ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப......நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட இடைவெளிக்கு பின் உங்களையெல்லாம் சந்திச்சதுல ரொம்பவே மகிழ்ச்சி (ஆரம்பமே ஓவர் பில்டப்பா இருக்கோ?)
சில இழப்புகளை ஈடு செய்ய முடியும் என்ற போதும் ஏனோ மனம் மறுத்துவிடும். முழுமையாய் அதன் இடத்தை நிரப்ப எப்பொருளாளும் முடியாது என்ற எண்ணம் தான். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாய் அதிலிருந்து மீள ஆறுதல் தேவைப்படலாம். மீண்டு வரவே மீண்டும் உங்களையெல்லாம் கஷ்ட்டபடுத்த சிங்கம் ஒன்று புறபட்டதே.................
வாழ்க்கையில் சந்தோஷங்களும் வருத்தங்களும் மாறிமாறி தான் வரும்னு மனதை பக்குவப்படுத்திக்கொண்டாலும் பள்ளத்தை விட்டு மேட்டுக்கு வரும் போதும், மேட்டிலிருந்து சருங்கி கீழே விழும் போதும் ஏற்பட்ட வலிகளை தாங்கிட வல்லமையும், பக்கபலமாய் நின்ற அன்பு கணவனையும் சோர்ந்திருக்கும் போது தோள் கொடுத்த நண்பனையும், உதவிட உறவுகளையும் தந்த எல்லாம் வல்ல இறைவனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் (எந்த ஒரு மனிதனையும் அவனின் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை)
எந்த காரணத்த சொல்லி லீவ் எடுத்தேனோ,,,,,, இறைவனின் துணையால் நல்லபடியாக முடிந்தது. என்னது?????? எக்ஸாமா???????? அரியர்லாம் வைக்காம காலேஜ் முடிச்சோம்னு சொன்னா யாரும் மதிக்கமாட்டாங்க. அரியர் வச்சா பையன் மதிக்க மாட்டான். எக்ஸாம் எழுதுனா தானே அரியர்ஸ்??? இருந்தாலும் பித்தனின் வாக்கை பொய்யாக்க விரும்பல. மக்கா………… யாரங்கே…………..எனக்கு கட் அவுட், பேனர் ரெடி பண்ணுங்கப்பா…..!!!!!
இடைபட்ட நாளின் இடைவெளியில் மறக்காம அடிக்கடி எட்டி பார்த்தவங்களுக்கு (குறிப்பிட்டு பெயர் சொன்னா சண்ட வந்துடுமாம். அதான் சொல்லல... ஆமி எஸ்கேப்ப்ப்ப்ப்ப்பூ) மிக்க நன்றி…
இன்ஷா அல்லாஹ் இனி பழையபடி வலம் வருவேன். (தேர்பவனியான்னுலாம் தெரியாது, ஆனா நேரம் கிடைக்கும் போதெல்லாம் பதிவிடுவேன்.)
இப்படிக்கு
உங்கள் அன்பு சகோதரி
ஆமினா
Tweet | ||||
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... வாங்க ஆமினா, நீங்க மீண்டும் வந்ததில் சந்தோஷம்!
ReplyDelete//சில இழப்புகளை ஈடு செய்ய முடியும் என்ற போதும் ஏனோ மனம் மறுத்துவிடும். முழுமையாய் அதன் இடத்தை நிரப்ப எப்பொருளாளும் முடியாது என்ற எண்ணம் தான். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாய் அதிலிருந்து மீள ஆறுதல் தேவைப்படலாம்//
என்னாச்சு ஆமினா...? ஒண்ணும் புரியாமலேயே இந்த வரிகள் மனதுக்கு கஷ்டமாக உள்ளது. எதுவாக இருந்தாலும் இறைவன் உதவி செய்வானாக!
நீங்கள் இணைய பக்கம் வரவில்லை என்றுதான் உங்களை ஞாபகம் வந்தும்கூட தொடர் பதிவுக்கு அழைக்காமல் இருந்தேன். இப்போதான் வந்தாச்சே.. :) அதனால் உங்கள் பெயரையும் பிற்ச்சேர்க்கையாக இணைத்து :) அழைத்துள்ளேன்.
http://payanikkumpaathai.blogspot.com/2011/07/blog-post_13.html
உங்களுக்கு முடிந்தால் எழுதுங்க.
வ அலைக்கு சலாம் வரஹ்...
ReplyDeleteமுதல் பதிவிட்டதுக்கு மிக்க நன்றி.
இறைவனின் உதவியால் இப்போது எந்த கவலையும் இல்லை அஸ்மா.
கண்டிப்பா அந்த பதிவை தொடர்கிறேன். மறக்காம அழச்சதுக்கு மிக்க நன்றி ;)
அட நம்ம ஆமினா அக்கா....
ReplyDeleteஆமா செமெஸ்டர் எக்ஸாம் ரிசல்ட் கூட வந்து இருக்குமே. ஒருவேள அதையும் நீங்கள்தான் திருத்தினீர்களா ??
எப்படியோ வந்துவிட்டீர்கள். இனி வலையுலகம் மிரளட்டும், பதிவர்கள் பயப்படட்டும்... மீண்டும் கலக்க வாழ்த்துகள்.
அப்புறம் நான் இப்போ
balepandiya.blogspot.com ல இருந்து baleprabu.blogspot.com க்கு மாறியாச்சு.
WELCOME BACK
ReplyDelete-Ashiq
ராணா வருவதற்கு முன்பு வெளிவந்த ஆமினா சிங்கமே உங்களை வருக வருக என்று மனம்மாற வரவேற்கிறேன். நோன்பு ஆரம்பிக்க போது என்று சொல்லி மீண்டும் ஒடி ஒழியாமல் பதிவு வேட்டையை ஆரம்பியுங்கள்
ReplyDelete@பலே பிரபு
ReplyDelete//அட நம்ம ஆமினா அக்கா..//
:( தம்பி பலே பிரபு.... நீங்க வேணும்னா அக்கான்னு கூப்டுங்க. ”நம்ம”ங்குற வார்த்தையால ஏன் ஊர கூட்டுறீங்க ;) இருந்தாலும் நல்லாயிருக்கு :)
///ஒருவேள அதையும் நீங்கள்தான் திருத்தினீர்களா ??///
ஒரு வேள அப்படி மட்டும் ஒரு வாய்ப்பு வந்தா ஐ ஏ எஸ் எக்ஸாம் எழுதி அடுத்த வருஷமே டாக்டராகிடமாட்டேன்?!!
//இனி வலையுலகம் மிரளட்டும், பதிவர்கள் பயப்படட்டும்... ///
இந்த கமெண்ட படிச்சு எனக்கு தான் இப்ப பயம் வந்து ஜொரம் வந்து சீரியஸா கெடக்குறேன்:)
வாழ்த்துக்களுக்கு நன்றி தம்பி. சீக்கிரமே உங்க வலைபக்கம் வருகிறேன்...
@ AshIQ
ReplyDeletethank you
@அவர்கள் உண்மைகள்
ReplyDeleteஅட நீங்க வேற
கமலோட மருதநாயகம் சூட்டிங் முடிஞ்ச பொறவு வரலாம்னுதேன் இருந்தேன் :)
இறைவன் நாடினால் இடைவெளி இல்லாமல் பதிவிடுவேன். மிக்க நன்றி சகோ
இப்படி நீண்ட விடுமுறைகள் அடிக்கடி வராதிருக்க என் பிரார்த்த்னைகள். மீண்டும் கண்டது மகிழ்ச்சி ஆமினா.
ReplyDeleteவருக ஆமினா.தொடர்ந்து விடுமுறை இல்லாமல் கலக்குங்க.
ReplyDelete@இமா
ReplyDeleteமிக்க நன்றி இமா :)
@சாதிகா அக்கா
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
அக்கா நலமா?
வருகைக்கு மிக்க நன்றி
செவ்வாய் கிரகத்துக்கு போனா கூட சீக்கிரம் வந்துடலாம். ஆனா நீங்க ரொம்ப நாள் ஆளை காணும். எப்படி இருக்கீங்க?
ReplyDelete@சிவகுமார்
ReplyDeleteநான் ப்ளூட்டோக்கு போய்ட்டு வந்ததுனால லேட் ஆச்சு ;)
நான் ரொம்ப நல்லாயிருக்கேன். நீங்க நலம் தானே?
யக்கா திரும்பி வந்திட்டியா
ReplyDeleteஎந்த பிரட்சினயாகவும் இருந்தாலும் சீக்கிரமாக அந்த பிரட்சினைகளில் இருந்து விடுபட வல்ல இறைவன் அருள்புரிவானாக
@FARHAN
ReplyDeleteஏலேய்.......தம்பி.........!!!!!!
(அக்கா தம்பி செண்டிமெண்ட் பலமா தான் இருக்கு:)
வருகைக்கும் ஆறுதல் வார்த்தைக்கும் மிக்க நன்றி சகோ
வெல்கம் ஹீரோ
ReplyDelete@சி.பி.செந்தில்குமார்
ReplyDeleteமிக்க நன்றி சகோ.....
ஆனாலும் என்னைய ஹீரோவாக்குனதுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் ;))
//இப்படி நீண்ட விடுமுறைகள் அடிக்கடி வராதிருக்க என் பிரார்த்த்னைகள். மீண்டும் கண்டது மகிழ்ச்சி ஆமினா.//
ReplyDeleteரிப்பிட்டு
@சகோ அபுநிஹான்
ReplyDeleteசலாம் சகோ...!!!
வருசையா கமெண்ட் போட்டு தாக்கிடீங்க? :)
////இப்படி நீண்ட விடுமுறைகள் அடிக்கடி வராதிருக்க என் பிரார்த்த்னைகள். மீண்டும் கண்டது மகிழ்ச்சி ஆமினா.//
ரிப்பிட்டு //
அடக்கால கொடுமையே....!!!!நம்ம வந்ததுல இத்தன மக்கள் சந்தோஷப்படுறாங்களா? :)
மிக்க நன்றி சகோ!!!
வாங்க வாங்க, நீங்க வரீங்கன்னு எல்லா பேப்பலும் போட்டு இருந்தாங்க..
ReplyDelete@ஜலீலாக்கா
ReplyDeleteஅப்படிலாமா நம்ம பேரு பேமஸ் ஆச்சு? :))