நா ஏன் சீரியல் பாக்குறதில்லைங்குறதன் காரணத்தை, ரகசியத்தை, உண்மையை உலகுக்கு  போட்டு உடைக்கும் தருணம் இது! என்னைய தடுக்காதீங்க! விடுங்க!விடுங்க! நா இத இப்பவே சொல்லியே ஆகணும்!!!

  செம பில்டப்பா இருக்கோ:-)  சீரியல் பத்தி பேசுறோம்ல? அதெல்லாம் அப்படி தான் செமடாப்புல பில்டப்பு இருக்கும்!

சரி இப்ப என்ன்ன்ன்ன்ன்ன்னா மேட்டர்ன்ன்ன்ன்னா...  ஐ டோன்ட் லைக் அழுவாச்சி பக்கிஸ்... சீரியல் பிடிக்காதுன்னு சொல்றதுக்கான மொக்கையான காரணமா இருக்கோ! சரி சரி முட்டைய ஓரம்மா வைங்க! ஆம்லேட் போட ஒதவும்!

இரு பெண்கள் பேசிக்கொண்டாலே அது துளசியையும் செல்லம்மா பத்தியுமா தான் இருக்கு! இத்தனைக்கும் ஏன்??  ஹாஸ்பிட்டல்ல மூச்சி தெணறிட்டிருக்குற நெலமையிலையும் ரிசப்ஷன்ல சன்டீவிய போட சொல்லும் அளவுக்கு அதிமுக்கிய நடைமுறை பழக்கமாக மாறிடுச்சு!  இலங்கைக்கு எதிரா ஓட்டு போட்ட நாடு எதுன்னு கேட்டா பதில் வருமா??? ஆனா சீரியல்களின் எபிசோட் முதல் அதில் உள்ளவர்களின் பெயர் வரைக்கும் செம அத்துபடி நமக்கு! இந்த பதிவினூடாக காலைல பத்துமணில இருந்து ஆரம்பிச்சு நைட் 11 மணி வரைக்கும் கொலையா கொல்லும் மெகா சீரியல்ஸின் மொக்க விஷயங்களை நாமும் கொஞ்சம் கொலையா கொல்லபோறோம்!

நன்றி
அடுத்தபதிவில் சந்திக்கலாம்..
தொடரும்.. மலரும்... முற்றும்... பூக்கும்...  சாகும்...

ஹி..ஹி..ஹி.. இப்ப என்ன சொல்லிட்டேன்னு முட்டைல ஆசிட்ட மிக்ஸ்
பண்றீங்கோ?!! பின்ன என்ன? மிஞ்சி போனா ஒரு கல்யாணம் 8 மணி நேரத்துல நடந்துடும்! ஆனா இவனுங்க காட்டுற கல்யாண வீடாகட்டும் எழவு வீடாகட்டும் எல்லாமே மாசக்கணக்குல  நடக்குது! அபின்னு ஒரு அக்கா 2 கொழந்தையையும் பாட்டி ஆகுற வரைக்கும் கோலம் போடுறத விடாது போலனு செமையா பயந்தே போயிட்டேன்! ஒருவழியா போயிட்டாக! இப்ப கஸ்தூரி அக்கா தான் விடாது தொறத்துது!

சரி சீரியல்ல இருக்குற மொக்க விஷயத்த பாக்கலாம்! :

  •  ங்க பக்கத்துவீட்டு  பேச்சியம்மா, கண்ணாத்தா கூட கல்யாணத்துக்கு பொறவு சுடிதார்ல கலக்குதுங்க! ஆனா சீரியல்ல வர பக்கிங்க மட்டும் மொதல்ல மாடர்ன்னா இருக்குங்களாம்... கல்யாணம் ஆய்ட்டா சேல மட்டும் தான் போடுவாங்களாம்! எப்ப பா திருந்த போறீங்க??? அய்ய்யோ அய்யோ....
  • ருப்பு, வெள்ள தான் இப்ப இருக்குற ட்ரென்ட்!   ஆனா பாருங்க! கருப்பா இருக்குற ஆளையெல்லாம் போட மாட்டானுவ! வெயிலுக்கு காட்டாம வளத்த வெள்ளச்சிக்கு கருப்பு பெயின்ட் அடிச்சி விடுவானுவ! எதுக்குன்னு கேக்குறீங்களா???? 1000வது எபிசோட்க்கு பொறவு   ஒரு ட்விஸ்ட் வைக்கதேன்! பெயின்ட் முகக்ரீம் கம்பெனிக்கு செம வெளம்பரம்! வாழ்க வளமுடன்
     
  • தென்ன மாயமோ தெரியல! மந்திரமோ புரியல! ஒட்டுமொத்தமா எல்லா அம்மணிகளும்  மாமியார்கிட்ட ரொம்பதேன் பம்முதுங்க! அதே மாதிரி ஒன்னு விடாம எல்லா சீரியல்ஸ் அத்தைகளும்  வில்லியாவே இருக்காங்க! கொட்டோ கொட்டுன்னு மழ பெய்யும் போது மாமியார் வீட்ட விட்டு அனுப்புறதும்! இவுக எதையும் தட்டி கேட்காம இருக்குறதும், மாமியாரின் திட்டுக்களை "தேன் வந்து பாயுது காதினிலே"ங்குற கணக்கா கண்டுக்காம இருக்குறதும்............. சரி சரி இதெல்லாம் சீரியல்ல பாத்தாதான் உண்டு ;-)
     
  • துல பெரிய கொடுமை என்னான்னா  ரோட்ல மயக்கம் போட்டு ஒருத்தன் விழுந்தா கூட "எனக்கென்ன போச்சுன்னு" சொல்லும் மனிதநேயம் நிறைந்த நம்மாளுங்க  சீரியல் ஆத்தாக்களின் பொய் அழுகையை "ஐய்யோ பாவமே, இப்படி ஆச்சே! ச்சே! இப்படியெல்லாமா கொடும நடக்கும்"னு லைவ் கமென்ட்ரி கொடுக்குறது பார்த்தா...... ஹன்ட்ரட் பெரியார்ஸ் வந்தாலும் உங்களையெல்லாம் திருத்தவேமுடியாது! (பலருக்கு இரக்க குணம் உண்டு என்பதை சீரியல் பாக்கும் போது தான் தெரியுது!)
  • விங்க அறுக்குறதே தாங்கமுடியலன்னு செவத்துல முட்டிட்டிருந்தா..... ஹிந்தி டப்பிங் சீரியல் மூலமா  அறுக்காம நேரடியாவே சாவடிக்கிறாய்ங்க! அடிக்கடி டூயட் சாங்க் வேற!  ஒரு ரியாக்‌ஷன்க்கே ஒரு எபிசோட் ஓட்டிடுறாய்ங்க! தெய்வமே என்னைய காப்பாத்து!
  • நீ உண்மையிலேயே ஒரு முஸ்லீம்மான்னு ஒரு பிரன்ட் கேட்டாங்க! இதென்ன எனக்கு வந்த சோதனைன்னு "ஏன்ப்பா இப்படியெல்லாம் சொல்ற?"ன்னு கேட்டா, " உனக்கு தான் 2 புருவம் ஒன்னா சேரலையே?!  உருது,அரபில பேசலையே?!"ன்னு சொன்னாங்க!  இதுக்கு எப்படி பதில் சொல்றதுன்னு மூளைய தட்டி எழுப்பிட்டிருக்கும் போதே "ஆமா..... உங்க(?????????!!!) தர்கால பேய்,பைத்தியம்லாம் தெளிய வைக்கிற சக்தி இருக்காம்ல?!  உண்மையா?ன்னு ஒரு அடுத்தடுத்த கேள்வி  கேட்டா!  
    உனக்கு எப்படி இந்த அளவுக்கு அறிவு வந்துச்சுன்னு கேக்கும் போது தான் பயபுள்ள சொல்லுது... டெய்லி நாதஸ்வரம்,தபேலா,கித்தார்  போன்ற ஒலக பிரசிதிப்பெற்ற காவியங்களை பாத்திட்டிருக்கான்னு! 

நம்ம கலைஞர் சரியாதான் யோசிச்சு  எலவசமா  கலர்  டீவி கொடுத்திருக்காரு! அதனாலேயே குட்டீஸ்க்கும் பெரிசுகளுக்கும் நடக்கும் ரிமோட் சண்டை இப்பலாம் இல்ல,நெஹி,லேது!  முன்னலாம் சொந்தக்காரங்க  வீட்டுக்கு சாயங்காலமா போகும் வழக்கம் இருந்துச்சு! அம்ம்ம்ம்ம்ம்ம்மாடி இப்பலாம் சாயங்காலம் 6 டூ பத்து திருடன் வீட்டுக்குள்ள வந்தாலும் கண்டுக்க மாட்டாய்ங்க! நாம போனாவா வாங்கன்னு சொல்லி உபசரிச்சுட போறாங்க?!!

பொழுது போக்குக்காக ஏற்படுத்திக்கொண்ட விஷயங்கள் பலவற்றிற்கும் நாம் அடிமையாகிவிட்டது போல்  தான் இந்த சீரியல்களும்!  சரியான மனக்கட்டுப்பாடு இல்லை என்றால் கூடியவிரைவில்  சைக்கோக்கள் வீட்டில் உருவாவது கேரண்டி!

சீரியல்ஸின் உன்னத உயர்நோக்கு கொள்கைகள் ஏதேனும் விடுபட்டிருப்பின்  மன்னிச்சூ மன்னிச்சூ மன்னிச்சூ!!!! மொக்கை  விமர்சனங்களை வரவேற்கப்படுகின்றன! குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பத்து துரதிஷ்ட்டசாலிகளுக்கு பவர்ஸ்டாரின் ஆனந்த தொல்லை  டீவிடியும், முகவையின் விடிவெள்ளி ரித்திஷ் குமாரை சந்திக்கும் வாய்ப்பும் கொடுக்கப்படும்! ஹி..ஹி..ஹி..

டிஸ்கி: குட்டிசுவர்க்கத்தில் இருந்த ப்ளாக்ஸ்பாட்டை தூக்கியாச்சு! அந்த இடத்தில் .com மாத்தியாச்சு!

 

,

53 comments:

  1. Avvvvv athileyum azhaki enru oru naadakam poduranunga parunga starting'il erunthu eppo varaikum orey azhuvachi'than!
    Nammaku tenson aayidum :) :) :)

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..

    //நீ உண்மையிலேயே ஒரு முஸ்லீம்மான்னு ஒரு பிரன்ட் கேட்டாங்க! இதென்ன எனக்கு வந்த சோதனைன்னு "ஏன்ப்பா இப்படியெல்லாம் சொல்ற?"ன்னு கேட்டா, " உனக்கு தான் 2 புருவம் ஒன்னா சேரலையே?! உருது,அரபில பேசலையே?!"ன்னு சொன்னாங்க! இதுக்கு எப்படி பதில் சொல்றதுன்னு மூளைய தட்டி எழுப்பிட்டிருக்கும் போதே "ஆமா..... உங்க(?????????!!!) தர்கால பேய்,பைத்தியம்லாம் தெளிய வைக்கிற சக்தி இருக்காம்ல?! உண்மையா?ன்னு ஒரு அடுத்தடுத்த கேள்வி கேட்டா!//

    :) :) சுத்தம். என்னத்த சொல்ல. தமிழ்நாட்டுல பெரும்பான்மை முஸ்லிம்கள் வீட்டில் தமிழில் தான் பேசுகின்றார்கள் என்று எண்ணுகின்றேன். இன்னும் சொல்லப்போனால் இந்த பெரும்பான்மையினருக்கு உருது தெரியாது. (முன்பு வேலை செய்த) என் பெங்களுரு அலுவலத்தில் என் மேலாளர் "உங்களுக்கு உருது தெரியாதா?" என்று ஆச்சர்த்துடன் கேட்க "நான் தமிழ் முஸ்லிம் சார். எங்களுக்கு உருது தெரியாது" என்று சொன்னது தான் நினைவுக்கு வருகின்றது. ஒரு பக்கம் இஸ்லாம் இப்படி பல்வேறு கலாச்சாரங்களையும் தன் வசப்படுத்திக்கொண்டது வியப்பை தந்தாலும், மறுபக்கம் முஸ்லிமல்லாதவர்களை குழப்ப ஊடகங்கள் மூலம் இம்மாதிரியான செயல்கள் வருத்தத்தை தருகின்றது. தர்கா போன்ற மூட பழக்கங்களுக்கு முஸ்லிம்களே முழு முதற் காரணம்.

    அப்புறம், நல்லா எல்லா சீரியல்களையும் பார்த்து விமர்சனம் செய்ததற்கு நன்றி :) :)

    உங்கள் தளம் .com-மாக மாறி இருப்பதால், உங்கள் followers-க்கு இந்த பதிவு அவர்கள் உடனடியாக டேஷ்போர்ட்டில் வந்திருக்காது. போக போக இது சரியாகி விடும். அல்லது followers ஒருமுறை unfollow செய்து மறுபடியும் follow செய்தால் அவர்களுக்கு இந்த பிரச்சனை சரியாகிவிடும்.

    வஸ்ஸலாம்,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  3. இத்தனை சீரியல் பார்த்து தானே இத பதிவு எழுதினீங்க...இவ்ளோ விவரமா சொல்றவங்க சீரியல் பார்க்காமலா இருப்பாங்க...அப்பாடா..நாங்களும் கோர்த்து விடுவோம்ல...

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!

    டாட் காமிற்கு மாறியதற்கு வாழ்த்துக்கள்.

    சீரியல் பார்க்காமலேயே இவ்வளவு டீடைலா சொல்றீங்க?

    ஒரு வருஷம் முன்னாடி ஒரு சீரியல்ல அண்ணன்-தங்கச்சிக்குள்ள சண்டை வந்து பிரிஞ்சிட்டாங்க.இப்ப யதேச்சையா அந்த சீரியலை பார்த்தா மறுபடியும் பிரிய போறாங்களாம்... என்ன கொடுமை சகோ இது?

    ReplyDelete
  5. ஸலாம்,

    இன்னொரு முக்கிய விசயத்தை சொல்ல மறந்துட்டேன்..

    //நீ உண்மையிலேயே ஒரு முஸ்லீம்மான்னு ஒரு பிரன்ட் கேட்டாங்க! இதென்ன எனக்கு வந்த சோதனைன்னு "ஏன்ப்பா இப்படியெல்லாம் சொல்ற?"ன்னு கேட்டா, " உனக்கு தான் 2 புருவம் ஒன்னா சேரலையே?!//

    ஆஹா...இஸ்லாம் குறித்த சரியான புரிதல்கள் மனதோடு சேராவிட்டால் தான் முஸ்லிமா என்று கேட்பார்கள் என்று நினைத்திருந்தேன், இப்ப புருவம் சேரலனா கூட முஸ்லிமா என்று கேட்கின்றார்களா? something fundamentally wrong :) :)

    வஸ்ஸலாம்...

    ReplyDelete
  6. /* அதென்ன மாயமோ தெரியல! மந்திரமோ புரியல! ஒட்டுமொத்தமா எல்லா அம்மணிகளும் மாமியார்கிட்ட ரொம்பதேன் பம்முதுங்க! அதே மாதிரி ஒன்னு விடாம எல்லா சீரியல்ஸ் அத்தைகளும் வில்லியாவே இருக்காங்க! */

    சினிமா, சீரியல் லாம் எப்போதும் நடக்காதத நடக்கிற மாதிரி காட்டுவது தானே?? அதனால தான் சீரியல்களில் மருமகள்கள் நல்லவர்களாகவும் மாமியார்கள் கெட்டவர்களாகவும் காமிக்கப் படுகிறார்கள். நிஜ வாழ்க்கையில் அதற்க்கு எதிராக மருமகள்கள் அதிகம் கொடுமை செய்பவர்களாகவும் மாமியார்கள் நல்லவர்களாகவும் இருப்பார்கள் என்று உளவியல் சொல்கிறது.

    நீங்க தான் உளவியல் specialist ஆச்சே, நான் சொன்னது சரி தானே???

    ReplyDelete
  7. /* இவிங்க அறுக்குறதே தாங்கமுடியலன்னு செவத்துல முட்டிட்டிருந்தா..... */

    நீங்க வேற வந்து எக்ஸ்ட்ரா அறுக்குறீங்க....

    ReplyDelete
  8. சீரியல பத்தி கொஞ்சம் சீரியஸா திங் பண்ண வேண்டிய தருணம்

    பார்க்க நான் எழுதிய படிவு

    http://www.hajaashraf.blogspot.com/2012/02/blog-post_07.html

    ReplyDelete
  9. @yathan Raj

    Sariya sonninka//

    ஹி..ஹி..ஹி..

    ரொம்ப நன்றிங்க

    ReplyDelete
  10. @அப்சல் கான்
    //Avvvvv athileyum azhaki enru oru naadakam poduranunga parunga starting'il erunthu eppo varaikum orey azhuvachi'than!
    Nammaku tenson aayidum :) :) :)//

    ஹி..ஹி..ஹி..

    நானும் பார்த்தேன்! தலையும் புரியல வாலும் புரியல... அதான் கண்டுக்கல! ;-)

    ReplyDelete
  11. @சகோ ஆஷிக் அஹ்மத்
    வ அலைக்கும் சலாம் வரஹ்...

    ஏன் சகோ கேக்குறீங்க? யார பார்த்தாலும் மொத கேள்வியே "உருது பேசுவீயா???"

    இவங்களுக்காகவே கத்துக்குலாமான்னு கூட தோணும்!

    //"உங்களுக்கு உருது தெரியாதா?" என்று ஆச்சர்த்துடன் கேட்க "நான் தமிழ் முஸ்லிம் சார். எங்களுக்கு உருது தெரியாது" என்று சொன்னது தான் நினைவுக்கு வருகின்றது//

    ஹி..ஹி..ஹி.. இப்படி சொன்ன பிறகு பலரின் அடுத்த வாசகம் "ஓஹ்.... எங்களுக்குள்ள(மதத்திற்குள்) சாதி இருக்குற மாதிரி உங்களுக்குள்ளையும் நிறையா ஜாதி இருக்கும் போல!"
    அவ்வ்வ்வ்வ்வ்வ்... என்னத்த சொல்ல??!!

    ReplyDelete
  12. @சகோ ஆஷிக்

    //தர்கா போன்ற மூட பழக்கங்களுக்கு முஸ்லிம்களே முழு முதற் காரணம். //
    ம்ம் :'(

    ஆனாலும் அதற்கு இப்போது முஸ்லீம்களிடையே எதிர்ப்பு இருப்பது தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை தானே?அந்த கருத்தின் அடிப்படையிலாவது இது போன்ற விஷயங்களை தவிர்க்கலாம்!

    முன்பு அருந்ததி என்ற படத்தில் தர்கா தாயத்து பற்றிய சீன் வரும்! அதற்காக சில தினசெய்தி பத்திரிக்கைகளில் "இஸ்லாமியருக்கு முக்கியத்துவம் கொடுத்ததற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்" என்ற வாசகம்! எதுவும் சொல்வதற்கு இல்ல!

    ReplyDelete
  13. @சகோ ஆஷிக்

    //அப்புறம், நல்லா எல்லா சீரியல்களையும் பார்த்து விமர்சனம் செய்ததற்கு நன்றி :) :)//

    ஹி....ஹி..ஹி...
    ஒரு பொருளை பத்தி கொற சொல்லணூம்னா யூஸ் பண்ணி தானே ஆகணும்! அவ்வ்வ்வ்


    //உங்கள் தளம் .com-மாக மாறி இருப்பதால், உங்கள் followers-க்கு இந்த பதிவு அவர்கள் உடனடியாக டேஷ்போர்ட்டில் வந்திருக்காது. போக போக இது சரியாகி விடும். அல்லது followers ஒருமுறை unfollow செய்து மறுபடியும் follow செய்தால் அவர்களுக்கு இந்த பிரச்சனை சரியாகிவிடும். //

    அடக்கடவுளே... இதெல்லாம் ஏன் நீங்க முன்னவே சொல்லல???!!! இப்ப நா என்ன செய்வேன்???? அவ்வ்வ்
    போகப்போக சரியானா சரி தான் :-)

    ReplyDelete
  14. @கோவை நேரம்
    //இத்தனை சீரியல் பார்த்து தானே இத பதிவு எழுதினீங்க...இவ்ளோ விவரமா சொல்றவங்க சீரியல் பார்க்காமலா இருப்பாங்க...அப்பாடா..நாங்களும் கோர்த்து விடுவோம்ல...//

    அடடா... இதுல இப்படி ஒரு வெவகாரம் இருக்கா???? நல்லவேள நா சீரியல்களின் விரோதின்னு எங்கேயும் சொல்லிக்கல! ஹி..ஹி..ஹி..

    ReplyDelete
  15. @சகோ பாசித்

    வ அலைக்கும் சலாம் வரஹ்..

    //டாட் காமிற்கு மாறியதற்கு வாழ்த்துக்கள்.
    //
    நன்றி சகோ

    //சீரியல் பார்க்காமலேயே இவ்வளவு டீடைலா சொல்றீங்க?
    //
    பாக்காததுனால ஒரு பதிவோட முடிஞ்சுடுச்சு! பாத்திருந்தா பாகம்-50 வரைக்கும் போகும் ஹி..ஹி..ஹி..


    //ஒரு வருஷம் முன்னாடி ஒரு சீரியல்ல அண்ணன்-தங்கச்சிக்குள்ள சண்டை வந்து பிரிஞ்சிட்டாங்க.இப்ப யதேச்சையா அந்த சீரியலை பார்த்தா மறுபடியும் பிரிய போறாங்களாம்... என்ன கொடுமை சகோ இது?//

    ஹா..ஹா..ஹா... அந்த சீன்னை நானும் பார்த்தேன்! கடைசி வரைக்கும் இதுக இப்படிதான் அடிச்சுட்டு நாறுங்க! அப்பறம் சேர்ந்துக்குங்கன்னு தலைல அடிச்சுக்கிட்டேன் சகோ ! (அதையும் நீங்க விட்டுவைக்கலையான்னு கேட்கப்படாது! நானும் எதார்த்தமா பார்த்தது தான்னு சொன்னா நம்பவா போறீங்க! ஆனா நம்பிடுங்க!)

    ReplyDelete
  16. @சகோ ஆஷிக்
    //இன்னொரு முக்கிய விசயத்தை சொல்ல மறந்துட்டேன்..

    //நீ உண்மையிலேயே ஒரு முஸ்லீம்மான்னு ஒரு பிரன்ட் கேட்டாங்க! இதென்ன எனக்கு வந்த சோதனைன்னு "ஏன்ப்பா இப்படியெல்லாம் சொல்ற?"ன்னு கேட்டா, " உனக்கு தான் 2 புருவம் ஒன்னா சேரலையே?!//

    ஆஹா...இஸ்லாம் குறித்த சரியான புரிதல்கள் மனதோடு சேராவிட்டால் தான் முஸ்லிமா என்று கேட்பார்கள் என்று நினைத்திருந்தேன், இப்ப புருவம் சேரலனா கூட முஸ்லிமா என்று கேட்கின்றார்களா? something fundamentally wrong :) :)//

    அட நீங்க வேற! மெல்ல தொறந்த டோரு படம் பார்த்த பொறவு எல்லாரும் அப்படிதான் நெனைச்சுட்டு திரியுதுங்க! பெரும்பாலான படங்களில் அப்படியாகதானே காட்டுறாங்க...

    அப்பறம் இதுக்கே ஆச்சர்யப்பட்டா எப்படி?

    *முஸ்லீம்லாம் வெள்ளையால இருப்பாங்க? நீ ஏன் கருப்பா இருக்க!

    *முஸ்லீம்னா வெள்ளிகிழமை கண்டிப்பா ப்ரியாணி செய்வாங்களே...???

    *நா நெறையா முஸ்லீம் ஆளுங்கள கவனிச்சுருக்கேன்... இமை முடி வளைஞ்சு இருக்கும்!

    * முஸ்லீம்னாலே எடுவானுக்கும் படுவானுக்கும் (பேச்சு வழக்கு- நெடுந்தூரம் அளவு) நக போட்டிருப்பாங்க!

    இதுபோன்றவைகளும் அடிக்கடி கேட்ட அனுபவம் உண்டு! :-)

    ReplyDelete
  17. @சிராஜ்

    //சினிமா, சீரியல் லாம் எப்போதும் நடக்காதத நடக்கிற மாதிரி காட்டுவது தானே?? அதனால தான் சீரியல்களில் மருமகள்கள் நல்லவர்களாகவும் மாமியார்கள் கெட்டவர்களாகவும் காமிக்கப் படுகிறார்கள். நிஜ வாழ்க்கையில் அதற்க்கு எதிராக மருமகள்கள் அதிகம் கொடுமை செய்பவர்களாகவும் மாமியார்கள் நல்லவர்களாகவும் இருப்பார்கள் என்று உளவியல் சொல்கிறது.//

    ஙே...??!!

    //நீங்க தான் உளவியல் specialist ஆச்சே, நான் சொன்னது சரி தானே???//

    ஆஹா... இருங்க இருங்க... 2 நாள் டைம் கொடுங்க!

    இந்த வரில என்ன வகையான உள்குத்து இருக்குன்னு யோசிக்கவே டைம் ஆகும் போலையே....

    ReplyDelete
  18. @சிராஜ்

    ///* இவிங்க அறுக்குறதே தாங்கமுடியலன்னு செவத்துல முட்டிட்டிருந்தா..... */

    நீங்க வேற வந்து எக்ஸ்ட்ரா அறுக்குறீங்க....//

    ஹி..ஹி..ஹி..

    என் கட பக்கம் வந்தா இப்படிதான் ஆகும்! டீக்கடை பக்கம் போனா நேரா ஸ்டான்லி ல அட்மிட் ஆக வேண்டியது தான்!

    (யாரு... எங்க கிட்டேயேவா?? வம்பிழுக்குறதெல்லாம் எங்களுக்கு அல்வா சாப்பிடுற மாதிரி!! ஹி..ஹி..ஹி..)

    ReplyDelete
  19. @சகோ ராஜகிரி

    //சீரியல பத்தி கொஞ்சம் சீரியஸா திங் பண்ண வேண்டிய தருணம்

    பார்க்க நான் எழுதிய படிவு

    http://www.hajaashraf.blogspot.com/2012/02/blog-post_07.html//


    அருமையான கட்டுரை பகிர்வுக்கு நன்றி சகோ

    உண்மையிலேயே சீரியஸ்ஸான விஷயாமாகத்தான் இன்றைய சீரியல் உலகம் பலரின் உலகத்தை மாற்றி வருகிறது :'(

    நன்றி சகோ

    ReplyDelete
  20. @s.jaffer.khan
    'அழகி' எனும் தலைப்பை 'அழுவாய்ச்...ச்சீ'ன்னு மாத்திரலாமா?

    ReplyDelete
  21. சீரியல் பத்திய கொடுமைகளைக்கூட இத்தனை காமெடியாக பதிவிட்டுள்ளீர்களே?

    ReplyDelete
  22. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.

    உண்மை தான் ஆமினா எங்க பார்த்தாலும் ஒரே சீரியல் மோகம் பிடிச்சு ஆட்டுது.யார் வீட்டுக்கு போனாலும் யாராவது சபதம் போட்டுட்டும் அழுதுட்டும் இருக்கிற சீரியல் தான் ஓடிட்டு இருக்கு.. எப்பவும் போல இந்த பதிவையும் உங்க நடையில் அழகா சொல்லிருகீங்க ..:)

    ReplyDelete
  23. ஸலாம்

    சீரியல் விமர்சனம் அருமை
    ரொம்ப பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என அறிந்து கொண்டேன்.
    நான் சமயம் கிடைக்கும் போது Arab sat இல் வரும் சீரியல்களை காணுவதுண்டு சிரியா , ஈரான் , துர்கி நாட்டு சீரியல்கள் மிகவும் தரமானதாக இருக்கும் அந்நாட்டு மக்களின் கலாசாரத்தின் பின்புலத்தில் பலதரப்பட்ட மனிதர்களின் உணர்வுகளை அருமையாக காட்டி இருப்பார்கள் மேலும் creative ஆக இருக்கும் அதுபோல் சில அரேபிய கோத்திரத்தின் பழக்கவழக்கங்களை பிரதிபலிக்கும் பெதுக்களைப் பற்றிய சீரியலும் அருமையாக இருக்கும் இதை பார்த்துவிட்டு தமிழ் சீரியல் பார்த்தால் முற்றிலும் வேறு பரிமாணத்தில் இருப்பதை உணரலாம்.

    ReplyDelete
  24. டாட் காம் மாறியதுக்கு வாழ்த்துக்கள்,

    சீரியல் பற்றிய பதிவு 'சிரி'யல் போல பதிவிட்டிருகிங்க.

    ReplyDelete
  25. என்னவோ ஏதோ தெரியவில்லை !!!!

    சீரியலை சீரிய-ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்-சாக விமர்சித்ததற்கு ..........

    பதிவு பயங்கரவாதியா நீங்க ????.....

    நான் அப்பவே நினச்சேன்... நீங்க profile ல சன் டிவி இருக்க பயம் ஏன் ..

    .com லாம் மாறி இருக்கீங்க போல... ரெம்ம்ம்ம்ம்ப
    தைரியசாலிங்க நீங்க... ப்ளாக் ரொம்ப பேமஸ் போல ...

    நாடகம் தொடரும் ....

    ReplyDelete
  26. வேற என்னத்த சொல்றதுன்னு தெரியல ....

    ReplyDelete
  27. @NIZAMUDEEN
    neengalum pathikapatu erukinga pola theriyuthu! :) :)
    appadi thunbatilum oru enbam :) :)

    ReplyDelete
  28. @NIZAMUDEEN

    @s.jaffer.khan
    'அழகி' எனும் தலைப்பை 'அழுவாய்ச்...ச்சீ'ன்னு மாத்திரலாமா?

    //

    ஓஹ்ஹ்ஹ்ஹ்

    நீங்க தான் அந்த நாடகத்தின் டைரக்டர்ரா ஹி..ஹி..ஹி..

    ReplyDelete
  29. @NIZAMUDEEN

    சீரியல் பத்திய கொடுமைகளைக்கூட இத்தனை காமெடியாக பதிவிட்டுள்ளீர்களே?//

    அச்சச்சோ... நா சீரியஸ்ஸா இருந்தாலே காமெடியா தெரியுதா????? அவ்வ்வ்வ்

    ReplyDelete
  30. @ஆயிஷா

    வ அலைக்கும் சலாம் வரஹ்...

    //அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.

    உண்மை தான் ஆமினா எங்க பார்த்தாலும் ஒரே சீரியல் மோகம் பிடிச்சு ஆட்டுது.யார் வீட்டுக்கு போனாலும் யாராவது சபதம் போட்டுட்டும் அழுதுட்டும் இருக்கிற சீரியல் தான் ஓடிட்டு இருக்கு.. எப்பவும் போல இந்த பதிவையும் உங்க நடையில் அழகா சொல்லிருகீங்க ..:)//

    நானும் பல தடவ நொந்திருக்கேன் ஆயிஷா :'( சிலர் வாங்கன்னு சொன்னதோட சரி... வெளம்பரம் வந்தா தான் பேச்சு கொடுப்பாங்க! விருந்தாளி வந்தா கொஞ்ச நேரம் ஆப் பண்ணிடணும்னு தோணாதத வச்சே சீரியல் எப்படி நம் மக்களை அடிமைபடுத்தியிருக்குன்னு தெரிஞ்சுக்கலாம்


    ரொம்ப நன்றி ஆயிஷா

    ReplyDelete
  31. @சகோ ரப்பானி
    வ அலைக்கும் சலாம் வரஹ்

    ரொம்ப நாளைக்கு அப்பறம் சந்திச்சதில் ரொம்பவே மகிழ்ச்சி சகோ

    //ரொம்ப பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என அறிந்து கொண்டேன்.//

    அவ்வ்வ்வ்
    அப்படியா தெரியுது??? போட்ட ப்ளான்லாம் வேஸ்ட்டா போச்சே சகோ ஹி..ஹி..ஹி..
    நீங்கள் சொன்னது போன்ற நாடகம் என்றால் யாருக்கும் எந்த பிரச்சனையும் வந்துவிட போவதில்லை!

    சில ஹிந்தி சீரியல்களில் கூட இது போன்ற கலாச்சாரங்களை பிரதிபலிப்பதாக இருக்கும்! உத்திரபிரதேஷ்,பிகார் மற்றும் ராஜஸ்தான் மக்களின் அறியாமை, படிப்பறிவு குறைவு, அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள், பால்ய விவாகம், பெண்சிசு கொலை, ஜாதி பிரச்சனை... என ஒவ்வொரு விஷயங்களையும் நுணுக்கமா சொல்லும்படியா இருக்கும்! பார்க்கவே ஆசையா இருக்கும்! ஆனா நம்மூர்ல மட்டும் தான் இன்னும் சென்னைய தாண்டாமலேயே சுத்திட்டிருக்கிறாய்ங்க :-)

    வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  32. @ தமிழ்வாசி பிரகாஷ்
    //டாட் காம் மாறியதுக்கு வாழ்த்துக்கள்,//

    வாங்க ப்ரகாஷ்
    மிக்க நன்றி

    .//சீரியல் பற்றிய பதிவு 'சிரி'யல் போல பதிவிட்டிருகிங்க.//

    ஹி..ஹி..ஹி... அட சத்தியமா நா சீரியஸ்ஸாதாங்க இருக்கேன் அவ்வ்வ்வ்வ்

    ஏன் இந்த ஒலகம் நம்மல மட்டும் நம்பமாட்டேங்குது :-)

    ReplyDelete
  33. This comment has been removed by the author.

    ReplyDelete
  34. @அனானி
    //வேற என்னத்த சொல்றதுன்னு தெரியல ....//

    வாய்ல சுளுக்கா?? சரி அதவிடுங்க!

    உங்கள வச்சு தான் பயங்கர ப்ளான்லாம் போட்டு வச்சுருக்கேன்! இனி நா போஸ்ட் போட்டா இதே மாதிரியே சீக்கிரமா கமென்ட் போட்டுடுங்க! நீங்க லாஸ்ட்ல வர்ரதுனால யாருக்கும் தெரிய மாட்டேங்குது! கூட்டம் சேரணும்னா பத்து கமென்ட்க்குள்ள வந்து கமென்ட் போட்டுடுங்க! அப்ப தான் அதுக்கு நா என்ன பதில் சொல்லுவேன்னு பாக்க ஆள் வருவாங்க! புரியுதோ??


    அரைகுறைக்கெல்லாம் எங்கே புரிய போவுது!

    சரி சரி
    ஓரம்மா நின்னு வேடிக்கை பாருங்க!

    ReplyDelete
  35. @அப்சல்
    //@NIZAMUDEEN
    neengalum pathikapatu erukinga pola theriyuthu! :) :)
    appadi thunbatilum oru enbam :) :)//

    அவர் தான் டைரக்டராம்ல!! ஹி..ஹி..ஹி.. கோர்த்துவிட்டாச்சு! இனி நீங்களா அடிச்சு சேந்துக்கோங்க :-)

    ReplyDelete
  36. சரியான மனக்கட்டுப்பாடு இல்லை என்றால் கூடியவிரைவில் சைக்கோக்கள் வீட்டில் உருவாவது கேரண்டி!

    ReplyDelete
  37. @ராஜேஷ்வரி

    //சரியான மனக்கட்டுப்பாடு இல்லை என்றால் கூடியவிரைவில் சைக்கோக்கள் வீட்டில் உருவாவது கேரண்டி!//

    ஹி..ஹி..ஹி..

    ஆமாங்க

    ReplyDelete
  38. ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாஆஆஆஆஆஅ.....செம செம..
    வாழ்த்துக்கள்.கொம்.:)

    ReplyDelete
  39. assalamu alaikum

    ReplyDelete
  40. கரக்டா சொன்னீங்க ஆமினா... இப்படி சீரியல்களுக்கு அடிமையாகிட்டோமேன்னு புரிஞ்சாலே அதிலிருந்து விடுபடலாம். எங்க எதிர்த்த வீட்டம்மா 2,3 நாளா உடம்பு முடியாம பெட் ரெஸ்ட் எடுத்து கடையில் சாப்பாடு வாங்கிட்டு இருக்காங்களேன்னு போய் பார்க்க போனேன். (நான் சாப்பாடு செய்து தரேன்னு சொல்லியும் மறுத்துட்டாங்க)... '3 நாள் செல்லமே, நாதஸ்வரம் பார்க்கல..அதான் நெட்ல டவுன்லோடு பண்ணிக்கிட்டு இருக்கேன்னு' சொன்னாங்க பார்க்கணும்... (அது 1 மாசம் கழிச்சு பார்த்தாலும் கதையில் எந்த முன்னேற்றமும் இருக்காது)... எனக்கு வந்த கோபத்தை அப்படியே மென்னு முழுங்கிட்டு வீட்டுக்கு வந்திட்டேன். ஒரு உருப்படியான நிகழ்ச்சியும் இல்லாம சன்டீவி பொழக்கிறதே அடுத்தவங்கள அழவச்சுத்தான்.

    அதுக்காக...நான் சீரியலே பார்க்கலன்னு சொல்லமாட்டேன்.... விஜய் டிவியில் வரும் சரவணன் மீனாட்சி நல்லாருக்கு.... எப்பவாவது டைம் கிடச்சா பார்க்கலாம்... நல்லா சிரிக்கலாம்.

    ReplyDelete
  41. @சிட்டுக்குருவி

    ஹி..ஹி..ஹி..

    நன்றி இம்ரான்

    ReplyDelete
  42. @என்றென்றும் பதினாறு

    வாங்க பானு! நலமா??

    ஹா..ஹா..ஹா..நீங்க சொன்னபடி தான் நிலைமை மாறிட்டே வருது! வெளியூர்க்கு போவதென்றால் முதல் கவலையாக கண்ணீல் தெரிவது "சீரியல் மிஸ் ஆய்டுமே!"


    சொன்னா நம்புவீங்களா? என் உறவினர் புலம்பிட்டிருந்தாங்க! அவர் வசிக்கும் ஊரில் சொந்தம் என சொல்லிக்கொள்ள அவர் நாத்தனார் மட்டும் தானாம். அதனால் தினமும் சாயங்கால நேரம் குழந்தைகளை கூடிட்டு போயிருக்காங்க. 4 நாட்களில் அந்த நாத்தனார் "இனி என் வீட்டுக்கு வராதே... வந்தா ஜான்சி ராணி முடிஞ்சதும் வா என்றாராம்!"

    ஹா..ஹா..ஹா..

    சிரிப்பதா அவளுக்கு ஆறுதல் சொல்வதான்னு புரியாம அன்னைக்கு உதட்டை கடித்துக்கொண்டிருந்தேன் :-)))

    ReplyDelete
  43. இனிய மதிய வணக்கம் அக்கா, புதிய தளத்திற்குள் நுழைந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  44. சீரியல் ஏன் பார்ப்பதில்லை என்பதை சீரியஸ்ஸாக சொல்லியிருக்கிறீங்க. புரட்சிப் பெண் ஆமினா அக்கா வாழ்க! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  45. நானும் உங்க கட்சி தான். அவனுங்க போடுற மொக்கை பிடிக்கலை. சீரியல் பார்க்க மாட்டேன். அடடா மணி ஆறடிச்சுட்டுதா? உதிரி ஊக்கள் போடுவாங்களே?! ஹி ஹி

    ReplyDelete
  46. டாட். காம் மாறியதுக்கு வாழ்த்துக்கள்...காம்(Calm)மா மாறியதுக்கு பிறகு தாட் பூட்டுன்னு சவுண்டு விடாமல் Calm மா மாறிவிடுவிகளோ?

    ReplyDelete
  47. சீரியலுக்கும் நமக்கும் சம்மந்தமில்லை. அது நமக்கு நேரமுமில்லை.
    காசுவாங்கிகிட்டு அழுவதை காசுகொடுத்துபார்க்கும் கூட்டம் ஒன்று இருக்கு. அச்சோ அச்சோ அச்சச்சோன்னு இருக்கு அவாளை பார்க்கும்போது..

    டிஸ்கி// ஆமிக்கா நீங்க சீரியசா சீரியல் பார்க்கமாட்டேளா! பச்சி இல்லேன்னு சொல்லுதே ஹி ஹி..

    ReplyDelete
  48. அறுசுவையில் கலக்கும் ஆமினா தானே தாங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் அருமை வாழ்த்துகள் ஆமினா சீரியல் விமர்சனம் அருமை

    நிறைய சீரியல் பைத்தியங்க [பல பெண்களும்,சில ஆண்களும் ]திருந்துவதில்லை இந்திய மக்களை பாதி கெடுப்பது இந்த சீரியல்கள் தான்.
    தங்களுக்கு நேரம் கிடைத்தால் இதையும் பார்க்கலாமே .


    மக்கள் உரிமை மையம் என்ற நமது இயக்கம் மக்களுக்காக, மக்களின் அடிப்படை உரிமைகளைக் காப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட ஓர் இயக்கம். உணவு, உடை, உறைவிடம், கல்வி மற்றும் மருத்துவம் இவைகளே ஒரு மனிதனின் வாழ்வாதாரமாக, அடிப்படை உரிமைகளாக இன்று அனைத்து உலக நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

    மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இத்தகைய அடிப்படை உரிமைகள் இன்று அனைத்து தரப்பு மக்களுக்கும், அவர்கள் எந்த சாதி, மத, இன,மொழியினை சார்ந்தவர்களாயினும் மறுக்கப்படுகின்றது. மேலும் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் அனைத்தும் இன்று வர்த்தகமாக மாறி விட்ட சூழலில் அவை தரம் குன்றிய நிலையிலோ அல்லது பொருள் படைத்தவர்களுக்கு மட்டும் என்ற நிலையிலோ தான் அவர்களை சென்றடைகிறது.

    கலப்படம் மிகுந்த உணவுப்பொருட்கள், சுகாதரமற்ற சுற்றுப்புறம், எதிர்கால வாழ்விற்கு உதவாத கல்விமுறை, புதிய நோய்களை உருவாக்கும் மருத்துவமுறை இவைகளாலும், இது தொடர்பான துறைகளில் ஈடுபட்டுப் பொருளீட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட சுயநல கூட்டங்களாலும் மக்கள் இன்று பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

    பல்வேறு வழிகளிலும், தங்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இத்தகைய சுயநலவாதிகளை எதிர்த்துப் போராட இயலாத வாழ்க்கைச் சூழ்நிலைகளிலும், போராட வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாத நிலையிலும் தான் இன்று நம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

    மக்கள் தங்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளைப் பற்றியும், அவற்றை தரமான வகையிலே பெறுவதற்கு வழிவகை செய்யும் சட்டங்கள் பற்றியும், அவற்றில் குறைகள் இருப்பின் அக்குறைகளைக் களைவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் பற்றியும் அறியாமலிருப்பதே இந்நிலை தொடர்ந்து கொண்டிருப்பதற்கான காரணங்களாகும்.

    மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும், அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்து தர வேண்டிய கடமையை மேற்கொண்டிருக்கும் அரசு நிர்வாகமும், ஆட்சி நிர்வாகமும் இந்த அவல நிலையை மாற்றுவதற்குப் பதிலாக, தம்மை மக்களின் எசமானர்களாகக் கருதிக்கொண்டு, அவர்கள் மீது தம்முடைய அதிகார பலத்தைப் பிரயோகப்படுத்துவதும், எங்கும் விதிமீறல் எதிலும் லஞ்சம் என மக்களைப் பெரும் துன்பத்திற்கு ஆளாக்குகின்றனர்.

    இவ்வாறாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, தங்களின் நிலையினைப் பற்றியும், தம் நாட்டின் நிலையினைப் பற்றியும் விளக்க வேண்டிய, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய செய்தித்துறையும், ஊடகத்துறையும் செயலிழந்த நிலையில் உள்ளன.
    for readmore www.fcrights.in

    ReplyDelete
  49. டிவி தொடர்களைப் பத்தி அப்பட்டமா சொல்லிருக்கிங்க ஆமினா....அத்தனையும் ரொம்ப சரி..நானும் உங்க கட்சிதேன்...சீரியல் பக்கமே போறதில்லன்னு முடிவே கட்டிட்டேன் போங்க!
    ராதா

    ReplyDelete
  50. //ஹன்ட்ரட் பெரியார்ஸ் வந்தாலும் உங்களையெல்லாம் திருத்தவேமுடியாது!//

    இதென்னம்மோ உண்மை தான்...

    எனது "கடவுளே" கதை (நீங்கள் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியது) கூட இதைப் போன்ற ஒரு சம்பவத்தை மையமாக வைத்து தான் எழுதப்பட்டது..
    என்ன.. நேரா சொன்னா அடிக்க வருவாங்க என்று சக்திமான் ஆக்கிட்டேன்!

    ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)