தொடர்பதிவுக்கு என்னை அழைத்த அதிரடி ஹாஜாவிற்கு என் மனமார்ந்த நன்றி.


பத்து வருடங்களில் அதிகம் கவர்ந்த அல்லது பிடிச்ச (ரெண்டும் ஒன்னு தானோ) பாட்டை செலக்ட் பண்ணனுமாம். ரொம்பவே கஷ்ட்டப்பட்டு (உண்மையாவே. சொன்னா நம்பவா போறீங்க) 2001 முதல் 2010 வரை பாடல்கள் ஒவ்வொரு வருடத்திலும் எனக்கு பிடிச்ச பாடலை கொடுத்துருக்கேன்.  உன் ரசனைக்கும் என் ரசனைக்கும் ஒத்து வரலன்னு நெனைக்காதீங்க. கஷ்ட்டப்பட்டாவது என் ரசனைகளை படிச்சுட்டு போங்க ;))


2001-பார்த்தாலே பரவசம்
ஆசைபட்ட பொருள் அருகிலிருக்க அப்போது அதை கண்டுக்கொள்வதில்லை. இல்லாத போது தான் அதன் அருமை தெரியும். இந்த பாடலும் அதையே தான் சொல்லும். தன் துணையை பிரிந்த தம்பதிகள் மீண்டும் பழைய நாட்கள் மீளாதா என சொல்வது போல் அமைந்த பாடல்.

பழைய தாலியில் புதிய முடிச்சுகள் கூடாதா???? 

என்ற வரி ஏக்கத்தில் ஒரு பெண் சொல்வது போலவும் கெஞ்சுவது போலவும் இரு அர்த்ததில் தொணிக்கும். எனக்கு பிடிச்ச வரி. அதே போல் தான் ஒரு ஆணாக இருப்பதால் யாருக்கும் தெரிய கூடாது என்பதற்காக இருட்டில் அழுகிறேன் என சொல்வது பிரிவின் வலியை சொல்லும் உச்சகட்ட வரிகள். இதுக்கு மேலும் சொல்ல எதுவுமே இருக்க முடியாது. கேக்கும் போதே மனதை ஏதோ இனம் புரியாத உணர்வுக்கு அழைத்துச்செல்லும்.



2002- ரன்
இந்த பாட்டு அந்த படத்துல சேக்கல. ஏன்னு தெரியல. அதுல உள்ள எந்த பாடலும் தோற்கல. அதுவும் அவங்களுக்கு வசதியா போச்சு. ஆனா எம் எமில் கேட்டு ஆசையாய் தியேட்டருக்கு சென்ற எனக்கு இருட்டுலையும் பெரிய பல்பா கெடைச்சது. அவ்வளவு அழகான பாட்டு. மீராவை பார்த்ததும் மனசுக்குள்ள பட்டாம் பூச்சி பறக்குற மாதவன். அப்ப மீராவின் அழகை வர்ணிக்கும் விதமாக ஒரு மீயூசிக். கேட்டதும் பயங்கர சந்தோஷம். ஏன்னா அது தான் அந்த பாட்டின் பல்லவிக்கு முன்னாடி வரும் இசை. ஆனா அது முடிஞ்சதும் ஓஹோன்னு கத்துவானுங்க எழவு புடிச்சவன்க. வாய்க்கு வந்தபடி திட்டிட்டு தான் வெளியேறுனேன். தனிமை விரும்பும் காலகட்டத்தில்
 
நாம் வாழும் வீடு யாருமில்லா தீவு. 
யாருக்கும் அனுமதி கூடாது. 
வழிமாறி யாரும் வந்தாலும் வரலாம்.
வீட்டுக்கு முகவரி கூடாது”

என்ற வரிகள் என்னை ரொம்பவே ஈர்த்தது.

 

2003- மனசெல்லாம்

நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது கண்மணியே
கண்ணுக்கு கண்ணாக என்றென்றும் நீ வேண்டும் பொன்மணியே”

இப்படி தான் என் மொபைல்க்கு நைட் எஸ் எம் எஸ் வந்துச்சு என்னவர்ட்ட இருந்து. என்ன கவிதைலாம் சொல்றீங்கன்னு நான் ரிப்லே பண்ணியதற்கு காதலிச்சா தன்னால அருவி மாதிரி கொட்டும். கண்டுக்காதன்னு சொல்ல பயங்க சந்தோஷம் (அது பெண்களின் குணம் ஹி..ஹி...ஹி...). அடுத்த நாள் என் பிரண்ட்ஸ் கிட்ட காமிச்சா நீ படம்லாம் பாக்குறதில்லையான்னு கண்டபடி கிண்டல் பண்ண ஆரம்பிச்சாங்க. அப்ப தான் தெரியும் அது மனசெல்லாம் படத்துல வர பாட்டுன்னு. அன்னைல இருந்து இப்படி தான் ஏமாந்துட்டே இருக்கேன் ;( இப்ப கூட அந்த பாட்டு கேட்டா பயங்கரமா சிரிப்பார்.

 

2004- ஆயுத எழுத்து
வித்தியாசமான பாடல். அதனால் தான் என்னை மிகவும் ரொம்ப கவர்ந்தது.

என் வானம் என் வசத்தில் உண்டு
என் பூமி என் வசத்தில் இல்லை
புதிதாய் காதல் மலர்ந்தால் உள்ளம் காணும் மாற்றம் இதுவாகத்தான் இருக்கும் ;)

உன் குறைகள் நான் அறியவில்லை
அறிந்தால் சூரியனில் சுத்தமில்லை

ஊரே சொன்னாலும் என் காதலனை குற்றம் சொல்ல மாட்டேன். கலங்கமில்லாதவன் என்னவன் என சொல்வது போல் அமைந்த வரிகள் என்னை ரொம்பவே கவர்ந்தது.

 


2005- கண்ட நாள் முதல்

அநேகமா அந்த வருடத்தில் வந்து சைலண்டா வெற்றி பெற்ற படம் இதுவாக தான் இருக்கும். மென்மையான காதலை சொல்லிய விதம் அருமை. இதில் மேற்கே மேற்கே பாடலும் பனித்துளி பாடலும் என்னை ரொம்பவே கவர்ந்தது. இப்பாடலினை பிடிக்காதவர்களே இல்லை என சொல்லும் அளவுக்கு இசை அமைந்துள்ளது.
 

2006-சில்லுன்னு ஒரு காதல்

எப்போதுமே மனைவி தான் கணவனை பிரிந்தால் அழுவாள் என்பது போலவே தமிழ் சினிமா சித்தரிக்கும். அதிலிருந்து வித்தியாசப்பட்ட பாடல் இது.


2007 - சத்தம் போடாதே

 நேகா பாஷின் பாடிய பாடல். யுவன் சங்கர் ராஜாவின் இசையில்.....
இனிய சலனம் கொள்ளும் ஒரு பெண்ணின் உணர்வுகள் வரிகளில் கொண்டு வந்த விதம் ரொம்பவே ரசிக்கும் விதமாக இருக்கும்.


2008- வாரணம் ஆயிரம்

இந்த பாடலில் ரொம்ப நாளைக்கு பிறகு சிம்ரன் ஆடுவாங்கன்னு ரொம்ப ஆசையா இருந்தேன். ஆனா பாடலோடு கூட காட்சிகள் என்பதால் நடனம் இல்லை. இருந்த ஒரு காட்சியும் சும்மா கத்தட்டுற மாதிரியும் தான் இருந்தது. ஆனா பாடலும் அமைக்கப்பட்ட காட்சிகளும் ரொம்பவே அருமை.


2009- நினைத்தாலே இனிக்கும்

இந்த பாட்டு பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சுருக்கும் எதுவும் நான் சொல்வதற்கு இல்லைன்னு நெனைக்கிறேன். எல்லா பாடலும் வெற்றியான போதும் அதிகமா விரும்பி கேட்ட பாடலாக இது இருந்தது. காதல் வந்தால் என்னன்ன மாற்றங்கள் வரும் என்பதை மெல்லிய இசையில் சொன்ன விதம் என்னை ரொம்பவே ஈர்த்தது.

ஒரு முறை நினைத்தேன் உயிர்வரை இனித்தாயே

மறுமுறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே

சிறு துளி விழுந்து நிறைகுடம் ஆனாயே

அரை கணம் பிரிவில் நரை விழ செய்தாயே

நீ இல்லாத நொடி முதல் உயிர் இல்லா ஜடத்தைப்போல் ஆவேனே

இந்த வரி ரொம்பவே பிடிக்க்கும். உண்மை காதலை அனுபவித்தவர்களால் மட்டுமே இத்தகைய வரிகளை படைக்க முடியும். ரொம்பவே ரசிச்ச பாட்டு இது


2010 விண்ணை தாண்டி வருவாயா?

அந்த பொண்ணை பார்த்ததும் இவுக கண்ண சிமிட்ட மறந்துட்டாங்களாம். கேக்கும் போதே ரொம்பவே பிடிச்சு போன பாட்டு. ஒவ்வொரு காட்சியும் ஓவியம் போலவே அமைந்தது தான் இந்த படத்தில் ப்லஸ் மற்றும் வித்தியாசமான திரைக்கதை. எனக்கு தெரிஞ்சு சிம்பு நல்லா நடிச்ச ஒரே படம் இது தான். அந்த அம்மணியும் கூட




___________________________________________________________________________________

இதெல்லாம் போக இன்னும் 2 பாட்டு மட்டும் சொல்லிட்டு போய்டுறேன். கோவிச்சுக்காதீங்க ;) (எப்படிலாம் கெஞ்ச வேண்டியதா இருக்கு). ஏன்னா இது எப்பவுமே என் ஆல் டைம் பேவரைட் ;))

டும் டும் டும்

நட்புக்கும் காதலுக்கும் இடையில் மனம் மாட்டிக்கொண்ட போது ஏற்படும் தடுமாற்றம், வேதனை எல்லாவற்றையும் ஒரே கவிதையில் வார்த்தைகளை பூட்டிவிட்டது போலவே உணர்வேன்.
தன் ஆண் தோழனிடம் இப்ப நாம்ம பிரிஞ்சுட்டோம். எப்பவாவது சந்திப்போம். அப்ப பார்த்தா அடுத்தவரிடம் அறிமுகப்படுத்த வேண்டுமானால் என்னை காட்டி இவளின் உயிர்தோழன் தான் நான் என சொல்வாயா? அல்லது வெறும் வழிபோக்கன் என சொல்வாயா? என பெண் கேட்பது போல அமைந்த வரிகள் என்னை கவர்ந்த வரிகள். இப்போதைய பிரிவை விட எப்போதாவது எதேச்சையாக சந்திக்கும் சூழ்நிலை பிரிவை விட கொடியது. அப்போது தான் மனம் பல தடுமாற்றங்களையும் எதிர்பார்ப்புகளையும் ஒரு சேர கொண்டு வந்து நம்மை பாடாய்படுத்தும். சொல்ல முடியாத அந்த உணர்வை வெறும் 4 வரிகளில் அடக்கியதாலோ என்னவோ இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.




ஆயிரத்தில் ஒருவன்

இந்த படத்துல உள்ள பாடல்களை விடவும் இந்த இசை என்னை மிகவும் கவர்ந்தது. இந்த படம் வெளியாகும் போது தான் நான் முதல் முதலாய் லக்னோவிற்கு வந்தேன். அதனால் இந்த இசை மக்களின் ஆதரவை பெற்றதா என தெரியவில்லை. இரயில் தூங்கும் நேரத்தை தவிர இதை தான் கேட்டுக்கொண்டே வந்தேன். கண்டிப்பா தேசிய விருது வாங்கும்னு நெனைக்கிறேன் (தேசிய விருது அறிவிச்சுட்டாங்களா). இதுக்காகவே ஏ. ஆர் மியூசிக் வெளியாகும் போது  பாபுலராக கூடாதுன்னு மனசு சொல்லிக்கிட்டே இருக்கு. ஏ. ஆர் க்கு அடுத்து எனக்கு பிடிச்ச ஒரே இசையமைப்பாளர் ஜீ.வி. தான். தயவு செய்து இந்த இசையை கேக்கும் போது கண்ணை மூடிக்கொண்டு கேளுங்கள்.. நீங்களும் ரசிப்பீங்க. அந்த காலத்து யாழ் எல்லாம் யூஸ் பண்ணியதுன்னு சொன்னாங்க. நான் கூட சும்மா வாசிச்சுவிட்டுருப்பாங்கன்னு நெனச்சேன். ஆனா ஒவ்வொரு இசை கருவியிலும் தன் திறமையை அதிகமாகவே செலுத்தி வடிவமைச்சுருக்கார்.

, , ,

62 comments:

  1. தமிழ் மனம் ஒட்டுபட்டை வேலை செய்து போல
    வாழ்த்துக்கள்


    நீங்களும் உங்களுக்கு ஒட்டு போடலாம்

    ReplyDelete
  2. அனைத்து பாடல்களும் அருமை கடைசி பாடலும் இசையும் வாவ் கடைசி பாட்ட மட்டும்தான் கேட்டேனுங்க மற்றதெல்லாம் படிச்சேனுங்க சூப்பர்

    ReplyDelete
  3. கடந்து வந்த பாதை யில் உள்ள பாடல்கள் அருமை, இந்த பதிவுக்கு ராப்பகலா உழைத்தீங்க போல

    ஹிஹி
    ( ஸ்பகதி, எல்லா சமையலும் குக்கரில் தான் , ஒரு விசில் விட்டு இரண்டாவது விசில் வரும் போதுஆஃப் பண்ணிடனும், )

    ReplyDelete
  4. நல்ல தேர்வு ஆமினா.

    ReplyDelete
  5. பாட்டு தெரிவு சூப்பர்
    ஆரம்பத்துல மாதவன் ரசிகைன்னு நெனசிட்டன் மாதவன் பாட்டாவே செலக்ட் பண்ணி போட்டு இருக்கீங்க

    ReplyDelete
  6. @தொப்பி தொப்பி

    //தமிழ் மனம் ஒட்டுபட்டை வேலை செய்து போல //

    பாடா படுத்தி ஒரு வழியா என்ன வழின்னு தெரிஞ்சதுக்கு பிறகு செய்தேன். சரியாச்சு....

    மறக்காம கேட்டதுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ

    //நீங்களும் உங்களுக்கு ஒட்டு போடலாம்//
    அட நீங்க வேற முதல் ஓட்டே எப்போதும் நான் தான் போடுவேன்.இந்த முறை நீங்க முந்திட்டீங்க....!!!

    ReplyDelete
  7. @தினேஷ் குமார்

    //கடைசி பாட்ட மட்டும்தான் கேட்டேனுங்க மற்றதெல்லாம் படிச்சேனுங்க//

    அப்படிங்களா? எனக்கும் அது தான் வேண்டும். எனக்கு பிடிச்சது உங்களுக்கும் பிடிச்சதில் ரொம்பவே சந்தோஷம்.

    வருகைக்கு மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  8. @ஜலீலாக்கா

    //இந்த பதிவுக்கு ராப்பகலா உழைத்தீங்க போல//

    என்னவர்கிட்ட பொறுப்ப ஒப்படச்சுட்டு நான் தூங்கிட்டேன்க்கா. ஒவ்வொரு வருஷத்துலையும் ஹிட்டான படம் மட்டும் செலக்ட் பண்ணி, யூ டூப் கோடும் எடுத்து கொடுத்துட்டார். செலக்ட் பண்ணி கருத்து எழுத தான் 2 நாள் தேவப்பட்டுச்சு :))

    சந்தேகத்த தீர்த்து வச்சதுக்கு நன்றிக்கா!!

    ReplyDelete
  9. @ஸாதிகாக்கா

    மிக்க நன்றிக்கா

    ReplyDelete
  10. @FARHAN

    //ஆரம்பத்துல மாதவன் ரசிகைன்னு நெனசிட்டன் மாதவன் பாட்டாவே செலக்ட் பண்ணி போட்டு இருக்கீங்க//
    அட ஆமாம். 4 பாட்டு மாதவன் பாட்டா இருக்கு. இப்ப தான் கவனிக்கிறேன். எனக்கு ஹீரோ ஹீரோயின்லாம் பிடிக்காது சகோ. வெறும் இசையமைப்பாளர் இயக்குனர் மட்டுமே. மத்த படி எனக்கு பிடிச்ச ஹீரோன்னா ஜே டி சக்கரவர்த்தி (தெரியுமா?)மட்டும் தான்.

    வருகைக்கு மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  11. மிக பொறுமையோடு தொகுத்திருகின்றீர்கள்
    பாராட்டுக்கள்

    ReplyDelete
  12. அனைத்துப் பாடல்களுமே அருமையான தேர்வு
    சிறப்பாக தொகுத்து வழங்கியதற்கு நன்றிகள் பல

    ReplyDelete
  13. நல்ல அருமையான பாடல்களின் தொகுப்பு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. பாடல்கள் எல்லாம் நல்லா இருக்கு வாழ்த்துக்கள் சகோ.....

    ReplyDelete
  15. பாடல் செலக்சன் மிகப் பொறுமையா, பொறுப்பா செய்திருக்கீங்க!!

    "ஆமா அதென்ன கடந்து வந்த பாதையில்" ... ரோட்டில் நடந்து போகும்போதே கேட்டு எழுதிய பாட்டா?

    அப்ப வீட்டில் உட்கார்ந்து கேட்டப் பாட்டு ஒரு கலெக்சன் போடுங்க!!
    :-))) எப்படி?? விடுவமா!! ஹா..ஹா..

    ReplyDelete
  16. அருமையான பாடல்களின் தொகுப்பு..

    ReplyDelete
  17. //ஆமினா said...

    என்னவர்கிட்ட பொறுப்ப ஒப்படச்சுட்டு நான் தூங்கிட்டேன்க்கா. ஒவ்வொரு வருஷத்துலையும் ஹிட்டான படம் மட்டும் செலக்ட் பண்ணி, யூ டூப் கோடும் எடுத்து கொடுத்துட்டார். செலக்ட் பண்ணி கருத்து எழுத தான் 2 நாள் தேவப்பட்டுச்சு :))//

    //Blogger மகாதேவன்-V.K said...

    மிக பொறுமையோடு தொகுத்திருகின்றீர்கள்
    பாராட்டுக்கள்//


    என்ன கொடும சார் இது??#கமெண்ட் ஐயும் படிப்போர் சங்கம்

    //ஜே டி சக்கரவர்த்தி????//
    எங்கேயோ கேட்ட பெயர் யார்ங்க??

    ReplyDelete
  18. என்னவர்கிட்ட பொறுப்ப ஒப்படச்சுட்டு நான் தூங்கிட்டேன்க்கா. ஒவ்வொரு வருஷத்துலையும் ஹிட்டான படம் மட்டும் செலக்ட் பண்ணி, யூ டூப் கோடும் எடுத்து கொடுத்துட்டார். செலக்ட் பண்ணி கருத்து எழுத தான் 2 நாள் தேவப்பட்டுச்சு :))/////


    பாட்டெல்லாம் பாக்கும்(கேக்கும்) போதே நெனச்சேன்! என்னடா எல்லாம் ஆண்களின் பார்வையில் இருக்கேன்னு?! உங்கள் கணவருக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. நல்ல தொகுப்பு...

    ஒவ்வொரு பாடல்களையும் கவனமாக தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன்...

    ReplyDelete
  20. ஆமி, நல்ல தொகுப்பு. இதமான பாடல்கள்.

    ReplyDelete
  21. //தயவு செய்து இந்த இசையை கேக்கும் போது கண்ணை மூடிக்கொண்டு கேளுங்கள்///

    கண்டிப்பா. இந்த பதிவையே நான் கண்ணை மூடிக்கொண்டுதான் படிச்சேன். ஹிஹி

    ReplyDelete
  22. @மகாதேவன்

    மிக்க நன்றி சகோ....

    ஆமா நீங்க கமெண்ட்லாம் படிக்கிறதில்லையா? ஹீ...ஹீ...ஹீ.....

    ReplyDelete
  23. @மாணவன்

    ரொம்ப நன்றிங்க சகோ

    ReplyDelete
  24. @ரஹிம் கஸாலி

    ரொம்ப நன்றிங்க சகோ

    ReplyDelete
  25. @அந்நியன்

    நன்றிங்க அந்நியன் தாத்தா....

    பிரபல பதிவரானதுக்கு வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete
  26. @அப்துல் காதர்

    //"ஆமா அதென்ன கடந்து வந்த பாதையில்" ... ரோட்டில் நடந்து போகும்போதே கேட்டு எழுதிய பாட்டா? //

    எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்

    ReplyDelete
  27. @பாபு

    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  28. @பலே பாண்டியா

    //என்ன கொடும சார் இது??#கமெண்ட் ஐயும் படிப்போர் சங்கம் //

    நானாதான் வாய கொடுத்து மாட்டிக்கிட்டேனா?? அவ்வ்வ்வ்வ்

    ஜே.டி சக்கரவர்த்திய உண்மைக்குமே தெரியாதா? சத்தியமாவா?

    சர்வம் படத்துல வில்லனா வந்துருப்பாரே அவர் தான். ராம் கோபால் வர்மா படத்துல நிறையா நடிச்சுருக்கார். பாத்தா கமல் மாதிரி இருப்பார் ;)

    ReplyDelete
  29. @வைகை
    //பாட்டெல்லாம் பாக்கும்(கேக்கும்) போதே நெனச்சேன்! என்னடா எல்லாம் ஆண்களின் பார்வையில் இருக்கேன்னு?! //

    அப்படியா தெரியுது? ரொம்ப கவனமா இருந்தேனே!!! வட போச்சே....

    வாழ்த்து அவருக்கு வந்தா என்ன எனக்கு வந்தா என்ன? 2 பேரும் ஒன்னு தானே... சோ அந்த வாழ்த்த நானே வாங்கிக்கிறேன் ;))

    ReplyDelete
  30. @வெறும்பய

    //ஒவ்வொரு பாடல்களையும் கவனமாக தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன்...//

    உங்களுக்கு தெரியுது.... மத்தவங்களுக்கு தெரியலையே ;(

    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  31. @வானதி

    மிக்க நன்றி வானதி

    ReplyDelete
  32. @ரமேஷ்

    //கண்டிப்பா. இந்த பதிவையே நான் கண்ணை மூடிக்கொண்டுதான் படிச்சேன். ஹிஹி//

    நீங்க என்ன மாதிரியே பெரிய அறிவாளிங்க... அப்துல் கலாம் க்கு அடுத்து அந்த இடத்தை நிரப்ப போறதே நீங்களும் நானும் தான்!!! ;)))

    ReplyDelete
  33. ஐயோ சகோ.. எனக்கு பிடிச்ச பெரும்பாலான பாடல்களை தொகுத்திருக்கீங்க. வெல்டன். ஆயிரத்தில் ஒருவனில் வர்ற "எம்மானே" பாடல் கண்ணீர் சிந்த வைத்திருக்கும் உங்களை. சரிதான?

    ReplyDelete
  34. @பாலாஜி

    //ஆயிரத்தில் ஒருவனில் வர்ற "எம்மானே" பாடல் கண்ணீர் சிந்த வைத்திருக்கும் உங்களை. சரிதான?//

    பெண்மானே (பெம்மானே) பாட்டை தானே சொல்றீங்க

    வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி சகோ

    ReplyDelete
  35. அனைத்து பாடல்களும் சூப்பர்

    ReplyDelete
  36. ஆமா அந்தப் பாட்டு தான் சகோ! ஸ்பெல்லிங் மிஸ்டேக் ;)

    ReplyDelete
  37. ஸலாம்,சகோ ஆமினா..
    பாட்டு செலக்ஷன் எல்லாம் நல்லாவே இருக்கு...

    பாடல்கள பொருத்தவரைக்கும்,எனக்கு வித்யாசமான ரசனை உண்டு. ஒருவேலை எல்லாரும் இப்படியான்னு தெரியலை.

    பொதுவா ஒரு பாட்டு பிடிச்சு இருந்தா,எனக்கு முதல்ல,அந்த பாட்ட பாடுன சிங்கர்ஸ் யாருன்னு பாத்து அவங்களோட ரசிகன் ஆகிடுவேன்.

    அந்த பாடல்கள கேக்கும்போது,அத அவங்க அந்த ரெக்காடிங் தியேட்டர்ல எப்டி ரசிச்சு பாடிருப்பாங்கன்னுதா எண்ணத் தோனும்..
    அப்ரம் மியூசிக்..சில அசாதாரணமான இசை,அதிரடியான இசையெல்லாம், கேக்கும் போது நாம பாக்குர, எளிமையான தோற்றம் தர்ர இளையராஜா,எ ஆர்,எல்லா எப்டித்தா யோசிக்கிராங்களோன்னு பிரம்மிப்புதா வரும்..

    வெகுசில பாடல்களிலேயே,அதன் திரைக்கதை,ஒரு வித ஈர்ப்பை தரும்..

    நீங்கள் தேர்விய இந்த பாடல்களில் 4 பாடல்கள் நான் அதிகம் விரும்பி கேட்பவை..

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  38. எனது அழைப்பை ஏற்று பதிவிட்டதுக்கு நன்றி.....சிஸ்டர்...

    பாடல்கள் அனைத்தும் அருமை...பல பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்.....

    ReplyDelete
  39. அட்டகாசமான தெரிவு சகோ. என்னை கவர்ந்த பாடல்களும் தெரிவாகியுள்ளது.

    ReplyDelete
  40. எப்படி இப்படி தரமான பாடல்களை தெரிவு செய்ய முடிந்தது?

    ReplyDelete
  41. 2002- ரன் - பனிக்காற்றே பாட்டு..
    நான் காலேஜுல படிக்கும் போது, அடிக்கடி கேப்பேன்.. எனக்கும் இந்தப்பாட்டு ரொம்ப பிடிக்கும்..
    உங்கள மாதிரியே நானும் தியேட்டருக்குப் போய் எமாந்தவன் தான்.. :-)
    while thinking about this song, i slowly started wandering about my college day memories.. My special thanks for that..

    ReplyDelete
  42. Good Collection Amina.

    'Pani kattre' My one of Favorite..

    ReplyDelete
  43. அப்படியா சங்கதி மனிக்கவும் ..

    பரவாயில்லை பாராட்டு உங்களுக்கு கிடைத்தால் அவருக்கும் கிடைத்தமாதிரித்தானே

    ReplyDelete
  44. @ திலிப்

    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  45. //ஆமா அந்தப் பாட்டு தான் சகோ! ஸ்பெல்லிங் மிஸ்டேக் ;)//

    ;))

    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  46. @ரஜின்
    வ அழைக்கும் சலாம்
    //
    வெகுசில பாடல்களிலேயே,அதன் திரைக்கதை,ஒரு வித ஈர்ப்பை தரும்..//

    உண்மையில்லேயே என்னிலிருந்து மாறுபட்ட ரசனை உங்களுக்கு. ஏன்னா பாடல்களுக்காக படமோ அல்லது திரைக்கதையோ என் மனதில் ஒட்டுவதில்லை. ஆனா வித்தியாசமான ரசனை தான் உங்களுக்கு. நான் வெறும் பாட்டு மட்டும் தான் ரசிப்பேன் .ஆனா விடாம எல்லாத்தையும் உங்களுக்கு பிடிச்சு போகுதே !!! 4 பாட்டுக்கள் பிடிச்ச பாடல்களா? ரொம்ப சந்தோசம் சகோ
    --

    ReplyDelete
  47. @ஹாஜா

    //பாடல்கள் அனைத்தும் அருமை...பல பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்.....//

    அப்படிங்களா ?!!! ரொம்ப சந்தோஷம் சகோ !!

    ReplyDelete
  48. @ myth-buster

    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  49. @.....

    //எப்படி இப்படி தரமான பாடல்களை தெரிவு செய்ய முடிந்தது?//

    :))

    நம்மலாம் ரொம்ப அறிவாளிங்க இல்லையா சகோ!! அதான் இப்படி ;)))

    ReplyDelete
  50. @பிரசன்னா

    //while thinking about this song, i slowly started wandering about my college day memories.. My special thanks for that..//

    எப்படிங்க? ஒரு வேளை அது அந்த பாட்டு செய்யும் மந்திரமா? இப்ப கூத அந்த பாட்ட கேட்டா நான் சென்ற பழைய தெருச்சாலை , பள்ளிகூடம் , பழைய நினைவுகள் எட்டி பார்க்கும்!!

    ReplyDelete
  51. @அஹமது இர்ஷாத்

    மிக்க நன்றி இர்ஷாத்!!

    உங்களுக்கும் பிடிச்ச பாட்டா...... பிரண்ட் னா இப்படி தான் இருக்கணும் ;)

    ReplyDelete
  52. @மகாதேவன்

    //அப்படியா சங்கதி மனிக்கவும் ..//

    அட நீங்க வேற !!! பாராட்டுக்களை சொல்லிடுறேன் சகோ

    ReplyDelete
  53. அருமையான தொகுப்பு.எப்படி இப்படி பொறுமையாக?நீங்க ரசிக்கிறது இருக்கட்டும்,நான் உங்க ரசிகையாயிட்டேன்.

    ReplyDelete
  54. அனைத்துப் பாடல்களும் அருமையான தேர்வு..ஆமினா..

    ReplyDelete
  55. சாரி ஆமி நான் இதுல ஒருபாட்டுக்கூட கேட்டதே இல்ல.

    ReplyDelete
  56. @ஆசியா

    //நீங்க ரசிக்கிறது இருக்கட்டும்,நான் உங்க ரசிகையாயிட்டேன்//

    ஹா..ஹா...ஹா....

    நாளைக்கே ரசிகர் மன்றம் அறிவிச்சுடலாமா? :)))

    வருகைக்கு நன்றி ஆசியா

    ReplyDelete
  57. @பிரஷா

    //அனைத்துப் பாடல்களும் அருமையான தேர்வு..ஆமினா..///

    மிக்க நன்றி தோழி!!!

    ReplyDelete
  58. @ கோமு

    //சாரி ஆமி நான் இதுல ஒருபாட்டுக்கூட கேட்டதே இல்ல.//

    அடடா அப்படியா.....

    சரி இப்ப கேட்டுடுங்க !!!!

    ReplyDelete
  59. @ ஆனந்தி

    மிக்க நன்றி ஆனந்தி

    ReplyDelete
  60. ஆமி,உங்கள் பாடல்கள் அனைத்துமே அருமை.எனக்கு பிடித்த பாடல்கள் ஆறு பாடல்கள்.மிகவும் பிடித்த பாடல் அன்பே சுகமா,உன்பேரை சொன்னாலே.ஒவ்வொரு வரியுமே ரொம்ப அழகாயிருக்கும்.நீ தூங்கும் நேரத்தில் பாடலில்

    //பூவொன்று உன்மீது விழுந்தாலும் தாங்காது
    என் நெஞ்சம் புண்ணாய்ப் போகுமே//

    இந்த வரிகள் ரொம்ப பிடிக்கும்.ஒவ்வொரு பாடலுமே அழகு.மூன்று பாட்டு மட்டும் கேட்டேன்,ஆமி.உங்கள் ரசனைக்கும்,பதிவிற்கும் ஸ்பெஷல் பாராட்டுக்கள்,ஆமி.

    ReplyDelete
  61. ஹாய் நித்தி...

    பாட்டை ரசிச்சு கேட்டதுக்கு மிக்க நன்றி பா!!!

    தொடர்ந்து வாங்க

    ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)