உன்னை போல் இன்னும்
யாரையும் கண்டதில்லை
நீ பேசும் மழலைக்கு முன்
எதுவும் உயர்வில்லை

செல்லமே உன்னை கொஞ்சி அழைத்திடவே
பல பெயர்களை தேடினேன்
செல்லமாய் என்னை நீ அழைப்பது போல்
என்னம்மா கூட கொஞ்சியதில்லை

உறக்கத்திலும் புன்னகையால் மலரும் உன்னை காணவே
இரவெல்லாம் விழித்திருப்பேன்
முத்தமிட்டு என்னை எழுப்பும் சுகத்திற்காகவே
விடிந்தும் இமை மூடி நடிப்பேன்

இதழ் விரித்து சிரிக்கையில்
இன்று பூத்த மலர்களும் தோற்றுபோனது
உடல் முறித்து எழுகையில்
உலகதிசயங்களும் உன் காலில் சாய்ந்தது

யோசித்து யோசித்து கொஞ்சி கொஞ்சி
நீ பேசும் வார்த்தைகளில்
மழை பொழியும் இன்னிசையும் இனிமையிழந்து போனது
முகம் சுளித்து கைகளை கட்டி நீ கோபம்கொள்கையில்
சுடும் நெருப்பும் தணிந்தது

என்ன தவம் செய்தேனென்று
இன்றுவரை தெரியவில்லை
மொத்த அழகும் உன்னில் சங்கமித்த ரகசியமும்
இன்றுவரை புரியவில்லை

உலகமே உன் பின்னால் வரும்போதும்
உன் நிழலாய் வாழ்ந்திட வேண்டும்
உலகமே என் கையில் சரணடைந்தாலும்
உன் அன்புக்கு உரித்தானவளாய் என் வாழ்நாளை கழித்திட வேண்டும்

100 comments:

  1. @ எல். கே

    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  2. //இதழ் விரித்து சிரிக்கையில்
    இன்று பூத்த மலர்களும் தோற்றுபோனது
    உடல் முறித்து எழுகையில்
    உலகதிசயங்களும் உன் காலில் சாய்ந்தது//

    ரசிச்சு எழுதியிருக்கீங்க.

    பாசக்கவிதை ரொம்ப நல்லாருக்குது.

    ReplyDelete
  3. நல்லா இருக்கு. தன்வீர் ஷாம் உங்க குழந்தையின் பேரா? இன்னும் 2 கவிதை எழுதலாம் அந்தப் படத்தைப் பார்த்தால்

    ReplyDelete
  4. வாவ்.. ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க ஆமி.. கவிதையில் உங்க தாய்பாசம் உணர்வுகள் மேலோங்குகிறது. ரொம்ப நெகிழவைத்த கவிதை. ரொம்ப நல்லாருக்கு.

    ReplyDelete
  5. சூப்பர்....உங்களின் குழந்தையா.....

    ReplyDelete
  6. தாய்மையின் நிலையில் வந்த கவிதை தாய்மையைப் போலவே சிறப்பு :)

    ReplyDelete
  7. கவிதையும் குழந்தையும் அழகு,பெயர் ரொம்ப நல்லாயிருக்கு.

    ReplyDelete
  8. ஸலாம் சகோ...
    பதிவ ஓப்பன் பண்ணி,ரொம்ப நேரம்,அந்த குழந்தையவே பாத்துகிட்டு இருந்தேன்.பச்சிளம் குழந்தைகள் தனி அழகுதான்.அது எதற்கும் ஒப்பாகாது.வல்ல அல்லாஹ் அக்குழந்தைக்கு,எல்லா நலமும்,வளமும் அருள பிராத்திக்கிறேன்.
    அதுக்கப்பரம் உங்க கவிதை.தாய்மையை உணர்த்தக்கூடிய எளிமையான வரிகள்.

    தமிழ்வினை சொன்னமாதிரி,இன்னும் 2 என்ன?எவ்ளோ எழுதுனாலும்,தாய்மையின் ஆழத்தை சொல்லிட முடியாது,மழலையின் அழகையும் வர்ணித்திட முடியாது.

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  9. பாப்பா அழகா இருக்கு

    ReplyDelete
  10. valarmathi said...//

    மிக்க நன்றி வளர்மதி

    ReplyDelete
  11. சுந்தரா said...//

    மிக்க நன்றி சுந்தரா

    ReplyDelete
  12. //தமிழ் வினை said...//

    ரொம்ப நன்றி சகோ

    என் மகன் பெயர் தான்.

    ReplyDelete
  13. @மின்மினி

    மிக்க நன்றி மின்மினி உங்க கருத்துக்களுக்கு

    ReplyDelete
  14. @ஹாஜா மைதீன்

    ஆமாம் என் மகன் தான். மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  15. @பாலாஜி

    //தாய்மையின் நிலையில் வந்த கவிதை தாய்மையைப் போலவே சிறப்பு :)//
    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  16. @ஆசியா

    மிக்க நன்றி ஆசியா

    பெயரும் பிடிச்சுருக்கா :))

    ReplyDelete
  17. @ரஜின்

    //வல்ல அல்லாஹ் அக்குழந்தைக்கு,எல்லா நலமும்,வளமும் அருள பிராத்திக்கிறேன்.//

    கண்டிப்பா துஆ செய்யுங்க. உண்மையிலேயே குழந்தைகளை பற்றி சொல்லணும்னா வார்த்தைகள் தீர்ந்தாலும் முடியாதது. காதல்பற்றிய கவிதை கூட ஆரம்பம் முதல் பிரிவு வரை தான் எழுத முடியும். ஆனா தான் குழந்தை பற்றி எழுதணும்னா புதுசுபுதுசா எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம். ஏன்னா காதலை விடவும் எல்லோரும் அதிகமாய் ரசிப்பது மழலையை தானே!!!

    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  18. @ இளங்கோ

    மிக்க நன்றி சகோ!!!

    ReplyDelete
  19. @பாலா

    //பாப்பா அழகா இருக்கு//

    மிக்க நன்றி பாலா

    ReplyDelete
  20. Kutty paappa cute paappa
    இறைவனின் ஆசி கிடைக்கட்டும்...

    ReplyDelete
  21. சுத்திப்போடுங்க.....
    அட, ஒரு திருஷ்டி பொட்டாவது வைங்க...

    ReplyDelete
  22. ஆமீனா ம‌க‌னா!! க்யூட்..க‌விதையும் தான் ம் வாழ்த்துக்க‌ள்..

    ReplyDelete
  23. கவிதை மிக அருமை ஆமீ.. குட்டிப்பாப்பாக்கு 3 வயசாச்சே.. கைப்புள்ளயா இருக்கும்போது அழகா இருக்கான். திருஷ்டி சுத்திப் போடுங்க.. கண்ணு படும்.

    எனக்கு ஊர் தாமிரபரணி வளம் கொழிக்கும் நெல்லை மாநகரம்.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  24. அழகிய கவிதை. எல்லாம் வல்ல இறைவன் அந்த குழந்தைக்கு //எல்லா நலமும்,வளமும் அருள பிராத்திக்கிறேன்.//

    கவலை என்னும் நோய்க்கு அருமருந்து - மழலையின் சிரிப்பு..

    ReplyDelete
  25. நெகிழ்வான வரிகள்..

    நல்லா இருக்குங்க

    ReplyDelete
  26. குழந்தையும் கவிதையும் அழகோ அழகு

    ReplyDelete
  27. ஆமி எல்லா பக்கத்லயும் தூள்கிளப்புரீங்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  28. ஆமி, எல்லாவிஷயங்கள்பத்தியும் பதிவு போட்டாச்சு.அடுத்துரெசிப்பி பதிவா?!!!!!!!!!. எது பண்ணின்னாலும்
    சிறப்பா பண்ரீங்க.

    ReplyDelete
  29. ஆமி ஜோரா இருக்கு.

    ReplyDelete
  30. ஓய் கவிதைலாம் கூட எழுதுவிங்களா!
    நல்லா இருக்கு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  31. @பிரதாப்
    //Kutty paappa cute paappa
    இறைவனின் ஆசி கிடைக்கட்டும்..//

    உங்க சொல் பலிக்கட்டும் :))

    வருகைக்கும் கருத்துகும் மிக்க நன்றி

    ReplyDelete
  32. //சுத்திப்போடுங்க.....
    அட, ஒரு திருஷ்டி பொட்டாவது வைங்க...//
    குட்டியா வச்சுருக்கேன் பாக்கல? :))

    இப்பலாம் வச்சா பயங்கரமா கத்த ஆரம்பிச்சுடுவார். ஸ்டைல்லா இல்லையாம்..

    ReplyDelete
  33. @இர்ஷாத்

    என் பையன் ல? அதான் என்னை மாதிரி இருக்கான் :))

    ReplyDelete
  34. @ ஸ்டார்ஜன் அண்ணா

    ஆமாண்ணா...
    இது 3 மாசமா இருக்கும் போது எடுத்தது

    //திருஷ்டி சுத்திப் போடுங்க.. கண்ணு படும்.//
    எல்லாம் வல்ல அல்லாஹ் பாதுகாக்கட்டும். மிக்க நன்றி அண்ணா

    ReplyDelete
  35. @ அப்துல் பாஸித்
    மிக்க மகிழ்ச்சி
    //கவலை என்னும் நோய்க்கு அருமருந்து - மழலையின் சிரிப்பு..//
    உண்மை சகோ

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  36. @அரசன்

    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  37. @ லெட்சுமிம்மா
    மிக்க நன்றிம்மா!!

    ReplyDelete
  38. //ஆமி எல்லா பக்கத்லயும் தூள்கிளப்புரீங்க வாழ்த்துக்கள்.//

    அதான் எங்க வீட்டுல தூள் அடிக்கடி காலியாகுதோ :))

    மிக்க நன்றி கோமு

    ReplyDelete
  39. @உமா

    தொடர்ந்து நீங்க வரும் போது ரொம்ப உற்சாகமா இருக்கு உமா

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  40. @தொப்பி தொப்பி
    //ஓய் கவிதைலாம் கூட எழுதுவிங்களா//

    இப்படிலாம் என்னை கிண்டல் பண்ண கூடாது சொல்லிட்டேன். நான் ஏதோ கிறுக்கி வச்சா கவிதைன்னு சொல்றதா?

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  41. @ சித்ரா
    //ஆமி, எல்லாவிஷயங்கள்பத்தியும் பதிவு போட்டாச்சு.அடுத்துரெசிப்பி பதிவா?!!!!!!!!!.//

    அந்தளவுக்குலாம் நம்மள நம்பி வரவங்களுக்கு துன்பம் கொடுக்க மாட்டேன் சித்ரா... அறுசுவைக்கு தான் போட்டோ குறிப்பு கொடுக்க முயற்சி பண்றேன். நடக்க மாட்டேங்குது :(

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பா

    ReplyDelete
  42. உங்கள் பொண்ணு அப்படியே உங்களை மாதுறியே இருக்கு ஆமி..

    உன்னை போல் இன்னும்
    யாரையும் கண்டதில்லை
    நீ பேசும் மழலைக்கு முன்
    எதுவும் உயர்வில்லை

    சரியா சொன்னீர்கள்,

    அழகு சிரிப்பும்
    அற்ப்புத பிறப்பும்
    கடைக் கண் மிதப்பும்
    கண் கொள்ளா காட்சி

    மானாட மயிலாட
    கூட நானும் ஆட
    கூடியிருந்தோரும் இசை பாட
    வாடாத மல்லிக்கும் இலக்கணமே
    உமது செல்வன்.

    த்தூப்..த்தூப்...த்தூப்..தப்பா நினைச்சுக்ராதியே..யாரு கண்ணும் பட்டுடக் கூடாதுன்னு தலை சுத்திப் போட்டேன்.அதுக்காக காசைலாம் தேடக் கூடாது.

    ReplyDelete
  43. @ அந்நியன்

    //உங்கள் பொண்ணு அப்படியே உங்களை மாதுறியே இருக்கு ஆமி..//
    எனக்கு பொண்ணு இருக்குற விஷயம் நீங்க சொல்லி தான் தெரியும் :))

    அந்நியன் எப்போ கம்பனானார்? :)))

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  44. ஆமி குழந்தை ரொம்ப அழகு அதை பார்த்ததுக்கப்பறம் எங்க கவிதை எல்லாம் தெரியுது அந்த சிரிப்பே ஆயிரம் கவிதை சொல்லுதே

    ரொம்ப நேரம் கழிச்சு(ரசிச்சு) பின் கவிதையை படித்தேன்

    கவிதை எழுதும் ஆமிக்கு
    கவிதையாகவே குழந்தை

    பையன் sooooo sweet

    கலக்கறீங்க ஆமி
    எல்லா விஷயம் பற்றியும் எழுதறீங்க

    கடவுள் உங்களுக்கும் உங்க குட்டி உயிருக்கும் எல்லா வளமும் நலமும் அருளட்டும்

    ReplyDelete
  45. // உலகமே உன் பின்னால் வரும்போதும்
    உன் நிழலாய் வாழ்ந்திட வேண்டும்//

    i like this statement....

    ReplyDelete
  46. //இதழ் விரித்து சிரிக்கையில்
    இன்று பூத்த மலர்களும் தோற்றுபோனது//

    அட்டகாசமான வரிகள்!!!! ரசித்து ருசித்து படித்தேன்.

    ReplyDelete
  47. ஆமினாம்மாவுக்கு மகனாக எங்கள்
    (நபி) பிறந்தார்
    எங்களின் அறிவுக்கண் திறந்தார்
    மூடநம்பிக்கைகளை தன் காலில்
    போட்டு மிதித்தார்
    என் சகோதரி ஆமினாவிற்கு மகனாக பிறந்த என் மறுமகனே
    நம் நபியின் வழிநின்று
    வீழ்ந்த நம் சமுதாயத்தை
    எழுந்து நடக்க செய்வீர்களா?

    ReplyDelete
  48. ஆமினாவின் மகனா?கவிதையைப்போல் மகனும் சூப்பர்.மாஷா அல்லாஹ்.

    ReplyDelete
  49. @மீரா

    //கடவுள் உங்களுக்கும் உங்க குட்டி உயிருக்கும் எல்லா வளமும் நலமும் அருளட்டும்//
    மிக்க நன்றி மீரா...

    ReplyDelete
  50. @ரவிகுமார் கருணாநிதி

    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  51. @myth-buster said...

    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  52. @ஹைதர் அலி அண்ணா

    //என் சகோதரி ஆமினாவிற்கு மகனாக பிறந்த என் மறுமகனே
    நம் நபியின் வழிநின்று
    வீழ்ந்த நம் சமுதாயத்தை
    எழுந்து நடக்க செய்வீர்களா?///

    உங்கள் சொல் நிறைவேற இறைவனிடம் துஆ செய்கிறேன்.. மிக்க நன்றி அண்ணா

    ReplyDelete
  53. @ஸாதிகா அக்கா

    மிக்க நன்றி அக்கா
    துஆ செய்யுங்க

    ReplyDelete
  54. ஆமி, எப்படிப்பா இப்படி எல்லாம் தோணுது!!!!! நல்லா இருக்கு கவிதை & போட்டோ.

    ReplyDelete
  55. @ வானதி
    இப்பலாம் வானதியோட சேர்ந்துட்டேன்ல. அதான் நானும் கொஞ்சம் கவிதை எழுத ஆரம்பிச்சுட்டேன்னு நெனைக்கிறேன் :))

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாணி

    ReplyDelete
  56. //இப்பலாம் வானதியோட சேர்ந்துட்டேன்ல. அதான் நானும் கொஞ்சம் கவிதை எழுத ஆரம்பிச்சுட்டேன்னு நெனைக்கிறேன்//haha

    ஏதாச்சும் நம்புற மாதிரி சொல்லுங்க, ஆமி. எல்கே பார்த்தா பொங்கி எழப்போறார்.

    ReplyDelete
  57. //vanathy said...

    //இப்பலாம் வானதியோட சேர்ந்துட்டேன்ல. அதான் நானும் கொஞ்சம் கவிதை எழுத ஆரம்பிச்சுட்டேன்னு நெனைக்கிறேன்//haha

    ஏதாச்சும் நம்புற மாதிரி சொல்லுங்க, ஆமி. எல்கே பார்த்தா பொங்கி எழப்போறார்.//

    அட இதையே நம்ப முடியலையா? என்ன செய்வேன்?????

    நீங்க எல் கே கிட்ட வேணா கேட்டு பாருங்க வாணி :)

    ReplyDelete
  58. குட்டி சுவர்க்கத்தை புகைப்படத்தில் பார்த்தேன்...

    ReplyDelete
  59. //அந்த குழந்தைக்கு எல்லா நலமும்,வளமும் அருள பிராத்திக்கிறேன்.//

    ReplyDelete
  60. //குட்டி சுவர்க்கத்தை புகைப்படத்தில் பார்த்தேன்//

    ரொம்ப சந்தோஷமா இருக்கு பாரத் பாரதி

    ரொம்ப நன்றிங்க

    ReplyDelete
  61. //பாரத்... பாரதி... said...

    //அந்த குழந்தைக்கு எல்லா நலமும்,வளமும் அருள பிராத்திக்கிறேன்.////

    உங்கள் பிரார்த்தனையில் என் மகனின் வாழ்வு செழிக்கட்டும்

    ReplyDelete
  62. சான்ஸே இல்லங்க.. எவ்வளவு பாசம் வரிகளில்.. எல்லாரும் அம்மாவைப் பற்றி நார்மலாகக் கவிதை எழுதுவாங்க.. நீங்க உங்க குழந்தையைப் பற்றி எழுதியிருக்கீங்க.. சூப்பர்..

    ReplyDelete
  63. கவிதையும் குழந்தையும் அழகோ அழகு. உங்களுடையதாச்சே !! இருக்காதா பின்னே??

    ReplyDelete
  64. //எல்லாரும் அம்மாவைப் பற்றி நார்மலாகக் கவிதை எழுதுவாங்க.. நீங்க உங்க குழந்தையைப் பற்றி எழுதியிருக்கீங்க.//

    தாலாட்டு பாடுவாங்க கேட்டிருப்போம் தானே?! அந்த குழந்தையை தூங்க வைக்க அந்த அம்மா எவ்வளவு அழகான வார்த்தைலாம் கோர்த்து வடித்து கொடுப்பாங்க? கேட்கவே அருமையா இருக்கும். தன் குழந்தை எப்படியிருந்தாலும் தாய்க்கு அது பொன்னாகவே தெரியும். அதான் தாய்மையின் சிறப்பு

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பாபு

    ReplyDelete
  65. @அப்துல் காதர்

    //உங்களுடையதாச்சே !! இருக்காதா பின்னே??//
    ஹீ..ஹீ...ஹீ...
    ஒத்துக்கிட்டீங்களா? :)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  66. @வெங்கட்

    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  67. எங்கள் ஷாம் க்கு பதிவு போடலேனா யாம் யாருக்கு பதிவு போட?
    இந்த கவிதையை படிக்கும்போதே ஒரு தாயின் ஸ்பரிசங்களின்
    அந்த லேசான வெப்பம் உணரமுடிகிறது.
    ஒரு குழந்தையை கையிலேந்தி கொஞ்சுவது போல்
    ஒரு உணர்வு வந்து போகிறது.
    பத்திர படுத்தி பாதுகாக்கப்பட்டு கொண்டிருக்கும்
    ஒரு மழலையின் சுகமான தாக்குதலை அணைவரது
    உணர்வுக்குள்ளும் செலுத்திவிட்ட இந்த இஞ்செக்‌ஷன்
    வரிகள் ஒரு தாயின் தாலாட்டு,அந்த தாலாட்டிற்கு என் பாராட்டு.
    குழந்தைக்கு முத்தம் கொடுக்கனுமா, அல்லது
    குழந்தையிடமிருந்து முத்தம் வாங்கனுமா என்று
    இரண்டாக ஒரு கேள்விகேட்டால் கொஞ்சம் யோசிக்கதான் செய்வோம்
    இல்லையா? அது போல்தான்
    கவிக்கு அழகு சேர்ந்த குழந்தை அழகா? அல்லது
    குழந்தைக்கு கூடுதல் அழகு சேர்த்த இந்த கவி அழகா?
    என்று ஒரு கேள்வியை எழுப்பிக் கொண்டு கொஞ்சம் குழம்பினேன்
    எப்படியோ கண்ணுக்கு கண்ணான இந்த கவிக்குழந்தை என்றும் பத்திரமாக
    வளர என்னுடைய சின்சியரான வாழ்த்துக்கள், சீரியசான பிரார்த்தனைகள்.

    வாழ்த்துக்களுடனும், பிரார்த்தனைகளுடனும்
    என்றும் மாறாத அன்புடன்

    உண்மை நண்பன்
    பஹ்ருதீன்

    ReplyDelete
  68. //உலகமே உன் பின்னால் வரும்போதும்
    உன் நிழலாய் வாழ்ந்திட வேண்டும்
    உலகமே என் கையில் சரணடைந்தாலும்
    உன் அன்புக்கு உரித்தானவளாய் என் வாழ்நாளை கழித்திட வேண்டும்//

    அருமையாகவும் சிறப்பாகவும் பதிவு செய்துள்ளீர்கள்

    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  69. பெறுமதியான தூய வரிகள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  70. அன்னைக்கே வந்து வோட்டு மட்டும் போட்டு போயிட்டேன் ஆமி...பட் கவிதை எல்லாம் நிதானமா படிக்கணும்..அப்போ தானே உணரமுடியும்...இப்போ படிச்சேன்...அற்புதம் ஆமினா,ஷாம் பாப்பா மாதிரி...நீங்கள் கவிதையில் தான் கில்லாடி னு தெரியுமே...தொடர்ந்து கலக்குங்க...:)))

    ReplyDelete
  71. @BACQRUDEEN

    என்ன சொல்றதுன்னே தெரியல. மருமகன் மேல் நீ வச்ச பாசத்த பாத்து கண் கலங்கிட்டேன் பா. இதுக்கு மேல என்ன சொறது? வார்த்தைய தான் தேடணும். நன்றி ஆஷிக்

    உயிர் தோழி
    ஆமினா

    ReplyDelete
  72. @ மாணவன்

    மிக்க நன்றி சகோ உங்க வருகைக்கும் கருத்துக்களுக்கும்

    ReplyDelete
  73. //மகாதேவன்-V.K said...

    பெறுமதியான தூய வரிகள்
    வாழ்த்துக்கள்//

    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  74. உங்கள பத்தி தெரியாதா ஆனந்தி...

    //அற்புதம் ஆமினா,ஷாம் பாப்பா மாதிரி...நீங்கள் கவிதையில் தான் கில்லாடி னு தெரியுமே...தொடர்ந்து கலக்குங்க...:)))//
    சூ..சூ..... எல்லாரும் என்னை தப்பா நெனச்சுட போறாங்க. என்னத்தஒயோ கிறுக்கி வச்சுட்டு கவிதைன்னா சொல்றன்னு போராட்டம் பண்ணிட போறாங்க ஆனந்தி :))

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி/அக்கா ஆனந்தி

    ReplyDelete
  75. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    மாஷா அல்லாஹ் அல்லாஹ்வின் மாபெரும் கொடை., குழந்தை செல்வம் அச்செல்வத்தை பெற்ற தாங்களுக்கும் என் வாழ்த்துக்கள்., கைர்.,
    எல்லாவிதத்திலும் சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் நல்ல மனிதனாக அக்குழந்தையை உருவாக்கும் பொறுப்பு தங்களுக்கு இருக்கிறது சகோதரி., அதற்கு அல்லாஹ் தவ்ஃபீக் செய்தருள்வானாக! தாங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் குறிப்பாக அம்மழலை செல்வத்திற்கும் வல்ல ரஹ்மான் நன்மையே ஏற்படுத்துவனாக
    (கவிதைக்காக குழந்தையா... அல்லது குழந்தைக்காக கவிதையா...?
    என்று எண்ணத்தோன்றுகிறது உங்கள் எண்ணங்களில் உருவான எழுத்துக்கள்)அப்படியே., குழந்தையின் பெயருக்கான விளக்கமும் தந்தால் இன்னும் நலம்

    ReplyDelete
  76. வ அலைகும் சலாம் வரஹ்..

    சகோதரர் குலாம் அவர்களுக்கு,
    கண்டிப்பாக இச்செல்வத்தை பெற்றதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு தான் நன்றி சொல்ல வேண்டும். துஆ செய்யுங்க. தன்விர் சம்சுதீன் என்பது தான் என் மகனின் பெயர்(பெர்த் சர்ட்டிபிகேட்ல). நம்மூர் பத்தி தான் உங்களுக்கு தெரியுமே. ஞாபகார்த்தாமா பெரியவங்க பேரை வைப்பாங்க. ஆனா அப்படி சொல்ல மாட்டாங்கன்னு. என் மாமனாரோடைய அத்தா பேரு சம்சுதீன் ராவுத்தர். அப்படி கூப்பிட்டா தலைல அடிச்ச மாதிரி இருக்குன்னு செல்லமா ஷாம் என்று சொல்கிறோம்.
    Thanveer (تنویر) - Rays Of Light(Origin Islamic)
    Shams-ud-Din(شمس الدین) - Son of the religion (Islam).

    ReplyDelete
  77. //பிரஷா said...

    கவிதை அருமை அக்கா...//

    மிக்க நன்றி பிரஷா

    ReplyDelete
  78. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    சகோதரி., ஸாரி பெயரின் அர்த்தம் என கேட்பதற்கு பதிலாக பெயரின் விளக்கம் எனக்கேட்டுவிட்டேன். எனினும் தங்களின் பொறுமையான நீண்ண்ண்ண்ட விளக்கத்திற்கு நன்றி.,
    அல்லாஹ் நம் யாவருக்கும் நன்மை ஏற்படுத்துவானாக!

    ReplyDelete
  79. @ குலாம் அண்ணா
    எதுக்கு அண்ணா சாரிலாம்? நிறைய பேரு எங்கிட்ட சாதாரணமா கேட்கும் கேள்வி தான். அதானால் இதற்கு பதில் சொல்ல எப்போதும் நான் நேரம் எடுத்துக்கொள்வதில்ல. நீங்க கேட்டதால் பலருக்கும் மனதில் இருந்த பெயருக்கான சந்தேகம் விலகியிருக்கும் தானே?! அதுக்கு உங்கலுக்கு தான் நான் நன்றி சொல்லணும்!!

    மிக்க நன்றி அண்ணா

    ReplyDelete
  80. அழகான வரிகளில் மெய்ச்சிலிர்கிறது
    மனதுக்கு தாலாட்டுக்கேட்ட உணர்வு பெறுகிறது சகோதரி
    வாழ்த்துகள்
    இறைவன் உங்களை நலங்காக்கட்டும்

    ReplyDelete
  81. //செல்லமே உன்னை கொஞ்சி அழைத்திடவே
    பல பெயர்களை தேடினேன்
    செல்லமாய் என்னை நீ அழைப்பது போல் என்னம்மா கூட கொஞ்சியதில்லை// இயல்பான இதயம் வருடும் வரிகள்!
    தங்கள் பதிவுகளை Follow செய்பவர்கள் பட்டியலில் இணைகிறேன், இன்று முதல்! நேரம் இருப்பின்....நான் குப்பை கொட்டும் இடத்திற்கு வருக.... madrasbhavan.blogspot.com and nanbendaa.blogspot.com

    ReplyDelete
  82. @ஹாசிம்
    மிக்க நன்றிங்க. நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நலம் வாழ எந்நாளும் எல்லாம் வல்ல அல்லாஹ் துணையிருப்பான்.

    @குலாம் அண்ணா போன முறை ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகிடுச்சு. son வராது sun தான் சரியானது. சம்ஸ் நா சூரியன்னு அர்த்தம். தீன் - மார்க்கம். சம்சுதீன் - மார்க்கத்தின் சூரியன் :)

    ReplyDelete
  83. @சிவகுமார்

    பாராட்டுக்கும் என்னை நம்பி என்னை பின்தொடர்வதற்கும் மிக்க நன்றிங்க!!!

    //்....நான் குப்பை கொட்டும் இடத்திற்கு வருக....//
    சரியா சொல்லுங்க. குப்பை கொட்டும் இடத்துக்கா? சாப்பாடு கொட்டும் இடத்துக்கா? :))

    ReplyDelete
  84. அருமையான கவிதை.
    ஷாம் குட்டியும் அழகு

    ReplyDelete
  85. @ ஜலீலாக்கா

    மிக்க நன்றி அக்கா

    ReplyDelete
  86. //திருஷ்டி சுத்திப் போடுங்க.. கண்ணு படும்.//

    ReplyDelete
  87. //பாரத்... பாரதி... said...

    //திருஷ்டி சுத்திப் போடுங்க.. கண்ணு படும்.////

    :))

    கண்டிப்பாக....

    ReplyDelete
  88. //இளம் தூயவன் said...

    கவிதை அருமை.//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  89. ..படத்தை பார்த்ததில் கவிதை மறந்து போச்சி ,கவிதையை படித்ததில் படம் மறந்து போச்சி மொத்தத்தில படமும் கவிதையும் அழகோ அழகு . கவிதையில் மொத்த பாசமும் புரியுது

    ReplyDelete
  90. @ஜெய்லானி

    //படத்தை பார்த்ததில் கவிதை மறந்து போச்சி ,கவிதையை படித்ததில் படம் மறந்து போச்சி//
    மறந்து மறந்து போகுதா? எங்கேயோ கேட்ட குரல்.........

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெய்

    ReplyDelete
  91. ஹாய் ஆமி,எப்படி இருக்கீங்க?

    உங்களின் நீயில்லாத வாழ்க்கையா கவிதையையே மிஞ்சிவிட்டது இந்தக்கவிதை!!! மிகவும் அற்புதமான ஒரு படைப்பு.ஒவ்வொரு வார்த்தையையும் உணர்ந்து படைத்துள்ளீர்கள்.ஒவ்வொரு வரியுமே அற்புதம்.எனக்கு மிகவும் பிடித்த வரிகள்

    //என்ன தவம் செய்தேனென்று
    இன்றுவரை தெரியவில்லை
    மொத்த அழகும் உன்னில் சங்கமித்த ரகசியமும்
    இன்றுவரை புரியவில்லை///

    அழகான குழந்தை,அழகான கவிதை,அழகான கவி,வாழ்த்துக்கள்,ஆமி.

    ReplyDelete
  92. ஹாய் நித்திலா....

    நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கேள்??

    உங்க வாயாலேயே கவிதைக்கு பாராட்டு வாங்குனது ரொம்ப சந்தொஷம் ஶ்ரீ...

    அடிக்கடி வாங்க!!!

    ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)