கரை தாண்டிய உலகம்
காண துடித்ததால் -இன்று
மீனைபோலவே
உடலை விட்டு உயிர் தாண்டிட துடிக்கிறது.

உறக்கம் விற்று
உன்னுடன் கழித்த இரவுகள்
அன்று இனித்ததால்

இன்று வரையில்
விருப்பப்பட்டு பல மாத்திரைகளை உண்டும்
தூக்கம் கூட தீண்டா பாவியாய்
பல சாமங்கள் கழிகிறது

தேடி தேடி தருணங்களை அமைத்து கதைத்த தனிமைகளில்
கொசு குருதி உறிஞ்சியுனாலும்  சுகமே
வியர்வை பூத்தாலும் மலராய் உள்ளம் பிறக்குமே
இன்று
நாடி நரம்புகளிலும் பரவி ஏசிகுளிர் சுகம் சேர்த்தும்
பல்லாயிரம் செலவில் அமைத்த பஞ்சு மெத்தை இருந்தும்
நீ இல்லாத இந்த வெறுமை
என்னை கொலை செய்துவிட  துணிகிறது.

புதுமை பெண்ணாம்!!!
அன்று தேனாய் இனித்த வார்த்தை
இன்று விஷத்தை விடவும் கொடுமை என்னவா

தலை நிமிர வளர்த்துக்கொண்ட தைரியம்
தனிமையில் நொடித்து போனதடா

சந்தர்ப்பங்கள் எனக்கெதிராய் வாதிட்ட பிறகு
என் வார்த்தைகள் இனி வீணே!!!

என்னை பிரிய உன் மனம்  ஒத்துழைத்த  பின்
என் கண்ணீரும் கானல் நீரே

நடை பிணமாய் இனி நான்  வாழ
நஞ்சாய் மாறிய நாட்களை நகர்த்த........
உறவுகளின் ஜாடை பேச்சுகளில்  நித்தம் நித்தம் சாகாமல் சாக
கள்வர்களின்   பார்வையிலேயே   புழுவாய் தேகம்  கூனிகுறுகுறுக்க
ஐய்யோ.....
இதைவிட நரக  கொடுமை மேல் இல்லையா? 


முக்கியகுறிப்பு: கற்பனையில் உதி(ர்)த்தவை ;)

,

64 comments:

  1. ஆமி,
    அழகிய வரிகள்.

    ReplyDelete
  2. சோகம்தூக்கலா இருந்தாலும் கவிதை
    மனசைப்பிசையுது. நல்லா இருக்கு.
    எனக்கு பிடித்தவர்கள்.

    சந்தர்ப்பங்கள் எனக்கெதிராய் வாதிட்ட பிறகு
    என் வார்த்தைகள் இனி வீணே!!!

    ReplyDelete
  3. good...வேறெதுவும் சொல்லத்தோன்றவில்லை.

    ReplyDelete
  4. சோகம்... மனதைக் கனக்கச் செய்தாலும்
    வரிக்கு வரி கவிதை விளையாடுகிறது.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அருமையாக இருக்கின்றது.

    ReplyDelete
  6. /////உறவுகளின் ஜாடை பேச்சுகளில் நித்தம் நித்தம் சாகாமல் சாக
    கள்வர்களின் பார்வையிலேயே புளுவாய் தேகம் கூனிகுறுகுறுக்க
    ஐய்யோ.....
    இதைவிட நரக கொடுமை மேல் இல்லையா?///////

    அருமையாக இருக்கின்றது.

    ReplyDelete
  7. asalaamu alaikum
    ..amazing poem sis ...
    masha allah ...

    ReplyDelete
  8. சூப்பர் கவிதை, ஆமி.

    ReplyDelete
  9. நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  10. படிக்கவே ரொம்ப வருத்தமா இருக்கே... அடடா...

    தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் பேரருளும் நிலவட்டுமாக சகோ.ஆமினா.

    ReplyDelete
  11. என்ன செம ஃபீலிங்க்கா இருக்கு. தொடருங்கள்...

    அப்புறம் 100 அடித்ததுக்கு வாழ்த்துகள் (இண்ட்லி ஃபாலோயர்ஸ்)..

    நண்பர்கள் தின வாழ்த்துகள்.....

    ReplyDelete
  12. என்னை பிரிய உன் மனம் ஒத்துழைத்த பின்
    என் கண்ணீரும் கானல் நீரே

    அழகான வரிகள்...
    நெஞ்சைக் கிழிக்கும் வரிகள்

    ReplyDelete
  13. அஸ்ஸலாமு அழைக்கும்

    ஆமினா என்னாச்சு .ஒரே பீலிங்க்கா இருக்கு.ஷாம் அப்பா பக்கத்துலதானே.

    வரிகள் அருமை.வாழ்த்துக்கள் ஆமினா.

    ReplyDelete
  14. assalaamu alaikkum

    nallaa vanthurukku

    keep it up da

    ReplyDelete
  15. உள்ளத்து வேதனையை அப்படியே எழுத்துக்களாக்கியிருக்கிறீர்கள்.மனதைக் கொட்டித்தீர்த்தலும் ஒரு சுகம்தான் தோழி !

    ReplyDelete
  16. தீண்டா பாவி - நடைபிணமாய் நான் சோகம் தூக்கலா இருந்தாலும் அற்புதம்

    ReplyDelete
  17. சோகம் பிழிய பிழிய கவிதை வரிகள் நெஞ்சைத்தொட்டன.

    ReplyDelete
  18. சோகம் கொண்டு பின்னிய கவிதை சகோ !

    ReplyDelete
  19. என்னவென்று சொல்வது ena தெரியவில்லை

    உணர்வுமிக்க வரிகள் தோழி

    ReplyDelete
  20. வலியுடன் உயிர்ப்பான கவிதை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. வலிகளோடு நீளும் வார்த்தைகளின் தொகுப்பு.

    குட்டி சுவர்க்கத்தின்
    படைப்பாற்றலில் இப்படியும் ஒரு மறுபக்கம் இருக்கிறதா?

    ReplyDelete
  22. வலிதரும் காதல்க் கவிதை வரிகள் அருமை!..
    கூடவே மறக்காமல் தாங்கள் இணைத்த முக்கிய
    குறிப்பு எனக்கு இது ஒரு பயனுள்ள தகவல். காரணம்
    இந்தமாதிரிக் காதல்க்கவிதையைப் படித்துவிட்டு
    எனக்கு வருகின்ற அனுதாபக் கருத்தும் அறிவுரைகளும்
    பார்க்கும்போது மனதினில் சிறு சங்கடம் எழும் இனி
    இதிலிருந்து தப்பிவிடுவேன்.நன்றி சகோதரி பகிர்வுக்கு...

    ReplyDelete
  23. முக்கியகுறிப்பு: கற்பனையில் உதி(ர்)த்தவை ;)

    உண்மையிலே கற்பனையில்த்தான் தோன்றியதோ..
    அல்ல மன விரக்தியால் வெளிவந்தவையா...
    கவிதையில் அத்தனை வரிகளிலும் உங்கள் வலி தெரிகிறது..
    பதிவுக்கு பாராட்டுக்கள்..

    ReplyDelete
  24. அப்படியே அனுபவித்து எழுதியவை போலத்தான் இருக்கு. இப்படி கற்பனையில் உணர்வுப்பூர்வமாக எழுத முடியுமா என்பதை கற்பனைக்கே விட்டுவிடுறேன். என்றாலும் எங்கோ ஒரு வலி .... ஒரு பிரிவு... இல்லாமல் இல்லை.

    ReplyDelete
  25. எனக்கு தெரிந்து தனக்கு தேர்வு இருப்பதாகவும் அதனால் பதிவுலகத்திற்க்கு சிறிய விடுமுறை அளிக்கிறேன் என்ற அமினாவை பல மாதங்களுக்கு பிறகு இன்று இப்படி ஒரு கவிதையின் மூலம் சந்திப்பது ஏதோ நெருடலாகவே இருக்கிறது. மான் குட்டிபோல் துள்ளிக்குதிக்கும் எண்ணங்கள் கொண்ட அமீனா இன்றும் அப்படியே இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் நானும் விடைபெறுகிறேன்.

    ReplyDelete
  26. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    கவிதை மிக மிக நன்றாக உள்ளது சகோதரி
    இந்த ரமலான் நேரத்தில் இம்மாதிரி கற்பனைகள் வேண்டுமா என்று மீளாய்வு செய்யுங்கள்

    ReplyDelete
  27. ஃஃஃதேடி தேடி தருணங்களை அமைத்து கதைத்த தனிமைகளில்
    கொசு குருதி உறிஞ்சியுனாலும் சுகமேஃஃஃ

    அடடா தோலில் ஏதோ நரம்பியல் கொளாறு இருக்கும் போல..ஹ..ஹ..

    அருமையாயிருக்குங்க..

    ReplyDelete
  28. அருமையான கவிதை.. பாராட்ட்டுக்கள்

    ReplyDelete
  29. @பவி
    //ஆமி,
    அழகிய வரிகள்//
    அட நம்ம பவியா? அட நம்ம பவித்ராவா? அட நம்ம அறுசுவை கடைகுட்டி பவியா? நம்ப முடியவில்லை....இல்லை....இல்லை........
    கவிதைன்னு சொன்னதும் ஓடி வந்து முதலாளா ஆஜர் ஆனதுக்கு நன்றி பவி

    ReplyDelete
  30. @லெட்சுமி மாமி
    //சோகம்தூக்கலா இருந்தாலும் கவிதை
    மனசைப்பிசையுது. நல்லா இருக்கு.
    எனக்கு பிடித்தவர்கள்.

    சந்தர்ப்பங்கள் எனக்கெதிராய் வாதிட்ட பிறகு
    என் வார்த்தைகள் இனி வீணே!!! //
    ரொம்ப நன்றி மாமி.....
    வர ஆள் கிட்ட மும்பை ஸ்பெஷல் அனுப்பிவிட்டுடுங்கோ ;)

    ReplyDelete
  31. @! சிவகுமார்
    //good...வேறெதுவும் சொல்லத்தோன்றவில்லை.//
    மிக்க நன்றி சகோ
    குட்’னு உங்க வாயால கேட்டதே போதும் :)

    ReplyDelete
  32. @சே.குமார்
    //சோகம்... மனதைக் கனக்கச் செய்தாலும்
    வரிக்கு வரி கவிதை விளையாடுகிறது.
    வாழ்த்துக்கள். //
    பிரபல கவிஞர் வாயால வாழ்த்து :)
    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  33. @அந்நியன்
    // அருமையாக இருக்கின்றது.//
    மிக்க நன்றி அய்யூப் அண்ணா

    ReplyDelete
  34. @ரியாஸ் அஹ்மத்
    ///////உறவுகளின் ஜாடை பேச்சுகளில் நித்தம் நித்தம் சாகாமல் சாக
    கள்வர்களின் பார்வையிலேயே புளுவாய் தேகம் கூனிகுறுகுறுக்க
    ஐய்யோ.....
    இதைவிட நரக கொடுமை மேல் இல்லையா?///////

    அருமையாக இருக்கின்றது. //
    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  35. @ரியாஸ் அஹ்மத்
    //asalaamu alaikum
    ..amazing poem sis ...
    masha allah ..//
    வ அலைக்கும் சலாம் வரஹ்...
    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  36. @வானதி
    //சூப்பர் கவிதை, ஆமி.//
    மிக்க நன்றி வானதி ;)

    ReplyDelete
  37. @வேடந்தாங்கல் கருன்
    //நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..//
    லேட்டா சொன்னாலும் லேட்டஸ்ட்டா சொல்லுவோம்ல... நடந்து முடிந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள் கருண்

    ReplyDelete
  38. @ஆஷிக் அண்ணா
    //படிக்கவே ரொம்ப வருத்தமா இருக்கே... அடடா...

    தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் பேரருளும் நிலவட்டுமாக சகோ.ஆமினா. //
    உங்கள் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாவதாக ஆமீன்
    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  39. @பலேபிரபு
    //என்ன செம ஃபீலிங்க்கா இருக்கு. தொடருங்கள்...

    அப்புறம் 100 அடித்ததுக்கு வாழ்த்துகள் (இண்ட்லி ஃபாலோயர்ஸ்)..

    நண்பர்கள் தின வாழ்த்துகள்..... //
    தொடர இது தொடர்பதிவு போல் தொடர்கவிதை அல்லவே... இதுக்கே பல அழுகாச்சி அழுகாச்சி மெயில்லா வருது ;)
    இண்ட்லி வாழ்த்துக்கும்(என்ன ட்ரீட்?) நண்பர்கள் தின வாழ்த்துக்கும் நன்றி பிரபு

    ReplyDelete
  40. @ரத்னவேல் ஐயா
    //நல்ல கவிதை//
    மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  41. @நிகாஷா
    //என்னை பிரிய உன் மனம் ஒத்துழைத்த பின்
    என் கண்ணீரும் கானல் நீரே

    அழகான வரிகள்...
    நெஞ்சைக் கிழிக்கும் வரிகள்//
    ஆப்ரேஷன் பண்ணி முடிச்சாச்சா? ;)
    மிக்க நன்றி நிகாஷா

    ReplyDelete
  42. @ஆயிஷா அபுல்
    //அஸ்ஸலாமு அழைக்கும்//
    வ அலைக்கும் சலாம் வரஹ்...
    //ஆமினா என்னாச்சு .ஒரே பீலிங்க்கா இருக்கு.ஷாம் அப்பா பக்கத்துலதானே.
    வரிகள் அருமை.வாழ்த்துக்கள் ஆமினா. //
    ஹா...ஹா...ஹா.....
    அடிக்கிற தூரத்துல தான் இருக்காரு ;)

    ReplyDelete
  43. @முஹம்மத்
    //assalaamu alaikkum

    nallaa vanthurukku

    keep it up da //
    வ அலைக்கும் சலாம் வரஹ்....
    உங்க டீச்சிங் இல்லையா? அதான் நல்லா வந்துருக்கு...
    தேங்க்ஸ் மாம்ஸ்

    ReplyDelete
  44. @ஹேமா
    //உள்ளத்து வேதனையை அப்படியே எழுத்துக்களாக்கியிருக்கிறீர்கள்.மனதைக் கொட்டித்தீர்த்தலும் ஒரு சுகம்தான் தோழி ! //
    ;)
    என்னை பாதித்த ஒரு பெண்ணின் உள்ளத்து வேதனையை நான் எழுத்துக்களாக்கியிருக்கேன். தட்ஸ் ஆல் ;)
    மிக்க நன்றி ஹேமா

    ReplyDelete
  45. @மாய உலகம்
    //தீண்டா பாவி - நடைபிணமாய் நான் சோகம் தூக்கலா இருந்தாலும் அற்புதம்//
    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  46. @சாதிகா அக்கா
    //சோகம் பிழிய பிழிய கவிதை வரிகள் நெஞ்சைத்தொட்டன. //
    மிக்க நன்றி அக்கா

    ReplyDelete
  47. @விக்கியுலகம்
    //சோகம் கொண்டு பின்னிய கவிதை சகோ ! //
    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  48. @ஹரிணி நாதன்
    //என்னவென்று சொல்வது ena தெரியவில்லை

    உணர்வுமிக்க வரிகள் தோழி //
    மிக்க நன்றி ஹரிணி

    ReplyDelete
  49. @அரசன்
    //வலியுடன் உயிர்ப்பான கவிதை வாழ்த்துக்கள் //
    கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  50. @பாரத் பாரதி
    //வலிகளோடு நீளும் வார்த்தைகளின் தொகுப்பு.

    குட்டி சுவர்க்கத்தின்
    படைப்பாற்றலில் இப்படியும் ஒரு மறுபக்கம் இருக்கிறதா?//
    படைப்பாற்றலில் மட்டும் ;)
    மிக்க நன்றி பாரத் பாரதி

    ReplyDelete
  51. @அம்பாளடியாள்
    //வலிதரும் காதல்க் கவிதை வரிகள் அருமை!..
    கூடவே மறக்காமல் தாங்கள் இணைத்த முக்கிய
    குறிப்பு எனக்கு இது ஒரு பயனுள்ள தகவல். காரணம்
    இந்தமாதிரிக் காதல்க்கவிதையைப் படித்துவிட்டு
    எனக்கு வருகின்ற அனுதாபக் கருத்தும் அறிவுரைகளும்
    பார்க்கும்போது மனதினில் சிறு சங்கடம் எழும் இனி
    இதிலிருந்து தப்பிவிடுவேன்.நன்றி சகோதரி பகிர்வுக்கு... //
    நானும் ப்ளாக்கர் டிப்ஸ் கொடுக்க ஆரம்பிச்சுட்டேனோ ;)
    மிக்க நன்றிங்க

    ReplyDelete
  52. @சிபி
    //ரணம் கொண்ட மனம் //
    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  53. @விடிவெள்ளி
    //முக்கியகுறிப்பு: கற்பனையில் உதி(ர்)த்தவை ;)

    உண்மையிலே கற்பனையில்த்தான் தோன்றியதோ..
    அல்ல மன விரக்தியால் வெளிவந்தவையா...
    கவிதையில் அத்தனை வரிகளிலும் உங்கள் வலி தெரிகிறது..
    பதிவுக்கு பாராட்டுக்கள்.. //
    யப்ப்பா............. முடியல.......... போதும் சகோ....
    :)
    மரணத்த பத்தி எழுதுறதுக்கு மரணிக்க வேண்டிய அவசியம் இல்லையே சகோ :)
    என்னை பாதித்த ஒரு பெண்ணின் நிலை... என் கற்பனையில் கொஞ்சம் மாற்றியிருக்கேன். தட்ஸ் ஆல் :)
    பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  54. @கே ஆர் விஜயன்
    //. என்றாலும் எங்கோ ஒரு வலி .... ஒரு பிரிவு... இல்லாமல் இல்லை. //
    எங்கோ... யாருக்கோ.... :)

    ReplyDelete
  55. @கே ஆர் விஜயன்
    //. என்றாலும் எங்கோ ஒரு வலி .... ஒரு பிரிவு... இல்லாமல் இல்லை. //
    நீங்க ரொம்ப நாளைக்கு பிறகு ரீ மீட் ல இந்த கவிதைய படிச்சதுனால நெருடலா இருக்கு. முந்தைய மொக்க பதிவ படிச்சு பாருங்க.... அப்ப கேக்க மாட்டீங்க :)
    //அமீனா இன்றும் அப்படியே இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் நானும் விடைபெறுகிறேன். //
    சிறு மாற்றம் மட்டும்.
    ஆமினா :)

    ReplyDelete
  56. @bat
    //அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    கவிதை மிக மிக நன்றாக உள்ளது சகோதரி
    இந்த ரமலான் நேரத்தில் இம்மாதிரி கற்பனைகள் வேண்டுமா என்று மீளாய்வு செய்யுங்கள் //
    வ அலைக்கும் சலாம் வரஹ்...
    கற்பனைக்கு நாள் குறிக்க தெரியல சகோ....
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  57. @மதி சுதா
    //அடடா தோலில் ஏதோ நரம்பியல் கொளாறு இருக்கும் போல..ஹ..ஹ..

    அருமையாயிருக்குங்க.. //
    அடடா..... நரம்பியல் மருத்துவரா நீங்க? :)
    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  58. @மதுரன்
    //அருமையான கவிதை.. பாராட்ட்டுக்கள்//
    மிக்க நன்றி மதுரன்

    ReplyDelete
  59. அஸ்ஸலாமு அலைகும் சகோ!
    கவிதை அருமை. கடைசிவரியில் ஒத்துழைக மனம் மறுக்கிறது.//ஐய்யோ.....
    இதைவிட நரக கொடுமை மேல் இல்லையா?// முஸ்லிமாகிய நாம் இப்படி கூறலாமா? இவ் வரியை நீக்குவது சிறந்தது என நினைகிறேன்.

    ReplyDelete
  60. // தேடி தேடி தருணங்களை அமைத்து கதைத்த தனிமைகளில்
    கொசு குருதி உறிஞ்சியுனாலும் சுகமே
    வியர்வை பூத்தாலும் மலராய் உள்ளம் பிறக்குமே
    இன்று
    நாடி நரம்புகளிலும் பரவி ஏசிகுளிர் சுகம் சேர்த்தும்
    பல்லாயிரம் செலவில் அமைத்த பஞ்சு மெத்தை இருந்தும்
    நீ இல்லாத இந்த வெறுமை
    என்னை கொலை செய்துவிட துணிகிறது./// இது கற்பனைல குதிச்ச மாதிரி தெரியலியே.. சொந்த கதை சோக கதை மாதிரி இருக்குன்னு மை எட்டாம் அறிவு டெல்லிங் ..... ஹிஹிஹி

    உனக்குள்ள இம்புட்டு திறமையா.. வாழ்த்துக்கள் அம்மு.. கலக்குறே.! :)

    ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)