திருநெல்வேலிக்கு போக வேண்டிய வேலை வந்துச்சு (கலெக்டர் வேலையோ?)
பஸ்ஸில் போகும் போது பயங்கர கூட்டம். சோ நின்னுட்டே வந்தோம். ஒரு கட்டத்துல பொருமை இழந்து கன்னாபின்னான்னு உக்காந்துட்டு இருந்த ஒரு பெண்ண பாத்து கத்த ஆரம்பிச்சேன். 3 இருக்கைகள் கொண்ட இடத்தில் அந்த பெண்ணும் 2 குழந்தைகளும் உக்காந்துட்டு இருந்தாங்க. கத்த காரணம்…...
நான் - ஒரு கொழந்தைய மடில வச்சுட்டு ஒரு சீட் கொடுங்களேன்
அந்த பெண்- ................(பதில் சொல்லவில்லை)
நான் - உங்கள தான்ம்மா...... ஒரு எடத்த விடுங்க.
அந்த பெண்- 3 டிக்கெட் எடுத்துருகேன்.
நான் - எல்லாரும் எல்லாருக்கும் டிக்கெட் எடுத்துட்டு தான் உள்ள இருக்காங்க. சின்னதா ஒரு இடத்த கொடுக்குறதுக்கு ரூல்ஸ் தேவையில்ல. மனசுல ஈரம் இருந்தா போதும்.
அ.பெண்- ............(முகத்தை சுழித்துவிட்டு, வாயில் முனுமுனுத்துக்கொண்டிருந்தாள் பதில் சொல்லாமல்)
நான் - இந்தா........ எடத்த குடுக்க போறீயா? இல்ல உன் புள்ளைய நானே கீழவுட்டு உக்காரவா?,,,,,,,,,,,,
இப்படி ஆரம்பிச்சு பெரிய சண்டையாக உருமாறும் முன்னே(பக்கத்துல ஆள் இருக்குற தைரியத்துல போட்ட சண்ட தான் மத்தபடி ஆமி ரொம்ப அப்பாவி) மற்றவர்களின் குறுக்கீட்டால் அந்த பெண் இடத்தை கொடுத்தாள்.
பணம் கொடுத்து டிக்கெட் எடுத்தவங்களும் நின்னுட்டு இருக்க அந்த பெண் ஒரு குழந்தையையாவது தன் மடியில் வைத்து ஒரு நபருக்கு இடம் கொடுக்கலாமே. மனசாட்சியை சுயநலம் கொன்றுவிடுமா என்ன?
இதுவே எதிர்த்து பேசமுடியாதவங்க(என்னை மாதிரி ஆள்;))இருந்தா சும்மா விடுவாங்களா? அல்லது சின்ன வயசு பசங்க இருந்தாலும் விட்டுடுவாங்களா? (எத்தன மொற சண்ட போட்டு சீட் புடிச்சுருக்கோம்? நமகிட்டேயேவா?)பொம்பள இருக்கும் போது கல்லாட்டம் உக்காந்துருகீங்களே???ன்னு ஆரம்பிச்சு,,,,, இது லேடிஸ்க்கான சீட்.எந்திரின்னு ரூல்ஸ் பேசி நூடுல்ஸ் ஆக்கிட்டு தான் முடிப்பாங்க.
இதுக்கு மேல என்ன சொல்ல? அதான் எடம் கெடச்சுடுச்சே… ஹாயா பயணப்பட்டு ஊர் போய் சேர்ந்தாச்சு.
_______________________________
_______________________________
2 நாளில் வந்த வேலையை முடித்துவிட்டு மீண்டும் கிளம்பினோம். அந்த ஊர் பஸ்ஸ்டாண்டில் அத்தன கூட்டத்த தாண்டியும் ஜன்னல் வழியா கர்சீப் போடாம, வெத்தல போட்டு எச்சிய துப்பி வைக்காம எடம் கிடைச்சது பெரிய விஷயம், எனக்கும் என் மகனுக்கும் இடம் தனிதனியாக கிடைத்ததது(இரு இருக்கைகள் கொண்ட இடத்தில்). 1 மணி நேரம் எந்த நெரிசலும் இல்ல. அதுக்கப்பறம் ஒரு கிராமத்தில் வண்டி நிக்க, கூட்டமும் கூடிபோச்சு. ஒரு வயசான பாட்டி என்பக்கத்துல நின்னுட்டு இருக்க கண்டும் காணாமல் சொகுசாய் தூங்கிகிட்டு(தூங்குவதை போல்நடிச்சுட்டு) இருந்தேன். அந்த பாட்டியும் எதுவும் கேட்காததால் நல்லதா போச்சுன்னு விட்டுட்டேன். பிறகு மனசுல ஒரு எண்ணம் உருவாக ஆரம்பிச்சுடுச்சு. அந்த எண்ணம் என்னை ஓங்கி கன்னத்தி ஒரு பளார் விட்டது போல ஒரு உணர்வை ஏற்படுத்துச்சு. உடனே பாட்டியை சைகையால் கூப்பிட்டு ஒரு இடம் கொடுத்தேன். நன்றியோட அந்த பாட்டி பார்த்த பார்வைக்கு விலை மதிப்பு இல்ல. நீ ரொம்ப குட் மம்மி என ஷாம் கன்னத்தில் முத்தமிட்ட போது பெரிய சாதனை பண்ணி முடிச்சது போல இருந்துச்சு. (வெட்டி பெருமிதம் தான்;மொதல்லையே செஞ்சுருந்தா ஜனாதிபதிக்கு மனு போட்டு விருது வாங்க நீயே ட்ரை பண்ணியிருக்கலாம்;))
அந்த எண்ணம்:மொதல்ல உங்க வீட்ட சுத்தமா வச்சுக்கோங்க. அப்பறமா கூவம் சாக்கடைய பத்தி பேசலாம் ;)))
Tweet | ||||
ஃஃஃஃமனசாட்சியை சுயநலம் கொன்றுவிடுமா என்ன? ஃஃஃ
ReplyDeleteமிகவும் ஆணித்தரமான கேள்வி தான்..
வர்மம் புரிகிறத சகோதரி..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்
சுடு சோறு அனுப்புவிங்களா ?
ReplyDelete@மதி சுதா
ReplyDeleteமுதல் வருகைக்கு மிக்க நன்றி சகோ
சுடுசோற பார்சல் அனுப்பட்டா ஆறிபோய்டாது?
//அந்த எண்ணம் என்னை ஓங்கி கன்னத்தி ஒரு பளார் விட்டது போல ஒரு உணர்வை ஏற்படுத்துச்சு.// ஆஹா..இதல்லவா மனிதாபிமானம்.
ReplyDelete//ஆமி ரொம்ப அப்பாவி) //
ReplyDelete//ஒரு கட்டத்துல பொருமை இழந்து
இந்தா........ எடத்த குடுக்க போறீயா? இல்ல உன் புள்ளைய நானே கீழவுட்டு உக்காரவா?,,,,,,,,,,,,கன்னாபின்னான்னு உக்காந்துட்டு இருந்த ஒரு பெண்ண பாத்து கத்த ஆரம்பிச்சேன்.//
//இதுவே எதிர்த்து பேசமுடியாதவங்க(என்னை மாதிரி ஆள்;))இருந்தா சும்மா விடுவாங்களா? //
ஆமி எனக்கு ஒரே குழப்பமாக இருக்கு.
@சாதிகா அக்கா
ReplyDeleteஓங்கி கன்னத்துல அறஞ்சதா? :)
அப்பாவி பாதி அடாவடி பாதி கலந்து செய்த கலவை தான் ஆமி ;) (ஒரு ப்லோ ல சொன்னதெல்லாம் புடிச்சுட்டு கேள்வி கேட்டா ஓவரா தடுமாறுவேன்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நீங்களும் முதல்ல சொன்ன அந்த பெண் போல இருந்தாலும் பின்னர் இடம் கொடுத்துட்டீங்க. வெரி குட்...
ReplyDeleteஎப்படி இருக்கீங்க ஆமினா,ரொம்ப நாளா காணாமே...பலே பிரபு சொன்னதையே வழிமொழிகிறேன்...
ReplyDeleteசண்டை போட்டு சீட்டு புடிக்கிறீங்க. தூங்கறமாதிரி நடிக்கவும் செய்யறீங்க. ஆமி.. நீங்க நல்லவரா?.. அடாவடியா?!!!.... அவ்வ்வ்வ்வ்வ்.
ReplyDelete@பலே பிரபு
ReplyDeleteநான் என்றோ அந்த பெண் என்றோ இல்லை. யாராக இருந்தாலும் முதலில் தனக்கு கிடைத்த வாய்ப்பை விட்டு கொடுக்க விரும்புவதில்லை. சுயநலம் நம்மை அதன் எதார்த்ததிற்கு மாற்றிவிட்டது :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தம்பி :))
@அமைதிச்சாரல்
ReplyDelete///சண்டை போட்டு சீட்டு புடிக்கிறீங்க. தூங்கறமாதிரி நடிக்கவும் செய்யறீங்க. ஆமி.. நீங்க நல்லவரா?.. அடாவடியா?!!!.... அவ்வ்வ்வ்வ்வ்.///
ஆ..........ஆ.........ஆ.......
(நாயகன் மியூசிக் போடுங்கப்பா:)
சத்தியமா 100த்துல ஒருத்தி இல்ல. சாராசரி மனுஷி ;))
@மேனகா
ReplyDeleteநல்லா இருக்கேன் மேனகா. நீங்க நலம் தானே...
அடிக்கடி காணாம போனாதான் பதிவர்ன்னு ஒத்துக்குவாங்களாம் :)
//பலே பிரபு சொன்னதையே வழிமொழிகிறேன்...//
அது சரி...!! அப்ப பிரபுக்கு சொன்ன கமெண்ட் அப்படியே உங்களுக்கும் வழிமொழிகிறேன் (மறுபடியும் டைப் பண்ண கஷ்ட்டமாருக்கு. கோச்சுக்காதீங்கோ... நமக்குள்ள எதுக்கு பார்மாலிட்டீஸ்னு நீங்க சொல்றது கேக்குது ;))
ஆமா .. எங்க சகோ ரொம்ப நாளா ஆளைக் காணோம்..
ReplyDelete@கருண்
ReplyDeleteமாட்டுனீங்க.....
நாலு பக்கத்துக்கு கதையா எழுதி உங்களுக்கு அனுப்புறேன் ;)
ம்ம்ம் பதிவு நல்லாருக்கு எங்க ரொம்ப நாளா கானோம்...
ReplyDelete@ரியாஸ்
ReplyDeleteமிக்க நன்றி சகோ....
பெரிய பெரிய வேலைலாம் நம்மல நம்பி அப்படியே நிக்குறதா சொன்னாங்க. அதான் முடிச்சுட்டு வர இவ்ளவு நாள் ஆச்சு :)
nice
ReplyDelete@தேவையற்றவனின் அடிமை
ReplyDeleteமுதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ
உங்களைப் போல் எல்லோரும் மனசாட்சியைக் கேட்டு நடந்து விட்டால் சண்டை சச்சரவே இல்லை.
ReplyDelete@சிவகுமார்
ReplyDeleteஎனக்கே எப்பவாவது அபூர்வமா தான் பேசும் சகோ ;)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!!
இது லேடிஸ்க்கான சீட்.எந்திரின்னு ரூல்ஸ் பேசி நூடுல்ஸ் ஆக்கிட்டு தான் முடிப்பாங்க..
ReplyDeleteபலமுறை இது பேருந்துகளில் நடந்திருக்கிறது.... பாராட்டுக்கள்
நல்ல கேள்வி ... மனிதனுக்கு இரக்க குணம் வேண்டும்...
ReplyDeleteஎன் பக்கமும் வர முடிந்தால் வாருங்கள்...
கூகிளுக்கு ஏன் இந்த வேலை?????
@மாய உலகம்
ReplyDelete//பலமுறை இது பேருந்துகளில் நடந்திருக்கிறது.... பாராட்டுக்கள்//
ஆமா ஆமா....
நானே எத்தன பேர காலி பண்ணிருக்கேன் ;))
@ஆகுலன்
ReplyDelete//மனிதனுக்கு இரக்க குணம் வேண்டும்...//
கண்டிப்பாக சகோ...!!!!
வருகைக்கு மிக்க நன்றி.
உங்கள் வலைபக்கம் பார்த்தேன். நல்லா எழுதுறீங்க :))
நல்ல பதிவு ஆமினா !
ReplyDeleteஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தல், தான் பிள்ளை தானே வளரும் என்ற பழமொழியை ஆணித்தரமாக நம்புபவள் நான்.
யாருக்கோ நாம் உதவி செய்ய நமக்கு தானாய் உதவி தேடி வரும் !
பகிர்வுக்கு நன்றி !
@யாழினி
ReplyDeleteஅப்ப இனி நான் பஸ்ஸுல போனா கண்டிப்பா இடம் கிடைக்கும்னு சொல்றீங்க தானே? :))
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி
Well come Back saho aamina..
ReplyDeletenallaa irukeehala?
evening itha pathi pesren...
ipothaikku Salam...
anbudan
Razin
பதிவு நல்லாருக்கு
ReplyDelete@ரஜின் அண்ணா :)
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...!!
வந்ததுல இருந்து உங்கள தான் தேடுனேன் (அஸ்மா கூப்பிட்ட தொடர்பதிவை தொடர ஆள் புடிக்கணும்ல? :)
இறைவனின் துணையால் நலமே. நீங்க எப்டி இருக்கீங்க? நலமா?
மறக்காம வந்ததுக்கு நன்றி சகோ!!!
@மாலதி
ReplyDeleteமிக்க நன்றி மாலதி
அடிக்கடி வாங்க :)
அருமையா சொன்னிங்க ..
ReplyDeleteஎல்லோரும் அவரவர் முதுகை முதலில் பார்க்கோணும் அப்புறம் அடுத்தவர் முதுகை பாருங்கள் என்று
சொன்ன விதம் அருமை ...
//
ReplyDeleteமனசாட்சியை சுயநலம் கொன்றுவிடுமா என்ன? //
நல்ல கேள்வி
@அரசன்
ReplyDeleteநலமா சகோ?
வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றிகள்!!!
@"என் ராஜபாட்டை"- ராஜா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!!
பெறுநர்: குட்டி சுவர்க்கம் இணைய தள அதிகாரி அவர்கள்
ReplyDelete50/32 டாக்டர் கபாளி இரண்டாவது தெரு.
தலை வெட்டியான் வலசை.
தறுநர்: அந்நியன் 2
நாட்டாமையின்.ப்ளாக்ஸ்போட்.கம்
பொறுள்: சந்தா கட்டுதலில் தாமதம்.
தாங்கள் எமக்கு செலுத்த வேண்டிய வலைப் பூ வாடகை சுமார் அருபத்தி ரெண்டு ரூபாய் முப்பத்தி ஏழு காசை இந்த மாத இறுதிக்குள் செலுத்தி மின் வெட்டை...சாரி..சாரி ..வலை பூ இணைப்பை துண்டிப்பதிலிருந்து காத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறிகள்.
கடந்த ஆறு மாதமாக தளம் இறுண்டு கிடந்தமைக்கு மேலிடம் கவலை தெரிவித்துள்ளது அதற்க்கும் தாங்கள் டபால்...சாரி..சாரி..தபால் மூலம் விளக்கம் அளிக்கவும்.
கணம் (சத்தியமா உங்க வெயிட் பத்தி சொல்லல) நாட்டாம அவர்களே.....
ReplyDelete//அருபத்தி ரெண்டு ரூபாய் முப்பத்தி ஏழு காசை//
ரொம்ப சீப்பா இருக்கே... சில்லரையா வேற கேக்குறீங்க? அங்கே பாட்டா கடைக்கு ஓனரா வேல செய்றீகளோ? :)
அது இருக்கட்டும். நான் வந்து கிட்டதட்ட 4 நாள் இருக்கும். பட் இப்ப தான் நாட்டாம வரீக. ஆள் இருக்கும் போதே இப்படி காவல் காத்தா... 6 மாசமா.............?????????????
அதுக்கு அபராதமா சங்கத்துக்கு நீங்க//அருபத்தி ரெண்டு முப்பத்தி ஏழு// திர்ஹம்ஸா கொடுத்துடுங்க :))
நல்லா நடிப்பிங்களோ? வேணா ராணா படத்துல நடிக்க ரஜினிகிட்ட பேசிபாக்குறேன். என்ன ரெடியா?
ReplyDelete@Avargal Unmaigal
ReplyDeleteஅமெரிக்கால தானே இருக்கீங்க? ஹாலிவுட் ரேஞ்சுக்கு யோசிங்கப்பா
அவார்னெஸ்
ReplyDeleteமனசாட்சியும் மனதும் ஒருங்கே வேலை செய்தால் நாட்டில் பிரச்சனைகளே இருக்காதுங்க!
ReplyDeleteஆமினா said...
ReplyDelete@மாய உலகம்
//பலமுறை இது பேருந்துகளில் நடந்திருக்கிறது.... பாராட்டுக்கள்//
ஆமா ஆமா....
நானே எத்தன பேர காலி பண்ணிருக்கேன் ;))//
ஆஹா.... நீங்க தானா அது!
@சகோ சர்புதீன்
ReplyDelete//மனசாட்சியும் மனதும் ஒருங்கே வேலை செய்தால் நாட்டில் பிரச்சனைகளே இருக்காதுங்க!//
மனசாட்சியும் மனதும் ஒருங்கே வேலை செய்யாததால் தான் நாட்டில் பிரச்சனை இருக்குதுங்க (என்னையும் சேர்த்து தான்:)
அது சரி....மனசு சொல்றது தானே மனசாட்சி? அப்பறம் ஏன் தனி தனியா பிரிச்சுருகீங்க? :))
(தமிழ்ல கொஞ்சம் வீக்)
@மாய உலகம்
ReplyDelete//
ஆஹா.... நீங்க தானா அது! //
:))
மனசாட்சி ஒரு விஷயத்தை தப்புன்னு சொல்லும், ஆனா மனது அதை செய்யுன்னு சொல்லிதொலைக்கும், அதைதான் அப்படி இரண்டாக சொன்னேன், உங்களுக்கு மின்னசல் முகவரி கிடையாதா?
ReplyDelete@சகோ சர்புதீன்
ReplyDelete//மனசாட்சி ஒரு விஷயத்தை தப்புன்னு சொல்லும், ஆனா மனது அதை செய்யுன்னு சொல்லிதொலைக்கும்,//
தப்பான விஷயத்த செய்ய சொல்றது தான் மனதா? :)
////மனசாட்சியும் மனதும் ஒருங்கே வேலை செய்தால் நாட்டில் பிரச்சனைகளே இருக்காதுங்க!////
ஒரு விஷயத்த தப்புன்னு சொல்ற மனசாட்சியும், அந்த தப்ப செஞ்சு தொல:)ன்னு சொல்லி தொலைக்கும் மனதும் ஒருங்கே வேல செய்தால் நாட்டுல பல பேருக்கு பைத்தியம் தான் பிடிக்கும் :))
ஹா...ஹா...ஹா... சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்.
விவாதம் பண்றதா நெனச்சுக்க வேண்டாம்.
:-)
ReplyDelete@சகோ சர்புதீன்
ReplyDelete:))
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.....
@சிபி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ
//ஃஃஃஃமனசாட்சியை சுயநலம் கொன்றுவிடுமா என்ன? ஃஃஃ
ReplyDeleteமிகவும் ஆணித்தரமான கேள்வி தான்..//
சரியான கேள்வி தான்.
பாட்டிக்கு இடம் கொடுத்த சகோதரி வாழ்க. பதிவை ஆக்கர்பூர்வமாக சிந்திக்கும்படி எழுதிய உங்களுக்கும் எழுத வைத்த பாட்டிக்கும் நன்றி
@சகோ அபு நிஹான்
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அடடா....
அட்ரஸ் தெரிஞ்சதா? :) ரொம்ப நாளைக்கு அப்பறம் வந்துருக்கீங்க :)
//பாட்டிக்கு இடம் கொடுத்த சகோதரி வாழ்க. //
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இப்ப சொல்லாதீங்க....
மனசுல ஞாபகம் வச்சுட்டே வாங்க. அடுத்த எலக்ஷன்ல நான் நிக்கும் போது சொல்லுங்க :)