டணி வைத்து மக்கள் பணத்தை சுரண்டுகிறார்கள்.//
  வ அலைக்கும் சலாம் வரஹ்....
  ஆஹா.... அதையும் கொஞ்சம் வம்பிழுத்துருக்கலாம் இல்லையா?
  //சில நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.எங்கள் ஏரியாவில்
  நிச்சானி ஹாஸ்பிடல் டாக்டர் ஹரிலால் அவர்கள் {வயது 70} நேர்மையான பீஸ்
  வாங்குவார்கள். அவரால் எத்தனையோ மக்கள் பயன் அடைகிறார்கள்.எப்பவும் கூட்டம்
  அலைமோதும்.//
  இப்படிபட்ட ஜடங்களின் மத்தியில் நல்லவர்களும் இருப்பது மனதிற்கு ஆறுதலாக உள்ளது. அல்லாஹ் மேலும் அவருக்கு நீண்ட ஆயுளையும் உதவி செய்யும் நிறந்த மனதையும் வழங்குவானாக ஆமீன்....
  //ப்ரியா நர்சிங்க்ஹோம் சொத்தை காலி பண்ணி விடுவார்.
  விழிப்புணர்வு பதிவு ஆமினா. வாழ்த்துக்கள்.//
  நான்கூட பேரு போட பயந்துட்டு என்னன்னமோ போட்டு வச்சுருக்கேன்... உங்களுக்கு ரொம்ப தான் தகிரியம் :)

  ReplyDelete
 39. @ப்ரபாதாமு
  //இது ஒரு விழிப்புணர்வு பதிவு :)

  வாழ்த்துக்கள் அருமை ...

  வாழ்க உங்கள் பணி

  :)//
  உள்குத்து நிறையா இருக்கே........... என்னைய வச்சு காமெடி கீமிடி???????? அவ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 40. @ஹுசைனம்மா
  //பாருங்க, நீங்களே இப்படி ஒரு நல்ல டாக்டரைத் தெரிஞ்சிருந்தும், அவர மறந்துட்டு, வேற ஆஸ்பத்திருகளுக்குத்தானே போயிருக்கீங்க?//
  ஹுசைனம்மா
  மேலே சொன்ன அனுபவம்லாம் பாழா போன சென்னைல நடந்தது....
  :-)

  ReplyDelete
 41. @ஹைதரலி அண்ணா
  //அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

  என்ன எழுத்துடா இது

  அழகான என் இரம்நாட் பாஷையில் ம்ம்
  முடியால//
  உங்க தங்கையா இருந்துட்டு உங்க அளவுல 1 %ஆவது எழுதலன்னா எப்படிண்ணா?அப்பறம் வரலாறு,சைன்ஸ்,மேக்ஸ் நம்மல தப்பா பேசிடாது? ஹி...ஹி...ஹி....
  //என் தங்கை பெரிய ஜர்ணலிஸ்ட் (அதாங்க பெரிய எழுத்தாளர்) என்று உரக்க கத்தனும் போல இருக்கு////
  ரஜின் அண்ணா கவனிக்க...... :) :) :)

  ReplyDelete
 42. @அரசன்
  //பகிர்வுக்கு நன்றிங்க படம் கவிதை பேசுகிறது//
  மிக்க நன்றி சகோ....

  ReplyDelete
 43. @நிரூபன்
  //
  அருமையாக உபசரிக்கக் கூடியவர்கள் அருகே இருந்தால் நோய் வராது என்பதற்கு....பழங்கள் கொடுத்து கவனித்த விதம் சாட்சி, //
  இந்த பதிவு படிச்சு பார்த்துட்டு இனி என்னதான் நடிச்சாலும் ஏமாற மாட்டேன்னு மிரட்டல் :)
  மிக்க நன்றி சகோ நிரூ

  ReplyDelete
 44. @சே குமார்
  //ஹா...
  ஹா...
  ஹா...
  ஹா... ஹா... ஹா.... ஹாஹாஹ... //
  ஹி...ஹி...
  ஹீ...ஹீ....
  ஹீ....ஹீ...ஹீ...........

  இருவரும் கீழ்பாக்கம் போக கூடிவர்கள் :)

  ReplyDelete
 45. கடைசியா சொன்ன விடயம் தான் உண்மை...இவற்றை மக்களாகவே புரிந்து கொள்ள வேண்டும்...

  நாலு கப் டீ......(கொஞ்சம் குடிச்சு பாருங்கோ)

  ReplyDelete
 46. விழிப்புணர்வு + சுவாரஸ்யம் = என்ன பொழப்புடா இது...

  Keep it up ஆமினா...

  ReplyDelete
 47. நடைமுறை டாக்டர்களின் நடவடிக்
  கைகளை க்கூட நகைச்சுவை ததும்ப
  சொல்லி இருக்குங்க ஆமி. உண்மை
  நிலையும் அதேதான். ஒருவகையில்
  விழிப்புணர்வு பதிவுன்னு கூட சொல்லலாம். நிறய காசு பறிக்கிரவங்கதான் நல்ல டாக்டர் என்று
  நம்புவதை நிறுத்த வேண்டும்.

  ReplyDelete
 48. //ரஜின் அண்ணா கவனிக்க...... :) :) :)//

  ம்ம் நோட்டட்...

  அம்மா ஆடு படிக்கிற வயசுலையே இப்டியா?? சகோ..உங்கள நெனச்ச ரொம்ப பெரும்மையா இருக்கும்மா பெரும்மையா இருக்கு(சிவாஜி ஸ்டைல்ல)

  இல்லாத களவாணித்தனத்தை எல்லா செஞ்சுட்டு:) இப்டி காமெடிய பதிவு போட்டுட்டா நம்ம மக்கள்ஸ் எல்லாத்தையும் மறந்துட்டு..இப்டி ஆகா ஓகோங்கிராங்களே!!...

  அதுசரி தமிழ்நாட்டு அரசியலே இத நம்பித்தானே ஓடிட்டு இருக்கு...u r qualified for tamilnadu politics..

  ஓகே..ஊரோட ஒத்து வாழ்வொம்.,..

  எங்க ஊர்லையும் இப்படி ஒரு டாக்டர் இருந்தார் சகோ..ஆரம்பத்துல உங்க எதிரி மாதிரித்தான் இருந்தார்.. படிச்சுட்டு எங்க ஊர்லதா முதல்முதலா வேலை ஆரம்பிச்சார்...

  ஆனா கொஞ்ச காலத்துலையே மதுரைல போய் செட்டில் ஆகி..ஒரு டாக்டரையே கல்யாணம் பண்ணி..
  அப்ரம் ரெண்டு பேரும் சேந்து..ஒரே ஹாஸ்பிடல் வச்சு,இப்போ மதுரைல பலமாடி கட்டிடத்துல மருத்துவமனை கட்டி...ஓஹோன்னு பிஸ்னஸ் போயிட்டு இருக்கு,,,

  பொழைக்க தெரிஞ்ச மனுஷன்,,

  உங்க எதிரிக்கு எதாவது டிப்ஸ் சொல்லிக்கொடுத்து தேத்தக்கூடாதா..
  ----------------------------------
  ஆகா இவக ஆடுரதையும்,இவக வாசிக்கிறதையும் பாக்கும் போது தில்லான மோஹனாம்பாள் சிவாஜி பத்மினி மாதிரியே இருக்கு..

  கவுண்டர்:டேய் நில்லு,,இவன பாத்தா சிவாஜி மாதிரி இருக்கா.எண்டா நீயெல்லா முன்னபின்ன சிவாஜிய பாத்து இருக்கியா?

  டேய் இங்க வா?? ஏ! ஒனக்கு ஏ இந்த வேல...

  செந்தில்: இல்லன்னே ஒரு வெளம்பரோ....
  From கரகாட்டகாரன்,,,
  -----------------------------
  இந்தப் படம்,இந்த காமெடி...இந்தப்பதிவு..அதுக்கு வர்ர பின்னூட்டம்...
  ரெண்டும் எங்கையோ..டேலி ஆகுதுல்ல சகோ...
  ஹ்க்கும் உங்க கிட்ட கேட்டுட்டு விட்டுட்டா பதில அப்டி நமக்கே திருப்பி விட்டுடுவீங்க...:(

  ஸோ..”ஆமா டேலி ஆகுது”....
  நானே பதில சொல்லிடுறேன்,,:)


  சுவாரஸ்யம் குறையாம எழுதுரதுல கைதேறிவிட்டீர்கள்...
  (அட கடைசில நானும் நம்ம மக்கள்ஸ் மாதிரிதானா??)

  அன்புடன்
  ரஜின்

  ReplyDelete
 49. இந்தப் பதிவை படித்தாவது மருத்துவத் தொழிலின் மகத்துவத்தை உணர வேண்டும்

  ReplyDelete
 50. /சின்னதா சளின்னு போனா கூட 500 ரூபாய் //

  சளி போனா எதுக்கு 500 ரூபா. சளி இருந்தாதான பீஸ் கேக்கணும்.

  ReplyDelete
 51. //சோ வெரி டேன்ஜர். //

  சோ நல்ல நடிகர். ஆனா அரசியல்ல வெரி டேஞ்சர் ஆன ஆளுதான்.

  ReplyDelete
 52. வாழ்த்துக்க‌ள். வ‌ள‌ருங்க‌ள்.

  ReplyDelete
 53. டாக்டர பத்தி வாழைப்பழைத்துல ஊசி ஏத்துற மாதிரி லாவகமாக சொல்லிடீங்க... இந்த பதிவை எழுதின தொடக்கம் சூப்பர் காமெடியா ஆரம்பிச்சு வசூல்ராஜாக்களைப்பற்றி பியித்து மேய்ந்துவிட்டஈர்கள்...அந்த மருத்துவர்களை ஏதோதோ வந்தீங்க முழுசா திட்டிருங்க .. //உடனே ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கணும்”னு குண்ட போட்டார்.... (போங்கடாங்..............)// ஹி ஹி ஹி

  ReplyDelete
 54. @ஆகுலன்
  //கடைசியா சொன்ன விடயம் தான் உண்மை...இவற்றை மக்களாகவே புரிந்து கொள்ள வேண்டும்...//
  ஆரம்பத்துல இருந்து சொன்ன எல்லா விஷயமும் உண்மை தான் சகோ :-)

  வருகைக்கு நன்றிகள் பல!!!!

  ReplyDelete
 55. @ரெவெரி
  //விழிப்புணர்வு + சுவாரஸ்யம் = என்ன பொழப்புடா இது...

  Keep it up ஆமினா... //
  :-)
  மிக்க நன்றி சகோ
  இன்னைக்கு மேக்ஸ் எக்ஸாம் அட்டன் பண்ணீங்களா? ஹி..ஹி...ஹி..

  ReplyDelete
 56. @லெட்சுமி மாமி
  //நடைமுறை டாக்டர்களின் நடவடிக்
  கைகளை க்கூட நகைச்சுவை ததும்ப
  சொல்லி இருக்குங்க ஆமி. உண்மை
  நிலையும் அதேதான். ஒருவகையில்
  விழிப்புணர்வு பதிவுன்னு கூட சொல்லலாம். நிறய காசு பறிக்கிரவங்கதான் நல்ல டாக்டர் என்று
  நம்புவதை நிறுத்த வேண்டும். //
  உண்மை தான் மாமி.... தப்பு செய்யும் டாக்டர்களை புறக்கணிக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும். இல்லைன்னா மேல மேல தப்பு பண்ணிட்டே போவாங்கோ...!!! :_(

  ReplyDelete
 57. @சகோ ரஜின்
  //அம்மா ஆடு படிக்கிற வயசுலையே இப்டியா??//
  எங்கம்மா ஆடு படிக்கிற வயசுல இல்ல. நான் அம்மா,ஆடு,இலை,ஈட்டின்னு படிக்கிற வயசுல.... அய்யோ...ஐய்யோ........

  //.இப்டி ஆகா ஓகோங்கிராங்களே!!...//
  யாரு சொன்னா? எல்லாரும் அழுதுட்டி இருக்கும் போது அவங்களாம் ஆஹா ஓஹோன்னு சொன்னதா நீங்க சொன்னது கண்டு பதிவுலகமே ஆடிப்போயுள்ளது.... இதனால பல பேர் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்காங்களாம். மான நஷ்ட்ட வழக்கு பதிவு பண்ண போறதா சங்கத்துல முடிவு பண்ணியிருக்காங்க!!!!

  //ஆனா கொஞ்ச காலத்துலையே மதுரைல போய் செட்டில் ஆகி..//
  சகோதரர் இருந்தா எப்படி ஊர்ல பொழப்ப நடத்த முடியும் அல்லது உருப்பட முடியும்ன்னு ஓடிட்டாரோ என்னவோ?

  //ரெண்டும் எங்கையோ..டேலி ஆகுதுல்ல சகோ...//
  நான் tally படிச்சதில்ல சகோ :(

  //கேட்டுட்டு விட்டுட்டா //
  கேட்டுட்டு ஏன் விடுறீங்க????? கேள்விய அப்படியே புடிச்சு வச்சுகோங்க. இல்ல பக்கத்துல ஒரு மேஜைல உக்கார வைங்க :)

  //கைதேறிவிட்டீர்கள்...//
  அப்ப இதுக்கு முன்னாடி பெயில் ஆயிட்டேன்னு சொல்றீங்களா? இருங்க இருங்க.... அபிராமத்துக்கு ஆட்டோ அனுப்பி வைக்கிறேன்!!!
  அது சரி...
  எனக்கு தான் கைல அடிபடலையே... அப்ப ஏன் கை தேறிடுச்சுன்னு சொல்றீங்கோ.... விளக்கம்ஸ் ப்ளீஸ்!!!!!!!!!1

  ReplyDelete
 58. @சத்யா
  //இந்தப் பதிவை படித்தாவது மருத்துவத் தொழிலின் மகத்துவத்தை உணர வேண்டும் //
  :-)
  மிக்க நன்றிங்க சகோ

  ReplyDelete
 59. @சிவகுமார்
  //சளின்னு போனா//
  //சளி போனா//

  மீண்டும் ஒரு முறை படிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் (எங்க கிட்டேயாவா??? :)

  ReplyDelete
 60. @சிவகுமார்
  //சோ நல்ல நடிகர். ஆனா அரசியல்ல வெரி டேஞ்சர் ஆன ஆளுதான். //
  நடிகர் என குறிப்பிட்டது பல டைரக்டர்கள் வாசல்ல காத்திருந்து கால்ஷூட் வாங்க தவியாதவிச்சுட்டு இருக்குற,ஹாலிவுட் படங்கள்ல நடிச்சுட்டு, மைக்கல் ஜாக்சன் மாதிரியே ஆடிட்டு, அமெரிக்கா தேர்தல்ல நிக்க போற தலதளபதி சிவகுமார தானே சொல்றீங்க!!!!

  ReplyDelete
 61. @அந்நியன்
  //வாழ்த்துக்க‌ள். வ‌ள‌ருங்க‌ள். //
  ஏன்........ என்னாத்துக்கு..........ஏன் இந்த கொலவெறி..........நல்லாதேனே இருந்தீங்க?????? எந்த காத்துகருப்பு உங்கள அடிச்சது.......

  எனிவே நன்றி சகோ

  ReplyDelete
 62. @மாய உலகம்
  //அந்த மருத்துவர்களை ஏதோதோ வந்தீங்க முழுசா திட்டிருங்க .. //
  ஐய்.......
  நீங்க சொன்னாப்ல நாங்க மாட்டிக்குவோமாக்கும்........

  நீங்களே பில் அப் பண்ணிக்கோங்கோ!!!!!

  ReplyDelete
 63. உண்மைதான் காயம்பட்ட வலியை விட இவங்க கேட்கும் பீஸ் அதிகமா வலிக்குது.

  ReplyDelete
 64. சுத்தமாக மனதில் பதியுமாறு சொல்லியிருக்கிறீர்கள்.நன்றி.

  ReplyDelete
 65. அப்துல் பாசித்தின் கருத்தே என்னுடையதும்

  ReplyDelete
 66. //அப்துல் பாசித்தின் கருத்தே என்னுடையதும்//

  +
  என்னதும்

  ReplyDelete
 67. AMINA SAID : //ஏன்........ என்னாத்துக்கு..........ஏன் இந்த கொலவெறி..........நல்லாதேனே இருந்தீங்க?????? எந்த காத்துகருப்பு உங்கள அடிச்சது.......

  காத்து கருப்பா?

  அதுலாம் ஒன்னும் இல்லை அந்நியன் என்று பெயரை வைத்துக் கொண்டு இந்த லொள்ளு ஜொள்ளுலாம் விடாதே என்று கண்டனம் வருகிறது சகோ.

  அதுனாலே யார் சமூக பிரச்சினையை முன்னிருத்தி பதிவு வெளியிட்றாகலோ அங்கேதான் கருத்துக்களும்(!)இருக்கும்.
  சரியா...மற்றபடி ஒன்னும் இல்லை.

  ReplyDelete
 68. அதிகவிலைகொடுத்து வாங்கினால்தான் ஒசத்தி இலகுவாகக் கிடைச்சால் மட்டம் என்கிற எண்ணம் நம்ம நம்ம ஜனங்களிடமிருந்து போகவே போகாது.

  ReplyDelete
 69. @பலே பிரபு
  //உண்மைதான் காயம்பட்ட வலியை விட இவங்க கேட்கும் பீஸ் அதிகமா வலிக்குது.//

  உண்மை தான் சகோ

  ReplyDelete
 70. @சண்முக வேல்
  //சுத்தமாக மனதில் பதியுமாறு சொல்லியிருக்கிறீர்கள்.நன்றி.//
  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 71. @அந்நியன்
  //AMINA SAID : //ஏன்........ என்னாத்துக்கு..........ஏன் இந்த கொலவெறி..........நல்லாதேனே இருந்தீங்க?????? எந்த காத்துகருப்பு உங்கள அடிச்சது.......

  காத்து கருப்பா?

  அதுலாம் ஒன்னும் இல்லை அந்நியன் என்று பெயரை வைத்துக் கொண்டு இந்த லொள்ளு ஜொள்ளுலாம் விடாதே என்று கண்டனம் வருகிறது சகோ.

  அதுனாலே யார் சமூக பிரச்சினையை முன்னிருத்தி பதிவு வெளியிட்றாகலோ அங்கேதான் கருத்துக்களும்(!)இருக்கும்.
  சரியா...மற்றபடி ஒன்னும் இல்லை.//
  பேருனால இவ்வளவு பிரச்சனையா? நல்லவேள அன்னா ஹசாரேன்னு எனக்கு பேர் வைக்கல. இல்லைன்னா வாழ்நாள்புல்லா மொக்க பதிவுக்காக உண்ணவிரதம் இருக்க சொல்லுவாங்க போல :-(

  ReplyDelete
 72. @ராக்கெட் ராஜா
  //அப்துல் பாசித்தின் கருத்தே என்னுடையதும்//
  அவருக்கு கொடுத்த கமென்ட்டும் தான் உங்களுக்கும்..ஹி...ஹி...ஹி....

  ReplyDelete
 73. @ஷர்புதீன்
  ////அப்துல் பாசித்தின் கருத்தே என்னுடையதும்//

  +
  என்னதும்//
  ஏன்???????நல்லா தானே இருந்தீங்க........

  சகோ பாசித்+ ராக்கெட் ராஜா க்கு சொன்னது தான் உங்களுக்கும் :-)

  ReplyDelete
 74. @அம்பலத்தார்
  //அதிகவிலைகொடுத்து வாங்கினால்தான் ஒசத்தி இலகுவாகக் கிடைச்சால் மட்டம் என்கிற எண்ணம் நம்ம நம்ம ஜனங்களிடமிருந்து போகவே போகாது.//

  உண்மை சகோ......

  ReplyDelete
 75. @சக்தி
  உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் ஏக இறைவனின் சாந்தி உண்டாவதாக

  வருகைக்கு மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 76. >>எங்கே அதிகமா பணம் பறிக்கிறாங்களோ அங்கே தான் நல்ல ட்ரீட்மெண்ட் கிடைக்கும்னு Logic இல்லாத Thought தலைவிரிச்சாடுது இல்லையா? “காசு அதிகமா வாங்குறார்ன்னா அதுக்கு தகுந்தாப்ல ட்ரீட்மெண்ட் இல்லாமலா இருக்கும்?ன்னு மக்கள் கேட்க பழகிட்டாங்க.

  மக்களின் அறியாமை

  ReplyDelete
 77. வாஞ்சூர் வாப்பா,
  அஸ்ஸலாமு அலைக்கும்,
  டாக்டர் கடவுள்னு நீங்க இப்ப சொல்லித்தான் தெரியும்

  ReplyDelete
 78. அப்படியா!! ஜர்னலிஸ்ட்டுனா எழுத்தாளரா!!

  ReplyDelete
 79. //ஒரு காய்ச்சல் வந்த மாதிரி நடிக்கிறதுக்கு என்னமா ப்ராக்டிஸ் பண்ண வேண்டியிருக்கு//

  உங்களை நீங்களே இந்த அளவுக்கு காய்ச்சி எடுத்திருக்கீங்க :-)
  இந்த அளவுக்கு நடிச்சதுலேயே காய்ச்சல் வந்திருக்கனுமே
  -ஆஷிக்

  ReplyDelete
 80. //அடப்பாவிகளா.... பணம் பறிக்க இப்படியுமா இறங்கி வருவீங்க?????) //

  உங்களை அவருடைய வாழ்க்கையின் விடிவெள்ளி நினைச்சிருப்பார் போல. அதுக்கு அப்பறம்தான் தெரிஞ்சிருக்கும் உங்ககிட்ட காசு வாங்குறதுக்குள்ளே விடிஞ்சிரும்னு.
  ஆஷிக்

  ReplyDelete
 81. @சி பி
  //மக்களின் அறியாமை //
  ம்ம் :-(

  ReplyDelete
 82. @ தம்பி ஆஷிக்

  அது அப்பாவின் கருத்து இல்ல. ஒரு பதிவின் காப்பி பேஸ்ட். அப்பா அந்த வார்த்தைய கவனிக்கலன்னு நெனைக்கிறேன்.

  (ஒவ்வொரு கமென்ன்டா படிக்கிறீங்களாக்கும் :-)

  ReplyDelete
 83. @ஆஷிக்
  //அப்படியா!! ஜர்னலிஸ்ட்டுனா எழுத்தாளரா!!//
  ங்கொய்யாலே....

  யாராவது கொஞ்சம் பாராட்டி பேசிட்டா பொறுக்காதே...........!!!!!! கொஞ்சம் குஷியாகட்டும்னு தான் அண்ணாவே பாவம் புண்ணியம் பார்த்து அப்படி சொன்னார்.. அது புடிக்கலையா?

  ReplyDelete
 84. @ஆஷிக்
  //இந்த அளவுக்கு நடிச்சதுலேயே காய்ச்சல் வந்திருக்கனுமே//
  ஒரு தடவ 2 தடவ நடிச்சா வரும்...... பேசணும்னு யாராவது சொன்னாலே ஊமைன்னு நடிச்சா???????? இப்படிதான் ஆகும் :-)

  ReplyDelete
 85. @ஆஷிக்
  //உங்ககிட்ட காசு வாங்குறதுக்குள்ளே விடிஞ்சிரும்னு.//
  விடிஞ்சும் வாங்கலையே..........
  ஹி...ஹி...ஹி....

  நாங்க தான் எஸ்கேப் ஆகிட்டோமே :-)

  ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)