நடந்து முடிஞ்ச எலக்‌ஷன் பத்தி என் மம்மியும்  மாமியும் ரொம்ப காரசாரமா பேசிட்டு இருந்தாங்க. (இதுக்கு மட்டும் எல்லாரும் கடந்த காலத்துக்கு வாங்க…. அப்பறம் எப்ப எலெக்‌ஷன் வந்துச்சுன்னு கேட்டா க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)

மம்மி-  நீ யாருக்கு ஓட்டு போட்ட?
மாமி- ரெட்டலைக்கு  தான்
மம்மி- ஏன்ல இப்படி பண்ண? கலைஞரு என்னன்ன செஞ்சாரு? கலர் டீவி பொட்டி, ஒத்த ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி…. அதெல்லாம் அனுபவிச்சுட்டு நன்றிய மறந்துட்டு  இப்படி பண்ணலாமா?
மாமி- அட போங்க மச்சி……. அவரு எல்லாத்தையும் எலவசமா கொடுத்துட்டு நக வெலைய ஏத்திப்புட்டாருல? அவருக்கு போய் ஓட்டு போடலாமா? அம்மா வந்தா கொஞ்சமாது கொறையுதா இல்லையான்னு பாருங்க….. என்ன ஆமி நா சொல்றது?
ஆமி- ………..????!!!!!????!!!!
(1 மணி நேரம் ஒதுக்கி தனியா ரூம்ல உக்காந்து சிரிச்சேன். அவுங்களுக்கு முன்னாடி சிரிச்சுருந்தா நா காலி;)
                                  __________________________________

பள்ளிக்கு அனுப்புவதற்கு முன்பு வரை எதுவுமே ஷாம்க்கு சொல்லி கொடுக்கல. எல்லாரும் பயம் காட்டவே  அட்மிஷனுக்கு 3 நாளைக்கு முன்பு  (எல் கே ஜி படித்த ஒரு குழந்தையின் புத்தகம் வாங்கி ) ஒரு ரைம் மட்டும் , 123, ABCD சொல்லி கொடுத்தேன். டீச்சர் கேட்டா அதான் நீங்க இருக்கீங்களேன்னு நான் சொல்லி கொடுக்கல” அப்படின்னு சொல்லி  சமாளிச்சுடலாம்னு  நெனப்பு.
இண்டர்வியூ அன்று என்னத்த கேக்க போறாங்களோன்னு நானே பயத்துல இருக்கேன். தன் அதிமேதாவி மகனை கூடிட்டு வந்த பெண்மணி  “ப்ரவின்க்கு ரைம்ஸ் தெரியும். நீ சொல்லு பாக்கலாம்என ஷாமிடம் சொல்ல என்ன நினைத்தானோ தெரியல

GOD BLESS MUMMY
GOD BLESS DADDY
HELP ME ALWAYS
TO MAKE THEM HAPPY  என்ற பாட்டை

GOD BLESS சக்திமான்
GOD BLESS சாக்கி சான்
HELP ME ALWAYS
TO MAKE THEM HAPPY
என சொன்னதும் என்னை அறியாமல் பயத்தையும் மீறி சிரிக்க ஆரம்பிச்சேன்.  ( (ஷாம் என்னை மாதிரி...... யாராவது கேள்வி கேட்டா பிடிக்காது:) 
                        ___________________________________________________

மாலையில் மொட்டை மாடியில்  உலாவிட்டு இருக்கும் போது  எதார்த்தமாக பார்வை பக்கத்துவீட்டு மொட்டை மாடிக்கு போனது. கிராமத்திலிருந்து  வந்த பாட்டியுடன்  பேத்தி பேசிக்கொண்டிருந்தாள். அப்போது பாட்டி அந்த பெண்ணிடன் ஏன்ப்பா.... நம்மூர்லலாம் வாசல்ல நின்னா எதுக்க (எதிரில்) சூரியன் வரும். இங்கே மட்டும்  ஏன் வித்தியாசமா நம்ம கொல்லபுறம் பக்கம் சூரியன் வருது?” இந்த கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் 6ம் வகுப்பு படிக்கும் அந்த பொண்ணு முழிக்கும் போது பாவமா இருந்தாலும் பாட்டி சொன்ன விதம் சிரிப்பை வர வச்சுது. அந்த பாட்டி என்னை முறைக்கவும்  ”உங்க வீடு கெழக்கு பாத்த வாசல்என சொன்னதும் பாட்டி வழிந்தார் (உனக்கும் அறிவு இருக்கு ஆமி)
                                     ________________________________________

மதுரைக்கு போகும் வழியில் பேருந்து மானாமதுரை சீனியப்பா தியேட்டர் வாசலில் நின்றது. என்ன படம் ஓடுதுன்னு பாக்குறதுக்காக போஸ்ட்டர பாத்தேன். சன்பிக்சர்ஸ் பெருமையுடன் வழங்கும் கலாநிதி மாறனின் தயாரிப்பில்  ...........!!(படம் பேர சொல்லமாட்டோம்ல....)
அதுக்கு பக்கத்துல நடிகரின்  பெரிய கட் அவுட்.வெற்றிகரமாக 4 வது நாள்என்ற வாசகம்.யாருக்கு தான் சிரிப்பு வாராது?
(அடப்பாவிகளா 4 வது நாளைக்குலாம்  கட் அவுட்னா...........??? இந்த கட் அவுட் ரெடி பண்ண xxxxxxxxxxங்கள வெற்றிகரமா இத்தன வருஷம் மேய்ச்ச பெற்றோர்களுக்கு  என்ன செய்யலாம்?)   
                           _______________________________________

ஸ்கூலுக்கு ஷாம்க்காக சாப்பாடு கொண்டு போன போது, மணி அடிக்க 15 நிமிடங்கள் இருப்பதால் அவன் க்ளாஸ் வாசலுக்கு வெளியே ஜன்னலோரம்  நின்று கொண்டிருந்தேன்அதே வகுப்பில் படித்த என் உறவினர் மகளிடம் வாட் இஸ் யுவர் மதர் நேம்? (ஆமிக்கும் இங்க்லீஸ் வருது?) என டீச்சர் கேட்க அந்த குழந்தை முழிக்க அதே கேள்வியை தமிழில் கேட்க அப்போதும் பதில் சொல்லாததால்   திட்ட ஆரம்பிச்சுட்டாங்கபுது சூழல், புது ஆட்கள்.... அதுனால கொழந்த தயங்கிட்டு இருக்கு. இது புரிஞ்சுக்காம இப்படி திட்டுற பொம்பளைக்குலாம் எவன் வேல கொடுத்தான்னு மனசுக்குள்ள திட்டிட்டு இருந்தேன்.
அதே உறவினர் (எனக்கு அக்கா முறை)நேற்று விருந்துக்கு அழைத்திருந்தார்கள் (விடுவோமா??). சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போதே  “அர்ஷதா.... தங்கம் யார்யார்லாம் இருப்பாங்க? சித்திக்கு தெரியாதாம்.... நீ சொல்லு டா பாப்பாஎன அக்கா சொல்ல, அந்த பொண்ணுஐயா,சாரூ,கங்கா,இலவஞ்சி,நாச்சியாரத்த,கலெக்டரு......”என ஒன்னு விடாம சொல்றத கேட்டதும் சிரிச்சதுல  சாப்பாடு  நாசிக்கு ஏறி இருமல் வந்துடுச்சு. அக்காவோ  அவள் மகளின் புத்திசாலிதனத்தை நினைத்து தான் சிரிச்சேன்னு நெனச்சுக்கிட்டு பெரும பட்டா. நாம ஏன் அத கெடுப்பானே?ன்னு கம்முன்னு என் சாப்பாட்டு வேலைல மும்முரமாகிட்டேன். (மவளே அந்த மகராசி உன்னைய திட்டுனதுல தப்பே இல்ல..... )
                                          _______________________________

நேற்றிரவு ஜீமெயில்,ப்ளாக் பக்கம் பிஸியா(?!!)  சுத்திட்டு இருந்த நேரம். என் பக்கத்துல ஒருசேர் போட்டு ஷாம் உக்கார்ந்து வேடிக்க பார்த்துட்டு இருந்தான்.

ஷாம்- ஆனி…. யூடூல டாமென்செரி போடு(யூடூப்ல டாம் அண்ட் செர்ரி போடு)
நான் – டீவில போய் பாரு. வேல இருக்கு
ஷாம்(என் அம்மாவை நோக்கி)- அம்மம்மா……………… ஆனி திட்டிட்டா…….
நான் – டேய் நா எங்கே டா உன்னைய திட்டுனேன்? டீவில தானே பாக்க சொன்னேன்?
ஷாம் (மீண்டும் கத்திக்கொண்டே)- அம்மம்மா…………….. ஆனி என்னைய கம்பெடுத்து அடிச்சுட்டா…………கால் வலிக்து,ரத்தம் வர்து

நான் - ............??????????????!!!!!!!!!????????????.............

இத்தன நாளா சிரிச்சதுக்கு பலனா அம்மாகிட்ட திட்டு வாங்கி…… :(( இந்த நெலம எதிரிக்கு கூட வரப்படாது!!!!
                                   _______________________________
, , ,

33 comments:

 1. ஜாலியான வாழ்க்கை. ஜமாய்ங்க.வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. சம கால அரசியல் நிலவரத்தையினை அடிப்படையாக வைத்து முன் பகுதியினையும், பல் சுவை காமெடிகளைச் சேர்த்துப் பின் பகுதியினையும் படைத்து சிரிக்க வைத்திருக்கிறீங்க.

  ReplyDelete
 3. சலாம் சகோ ,
  குழந்தை கிட்ட உள்ள பெரிய மனுசதனமும்
  பெரியவங்க கிட்ட உள்ள குழந்தைதனமும் சிரிக்க வைத்தது

  ReplyDelete
 4. //@ aj said...

  ஜாலியான வாழ்க்கை. ஜமாய்ங்க.வாழ்த்துக்கள்//

  ப்ரோபைல் பார்த்தேன்.... குட்டி சுவர்க்கத்த தவிர எதுவுமே இல்ல :)

  முதல் வருகைக்கும் முதல் கருத்துக்கும் முதலில் என் தளத்தை பாலோ பண்றதுக்கும் நன்றிகள்

  இன்னுமா இந்த ஊரு நம்மல நம்புது??? :)

  ReplyDelete
 5. @நிரூபன்

  நான் சிரிக்கும் போது சிரிச்சீங்க ஓக்கே...

  நான் அழுகும் போதும் சிரிச்சுருக்கீங்க??? என்ன ஒரு வில்லத்தனம்? :))

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 6. @ரியாஸ் அஹமத்

  வ அலைக்கும் சலாம் வரஹ்...

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 7. @சமுத்ரா

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 8. ஆமினா said...
  இன்னுமா இந்த ஊரு நம்மல நம்புது??? :)
  சத்தியமா என் பேரு "ஊரு" இல்லீங்கோ. நம்புங்க...ஹி ஹி ஹி.
  (எப்பூடி)

  ReplyDelete
 9. நல்ல அனுபவங்கள் ;-)

  ReplyDelete
 10. ஆமி எஙக போனீஙகப்பா. திரும்பவந்துட்டீங்களே சந்தோஷம்.
  இனி கலக்கல்தானே?

  ReplyDelete
 11. படித்தாயிற்று சிரித்தாயிற்று ஓட்டும் போட்டாயிற்று கிளம்பியாச்சு,,

  ReplyDelete
 12. நல்லா நகைச்சுவையா எழுதிருக்கீங்க...நானும் உங்களோடு சேர்ந்து சிரித்தேன்,அழுதேன்...

  ReplyDelete
 13. அன்புள்ள சகோதர்/சகோதரி,

  மாவட்ட அளவில் மூன்றாமிடமும், பள்ளியளவில் முதலிடமும் பெற்று +2 தேர்வில் 1171/1200 மதிப்பெண்கள் பெற்றுள்ள அரியலூரைச் சார்ந்த ஓர் ஏழை கூலித்தொழிலாளியின் மகன் ராஜவேல்,மருத்துவப் பட்டப்படிப்புக்கு அனுமதி கிடைத்தும் ஏழ்மைநிலை காரணமாக இன்னொரு கூலித்தொழிலாளியாகிக் கொண்டிருப்பதாக வந்த செய்தியைத் தொடர்ந்து,தமிழிணைய பதிவர்களைத் திரட்டி,இந்த மாணவனுக்கு உதவும் நோக்கில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்தப்பதிவை நீங்களும் மீள்பதிவாகவோ அல்லது சகவலைப்பதிவர்களுக்குப் பரிந்துரைத்தோ அந்த மாணவனின் கல்விப்பயணம் தொடர்வதற்கு நம்மால் இயன்ற முயற்சிகளை செய்வோமே!

  பரிந்துரைக்க வேண்டிய சுட்டி : http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html . மீள்பதிவிட முடியவில்லை எனில் உங்கள் பதிவில் நேரடியாக புதிய பதிவிட்டு அதற்கான சுட்டியை adiraiwala@gmail.com என்ற முகவரிக்கு அறியத்தரவும். இதிலும் சிரமம் இருந்தால் http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html பதிவில் பின்னூட்டமிட்டு அறிந்தந்தாலும் மிக்க நன்றி.

  தன்னார்வலர்களிடம் நிதியுதவி கோருவதைவிட, இத்தகைய மாணவர்களுக்கு அரசின் உதவியைப் பெற்றுக்கொடுப்பதே கவுரமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

  மேலதிக தகவல் தேவையெனில் தயங்காமல் கேட்கவும். சாதி/மதங்கள் கடந்த இந்த உன்னதமுயற்சிக்கு உங்களின் ஒத்துழைப்பு மட்டுமே கோரப்படுகிறது. இந்த கோரிக்கையை இந்நேரம்.காம் செய்திதளமும் செய்தியாக வெளியிட்டுள்ளது.

  நன்றி.

  அன்புடன்,
  அதிரைக்காரன்
  adiraiwala@gmail.com

  ReplyDelete
 14. பதினைந்து நிமிடம் என் டயத்தை வேஸ்ட் பண்ணிய குற்றத்திற்க்காக இது போல காமெடிகளை அதிகம் பதிவிடுமாரு கட்டளை இடுகிறேன்.

  ReplyDelete
 15. சினிமா நகைச்சுவைகளைவிட இயல்பா சூப்பரா இருக்கு ஆமினா !

  ReplyDelete
 16. ஷாம் நீதாம்பா கெட்டிக்காரப் பையன்... இவங்க கதை ரொம்ப மோசமாயிருக்குமே.. ஹ...ஹ..ஹ..

  ReplyDelete
 17. உங்களை எப்படி ட்ரில் வாங்குறதுன்னு உங்க பையனுக்கு நல்லாவே தெரியுது
  :-))))

  ReplyDelete
 18. நகைச்சுவையான விடயங்களை நன்றாகவே எழுதியுள்ளீர்கள். அந்த சூரியன் உதிக்கும் மாட்டரு சூப்பர்

  ReplyDelete
 19. வணக்கம் சகோ, நலமா?

  ரசிச்சு படிச்சேன்...பகிர்வுக்கு நன்றிங்க
  வாழ்த்துக்கள்... :)

  ReplyDelete
 20. அனுபவங்கள் அருமை..
  இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன்

  ReplyDelete
 21. அனுபவங்கள் சுவாரஸ்யமாக நகைச்சுவையாக பகிர்ந்துள்ளீர்கள் ஆமினா

  ReplyDelete
 22. mm நிறைய பதிவு பார்க்கனும்
  குட்டி சுவர்ககம் மாச்சே...

  ReplyDelete
 23. @ஏஜே
  //சத்தியமா என் பேரு "ஊரு" இல்லீங்கோ. நம்புங்க...ஹி ஹி ஹி.
  (எப்பூடி)//
  என்ன கொடும சார் இது? :))

  @நிகழ்வுகள்
  //நல்ல அனுபவங்கள் ;-)//
  மிக்க நன்றி சகோ :)

  @கோமு
  //ஆமி எஙக போனீஙகப்பா. திரும்பவந்துட்டீங்களே சந்தோஷம்.
  இனி கலக்கல்தானே?//
  என்னைய சொல்லிண்டு நீங்க எங்கே போனேள்? லட்சுமி மாமியையும் காணோமே?!!
  இறைவன் நாடினால் தொடந்து வருவேன் கோமு!!
  உங்க கமெண்ட் பார்த்ததும் ஏகத்துக்கும் குஷி!!

  @ரியாஸ்
  //படித்தாயிற்று சிரித்தாயிற்று ஓட்டும் போட்டாயிற்று கிளம்பியாச்சு,,//
  வந்தோமா?கிளம்புனோமா?ன்னு இருக்கணும்னு சொல்லுவாங்களே....??? இத தானோ? :))

  @மேனகா
  //நானும் உங்களோடு சேர்ந்து சிரித்தேன்,அழுதேன்...//
  வை க்ரையிங்? சேம் க்ரையிங் :))

  @ஆகுலன்
  //நல்ல தொகுப்பு......//
  புத்தகமா போட்டலாம்னு சொல்லுங்க :)
  மிக்க நன்றி சகோ

  @அதிரைகாரன்
  பதிவிட்டேன் சகோ!!

  @என் ராஜபாட்டை”-ராஜா
  //Good comedy//
  அப்படியா?? :)
  நன்றி சகோ

  @அந்நியன்
  15 நிமிஷம் ஆச்சா படிச்சு முடிக்க? எழுத்து கூட்டி படிச்சதுக்காகலாம் தண்டனைய ஏத்துக்க முடியாது.... உச்ச நீதி மன்றத்துல உங்கள சந்திக்கிறேன் :))

  @ஹேமா
  //சினிமா நகைச்சுவைகளைவிட இயல்பா சூப்பரா இருக்கு ஆமினா//
  உங்க கிட்ட பாராட்டு வாங்குறதே பெரிய விஷயம் தான் :)
  நன்றி ஹேமா!!!

  @மதி சுதா
  //ஷாம் நீதாம்பா கெட்டிக்காரப் பையன்...//
  தப்பு தப்பு
  கெட்டிக்காரிக்கு பையன்
  அதான் எல்லார் கதையும் மோசமாயிட்டு வருது...
  ஹா....ஹா...ஹா........

  @அமைதிசாரல்
  //உங்களை எப்படி ட்ரில் வாங்குறதுன்னு உங்க பையனுக்கு நல்லாவே தெரியுது
  :-))))//
  ஏன் கேக்குறீங்க...
  ஸ்கூல் ல இருக்குற அரை மணி நேரத்துல மட்டும் தான் அவனுக்கு நா அம்மாவா தெரிவேன் :))

  @தேவையற்றவனின் அடிமை
  //nice....//
  எது? நா திட்டு வாங்குனதா?? :))
  மிக்க நன்றி சகோ
  @மாணவன்
  நான் நலம் :)
  ரசிச்சு படிச்சதுக்கு நன்றிங்க சகோ!!!

  @கருன்
  //இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன்//
  பாத்துங்க.... கீழ்பாக்கம் கூடிட்டு போய்ட போறாங்க :))

  @சாதிகா அக்கா
  மிக்க நன்றி அக்கா!!!

  @ஜலீலாக்கா
  பாருங்க பாருங்க :)

  ReplyDelete
 24. இத்தினி நாள் எங்கோ போயிட்டீங்க என்று வந்து இங்க பார்த்தா கை நிறைந்த அனுபவங்களை இந்த மாசம் முழுக்க எழுதி வச்சிருக்கீங்க! ஹா... இனி படிக்க எங்களுக்கு கொண்டாட்டம் தான் மீன்ஸ். ஹை ஜாலி!!

  ReplyDelete
 25. @ சகோ எம் அப்துல் காதர்

  வந்ததுக்கு எத்தன பிஸ் புடிச்சீங்க? :))

  ReplyDelete
 26. பல நாள் சிரித்தேன் ஒரு நாள் அழுதேன்.... ஆனால் பல நாள் அழுதேன் உங்கள் பதிவு படித்ததால் ஒரு நாள் சிரித்தேன்

  ReplyDelete
 27. நல்ல அனுபவம்...

  அதுசரி..
  ஷாம் ஸ்கூல் போக ஆரம்பிச்சாச்சா??..

  //ஷாம்(என் அம்மாவை நோக்கி)- அம்மம்மா……………… ஆனி திட்டிட்டா…….
  நான் – டேய் நா எங்கே டா உன்னைய திட்டுனேன்? டீவில தானே பாக்க சொன்னேன்?
  ஷாம் (மீண்டும் கத்திக்கொண்டே)- அம்மம்மா…………….. ஆனி என்னைய கம்பெடுத்து அடிச்சுட்டா…………கால் வலிக்து,ரத்தம் வர்து//

  இப்டில்ல பண்ணுனா,அப்புறம் ஸ்கூலுக்கு தா அனுப்பனும்...
  ஒரு வேல உண்மையா இருக்குமோ,கொழந்த பொய் சொல்லாது,எனக்கென்னவோ உங்க மேலதா டவுட்டு..

  அப்புறம்
  நூலை போல சேலை...அப்டீன்னு சொல்வாங்க...சகோ அந்த மோதல்வரி என்ன? எனக்கு மறந்து போச்சு???
  அப்டித்தா ஷாம்'ன்னு நெனைக்கிறேன்

  அன்புடன்
  ரஜின்

  ReplyDelete
 28. @மாய உலகம்

  ரொம்ப சந்தோஷம் சகோ...

  ReplyDelete
 29. @சகோ ரஜின்

  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  //ஷாம் ஸ்கூல் போக ஆரம்பிச்சாச்சா??..//
  3 1/2 வயசாச்சே :)

  //இப்டில்ல பண்ணுனா,அப்புறம் ஸ்கூலுக்கு தா அனுப்பனும்...//
  ம்ம் :(

  //கொழந்த பொய் சொல்லாது,எனக்கென்னவோ உங்க மேலதா டவுட்டு..//
  கொழந்தைன்னு சொன்னது என்னைய தானே? அப்பறம் எதுக்கு டவுட்டு? :)

  //நூலை போல சேலை...அப்டீன்னு சொல்வாங்க...சகோ அந்த மோதல்வரி என்ன? //
  அறிவாளி,புத்திசாலி,ஜீனியஸ், அதிபயங்கரமேதாவி தாயை போல பிள்ளை :) எப்பூடி........

  //அப்டித்தா ஷாம்'ன்னு நெனைக்கிறேன்
  //
  அப்படியெல்லாம் சட்டுன்னு போட்டு ஒடைக்க கூடாது... பேசி முடிவெடுக்கலாம் :))

  ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)