போன வாரம் 3rd number மார்க்கெட் போனேன். லக்னோல வாரத்துக்கு மூனு நாள்(செவ்வாய், வியாழன், சனி ) சந்தை இருக்கும். எங்க வீட்டுல இருந்து 5 கிலோ மீட்டர் பயணம். எப்போதும் ரொம்ப சீப்பா இருக்கும் என்பதால் கஷ்ட்டப்பட்டாவது அங்கே தான் போய்  வாங்குவேன் (சிக்கனத்தில் நம்மள மிஞ்ச ஆள் ஏது?).... ஆட்டோ செலவு எல்லாம் சரியா போகும்னு சொல்றீங்களா?????? எங்க வீட்டுல இருந்து போக வெறும் 5 ரூபாய் தான். நம்மளே சவாரிக்கு வான்னு கூப்பிட்டா கூட வரமாட்டாங்க. எல்லாமே சேர் ஆட்டோ தான்...



முதலில் மார்க்கெட் உள்ளே நுழைந்ததும் உருளை தான் மாட்டுச்சு. 1 கிலோ 5 ரூபாய். ஆஹா.... முகத்துல அப்படியொரு ப்ரகாசம். 2 கிலோ வாங்கிட்டு அங்கிருந்து நகர்ந்து வெங்காய கடைக்கு போனேன். 1 கிலோ எவ்வளவுன்னு கேட்டேன். என்னமோ  சொன்னாரு. நமக்கு ஹிந்தியே நேஹி மாலும். இதுல பணம் சொன்னா என்ன தெரியும்?  நானும் எடை போட்டு வாங்கிட்டேன். பைல சில்லற இல்லாததால 100 ரூபாய் தாளை நீட்டுனேன். மிச்ச பணம் 30 கொடுத்தான். நானும் இப்ப கொடுப்பான். அப்பா கொடுப்பான்னு வெயிட்
பண்ணா என்னை பாத்து அப்பறம் என்ன வேணும்னு கேக்குறான் . அப்ப தான் தெரியும் வெலவாசி ஜெட் வேகத்துல போயிருக்குன்னு ;( பனிகாத்து அடிச்சும் வேர்வை பூத்து தலை சுத்தி மயக்கம் வந்துச்சு. அப்படியே கூடைல உள்ள வெங்காயத்த கொட்டிட்டு (என்னமோ திட்டுனான். அதெல்லாம் சொல்லியா தெரியனும் ;(( அங்கேயிருந்து போயிட்டேன்.


அடுத்த கடைக்கு போனேன். அதைவிட 5 ரூபாய் தான் கம்மி. என்னடா இது
வெங்காயத்துக்கு வந்த சோதனைன்னு மனசுல நெனச்சுட்டு வெறும் அரக்கிலோ தான் வாங்கிட்டு வந்தேன். அப்பறம் நெட் ஓபன் பண்ணா எல்லாரும் வெங்காயத்த பத்தி தான் சொன்னாங்க.அப்ப தான் எல்லா எடத்துலையும் இதே எழவுன்னு. அடடா தப்பு பண்ணிட்டோமே.... ஒரு மாசம் வரைக்கும் இப்படி தான் விலை இருக்கும் போலயேன்னு நெனச்சுட்டு ஒரு நோட்டும், பேனாவும் எடுத்தேன். வெங்காயம் இல்லாத சமையல் என்னன்னா இருக்குன்னு யோசிச்சேன். வெங்காய விலை கேட்டதும் வந்ததை விட இதுக்கு தான் ரொம்ப மயக்கம் வந்துச்சு. வெங்காயம் இல்லாம ரசம் வைக்க முடியல, சாம்பார் சான்சே இல்ல. குருமா முடியவே முடியாது.


அப்ப தான் மூளைல பல்ப் எரிஞ்சது. மனோரமா ஒரு படத்துல கோழிய தொங்க போட்டு வெறும் சாதத்த தட்டுல வச்சுட்டு கோழிய முகர்ந்து பார்த்து சாப்பிடுவாங்களே..... அது மாதிரி பண்ணலாம். அதுவும் இல்லைன்னா அரை
வெங்காயத்த வச்சு ரசம், கூட்டு, பொரியல் பண்ணலாம்னு யோசிச்ச நேரத்துல தான் எங்கம்மா கிட்ட இருந்து போன் வந்துச்சு. மழைன்னால வெங்காயம்லாம் அழுகி போச்சாம். இருக்குறத விட இன்னும் அதிகமா வெல ஏறுமாம். கால் கிலோ 100 ரூபாய்க்கு வித்தாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்லன்னு எச்சரிக்கை விட்டுட்டு போனாங்க. எனக்கு அழுகாச்சி அழுகாச்சியா வந்துச்சு. ஏன்னா எப்படியும் 2 நாளில்  கம்மியாகிடும்னு தான் அரக்கிலோ மட்டும் வாங்குனேன். கல்யாண நாளைக்கு பிரியாணி வேற செய்யணுமே... அடுத்து புது வருஷம் அதுவுமா கஞ்சியா போடுறன்னு திட்டு வேற விழுகுமே.... என்ன பண்ணலாம்? யோசிக்கும் போதே தல சுத்துச்சு. அப்படியே பெட்ல படுத்தவ தான். காலைல தான் முழுச்சேன்.

எப்படியும் அடுத்து வியாழன் தான் சந்தை. அதுக்குள்ளையும் விலை டாப்ல போயிடும். சோ பக்கத்து கடைல வாங்கிடலாம்னு கூடையை எடுத்துட்டு காலைல எல்லாரும் எந்திருக்குறதுக்கு முன்னாடியே கட வாசல்ல போயி நின்னேன். விலை கேட்டா 1 கிலோ 100 ரூபாயாம். எத்தன தடவ தான் நானும் மயக்கம் போடுறது?? ....

வெங்காயமே இனி சாப்பிட கூடாதுன்னு முடிவெடுத்துட்டு இருந்த நேரத்துல தான் பக்கத்து வீட்டுக்காரங்க வியாழக்கிழமை சந்தைக்கு கூப்பிட்டாங்க. சும்மா வேடிக்கை மட்டும் பாத்துட்டு வரலாம்னு நானும் கிளம்பிட்டேன். அதே வெங்காய கடக்காரன். என்னை பாத்து மொறச்சான் பாருங்க..... இதெல்லாம் வாழ்க்கைல சகஜமப்பான்னு மனசுக்குள்ளையே வீரவசனம் பேசிட்டு கிலோ எவ்வளவுன்னு கேட்டேன். 30 ரூபாய்ன்னு சொன்னான். அடப்பாவி எங்கிட்டையே விளையாடுறீயான்னு நெனச்சுட்டு 4 பேருக்கு முன்னாடி சொன்னத சாக்கா வச்சு அப்படியே மடக்கலாம்னு 1 கிலோ போடுன்னு சொல்ல அவனும் போட நான் எண்ணி கொடுத்த மூனு பத்து ரூபாய் தாளை வாங்கி நகருன்னு சொல்லிட்டான்.... உண்மையிலேயே நாம்ம காண்பதெல்லாம் கனவா ? என்ன திடீர்ன்னு இப்படி ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்குறாங்கன்னு தெரியலையே... சந்தர்ப்பத்த விடுவேனா ?? ஒரே நாள்ல 40 ரூபாய் கொறச்சவன் அடுத்த நாள் டபுள் மடங்கனா ஏத்துனா???? மறுபடியும் மண்டைல லைட் எறிஞ்சது. 3 கிலோவா வாங்கிட்டு சந்தோஷமா வந்தேன்.

இதே போல் தான் போன வருடம் சீனி விலை அதிகரித்த போது லக்னோவில் வழக்கம் போலவே இருந்துச்சு. (என்னவர் லக்னோல இருந்ததால் அப்போ சொல்லி வயித்தெரிச்சலை கிளப்பினார். யாராவது ஊர்பக்கம் வந்தா கால் மூட்டை போட்டுவிடுங்கன்னு சொன்னது வேற விஷயம்). இந்த ஊர் நாட்டாமை அம்மா மாயாவதி நிர்வாகத்திறமையால ஏற்கனவே சேமிச்சு வச்ச சக்கரையும், முன்பே ஏற்றுமதியை தடை செய்ததாலும் விலை கட்டுபடுத்தப்பட்டது (இதல்லவா நல்ல அரசியல்). அதே போல் லக்னோ வந்த புதிதில் அதாவது மே மாசத்துல வரும் போதே ஊர்ல சொந்தக்காரங்க எல்லாரோட ரேஷன் கார்டுலையும் உள்ள பருப்பை நான் வாங்கிட்டு வந்துட்டேன். ஏன்னா அப்போ கிலோ துவரம்பருப்பு 100 ரூபாயா இருந்துச்சு.  பெருமையா என்னவர்கிட்ட சொன்னா இங்கேயே பருப்பு 40 ரூபாய் தானே எதுக்கு வாங்கிட்டு வந்தன்னு ஒரே திட்டு..... 

ஆக ஏற்கனவே கையிருப்பு அதிகமா இருக்குறதுனாலையும், ஏற்றுமதி ஏற்கனவே தடை செய்ததாலும் கள்ளசந்தையில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கும் அதிகமாக வெங்காயத்தை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும்னு அம்மாக்கிட்ட இருந்து ஆணை வந்ததால் எல்லாரும் நல்லவங்களா மாறிட்டாங்க.....

எங்க ஊர் மார்க்கெட் காய்கறிகளின் விலைபட்டியல குடுத்து உங்க வயித்தெரிச்சல்ல கொட்டிக்க எனக்கு மனசு வரல. அதுனால நான் வாங்கிட்டு வந்த காய்கறிகளோட விலைய மட்டும் சொல்றேன்....

அவரக்காய் 1 கிலோ - 15 ருபாய்
உருளை 1 கிலோ - 5
வெங்காயம் 1 கி - 30
தக்காளி 1 கி - 20
பச்ச மிளகாய் 1/4 கிலோ- 5
கேரட் 1 கி- 10

பீட்ரூட் 1 கி- 20
இஞ்சி 100 கிராம்- 10
காளிப்ளவர் 4 மீடியம் சைஸ் பூ- 10 ருபாய்
எலுமிச்சை 5- 10
பட்டாணி 1 கிலோ- 18

மீன் 1 கிலோ- 30 ரூ

இப்ப என்னா விஷயம்னா...... வெங்காயம் வச்சு என்னன்னலாம் பண்ணலாம்னு ஒரு லிஸ்ட் போட்டு குடுப்பீங்களாம்... ஒவ்வொரு நாளைக்கு விதவிதமா வெங்காய பஜ்ஜி, வெங்காய சட்னி, ஆனியன் ரைஸ், ஆனியன் குர்மா, ஆனியன் சாம்பாரா வச்சு அசத்துவேனாம்.... ஓக்கேவா?????!!!!!!!!
சரி சரி விடுங்க. ஓவரா பொகை வருது....... ;))) 

இன்றோட நம்ம ப்ளாக் ஆரம்பிச்சு 2 மாசம் முடிஞ்சுடுச்சு.  போன மாசம் 50 பேரோட சேர்ந்து வானதி கொடுத்த விருது மாதிரியே இந்த வருஷம் 106 பேரா சேர்ந்து சகோதரர் அப்துல் காதர் கொடுத்த 2 விருதுகளையும் வாங்கிக்கலாம் வாங்க.....






மிக்க நன்றி சகோ...

ஆஹா அவார்டை
லெட்சுமிம்மா 
கோமு  
தொப்பி தொப்பி
myth-buster

ஆகியோர்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்... யாரும் வேண்டாம்னு சொல்லாம வாங்கிக்கோங்க.......ப்லீஸ்.........

,

99 comments:

  1. //
    "வெங்காயம் சாப்பிட வாரீகளா????"//

    இருங்க படிச்சுட்டு வரேன்..........

    ReplyDelete
  2. வெங்காய பதிவு பகிர்வுக்கு நன்றிங்க....

    ஹிஹிஹி

    ReplyDelete
  3. உஷ் அப்பா அடிச்சு பிடிச்சு மொத டிக்கெட்டு!!

    ReplyDelete
  4. //இன்றோட நம்ம ப்ளாக் ஆரம்பிச்சு 2 மாசம் முடிஞ்சுடுச்சு. போன மாசம் 50 பேரோட சேர்ந்து வானதி கொடுத்த விருது மாதிரியே இந்த வருஷம் 106 பேரா சேர்ந்து சகோதரர் அப்துல் காதர் கொடுத்த 2 விருதுகளையும் வாங்கிக்கலாம் வாங்க.....//

    இன்னும் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.........

    ReplyDelete
  6. பேசாமல் லக்னோவிற்கு புலம் பெயர்ந்து விடலாம்ன்னு யோசிக்கறேன்.நல்லா வீடா சீப்பா வாடைகைக்கு கிடைத்தால் உடனே எனக்கு டெலிகிராம் ஐ மீன் தந்தி கொடுங்க.சரீங்களா?

    ReplyDelete
  7. சமையலா!!!
    எனக்கெல்லாம் சாப்பிட மட்டும் தான் தெரியும்.
    இங்க நம்ம தலைவருக்கு ஏற்கனவே ஸ்பெக்ட்ரத்தினால பெருங்காயம், அவரு எங்கே வெங்காயத்தை பாக்க போறாரு!!

    ReplyDelete
  8. Hiiiii

    ennakkuthaan vengayam(chuma vadai nu ethana naal thaan solrathu)

    ReplyDelete
  9. /////இப்ப என்னா விஷயம்னா...... வெங்காயம் வச்சு என்னன்னலாம் பண்ணலாம்னு ஒரு லிஸ்ட் போட்டு குடுப்பீங்களாம்... ஒவ்வொரு நாளைக்கு விதவிதமா வெங்காய பஜ்ஜி, வெங்காய சட்னி, ஆனியன் ரைஸ், ஆனியன் குர்மா, ஆனியன் சாம்பாரா வச்சு அசத்துவேனாம்.... ஓக்கேவா?????!!!!!!!!
    சரி சரி விடுங்க. ஓவரா பொகை வருது....... ;)))

    ////////////

    உங்கள் எழுத்தில் நகைச்சுவை உணர்வு அதிகரித்துக்கொண்டே வருகிறது.


    ஆஹா அவார்ட்ஸ்
    ---------------------------------

    எதிர்ப்பார்க்கவே இல்லை இன்ப அதிர்ச்சி


    சகோதரிக்கு எனது நன்றிகள் பல

    ReplyDelete
  10. வட போச்சே!! சரி சரி எனக்கு வெங்காய பஜ்ஜி.

    ReplyDelete
  11. விருதுக்கு வாழ்த்துக்கள்.!!!

    ReplyDelete
  12. வெங்காயத்தை விடுங்க மற்றதும் சீப்பாகத்தான் இருக்கு,இனிமே என்ன வாங்கினதை வைத்து சமைத்து அசத்தலாக போட்டோ எடுத்து போடுங்க.

    ReplyDelete
  13. @மாணவன்

    //வெங்காய பதிவு பகிர்வுக்கு நன்றிங்க....//

    இதுக்கு என்னங்க அர்த்தம் ;))

    வருகைக்கு மிக்க நன்றி சகோ.....

    முதல் வெங்காய பஜ்ஜி உங்களுக்கு தான்

    ReplyDelete
  14. @பலே பாண்டியா

    //உஷ் அப்பா அடிச்சு பிடிச்சு மொத டிக்கெட்டு!!//

    better luck next time ;)))

    ReplyDelete
  15. @மாணவன்

    //இன்னும் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்//

    உங்க ஆசி இருந்தா கண்டிப்பா கட ஓடும் சகோ......!!!

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  16. @மாணவன்

    //உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.........///

    ஓ ரொம்ப நன்றிங்க.........

    wish u the same......

    ReplyDelete
  17. @ஸாதிகா அக்கா

    //.நல்லா வீடா சீப்பா வாடைகைக்கு கிடைத்தால் உடனே எனக்கு டெலிகிராம் ஐ மீன் தந்தி கொடுங்க.சரீங்களா?//

    உண்மையாவா சொல்றீங்க....... 2 பெட்ரூம் வீடே என் ஏரியாவில் 3500 ரூபாய் தான் க்கா........

    எப்ப வரீங்கன்னு தந்தி அனுப்புங்க. நம்ம வீட்டு பக்கத்துலையே இடம் ரெடி பண்ணி வைக்கிறேம் ;))

    ReplyDelete
  18. @பலே பாண்டியா

    //ஏற்கனவே ஸ்பெக்ட்ரத்தினால பெருங்காயம், அவரு எங்கே வெங்காயத்தை பாக்க போறாரு!!//

    தலைக்கு தலைலையே பெருங்காயம் போல.....

    அதான் மூளை கொழம்பி பெரிய ஆள் கிட்ட போய் கேக்க சொல்றார்....

    ReplyDelete
  19. @வலைபின்னுபவர்

    //Hiiiii

    ennakkuthaan vengayam(chuma vadai nu ethana naal thaan solrathu)//

    ஹாய் சகோ

    உங்க வீட்டுக்கு இந்நேரம் வெங்காய பஜ்ஜி வன்துருக்கணுமே!!!!!

    ReplyDelete
  20. பரவாயில்லையே வெங்காயம் சீப்பா கிடைச்சிருக்கே..

    ///வெங்காயம் வச்சு என்னன்னலாம் பண்ணலாம்னு ஒரு லிஸ்ட் போட்டு குடுப்பீங்களாம்... ஒவ்வொரு நாளைக்கு விதவிதமா வெங்காய பஜ்ஜி, வெங்காய சட்னி, ஆனியன் ரைஸ், ஆனியன் குர்மா, ஆனியன் சாம்பாரா வச்சு அசத்துவேனாம்.... ///

    நாங்க லிஸ்ட் போடுறதுல வீக்கு.. அதுனால நீங்களே லிஸ்ட் போட்டு சமைச்சி காட்டுங்க.. அதுமாதிரி செய்றோம்..

    விருதுக்கு வாழ்த்துகள் ஆமீ..

    ReplyDelete
  21. @தொப்பி தொப்பி

    //உங்கள் எழுத்தில் நகைச்சுவை உணர்வு அதிகரித்துக்கொண்டே வருகிறது. //

    அட சும்மா நான் பேசுறதையே எங்க வீட்டுல யாரும் காது கொடுத்து கேக்க மாட்டாங்க சகோ.... ஏதோ பொலம்புறேன் அவ்வளவு தான்...... (தன்னடக்கமாம்)

    மறுக்காமல் என் விருதை பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி சகோ

    ReplyDelete
  22. //வட போச்சே!! சரி சரி எனக்கு வெங்காய பஜ்ஜி.///

    வடலாம் ஓல்ட் அன்ட் சீப் சகோ!!!!!!!

    எப்பவும் காஸ்ட்லியாவே திங் பண்ணனும்.......... வெங்காய பஜ்ஜி தானே..... ஒடனே அனுப்பிடுறேன்!!!!!!!

    ReplyDelete
  23. @பலே பாண்டியா

    //விருதுக்கு வாழ்த்துக்கள்.!!!//

    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  24. @ஆசியா

    //மற்றதும் சீப்பாகத்தான் இருக்கு,இனிமே என்ன வாங்கினதை வைத்து சமைத்து அசத்தலாக போட்டோ எடுத்து போடுங்க//

    அத தான் நானும் பாக்குறேன். ஆனா நம்ம பிரண்ட்ஸையெல்லாம் சமச்சு கொடுமபடுத்தனுமான்னு பாக்குறேன்.......

    கண்டிப்பா போடுறேன்........

    ஊக்கத்திற்கு நன்றி ஆசியா

    ReplyDelete
  25. @சேக் அண்ணா

    ///நாங்க லிஸ்ட் போடுறதுல வீக்கு.. அதுனால நீங்களே லிஸ்ட் போட்டு சமைச்சி காட்டுங்க.. அதுமாதிரி செய்றோம்..

    விருதுக்கு வாழ்த்துகள் ஆமீ..///

    கொடுமைய அனுபவிக்க ஆள் ரெடியா?!!!!!! ;))

    வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா

    ReplyDelete
  26. கடைக்கு போகும்போது கூட கேமரா எடுத்துட்டு போறியே பரவா இல்லை எல்லாம் நல்லத்தான் இருக்கு,நீங்கள் வெங்காயம் வாங்குவதை அழகா படம் பிடிச்சு போட்டதற்கு நன்றி.

    வேறோ யாரோ சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா என்று பாடுகிறார்கள் நீங்களோ லக்னோவை ரொம்பத்தான் தலையில் வச்சு பேசுறியே,முப்பது ரூபாய்க்கு ஜாமின்தான் வாங்கலாம்.
    எல்லா மாநிலத்தை விட தமிழ் நாட்டில்தான் விலை குறைவு மழையில் சேதம் அடைந்து அழிந்து போனதால் இந்த நிலைமை கூடிய சீக்கிரம் சரியாகிவிடும்.

    கட்டுரைலாம் நல்லாத்தான் எழுதிறியே..உங்கள் பல் செட்டை வந்து எடுத்திட்டுப் போங்கள்,என் தளத்திற்கு வந்து சிரிச்சுட்டுப் போனதில் கழண்டு விழுந்திருச்சுன்னு நினைக்கிறேன்.

    அப்புறம்..வெங்காய பஜ்ஜில்லாம் சாப்பிட்டாச்சா ?
    தமிழ் fபோண்டு ரொம்ப நேரத்திற்கு பிறகு இப்பத்தான் வேலை செஞ்சுது அதான் லேட்டு.

    மற்றபடி குறை கூற ஒன்னும் இல்லை எல்லாமே அருமை.

    ReplyDelete
  27. "வெங்காயம் சாப்பிட வாரீகளா????"//

    s sure

    @ மாணவன்

    ஆபீஸ் ல வேலை செயரதில்லையா. உங்கள் பொன்னான பணி தொடரட்டும்...

    ReplyDelete
  28. இருந்தாலும் ஒரு வெங்காயத்தை வைத்து ஒரு இடுகையாக போட்டு விட்டிர்கள். கலக்குறிங்க...அவார்டு வாங்கியதற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  29. வெங்காயம் சாப்பிட வாரீகளா????
    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.........



    இதையும் படிச்சி பாருங்க

    இருட்டில் கட்டிய தாலி

    ReplyDelete
  30. இவ்வளோ விலை கம்மியா வெங்காயம் வாங்குனா நியூ இயருக்கு நீங்க "வெங்காய பிரியாணி"யே பண்ணிடலாம் சகோ! ;)
    புத்தாண்டு வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  31. @அந்நியன்

    போகும் போது காமிரா எடுத்துட்டு போவேன் தான். ஆனா இவ்வாவு தெளிவா எடுக்க தெரியாது. என் போட்டோ இல்ல. கூகுள்ல சுட்டது. என் போட்டோவா இருந்தா பத்து எடத்திலையாவது என் ப்ளாக் அட்ரஸ ஒட்டியிருக்க மாட்டேனா? ;))

    தமிழ்நாட்ட மட்டம் தட்டல அண்ணா.... எல்லாரும் வெங்காயத்த வச்சு ஒரு பதிவு போட்டாங்க. பத்தோட பதினொன்னா வெங்காயம் வெல ஏறுனத பத்தி போட மனசு வரல. அதான் இங்கே கம்மியா வாங்குனத போட்டேன்....

    //உங்கள் பல் செட்டை வந்து எடுத்திட்டுப் போங்கள்//

    அத தான் அப்பத இருந்து தேடிட்டு இருக்கேன். நல்ல வேளை கண்டுபிடிச்சு கொடுத்ததற்கு நன்றி...

    //தமிழ் fபோண்டு ரொம்ப நேரத்திற்கு பிறகு இப்பத்தான் வேலை செஞ்சுது அதான் லேட்டு.//

    உங்களுக்காவது ரொம்ப நேரத்துக்கு அப்பறம் வேலை செய்யுதா?? nhm tamil writter 2 நாளா எடுக்கல. அதான் எல்லா ப்ளாக்குக்கும் ஒரு வரிலையும் காப்பி/பேஸ்ட் பண்ணியும் கமெண்ட் போட்டுட்டு இருந்தேன். ekalappai போட்ட பிறகு சரியாச்சு. சுலபமாவும் இருக்கு...

    ஆசை தீர சாப்பிட்டுட்டேன். உங்களுக்கு வேனா ஒரு பார்சல் அனுப்பட்டுமா...... ;))

    ReplyDelete
  32. @ரமேஷ்

    சாப்பிடவும் மாமூல் கேக்க மாட்டீங்களே.. ;))

    //@ மாணவன்

    ஆபீஸ் ல வேலை செயரதில்லையா. உங்கள் பொன்னான பணி தொடரட்டும்...//

    ஏங்க உங்களுக்கு இந்த நல்ல எண்ணம்.... ;))

    ReplyDelete
  33. @இளம்தூயவன்

    //இருந்தாலும் ஒரு வெங்காயத்தை வைத்து ஒரு இடுகையாக போட்டு விட்டிர்கள். //
    thanks to வெங்காயம் ;)

    வாழ்த்துக்களுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  34. @சண்முக குமார்

    முதல் வருகைக்கு நன்றிங்க....

    நீங்க கட்சி பரப்பு செயலாளரா? (சும்மா கேட்டேன் கோவிச்சுக்காதீங்கோ) !!! இப்ப தான் முதல் முதலா பாக்குறேன் ஒரு ப்ளாக் ஓனர் அடுத்த ப்லாக்குக்கு சிபாரிசு பண்றது ;)

    ReplyDelete
  35. @பாலாஜி

    //இவ்வளோ விலை கம்மியா வெங்காயம் வாங்குனா நியூ இயருக்கு நீங்க "வெங்காய பிரியாணி"யே பண்ணிடலாம் சகோ! ;)//

    பரவாயில்லையே.......

    நியூ இயர்க்கு ஒரு ரெசிபி ரெடி ;))

    உங்களுக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோ...

    அடுத்த ஆண்டில் எல்லா வெற்றிகளும் உங்களுக்கே உரித்தாக என் ப்ரார்த்தனைகள்

    ReplyDelete
  36. வெங்காயம் பதிவு நல்லா இருக்கு. வெங்காயம் இல்லாமல் சமையல் செய்வது கஷ்டமோ கஷ்டம்.
    Happy new year to you and your family, Sis.

    ReplyDelete
  37. @வானதி

    //வெங்காயம் இல்லாமல் சமையல் செய்வது கஷ்டமோ கஷ்டம். //

    உண்மை தான் வானதி... ரொம்ப கஷ்ட்டப்பட்டேன். யோசிக்கிறதுக்கு ;))

    உங்களுக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழி

    ReplyDelete
  38. காய்கறி வாங்கிநிங்கலோ இல்லையோ அடுத்தவங்க வயித்தெரிச்சல நல்லா வாங்குறிங்க!

    ReplyDelete
  39. @வைகை

    ///காய்கறி வாங்கிநிங்கலோ இல்லையோ அடுத்தவங்க வயித்தெரிச்சல நல்லா வாங்குறிங்க!///

    அதுக்கு தான் ரோஸ் கலர்ல டானிக்கும் மாத்திரையும் வாங்கி வீட்டுல அடுக்கி வச்சுருக்கேன் ;))

    ReplyDelete
  40. வெங்காயம் பற்றி நகைசுவையுயடன் கூடிய நல்ல பகிர்வு..

    விருதுக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  41. @வெறும்பய

    //வெங்காயம் பற்றி நகைசுவையுயடன் கூடிய நல்ல பகிர்வு..

    விருதுக்கு வாழ்த்துக்கள்..//

    ரொம்ப நன்றி சகோ

    ReplyDelete
  42. http://asiyaomar.blogspot.com/2010/12/blog-post_29.html
    தொடர் பதிவிற்கு அழைத்து இருக்கிறேன்.

    ReplyDelete
  43. ஹ ஹ...ஆமி..செம போஸ்ட் போங்க..நல்லா சிரிச்சேன்...அதுவும்..

    //அப்ப தான் மூளைல பல்ப் எரிஞ்சது. மனோரமா ஒரு படத்துல கோழிய தொங்க போட்டு வெறும் சாதத்த தட்டுல வச்சுட்டு கோழிய முகர்ந்து பார்த்து சாப்பிடுவாங்களே..... அது மாதிரி பண்ணலாம். அதுவும் இல்லைன்னா அரை//
    இதெல்லாம் கிளாஸ் ஆமி...நகைச்சுவையா எழுத எல்லாம் ஒரு talent வேணும்...அற்புதமா வருது உங்களுக்கு...பின்னிட்டிங்க...

    இங்கே கால் கிலோவே 15 ரூபா (வெங்காயம்) காலையில் நான் வாங்கிட்டு வந்தேன்...உங்களை மாதிரி எல்லாம் நான் bold இல்லை...அமைதியா பணத்தை நீட்டிட்டு வந்தேன்...:))) அப்புறம் கல்யாண நாளுக்கு என்ன செஞ்சிங்க?

    ஆதித்யா வெங்காய ஊத்தப்பம் கேட்டான் .காசெல்லாம் பார்க்காமல் செஞ்சு கொடுத்தாச்சு...என்ன பண்ண ஒன்னே ஒன்னு..கண்ணே கண்ணு..:))

    விருது கொடுத்து எல்லாரையும் உற்சாக படுத்தும் உங்கள் பாங்கு அற்புதம் ஆமி...நல்லா பண்ணுங்க...உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  44. "பனிகாத்து அடிச்சும் வேர்வை பூத்து தலை சுத்தி மயக்கம் வந்துச்சு"
    "எத்தன தடவ தான் நானும் மயக்கம் போடுறது??"
    "மறுபடியும் மண்டைல லைட் எறிஞ்சது"

    இதெல்லாம் நான் ரசித்து படித்த வசனங்கள். ஆகா என்னமா எழுதிரிங்க... சுட்டாலும் எங்களுக்கெல்லாம் இப்படி எழுத வராது. ம்ம்ம் மேலும் மேலும் எழுதி கலக்க வாழ்த்துக்கள்.

    சகோ உங்க விருதுக்கு ரொம்ப நன்றிகள்.

    ReplyDelete
  45. நான் பின்னூட்டம் அனுப்பினதுமே நெட் கட். அதனால திரும்ப எழுதரேன்.
    லைஃப்லயே முதல் முறையா விருது. அதுவும் அதிர்ஷ்டக்கார ஆமி கையால்:)
    அதைக்கொண்டாட வேணாமா> எங்க வீட்ல ரொம்ப கா.........ஸ்........ட்......லி........டிஃபன்.வெங்காய பக்கோடா, சேமியா கேசரி. சாப்பிட வந்துடுங்க ஆமி.

    ReplyDelete
  46. ஆமி விருதுக்கு நன்றி. எப்படி என்னக்கும்????/??? வெங்காய மேட்டர் சூப்பர். நீங்க ஒருகொலோ காயகள் விலை பத்தி சொன்னீங்க இல்லியா, இங்க மும்பைல அதே காய் கால் கிலோ
    வுக்கு அவ்வளவு விலை கொடுக்கரோம்.

    ReplyDelete
  47. நீங்க கொடுத்து வச்சவங்க .. வெங்காயம் சாப்பிட கூப்பிடிரிங்க ....
    ஆனா இங்க வெங்காயத்த கண்ணுல கூட காட்டலை ....
    கடையில போய் சாம்பார பார்த்த கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் ஒரு சின்ன துணுக்கு கூட கெடைக்கல...
    நல்லா சொல்லிருக்கிங்க .... அப்புறம் விருது கெடைச்சிருக்கு ஒன்னும் பார்ட்டி இல்லையா...

    விருதுக்கு வாழ்த்துக்கள்...
    தொடரட்டும் உங்கள் பணி...

    ReplyDelete
  48. ஐயயோ...அடப்பாவிங்களா??? யாருமே சொல்லமாட்டிங்களா....

    இங்க ஒரு பச்சபுள்ள கம்மி ரேட்டுக்கு வெங்காயம் வாங்கிட்டேன்ன்னு,டீவி நியூஸ்ல பேட்டி கொடுக்காத கொறையா பப்ளிசிட்டி பண்ணிகிட்டு இருக்கு...(கொஞ்சம் ஓவர்தா.ம்ம்.இப்போ பாருங்க..)

    சகோ நேத்து நியூஸ் பேப்பர் பாக்கவே இல்லையா???

    போச்சுடா...உங்களுக்கு விஷயமே தெரியாதா...

    (build up போதும் விஷயத்த சொல்லுன்னு..ரீல் அந்துரபோகுது..)

    நீங்க வாங்குன அதே தேதில இந்தியா பூரா விலை மலிவுதானாம்..என்னா,அன்னக்கி வித்த வெங்காயத்த சாப்ட்டா ஆனியன் குனியா வருதாம்..அதுனால தயவு செஞ்சு வாங்குன வெங்காயத்த அப்டியே,தூக்கி போட்டுடுங்க...

    என்ன பண்ரது கஷ்டப்பட்டு வாங்குனதுதா..பட் விதி வெங்காயத்துல கட்டம் போட்டு கபடியாடீருச்சே..

    தப்பில்ல 4 பேர் சந்தோஷமா இருக்கனும்னா எதுவுமே தப்பில்ல.தூக்கி போட்டுடுங்க..(யார் சந்தோஷ்மா இருப்பா..சே சே நா இல்ல..)

    //விதவிதமா வெங்காய பஜ்ஜி, வெங்காய சட்னி, ஆனியன் ரைஸ், ஆனியன் குர்மா, ஆனியன் சாம்பாரா வச்சு அசத்துவேனாம்//

    சேட்டைய பாரு..

    (எப்புடி,உங்கள மட்டும் சந்தோஷமா இருக்க உட்றுவோமா என்ன??)

    நா என்னமோ வயித்தெரிச்சல்ல சொல்றேன்னு மட்டும் நெனச்சுகாதீங்க..

    அதுமட்டுமில்லாம இந்த வெங்காயம் அதிகமா சாப்டா நக்கல்ஸ் ஜாஸ்தியாயிடுமாமா...நீங்க சும்மாவே அ..அ (வார்த்த வரமாடேங்குது பாருங்க)அடக்கமான பொண்ணு.(பொய் சொன்னா எனக்கு கொஞ்ச ரோலிங் ஆகும்.அதா..)

    உங்களோட விலைபட்டியல பாத்தா..ஏதோ இந்திய சுதந்திரத்துக்கு முன்ன்னாடி பாத்த பட்டியல் மாதிரி இருக்கு..

    தங்கச்சி..இங்க தமிழ்நாட்ல வந்து பாருங்க..பிச்சக்காரனுக்கு மினிமம் லிமிட் வந்துருச்சு..5 ரூபாயாம்..

    ஏன்னா 1 டீ இப்போ 5 ரூபாய்..நீங்க என்னடான்னா 5 ரூபாக்கு 1 கிலோ உருளைகள உருட்டீட்டு வந்ததா சொல்ரீங்க...

    மத்த பட்டியல பாக்கும்போது நா 5 வருஷத்துக்கு மின்னாடி,ஊர்ல பாத்த விலைவாசிகளா இருக்கு..

    இங்க துபாய்ல உக்காந்துகிட்டு ஊர் விலைய கேக்கும்போது..ஊருக்கு போகவே பயம்மா இருக்கு..சும்மா வெளிய போனாலே 1000 ரூவா அம்பேலாகுதாமே..யெம்மா..

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  49. நாம எல்லாரும் மத்தவங்களைத் திட்டும்போது வெங்காயம்னு திட்டறதுனால தான் அதோட விலை ஏறி நம்மளைப் பழி வாங்குது... இனிமே சாம்பார், கத்திரிக்காய், விளக்கெண்ணெய்னு திட்டுறத நிறுத்தணும்.... அப்படினு ஞானோதயம் வரவச்ச உங்களுக்கு நன்றி... (ஆஹா..இப்டிலாம் சமூக சேவை செய்றோமான்னு உங்களை நீங்களே பாராட்டிக்கக்கூடாது..)

    உங்களோட 'ஆத்தா கண்டுபிடிச்சுட்டேன்" பதிவையும் அதன் பின்னூட்டங்களையும் வாசித்ததும் அழுகையே வந்துடுச்சு... (கண்ணுல தண்ணி வர்ற அளவுக்கு சிரிச்சோம்ல..)...பஸ்ல ஸீட் போடுறேன்னு சொல்ற மாதிரி ஏர்வாடியில சீட் போட்டு வக்கறேன்னு சொல்றீங்களே...நீங்க ரொம்ம்ம்ப நல்லவங்க....

    ReplyDelete
  50. ஃஃஃஃஃவெங்காயம் இல்லாம ரசம் வைக்க முடியல, சாம்பார் சான்சே இல்ல. குருமா முடியவே முடியாது. ஃஃஃஃஃ

    உங்களுக்க இதில் தான் கவலை நம்மளுக்கு இனி பள்ளிக் கூடத்தில் காய்ச்சல் வர வைக்க முடியாதே என்ற கவலை...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    பத்து ஆண்டினுள் பாதித்த பாடல்கள்.

    ReplyDelete
  51. நீங்க என்னதான் லக்னோவில் வெங்காயத்தை விலை குறைத்தாலும் தமிழ்நாட்டில் விலை குறைக்க மாட்டோம். ( எக்கா அஞ்சு கிலோ வெங்காயம் வாங்கி அனுப்புங்களேன் புண்ணியமா போகும்)

    ReplyDelete
  52. @ஆனந்தி

    //நகைச்சுவையா எழுத எல்லாம் ஒரு talent வேணும்...//

    அட நீங்க வேற..... இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் ரணகலமாக்கி வச்சுருக்கீங்க.... உங்க அளவுக்கு இன்னும் வரல தங்கம்...

    கல்யாண நாளைக்கு வழக்கம் போல ரவா பாயாசம், பிரியாணி, தாளிச்சா(அருசுவைல போட்டுருக்கேன் பாருங்க)சிக்கன் 65, ரைத்தா.... அவ்வளவுதேன் ஆனந்தி ;((

    //..என்ன பண்ண ஒன்னே ஒன்னு..கண்ணே கண்ணு..:))
    //
    ஹா...ஹா...ஹா.......
    வேற வழி இல்ல. என்ன கேட்டாலும் பண்ணி தான் ஆகணும் ;))

    ReplyDelete
  53. @ஆசியா

    அழைப்புக்கு மிக்க நன்றி ஆசியா... கூடிய விரைவில் பதிவிடுகிறேன்

    ReplyDelete
  54. @ மின்னல் கீற்று

    //சுட்டாலும் எங்களுக்கெல்லாம் இப்படி எழுத வராது. //

    தலைல தீய கொளுத்தி போட்டாலும் எனக்கு சயின்ஸ் எழுத வராதே... அதுக்கு என்ன செய்யலாம்? ;))

    ReplyDelete
  55. @லெட்சுமிம்மா

    //அதுவும் அதிர்ஷ்டக்கார ஆமி கையால்:)//

    நீங்க வேற!!! நானும் கைல பத்து ரூபாய் வச்சுட்டு அதிஷ்ட்டத்த வச்சு 100 ரூபாய் ஆக்கலாம்னு பாத்தேன் முடியல........

    //கா.........ஸ்........ட்......லி........டிஃபன்.வெங்காய பக்கோடா, சேமியா கேசரி//
    மும்பைல வெங்காய பக்கோடாவா? பேஸ் பேஸ். நேத்து தான் ரவா கேசரி செய்ய போய் அது ரவா களியாகிடுச்சு :(

    சீக்கிரம் அனுப்பி வைங்க கொரியர்ல!!!

    ReplyDelete
  56. @கோமு

    //ஆமி விருதுக்கு நன்றி. எப்படி என்னக்கும்????/???//

    என்னை நம்பி எனக்கே கொடுக்குறாங்க கோமு. அப்ப இதுக்குலாம் என்ன சொல்ல??

    //இங்க மும்பைல அதே காய் கால் கிலோ
    வுக்கு அவ்வளவு விலை கொடுக்கரோம்.//

    இது லக் னோ இல்லையா? அதான் லக் இல்லாத மக்களுக்கு இதுலையாவது கொஞ்சம் லக் கிடைக்கட்டும்னு நெனைக்கிறாங்க போல

    ReplyDelete
  57. @அரசன்

    //நீங்க கொடுத்து வச்சவங்க .. //

    அச்சச்சோ... நான் யார்க்கிட்டையும் எதையும் கொடுத்து வைக்கல. நீங்க எதுலையும் மாட்டிவுட்டுராதீங்க. அப்பறம் என் நக/பணம்/சொத்து உங்கிட்ட தான் இருக்குன்னு வன்துட போறாங்க ;))

    //அப்புறம் விருது கெடைச்சிருக்கு ஒன்னும் பார்ட்டி இல்லையா...//
    ஒரு சேன்ச்சுக்கு நீங்க வைங்களேன்... எந்த ஹோட்டல் என்பதெல்லாம் என் சாய்ஸ் ஓக்கேவா?? வரும் போது பர்ஸ மட்டும் வெயிட்டா வச்சுட்டு வாங்க

    ReplyDelete
  58. @ரஜின் அண்ணா

    நாங்களாம் சிக்கன் மட்டன் குனியா (பறவ காய்ச்சல்) வந்த போதே டெய்லி கோழி சாப்பிட்டவங்க...

    சுனாமி வந்த பொறவும் மீன் சாப்பிட்டவங்க....

    எங்கக்கிட்ட போயி.....???

    போங்க தம்பி(அண்ணா) போங்க........
    ம்,,,,,நம்மக்கிட்டேயேவா?????
    என்ன சொன்னாலும் அசர மாட்டோம்ல....

    //பிச்சக்காரனுக்கு மினிமம் லிமிட் வந்துருச்சு..5 ரூபாயாம்..//

    தெருவுல போன யானைக்கு 2 ரூபாய் கொடுத்து ஆசீர்வாதம் பண்ண சொன்னா என் முகத்துலையே திருப்பி அடிச்சுடுச்சுன்னா பாத்துக்கோங்கலேன்......... என்ன கொடும டா இது. பேசாம 10 பேரை வாடகைக்கு எடுத்து பிச்ச எடுக்குற கம்பெனி வச்சுடலாம் போல ;)

    நீங்கலாம் துபாய் வாசி. இந்த விலைவாசிக்குலாம் பயப்படுவீங்களா????? சும்மா அள்ளி வீசிட மாட்டீங்க

    எனிவே தட்டு தடுமாறியாவது அடக்கமான பொண்ணுன்னு உண்மைய ஒத்துக்கிட்டதுக்கு மிக்க நன்றி அண்ணா...

    ReplyDelete
  59. @என்ரென்றும் பதினாறு

    காதல் கத்திரிக்காய்னு சொல்றத கூட தடை செய்யணும்.. அத விட்டுட்டீங்களே....

    அப்பறம் கத்திரிக்காய் வெல அதிகமானாலும்

    ரீசார்ஜ், தியேட்டர் டிக்கெட்ன்னு போற காதல் நாளைக்கு வீடு கொடு, ஊரை வெல பேசுன்னு சொன்னாலும் நான் பொறுப்பாக மாட்டேன்..... ;)

    ரொம்ப நல்லவங்க நீன்க. பின்னூட்டம்லாம் படிக்கிறீங்களே... அதுக்கே உங்கள கோயில் கட்டி கும்பிடணும்......

    ரொம்ப நன்றி சகோ

    அடிக்கடி வாங்க

    ReplyDelete
  60. @கிறுக்கன்

    //எக்கா அஞ்சு கிலோ வெங்காயம் வாங்கி அனுப்புங்களேன் புண்ணியமா போகும்)//

    ரொம்ப தான் வயித்தெரிச்சல்ல இருக்கீங்கன்னு தெரியுது. உங்களுக்கு பார்சல் அனுப்பி நான் ஜெயிலுக்கு போகவா???? !!!!!!

    கண்காணிப்பு குழு ஒன்னு செயல்படுது தம்பி...........

    ReplyDelete
  61. @மதி.சுதா

    //உங்களுக்க இதில் தான் கவலை நம்மளுக்கு இனி பள்ளிக் கூடத்தில் காய்ச்சல் வர வைக்க முடியாதே என்ற கவலை...
    //

    ஆமாம்ல அது வேறையா????

    உங்களுக்கெல்லாம் காய்ச்சல் வருதா????? நானும் சின்ன புல்ளைல ஒரு கிலோ வெங்காயத்தையாவது காலி பண்ணியிருப்பேன். ஆனா காய்ச்சல் வரவே இல்ல (எதையும் தாங்கும் இதயமோ ;))

    ReplyDelete
  62. //சிக்கனத்தில் நம்மள மிஞ்ச ஆள் ஏது?).... //

    சரி சரி எங்க தாங்ஸ்க்கு அப்படியே
    ட்யூசன் ப்ளீஸ்!!

    //அப்படியே பெட்ல படுத்தவ தான். காலைல தான் முழுச்சேன்.//

    அப்ப பகல்ல படுத்த நீங்க மறுநா காலைல தான் எழுந்தீங்களா? விடிஞ்சிடும்!! இந்த ட்யூசன் கேன்சல்!!அவ்வ்வ்வ்..!!

    விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துகள், கொடுத்த உங்களுக்கு 'சலாம்' ஆமி!! நன்றி!!

    ReplyDelete
  63. கண்ணு கலங்குது நண்பா.. ஹி..ஹி. வெங்காயத்தால இல்லை

    ReplyDelete
  64. @ சகோ அப்துல் காதர்

    ////சிக்கனத்தில் நம்மள மிஞ்ச ஆள் ஏது?).... //

    சரி சரி எங்க தாங்ஸ்க்கு அப்படியே
    ட்யூசன் ப்ளீஸ்!!

    //அப்படியே பெட்ல படுத்தவ தான். காலைல தான் முழுச்சேன்.//

    அப்ப பகல்ல படுத்த நீங்க மறுநா காலைல தான் எழுந்தீங்களா? விடிஞ்சிடும்!! இந்த ட்யூசன் கேன்சல்!!அவ்வ்வ்வ்..!! /////

    ஆஹா....

    இதுலேயே காசு பாக்கலாம்னு நெனச்சேனே.... கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாமலேயே போச்சே.....

    ReplyDelete
  65. @கவிதை காதலன்

    //கண்ணு கலங்குது நண்பா.. ஹி..ஹி. வெங்காயத்தால இல்லை//

    நான் கூட எதாவது எக்கதப்பா சீரியஸான பதிவு போட்டுட்டேனோன்னு ஓடி வந்தேன்ங்க.....

    ReplyDelete
  66. இப்படி வெங்காய உணவா சாப்பிடறது சரி இல்லை.. விருதுகளுக்கு வாழ்த்துக்கள். உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  67. @ எல் கே

    அப்படியா...

    இப்ப தாங்க கேக்குறேன்..... ;)

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ....

    உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  68. @தொப்பி தொப்பி

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ....

    உங்களுக்கும் என் மனமார்ந்த இனிய புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  69. அங்கே காய்கறி எல்லாம் ரொம்ப மலிவாகவும் ஃப்ரஷ் ஆகவும் இருக்கும். இந்த மாதம் என் மனைவியுடன் கான்பூர் போனபோது மார்கெட் சுற்றினோம். விலையை பார்த்து என் மனவியே மெய்மறந்து போய்விட்டாள். என்னதான் சொல்லுங்க அது எனக்கு பிடிக்காத ஊருங்க.சொர்க்கமே என்றாலும் ...................

    ReplyDelete
  70. யாருங்க அது இவ்ளோ பப்ளிக்கா வெங்காயம் சாப்பிட அழைப்பது... அட நம்ம சகோதரியா!!!. வெங்காயம் பற்றி பேசியதால் உங்களை CBI குளோசா வாட்ச் பண்றதா கேள்வி!!!.

    ReplyDelete
  71. தங்களுக்கு எனது புது வருட வாழ்த்துக்கள் ஆமினா..

    ReplyDelete
  72. நீங்க நல்லா நகைச்சுவையாக எழுதிரிங்க. உங்க பதிவ படிக்கிறதினாலே எனக்கும் கொஞ்சம் நகைச்சுவை வருதுங்க
    நானும் வெங்காயம் வாங்க போனேன். மார்கெட்ல போய் ஒரு கிலோ வெங்காயம் எவ்வளவுங்கனு கேட்டேன்?
    கடைக்காரன் சொன்னான் 100 ரூபாய் என்று!
    நானும்கொஞ்சம் குறைக்கக்கூடாதா என்று கேட்டேன்?
    அதற்கு அவன் சொன்னான் இப்பவே ஒரு கிலோ வெங்காயமுனா 900 கிராம் தான் போடுறோம். இன்னும் எப்படிங்க குறைச்சு போடுறத..

    ReplyDelete
  73. தங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அடுத்த ஆண்டில் எந்த குறையுமின்றி மகிழ்ச்சி,நிம்மதி பெருக அந்த ஆண்டவனை வேண்டிகொள்கிறேன்.

    ReplyDelete
  74. உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  75. ஹாய் ஆமி.. ஏற்கனவே ஒரிரு முறை உங்க பிளாக்கைப் பார்வையிட்டேன் ஆனால் பின்னூட்டம் இட முடியாமல் போய் விட்டது. திரும்ப இன்றுதான் வர முடிந்தது.வந்து பார்த்தால் பட பட வென பதிவுகளும் அதிகரித்து விட்டன.. கூடவே தொடர்பவர்களும். மன மார்ந்த வாழ்த்துக்கள். :) உங்க திறமைக்கும் வேகத்திற்கும் தீனி போடும் இடம் தான் இது.. உங்கள் பதிவுகள் மூலம் லக்னோ பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றிகள்:)சேவை தொடர வாழ்த்துக்கள். சுடச் சுட வெங்காய பக்கோடா போட்டு வையுங்க வரேன்.. ;)

    ReplyDelete
  76. இன்றும் நாளையும் யார் எந்த பதிவு போட்டாலும் அதற்க்கான பின்னூட்டம் மட்டும் டெம்ப்ளேட் பின்னூட்டம்தான். அது
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  77. @இனியவன்

    மனைவியும் அசந்துட்டாங்களா????? இட்லியும் தோசையும் கிடைக்காததால் இதுவும் எனக்கு கொஞ்சம் பிடிக்காத ஊர் தான் ;))

    வாழ்த்துக்களுக்கு நன்றி சகோ

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  78. @தவமணி அண்ணா

    //வெங்காயம் பற்றி பேசியதால் உங்களை CBI குளோசா வாட்ச் பண்றதா கேள்வி!!!.//

    காணாமல் போனவர்களில் இடம் பெற்ற உங்களையும் தேடிட்டு இருக்குறதா துப்பு கிடைச்சுச்சு அண்ணா.....

    எப்படி இருக்கீங்க? விவசாயம் எப்படி போகுது?

    வருகைக்கு மிக்க நன்றி அண்ணா

    ReplyDelete
  79. @பிரஷா

    வாழ்த்துக்களுக்கு நன்றி பிரஷா

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  80. @அவர்கள் உண்மைகள்

    //இப்பவே ஒரு கிலோ வெங்காயமுனா 900 கிராம் தான் போடுறோம். இன்னும் எப்படிங்க குறைச்சு போடுறத.//

    இதுக்கு தான் நான் வெவரமா தராசு எடுத்துட்டு போயிடுவேன் சகோ....!! லக்னோ காய்கறி கடைக்காரங்க என்னை பாத்தாலே ஓடி ஒளியுறாங்கன்னா பாத்துக்கோங்களேன்....

    ஆனா என்னை பாத்து காமெடி வந்துருன்னு சொன்னது தான் பாஸ் இந்த வருடத்தின் மற்றம் பிறக்க போகும் அடுத்த வருடத்தின் சிறந்த காமெடி ;))

    ReplyDelete
  81. @சசிகுமார்
    //தங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அடுத்த ஆண்டில் எந்த குறையுமின்றி மகிழ்ச்சி,நிம்மதி பெருக அந்த ஆண்டவனை வேண்டிகொள்கிறேன்.//

    மிக்க மகிழ்ச்சி சகோ...

    உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  82. @ நிலாப்பெண்

    சுவர்க்கத்திற்கு நிலா வந்து போனதை மேகங்களும் வானமும் சொல்லாமல் போய்விட்டதே...... ;) (கவிதையாம்... ஒத்துக்கோங்க....)

    ரொம்ப நன்றி நிலா....

    இந்த பாராட்டும் வாழ்த்தும் எனக்கு இன்னும் அதிக எனர்ஜி கொடுக்குது ;)

    இனி அடிக்கடி வாங்க

    ReplyDelete
  83. @கஸாலி அண்ணா

    //இன்றும் நாளையும் யார் எந்த பதிவு போட்டாலும் அதற்க்கான பின்னூட்டம் மட்டும் டெம்ப்ளேட் பின்னூட்டம்தான். அது
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

    இது நல்ல ஐடியாவா இருக்கே...!! இருங்க நானும் ஒரே கமெண்ட வச்சு பதிவுலகத்தை ஒரு ரவுண்ட் சுத்திட்டு வரேன் ;)

    வாழ்த்துக்களுக்கு நன்றி சகோ...

    உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  84. அன்புள்ள ஆமினா.. சந்தோஷம் தரும் வருடமாக அமையட்டும் 2011!!

    ReplyDelete
  85. அருட்பேராற்றலின் கருணையினால்

    தங்களும், தங்கள் குடுமபமும், சுற்றம் மற்றும் நட்பு அனைவரும்

    இப் புத்தாண்டு முதல்

    உடல் நலம்
    நீள் ஆயுள்
    நிறை செல்வம்
    உயர் புகழ்
    மெய் ஞானம்

    பெற்று வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  86. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  87. @சிவகுமார்

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி...

    உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  88. @சாய் கோகுல கிருஷ்ணா
    உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  89. @ஹைஷ் அண்ணா

    மிக்க நன்றி அண்ணா

    உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  90. @சிவதர்ஷன்

    வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி சகோ

    உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  91. உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  92. பழையதை மறப்போம்
    புதியதை நினைப்போம்

    கோவங்களை துரோப்போம்
    சந்தோசங்களை பகிர்வோம்

    எதிரியை மன்னிப்போம்
    நண்பனை நேசிப்போம்

    சொன்னதை செய்வோம்
    செய்வதை சொல்வோம்

    தீயதை விட்தெரிவோம்
    நல்லதை தொடர்வோம்

    2010 இற்கு விடை கொடுப்போம்
    2011 இணை வரவேற்போம் ...


    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
    wish u happy new year to all

    ReplyDelete
  93. ஆமினா அக்காவுக்கு
    ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  94. அஸ்ஸலாமு அழைக்கும் ஆமினா!

    வெங்காய விலை ஏறினதுதும்,
    வெங்காயத்திற்கு ஒரு பதிவு
    போட்டு விட்டீர்கள், சென்னையில்
    இன்னும் விலை குறையவில்லை.
    இன்று கிலோ 80 ருபாய்.

    உங்கள் ஒவ்வொரு பதிவும்
    அருமையாக இருக்கு.அவார்டு
    வாங்கியதற்கு வாழ்த்துக்கள்.

    உங்களுக்கும்,குடும்பத்தாருக்கும்
    என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  95. @கணேஷ்

    மிக்க நன்றி கணேஷ்

    ReplyDelete
  96. @FARHAN

    கவிதையாவே வாழ்த்து சொல்லிட்டீங்களா? மிக்க நன்றி சகோ....

    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  97. @பாரத் பாரதி

    ரொம்ப நன்றி மா....

    உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  98. @ஆயிஷா அபுல்

    வ அலைக்கும் சலாம் வரஹ்....

    ஹா... இன்னும் குறையலையா? இப்ப தான் என் பிரண்ட் தமிழ்நாட்டில் விலை குறைந்ததாக சொன்னார்.

    இன்னைக்கும் சனிகிழமை சந்தை. கிலோ வெங்காயம் 20 ரூபாய்க்கு வாங்கிட்டு வந்தேன் ;))

    ReplyDelete
  99. ahem ahem enaku venkayaa bajjiiiiii venum ahem ahem

    ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)