சாம்பார் சாதத்தில் மட்டனை தேடாதீங்கோ:ஆளாளுக்கு ஒவ்வொரு பேருல  எழுதுறாங்க. ஒருத்தரு கொத்து பரோட்டாங்குறாரு, ஒருத்தர் ஸ்பெஷல் மீல்ஸ்ங்குறாரு.. இன்னொருத்தர் மசாலா மிக்ஸ்ங்குறாரு.. நானும் ரொம்ப நாளா யோசிச்சேன்.. ஒன்னும் சரிபட்டுவரல (ப்ளாஸ்க்ல இருந்தா தானே டம்ளர்க்கு காப்பி வரும் ஹி..ஹி..ஹி..)  அருசுவை பத்தி நல்லா தெரிஞ்சவங்களுக்கு சகலகலா வள்ளி வனிதா அக்காவை பத்தி தெரியாம இருக்காது. வனிதா அக்காவை தெரிஞ்ச யாருக்கும் 'சொல்ல விரும்பினேன்' பத்தி தெரியாம இருக்காது. அன்றன்றைய நாளில் நம் மனதில் உதித்த எண்ணங்கள், சந்தித்த மனிதர்கள், நடந்த காமெடிகள், ஊர்வம்பு, அரசியல் என சொல்ல விரும்பினேன் தலைப்பின் கீழ் சுவாரசியமான அரட்டை போகும்!  நானும் அதையே கப்புன்னு புடிச்சுக்கிட்டேன் :-) இனி இந்த தலைப்பின் கீழ் நானும் சொல்ல விரும்புவதை சொல்ல போறேன்! (ப்ளாக்ல சொந்த விஷயம்லாம் எழுதாதீங்கன்னு யாரும் போர்கொடி தூக்கிட்டு வந்துடாதீங்கப்பா... நமக்கு இந்தளவுக்குதேன் வரும்! என்னன்னா.... எப்படின்னா..... சுருக்கமா சொல்லணும்னா... சாம்பார் சாதத்தில் மட்டனை தேடாதீங்கோ.... அவ்வ்வ்வ்வ்)

புன்னகை சிந்தி அன்பை அள்ளுங்க! :
எங்க வீடு ஊருக்கு வெளியே இருப்பதால் எது வாங்க வேண்டும் என்றாலும் டவுன்க்குதான் வரணும். சேர் ஆட்டோ நெஹி... சோ மினிபஸ்தான். எப்பவும் செம நெரிசலா இருக்கும்! 15 நிமிஷம் பயணப்படும்  எனக்கே செம எரிச்சலா இருக்கும்! அப்ப ட்ரைவருக்கும் கண்டாக்கருக்கும் ஹி..ஹி..ஹி.. கன்டக்டருக்கும் சொல்லவா வேண்டும்?  மெயின் ஸ்டாப்க்கு முன்னாடியே நம்ம வீடு! (அப்ப எனக்கும் சொத்துல பாதிய தான்னு கேட்டுடுவாய்ங்களோ?? நமக்கென்ன கவல? ஹவுஸ் ஓனர்ல வருத்தப்படணும்)  எப்பவும் ஒரு ஆளுக்காக நிறுத்துவதில்லை. ஆனா நாமதான் செம சோம்பேறியாச்சே! சில முறை கெஞ்சிபார்த்து நொந்துட்டேன். ம்ஹூம்... கடமையில் கண்ணா இருந்தாரு!  3 முறை தொடர்ச்சியாக என் வீட்டருகில் ஒரு பெண்மணி கை அசைத்து பஸ்ஸில் ஏற அந்த கேப்பில் நானும் டக்குன்னு இறங்கிட்டேன். இறங்குவதற்கு முன் ட்ரைவரிடம் "ரொம்ப நன்றிங்கண்ணா" என மகிழ்ச்சியோட சொல்ல மறக்கவில்லை மூன்று முறையும்!  இப்பlல்லாம் எங்க ட்ரைவர் அண்ணா என் வீட்டு வாசலிலேயே இறக்கிவிட்டுடுவார். கன்டக்டர் தம்பிக்கும் கரேக்ட்டான சில்லரையை (புன்னகையோடு) கொடுத்து அவர் வேலையை சுலபமாக்குவதால் அவரும் நம்ம தோஸ்த் ஆய்ட்டார். ட்ரைவர் அண்ணாவே மறந்தாலும் கன்டக்டர் தம்பி வேகமா விசில் அடிச்சு வீட்டு வாசலில் பஸ் நிறுத்த வச்சுடுவார். நாம்(ன்) செய்யும் சின்ன சின்ன விஷயங்களில் கூட  எந்தஅளவுக்கு அன்பும் மரியாதையும் பெரிய அளவில் கிடைக்கும்னு உணர்த்திய விஷயம் அது!
 


மன்னிப்புகேட்டா மானம் போகுமா? லூஸ்ல விடுங்க பாஸு:
பத்து நாட்களுக்கு முன் அக்காவுக்கும் எனக்கும் செம சண்ட! எப்படியெல்லாம் வார்த்தை விட்டால் ஒருவர் மனதால் நோகுவார் என்பது அக்காவுக்கு கைதேர்ந்த விஷயம். என்ன தான் நம்ம பக்கம் நியாயம் இருந்தாலும் வாய் தொறக்கவே முடியாது!  சண்டையின் உச்சமாக "என் வீட்டு வாசப்படி மிதிச்சுடாத"ன்னு சொல்லிட்டு போயிட்டா. நானும் பத்து நாளா யோசிச்சேன். சரி வாசப்படியை மிதிக்காம தாண்டி போய்டலாம் இல்லைன்னா ஏணிப்படி மூலமா பால்கனி வழியா வீட்டுக்கு போய்டலாம்னு முடிவு பண்ணி போனேன். செய்யாத தப்புக்கும் அக்காவிடம் மன்னிப்பு கேட்டேன். அப்பறம் என்ன? அக்கா பயங்கரமா பீல் பண்ணா... மானம் போகும்னு கவலப்பட்டா கஷ்ட்டப்பட்டு சமைக்கணுமே? அவ்வ்வ்வ்வ்வ்...
 இப்பலாம் டீயை தவிர வேற எதுவும் வீட்டில் செய்றதில்ல ஹி...ஹி...ஹி.. உக்கார்ந்த இடத்திலேயே சாப்பாடு சாப்டுறது எவ்வளவு சொகமான அனுபவம் :-) இதனால என்ன சொல்ல வர்ரேன்னா (போதும்.. என்னன்னு புரியுது... நீ சீக்கிரம் முடிக்கப்பாரு) போகும் போது என்னத்த கொண்டுட்டு போகப்போறீங்க? விரோதமும், மனகசப்புகளையுமா? லூஸ்ல விடுங்க பாஸு!

எங்கே போனார் அந்த பதிவர்?? :
பதிவுலகிற்கு வந்த புதிதில் முதன் முதலில் ஹைதர் அண்ணாவை தான் அண்ணா என உரிமையுடன் கூப்பிட்டேன். அவரும் என்னை தங்கை எனவே அழைக்க ஆரம்பித்தார்(நாங்கள் இருவரும் நெருங்கிய உறவினர்கள் என அப்போது தெரியாது) அதை பார்த்த பதிவர் தொப்பி தொப்பி  "எனக்கும் இப்படியாக உங்களை அக்கா அல்லது தங்கச்சி என சொல்ல ஆசையாக இருக்கு" என சொன்னார். அன்றிலிருந்து அவரும் எனக்கு சகோதரர் ஆனார்.  நான் ப்ளாக் எழுதாமல் இருந்த 6 மாத இடைவெளியில் மறக்காமல் அடிக்கடி பின்னூட்டம் மூலம் நலம் விஷாரித்து ஒரு உண்மையான அண்ணனாகவே நடந்துக்கொண்டார்(என்னால் தான் பதில் போட முடியவில்லை). எப்போதும் நம் எண்ணங்களோட ஒத்துபோகாதவர்களின் பேச்சு, எண்ணம், ரசனை, நடவடிக்கைகளை கண்காணிப்பதில் அதிக ஆர்வம் இருக்கும் (உளவியலாம்). இவர்கள் எப்போதும்  தர்க்கரீதியாய் எவரிடத்திலும் பேசக்கூடிய திறமைபெற்றவர்கள். தொப்பி தொப்பியும் அப்படிதான்.  அவரின் பல பதிவுகளில் நடக்கும் விவாதசண்டை செமையா இருக்கும். பதில்களுக்கு அவர் கொடுக்கும் பதிலடிகளும் செம நெத்தியடி! நச் தான்!  அண்ணாவின் தியேட்டர் பற்றி, ஆம்வே பற்றி, பணம் பறிக்கும் விளம்பரம் பற்றி, மதத்தின் பெயரால்  நடத்தப்படும் கொள்ளை பற்றிய சமுதாயத்தில் புரட்சி ஏற்படுத்தக்கூடிய  பதிவுகள் என்றுமே மறக்க முடியாதவை!   நான் ரீஎன்ட்ரி கொடுப்பதற்கு ஒரு வாரம் முன் கடைசியாய் பதிவு போட்டார். அதன் பின் எப்பதிவும் காணவில்லை. சில மாதங்களுக்கு முன்  என் பதிவுக்கு அவரின் ஓட்டு பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஆனால் மீண்டும் ஏமாற்றமே! அவர் எழுத வரவில்லை! ஏன் ஒதுங்கிவிட்டார் என தெரியவில்லை! ஒரு வாரமாக சாட்டில் மாட்டிக்கொண்ட  அநேகரிடம் தொப்பி தொப்பியை தெரியுமா என கேட்டால் எல்லாரும் ஒவ்வொரு விதத்தில் அண்ணாவை பாராட்டியும் அவரின் பதிவுலக ஒதுங்கலை நினைத்து வருத்தமும் தெரிவித்தனர். தரமான எழுத்தும், நடுநிலையான தன்மையும் கொண்ட பதிவர்கள் நெடுநாள் அருகில் இல்லையென்றாலும் கூட அவர்களை பற்றிய நல்ல எண்ணங்கள் நம்மை விட்டு நீங்காது என்பதற்கு சான்று அது!  அவருடன் தொடர்பில் இருப்பவர்கள் மீண்டும் ப்ளாக்கில் எழுத வைக்க  முயற்சி செய்யுங்க! திறமையானவங்க ஒதுங்கி இருப்பது வருத்தமா இருக்கு :'( 


இம்புட்டுதூரம் வரைக்கும் பொறுமையா படிச்ச ஜீவன்களுக்கு(ஐய்யோ பாவம்!) என் நன்றிங்கோ
கெளம்புறேனுங்க (ஆமி-நோ நோ இதுக்கெல்லாம் சின்ன புள்ள மாதிரி அழப்படாது! மக்கள்ஸ்- அடபக்கி! கதற கதற அறுத்துட்டிருந்தா அழமாட்டாகளா???)

, , , , ,

68 comments:

 1. //ஆளாளுக்கு ஒவ்வொரு பேருல எழுதுறாங்க. ஒருத்தரு கொத்து பரோட்டாங்குறாரு, ஒருத்தர் ஸ்பெஷல் மீல்ஸ்ங்குறாரு.. //

  ம்ம்ம்ம்... யூ கண்டினியூ...

  ReplyDelete
 2. அருமையான பதிவர் தான். ஆனால் நேரமில்லை போலும். எழுதுவார் என்று நம்புவோம் அக்கா.

  ReplyDelete
 3. எழுதுங்க...எழுதுங்க...

  ReplyDelete
 4. சாம்பாரில் மட்டன் தேடப்படாதுதான் தால்சாவில் தேடலாமே.

  ReplyDelete
 5. //மன்னிப்புகேட்டா மானம் போகுமா?//

  விட்டு கொடுத்தவர் கெட்டுபோவதில்லை

  ReplyDelete
 6. ம்.... தால்ச்சா நல்லாவே இருக்கு.

  ReplyDelete
 7. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

  1. முதலில் உறவை பேணி வாழ நினைத்த உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இறைவன் உங்களுக்கு மிகச்சிறந்த நற்கூலியை தந்தருள்வானாக..

  ஒரு தோழர் நபி(ஸல்) அவர்களிடம் இவ்வாறு முறையிட்டார்.
  “எனக்கு சில உறவினர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் ஒட்டி நடந்தால் அவர்கள் வெட்டிச் செல்கின்றனர். நான் அவர்களுக்கு நன்மை செய்கின்றேன். அவர்களோ எனக்குத் தீமை செய்கின்றனர். நான் அவர்களுடன் கருணையுடன் நடந்து கொள்கின்றேன். அவர்கள் என்னுடன் கடுமையாக நடந்து கொள்கின்றனர்" என்றார். அதற்கு நபியவர்கள், "நீ கூறுவது போல் நீ நடந்து கொண்டால் அல்லாஹ்விடமிருந்து ஒரு உதவியாளர் உனக்கு நியமிக்கப்பட்டிருப்பார்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
  அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
  ஆதாரம் : முஸ்லிம்

  "ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
  நூல்: புஹாரி
  அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி).

  2. துஷ்டனை கண்டால் தூர விலகிக்கொள்ள வேண்டும் என்பதும் இஸ்லாம் நமக்கு காட்டியுள்ள அழகிய வழிமுறையாகும். (இங்கே துஷ்டன் என்று யாரை சொல்கின்றேன் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். கொலை, கொள்ளை, விபச்சாரம், பாலியல் விசயங்களை புகுத்துவது போன்றவர்களை சொல்கின்றேன். உதாரணம் இலங்கை அதிபர் ராஜபக்சே போன்றவர்கள்). முதலில் எடுத்து சொல்லவேண்டும். கேட்கவில்லையா விலகிக்கொள்ள வேண்டியது தான். தான் செய்த தவறுகளுக்கு மனமார மன்னிப்பு தேடி, இனி அப்படி செய்யமாட்டேன் என்று வாயாலாவது சொன்னால் மறுபடியும் அவர்களுடன் இணைந்துக்கொள்ள வேண்டியது தான். அல்லது மன்னிப்பு கேட்க வில்லையா, ஆனால் இனி தவறாக நடக்க மாட்டேன் என்கின்றாரா, நாம் அவரை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.

  3. ஆமாம் சிஸ்டர். நல்ல பதிவர்கள் விலகி இருந்தால் ரொம்ப கஷ்டமாக தான் இருக்கும். அது போல, அவர்கள் நிலையிலிருந்தும் நாம் பார்த்து ஆறுதல் அடைந்துக்கொள்ளவேண்டியது. ஆக்கப்பூர்வமாக எழுதும் பதிவர்கள் அவ்வப்போதாவது தலைக்காட்ட வேண்டும் என்பதே எல்லோருடைய ஆவலும்.

  4. //சாம்பார் சாதத்தில் மட்டனை தேடாதீங்கோ:// --- மனசாட்சி சூப்பரா சொல்லிருக்கார். தால்ச்சால தேடலாமே. :) :)

  5. //புன்னகை சிந்தி அன்பை அள்ளுங்க!:// - சூப்பர். 'சக மனிதனை நோக்கிய புன்னகை கூட தருமமே' - நாயகம் (ஸல்) அவர்கள்.

  நல்லதொரு பதிவு. ஜசாக்கல்லாஹ்.

  வஸ்ஸலாம்,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ

  ReplyDelete
 8. நல்லா இருக்கு சிஸ்டர் ..ஆனால் சொல்ல விரும்புகிறேன் என்பதுதானே சரியாக இருக்கும்...?!

  ReplyDelete
 9. சொல்ல வந்ததை கரெக்டா சொல்லிப்புட்டீங்களே.. ஆமீ.. தொப்பி தொப்பி ரொம்ப நல்லா எழுதுவார்.. ஏன் இப்போ எழுதவில்லை?.. விரைவில் எழுதுவார் என நம்புவோம்.

  நல்ல பகிர்வு ஆமினா.

  ReplyDelete
 10. //சாம்பார் சாதத்தில் மட்டனை தேடாதீங்கோ.... அவ்வ்வ்வ்வ்)//
  இன்னா பஞ்ச்டயலாக் படா யோராகீது.

  ReplyDelete
 11. //தரமான எழுத்தும், நடுநிலையான தன்மையும் கொண்ட பதிவர்கள் நெடுநாள் அருகில் இல்லையென்றாலும் கூட அவர்களை பற்றிய நல்ல எண்ணங்கள் நம்மை விட்டு நீங்காது என்பதற்கு சான்று அது!//
  yes madamm 100% correct

  ReplyDelete
 12. என்ன இன்றைக்கு ரொம்ப ரச்சிங்கான விசயங்களாகவே எழுதியிருக்கிறிங்க நல்லா இருக்கு

  ReplyDelete
 13. @சிவாகுமார்

  ////ஆளாளுக்கு ஒவ்வொரு பேருல எழுதுறாங்க. ஒருத்தரு கொத்து பரோட்டாங்குறாரு, ஒருத்தர் ஸ்பெஷல் மீல்ஸ்ங்குறாரு.. //

  ம்ம்ம்ம்... யூ கண்டினியூ...//

  ஹி..ஹி..ஹி.. பெரியாவா சொன்னா கேட்டுக்கவேண்டியது தான் ;-)

  ReplyDelete
 14. @பலே பிரபு
  //அருமையான பதிவர் தான். ஆனால் நேரமில்லை போலும். எழுதுவார் என்று நம்புவோம் அக்கா.//

  உண்மை தான் பிரபு! சீக்கிரம் எழுத வர வேண்டும் என தான் அனைவரின் எதிர்பார்ப்பும்! நம்புவோம் :-)

  ReplyDelete
 15. @கோவை நேரம்
  //எழுதுங்க...எழுதுங்க...//

  ஹி..ஹி..ஹி.. நீங்க சூரியன் எப்.எம்ல வேலை பாக்குறீங்களா அவ்வ்வ்
  நன்றிங்கோ

  ReplyDelete
 16. @மனசாட்சி
  //சாம்பாரில் மட்டன் தேடப்படாதுதான் தால்சாவில் தேடலாமே.//

  ஆத்த்த்த்த்த்த்தி!

  எங்கேயிருந்து கெளம்பி வரீங்க அவ்வ்வ்வ்வ்

  //சாம்பாரில் மட்டன் தேடப்படாதுதான் தால்சாவில் தேடலாமே.//
  சரியா தான் சொன்னீங்க! எங்கே எங்கே எது இருக்குமோ அங்கே அங்கே தேடினா கிடைக்கும்! அத விட்டுட்டு இல்லாத இடத்தில் இருக்குன்னு தேடுவது வேஸ்ட்டு தானே (எதாவது புரியுதா ஹி..ஹி..ஹி.. எனக்கே புரியல! அவ்வ்வ்வ்)

  ReplyDelete
 17. @மனசாட்சி
  ////மன்னிப்புகேட்டா மானம் போகுமா?//

  விட்டு கொடுத்தவர் கெட்டுபோவதில்லை//
  உண்மையான வாசகம்! ஊர்ல நாலு ஏக்கர் வச்சுருக்கீங்களே.. அத அப்படியே எனக்கு விட்டுகொடுத்துடுங்களேன் ஹி..ஹி..ஹி..

  ReplyDelete
 18. @மனசாட்சி
  //ம்.... தால்ச்சா நல்லாவே இருக்கு.//
  மறுபடியுமா????? தாங்காது!!

  :-)

  ReplyDelete
 19. //சொல்ல விரும்பினேன்-என்ன ஆனார் தொப்பி தொப்பி??//
  ஹி ஹி ஆமினா, அந்த தொப்பி போனால் போகிறார் விடுங்க. வேணுமென்றால் நானும் ஒரு தொப்பி போட்டுக்கிறன். என்னையும் ஒருவாட்டி நல்லவன் என்று சொல்லிடுங்க.

  ReplyDelete
 20. @சகோ ஆஷிக்

  வ அலைக்கும் சலாம் வரஹ்...

  //1. முதலில் உறவை பேணி வாழ நினைத்த உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இறைவன் உங்களுக்கு மிகச்சிறந்த நற்கூலியை தந்தருள்வானாக..//

  ஜஸக்கல்லாஹ் ஹைர் சகோ

  அருமையான இரு ஹதீஸ்களை பகிர்ந்திருக்கீங்க! எனக்கு தெரிஞ்சு என் உறவினர்கள் பலர் சண்டையிட்டுக்கொண்டாலும் சில தினங்களில் நேராக வீட்டுக்கே சென்று சலாம் சொல்லி விடுகின்றனர். என்ன ஒரு அற்புதம் இந்த வார்த்தையில்? தீராத கோபத்தையும் பகையையும் ஒரே நொடியில் மறக்கச்செய்துவிடுகிறது! அதற்கு பதில் சலாம் சொல்பவர்கள் நிச்சயமாக வேண்டா வெறுப்பாக சொல்வதில்லை! அவ்வாறே உறவும் ஒட்டிவிடுகிறது

  நம் சகோக்கள் யாரிடமாவது சண்டை போட்டு விட்டால் கூட அடுத்த சில நிமிடங்களில் சலாம் சொன்னால் சண்டையை மறந்து எளிதில் ஏற்றுக்கொண்டு சகஜ நிலைக்கு விடுகின்றனர். இஸ்லாம் காட்டிய வழி ஆயிற்றே! எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!

  ReplyDelete
 21. //சரி வாசப்படியை மிதிக்காம தாண்டி போய்டலாம் இல்லைன்னா ஏணிப்படி மூலமா பால்கனி வழியா வீட்டுக்கு போய்டலாம்னு முடிவு பண்ணி போனேன். செய்யாத தப்புக்கும் அக்காவிடம் மன்னிப்பு கேட்டேன். அப்பறம் என்ன? அக்கா பயங்கரமா பீல் பண்ணா... மானம் போகும்னு கவலப்பட்டா கஷ்ட்டப்பட்டு சமைக்கணுமே? அவ்வ்வ்வ்வ்வ்...//
  ரொம்ப விபரம் தெரிஞ்ச ஆளுதான்.

  ReplyDelete
 22. @சகோ ஆஷிக்

  //2. துஷ்டனை கண்டால் தூர விலகிக்கொள்ள வேண்டும் என்பதும் இஸ்லாம் நமக்கு காட்டியுள்ள அழகிய வழிமுறையாகும். (இங்கே துஷ்டன் என்று யாரை சொல்கின்றேன் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். கொலை, கொள்ளை, விபச்சாரம், பாலியல் விசயங்களை புகுத்துவது போன்றவர்களை சொல்கின்றேன். உதாரணம் இலங்கை அதிபர் ராஜபக்சே போன்றவர்கள்). முதலில் எடுத்து சொல்லவேண்டும். கேட்கவில்லையா விலகிக்கொள்ள வேண்டியது தான். தான் செய்த தவறுகளுக்கு மனமார மன்னிப்பு தேடி, இனி அப்படி செய்யமாட்டேன் என்று வாயாலாவது சொன்னால் மறுபடியும் அவர்களுடன் இணைந்துக்கொள்ள வேண்டியது தான். அல்லது மன்னிப்பு கேட்க வில்லையா, ஆனால் இனி தவறாக நடக்க மாட்டேன் என்கின்றாரா, நாம் அவரை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். //

  மாஷா அல்லாஹ்... அருமையான வார்த்தைகள் சகோ!

  ஒருவர் மனதார மன்னிப்பு கேட்டால் அவரை ஏற்றுக்கொள்வதே அவர் செய்த முந்தைய தவறுக்கு நாம் கொடுக்கும் தண்டனை என்பதில் எனக்கு நம்பிக்கை அதிகம்! இறைவனுக்காக மன்னிப்பதில் நம் மதிப்பு கூடத்தான் செய்யுமே தவிர எந்நாளும் குறைந்துவிடாது.

  நன்றி சகோ அழகான கருத்துக்கு

  ReplyDelete
 23. /* நான் ப்ளாக் எழுதாமல் இருந்த 6 மாத இடைவெளியில் மறக்காமல் அடிக்கடி பின்னூட்டம் மூலம் நலம் விஷாரித்து ஒரு உண்மையான அண்ணனாகவே நடந்துக்கொண்டார்(என்னால் தான் பதில் போட முடியவில்லை) */

  ஒரு சின்ன டவுட்டு.... நீங்க ப்ளாக் எழுதாம அவர் எப்படி பின்னோட்டம் போட்டார்...???? (நியாயமான கேள்வி தானே???)..ஹி..ஹி..ஹீ......

  ReplyDelete
 24. @சகோ ஆஷிக்
  3. ஆமாம் சிஸ்டர். நல்ல பதிவர்கள் விலகி இருந்தால் ரொம்ப கஷ்டமாக தான் இருக்கும். அது போல, அவர்கள் நிலையிலிருந்தும் நாம் பார்த்து ஆறுதல் அடைந்துக்கொள்ளவேண்டியது. ஆக்கப்பூர்வமாக எழுதும் பதிவர்கள் அவ்வப்போதாவது தலைக்காட்ட வேண்டும் என்பதே எல்லோருடைய ஆவலும். //

  அது என்னமோ உண்மை தான் சகோ. அவரவர் சூழ்நிலை அவரவர்க்கு! ஆனால் திடீரென விலகிச்செல்வது தான் மனதிற்கு கஷ்ட்டமாக இருக்கிறது (நாளைக்கே நமக்கும் இந்த நிலைமை வரலாம்ங்குறது இப்ப தெரியாது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

  ReplyDelete
 25. @சகோ ஆஷிக்
  //4. //சாம்பார் சாதத்தில் மட்டனை தேடாதீங்கோ:// --- மனசாட்சி சூப்பரா சொல்லிருக்கார். தால்ச்சால தேடலாமே. :) :)//

  தாலிச்சால தேடுனா சரிதேன்! சாம்பார்சாதத்திலும் தயிர்சாதத்திலும் தேடுனா என்னான்னு சொல்றது ஹி..ஹி..ஹி..

  ReplyDelete
 26. @சகோ ஆஷிக்
  //
  5. //புன்னகை சிந்தி அன்பை அள்ளுங்க!:// - சூப்பர். 'சக மனிதனை நோக்கிய புன்னகை கூட தருமமே' - நாயகம் (ஸல்) அவர்கள். //

  அருமையான வரி. எப்ப பார்த்தாலும் முகத்தினை சுருக்கியே வச்சிருப்பதில் என்ன ப்ரோஜனம் இருக்கு! காசா பணமா? ஹி..ஹி..ஹி..
  சின்னதா ஒரு ஸ்மைல் மற்றவர்களின் மனதில் நல்ல அபிப்ராயத்தை உருவாக்கும் எனில் அதை ஏன் விட்டுகொடுக்க வேண்டும் :-)

  வருகைக்கும் அழகான,ஆழமான கருத்துக்கும் மிக்க நன்றி சகோ ஆஷிக்

  ReplyDelete
 27. @சகோ ஹாஜாமைதீன்
  //நல்லா இருக்கு சிஸ்டர் ..ஆனால் சொல்ல விரும்புகிறேன் என்பதுதானே சரியாக இருக்கும்...?!//

  சொல்ல விரும்புகிறேன் என்பது இப்ப என்ன நெனைக்கிறேனோ அத சொல்றது

  சொல்ல விரும்பினேன் என்பது ரொம்ப நாளா ஆற அமர உக்கார்ந்து, நின்னுக்கிட்டு, படுத்துக்கிட்டு, சிந்திச்சுக்கிட்டு என்ன நெனைச்சேனோ அத சொல்றது

  ஹி..ஹி..ஹி..

  ஐ மீன் முன்பு சொல்ல வந்த விஷயத்தை பொருமையான தருணத்தில் சொல்வதால் சொல்ல விரும்'பினேன்' என்பது தான் சரியா இருக்கும்னு என் உள்மனசு,வெளிமனசு, எதிர்மனசு சொல்லுது ஹி..ஹி..ஹி..

  ஏதோ ஒன்னு போட்டுக்க வேண்டியது தானே சகோ :-)
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க

  ReplyDelete
 28. @விச்சு

  //ஐயோ அக்கா.......//
  ஐய்யய்யோ என்ன ஆச்சு? காதுல ரொம்ப ரத்தம் வந்துடுச்சோ? ஹி.ஹி..ஹி.. இங்கே பலருக்கும் சேம் ப்ளட் தான் ;-)

  ReplyDelete
 29. @ஸ்டார்ஜன் அண்ணா

  //சொல்ல வந்ததை கரெக்டா சொல்லிப்புட்டீங்களே.. ஆமீ.. தொப்பி தொப்பி ரொம்ப நல்லா எழுதுவார்.. ஏன் இப்போ எழுதவில்லை?.. விரைவில் எழுதுவார் என நம்புவோம்.

  நல்ல பகிர்வு ஆமினா//

  உங்க சிஷ்யையா இருந்துட்டு சொல்லவந்தத சரியா சொல்லலைன்னா ஊர் ஒலகம் மதிக்குமா அவ்வ்வ்

  தொப்பி தொப்பி ஏன் எழுதாம ஒதுங்கிட்டார்ன்னு தெரியல அண்ணா! மீண்டும் வருவார் என்றே நம்புவோம்.

  நன்றி அண்ணா

  ReplyDelete
 30. @அம்பலத்தார்
  ////சாம்பார் சாதத்தில் மட்டனை தேடாதீங்கோ.... அவ்வ்வ்வ்வ்)//
  இன்னா பஞ்ச்டயலாக் படா யோராகீது.//

  தாமரகிட்ட பேசாதீங்கோ பேசாதீங்கோன்னு சொன்னேனே கேட்டேளா??? சென்னை பாஷைலாம் எப்படி ஒட்டிக்கிச்சு பாருங்கோ :-)

  ReplyDelete
 31. @அம்பலத்தார்
  ////தரமான எழுத்தும், நடுநிலையான தன்மையும் கொண்ட பதிவர்கள் நெடுநாள் அருகில் இல்லையென்றாலும் கூட அவர்களை பற்றிய நல்ல எண்ணங்கள் நம்மை விட்டு நீங்காது என்பதற்கு சான்று அது!//
  yes madamm 100% correct//

  நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் ஹி..ஹி..ஹி..

  ReplyDelete
 32. @அம்பலத்தார்
  //என்ன இன்றைக்கு ரொம்ப ரச்சிங்கான விசயங்களாகவே எழுதியிருக்கிறிங்க நல்லா இருக்கு//
  தத்துவஞானி ஆகலாம்னு ப்ளான் பண்ணிட்டிருக்கேன்! ஹி..ஹி..ஹி..

  ReplyDelete
 33. @அம்பலத்தார்
  ////சொல்ல விரும்பினேன்-என்ன ஆனார் தொப்பி தொப்பி??//
  ஹி ஹி ஆமினா, அந்த தொப்பி போனால் போகிறார் விடுங்க. வேணுமென்றால் நானும் ஒரு தொப்பி போட்டுக்கிறன். என்னையும் ஒருவாட்டி நல்லவன் என்று சொல்லிடுங்க.//
  ஐ அஸ்க்கு பிஸ்க்கு அப்பள வட!

  ஹா..ஹா..ஹா..

  ஒருவாட்டி என்ன? எத்தனை வாட்டி சொன்னாலும் சக்கரை உப்பாக முடியாது, தங்கம் பித்தளையாக முடியாது, ரோஜா அரளி ஆகிட முடியாது ஹி..ஹி..ஹி.. இன்னைக்கு ஆமிக்கு என்னமோ ஆச்சு அவ்வ்வ்வ்

  உண்மையை மறுக்க முடியாது! எங்கண்ணா எப்பவும் நல்லவர் தான்! ஹி..ஹி..ஹி..

  ReplyDelete
 34. @அம்பலத்தார்
  //ரொம்ப விபரம் தெரிஞ்ச ஆளுதான்.//

  பின்ன? 24 மணி நேரமும் இன்டர்நெட்ல சுத்துறதுன்னா சாதாரண விஷயம்னு நெனச்சுக்கிட்டீங்களா ஹி..ஹி..ஹி..

  இப்படிலாம் இல்லைன்னா பொழைக்கதெரியாதவன்னு சொல்லிடுவாய்ங்க அண்ணா அவ்வ்வ்வ்

  ReplyDelete
 35. @சிராஜ்
  ///* நான் ப்ளாக் எழுதாமல் இருந்த 6 மாத இடைவெளியில் மறக்காமல் அடிக்கடி பின்னூட்டம் மூலம் நலம் விஷாரித்து ஒரு உண்மையான அண்ணனாகவே நடந்துக்கொண்டார்(என்னால் தான் பதில் போட முடியவில்லை) */

  ஒரு சின்ன டவுட்டு.... நீங்க ப்ளாக் எழுதாம அவர் எப்படி பின்னோட்டம் போட்டார்...???? (நியாயமான கேள்வி தானே???)..ஹி..ஹி..ஹீ......//

  ஹி..ஹி..ஹி..
  இந்த மாதிரி நியாயமா,நிதானமா, நேர்மையா,உண்மையா, சரியா, கரேக்ட்டா, தெளிவா கேள்வி கேட்க உங்களால தான் முடியும்னு ஊர் ஒலகத்துக்கு போஸ்ட்டர் அடிச்சு ஒட்ட வேண்டிய தருணம் இது சிராஜ் ஹி..ஹி..ஹி..

  ReplyDelete
 36. என்னத்த சொல்லுறது ... ஒண்ணுமே தெரியல!!! ஆனால் அதுல ஒன்னு தெரியுது ...

  உங்க கதை தேரை இழுத்து தெருவுல விட்ட கதையா இருக்கு ...

  இந்த ப்ளாக் ல பாசமலர்கள் [அண்ணன், தங்கச்சி ] லாம் ரொம்ப இருக்கீங்க போல ...

  உங்க பதிவு ரொம்ப ரொம்ப .............. இருக்கு . இந்த dash அ நீங்களே பில் பண்ணிகொங்க .

  இப்படிலாம் ஒரூ பதிவரா !!!!!!

  ReplyDelete
 37. //சாம்பார் சாதத்தில் மட்டனை தேடாதீங்கோ //

  அடடா..இத்தனை நாளா நான் சாம்பார் சாத்துல மட்டனை தேடிக்கிட்டு இருந்துட்டேனே...!! வெரி பேட்..வெரி பேட் ...என்னோட அறிவு கண்னை திறந்துட்டீங்க இனி மேல் சாம்பார்ல மீனை தேடுரேன் ..!! ஹா..ஹா... :-)))

  ReplyDelete
 38. ஸலாம் சகோ.ஆமினா,
  நன்னேறியோடு வாழ விரும்புகிறீர்கள்.
  இறைநாடினால் வெற்றியே அடைவீர்கள்.
  ஆக்கப்பூர்வமான நல்ல பகிர்வு. தொடர்க.

  @ சகோ.THOPPITHOPPI
  ஒரு நேர்மையான பதிவர்.
  பற்பல புதிய நல்ல விஷயங்களை சமூக அக்கறையுடன் நேரம் செலவழித்து தீர்க்கமாக அலசி ஆய்ந்து எழுதும் திறமையான பதிவர்.

  ஏதேனும் சமூக பிரச்சினை எனில், தனக்கு 'சரி' என்று பட்டதை தைரியமாக எழுதக்கூடியவர். இதனால் பல எதிர்கருத்து விவாதங்கள் வந்ததுண்டு. பெரும்பாலும் எனக்கு ஒத்த கருத்துக்கள் அவருடையவை என்றாலும் ஓரிருமுறை நானும் எதிர்கருத்து கொண்டிருந்தேன்.

  அப்படி ஒருமுறை, நான் அவரின் தவறான புரிதலை எதிர்த்து சற்று காட்டமாகவே ஒரு பின்னூட்டம் இட்டேன். தெளிவான ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஐ, நயந்து பணிந்து சொன்னால் கூட வீம்புக்காக மாற்ற மாட்டார்கள் சிலர். ஆனால், இவர்.... சர்ச்சைக்குரிய அந்த பாராவையே அவர் பதிவில் அழித்துவிட்டார்.

  கமென்ட் பால்லோ அப் வைத்திருக்க மாட்டேன் என்று நினைத்திருக்கலாம். எனது பதிவுக்கு வந்து... //இப்போது அழிக்கப்பட்டுவிட்டது உங்கள் மனம் புண்படும்படி எழுதவில்லை.// ...என்று உடனே அதை அன்போடு தெரியப்படுத்தினார். என்ன ஒரு பெருந்தன்மையான நன்னயம்..!

  பதிவர்களில் இவர் என்னை மிகவும் கவர்ந்த வித்தியாசமானவர். இவர் மீண்டும் எழுத ஆரம்பித்தால் அது மகிழ்வான செய்தி..!

  அவரின் முகவரி......
  திரு.தொப்பிதொப்பி,
  NO.6 விவேகானந்தர் தெரு,
  துபாய் மெயின் ரோடு,
  துபாய் குறுக்கு சந்து,
  துபாய்.

  ReplyDelete
 39. @சகோ.சிராஜ்,

  //இந்த மாதிரி நியாயமா,நிதானமா, நேர்மையா,உண்மையா, சரியா, கரேக்ட்டா, தெளிவா கேள்வி கேட்க உங்களால தான் முடியும்னு ஊர் ஒலகத்துக்கு போஸ்ட்டர் அடிச்சு ஒட்ட வேண்டிய தருணம் இது சிராஜ் ஹி..ஹி..ஹி..//

  ----போஸ்டர் எல்லாம் அடிச்சு ஓட்டினா அவருக்கு புரியாது சகோ.ஆமினா..!

  அவரை கமன்ட் மாடரேஷன் வைக்க சொல்லிட்டு....
  அவரோட கடைசி பதிவில்...

  "என்னங்க பின்னூட்டம் மட்டும் போடறீங்க...
  வடபஜ்ஜி-யிலே ஒண்ணும் எழுத மாட்றீங்க...
  சவுக்கியமா... நலமா...."
  ---அப்டீன்னு டெய்லி ஒரு பின்னூட்டம் போடுங்க...
  தெரிஞ்சிக்கிவார். புரிஞ்சிக்குவார்.

  ReplyDelete
 40. ரெண்டு தொப்பி போட்டவர் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும் உங்கள் குடும்பத்தினர் உங்களைக் காணாமல் தேடுகின்றனர்.

  ReplyDelete
 41. ஆமீனா அக்கா, முதல் தடவை உங்க பக்கத்தை படிக்கறேன். ரொம்ப நல்லா இருக்கு..வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதவும்.

  பாலா.

  ReplyDelete
 42. @சகோ வேஸ்ட்
  //என்னத்த சொல்லுறது ...//

  ஏன் வாய் இல்லையோ?


  //ஒண்ணுமே தெரியல!!!//
  இன்னும் கண் டாக்டர பாக்கலையா??? அடக்கொடுமையே!

  //ஆனால் அதுல ஒன்னு தெரியுது //
  ஐ திங் நீங்க போக வேண்டிய இடம் ஏர்வாடி அல்லது கீழ்பாக்கம்?!!!

  //உங்க கதை தேரை இழுத்து தெருவுல விட்ட கதையா இருக்கு ...//
  தெரியுதுல??? பின்ன ஏன் தேவையில்லாம டைம்ம வேஸ்ட் பண்ணிக்கிட்டு? வழி விடுங்க! காத்து வரட்டும்!

  //இந்த ப்ளாக் ல பாசமலர்கள் [அண்ணன், தங்கச்சி ] லாம் ரொம்ப இருக்கீங்க போல //

  வில்லன், பொல்லாதவன் போன்ற நீங்க இருக்கும் போது பாசமலர் இருக்குறதுல தப்பில்லையே??!!

  //உங்க பதிவு ரொம்ப ரொம்ப .............. இருக்கு . இந்த dash அ நீங்களே பில் பண்ணிகொங்க .
  //

  வாவ்வ்வ்வ்
  நல்லா இருக்கு, அருமையா இருக்கு, சூப்பரா இருக்கு... இப்படி பில் அப் பண்ணிக்கிட்டேன் சகோ தெகிரியசாலி

  ஆனா உங்க அளவுக்கெல்லாம் நா புத்திசாலி இல்ல பாருங்க?! அதுனால நானே கொஸ்ட்டீன்னும் கொடுத்து சாய்ஸ்ஸும் கொடுக்குரேன். செலக்ட் பண்ணி எடுத்துக்கோங்க!

  அனானிமஸ்ஸா வந்த நான் ஒரு ..................
  1. வேல வெட்டி இல்லாதவன்
  2. நேருக்கு நேரா மோத தெகிரியம் இல்லாத ஒன்னாம் நம்பர் பயந்தாங்கொள்ளி
  3. பெண் பதிவர்கிட்ட கூட ஒளிஞ்சுக்கிட்டே சண்டை போட நினைக்கும் லோக்லாஸ் டிக்கெட்டு!

  சரியான விடையை தேர்ந்தெடுத்து சொல்லவும்!

  அப்பறம் இன்னைக்கு 12 மணி வரைக்கும் நான் பிசி இல்ல! அதுனால நீங்க ஒடனுக்கொடனே பதில் போட்டா எனக்கும் பொழுது போன மாதிரி இருக்கும்! (ஆடு தன்னால வந்தா பிரியாணி ஆக்காம விட்டா நம்மல விட முட்டாள் வேற யாரும் இருக்க முடியாது! என்ன நா சொல்றது??!!)

  ஆங்க் சொல்ல மறந்துட்டேன்! இந்த பதிவுக்கு உங்களோட சேர்த்து மொத்தம் 8 அனானி கமென்ட்! அதுல உங்க கமென்ட் மட்டும் தான் நா ரிலீஸ் பண்ணியிருக்கேன். இது எதுக்கு சொல்ல வரேன்னு உங்களுக்கே தெரிஞ்சுருக்குமே ஹி..ஹி..ஹி.. நீங்க தான் அதிமேதாவி ஆச்சே!

  ReplyDelete
 43. @சகோ முஹம்மத் ஆஷிக்

  வ அலைக்கும் சலாம் வரஹ்..
  //இறைநாடினால் வெற்றியே அடைவீர்கள்.//

  ஆமீன்

  மிக்க நன்றி சகோ
  _____

  ReplyDelete
 44. @சகோ முஹம்மத் ஆஷிக்

  //ஆனால், இவர்.... சர்ச்சைக்குரிய அந்த பாராவையே அவர் பதிவில் அழித்துவிட்டார். //

  இந்த விஷயம் சில தினங்களுக்கு முன் நானும் கேள்விப்பட்டேன். நிச்சயமாக தன் எண்ணம் தவறு என்று தெரிய வந்தால் அதை மற்றவர்கள் நம்மை தவறாக நினைக்க கூடும் என வீம்புக்காக மாற்றாதவர்களின் மத்தியில் தொப்பி தொப்பி வித்தியாசமானவர் தான்.

  நானும் முன்பு பதிவுலகம் வந்த புதிதில் அவரின் தியேட்டர் பதிவு பத்தி அவரை திட்டி ;-) கமென்ட் போட்டு பின் ஏன் தேவையில்லாத வம்பு என அழித்துவிட்டேன். பின்பு அவர் நேரடியாகவே என் பதிவுக்கு வந்து ஏன் அழித்தீர்கள்? சரியாதானே சொல்லியிருந்தீங்க என சொன்னாரே பார்க்கலாம்! மாற்றுக்கருத்துக்கள் ஏற்கும் குணம் எல்லாருக்கும் வந்துவிடாது (என்னையும் சேர்த்து தான் ஹி..ஹி..ஹி..)

  //அவரின் முகவரி......
  திரு.தொப்பிதொப்பி,
  NO.6 விவேகானந்தர் தெரு,
  துபாய் மெயின் ரோடு,
  துபாய் குறுக்கு சந்து,
  துபாய்.//

  நீங்க தான் அரபு நாட்டில் இருக்கீங்க! துபாய் உங்களுக்கு பக்கம்னு நெனைக்கிறேன் :-) நீங்களே நேரடியா போயிட்டு கூடிட்டு வந்துடுங்க ஹி..ஹி..ஹி..

  நல்லதொரு கருத்துரைக்கு மனமார்ந்த நன்றிகள் சகோ ஆஷிக்

  ReplyDelete
 45. @மஸ்தூக்கா
  //ரெண்டு தொப்பி போட்டவர் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும் உங்கள் குடும்பத்தினர் உங்களைக் காணாமல் தேடுகின்றனர்.//

  ஹி..ஹி..ஹி..
  அப்படி மைக் ல கத்தி கூப்ட்டாவாவது வராரான்னு பாக்கலாம் அவ்வ்வ்வ்

  வருகைக்கு நன்றி சகோ

  ReplyDelete
 46. @Whity
  //ஆமீனா அக்கா, முதல் தடவை உங்க பக்கத்தை படிக்கறேன். ரொம்ப நல்லா இருக்கு..வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதவும்.
  //

  முதல் வருகைக்கும் கமென்ட்க்கும் ரொம்ப நன்றி ப்ரதர்

  அடிக்கடி வாங்க :-)

  ReplyDelete
 47. @சகோ ஆஷிக்

  //@சகோ.சிராஜ்,

  //இந்த மாதிரி நியாயமா,நிதானமா, நேர்மையா,உண்மையா, சரியா, கரேக்ட்டா, தெளிவா கேள்வி கேட்க உங்களால தான் முடியும்னு ஊர் ஒலகத்துக்கு போஸ்ட்டர் அடிச்சு ஒட்ட வேண்டிய தருணம் இது சிராஜ் ஹி..ஹி..ஹி..//

  ----போஸ்டர் எல்லாம் அடிச்சு ஓட்டினா அவருக்கு புரியாது சகோ.ஆமினா..!

  அவரை கமன்ட் மாடரேஷன் வைக்க சொல்லிட்டு....
  அவரோட கடைசி பதிவில்...

  "என்னங்க பின்னூட்டம் மட்டும் போடறீங்க...
  வடபஜ்ஜி-யிலே ஒண்ணும் எழுத மாட்றீங்க...
  சவுக்கியமா... நலமா...."
  ---அப்டீன்னு டெய்லி ஒரு பின்னூட்டம் போடுங்க...
  தெரிஞ்சிக்கிவார். புரிஞ்சிக்குவார்.//

  ஹா....ஹா..ஹா...

  சிராஜ் இப்ப 'ஸ்டேடஸ் மெசேஜ்'ல கலக்கிட்டிருக்குறதுனால ப்லாக் எழுதுறத கொஞ்ச நாளைக்கு ஓத்திவச்சுட்டாராம்! யார் ஸ்டேடஸ்க்கு எப்படி கலாய்க்கலாம்னு மண்டைல கொட்டி கொட்டி காதல் படத்துல கடைசி சீன்ல வர்ர பரத் மாதிரி, சீத்தலை சாத்தனார் மாதிரி ஆய்ட்டாருன்னா பாத்துக்கோங்களேன் ஹி..ஹி..ஹி..

  ReplyDelete
 48. வணக்கம் அக்காச்சி, நானும் வந்துட்டேன்.
  நல்லா இருக்கீங்களா?
  தொப்பி தொப்பி சாரை எனக்கும் புடிக்குமுங்க. ஆனால் எங்கே போயிட்டார் என்று தெரியவே இல்லைங்க.

  ReplyDelete
 49. உங்க ஸ்டைலில் நீங்க அசத்துங்க அக்கா.

  ReplyDelete
 50. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்


  பதிவு வெளியான பின்னூட்டமிடவேண்டும் என விரும்பினேன். ஆனால் நேரம் கிடைக்கவில்லை...

  என்றேல்லாம் சொல்ல மாட்டேன். உண்மையா இப்பதான் இந்த பதிவை பார்த்தேன்.. ஏன்னா எனக்கு இப்ப தான் நேரமும் கிடைத்தது.


  தனக்கு விரும்புவதை அடுத்தவருக்கும் விரும்பாதவரை ஒருவன் உண்மை முஸ்லிமாக மாட்டான் என்பது நபிமொழி

  அதை நிதர்சனத்தில் மெய் படுத்தும் உங்கள் செய்கை மிகவும் அழகானது.பின்பற்றுதலுக்கும் உரியது.


  //இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க //

  அப்படீனு வேற போட்டு இருக்கீங்க

  இதுதான் இப்போதைக்கு மனசுல பட்டது.,


  அப்புறம் சகோ @சிட்டிசன்

  அந்த அட்ரஸ்லெ பக்கத்தில டீக்கடை இருக்கணுமே.. அது மிஸ்ஸிங்
  :)

  ReplyDelete
 51. @நிரூபன்
  //வணக்கம் அக்காச்சி, நானும் வந்துட்டேன்.
  நல்லா இருக்கீங்களா?
  தொப்பி தொப்பி சாரை எனக்கும் புடிக்குமுங்க. ஆனால் எங்கே போயிட்டார் என்று தெரியவே இல்லைங்க.//

  வாங்க நிரூ
  நல்லா இருக்கீங்களா?? இப்பலாம் புள்ள செம ப்ரீ போல! நேத்து நாற்று க்ரூப்பை நாற்றுடியூப் ஆக்கும் போதே நெனச்சேன் இன்னைக்கு இந்த பயபுள்ள நம்ம போஸ்ட்க்கு வரலைன்னா கத்தலாம்னு ஹி..ஹி..ஹி...

  கூடிய சீக்கிரம் வருவார்ன்னு எதிர்பாக்கதான் இப்ப எம்மால் முடியும் :'( இதுவரை யாரும் தகவல் சொல்லவில்லை!

  ReplyDelete
 52. @நிரூ
  //உங்க ஸ்டைலில் நீங்க அசத்துங்க அக்கா.//

  ஹி..ஹி..ஹி..
  நன்றி நிரூ

  ReplyDelete
 53. @குலாம்

  வ அலைக்கும் சலாம் வரஹ்...

  ஆத்த்த்த்த்த்த்த்த்த்த்தி....

  வராதவுகளாம் வந்திருக்கீங்க! நான் காண்பதெல்லாம் கனவா நிஜமா ஹி..ஹி..ஹி..

  //ஏன்னா எனக்கு இப்ப தான் நேரமும் கிடைத்தது.//

  ஆமாம்மா... ஆன்லைன்ல பச்சைலைட் போட்டுக்கிட்டே ஸ்டேடஸ் மெசேஜ்ல இன்விசிபிள்ல இருக்குற ஆள் ஆச்சே! ஹி..ஹி..ஹி...

  //இதுதான் இப்போதைக்கு மனசுல பட்டது.,//
  ஹி..ஹி..ஹி.. நன்றிங்க

  ReplyDelete
 54. @சகோ குலாம்

  //அப்புறம் சகோ @சிட்டிசன்

  அந்த அட்ரஸ்லெ பக்கத்தில டீக்கடை இருக்கணுமே.. அது மிஸ்ஸிங்
  :)//

  ஓஹ்ஹ்ஹ்ஹ் நம்ம சிராஜ் பாய் துபாய்ல தான் டீக்கடை வச்சுருக்காரா????!!! அப்பன்னா சிராஜ் பாய் தான் தொப்பி தொப்பியா ஹி..ஹி..ஹி.. (கோர்த்துவிட்டாச்சு! இனி நிம்மதியா தூங்கலாம்)

  ReplyDelete
 55. ///////////////////////////////சகோ @சிட்டிசன்

  அந்த அட்ரஸ்லெ பக்கத்தில டீக்கடை இருக்கணுமே.. அது மிஸ்ஸிங்
  :) ///////////////////////////////////////////////////////

  நான் என்ன பண்ணுவேன் சகோ.குலாம்...?!?!?
  அவரு ப்ரோஃபைலில் அவரு கொடுத்து இருந்த அட்ரசை அப்படியே அட்டை காப்பி அடிச்சு இங்கே பேஸ்ட் பண்ணினேன். அவ்ளோதான்..! அதில் டீக்கடை எல்லாம் இல்லையே..! ஆனால், உங்களுக்குத்தான் அவர் உண்மை அட்ரஸ் நல்லா தெரிஞ்சு இருக்கு போல...! அவரே மறதியில்(?மிஸ்ஸிங்) விட்ட தப்பை எல்லாம் கரீக்டா எடுத்து காட்டறீங்க பாருங்க..!

  ReplyDelete
 56. ஒவ்வொரு சம்பவத்திலும் ஒரு கருத்து சொல்லி அசத்திட்டீங்க... ஆமா தொப்பி தொப்பி எங்கே போனார்?

  ReplyDelete
 57. ஏன் எல்லாரும் நம்ம டீ கடை மேலே கண்ணா இருக்கீங்க?????? ம்...ஹும்... கடைய ரொம்ப நாள் மூடப் பிடாது போல இருக்கே....
  இன்னும் 2 நாள்ல ஓபன் பண்ணிடறேன்.

  ReplyDelete
 58. மிக அருமையான பதிவு.....அனுபவப்பதிவு தான் ஆனாலும் ஆழமான கருத்துகள் கொண்ட பதிவு... நன்றி அக்கா.....பகிர்விக்கு

  ReplyDelete
 59. தங்கை ஆமினா

  இந்த தொப்பி தொப்பி பக்கியை நானும் தேடிக்கிட்டு தான் இருக்கிறேன் சமூக பதிவுகள் நல்ல எழுதுவர்

  வேறு தளங்களில் இருவரும் பின்னூட்ட சண்டை போட்டு இருக்கோம் மறக்க முடியாத நண்பர்

  ReplyDelete
 60. அக்கா, நல்லா இருக்கே...

  ReplyDelete
 61. @சகோ ஆஷிக்

  //~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

  ///////////////////////////////சகோ @சிட்டிசன்

  அந்த அட்ரஸ்லெ பக்கத்தில டீக்கடை இருக்கணுமே.. அது மிஸ்ஸிங்
  :) ///////////////////////////////////////////////////////

  நான் என்ன பண்ணுவேன் சகோ.குலாம்...?!?!?
  அவரு ப்ரோஃபைலில் அவரு கொடுத்து இருந்த அட்ரசை அப்படியே அட்டை காப்பி அடிச்சு இங்கே பேஸ்ட் பண்ணினேன். அவ்ளோதான்..! அதில் டீக்கடை எல்லாம் இல்லையே..! ஆனால், உங்களுக்குத்தான் அவர் உண்மை அட்ரஸ் நல்லா தெரிஞ்சு இருக்கு போல...! அவரே மறதியில்(?மிஸ்ஸிங்) விட்ட தப்பை எல்லாம் கரீக்டா எடுத்து காட்டறீங்க பாருங்க..!
  //

  ஹா...ஹா...ஹா...

  ஒன்னு தொப்பி தொப்பி வீட்டுபக்கம் டீக்கடை இல்லாம இருக்கணும்!

  இல்லைன்னா குலாம்க்கு தொப்பி தொப்பி வீடு தெரிஞ்சிருக்கணும் (இவரையும் கோர்த்துவிட்டாச்சு)

  இதுல எது உண்மை அவ்வ்வ்வ்

  ReplyDelete
 62. @பாலா

  //ஒவ்வொரு சம்பவத்திலும் ஒரு கருத்து சொல்லி அசத்திட்டீங்க... ..//

  நன்றிங்க. பதிவை முழுமையா படிச்சு கமென்ட் போடும் வாசகர் பிரிவை சேர்ந்தவரா நீங்க? :-)

  //ஆமா தொப்பி தொப்பி எங்கே போனார்?//
  அவ்வ்வ்வ்வ்
  நீங்க எந்த வகையான வாசகர் ஹி..ஹி..ஹி.. :-)

  ReplyDelete
 63. @சிராஜ்
  //ஏன் எல்லாரும் நம்ம டீ கடை மேலே கண்ணா இருக்கீங்க??????//

  ஹி..ஹி..ஹி... நாங்களாம் ரோட்ல எவனாவது அடிச்சுக்கிட்டா பாப்கான் கொரிச்சுக்கிட்டே வேடிக்க பாக்குறவிங்க ஹி..ஹி..ஹி...
  //ம்...ஹும்... கடைய ரொம்ப நாள் மூடப் பிடாது போல இருக்கே....
  இன்னும் 2 நாள்ல ஓபன் பண்ணிடறேன்.//

  ஹா..ஹா..ஹா..
  இந்த கமென்ட் போட்டே 4 நாளாயிடுச்சே சிராஜ்! இன்னும் டீயும் வரல! வட பஜ்ஜியும் வரலையே!!! இப்படியா கஷ்ட்டமர காக்க வைக்கிறது?? அப்பறம் டீகுடிப்பு போராட்டம் நடத்துவோம் ஜாக்ரதையா இருந்துக்கோங்க

  ReplyDelete
 64. @சிட்டுக்குருவி
  //மிக அருமையான பதிவு.....அனுபவப்பதிவு தான் ஆனாலும் ஆழமான கருத்துகள் கொண்ட பதிவு... நன்றி அக்கா.....பகிர்விக்கு//

  வாங்க இம்ரான்
  கருத்துக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 65. @ஹைதர் அண்ணா
  //தங்கை ஆமினா

  இந்த தொப்பி தொப்பி பக்கியை நானும் தேடிக்கிட்டு தான் இருக்கிறேன் சமூக பதிவுகள் நல்ல எழுதுவர்

  வேறு தளங்களில் இருவரும் பின்னூட்ட சண்டை போட்டு இருக்கோம் மறக்க முடியாத நண்பர்///

  வாங்கண்ணா

  எனக்கு தெரிஞ்சு அதிகமா தாக்குதல் பதிவு போட்டும் அனைவரும் விரும்பும் பதிவர் தொப்பி தொப்பியாதான் இருப்பார். எழுத்தின் நேர்மை தான் அனைவரையும் தேட வைக்குது!

  //வேறு தளங்களில் இருவரும் பின்னூட்ட சண்டை போட்டு இருக்கோம் மறக்க முடியாத நண்பர்//

  சண்டை போட்டாலும் நண்பர் என சொன்னது மகிழ்ச்சியை தருகிறது! யாருக்கும் இத்தகைய புரிதல் எளிதில் வந்துவிடுவதில்லை

  நன்றி அண்ணா

  ReplyDelete
 66. @அமல்
  மிக்க நன்றி அமல்

  ReplyDelete
 67. ம்ம்ம்ம்....சொல்ல விரும்புவதை சொல்ல போகிறேன்... நல்ல ஐடியாதான்... ஒரு டவுட்டு.... எல்லாருமே சொல்ல விரும்புவதைத்தானே சொல்கிறார்கள்.... ஹி...ஹி...

  தொப்பிதொப்பி...இந்த பெயரை பார்த்திருக்கிறேன்... அவருடைய ப்ளாக்குக்கு சென்றதில்லை...லிங்க் தரமுடியுமா? (.அட்ரஸ்னு கேக்க பயமாயிருக்கு :) )

  'மானம் போகும்னு கவலப்பட்டா கஷ்ட்டப்பட்டு சமைக்கணுமே?' சாரின்ற ஒரு வார்த்தையில எவ்ளோ பெரிய பிரச்னை தீர்ந்தது... ஹி..ஹி...

  ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)