என் தோழி மற்றும் சகோதரி அஸ்மாவின் அழைப்பை ஏற்று இத்தொடர்பதிவை தொடர்கிறேன்

பொதுவாவே ஊர் பெருமைலாம் ஊர்ல இருக்கும் போது தெரியாது. மாமியார் வீட்டுக்கு போனப்பொறவு தான் பட்டிக்காடா இருந்தாலும் அத அமெரிக்கா ரேன்ச்க்கு பில்டப் பண்ணி பேசுவோம். பட்  என்ற வூட்டுக்காரரும் என்ற வூர்க்காரர்  என்பதால் இந்த அடிபிடி சண்ட நடக்கல. லக்னோக்கு வந்த பிறகு தான்  சொர்க்கமே சென்றாலும் அது நம்மூர போல வருமான்னு பாட்டு படிச்சுட்டு இருக்கேன். இல்லல்ல தனியா கிச்சன்ல நின்னு அழுதுட்டே புலம்பிட்டு இருக்கேன்:(( (இருப்பதன் அருமை இல்லாத போது தான் தெரியும்:)

இராமநாதபுரம் மாவட்டம்னாலே வறட்சியான மாவட்டம்னு தான் எல்லாருக்கும் ஞாபகம் வரும். மிஞ்சி,மிஞ்சி போனா இராமேஷ்வரம், கமல்ஹாசன், அப்துல் கலாம்  தெரியும். ஆனா இன்னும் நல்ல சுவாரசியமான இடங்களும் பழமையை இன்றும் தன்னகத்தே கொண்டு புதுமையாய்  ஜொலிக்குது (தங்க சுரங்கம் இருக்குன்னு நம்பி வரவங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது மக்காஸ்)

இராமநாதபுரம்
ப்ரிட்டீஷ்காரங்க கொள்கையை இன்னும் கடைபிடிக்கிற கூட்டம் எங்க மாவட்டத்துல இருக்காங்க. ஆமா நா கூட தான். எந்த ஊர்ன்னு கேட்டா ராம்நாட்னு தான் சொல்லுவேன் :) இடையில நிறையபேர் ஆட்சி செய்தாலும்  ராம்நா என்று சொல்லும் போதே சேதுபதி ராஜாக்கள் தான் நினைவுக்கு வருவாங்க. சேதுகரையை ஆண்ட மன்னர்கள் என்பதால் சேதுபதி  மன்னர்கள் என்ற பெயர் வந்தது. இன்னைக்கும் அவங்க வாரிசுகள் வாழ்ந்துட்டு இருக்காங்க. புகழ்பெற்ற பல அவை நிகழ்ச்சிகள் நடந்த இராமலிங்க விலாசத்தில் ஓவியங்கள் வியக்க வைக்கும் தன்மையுடையது.  அரண்மனை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் மறக்காம பாருங்க. இராமநாதபுரம் ஜமின் அரண்மனை பற்றிய அதிக விளக்கத்துக்கு இங்கே கிளீக்குங்கோ விவேகானந்தர் சிகாகோக்கு போனதே எங்க ராஜானால தானுங்கோ :)

இராமேஷ்வரம்
புண்ணியம் தேடி காசிக்கு போவார். அதுக்கப்பறம் இங்கே தான் வருவார்.... இராமநாதபுரத்துக்கே  பெருமையும்,வருமானமும் சேர்க்கும்  பல சுற்றுலா இடங்கள் அடங்கிய இடம்,இங்குள்ள கோயில் ரொம்ப பிரபலம் என்பது அனைவரும் அறிந்ததே. இராமேஷ்வர கடற்கரையில் இருந்து தான் கலாம் சார் தன் விஞ்ஞான பயணத்த தொடங்குனதா அத்தா வாங்கி கொடுத்த அக்னி சிறகுகள்ல படிச்சுட்டு அடிக்கடி அங்கே சுத்துவேன். பட் பியூஸ் போன பல்ப் கழட்டி மாட்ட கூட தெரியல :( 
 இராமேஷ்வரத்த சுத்தியுள்ள இடங்களில் சில…..


பாம்பன் பாலம்
பாம்பன் பாலத்தை அடையும் முன்பே நடுவில் நெடுஞ்சாலையும் இருபக்கமும்  கடலும் என  பிரம்மிப்பை ஏற்படுத்தும். தனியா ஒரு ஓரமா இருக்குற ராமேஷ்வரத்த இந்தியாவுடன் இணைக்கும் பெருமை கொண்ட பாலம் இது. இந்தியாவிலேயே கடல் மேல கட்டிருக்குற நீளமான முதல் பாலம் இது தான். ரயில் செல்ல வாகனங்கள் செல்ல என தனிதனியா பாலம் இருக்கு. கிட்டதட்ட 2 ½ கிலோ மீட்டர் நீளம். வேகமாக மண்டபம் பகுதி வரை செல்லும் ரயில் பாம்பன் பாலத்தை தொட்டதும் மெதுவாக ஊரும் காட்சியை  மேலே உள்ள பாலம் வழியாக பாக்க அவ்வளவு அழகா வியப்பா ப்ரம்மிப்பா இருக்கும். அதுவே அந்த ட்ரைன்குள்ள நான் உக்காந்திருந்தா……. (கண்மூடியிருக்கும் ஆனா கண்ணீர் வரும், வாய் பூட்டு போட்டுருக்கும். ஆனா உள்ள ஏகபட்ட பயம் ஒப்பாரி வைக்கும். அதுனால  திருச்சிலேயே துக்க மாத்திர போட்டாவது தூங்கிடுவேன்:))

கப்பல் வரும் போது பாலம் இரண்டாக பிளந்து மேலே தூக்கி கப்பலுக்கு வழிவிடும் காட்சி இன்னும் அழகு.

பாலத்துக்கு மேல இருந்து  நாம்ம பக்கத்துல உள்ளவங்ககிட்ட பேசுறது கூட கேக்காது. ஓவர் காத்து+பேரலைகளின் சத்தம். இவ்வளவு பிரம்மாண்ட பாலத்த கட்டி முடிக்குறதுக்குள்ள எத்தன  உயிரை இப்பாலம் காவு வாங்கியிருக்கும்னு நினைக்க வைக்கும். அந்த நெனைப்பே என்னைய சீக்கிரம் இடத்த காலி பண்ண வைக்கும் (பேய்,பிசாசு, ஆவின்னா கொஞ்சூண்டு பயம்)

தனுஷ்கோடி
ஆள் நடமாட்டமே இல்லாத தனிமையை விரும்புபவரா நீங்க? ஒடனே தனுஷ்கோடிக்கு வாங்க. செல்போன் சிக்னல் கூட கிடைக்காது. இயற்கை அன்னை தன் கோபத்தை வெளிபடுத்தியதால் 1964 ஆம் ஆண்டு பேரலையால் முழுவதுமாக அழிக்கப்பட்டது. பேரலைக்கு முன்பு வரை மக்கள் செல்வ செழிப்போடு வாழ்ந்த கிராமம். அதிகாலையில் ஏற்பட்ட கொடூரத்தால் எத்தன பேர் இறந்தாங்கன்னு கூட கண்கிட்டு சொல்ல முடியல. ராமேஷ்வரத்திலிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவு பயணித்தால் தனுஷ்கோடிக்கு வரலாம். ஆனா வர முடியாது : ) வாடகைக்கு ஜீப் பிடிச்சு தான் கடல் கரையை அடைய முடியும்.. 

ஊர் இருந்துச்சுங்குறதுக்கானா அடையாளம் எதுவுமே மிச்சம் இல்ல. அந்த காலத்துல கட்டுன மாதா கோயில் சுவர் மட்டும் கொஞ்சமா இருக்கு. ஒரே ஒரு பொட்டிகட இருக்கு. இப்ப மக்கள் அதிகமா வர ஆரம்பிச்சதுனால கொஞ்சமா களை கட்ட ஆரம்பிச்சாலும் மக்கள் வாழ தகுதியற்ற ஊர்ன்னு அரசாங்கம் முடிவெடுத்துட்டாங்க போல. மேம்பாட்டு பணிகள் எதுவும் செய்யப்படலங்குற ஒரே ஒரு வருத்தம் தான். ஆனாலும் இப்படி கஷ்ட்டபட்டு வரதும், பயந்துட்டே தனியா அங்கே நிக்கிறதும் நல்ல அனுபவமா அமையும். 


நந்தா பீச்
இராமநாதபுரம் டூ மண்டபம் நெடுஞ்சாலையில் பயணித்தால் இடப்புறமாக  பிரியும் சாலையில் போனா பீச் வந்துடும். (குஷி பீச்ன்னு போர்ட் போட்டுருக்கும். அது வச்சு கண்டுபிடிக்கலாம். வேற யார்கிட்டையும் கேட்டுட்டு வர முடியாது. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி) ஒத்தையடி பாதையில காட்டுக்குள்ள போற மாதிரி இருக்கும். 2 பக்கமும் உயர்ந்த மரங்களும் மூங்கில் மரங்களும் என பாதையில் 3 கிலோ மீட்டர் பயணித்தால் திரையை விலக்கி பார்த்தது போல கடற்கரை இருக்கும் (நெடுஞ்சாலையிலேயே  வண்டியிலிருந்து இறங்கி பீச் வரைக்கும் குடும்பத்துடன் நடந்துக்கொண்டே கடற்கரையை அடைவது அலாதி பிரியம்). 
யாருக்கும் இப்படியொரு கடற்கரை இருப்பதாக தெரியாது நந்தா படம் படபிடிப்பு நடத்தப்படும் வரை. அவங்க தான் வழிகாட்டி. அதனால தான் உச்சபுளி கரையோர பகுதி நந்தா பீச்ன்னு பேரு வாங்கியிருக்கு. கடல்ல அலை யேதும் வராது. ஆண்கடலாம் (அடப்பாவிகளா? பொண்ணுங்களாம் கொடுமையானவங்கன்னே முடிவு பண்ணிட்டாங்களா?) அமாவாச அன்னைக்கு ஏதோ கொஞ்சமா  அலைகள் கரைய தொட்டு தொட்டு போகும். மத்த நாள்ல ஏரி மாதிரி தான். இங்கே குளிக்க கூடாதுன்னு தான் சொல்லுவாங்க. பட்  அதையும் மீறி நீங்க குளிக்கலாம்.  உங்க நேரம் துரஷ்திஷ்ட்டமா இருந்தா  ஜெல்லி மீன் கடிச்சு ஒடம்பெல்லாம் தழும்பும்,அரிப்பும் வரலாம்:(
  சமீப காலமா மக்களின் வருகை அதிகரிப்பால்  குறைந்த கட்டண போட்டிங்  சேவை ஆரம்பிச்சுருக்காங்க.  சிறுவர் பூங்காவும்,  ஆண்கள் பெண்கள் குழந்தைகளுக்கு  தனிதனியாகநீச்சல் குளமும் அமச்சுருக்காங்க. இதுவும் தனிமை விரும்பிகளுக்கு ஏற்ற இடம்.

மக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்ட பல தீவுகள் இருக்கு. அது ஆராய்ச்சி பகுதியாகவோ அல்லது ஆபத்தான பகுதியாகவோ இருக்கும். ஆனா திருட்டு தனமா போறவங்களும் இன்னும் போய்ட்டு தான் இருக்காங்க. அது தவிர  வைகை ஆறும், சித்திரா பௌர்ணமி திருவிழாவும் இங்கே ரொம்ப பிரபலம். சாதி,மத வேறுபாடு இல்லாம ஏப்பேற்பாடுபட்டாவது திருவிழால கலந்துக்க வந்துடுவாங்க. பௌர்ணமி அன்று மாலையே கட்டுச்சோறு கட்டிக்கொண்டு ஆற்றில் நிலாச்சோறு சாப்பிடும் வழக்கம் இருந்துச்சு நா சின்ன புள்ளைல. என் மகன் சின்னபுள்ளையா இருக்குறதுனால இல்ல போல. நாகரிக வளர்ச்சியால் இப்போது மறுக்கப்படும் நாளை மறக்கடிக்கப்படும்  நாளை மறுநாள் அழிக்கப்படும் வழக்கத்தில் இதுவும் ஒன்று. (அவ்வளவு கூட்டத்துக்கு மத்தியில நிக்க இடம் கெடைக்குறதே பெருசுன்னு காரணம் சொல்லுவாங்க)

விவசாயம், மீன்பிடித்தல், நெசவு என முக்கிய தொழில்கள் கொண்ட மாவட்டம். சென்னையில் இருந்து நாளொன்றுக்கு இரு முறை ரயில் வசதி செய்துதரப்பட்டுள்ளது. காசி டூ ராமேஷ்வரம் ரயில் சேவையும் வாரம் ஒரு முறை உண்டு. இன்னும் சொல்ல நிறையா இருக்குன்னாலும் நான் போன அல்லது ரசித்த இடத்தை மட்டும் குறிப்பிட்டுள்ளேன் (இதையே படிக்க முடியல.சீக்கிரம் முடிச்சுடு தாயே..!!!- உங்கள் மனசாட்சி: ). இதுக்கு மேல சொல்றதுக்கும் என் கிட்ட சரக்கு இல்ல.

இதை தொடர நான் அழைக்க போவது
சகோ ரஜின் (நீங்க ராம்நாட்ன்னு நெனைக்கிறேன். அதுக்காக தான் முக்கியமா உங்கள தேடுனேன். உங்க பார்வைல நம்மூர் பத்தி தெரிஞ்சுக்க ஆவல்)

,

68 comments:

  1. தோழி..
    நான் போட்ட பதிக்கு பழிவான்களோ .. இந்த தொடர் பதிவு அழைப்பு..


    கண்டிப்பாக எழுதுகிறேன் தோழி...

    நன்றி..

    ReplyDelete
  2. நீங்க பெரியபட்டனமா? கீழக்கறையா?

    ReplyDelete
  3. ஏற்கனவே ஸாதிக மேடம் ஊரை பற்றி எழுத கூப்பிட்டுருந்தாங்க, அதனால் ஏற்க்கனவே எழுதிவைதாயிற்று, தமிமணம் சரியாகட்டுமேன்னு காத்திருந்தேன்! இன்சா அலாஹ் பதிவா போட்டுடலாம்!

    ReplyDelete
  4. சகோ ஆமி...எனது ஊரின் பக்கத்து ஊரைப் பற்றி எழுதியதற்க்கு நன்றி.

    இப்போக்கூட அதாவது இருபது நாளுக்கு முன்பு கூட நான் தனுஷ்கோடி போயிருந்தேன் ஏண்டா வந்தோம்னு இருந்துச்சு உங்கள் கட்டுரையை படித்தப் பிறகு கண்களில் கண்ணீர் வருகின்றது காரணம் அன்று கடலால் அடித்து செல்லப் பட்ட மக்கள்களை நினைக்கும் போது.

    நல்ல முறையில் எழுதியமைக்கு வாழ்த்துக்கள்.

    ராமநாதபுரத்தான் பெருமையை அழகாக எழுதி விட்டிர்கள் நன்றி

    ReplyDelete
  5. உங்கள் ஊரைபற்றி இன்னும் தெரிந்துக்கொண்டேன்...ராமேஸ்வரம்,தனுஷ்கோடிலாம் பார்க்கனும்னு பேவரிட் லிஸ்ட்ல இருக்க்கு,எப்போ நிறைவேறும்னு தெரியல..

    ReplyDelete
  6. // கடல்ல அலை யேதும் வராது. ஆண்கடலாம் //

    சுனாமியே வந்தாலும் நாங்கல்லாம் சைலண்டாருபோம்

    //விவேகானந்தர் சிகாகோக்கு போனதே எங்க ராஜானால தானுங்கோ :)//

    உண்மையிலயே உங்க ஊருக்கு கிடைச்ச
    பெரும தானுங்கோ...ங்கோ ங்கோ (echo)

    அரண்மனைத்தூண்களும் அது போட்டோவில் அமைந்த விதமும் மிக அற்புதமாய் பிரதிபலிக்கிறது wow

    சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊறு போல வருமா .. அது ராம்நாட் என்றாலும் தோழியின் பதிவின் போல வருமா... ராம்நாட்டை நகைசுவை சொல்லி சுற்றி காண்பித்தமைக்கு வாழ்த்துக்களுடன் நன்றி..

    ReplyDelete
  7. @ கருன்

    //தோழி..
    நான் போட்ட பதிக்கு பழிவான்களோ .. இந்த தொடர் பதிவு அழைப்பு..//

    அப்ப அஸ்மா என்னய பழிவாங்கிட்டாங்கன்னு சொல்றீங்களா?? :))

    //
    கண்டிப்பாக எழுதுகிறேன் தோழி...//
    நல்ல புள்ளைக்கு அடையாளம்

    ReplyDelete
  8. @சர்புதீன்

    //நீங்க பெரியபட்டனமா? கீழக்கறையா?//

    கொடுத்த 2 சாய்ஸ்லையும் சரியான விடை இல்லைன்னா கொஸ்டீன் தயாரிச்சவர் தப்பா? பதில் சொல்பவரின் தப்பா? :))

    ReplyDelete
  9. @சர்புதீன்

    //அதனால் ஏற்கனவே எழுதிவைதாயிற்று//
    அடடா... கணக்குக்கு சரிபட்டு வராது... அடுத்த தொடர்பதிவுக்கு இப்பவே புக் பண்ணிகிறேன் :))

    ReplyDelete
  10. @அந்நியன்

    அண்ணா எந்த ஊர் நீங்கோ?

    //இருபது நாளுக்கு முன்பு கூட நான் தனுஷ்கோடி போயிருந்தேன் ஏண்டா வந்தோம்னு இருந்துச்சு//
    கடுதாசி போட்டுருக்க கூடாதோ?? கோழி அடிச்சு கொழம்பு வைக்க சொல்லியிருப்பேனே....!!! :))

    //நல்ல முறையில் எழுதியமைக்கு வாழ்த்துக்கள்.//
    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  11. @மேனகா

    //எப்போ நிறைவேறும்னு தெரியல..//

    ஒரு நாள் சாப்பிடாம இருங்க.... அடுத்த நாளே உங்க ஆச நெறைவேறும் :))

    ReplyDelete
  12. @மாய உலகம்
    //
    சுனாமியே வந்தாலும் நாங்கல்லாம் சைலண்டாருபோம்//
    சுனாமி வந்துச்சுன்னா உயிரே போகும். அப்பறம் எப்படி சத்தம் போட?? கண்டிப்பா கப்சிப் தான்...... :)

    //அரண்மனைத்தூண்களும் அது போட்டோவில் அமைந்த விதமும் மிக அற்புதமாய் பிரதிபலிக்கிறது wow//
    யார் பெத்த புள்ள எடுத்த போட்டோவோ???

    //அது ராம்நாட் என்றாலும் தோழியின் பதிவின் போல வருமா//
    மெய்யாலுமா????லக்னோவின் கொடிய வெயிலுக்கு இதமா இருக்கு :)

    மிக்க நன்றி சகோ.... பொறுமையுடன் படித்து பின்னூட்டமிட்டதற்கு!!!

    ReplyDelete
  13. நீங்கள் ராம்நாடு ...என்றால்,அன்வர் ராஜா தெரிந்திருக்குனுமே?

    ReplyDelete
  14. சகோ ஆமீனா நீங்களும் எங்க ஊரா
    மாஷா அல்லாஹ்.

    சின்னபுள்ளையில ஆத்துல விளையாடினீங்களா? நானும் அதே வைகை ஆற்றில் விளையாடி வளர்ந்தவன் தான்.

    ஆனா ஊரு சொல்ல மாட்டோம்லே
    எப்பூடி

    ReplyDelete
  15. அட எப்ப வந்தீங்க தனுஷ்கோடியில் ராமர் கோவில் ஒன்று இருக்கே இன்னும் . கடலுக்கு வெகு அருகில் இருப்பது அதுதான்.

    ReplyDelete
  16. அட இதுதான் "ராம்நாடா". நாடிட்டோம்....

    தனுஷ்கோடி பற்றி அண்மையில் புதிய தலைமுறையில் படித்தேன். கண்டிப்பாக போக வேண்டும். மற்ற சில இடங்கள் எனக்கு புதிது.

    ReplyDelete
  17. ராமநாதபுரத்தைப்படிக்கையில்ரொம்ப சந்தோஷமாக இருந்தது.ராமநாதபுரத்திலே சின்னக்கடை வீதி,கோமுட்டி வீட்டு வடாம்,வற்றல் வகையாறாக்கள்,சுற்றுவட்டாரம் முழ்க்க உள்ள மக்களுக்கு ஷாப்பிங் பாயிண்ட் இவைகளை எல்லாம் மிஸ் பண்ணிட்டீர்களே அமினா.

    ராம்நாட்,மண்டபம் சாலையின் இடது பக்கம் ஓரத்தில் அமைந்திருக்கும் கடற்கரைக்கு பெயர் அரியமான்.
    பற்பல அரிதான் விஷயங்களை உள்ளடக்கிய கடற்கரை என்பதால் இந்த பெயர்க்காரணம்.

    அலைகளே இல்லாத கடற்கரை.கடலுக்குள் வெகு தூரம் போனாலும் முழங்கால் அளவே தண்ணீர்.முழங்கால் அளவுதானே நீர் என்று தைரியாமாக உள்ளே நுழைந்தால் திரும்பி வரும் பொழுது எப்பொழுது வேண்டுமானாலும் கடல் மட்டம் உயரமாகி கடலுக்குள் இருஇப்பவர்களுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.அதனாலேயே கடலினுள் செல்ல வேண்டாம் என்கின்றனர்.

    ஊருக்கு போனால் தோழியர்,உறவினர்குழாம் சூழ கண்டிப்பாக இங்கு சென்று விடுவேன்.

    ReplyDelete
  18. @அந்நியன்
    //நீங்கள் ராம்நாடு ...என்றால்,அன்வர் ராஜா தெரிந்திருக்குனுமே? //

    ராம்நாடுங்குறதுனால இல்ல... பொதுவாவே எல்லாருக்கும் அவர தெரியும்.... எல்லா போஸ்டர்லையும் அவர் பேர பாக்கலாம். முன்னாள் அதிமுக அமைச்சர் :) சமீபத்தில் நடந்த துக்க நிகழ்ச்சி பரபரப்புடன் பேசப்பட்டது.

    ReplyDelete
  19. @ஹைதர் அலி அண்ணா

    எந்த வைகை ஆத்துல விளையாண்டீங்கன்னு சொல்லுங்க.... நானும் அங்கே தான் நானும் விளையாடினேனா இல்லையான்னு சொல்றேன் :)
    எப்பூடி........

    //ஆனா ஊரு சொல்ல மாட்டோம்லே
    எப்பூடி//
    அடிச்சு கேப்பாங்கண்ணே...
    அப்படியும் சொல்லிபுடாதீங்கோ...!!! :))

    ReplyDelete
  20. @எல் கே

    காலைல அதீதம்ல உங்க க்ரிக்கெட் வர்ணனை படிச்சேன். நமக்கு க்ரிக்கெட் கொஞ்சூண்டு அலர்ஜி+ஞானமின்மை. அதான் ஒன்னும் சொல்லல

    சின்ன வயசுல போன இடம். அதான் எதையும் சரியா ஞாபகப்படுத்தி சொல்ல முடியல. ஆனாலும் ராமர் கோயில் பார்த்ததாக ஞாபகம் இல்ல. அடுத்த முறை போகும் போது புகைப்படத்தோட இன்னும் அதிகமா தனுஷ்கோடி பத்தி எழுதுறேன் :)

    ReplyDelete
  21. @பலே பிரபு
    //அட இதுதான் "ராம்நாடா". நாடிட்டோம்....//
    நாடி நரம்ப அத்துற போறாங்க... ஊருக்கு பக்கம் தான் திருப்பாச்சி :)

    கண்டிப்பா வந்து பாருங்க சகோ....
    எழுத்துக்களில் பூட்ட முடியாத புதுவித உணர்வு கிடைப்பது உறுதி!!!

    ReplyDelete
  22. @சாதிகா அக்கா

    இன்னும் அதிகமா சொல்லியிருக்கலாம் தான். ஆனா ஐஸ்வர்யா ஹோட்டல (அதுவு அரியமானில் சாப்பாடு கிடைக்காது என்பதால்) தவிர வேற எங்கும் சுத்தி பார்த்தது கிடையாது :( படிக்கிற காலத்துல அரண்மையில் பேச்சு போட்டிக்கு போயிருந்ததால் கொஞ்சமா தெரியும். இப்பவாவது ஒத்துக்கோங்க மக்களே... ஆமி அடக்கமான பொண்ணுன்னு :))

    //இவைகளை எல்லாம் மிஸ் பண்ணிட்டீர்களே அமினா.//
    நீங்களும் மிஸ் பண்ணி என்னை அமினா ஆக்கிட்டீங்களேக்கா? :((
    அதுக்காக தான் எங்கண்ணா ரஜின்’ன கூப்டுறுக்கேன். யாராலும் எழுத முடியாத அளவுக்கு எழுதிடுவாரு பாருங்க :))

    ReplyDelete
  23. பரீட்சையை வெற்றிகரமா எழுதியாச்சா? (பாருங்க, நான் எழுதியாச்சான்னு மட்டும்தான் கேட்டேன்; ரிஸல்ட்டக் கேக்கவேயில்லை :-)))) )

    ராம்நாடுனு கேள்விப்பட்டிருந்தாலும், அதிக விவரங்கள் இப்பத்தான் தெரிஞ்சுக்க முடிஞ்சுதுங்க.

    ReplyDelete
  24. தங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் சகோ.ஆமினா..!

    பதிவுலகில் பதிவெழுதா குளிர்கால உறக்கம் (hibernation) முடிந்து திரும்பியதற்கு வாழ்த்துக்கள்.

    பல புதிய தகவல்கள்... உங்கள் பாணியில் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி சகோ.ஆமினா.

    பாம்பன் பாலம் :
    கடலில் எப்படி காங்கிரீட் போட்டு கட்டுறாங்கன்னு அறிந்து கொல்லும் ஆவலில் சென்று பார்த்தேன் ---ரயிலில்.

    பின்னர் திறப்பு விழா முடிந்து மீண்டும் சென்று பார்த்தேன் ---பஸ்ஸில்.

    ஊர் திரும்பும்போது.. 'ராம்நாட்' என்ற பெயர்பலகை கொண்ட பேருந்தின் ஒட்டுனரிடம் சென்று... "இராமநாதபுரம் செல்லும் பஸ் எப்போது வரும்..?" என்று கேட்டது... மறக்க முடியாத அனுபவம். :)
    (இன்னுமா இந்த பெயர் புழங்குது..?)

    கேள்வி---->//கடல்ல அலை யேதும் வராது என்பதால் "ஆண்"கடலாம் (அடப்பாவிகளா? பொண்ணுங்களாம் கொடுமையானவங்கன்னே முடிவு பண்ணிட்டாங்களா?)//---by ஆமினா..!

    //இயற்கை "அன்னை" தன் கோபத்தை வெளிபடுத்தியதால்... பேரலையால் தனுஷ்கோடி முழுவதுமாக அழிந்தது//--->பதில் by அதே ஆமினா..!

    ....யாரு பாவி..?

    //இன்னும் சொல்ல நிறையா இருக்குன்னாலும்...//

    //இதுக்கு மேல சொல்றதுக்கும் என் கிட்ட சரக்கு இல்ல...//

    hibernation effect..???

    ReplyDelete
  25. அடடடா! எவ்வளவு விபரம்! அழகாக ரசித்து எழுதி இருக்கிறீங்க. இன்னொரு ரவுண்ட் வந்து வாசிக்கணும்.

    ReplyDelete
  26. இதை வாசிக்கும் போது சுற்றுலா செல்ல வேண்டும் போல் உள்ளது...

    மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்...(பகுதி2)

    ReplyDelete
  27. ஏங்க அன்வர் ராஜாவை தெறியுமானுதான் கேட்டேன்,அவர் ஊருக்கு பக்கத்து ஊருனு சொல்ல வந்தேங்க.

    ஆமா நீங்க சின்ன கடைதெருவா?

    ReplyDelete
  28. @சகோ ஆஷிக்

    சலாம் சகோ

    //கடலில் எப்படி காங்கிரீட் போட்டு கட்டுறாங்கன்னு அறிந்து கொல்லும் ஆவலில் சென்று பார்த்தேன்//
    எத்தன பேர கொல பண்ணீங்க :))

    //இன்னுமா இந்த பெயர் புழங்குது..?)//
    இராமநாதபுரம்னு சொன்னாலே நீங்க வேற ஊர்க்காரரான்னு கண்டுபிடிச்சுடுவாங்க. பேச்சு வழக்கு சீக்கிரமா மறையாது இல்லையா சகோ. அதே மாதிரி தான் இதுவும். யாரோ ஒரு பிரிட்டீஸ்காரன் தமிழ கொல பண்ணி சுருக்கி மூட்டைல கட்டி கொடுத்தத இத்தன ஆண்டுகள் கழித்தும் பத்திரமா பொத்தி பொத்தி வச்சு செல்லமா கூப்டுறாங்கன்னா சும்மாவா? :)

    //யாரு பாவி..?//
    ;)) அமைதியா இருக்குற கடலும் ஆள அமுக்க தான் செய்யும் :)

    ////இன்னும் சொல்ல நிறையா இருக்குன்னாலும்...//

    //இதுக்கு மேல சொல்றதுக்கும் என் கிட்ட சரக்கு இல்ல...//

    hibernation effect..???//


    அப்படி இல்ல....
    இன்னும் சொல்ல நிறையா இடம் இருக்கு. நிறைய விஷயங்கள், நிறைய இடங்கள் இருக்கு. பட் எனக்கு தெரியாது...

    இதுக்கு மேல சொல்றதுக்கு என் கிட்ட சரக்கு இல்லாததுக்கு காரணம் நான் சுத்தி பாத்த இடங்கள் ரொம்ப கம்மி :(( அதான் சரக்கு இல்ல....
    எதாவது புரியலன்னா சொல்லுங்க. இன்னும் தெளிவா குழப்புறேன் :)

    ReplyDelete
  29. @ஹுசைனம்மா
    //(பாருங்க, நான் எழுதியாச்சான்னு மட்டும்தான் கேட்டேன்; ரிஸல்ட்டக் கேக்கவேயில்லை :-)))) )//
    2க்குமே என்கிட்ட பதில் இல்ல :)))
    அரியர் வச்சா தான் மதிப்பாங்களாம்... வச்சா மகன் மதிக்க மாட்டான். என்ன செய்யலாம்னு யோசன பண்ணும் போது தான் தேர்வுக்கு பைபை ஐடியா கெடச்சது ;)

    என்னத்தையோ நானும் சொல்லி அது மூலமா நீங்க ராம்நாட் பத்தி தெரிஞ்சுக்கிட்டதுல ரொம்பவே மகிழ்ச்சி :) நேரம் கிடைக்கிறச்ச உங்க கிட்ட தெரிஞ்சுக்கிறேன் ;))

    ReplyDelete
  30. @இமா

    கொஞ்சமா தான் இமா சொல்லியிருக்கேன்.... ஒரு ரவுண்ட் வாசிச்சதோட ஒரு ரவுண்ட் வாங்க எங்க ஊருக்கு :)

    ReplyDelete
  31. @ஆகுலன்
    //இதை வாசிக்கும் போது சுற்றுலா செல்ல வேண்டும் போல் உள்ளது...//

    கண்டிப்பா வாங்க சகோ!!!

    ReplyDelete
  32. @அந்நியன்
    //அவர் ஊருக்கு பக்கத்து ஊருனு சொல்ல வந்தேங்க.//
    சுத்தி வளச்சு சொல்றேளாக்கும்? :)
    நான் கூட அவருக்கு தம்பியோன்னு நெனச்சேன் ;)

    //ஆமா நீங்க சின்ன கடைதெருவா?//
    நம்மள தேடி ஒரு கும்பல் கொலவெறியோட அழையுறதா கேள்விபட்டேன்...... எந்த ஏரியான்னு சொன்னா சீக்கிரமா ஆள காலி பண்ணிடுவாங்க.... அதுனால நிறைய பேர என் பதிவுகளின் மூலமா கொல பண்ணிட்டு அப்பறமா சொல்றேன் :)

    ReplyDelete
  33. @சர்புதீன்
    //so you are from BHARATHI NAGAR?!

    :-)//
    எனக்கு சூப்பரா பொய் சொல்ல வரும் :-)

    ReplyDelete
  34. ஆமினா நானும ராம்நாடு தான்.!
    ஆனால் அதிகம் தெரியாது !!
    காரணம் நான் அங்கு சென்றது
    மிகவும் குறைவு. உங்க ப்ளாக் பார்த்த பின் நிறையே தெரிந்து கொண்டேன்!

    ReplyDelete
  35. @கீதா

    அப்ப வாங்க.. எல்லாரும் ஒரே ஜோதில ஐக்கியமாகலாம் :))

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கீதா

    ReplyDelete
  36. லேட்டா வந்ததற்கு மன்னிக்கவும்,, உங்க ஊரைப்பத்தி ரொம்ப அருமையா சொல்லியிருக்கிங்க,, உங்க ஸ்டையிலில்

    தொடர்பதிவு அழைப்புக்கு நன்றி,, கோர்த்துவிட்டாச்சி எழுதித்தானே ஆகனும்,,,ஹா ஹா

    ReplyDelete
  37. @ரியாஸ்

    மன்னிப்புலாம் நமக்குள்ள எதுக்கு? இருந்தாலும் பரவாயில்ல மன்னுச்சிட்டேன் :)

    //கோர்த்துவிட்டாச்சி எழுதித்தானே ஆகனும்//
    ஆமா ஆமா
    சங்கம் ஓவரா செலவு பண்ணியிருக்கு. உங்க ப்ளாக் அட்ரஸ பேனர் ரேஞ்ச்க்கு போட்டுருக்கேன் பாருங்கோ.... அதுக்காகவாவது நீங்க எழுதி தான் ஆகோணும் :))

    பதிவு தொடர ஒத்துகிட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ்.......

    ReplyDelete
  38. ராம்நாட் -ல்லாம் சுத்திபாத்தீங்க அப்படீயே மாய உலகத்தையும் சுத்திப்பாருங்க

    ReplyDelete
  39. ராமநாதபுரம் பற்றிய தகவல்களுக்கு நன்றி. போன்ட் சைஸ் பெரிதாக உள்ளது. படிக்க சற்று சிரமம். முடிந்தால் வேறு நல்ல போன்ட்டை செலக்ட் செய்யவும். வேடந்தாங்கல் கருன் திருவள்ளூர் டான்(பாட்ஷா). அவரை தொடர் பதிவு எழுத அழைத்து உள்ளீர்கள். என்ன நடக்கப்போகுதோ?

    ReplyDelete
  40. @மாய உலகம்

    உங்க ப்லாக்க்கு பல முறை வந்தேன்...

    ஆனா எந்த லிங்கும் ஓபன் ஆக மாட்டேங்குதே :( எனக்கு மட்டும் தான் அப்படியா? இப்பவும் முயற்சித்தேன்.... முடியல!!! :(

    ReplyDelete
  41. @சிவகுமார்

    //போன்ட் சைஸ் பெரிதாக உள்ளது. படிக்க சற்று சிரமம். முடிந்தால் வேறு நல்ல போன்ட்டை செலக்ட் செய்யவும். //
    முயற்சிக்கிறேன் சகோ...

    டான் க்கு தான் ஊர் பத்தி அக்குவேரா ஆணீவேரா தெரியும்!!! அதான் கருன்க்கு அழைப்பு :))

    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  42. மண்டபம் ஆக்வாரியம்,சென்னை மெரீனாவை மிஞ்சிய பேரலைகளை கொண்ட தனுஷ்கோடி பீச்,பாம்பன் பாலத்தின் கீழே அமைந்துள்ள படகு சவாரி,போன்றவைகளையும் சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்..

    ReplyDelete
  43. @nzm

    அதான் நீங்க சொல்லிட்டீங்களே? :)

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  44. ஆமினா மீண்டும் தங்களை வலையுலக வருகையினை இன்று தான் கண்டேன் மகிழ்ச்சி நலமாக உள்ளீர்களா ஆமினா?

    ReplyDelete
  45. @பிரஷா

    பார்த்ததும் ஒடனே ஓடி வந்ததுக்கு நன்றி பிரஷா

    நான் நலமே :) நீங்க நலமுடன் வாழ எந்நாளும் ப்ரார்த்திக்கிறேன்!!

    வருகைக்கு மிக்க நன்றி தோழி

    ReplyDelete
  46. Thanks for changing the font. It looks fine now.

    ReplyDelete
  47. @சிவகுமார்

    எத்தன பேர் காண்ட்ல இருந்துருப்பாங்க...

    சுட்டி காட்டுனதுக்கு உங்களுக்கு தான் நன்றி :)

    ReplyDelete
  48. //ஆனாலும் ராமர் கோயில் பார்த்ததாக ஞாபகம் இல்ல. அடுத்த முறை போகும் போது புகைப்படத்தோட இன்னும் அதிகமா தனுஷ்கோடி பத்தி எழுதுறேன் :)//

    கண்டிப்பா இருந்தது . நான் போயிடு வந்து அஞ்சு வருசம்தான் ஆச்சு. அதுதான் எல்லை அதுக்கப்புறம் கடல்தான் :)

    ReplyDelete
  49. @எல் கே

    நான் தான் பாக்கலன்னு ஒத்துகிட்டேன்ல :)

    ReplyDelete
  50. நேற்று நம்ம பக்கம் நீங்க வந்து கலக்கல் என்று சொன்னீங்க
    இன்று நான் யார் என்று பார்க்க வந்தேன் ,இப்போ பேரும் தெரிந்து கொண்டேன் ஊரும் தெரிந்து கொண்டேன் ..என் மனைவி பனைகுளம். சென்ற வருடம் தான் பனைகுளம் ராமநாதபுரம் எல்லாம் சுற்றி திரிந்தேன் ..நீங்க சொன்ன இடங்களை எல்லாம் இன்ஷா அல்லா போய் ஒரு நாள் பாக்கணும்

    ReplyDelete
  51. @ரியாஸ் அஹமத்

    //இப்போ பேரும் தெரிந்து//
    இப்ப தான் பேர் தெரிஞ்சுக்கிட்டீங்களா? :)

    //என் மனைவி பனைகுளம்.//
    அப்படியா? பணக்கார பயபுள்ளைக அதிகம் இருக்குற ஏரியான்னு எங்க ஊர்க்கார பொறாம புடிச்ச பயபுள்ளைக சொல்லி தெரியும் :)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!!

    ReplyDelete
  52. அக்னி சிறகுகள்ல படிச்சுட்டு அடிக்கடி அங்கே சுத்துவேன். பட் பியூஸ் போன பல்ப் கழட்டி மாட்ட கூட தெரியல :( //

    ந்மக்கு நிறைய ஏட்டு விஷயங்கள் தெரிகிறது. நடைமுறையில் பின்தங்கிவிடுகிறேன்.

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  53. @ராஜ ராஜேஸ்வரி
    //ந்மக்கு நிறைய ஏட்டு விஷயங்கள் தெரிகிறது. நடைமுறையில் பின்தங்கிவிடுகிறேன்.

    பகிர்வுக்கு நன்றி//
    இப்பவும் எப்பவும் நம்மல கொற சொல்ல கூடாது:) கல்வி முறை சரியில்லன்னு பழி போட்டுடணூம்:))

    வருகைக்கு மிக்க நன்றி !!!

    ReplyDelete
  54. அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  55. @rathnavel
    மிக்க நன்றி ஐயா...!!

    தொடர்ந்து வாங்க :)

    ReplyDelete
  56. பதிவை ரசித்தேன்... லேபிளில் >>சுற்றி திரிந்த காலம், என்பதை மிக ரசித்தேன்

    ReplyDelete
  57. @சகோ சி.பி

    ரசிச்சதுக்கு மிக்க நன்றி :)

    ReplyDelete
  58. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    ரொம்ப ஸாரி ஆமினா. சீக்கிரமா நீங்க எழுதியும் உடனே என்னால் வரமுடியலபா! இன்றைக்கு எப்படியும் உங்க பக்கம் வந்து பார்த்துவிடணும் என்று கங்கணம் கட்டிட்டு வந்தாச்சு :)

    //தனியா ஒரு ஓரமா இருக்குற ராமேஷ்வரத்த இந்தியாவுடன் இணைக்கும் பெருமை கொண்ட பாலம் இது//

    ஸ்கூல் பருவத்தில் படித்தது இன்னும் மறக்கல :) ஆனாலும் படத்தோடு பார்த்தது அருமையா இருந்தது.

    //வேகமாக மண்டபம் பகுதி வரை செல்லும் ரயில் பாம்பன் பாலத்தை தொட்டதும் மெதுவாக ஊரும் காட்சியை மேலே உள்ள பாலம் வழியாக பாக்க அவ்வளவு அழகா வியப்பா ப்ரம்மிப்பா இருக்கும்//

    இப்படி ஆசைக் காட்டிட்டு... ஒருநாளாவது அந்த ட்ரைனில் போய்ப் பார்க்கணும்னு நினைத்து தொடர்ந்து படிக்கையில்,

    //அதுவே அந்த ட்ரைன்குள்ள நான் உக்காந்திருந்தா…… கண்மூடியிருக்கும் ஆனா கண்ணீர் வரும், வாய் பூட்டு போட்டுருக்கும். ஆனா உள்ள ஏகபட்ட பயம் ஒப்பாரி வைக்கும்//

    இப்படிலாம் பயம் காட்டலாமா? :(

    //கப்பல் வரும் போது பாலம் இரண்டாக பிளந்து மேலே தூக்கி கப்பலுக்கு வழிவிடும் காட்சி இன்னும் அழகு//

    இங்கேதான் (ஃபிரான்சில்) அதுபோல் பாலம் இரண்டாக பிளந்து சைடில் ஒதுங்கி கப்பலுக்கு வழிவிடுவதை முதல்முறையா பார்த்தேன். நம்ம நாட்டிலும் இந்த மெதட் உள்ளதை இப்பதான் ஆமினா தெரிந்துக் கொண்டேன்.

    "தனுஷ்கோடி" இதுவும் நான் கேள்விப்படாத ஒன்று!

    //ஆனாலும் இப்படி கஷ்ட்டபட்டு வரதும், பயந்துட்டே தனியா அங்கே நிக்கிறதும் நல்ல அனுபவமா அமையும்//

    பயந்துட்டே தனியா நிக்கணுமா...? :( நான் வரலபா இந்த விளையாட்டுக்கு..

    //கடல்ல அலை யேதும் வராது//

    பாம்பே கடலும் அலையில்லாத கடல். பெரியதொரு குளத்தைப் பார்ப்பதுபோலவே இருக்கும். ஆனா அலை இருந்தாதான் கடலுக்கே அழகு ;)

    இவ்வளவுதான் தெரியும்னு சொல்லிட்டு புதுமையான‌ விஷயங்களா சொல்லிட்டீங்க‌ :) சூப்பர் & நன்றி தோழி!

    ReplyDelete
  59. நந்தா பீச் பார்த்ததில்லை. இராமேஸ்வரம் எனக்கு மிகவும் பிடித்த ஊர். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  60. சொந்த ஊரை பற்றி சொல்லும் போது ஓவராத்தான் காமெடி புகுந்து விளையாடுது ஒவ்வொரு வரியிலும்

    ReplyDelete
  61. @அஸ்மா

    வ அலைக்கும் சலாம் வரஹ்...

    அஸ்மா நீங்க பிஸியான ஆளுன்னு தெரியும். அதான் நீங்க வரலண்ணும் ஆனாலும் கண்டிப்பா வந்துடுவீங்கன்னும் தெரியும் :)

    //ஸ்கூல் பருவத்தில் படித்தது இன்னும் மறக்கல :)//
    நீங்க ரொம்ப அறிவாளி அஸ்மா. அமீனிஷியா மாதிரி ஸ்கூல் பத்தி கேட்டா மட்டும் மற்ந்துடுவேன் :)

    //
    இப்படிலாம் பயம் காட்டலாமா? :( //
    என்னோட நீங்க வரதா இருந்தா பயப்பட மாட்டீங்க. நம்மல மாதிரி பயப்பட ஆள் இருக்குன்னு தெம்பாய்டுவீங்க :)

    //ஆனா அலை இருந்தாதான் கடலுக்கே அழகு ;)//
    அது என்னவோ உண்மை தான். ஆனாலும் அமைதியான சூழல், மக்களின் நெரிசலின்மை, குப்பை இல்லாத இடம் என்றால் அங்கே கடலே இல்லைன்னாலும் ஓக்கே தான் இல்லையா? :))

    மிக்க நன்றி அஸ்மா

    ReplyDelete
  62. @சிவகுமாரன்

    சந்தர்ப்பம் கிடைக்கும் போது சுத்தி பாருங்க சகோ :)

    ReplyDelete
  63. @பர்கான்
    //சொந்த ஊரை பற்றி சொல்லும் போது ஓவராத்தான் காமெடி புகுந்து விளையாடுது ஒவ்வொரு வரியிலும்//

    அப்படியா? எங்கே எங்கே????? :)

    ReplyDelete
  64. அருமையான விளக்கம் சகோ. நான் இராமேஷ்வரத்திற்கு சென்றிருக்கிறேன். ஒரே வருத்தம் ரயிலில் செல்லவில்லை. மற்றபடி பாம்பனில் இறங்கி சுற்றி பார்த்து விட்டு நானும் என் அண்ணனும் திரும்பி விட்டோம் சுமார் 10 வருடங்களுக்கு முன்.

    நீங்கள் எழுதியது, நான் பார்த்த சிலவற்றை நினைவு கூர்வது போல் இருந்தது. வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  65. @சகோ அபு நிஹான்
    சலாம் சகோ
    //ஒரே வருத்தம் ரயிலில் செல்லவில்லை. //
    ரயில்ல போகாததுக்குலாம் இப்படி வருத்தப்படலாமா? பக்கத்துல இருக்குற ரயில்வே ஸ்டேஷனுக்கு ஒடனே கிளம்புங்க :))

    மிக்க நன்றி சகோ
    அடுத்த முறை வரும் போது எல்லா இடமும் சுத்தி பாருங்க!!!

    ReplyDelete
  66. நாகரிக வளர்ச்சியால்
    இப்போது மறுக்கப்படும் நாளை
    மறக்கடிக்கப்படும் நாளை மறுநாள்
    அழிக்கப்படும் வழக்கத்தில் இதுவும் ஒன்று...
    - உண்மைதான்..
    உங்க ராம்நாட பார்க்கணும்னு
    நெடு நாளைய ஆசை..
    ( ஆசையை மேலும் அதிக படுத்தியிருக்கிறீர்கள்)
    அத கொஞ்சமா தீர்த்து வைத்ததற்கு நன்றி

    ReplyDelete
  67. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    அப்போவே நெனச்சேன் இம்புட்டு குசும்போட இம்புட்டு அறிவோட ஒரு புள்ள ப்ளாக் எழுதுதே நிச்சயம் நம்ம ஏரியா புள்ளயாதான் இருக்கும்னு நிருபிச்சிட்டிங்க சகோதரி ....வாழ்த்துக்கள் நானும் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவள் தான் :)

    ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)