கரை தாண்டிய உலகம்
காண துடித்ததால் -இன்று
மீனைபோலவே
உடலை விட்டு உயிர் தாண்டிட துடிக்கிறது.
உறக்கம் விற்று
உன்னுடன் கழித்த இரவுகள்
அன்று இனித்ததால்
இன்று வரையில்
விருப்பப்பட்டு பல மாத்திரைகளை உண்டும்
தூக்கம் கூட தீண்டா பாவியாய்
பல சாமங்கள் கழிகிறது
தேடி தேடி தருணங்களை அமைத்து கதைத்த தனிமைகளில்
கொசு குருதி உறிஞ்சியுனாலும் சுகமே
வியர்வை பூத்தாலும் மலராய் உள்ளம் பிறக்குமே
இன்று
நாடி நரம்புகளிலும் பரவி ஏசிகுளிர் சுகம் சேர்த்தும்
பல்லாயிரம் செலவில் அமைத்த பஞ்சு மெத்தை இருந்தும்
நீ இல்லாத இந்த வெறுமை
என்னை கொலை செய்துவிட துணிகிறது.
புதுமை பெண்ணாம்!!!
அன்று தேனாய் இனித்த வார்த்தை
இன்று விஷத்தை விடவும் கொடுமை என்னவா
தலை நிமிர வளர்த்துக்கொண்ட தைரியம்
தனிமையில் நொடித்து போனதடா
சந்தர்ப்பங்கள் எனக்கெதிராய் வாதிட்ட பிறகு
என் வார்த்தைகள் இனி வீணே!!!
என்னை பிரிய உன் மனம் ஒத்துழைத்த பின்
என் கண்ணீரும் கானல் நீரே
நடை பிணமாய் இனி நான் வாழ
நஞ்சாய் மாறிய நாட்களை நகர்த்த........
உறவுகளின் ஜாடை பேச்சுகளில் நித்தம் நித்தம் சாகாமல் சாக
கள்வர்களின் பார்வையிலேயே புழுவாய் தேகம் கூனிகுறுகுறுக்க
ஐய்யோ.....
இதைவிட நரக கொடுமை மேல் இல்லையா?
முக்கியகுறிப்பு: கற்பனையில் உதி(ர்)த்தவை ;)
Tweet | ||||
ஆமி,
ReplyDeleteஅழகிய வரிகள்.
சோகம்தூக்கலா இருந்தாலும் கவிதை
ReplyDeleteமனசைப்பிசையுது. நல்லா இருக்கு.
எனக்கு பிடித்தவர்கள்.
சந்தர்ப்பங்கள் எனக்கெதிராய் வாதிட்ட பிறகு
என் வார்த்தைகள் இனி வீணே!!!
good...வேறெதுவும் சொல்லத்தோன்றவில்லை.
ReplyDeleteசோகம்... மனதைக் கனக்கச் செய்தாலும்
ReplyDeleteவரிக்கு வரி கவிதை விளையாடுகிறது.
வாழ்த்துக்கள்.
அருமையாக இருக்கின்றது.
ReplyDelete/////உறவுகளின் ஜாடை பேச்சுகளில் நித்தம் நித்தம் சாகாமல் சாக
ReplyDeleteகள்வர்களின் பார்வையிலேயே புளுவாய் தேகம் கூனிகுறுகுறுக்க
ஐய்யோ.....
இதைவிட நரக கொடுமை மேல் இல்லையா?///////
அருமையாக இருக்கின்றது.
asalaamu alaikum
ReplyDelete..amazing poem sis ...
masha allah ...
சூப்பர் கவிதை, ஆமி.
ReplyDeleteநண்பர்கள் தின வாழ்த்துக்கள்..
ReplyDelete:-)
ReplyDeleteபடிக்கவே ரொம்ப வருத்தமா இருக்கே... அடடா...
ReplyDeleteதங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் பேரருளும் நிலவட்டுமாக சகோ.ஆமினா.
என்ன செம ஃபீலிங்க்கா இருக்கு. தொடருங்கள்...
ReplyDeleteஅப்புறம் 100 அடித்ததுக்கு வாழ்த்துகள் (இண்ட்லி ஃபாலோயர்ஸ்)..
நண்பர்கள் தின வாழ்த்துகள்.....
நல்ல கவிதை.
ReplyDeleteஎன்னை பிரிய உன் மனம் ஒத்துழைத்த பின்
ReplyDeleteஎன் கண்ணீரும் கானல் நீரே
அழகான வரிகள்...
நெஞ்சைக் கிழிக்கும் வரிகள்
அஸ்ஸலாமு அழைக்கும்
ReplyDeleteஆமினா என்னாச்சு .ஒரே பீலிங்க்கா இருக்கு.ஷாம் அப்பா பக்கத்துலதானே.
வரிகள் அருமை.வாழ்த்துக்கள் ஆமினா.
assalaamu alaikkum
ReplyDeletenallaa vanthurukku
keep it up da
உள்ளத்து வேதனையை அப்படியே எழுத்துக்களாக்கியிருக்கிறீர்கள்.மனதைக் கொட்டித்தீர்த்தலும் ஒரு சுகம்தான் தோழி !
ReplyDeleteதீண்டா பாவி - நடைபிணமாய் நான் சோகம் தூக்கலா இருந்தாலும் அற்புதம்
ReplyDeleteசோகம் பிழிய பிழிய கவிதை வரிகள் நெஞ்சைத்தொட்டன.
ReplyDeleteசோகம் கொண்டு பின்னிய கவிதை சகோ !
ReplyDeleteஎன்னவென்று சொல்வது ena தெரியவில்லை
ReplyDeleteஉணர்வுமிக்க வரிகள் தோழி
வலியுடன் உயிர்ப்பான கவிதை வாழ்த்துக்கள்
ReplyDeleteவலிகளோடு நீளும் வார்த்தைகளின் தொகுப்பு.
ReplyDeleteகுட்டி சுவர்க்கத்தின்
படைப்பாற்றலில் இப்படியும் ஒரு மறுபக்கம் இருக்கிறதா?
வலிதரும் காதல்க் கவிதை வரிகள் அருமை!..
ReplyDeleteகூடவே மறக்காமல் தாங்கள் இணைத்த முக்கிய
குறிப்பு எனக்கு இது ஒரு பயனுள்ள தகவல். காரணம்
இந்தமாதிரிக் காதல்க்கவிதையைப் படித்துவிட்டு
எனக்கு வருகின்ற அனுதாபக் கருத்தும் அறிவுரைகளும்
பார்க்கும்போது மனதினில் சிறு சங்கடம் எழும் இனி
இதிலிருந்து தப்பிவிடுவேன்.நன்றி சகோதரி பகிர்வுக்கு...
ரணம் கொண்ட மனம்
ReplyDeleteமுக்கியகுறிப்பு: கற்பனையில் உதி(ர்)த்தவை ;)
ReplyDeleteஉண்மையிலே கற்பனையில்த்தான் தோன்றியதோ..
அல்ல மன விரக்தியால் வெளிவந்தவையா...
கவிதையில் அத்தனை வரிகளிலும் உங்கள் வலி தெரிகிறது..
பதிவுக்கு பாராட்டுக்கள்..
அப்படியே அனுபவித்து எழுதியவை போலத்தான் இருக்கு. இப்படி கற்பனையில் உணர்வுப்பூர்வமாக எழுத முடியுமா என்பதை கற்பனைக்கே விட்டுவிடுறேன். என்றாலும் எங்கோ ஒரு வலி .... ஒரு பிரிவு... இல்லாமல் இல்லை.
ReplyDeleteஎனக்கு தெரிந்து தனக்கு தேர்வு இருப்பதாகவும் அதனால் பதிவுலகத்திற்க்கு சிறிய விடுமுறை அளிக்கிறேன் என்ற அமினாவை பல மாதங்களுக்கு பிறகு இன்று இப்படி ஒரு கவிதையின் மூலம் சந்திப்பது ஏதோ நெருடலாகவே இருக்கிறது. மான் குட்டிபோல் துள்ளிக்குதிக்கும் எண்ணங்கள் கொண்ட அமீனா இன்றும் அப்படியே இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் நானும் விடைபெறுகிறேன்.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ReplyDeleteகவிதை மிக மிக நன்றாக உள்ளது சகோதரி
இந்த ரமலான் நேரத்தில் இம்மாதிரி கற்பனைகள் வேண்டுமா என்று மீளாய்வு செய்யுங்கள்
ஃஃஃதேடி தேடி தருணங்களை அமைத்து கதைத்த தனிமைகளில்
ReplyDeleteகொசு குருதி உறிஞ்சியுனாலும் சுகமேஃஃஃ
அடடா தோலில் ஏதோ நரம்பியல் கொளாறு இருக்கும் போல..ஹ..ஹ..
அருமையாயிருக்குங்க..
அருமையான கவிதை.. பாராட்ட்டுக்கள்
ReplyDelete@பவி
ReplyDelete//ஆமி,
அழகிய வரிகள்//
அட நம்ம பவியா? அட நம்ம பவித்ராவா? அட நம்ம அறுசுவை கடைகுட்டி பவியா? நம்ப முடியவில்லை....இல்லை....இல்லை........
கவிதைன்னு சொன்னதும் ஓடி வந்து முதலாளா ஆஜர் ஆனதுக்கு நன்றி பவி
@லெட்சுமி மாமி
ReplyDelete//சோகம்தூக்கலா இருந்தாலும் கவிதை
மனசைப்பிசையுது. நல்லா இருக்கு.
எனக்கு பிடித்தவர்கள்.
சந்தர்ப்பங்கள் எனக்கெதிராய் வாதிட்ட பிறகு
என் வார்த்தைகள் இனி வீணே!!! //
ரொம்ப நன்றி மாமி.....
வர ஆள் கிட்ட மும்பை ஸ்பெஷல் அனுப்பிவிட்டுடுங்கோ ;)
@! சிவகுமார்
ReplyDelete//good...வேறெதுவும் சொல்லத்தோன்றவில்லை.//
மிக்க நன்றி சகோ
குட்’னு உங்க வாயால கேட்டதே போதும் :)
@சே.குமார்
ReplyDelete//சோகம்... மனதைக் கனக்கச் செய்தாலும்
வரிக்கு வரி கவிதை விளையாடுகிறது.
வாழ்த்துக்கள். //
பிரபல கவிஞர் வாயால வாழ்த்து :)
மிக்க நன்றி சகோ
@அந்நியன்
ReplyDelete// அருமையாக இருக்கின்றது.//
மிக்க நன்றி அய்யூப் அண்ணா
@ரியாஸ் அஹ்மத்
ReplyDelete///////உறவுகளின் ஜாடை பேச்சுகளில் நித்தம் நித்தம் சாகாமல் சாக
கள்வர்களின் பார்வையிலேயே புளுவாய் தேகம் கூனிகுறுகுறுக்க
ஐய்யோ.....
இதைவிட நரக கொடுமை மேல் இல்லையா?///////
அருமையாக இருக்கின்றது. //
மிக்க நன்றி சகோ
@ரியாஸ் அஹ்மத்
ReplyDelete//asalaamu alaikum
..amazing poem sis ...
masha allah ..//
வ அலைக்கும் சலாம் வரஹ்...
மிக்க நன்றி சகோ
@வானதி
ReplyDelete//சூப்பர் கவிதை, ஆமி.//
மிக்க நன்றி வானதி ;)
@வேடந்தாங்கல் கருன்
ReplyDelete//நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..//
லேட்டா சொன்னாலும் லேட்டஸ்ட்டா சொல்லுவோம்ல... நடந்து முடிந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள் கருண்
@சர்புதீன்
ReplyDelete:-)
@ஆஷிக் அண்ணா
ReplyDelete//படிக்கவே ரொம்ப வருத்தமா இருக்கே... அடடா...
தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் பேரருளும் நிலவட்டுமாக சகோ.ஆமினா. //
உங்கள் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாவதாக ஆமீன்
மிக்க நன்றி சகோ
@பலேபிரபு
ReplyDelete//என்ன செம ஃபீலிங்க்கா இருக்கு. தொடருங்கள்...
அப்புறம் 100 அடித்ததுக்கு வாழ்த்துகள் (இண்ட்லி ஃபாலோயர்ஸ்)..
நண்பர்கள் தின வாழ்த்துகள்..... //
தொடர இது தொடர்பதிவு போல் தொடர்கவிதை அல்லவே... இதுக்கே பல அழுகாச்சி அழுகாச்சி மெயில்லா வருது ;)
இண்ட்லி வாழ்த்துக்கும்(என்ன ட்ரீட்?) நண்பர்கள் தின வாழ்த்துக்கும் நன்றி பிரபு
@ரத்னவேல் ஐயா
ReplyDelete//நல்ல கவிதை//
மிக்க நன்றி ஐயா
@நிகாஷா
ReplyDelete//என்னை பிரிய உன் மனம் ஒத்துழைத்த பின்
என் கண்ணீரும் கானல் நீரே
அழகான வரிகள்...
நெஞ்சைக் கிழிக்கும் வரிகள்//
ஆப்ரேஷன் பண்ணி முடிச்சாச்சா? ;)
மிக்க நன்றி நிகாஷா
@ஆயிஷா அபுல்
ReplyDelete//அஸ்ஸலாமு அழைக்கும்//
வ அலைக்கும் சலாம் வரஹ்...
//ஆமினா என்னாச்சு .ஒரே பீலிங்க்கா இருக்கு.ஷாம் அப்பா பக்கத்துலதானே.
வரிகள் அருமை.வாழ்த்துக்கள் ஆமினா. //
ஹா...ஹா...ஹா.....
அடிக்கிற தூரத்துல தான் இருக்காரு ;)
@முஹம்மத்
ReplyDelete//assalaamu alaikkum
nallaa vanthurukku
keep it up da //
வ அலைக்கும் சலாம் வரஹ்....
உங்க டீச்சிங் இல்லையா? அதான் நல்லா வந்துருக்கு...
தேங்க்ஸ் மாம்ஸ்
@ஹேமா
ReplyDelete//உள்ளத்து வேதனையை அப்படியே எழுத்துக்களாக்கியிருக்கிறீர்கள்.மனதைக் கொட்டித்தீர்த்தலும் ஒரு சுகம்தான் தோழி ! //
;)
என்னை பாதித்த ஒரு பெண்ணின் உள்ளத்து வேதனையை நான் எழுத்துக்களாக்கியிருக்கேன். தட்ஸ் ஆல் ;)
மிக்க நன்றி ஹேமா
@மாய உலகம்
ReplyDelete//தீண்டா பாவி - நடைபிணமாய் நான் சோகம் தூக்கலா இருந்தாலும் அற்புதம்//
மிக்க நன்றி சகோ
@சாதிகா அக்கா
ReplyDelete//சோகம் பிழிய பிழிய கவிதை வரிகள் நெஞ்சைத்தொட்டன. //
மிக்க நன்றி அக்கா
@விக்கியுலகம்
ReplyDelete//சோகம் கொண்டு பின்னிய கவிதை சகோ ! //
மிக்க நன்றி சகோ
@ஹரிணி நாதன்
ReplyDelete//என்னவென்று சொல்வது ena தெரியவில்லை
உணர்வுமிக்க வரிகள் தோழி //
மிக்க நன்றி ஹரிணி
@அரசன்
ReplyDelete//வலியுடன் உயிர்ப்பான கவிதை வாழ்த்துக்கள் //
கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ
@பாரத் பாரதி
ReplyDelete//வலிகளோடு நீளும் வார்த்தைகளின் தொகுப்பு.
குட்டி சுவர்க்கத்தின்
படைப்பாற்றலில் இப்படியும் ஒரு மறுபக்கம் இருக்கிறதா?//
படைப்பாற்றலில் மட்டும் ;)
மிக்க நன்றி பாரத் பாரதி
@அம்பாளடியாள்
ReplyDelete//வலிதரும் காதல்க் கவிதை வரிகள் அருமை!..
கூடவே மறக்காமல் தாங்கள் இணைத்த முக்கிய
குறிப்பு எனக்கு இது ஒரு பயனுள்ள தகவல். காரணம்
இந்தமாதிரிக் காதல்க்கவிதையைப் படித்துவிட்டு
எனக்கு வருகின்ற அனுதாபக் கருத்தும் அறிவுரைகளும்
பார்க்கும்போது மனதினில் சிறு சங்கடம் எழும் இனி
இதிலிருந்து தப்பிவிடுவேன்.நன்றி சகோதரி பகிர்வுக்கு... //
நானும் ப்ளாக்கர் டிப்ஸ் கொடுக்க ஆரம்பிச்சுட்டேனோ ;)
மிக்க நன்றிங்க
@சிபி
ReplyDelete//ரணம் கொண்ட மனம் //
மிக்க நன்றி சகோ
@விடிவெள்ளி
ReplyDelete//முக்கியகுறிப்பு: கற்பனையில் உதி(ர்)த்தவை ;)
உண்மையிலே கற்பனையில்த்தான் தோன்றியதோ..
அல்ல மன விரக்தியால் வெளிவந்தவையா...
கவிதையில் அத்தனை வரிகளிலும் உங்கள் வலி தெரிகிறது..
பதிவுக்கு பாராட்டுக்கள்.. //
யப்ப்பா............. முடியல.......... போதும் சகோ....
:)
மரணத்த பத்தி எழுதுறதுக்கு மரணிக்க வேண்டிய அவசியம் இல்லையே சகோ :)
என்னை பாதித்த ஒரு பெண்ணின் நிலை... என் கற்பனையில் கொஞ்சம் மாற்றியிருக்கேன். தட்ஸ் ஆல் :)
பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி சகோ
@கே ஆர் விஜயன்
ReplyDelete//. என்றாலும் எங்கோ ஒரு வலி .... ஒரு பிரிவு... இல்லாமல் இல்லை. //
எங்கோ... யாருக்கோ.... :)
@கே ஆர் விஜயன்
ReplyDelete//. என்றாலும் எங்கோ ஒரு வலி .... ஒரு பிரிவு... இல்லாமல் இல்லை. //
நீங்க ரொம்ப நாளைக்கு பிறகு ரீ மீட் ல இந்த கவிதைய படிச்சதுனால நெருடலா இருக்கு. முந்தைய மொக்க பதிவ படிச்சு பாருங்க.... அப்ப கேக்க மாட்டீங்க :)
//அமீனா இன்றும் அப்படியே இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் நானும் விடைபெறுகிறேன். //
சிறு மாற்றம் மட்டும்.
ஆமினா :)
@bat
ReplyDelete//அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
கவிதை மிக மிக நன்றாக உள்ளது சகோதரி
இந்த ரமலான் நேரத்தில் இம்மாதிரி கற்பனைகள் வேண்டுமா என்று மீளாய்வு செய்யுங்கள் //
வ அலைக்கும் சலாம் வரஹ்...
கற்பனைக்கு நாள் குறிக்க தெரியல சகோ....
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@மதி சுதா
ReplyDelete//அடடா தோலில் ஏதோ நரம்பியல் கொளாறு இருக்கும் போல..ஹ..ஹ..
அருமையாயிருக்குங்க.. //
அடடா..... நரம்பியல் மருத்துவரா நீங்க? :)
மிக்க நன்றி சகோ
@மதுரன்
ReplyDelete//அருமையான கவிதை.. பாராட்ட்டுக்கள்//
மிக்க நன்றி மதுரன்
அஸ்ஸலாமு அலைகும் சகோ!
ReplyDeleteகவிதை அருமை. கடைசிவரியில் ஒத்துழைக மனம் மறுக்கிறது.//ஐய்யோ.....
இதைவிட நரக கொடுமை மேல் இல்லையா?// முஸ்லிமாகிய நாம் இப்படி கூறலாமா? இவ் வரியை நீக்குவது சிறந்தது என நினைகிறேன்.
// தேடி தேடி தருணங்களை அமைத்து கதைத்த தனிமைகளில்
ReplyDeleteகொசு குருதி உறிஞ்சியுனாலும் சுகமே
வியர்வை பூத்தாலும் மலராய் உள்ளம் பிறக்குமே
இன்று
நாடி நரம்புகளிலும் பரவி ஏசிகுளிர் சுகம் சேர்த்தும்
பல்லாயிரம் செலவில் அமைத்த பஞ்சு மெத்தை இருந்தும்
நீ இல்லாத இந்த வெறுமை
என்னை கொலை செய்துவிட துணிகிறது./// இது கற்பனைல குதிச்ச மாதிரி தெரியலியே.. சொந்த கதை சோக கதை மாதிரி இருக்குன்னு மை எட்டாம் அறிவு டெல்லிங் ..... ஹிஹிஹி
உனக்குள்ள இம்புட்டு திறமையா.. வாழ்த்துக்கள் அம்மு.. கலக்குறே.! :)