எளிதாய் அமைந்தது அந்த சந்திப்பு. இன்றும் மறக்கமுடியவில்லை!ஒரே பள்ளி, ஒரே காலனி என்பதால் சிரமப்படாமல் நம் நட்பும் கைகூடியது.

எண்ணங்களில், ரசனைகளில், விருப்பு வெறுப்புகளில் பலதூர இடைவெளி இருந்தும் இத்தனையாண்டு காலங்கள் கைகோர்த்தே பயணித்தது நம் புரிதலால் மட்டுமே என்ற போதும் பலமுறை அஃது புரியாத புதிர்தான்!

உன் வீட்டின் செல்ல மகாராணியாய் நான். என் அப்பா அம்மாவின் செல்ல பிள்ளையாய் நீ என ஒருவர் மாற்றி ஒருவர் அவரவர் வீட்டில் செய்த விளையாட்டுக்கு அளவெங்கே?

உன் அம்மாவின் மடியில் தலைவைத்து தூங்கும் போது வெளியில் பொறாமைபடுவதாக நீ காட்டிக்கொண்டாலும் அதை ரசித்தாய் என்பது எனக்கு தெரியும் உன் கண்ணாடியாய் நான்!

என் ஒருவரி சொல்லை வைத்து நான் நினைத்ததையும் நினைக்க போவதையும் சொல்லிவிடும் என் மனசாட்சியாய் நீ!

 ஒளிவு மறைவென்பது நம் அகராதியில் எங்கேயிருந்தது? ஒருவருக்கொருவர் டைரியாய் நாம்!

உன் பிடிவாதத்தை ரசிக்கும் திறன் உனக்கு மட்டுமே தெரியும். எதுவெல்லாம் என் குறை என சொல்வேனோ அவையெல்லாம் ரசிக்கிறாய். எவையெல்லாம் என் சிறப்பு என பெருமைப்பட்டுக்கொள்வேனோ அவையெல்லாவற்றையும் மட்டம் தட்டி என் கோபத்தை தூண்டுவாய்!

பருவ வயதில் நம் நட்பு அடுத்த பரிமாணமாய் காதலை நோக்கி பயணிக்க எத்தனித்த போது நட்பு மட்டுமே நம்மை கடைசிவரை ஒன்றிணைக்கும் என்று முடிவெடுத்ததால் சலன பாதையை எளிதாகவே கடந்துவிட்டோம். பேசி தீர்க்க முடியாத பிரச்சனை உலகில் இல்லை என நீ அடிக்கடி சொல்வதன் அர்த்தம் அன்றுதான் தெரிந்தது! மனதிலேயே பூட்டியிருந்தால் குற்ற உணர்ச்சியில் இன்றும் சாகாமல் சாகும் வித்தையை இருவரும் கண்டிருப்போம்!

பாடம் சொல்லிகொடுக்க அம்மா ஏற்பாடு செய்த பீஸ் வாங்காத டியூசன் மாஸ்ட்டர் நீ! அன்றைய நாளின் என் மேல் உள்ள உன் கோபத்தை என் தலையில் அடித்து தீர்த்துக்கொள்ளும் "2 மணி நேர எதிரி" நீ!  காலேஜ்க்கு என்னை அழைத்துச்செல்லும் டூவீலர் ட்ரைவர்  நீ?  யார்யாரெல்லாம் என்னை சுற்றி இருக்க வேண்டுமென தீர்மானித்த என் பாதுகாவலன் நீ!

நீ என்ன மார்க்கெட்டில் இருக்கும் கத்திரிக்காயா? அதை நினைத்ததும் வாங்கி விட முடியும்! நீ மண்ணில் இருக்கும் வைரம்! உன்னுடன் பழகுவது அனைவருக்கும் எளிதான விஷயமாய் இருக்க கூடாது... நிறைய பேர் ஏங்க வேண்டும், தகுதியானவருக்கு மட்டுமே நட்பு கிடைக்க வேண்டும்  என மொக்கையான தத்துவத்தில்  என் தனித்தன்மையை காத்தவன் நீ! :-)

நம்மை ஒரு சேர பார்க்கும் யாவருக்கும் வரும் சந்தேகப்பார்வை சர்வசாதாரணமானது. அது தெரிந்தும் "நமக்கென்ன?" என என் கைபிடித்து இழுத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்து போவாய்... புன்னகையுடன் நான் "அதானே??!!"

என் அன்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும். ஆனால் எல்லாரை விடவும் அதில் நான் தனித்துவமாய் தெரிய வேண்டும் என்பாய்! புது ப்ரன்ட் கிடைச்சுருக்குன்னு சொன்னால் "கூட்டத்தில் கோவிந்தா போட நான் தாயார் இல்லை"என கோபித்துக்கொண்டு போவாய்! உன்னை எடை போடுவது எனக்கு எளிதான விஷயம் அல்ல !

என்னதான் உன் பக்கம் நியாயம் இருந்தும் சண்டை போட்டு கொண்டு போன சில மணி நேரங்களில் என் செல்போனுக்கு உன்னிடமிருந்து மெசேஜ் வந்திருக்கும். "எனக்கு கத்தி அழுகணும் போல இருக்கு. ஆபிஸ் என்பதால் முடியவில்லை"

நம் திருமணத்திற்கு பின் நம் நட்பு நீடிக்க வாய்ப்பு குறைவாகவோ அல்லது முற்றும் இல்லாமல் இருக்கும் என்பதை நாம் முன்பே பேசி அதற்காய் நம் மனதை பக்குவப்படுத்தி இருந்தாலும் நமக்குள் பிரிவு என்ற பயம் பலநேரங்களில் அழுகையை தந்திருந்தது. யாருடைய ப்ரார்த்தனையோ என்னை புரிந்துக்கொண்டவன் என்னவனாகவும், நம் நட்பை நேசித்தவள் உன்னவளாகவும் கரம் பிடித்தோம்.  ஆனாலும் சில மனக்கசப்புகளை தவிர்க்க விருப்பப்பட்டு இடைவெளி உருவாக்கினோம்.  என் மேல் உனக்கான உரிமைகளை விடுவித்துக்கொண்டாய். உன் மேல் உள்ள அக்கறையை உன் மனைவிக்கு ஒப்படைத்துவிட்டிருந்தேன்.

பிரசவ வலியில் துடித்த போது எனக்கு தைரியம் சொல்ல அம்மா ரொம்ப மெனக்கெட்டார். நீ மட்டும் என்னுடன் சேர்ந்து அழுதுக்கொண்டிருக்கிறாய். "அவ கத்துறத பாக்க முடியல! வலிக்காம சிசேரியன்  பண்ணிடுங்க" என டாக்டரிடம்  சொன்ன படுபாவி நீ!  "நல்லாயிருப்பீயா நீ???" என என் கையில் கோர்த்திருந்த உன் விரல்களை முறுக்கிவிட்டது இன்றும் இனிக்கும் தருணங்களாக ! இதை நினைக்கும் போதே சிரித்துக்கொள்கிறேன் :-) என் குழந்தையை முதலில் வாங்கியது நீதான் என்று நினைக்கிறேன். மயக்கம் தெளிந்து இமை திறக்கும் போது வெளிநாட்டில் இருக்கும் என்னவனுக்கு உன் மடிக்கணினி மூலமாக என் குழந்தையினை காண்பித்து வர்ணித்துக்கொண்டிருந்தாய். 6 மணி நேரத்திற்கு முன்  நான் வலியில் கத்தும் போது "இரு லாப்டாப் எடுத்துட்டு வரேன்" என  காரில் இருந்து நீ இறங்கி போன போது "என்னை விட உனக்கு வேலைதான் முக்கியமா??" என கோபத்தில் நான் கத்தியது கண்ணில் வந்து நிற்க கண்ணீரை இறக்கியது! சிறு சிறு விஷயங்களால் பெரிய பெரிய ஆச்சர்யங்களை தருபவன் நீ..... மறுபிறவி எடுத்து வந்த பெண் முதலில் பார்க்க நினைப்பது குழந்தையையும் கணவனையும் தான் என்பதை எப்படி தெரியும் உனக்கு? 

நீ வீட்டுக்கு வந்தாலே காதில் பஞ்சடைத்துக்கொள்ள தோணும். உன் மருமகனின் உடலில் காணும் கொசு கடித்த ஒவ்வொரு சிவப்பு புள்ளிக்கும் 100 வார்த்தைகள் வசைகளாக  எனக்கு  கிடைக்கும்! கைகளால்  முடியாததை வார்த்தைகளில் காட்டுவாய் என தெரியும். என் மடியில் அவன் இருந்த நாட்களை விட உன் தோள்களில் இருந்த நாட்களே அதிகம். என் கைபிடித்து அவன் நடந்த நாட்களை விட உன் பைக்கில் ஊர் சுற்றிய நாட்கள் அதிகம். என் மகனாய் பிறந்ததால் அவனுக்கும் உன் விலைமதிப்பில்லாத அன்பு கிடைத்துவிட்டது! அவனும் அதிஷ்ட்டசாலிக்கெல்லாம் அதிஷ்ட்டசாலி...

இரத்த சம்மந்தமே இல்லாமல் நட்பினால் இணைந்த நம் உறவு என்னும் அற்புத பொக்கிஷம் இதோ அடுத்த தலைமுறையும் எடுத்துக்கொண்டது... நம் குழந்தைகளும் நண்பர்களாக!

மனம் முழுவதும் சந்தோஷங்கள் பரவ உன் தோளில் தலை சாய்த்து நம் குழந்தைகளின் விளையாட்டுக்களை ரசித்துக்கொண்டிருக்கிறேன்

"அம்மா...அம்மா.... எந்திரி! எனக்கு காலேஜ்க்கு லேட் ஆய்டுச்சு!"-மகன் எழுப்புகிறான்.
அடடா... நல்ல நண்பன் குறையில்லாத நண்பன் என்பது கனவிலும் கற்பனையிலும் மட்டுமே தான் சாத்தியம் போல்... , ,

101 comments:

 1. அண்மையில் படித்த மிகச்சிறந்த பதிவு.

  ReplyDelete
 2. @சிவா

  ரொம்ப நாள் கழிச்சு வந்துருக்கீங்க :-)

  மிக்க நன்றி சிவா

  ReplyDelete
 3. @அம்பலத்தார் அண்ணா

  வருகைக்கு மிக்க நன்றி அண்ணா

  ReplyDelete
 4. நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது...

  //அடடா... நல்ல நண்பன் குறையில்லாத நண்பன் என்பது கனவிலும் கற்பனையிலும் மட்டுமே தான் சாத்தியம் போல்...
  //

  பயணத்தை சட்டென நிறுத்தியதுபோல இந்த வரி..
  யதார்த்தமான வரிகள் தான்.
  நல்லதொரு பதிவு..

  ReplyDelete
 5. ஒரு அருமையான நட்பை அதன் சுகத்தை அனுபவித்துக்கொண்டே வந்தேன் கடைசி வரி வரை ஆனால் அது கற்பனை என்று தெரிந்ததால் மனம் வருந்தியது இப்படி ஒரு நட்பு இருப்பது எவ்வளவு அற்புதம்......நட்பு எனும் வரம்புக்குள் இதை நிறுத்துவது கொஞ்சம் கடினம் தான் என்பது அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.ஒரு உன்னதமான நட்பை இதைவிட சிறப்பாக எப்படி எழுதிவிட முடியும்??????????

  ReplyDelete
 6. Wow......... Super.........keep it up!

  ReplyDelete
 7. சூப்பர்............சூப்பர்..............சூப்பர்...............சூப்பர்.......................சூப்பர்...............சூப்பர்...............சூப்பர்.............சூப்பர்....................சூப்பர்...............சூப்பர்...............சூப்பர்...............சூப்பர்.............சூப்பர்.................சூப்பர்....................சூப்பர்........சூப்பர்.............சூப்பர்..............சூப்பர்.....................சூப்பர்............சூப்பர..........சூப்பர்.........சூப்பர்.......சூப்பர்...............சூப்பர்............சூப்பர்.........சூப்பர்........................சூப்பர்............சூப்பர்.............சூப்பர்........சூப்பர்.

  ReplyDelete
 8. எளிதாய் அமைந்தது அந்த சந்திப்பு. இன்றும் மறக்கமுடியவில்லை!ஒரே பள்ளி, ஒரே காலனி என்பதால் சிரமப்படாமல் நம் நட்பும் கைகூடியது.//////

  ஆமா, காலனின்னா செருப்பு தானே?

  ReplyDelete
 9. எண்ணங்களில், ரசனைகளில், விருப்பு வெறுப்புகளில் பலதூர இடைவெளி இருந்தும்.....//////

  பல தூரம்னா? எத்தனை கிலோமீட்டர் இருக்கும்?

  ReplyDelete
 10. என் ஒருவரி சொல்லை வைத்து நான் நினைத்ததையும் நினைக்க போவதையும் சொல்லிவிடும் என் மனசாட்சியாய் நீ! ///////

  ஏங்க ஆமினா, உங்க ஃபிரெண்டு என்ன ஜோதிடரா?

  ReplyDelete
 11. உன் பிடிவாதத்தை ரசிக்கும் திறன் உனக்கு மட்டுமே தெரியும். எதுவெல்லாம் என் குறை என சொல்வேனோ அவையெல்லாம் ரசிக்கிறாய். எவையெல்லாம் என் சிறப்பு என பெருமைப்பட்டுக்கொள்வேனோ அவையெல்லாவற்றையும் மட்டம் தட்டி என் கோபத்தை தூண்டுவாய்! //////////

  ஹி ஹி ஹி ஹி சுத்த கிறுக்கனா இருப்பான் போலிருக்கு! அவ்வ்வ்வ்வ்வ்!

  ( ஆமா இது வெறும் கற்பனைப் பதிவு தானே, அந்த தைரியத்துலதான் உங்க ஃபிரெண்டை கிறுக்கன்னு சொன்னேன்! இல்ல, நிஜமான நண்பன் பத்தின பதிவா? ஒண்ணுமே புரியலையே? )

  ReplyDelete
 12. பேசி தீர்க்க முடியாத பிரச்சனை உலகில் இல்லை என நீ அடிக்கடி சொல்வதன் அர்த்தம் அன்றுதான் தெரிந்தது! மனதிலேயே பூட்டியிருந்தால் குற்ற உணர்ச்சியில் இன்றும் சாகாமல் சாகும் வித்தையை இருவரும் கண்டிருப்போம்! /////////

  அது எப்புடி சாத்தியமாச்சுன்னு கொஞ்சம் எலாபரேட்டா சொல்லுங்க! ஏன்னா இன்னிக்கு நிறைய ஃபிரெண்ட்ஸ்ங்க இப்புடித்தான் தடுமாறிக்கிட்டு கெடக்குறாங்க!

  ReplyDelete
 13. நீ என்ன மார்க்கெட்டில் இருக்கும் கத்திரிக்காயா? அதை நினைத்ததும் வாங்கி விட முடியும்! நீ மண்ணில் இருக்கும் வைரம்! உன்னுடன் பழகுவது அனைவருக்கும் எளிதான விஷயமாய் இருக்க கூடாது... நிறைய பேர் ஏங்க வேண்டும், தகுதியானவருக்கு மட்டுமே நட்பு கிடைக்க வேண்டும் என மொக்கையான தத்துவத்தில் என் தனித்தன்மையை காத்தவன் நீ! :-) /////

  ரொம்ப வில்லங்கம் புடிச்ச ஆளா இருப்பாரு போல இருக்கு!

  ReplyDelete
 14. ஆனாலும் சில மனக்கசப்புகளை தவிர்க்க விருப்பப்பட்டு இடைவெளி உருவாக்கினோம். என் மேல் உனக்கான உரிமைகளை விடுவித்துக்கொண்டாய். உன் மேல் உள்ள அக்கறையை உன் மனைவிக்கு ஒப்படைத்துவிட்டிருந்தேன். ////////

  இதுதான் க்ளைமேக்ஸே,சினிமாவுலகூட நிறைய ஃபிரெண்ட்ஸ் கடைசியில லவ்பண்ணி, கல்யாணம் பண்ற மாதிரிதான் காட்டுவாய்ங்க! ஆனா, இது வித்தியாசமா இருக்கு!

  ReplyDelete
 15. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

  ஆண்-பெண் நட்பு...ம்ம்ம்.

  பள்ளி கல்லூரி காலங்களில் இருந்து மிக ஆழமான நட்புடன் எனக்கு சில தோழிகள் உண்டு. ஆனால் நான் இஸ்லாத்தில் நுழைந்தவுடன் இரு செய்கைகளை மட்டும் தவிர்த்து கொண்டேன். ஒன்று அவர்களுடன் தனித்து இருப்பது மற்றொன்று அவர்களுடன் உடல்ரீதியான தொடர்புகள் மேற்கொள்வது (தொடுவது etc போன்றவை).

  "என்னடா இப்படி மாறிவிட்டாய்" என்று அவர்கள் கேட்ட போது, எடுத்துச்சொன்ன போது அதனை பெரிதும் மதித்து பாராட்டி ஏற்றுக்கொண்டார்கள். அவர்களுடனான இன்னும் அதிகமான நட்பு வளர்ந்தது.

  ஒரு ஆணும் பெண்ணும் தனித்திருக்கும் போது அங்கே சைத்தான் நுழைந்து கேடு விளைவிக்க முயற்சிக்கின்றான் என்று நாயகம் (ஸல்) கூறினார்கள். ஒரே பெற்றோருக்கு பிறந்திருந்தாலும், ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு படுக்கையை பிரிக்க சொன்னார்கள் நாயகம் (ஸல்) அவர்கள்.

  சிலவற்றை தவிர்ந்திருந்தாலும் ஆண்-பெண் நட்பு என்பது அது இல்லாமலும் மிக ஆழமாகவே இருக்கும். மிக அற்புதமான நபித்தோழிகளை நாம் வரலாற்றில் பார்க்கலாம். அவர்களின் நட்பானது மிக அழகானது. ஆனால் வரையறைகள் கொண்டது.

  உலகின் பல்வேறு செய்கைகளை போலவே, ஆண்-பெண் நட்பிலும் சில வரையறைகளை வகுக்கின்றது இஸ்லாம். அந்த வரையரைகளால் ஆழமான நட்புக்கு ஒன்றும் பங்கம் வந்துவிட போவதில்லை.

  நான் சிலவற்றை தவிர்ப்பது கண்டு "உங்கள் மேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா" என்று கேட்பவர்களுக்கு என்னுடைய பதில் எளிதானது. அது ஹை வோல்டேஜ் கரென்ட், காலில் செருப்பு போட்டுக்கொண்டு வேலை செய்யுங்கள் என்று கூறும்போது, இல்லை எனக்கு இதில் அனுபவம் உண்டு என் திறமை மேல் எனக்கு நம்பிக்கை உண்டு கூறி ஒருவன் பாதுகாப்பு இல்லாமல் செயல்படுவானேயானால் அது அவனுக்கு தான் ஆபத்து. அது போல, (இஸ்லாமை கொண்டு) சில வரையறைகளை வகுத்து கொண்டு என்னை possible distraction-களில் இருந்து காத்துக்கொள்ளவே விரும்புகின்றேன்.

  அதுமட்டுமல்லாமல், நான் நன்கு ஆராய்ந்து உள்ளே நுழைந்த மார்க்கம் இஸ்லாம். அதனை முழுமையாக பின்பற்றவே முயற்சிக்கின்றேன். அது இப்படி செய்தாதீர்கள் என்று கூறினால் அதனை தவிர்த்துகொள்கின்றேன். செய்யுங்கள் என்று கூறினால் செய்கின்றேன். As Simple as that...

  வஸ்ஸலாம்...

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத் அ

  ReplyDelete
 16. எண்ணங்களில், ரசனைகளில், விருப்பு வெறுப்புகளில் பலதூர இடைவெளி இருந்தும் இத்தனையாண்டு காலங்கள் கைகோர்த்தே பயணித்தது நம் புரிதலால் மட்டுமே என்ற போதும் பலமுறை அஃது புரியாத புதிர்தான்!
  (எனக்குபிடித்தவரிகள்.)
  சுவாரசியமா படிச்சுண்டே வரும்போது இதெல்லாம் கற்பனையில்தான் சாத்தியம் என்று சொல்லிட்டியே.

  ReplyDelete
 17. "அம்மா...அம்மா.... எந்திரி! எனக்கு காலேஜ்க்கு லேட் ஆய்டுச்சு!"-மகன் எழுப்புகிறான். /////////

  அடச்சே, இம்புட்டு நேரமும் சொன்னது கனவா? நா ஏதோ நிஜமான ஃபிரெண்டு பத்தி சொல்றீங்கன்னு நெனைச்சேன்! நல்லா குடுத்துட்டீங்க பல்பு! இருந்தாலும் பதிவு சூப்பரா இருக்கு!

  பட், நீங்க சொல்றமாதிரி நண்பனை, இந்த உலகத்துலேயே கண்டுபுடிக்க முடியாது!


  அடடா... நல்ல நண்பன் குறையில்லாத நண்பன் என்பது கனவிலும் கற்பனையிலும் மட்டுமே தான் சாத்தியம் போல்...

  நீங்க கடைசியா சொன்னதுதான் சரி!

  ReplyDelete
 18. அட கொடுமையே,அத்தனையும் கனவா?... நல்ல நட்ப பத்தி அழகா சொல்லிட்டு, தன் நட்ப அடுத்த தலைமுறைக்கும் எடுத்து சொன்றிருங்காங்கன்னு உள்ளுக்குள்ள பெறுமை பட்டுகிட்டே படிச்சா, கடைசில காத்து போன பலூன் மாதிரி புஸ்ஸ்ன்னு ஆயிடுச்சு சகோ...ஆனாலும் எதையும் எதிர்பார்க்க அற்புத சக்தி உள்ள உறவுனா அது நட்பு மட்டும் தான்...

  ReplyDelete
 19. @இந்திரா

  //நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது...

  //அடடா... நல்ல நண்பன் குறையில்லாத நண்பன் என்பது கனவிலும் கற்பனையிலும் மட்டுமே தான் சாத்தியம் போல்...
  //

  பயணத்தை சட்டென நிறுத்தியதுபோல இந்த வரி..
  யதார்த்தமான வரிகள் தான்.
  நல்லதொரு பதிவு..//

  ஹா...ஹா...ஹா...

  அதான் நிதர்சனம் இந்திரா! :-) பேசாம அந்த வரியை மட்டும் நீக்கிட்டு வாசிங்கோ.. சரியாகிடும் !

  ReplyDelete
 20. @கே.ஆர். விஜயன்

  //ஒரு அருமையான நட்பை அதன் சுகத்தை அனுபவித்துக்கொண்டே வந்தேன் கடைசி வரி வரை ஆனால் அது கற்பனை என்று தெரிந்ததால் மனம் வருந்தியது இப்படி ஒரு நட்பு இருப்பது எவ்வளவு அற்புதம்......//
  இருந்தால் சந்தோஷமாக தான் இருக்கும்! ஆனால் சாத்தியம் இல்லை என்று தான் நினைக்கிறேன் :-)

  //நட்பு எனும் வரம்புக்குள் இதை நிறுத்துவது கொஞ்சம் கடினம் தான் என்பது அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.//
  ஆம் நிச்சயமாக! பக்குவப்பட்ட மனம் இருந்தால் மட்டுமே சாத்தியம். ஒரு நண்பரிடம் கேட்ட போது "உன்னை தோழி என்ற வார்த்தைக்குள் சுருக்க முடியாது! நீ என் தாய்ப்போல் என்றார்:-)" தெளிந்த மனநிலை இருந்தால் மட்டுமே எல்லாம் சாத்தியம்!

  //ஒரு உன்னதமான நட்பை இதைவிட சிறப்பாக எப்படி எழுதிவிட முடியும்??????????//
  மிக்க நன்றி விஜி! :-)

  ReplyDelete
 21. @ஸ்டார்ஜன் அண்ணா

  //super super..//

  நன்றி அண்ணா

  ReplyDelete
 22. அழகான கதை..
  "நல்ல நண்பன் குறையில்லாத நண்பன் என்பது கனவிலும் கற்பனையிலும் மட்டுமே தான் சாத்தியம் போல்"..
  இது உண்மை தான்.. ஆனாலும்
  இன்னும் நல்ல நட்பு புரிதலுடன் கூடிய உறவுகளில் சாத்தியமாகவே உள்ளது..

  ReplyDelete
 23. @ஜாப்பர் கான்

  //Wow......... Super.........keep it up!//

  தேங்க்ஸ் தம்பி

  ReplyDelete
 24. @விஜி

  //சூப்பர்............சூப்பர்..............சூப்பர்...............சூப்பர்.......................சூப்பர்///

  அவ்வ்வ்வ்வ்வ்

  ஒத்துக்குறேன்,.. ஏதோ சொதப்பிட்டேன்! அதுக்காக இப்படிய்யெல்லாம் தாக்க்குதல் நடத்தப்படாது :-)

  ReplyDelete
 25. @ஐடியா

  //எளிதாய் அமைந்தது அந்த சந்திப்பு. இன்றும் மறக்கமுடியவில்லை!ஒரே பள்ளி, ஒரே காலனி என்பதால் சிரமப்படாமல் நம் நட்பும் கைகூடியது.//////

  ஆமா, காலனின்னா செருப்பு தானே?///

  சீ சீ

  பருப்பு!

  ReplyDelete
 26. @ஐடியா

  //எண்ணங்களில், ரசனைகளில், விருப்பு வெறுப்புகளில் பலதூர இடைவெளி இருந்தும்.....//////

  பல தூரம்னா? எத்தனை கிலோமீட்டர் இருக்கும்?//

  குட் கொஸ்டீன்... அது இருக்குமே.... வானத்துக்கும் பூமிக்கும் உள்ள தூரம் :-)

  ReplyDelete
 27. @ஐடியா

  //என் ஒருவரி சொல்லை வைத்து நான் நினைத்ததையும் நினைக்க போவதையும் சொல்லிவிடும் என் மனசாட்சியாய் நீ! ///////

  ஏங்க ஆமினா, உங்க ஃபிரெண்டு என்ன ஜோதிடரா?//

  இல்ல கன்டாக்டரு!

  ReplyDelete
 28. @ஐடியா

  //ஹி ஹி ஹி ஹி சுத்த கிறுக்கனா இருப்பான் போலிருக்கு! அவ்வ்வ்வ்வ்வ்!//

  இருங்க இருங்க... இப்பவே ஆள் கூடிட்டு வரேன்!!!!

  //( ஆமா இது வெறும் கற்பனைப் பதிவு தானே, அந்த தைரியத்துலதான் உங்க ஃபிரெண்டை கிறுக்கன்னு சொன்னேன்! இல்ல, நிஜமான நண்பன் பத்தின பதிவா? ஒண்ணுமே புரியலையே? )//

  யோ... அதான் லேபிள்லையே போட்டுட்டேன்ல? கற்பன தான்! ஹி...ஹி...ஹி...

  ReplyDelete
 29. @ஐடியா
  //பேசி தீர்க்க முடியாத பிரச்சனை உலகில் இல்லை என நீ அடிக்கடி சொல்வதன் அர்த்தம் அன்றுதான் தெரிந்தது! மனதிலேயே பூட்டியிருந்தால் குற்ற உணர்ச்சியில் இன்றும் சாகாமல் சாகும் வித்தையை இருவரும் கண்டிருப்போம்! /////////

  அது எப்புடி சாத்தியமாச்சுன்னு கொஞ்சம் எலாபரேட்டா சொல்லுங்க! //
  என்னது எல புரோட்டாவா? புதுவிதமான சாப்பாடா இருக்கே! ட்ரை பண்றேன்!

  //ஏன்னா இன்னிக்கு நிறைய ஃபிரெண்ட்ஸ்ங்க இப்புடித்தான் தடுமாறிக்கிட்டு கெடக்குறாங்க!//
  ஹி...ஹ்...ஹி... அதெல்லாம் பப்ளிக்கா சொல்ல மாட்டேன். முன்பணமா 2000 ரூபா கொடுத்தா மட்டும்தான் சொல்லுவேன் ஹி..ஹி..ஹி..

  இருவரில் ஒருவருக்காவது பக்குவமான மனநிலை இருந்தால் கண்ணியமான நட்பு ரொம்பவே சாத்தியம்! :-)

  ReplyDelete
 30. @ஐடியா
  //ரொம்ப வில்லங்கம் புடிச்ச ஆளா இருப்பாரு போல இருக்கு!//

  ஹி..ஹி..ஹி..
  செம வில்லங்கம் தான் :-)
  பொறாமையில் வெந்து சாகக்கூடியவன்! ஹி..ஹி..ஹி...

  ReplyDelete
 31. @ஐடியா
  //இதுதான் க்ளைமேக்ஸே,சினிமாவுலகூட நிறைய ஃபிரெண்ட்ஸ் கடைசியில லவ்பண்ணி, கல்யாணம் பண்ற மாதிரிதான் காட்டுவாய்ங்க! ஆனா, இது வித்தியாசமா இருக்கு!//

  ஹி..ஹி..ஹி..

  நன்றிங்கோ!

  ஓசியா படம் பாக்கப்படாது! சினிமா க்ளைமேக்ஸ் வரைக்கும் பாத்ததுக்கு 200 ரூபா வெட்டுங்க!

  ReplyDelete
 32. @சகோ ஆஷிக்
  வ அலைக்கும் சலாம் வரஹ்..

  அழகான கருத்துக்கு நன்றி சகோ!

  நிச்சயமாக வரையறைகள் இருப்பதால் ஆழமான நட்பு சாத்தியம் இல்லை என்பது சுத்த பேத்தல் தனம்! வரையறையில் தான் இன்னும் கண்ணியம் கூடும். ஆழம் உண்டாகும்! நட்பின் புனிதம் தெரியும்.

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 33. @லெட்சுமிமாமி

  //சுவாரசியமா படிச்சுண்டே வரும்போது இதெல்லாம் கற்பனையில்தான் சாத்தியம் என்று சொல்லிட்டியே.//

  ஹி..ஹி...ஹி..
  நீங்களே சொல்லுங்க மாமி! இதெல்லாம் கதையில் படிக்கமட்டும் தானே நல்லா இருக்கும் :-)

  ReplyDelete
 34. @ஐடியா
  //"அம்மா...அம்மா.... எந்திரி! எனக்கு காலேஜ்க்கு லேட் ஆய்டுச்சு!"-மகன் எழுப்புகிறான். /////////

  அடச்சே, இம்புட்டு நேரமும் சொன்னது கனவா? நா ஏதோ நிஜமான ஃபிரெண்டு பத்தி சொல்றீங்கன்னு நெனைச்சேன்! நல்லா குடுத்துட்டீங்க பல்பு! //

  அடடே... ஐடியாமணிக்கே பல்பு கொடுத்துட்டேனா? ஸ்வீட் எடு கொண்டாடு!

  //இருந்தாலும் பதிவு சூப்பரா இருக்கு!//

  ஹே...ஹே... நன்றிங்கோ

  //பட், நீங்க சொல்றமாதிரி நண்பனை, இந்த உலகத்துலேயே கண்டுபுடிக்க முடியாது!//

  நிச்சயமாக கண்டுபிடிக்கலாம்! ஆனால் நீடிப்பது ரொம்ப கம்மி! சரியான பாதை நோக்கி பயணிக்க கூடிய பக்குவம் இருவருக்கும் இருந்தால் மட்டுமே சாத்தியம்!


  //அடடா... நல்ல நண்பன் குறையில்லாத நண்பன் என்பது கனவிலும் கற்பனையிலும் மட்டுமே தான் சாத்தியம் போல்...

  நீங்க கடைசியா சொன்னதுதான் சரி!//

  மிக்க நன்றி ஐடியா

  ReplyDelete
 35. @ரேவா
  //அட கொடுமையே,அத்தனையும் கனவா?... நல்ல நட்ப பத்தி அழகா சொல்லிட்டு, தன் நட்ப அடுத்த தலைமுறைக்கும் எடுத்து சொன்றிருங்காங்கன்னு உள்ளுக்குள்ள பெறுமை பட்டுகிட்டே படிச்சா, கடைசில காத்து போன பலூன் மாதிரி புஸ்ஸ்ன்னு ஆயிடுச்சு சகோ...//

  அவ்வ்வ்வ்வ்
  என்ன செய்ய! இதெல்லாம் கற்பனையில் மட்டுமே முடிந்தது :'(

  //ஆனாலும் எதையும் எதிர்பார்க்க அற்புத சக்தி உள்ள உறவுனா அது நட்பு மட்டும் தான்...//
  நிச்சயமாக அது தான் உண்மை ரேவா. ரேவாவுக்கு வசந்த் போல் எல்லாருக்கும் கிடைத்துவிடுமா என்ன :-)மிக்க நன்றி உங்கள் வருகைக்கு

  ReplyDelete
 36. @மும்தாஜ்
  //அழகான கதை..
  "நல்ல நண்பன் குறையில்லாத நண்பன் என்பது கனவிலும் கற்பனையிலும் மட்டுமே தான் சாத்தியம் போல்"..
  இது உண்மை தான்.. ஆனாலும்
  இன்னும் நல்ல நட்பு புரிதலுடன் கூடிய உறவுகளில் சாத்தியமாகவே உள்ளது..//

  வாங்க மும்தாஜ். ரொம்ப சரி!
  நல்ல புரிதலுடன், நல்ல மனதும் சரியான வரைமுறையும், சரியான பாதை நோக்கியதிசையும் இருந்தால் எல்லாமே சாத்தியம் தான் :-)

  எல்லாத்துக்கும் மேல தன் மனைவிக்கு ஆண் நண்பன் இருப்பதை ஒலக மகா குற்றம் போல் நினைக்காத கணவனும், தன் கணவனுக்கு ஒரு நம்பிக்கையான தோழி இருப்பது தன் வாழ்க்கையே குடிமூழ்கிவிட்டதாக நினைக்காத மனைவியும் இருந்தால் எல்லாமே சாத்தியம் தான் :-)

  ReplyDelete
 37. /* அண்மையில் படித்த மிகச்சிறந்த பதிவு. */

  என்ன சிவா?? ஏதும் உள்குத்தா????

  ReplyDelete
 38. @சிராஜ்

  ///* அண்மையில் படித்த மிகச்சிறந்த பதிவு. */

  என்ன சிவா?? ஏதும் உள்குத்தா????//

  அதெல்லாம் எந்த உள்குத்தும் இல்ல! பொறாம பொறாம!

  ReplyDelete
 39. சலாம் சகோ ஆமினா,

  அழகான பதிவு. உங்க கிட்ட இருந்து இவ்வளவு தூரம் நான் எதிர்பார்க்கல... ஹி..ஹி..ஹி..

  ReplyDelete
 40. அழகான நட்பின் அற்புதமான நிகழ்வுகள்!நன்றாக எழுதியிருக்கீங்க!

  இது சாத்தியமான நட்புதான்,
  எனக்கு தெரிந்து சில நண்பர்கள் இப்படி இருக்கிறார்கள்!

  ReplyDelete
 41. @சிராஜ்

  //சலாம் சகோ ஆமினா,

  அழகான பதிவு. உங்க கிட்ட இருந்து இவ்வளவு தூரம் நான் எதிர்பார்க்கல... ஹி..ஹி..ஹி..//


  வ அலைக்கும் சலாம் வரஹ்...

  அமெரிக்காதூரம் இருக்குமா :-)

  நன்றி சகோ

  ReplyDelete
 42. @நம்பிக்கை பாண்டியன்

  //அழகான நட்பின் அற்புதமான நிகழ்வுகள்!நன்றாக எழுதியிருக்கீங்க!

  இது சாத்தியமான நட்புதான்,
  எனக்கு தெரிந்து சில நண்பர்கள் இப்படி இருக்கிறார்கள்!//

  ரொம்ப ஆச்சர்யமும் அபூர்வமுமான விஷயம் தான். அந்த நண்பர்களுக்கு என் வாழ்த்துகள்
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 43. இரத்த சம்மந்தமே இல்லாமல் நட்பினால் இணைந்த நம் உறவு என்னும் அற்புத பொக்கிஷம் இதோ அடுத்த தலைமுறையும் எடுத்துக்கொண்டது... நம் குழந்தைகளும் நண்பர்களாக!

  சிறப்பானதொரு பதிவு.

  ReplyDelete
 44. @மதுமதி

  நன்றிங்க

  ReplyDelete
 45. அடடே... வாங்க ப்ரதர் ஜெயதேவ்!

  பார்த்து ரொம்ப நாள் ஆச்சு

  வாழ்த்துக்கு நன்றிங்க. உங்க மனைவிக்கும் என் வாழ்த்தை மறக்காம சொல்லிடுங்க சார்
  (அவங்களையாவது என் ப்ளாக்கை படிக்க விடுவீங்க தானே ஹா...ஹா...ஹா...)

  ReplyDelete
 46. \\அவங்களையாவது என் ப்ளாக்கை படிக்க விடுவீங்க தானே\\ ஹா...ஹா....ஹா.... அவளுக்கு பிளக் பற்றி அவ்வளவாகத் தெரியாது, நான் ஏதாவது செய்துகொண்டிருக்கும் போது சில சமயம் வந்து படிப்பாள். சமையல், வீட்டுக் குறிப்புகள், எளிய மருத்துவம் போன்ற விஷயங்கள் பிடித்தமானவை. நான் உங்களுக்கு நிரூபன் பிளக்கில் பதிலெழுதும் போது என் மேல் சரியான கடுப்பாகிப் போனாள், உனக்கு அம்மா, தங்கை, மனைவி, மகள் என்று வைத்துக் கொண்டு மற்றவர்களை இளக்காரமாக எழுதுகிறாயா என்று சண்டைக்கே வந்து விட்டாள். ஹா...ஹா....ஹா.... Anyway, உங்க பிளாக் பத்தி சொல்லி படிக்கச் சொல்றேன்.

  ReplyDelete
 47. அக்கா இது கற்பனை பதிவுனு சொல்லிட்டிங்க நெசமாவா நல்லாத்தான் யோசிக்கிறீங்க

  ReplyDelete
 48. அன்பு சகோதரி
  கற்பனையில் மட்டுமே சாத்தியமான ஒரு நட்பு
  என்பது மறுக்கமுடியாத உண்மை.....

  முதலில் ஒரு ஆணும் பெண்ணும் நட்புடன் பழகுவதற்கான
  சாத்தியக் கூறுகள் இருந்தும், பல்வேறு காரணங்களுக்காய்
  அவைகளை தொடர முடியாமை ஆகிவிடுகிறது.....

  அதையும் தாண்டி
  சில நட்பு மலர்கள் பூத்துக்கொண்டு தான் இருக்கின்றன...

  ReplyDelete
 49. @ஜெயதேவ்

  ஓ அப்படியா... அப்பன்னா என் சமையல் ப்ளாக் படிக்க சொல்லுங்க (வெளம்பரம் ஹி..ஹி..ஹி..)

  //நான் உங்களுக்கு நிரூபன் பிளக்கில் பதிலெழுதும் போது என் மேல் சரியான கடுப்பாகிப் போனாள், //

  ஹா..ஹா...ஹா...
  அதில் என்ன இருக்கு! விவாதம்னா அப்படிதானே மண்டை உடையும் :-)

  ஓக்கே சகோ
  உங்ககிட்ட பேசியதில் ரொம்ப மகிழ்ச்சி

  நேரம் கிடைக்கும் போது ப்ளாக்கை எட்டிபார்த்துட்டு போங்க

  நன்றி

  ReplyDelete
 50. @ராஜ்

  //அக்கா இது கற்பனை பதிவுனு சொல்லிட்டிங்க நெசமாவா நல்லாத்தான் யோசிக்கிறீங்க//

  நெசம்மாதேன் அவ்வ்வ்வ்வ்

  நம்புங்கைய்யா... எனக்கும் ஓரளவுக்கு கற்பன பண்ண தெரியும்...அழுதுடுவேன் :-)

  ReplyDelete
 51. @மகேந்திரன் அண்ணா
  //அன்பு சகோதரி
  கற்பனையில் மட்டுமே சாத்தியமான ஒரு நட்பு
  என்பது மறுக்கமுடியாத உண்மை.....

  முதலில் ஒரு ஆணும் பெண்ணும் நட்புடன் பழகுவதற்கான
  சாத்தியக் கூறுகள் இருந்தும், பல்வேறு காரணங்களுக்காய்
  அவைகளை தொடர முடியாமை ஆகிவிடுகிறது.....
  //

  நிச்சயமாக அன்ணா


  //அதையும் தாண்டி
  சில நட்பு மலர்கள் பூத்துக்கொண்டு தான் இருக்கின்றன...//

  சந்தோஷமான விஷயம். ஆனால் கவனமாக செயல்படுவதும் ரொம்ப முக்கியம். சில நாட்களுக்கு முன் தோழியாக பழகிய ஒரு பெண்ணை கற்பழித்த 5 நண்பர்கள் என்ற செய்தியை பாக்கும் போது எதை நோக்கி போகிறது இளைய சமூகம் என்றே எண்ணத்தோன்றுகிறது! :'(

  வருகைக்கு நன்றி அண்ணா

  ReplyDelete
 52. நான் என்னத்த சொல்ல... மிக அருமையாக உள்ளது...

  ReplyDelete
 53. @சிட்டுக்குருவி

  என்னத்தையாவது சொல்லுங்க :-)

  மிக்க நன்றி இம்ரான்

  ReplyDelete
 54. நல்ல நண்பன் குறையில்லாத நண்பன் என்பது கனவிலும் கற்பனையிலும் மட்டுமே தான் சாத்தியம் போல்//

  கடைசியில் மலை உச்சியில் இருந்து விழுந்தது போல் இருந்தது...
  சிலருக்கு நிஜ வாழ்விலும் அந்த கொடுப்பினை உள்ளது சகோதரி...

  மகளிர் தின நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
 55. ஆமினா நீங்க சொன்னது போலவே எனக்கு அமைந்த கணவரும் , நண்பனும்...
  இன்று வரை என்னுடைய நட்பு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது... என்னுடைய கணவரும் அவனுக்கு நண்பராகி விட்டார் ..
  அதற்கு முதலில் நான் கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்..
  "எல்லாத்துக்கும் மேல தன் மனைவிக்கு ஆண் நண்பன் இருப்பதை ஒலக மகா குற்றம் போல் நினைக்காத கணவனும்,"- என்னுடைய கணவரின் புரிதலினாலும், என்னுடைய நண்பனின்(அருண் ) நல்ல மனதினாலும் என்னுடைய நட்பு சாத்தியமானது... இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது....

  ReplyDelete
 56. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.

  ஆண் பெண் நட்பு குறித்து எல்லா காலங்களிலும் சர்ச்சை இருந்து கொண்டு தான் இருக்கிறது.

  ஆனால் சரியான புரிதலோடு தன் வரைமுறை தெரிந்து கண்ணியத்தோடு பழகும் போது ஆண் பெண் நட்பு சாத்தியமே.ஆனால் வரும் துணை இதை சரியாக புரிந்து கொண்டால் தான் இந்த நட்பு தொடர்வது கூடும்.

  என் கணவரின் அழகான நட்பு போல.நான் வியக்கும் நட்பு அவர்களுடையது.ஆனால் ஆணுடைய பெண்ணின் நட்பை இயல்பாக ஏற்றுக் கொள்வது போல பெண்ணுடைய ஆணின் நட்பை பெரும்பாலும் இங்கு யாரும் ஏற்றுக் கொள்வதில்லை என்பது ஒரு கசப்பான உண்மை.

  அழகான பகிர்வுக்கு நன்றி ஆமினா.

  ReplyDelete
 57. ஆமினா வாழ்த்துக்கள்! உங்க பதிவுகளிலேயே என்னை மிகவும் கவர்ந்தது இந்தப்பதிவுதான். சொல்ல வந்த கருத்துக்கள், எழுத்துநடை இரண்டுமே ரொம்ப நல்லா இருக்கு.

  ReplyDelete
 58. நட்பா ... அது எங்க விற்கிறது ...???

  ஆகா மொத்தம் பதிவு மொக்கையோ மொக்கை....

  பதிவு ஒன்னுமே புரியலை ..??

  என்னாதையாவது எழுதுறது ஒரு விஷயம் கூட சரியா இல்லை ..

  ReplyDelete
 59. @ரெவெரி
  //நல்ல நண்பன் குறையில்லாத நண்பன் என்பது கனவிலும் கற்பனையிலும் மட்டுமே தான் சாத்தியம் போல்//

  கடைசியில் மலை உச்சியில் இருந்து விழுந்தது போல் இருந்தது...//

  ;-)
  //சிலருக்கு நிஜ வாழ்விலும் அந்த கொடுப்பினை உள்ளது சகோதரி...//
  அப்படிப்பட்டவர்களை நினைத்து பெருமையே சகோ :-) நிச்சயம் ரெவெரி மூலமாக பலருக்கும் நல்ல நட்பு கிடைத்திருக்கும் என்பது எனக்கு தெரியும் :-)

  //மகளிர் தின நல்வாழ்த்துகள்...//
  நன்றி ரெவெரி

  ReplyDelete
 60. @ஆயிஷா பேகம்
  வ அலைக்கும் சலாம் வரஹ்...

  சிலர் வழிகேட்டில் தவறு போவதால் சர்ச்சைகள் எழுவது சாதாரணமான விஷயம் தான். நீங்கள் சொல்வது போல் சரியான புரிதலும் கண்ணியம் காக்கும் வரைமுறையும் இருப்பின் ஆண்-பெண் நட்பு சாத்தியமே!

  //கசப்பான உண்மை.//

  ம்ம் :'(

  மிக்க நன்றி ஆயிஷா :-)

  ReplyDelete
 61. @அம்பலத்தார் அண்ணா
  //ஆமினா வாழ்த்துக்கள்! உங்க பதிவுகளிலேயே என்னை மிகவும் கவர்ந்தது இந்தப்பதிவுதான். சொல்ல வந்த கருத்துக்கள், எழுத்துநடை இரண்டுமே ரொம்ப நல்லா இருக்கு.//

  டெம்ளேட் கமென்ட் போட்டப்ப நாற்றில் வந்து கத்தலாம்னு நெனச்சேன் ஹி..ஹி..ஹி.. தப்பிச்சீங்க :-)

  மிக்க நன்றி அண்ணா! உங்க பாராட்டு எனக்கு ரொம்ப ஊக்கம் கொடுக்குது :-)

  ReplyDelete
 62. @சகோ.வேஸ்ட்

  //நட்பா ... அது எங்க விற்கிறது ...???//

  உம்மை போல் அரவேக்காடுகளுக்கெல்லாம் கொடுக்கமாட்டாய்ங்க! சோ டோன்ட் வொர்ரி! ஆனாலும் பெங்க்ளூர்ல இருந்துக்கிட்டே நட்பு பத்தி தெரியலைன்னு சொல்றீங்கன்னா... ஹி..ஹி..ஹி.. வேணாம் விடுங்க!

  //ஆகா மொத்தம் பதிவு மொக்கையோ மொக்கை....//
  சரிங்க மொக்கைச்சாமி!

  //பதிவு ஒன்னுமே புரியலை ..??//

  மண்டைல எதாவது இருந்தா புரிஞ்சுருக்கும்! அங்கேதான் ஒன்னுமே இல்லையே?

  //என்னாதையாவது எழுதுறது ஒரு விஷயம் கூட சரியா இல்லை ..//
  ஹே..ஹே... அத இந்த ஒலக அறிவுஜீவி சொல்றாராக்கும்!!! காலக்கொடுமை!

  இன்னும் நீர் போகலையாய்யா??? ஸ்ஸ்ஸப்பா... இன்னும் ஒருவாரத்துக்கு நல்லா பொழுது போகும்னு நெனைக்கிறேன்!

  ReplyDelete
 63. ஆமி எல்கே பக்கம்போலியா உனக்கு விருது கொடுத்திருக்காங்க போல இருக்கே?

  ReplyDelete
 64. font padikka siramamaai ullathu thozhar

  ReplyDelete
 65. நல்ல நண்பன் சாத்தியமே, ஆனால் அது கடினம் என்பது மட்டும் உண்மை

  ReplyDelete
 66. @ஆமினா

  //டெம்ளேட் கமென்ட் போட்டப்ப நாற்றில் வந்து கத்தலாம்னு நெனச்சேன் ஹி..ஹி..ஹி.. தப்பிச்சீங்க :-)//
  அப்பாடா, நல்லகாலம் தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போய்விட்டது.

  ReplyDelete
 67. இப்பிடியெல்லாம் ப்ரண்ட்ஸ் இருப்பாங்களா என நினைச்சிட்டே வந்தேன். கடைசில புஸ்வானம் தான்..

  ReplyDelete
 68. @லெட்சுமி மாமி
  //ஆமி எல்கே பக்கம்போலியா உனக்கு விருது கொடுத்திருக்காங்க போல இருக்கே?//

  போனேனே மாமி! விருதுக்கு நன்றியும் சொல்லியிருந்தேன். படம் போடாம விட்டிருந்ததால் இணைக்க முடியவில்லை இப்பதிவில்! அடுத்த பதிவுக்கு படத்தை இணைத்துவிடுகிறேன்
  நன்றி மாமி

  ReplyDelete
 69. @சூர்யஜீவா
  //font padikka siramamaai ullathu thozhar//
  ஓ அப்படியா... மாற்ற முயற்சி எடுக்கிறேன் சகோ. நன்றி சுட்டிகாட்டியமைக்கு!

  @சூர்ய ஜீவா
  //நல்ல நண்பன் சாத்தியமே, ஆனால் அது கடினம் என்பது மட்டும் உண்மை//
  நிச்சயமா சகோ. ஆனால் பாருங்க... பதிவில் சொன்னதெல்லாம் சின்ன வயசுல இருந்து ஒவ்வொரு பிரன்ட் மூலமாக கிடைத்த அனுபவங்களின் தொகுப்பு. மொத்தமாய் இப்படி ஒருவன் கிடைப்பது என்பது கற்பனையான விஷயம் தான் :-)
  வருகைக்கு நன்றி சூர்யஜீவா

  ReplyDelete
 70. @அம்பலத்தார் அண்ணா
  //@ஆமினா

  //டெம்ளேட் கமென்ட் போட்டப்ப நாற்றில் வந்து கத்தலாம்னு நெனச்சேன் ஹி..ஹி..ஹி.. தப்பிச்சீங்க :-)//
  அப்பாடா, நல்லகாலம் தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போய்விட்டது.//

  ஹா,,,ஹா...ஹா.. எனக்கும் தான்! பசங்களுக்கு நம்ம மேல கொஞ்சம் பயம் போன மாதிரி தெரியுது... ஒரு பெரிய்ய ப்ரச்சனையா இந்த பிரச்சனையை கொண்டு வரலாம்னு நெனச்சேன்.. வட போச்சே :-)

  ReplyDelete
 71. @கன வரோ
  //இப்பிடியெல்லாம் ப்ரண்ட்ஸ் இருப்பாங்களா என நினைச்சிட்டே வந்தேன். கடைசில புஸ்வானம் தான்..//

  இருங்க்காங்க தான்! ஆனா கஷ்ட்டம் ஹி..ஹி...ஹி..

  ReplyDelete
 72. ஆமினா அசத்தல் பதிவு.நட்பொருக்கொரு பதிவு அநேகமாக வருவதில்லை இப்படி.வாசித்துக்கொண்டிருக்கும்போது...அருமையான நட்பு,சமூகம் விட்டு வைத்திருக்கிறதே,அட திருமணமானபிறகுமா....இப்படியே ஆனால் உண்மையாய் உங்கள் நட்பு என்றே போற்றிக்கொண்டு வாசித்து முடிக்கையில் ஏமாற்றிவிட்டீர்கள்.இதுதான் எங்கள் சமூகத்தின் உண்மை முகம்.ஐரோப்பாவில் பார்த்து என்னை நானே வெட்கப்பட்டிருக்கிறேன்.பாராட்டுக்கள் பதிவுக்கு ஆமினா !

  ReplyDelete
 73. பெங்களூர்ல இருக்கேனா ? என்னா கண்டுபிடிப்பு ..

  அமெரிக்கன் F.B.I ல இருக்க வேண்டியவுக நீங்க .. தெரியா

  தனமா எங்கயோ இருக்கீங்க ??


  //மண்டைல எதாவது இருந்தா புரிஞ்சுருக்கும்! அங்கேதான்
  ஒன்னுமே இல்லையே?//

  //அத இந்த ஒலக அறிவுஜீவி சொல்றாராக்கும்!!! //

  முடிவா என்னா சொல்றீங்க தெரியல ... போன மாயா பதிவு சொன்ன மாதிரி செத்துட்ட ஆனால் இன்னும் சகல ..அது மாதிரி இருக்கு [வரும் ஆனால் வராது ] ...

  முதல்ல அறிவு இல்லைன்னு சொல்றீக .. இரண்டாவது அறிவு ஜீவியா இருக்குன்னு சொல்றீக ...

  ஏன் இந்த முரண்பாடு ... இப்பதான் உங்க கொள்கையே புரியுது ... நல்ல மருத்துவரை அணுகவும்... காலத்த இப்படியே போக்குறது ...
  அறிவு இல்லாம ரொம்ப கச்டபடுறீங்க போல .. WHAT A PITY...!!!


  //ஒருவாரத்துக்கு நல்லா பொழுது போகும்னு நெனைக்கிறேன்!//

  பிள்ளை குட்டிய மேய்கிறது இல்லை போல .. அதான் பொழுது போகலையா ??!!

  நட்பு நா என்னான்னு தெரியும் .. நீங்க சொல்ற நட்பு தெரியாது பா ...

  ReplyDelete
 74. ராசா Anonymous பதிவு மொக்கை படு மொக்கை எப்படி வேண்டுமானலும் சொல்லுங்கோ ஆனால் சொந்த பெயரோடு வந்து சொன்ன என்ன? ஆபீஸர்..

  யார் ஒங்கள தூக்கி போட்டு மிதிக்க போற ஹலோ எக்ஸ் குஸ்மீ உங்களைத்தான்.

  //பெங்களூர்ல இருக்கேனா ? என்னா கண்டுபிடிப்பு ..

  அமெரிக்கன் F.B.I ல இருக்க வேண்டியவுக நீங்க .. தெரியா

  தனமா எங்கயோ இருக்கீங்க ??//

  ஆமா இத கண்டுபிடிக்கிறது பெரிய ராக்கேட் சைன்ஸு Real-time view வில் பார்த்த தெரியக்கூடிய சாதரண விஷயம் இதுக்கு அமெரிக்காவில் இருக்கனுமாம்

  //பிள்ளை குட்டிய மேய்கிறது இல்லை போல .. அதான் பொழுது போகலையா ??!!//

  ராசா நீங்க பன்னிக்குட்டி மந்தை வச்சு இருக்கிங்கேன்னு நேனைக்கிறேன் அதான் வாய் வழுக்கி புள்ளைகளையும் மேய்க்கச் சொல்லி உங்க தொழில் புத்தி சொல்லுது உங்க தொழில் செழிக்க வாழ்த்துக்கள்

  அண்ணே: சொல்லித்தரேன் எங்கே சொல்லு பிள்ளைகளை வளர்க்கனும்
  அனானி: மேய்க்கனும்
  அண்ணே: நீ திருந்த மாட்டே

  ReplyDelete
 75. @ஹேமா

  //ஆமினா அசத்தல் பதிவு.நட்பொருக்கொரு பதிவு அநேகமாக வருவதில்லை இப்படி.வாசித்துக்கொண்டிருக்கும்போது...//

  அவ்வ்வ்வ்வ் ;-) சொதப்பிட்டேன்னு தெரியும்! ஆனா வேற வழி இல்ல ஹி..ஹி..ஹி..

  //அருமையான நட்பு,சமூகம் விட்டு வைத்திருக்கிறதே,அட திருமணமானபிறகுமா....இப்படியே ஆனால் உண்மையாய் உங்கள் நட்பு என்றே போற்றிக்கொண்டு வாசித்து முடிக்கையில் ஏமாற்றிவிட்டீர்கள்.//

  மன்னிச்சூ மன்னிச்சூ :-)

  //இதுதான் எங்கள் சமூகத்தின் உண்மை முகம்//
  சரியான பாதையை விட்டு தவறும் மனபக்குவத்தில் தான் பலரின் நிலை இருக்கு! :'(

  //ஐரோப்பாவில் பார்த்து என்னை நானே வெட்கப்பட்டிருக்கிறேன்.பாராட்டுக்கள் பதிவுக்கு ஆமினா !//
  புரிந்தது ஹேமா
  மிக்க நன்றி

  ReplyDelete
 76. @சகோ வேஸ்ட்

  //பெங்களூர்ல இருக்கேனா ? என்னா கண்டுபிடிப்பு ..

  அமெரிக்கன் F.B.I ல இருக்க வேண்டியவுக நீங்க .. தெரியா

  தனமா எங்கயோ இருக்கீங்க ??//

  என்ன பண்றது... விதி இந்த மாதிரி கழுதைகளோடலாம் பேச வைக்குது!


  //மண்டைல எதாவது இருந்தா புரிஞ்சுருக்கும்! அங்கேதான்
  ஒன்னுமே இல்லையே?//

  //அத இந்த ஒலக அறிவுஜீவி சொல்றாராக்கும்!!! //

  முடிவா என்னா சொல்றீங்க தெரியல ... போன மாயா பதிவு சொன்ன மாதிரி செத்துட்ட ஆனால் இன்னும் சகல ..அது மாதிரி இருக்கு [வரும் ஆனால் வராது ] ...//

  ஆக்சுவலி உங்கள மாதிரி தெளீவான ஆளுங்களுக்கு மண்டைல மசாலா இல்லைன்னாலும் ஒலகறிவாளியா இருப்பானுவ! நீங்களும் அந்த லிஸ்டு ப்ரதர். நீங்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப தெளிவு, ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப சமத்து! டோன்ட் வொர்ரி!

  //முதல்ல அறிவு இல்லைன்னு சொல்றீக .. இரண்டாவது அறிவு ஜீவியா இருக்குன்னு சொல்றீக ...

  ஏன் இந்த முரண்பாடு ...//
  அது ஒன்னும்மில்லைங்க. நேத்து நைட் 1 மணிவரைக்கும் முழிச்சுருந்து ஒரு அரவேக்காடு வேறொரு பதிவுக்கு கமென்ட் போட்டுச்சு! அந்த லூசின் கடமையில் சருங்கி விழுந்ததுல இப்படி ஆய்டுச்சு! வேறொன்னும் இல்ல!

  // இப்பதான் உங்க கொள்கையே புரியுது ... நல்ல மருத்துவரை அணுகவும்... காலத்த இப்படியே போக்குறது //

  நேக்கு வேல வெட்டி இல்லைன்னு ஊருக்கே தெரியும். ஆனா இன்னைக்கு தான் என்னை விட மட்டமானவங்களாம் இருக்காய்ங்கன்னு! ஹைய்ய்ப்ப் ஹைய்யோ...

  //அறிவு இல்லாம ரொம்ப கச்டபடுறீங்க போல .. WHAT A PITY...!!!//

  ஆமா வேஸ்ட்டு! உங்ககிட்டதேன் கடன் வாங்கணும்னு இருக்கேன். என்ன சொல்றீங்க?


  //ஒருவாரத்துக்கு நல்லா பொழுது போகும்னு நெனைக்கிறேன்!//

  பிள்ளை குட்டிய மேய்கிறது இல்லை போல .. அதான் பொழுது போகலையா ??!!//

  யோ.. அதெல்லாம் உங்கம்மா பண்ற வேல! பழக்கதோசத்தில் இங்கேயும் வந்து சொல்லிக்கிட்டு! நீங்களாவது உங்க புள்ளைய வளக்க பாருங்க! இல்ல எங்கம்மா என்னை மேய்ச்ச மாதிரி தான் நானும் என் புள்ளைகுட்டிகள மேய்ப்பேன்னா... வாங்குற சம்பளத்துக்கு ஒரு வீடு வாங்குறத விட்டுட்டு ஒரு மாட்டுக்கொட்டகை கட்டிடுங்க! அதில் புல், புண்ணாக்குலாம் வாங்கி வச்சுக்கோங்க! what a family!!

  //நட்பு நா என்னான்னு தெரியும் .. நீங்க சொல்ற நட்பு தெரியாது பா ...//
  இன்னும் கண் டாக்குட்டர பாக்கலையா? அடப்பாவமே!! இன்னும் எத்தன காலத்துக்கு தான் தெரியல தெரியலன்னு சொல்ல போறீங்க? என்னமோ போங்க! கண்ணு தெரியாதவங்கள நெனச்சு வருத்தப்படுறத தவிர என்ன செய்ய முடியும்... ச்சூ ச்சூ ச்சூ... WHAT A PITY...!!! WHAT A PITY...!!!

  ReplyDelete
 77. ஹைதர் அலி பாய் கமெண்ட் முழுசா படிக்கல போல .. ஓகே இருந்தாலும் உங்களுக்கும் பதில் சொல்றேன் ...

  //பெங்களூர்ல இருக்கேனா ? என்னா கண்டுபிடிப்பு ..

  அமெரிக்கன் F.B.I ல இருக்க வேண்டியவுக நீங்க .. தெரியா

  தனமா எங்கயோ இருக்கீங்க ??//

  ஆமா இத கண்டுபிடிக்கிறது பெரிய ராக்கேட் சைன்ஸு Real-time view வில் பார்த்த தெரியக்கூடிய சாதரண விஷயம் இதுக்கு அமெரிக்காவில் இருக்கனுமாம்

  இதுக்கு நான் பதில் சொல்ல தேவை இல்லைன்னு நினைக்குறேன் ...எங்க ஆமினா அக்காவே உங்களுக்கு அவுக கமெண்ட் ல பதில் சொல்லிட்டாக..
  ரொம்ப வருத்தப்பட்டு சொல்றாகந பாதுகொங்களேன் ...

  அது என்னான்ன .. நீங்களே வாசிசுகொங்க பாய்

  //இன்னும் கண் டாக்குட்டர பாக்கலையா? அடப்பாவமே!! இன்னும் எத்தன காலத்துக்கு தான் தெரியல தெரியலன்னு சொல்ல போறீங்க? என்னமோ போங்க! கண்ணு தெரியாதவங்கள நெனச்சு வருத்தப்படுறத தவிர என்ன செய்ய முடியும்... ச்சூ ச்சூ ச்சூ... WHAT A PITY...!!! WHAT A PITY...!!!//

  ரொம்ப இறக்கபடுராக ..

  நான் பெங்களூர் இருக்கேன்னு சொல்லவேயில்லை .. அதுக்குல்லையும் இவர் ரொக்கெட் ல போயிட்டு பாத்துட்டு சொல்றாரு ... ஆமினா அக்கா சொன்ன மாதிரி கண் டாக்டர் போயி பாருங்க ..

  கைதர் க்கு என்ன ஆச்சுன்னு தெரியல வாய் வழுக்கு தாம் .. காக்கா வலிப்பு இருக்கும் நு நினைக்கிறன் ...

  என்னாதையோ சொல்ல வரீங்க ஆனால் தெரியல போல ..

  இருந்தாலும் வாழ்த்துக்கள் ... கண் செக் பண்ணுங்கோ ...

  ReplyDelete
 78. ஹைதர் அலி பாய் கமெண்ட் முழுசா படிக்கல போல .. ஓகே இருந்தாலும் உங்களுக்கும் பதில் சொல்றேன் ...

  //பெங்களூர்ல இருக்கேனா ? என்னா கண்டுபிடிப்பு ..

  அமெரிக்கன் F.B.I ல இருக்க வேண்டியவுக நீங்க .. தெரியா

  தனமா எங்கயோ இருக்கீங்க ??//

  ஆமா இத கண்டுபிடிக்கிறது பெரிய ராக்கேட் சைன்ஸு Real-time view வில் பார்த்த தெரியக்கூடிய சாதரண விஷயம் இதுக்கு அமெரிக்காவில் இருக்கனுமாம்

  இதுக்கு நான் பதில் சொல்ல தேவை இல்லைன்னு நினைக்குறேன் ...எங்க ஆமினா அக்காவே உங்களுக்கு அவுக கமெண்ட் ல பதில் சொல்லிட்டாக..
  ரொம்ப வருத்தப்பட்டு சொல்றாகந பாதுகொங்களேன் ...

  அது என்னான்ன .. நீங்களே வாசிசுகொங்க பாய்

  //இன்னும் கண் டாக்குட்டர பாக்கலையா? அடப்பாவமே!! இன்னும் எத்தன காலத்துக்கு தான் தெரியல தெரியலன்னு சொல்ல போறீங்க? என்னமோ போங்க! கண்ணு தெரியாதவங்கள நெனச்சு வருத்தப்படுறத தவிர என்ன செய்ய முடியும்... ச்சூ ச்சூ ச்சூ... WHAT A PITY...!!! WHAT A PITY...!!!//

  ரொம்ப இறக்கபடுராக ..

  நான் பெங்களூர் இருக்கேன்னு சொல்லவேயில்லை .. அதுக்குல்லையும் இவர் ரொக்கெட் ல போயிட்டு பாத்துட்டு சொல்றாரு ... ஆமினா அக்கா சொன்ன மாதிரி கண் டாக்டர் போயி பாருங்க ..

  கைதர் க்கு என்ன ஆச்சுன்னு தெரியல வாய் வழுக்கு தாம் .. காக்கா வலிப்பு இருக்கும் நு நினைக்கிறன் ...

  என்னாதையோ சொல்ல வரீங்க ஆனால் தெரியல போல ..

  இருந்தாலும் வாழ்த்துக்கள் ... கண் செக் பண்ணுங்கோ ... கூடவே கண்ணாடியும் செக் பண்ணுங்க ...

  ReplyDelete
 79. //என்ன பண்றது... விதி இந்த மாதிரி கழுதைகளோடலாம் பேச வைக்குது!//

  கழுதையா யாறாம்ம்ம்ம்ம் ?? ப்ளாக் ல மனுச்சனுங்க தான் வருவானுக...

  உங்க ப்ளாக் ல AUDIO FILE லே இல்ல, கழுதையும் இல்ல ...

  அவ அவா குறையெல்லாம் அடுத்தவா மீது போடுறா .. என்னா லோகம் இது ...

  உங்களுக்காக வருத்தப்பட்டு பிரார்த்தனை செய்றேன் பா ...
  உங்களுக்கே ரிபீட்டு ..

  //இன்னும் கண் டாக்குட்டர பாக்கலையா? அடப்பாவமே!! இன்னும் எத்தன காலத்துக்கு தான் தெரியல தெரியலன்னு சொல்ல போறீங்க? என்னமோ போங்க! கண்ணு தெரியாதவங்கள நெனச்சு வருத்தப்படுறத தவிர என்ன செய்ய முடியும்... ச்சூ ச்சூ ச்சூ... WHAT A PITY...!!! WHAT A PITY...!!!//

  என்னாங்க டக்குன்னு வேளாண்மை பதிலாம் சொல்றீங்க ..

  தொழில் பத்திலாம் நல்லா சொல்லிதறீங்க ... ரொம்ப நன்றீங்க ...

  ReplyDelete
 80. @அனானி

  எனக்கு இன்னைக்கு நல்லா பொழுது போச்சு! நாளைக்கு பொழுது போகலன்னா வந்து பேசுறேன்... போயி துங்குங்க ராசா!

  பை பை

  ReplyDelete
 81. பெரு இல்லா பிச்சை அனானி

  //இருந்தாலும் வாழ்த்துக்கள் ... கண் செக் பண்ணுங்கோ ... கூடவே கண்ணாடியும் செக் பண்ணுங்க ...//

  அக்கறைக்கு மிக்க நன்றி

  //எனக்கு இன்னைக்கு நல்லா பொழுது போச்சு! நாளைக்கு பொழுது போகலன்னா வந்து பேசுறேன்... போயி துங்குங்க ராசா!//

  என்னது பொழுதுபோக்கா? அனானி பின்னூட்டத்தை வெளியிடும் போதே சின்ன டவுட்டு ம்ம் உங்களுக்கு போழுது போக அனானி கிடைத்து விடுகிறார்கள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 82. //// நல்ல நண்பன் குறையில்லாத நண்பன் என்பது கனவிலும் கற்பனையிலும் மட்டுமே தான் சாத்தியம் போல்... ////

  அடடா கனவா? அதுதானே பார்த்தேன்.. கலக்கிட்டீங்க போங்க:)...

  ReplyDelete
 83. @athira

  ////// நல்ல நண்பன் குறையில்லாத நண்பன் என்பது கனவிலும் கற்பனையிலும் மட்டுமே தான் சாத்தியம் போல்... ////

  அடடா கனவா? அதுதானே பார்த்தேன்.. கலக்கிட்டீங்க போங்க:)...//

  ஹி..ஹி..ஹி... உண்மைன்னு சொல்லிட்டு உங்க கிட்ட வம்பில் மாட்டவா?? அவ்வ்வ்வ்

  ReplyDelete
 84. நட்பை பற்றி மிக டச்சிங்ஆக எளிமையாக சொல்லி இருக்கீங்க மேடம். குறை இருக்கணும், அதற்காக சண்டை போடணும். அதற்காகத்தானே நட்பு...

  ReplyDelete
 85. @சகோ வேஸ்ட்.

  இன்னைக்கும் கொஞ்சம் வேல! அதுனால இன்னைக்கும் பதில் போட முடியல! சாரிங்கோ.... போர் அடிக்கும் போது கண்டிப்பா ரிப்ளே பண்ணிடுறேன் சரிங்களா?


  இன்று போய் நாளை வா(ங்க)!

  ReplyDelete
 86. @ஹைதர் அண்ணா

  ////எனக்கு இன்னைக்கு நல்லா பொழுது போச்சு! நாளைக்கு பொழுது போகலன்னா வந்து பேசுறேன்... போயி துங்குங்க ராசா!//

  என்னது பொழுதுபோக்கா? அனானி பின்னூட்டத்தை வெளியிடும் போதே சின்ன டவுட்டு ம்ம் உங்களுக்கு போழுது போக அனானி கிடைத்து விடுகிறார்கள் வாழ்த்துக்கள்//

  ஹி..ஹி..ஹி...

  தேங்க்ஸ்ண்ணா

  ReplyDelete
 87. @பாலா

  //நட்பை பற்றி மிக டச்சிங்ஆக எளிமையாக சொல்லி இருக்கீங்க மேடம். குறை இருக்கணும், அதற்காக சண்டை போடணும். அதற்காகத்தானே நட்பு...//

  நிச்சயமாக
  பாராட்ட மட்டும் அல்ல! தவறை சுட்டிக்காட்டுபவனும் நம் நிறையையும் குறையையும் ஆராயக்கூடியபவனாகவும் இருப்பவன் தான் சிறந்த நண்பன்!

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 88. நட்பு.....
  சிறப்பு...
  படித்தேன் வியப்பு....

  இப்ப எங்கருக்கு.... தவிப்பு.

  கனவு தான் போங்க.


  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 89. உங்க டெம்ளேட் டிசைன் சூப்பர் அக்கா நல்ல நட்புக் கவிதை
  //என் அன்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும். ஆனால் எல்லாரை விடவும் அதில் நான் தனித்துவமாய் தெரிய வேண்டும் என்பாய்!//

  இது என்னை பிரதிபலிக்குது நானும் இபடித்தான் அக்கா

  ReplyDelete
 90. //இன்னைக்கும் கொஞ்சம் வேல! அதுனால இன்னைக்கும் பதில் போட முடியல!//

  யாரோ இவுகல்ட பதில் எதிர்பாத்தது மாதிரி பீல் பண்றீங்கோ ...

  //பிள்ளை குட்டிய மேய்கிறது இல்லை போல .. அதான் பொழுது போகலையா ??!!//

  யோ.. அதெல்லாம் உங்கம்மா பண்ற வேல! பழக்கதோசத்தில் இங்கேயும் வந்து சொல்லிக்கிட்டு!//

  உங்க வார்த்தைல கண்ணியமே இருக்காதா !!!!???? ...

  உங்க பதிவு தான் சரியிலைனா உங்க கமெண்ட் கூட சரி இல்லை ...

  ReplyDelete
 91. @ராக்கெட் ராஜா

  மிக்க நன்றி ராக்கெட் ராஜா. மதுரன் தான் டிசைன் பண்ணி கொடுத்தார். அவருக்கு தான் நன்றி சொல்லணும்.

  ////என் அன்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும். ஆனால் எல்லாரை விடவும் அதில் நான் தனித்துவமாய் தெரிய வேண்டும் என்பாய்!//

  இது என்னை பிரதிபலிக்குது நானும் இபடித்தான் அக்கா//

  ஓஹ்ஹ்.. அப்படியா ரொம்ப சந்தோஷம் ராஜா

  ரொம்ப நாள்க்கு பிறகு வருகை தந்தது மிக்க மகிழ்ச்சி தருது

  நன்றி தம்பி

  ReplyDelete
 92. @சகோ வேஸ்ட்

  அடடா... இன்னைக்கும் வந்துட்டீங்களா??? இன்று போயி நாளை வா(ங்க)! இன்னைக்கும் நா பிசி! பொழுது போகாத நேரமா பதில் சொல்லுறேன்... ஆனாலும் என் ப்ளாக்கே கதின்னு கெடக்குறது பார்த்தா சிப்பு சிப்பா வருது!!! ஹி..ஹி..ஹி..

  ReplyDelete
 93. கடைசி வரிகள் மட்டும் நம்புற மாதிரி தெரியலையே அவ்வ்வ்வ்வ் :-))

  ReplyDelete
 94. @ஜெய்
  //கடைசி வரிகள் மட்டும் நம்புற மாதிரி தெரியலையே அவ்வ்வ்வ்வ் :-))//

  யாரோ கோர்த்துவிடுறதுக்கு ப்ளான் பண்ற மாதிரியே இருக்கே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 95. தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
  http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_15.html

  ReplyDelete
 96. வணக்கம் அக்கா
  நான் உங்கல் ப்லாக் படிக்க ஆரம்பிச்ச முதல் கதையும்
  நான் எழுதும் முதல் காமண்டும் இதுதான்!

  ஏன் அக்கா இப்படி ஒரு கொலவெரி
  கதைய உச்சி மலையின் மேல் கொண்டு சென்று
  டப்புனு கிழ தல்லிட்டீங்கலே!
  நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது...
  அடடா... நல்ல நண்பன் குறையில்லாத நண்பன் என்பது கனவிலும் கற்பனையிலும் மட்டுமே தான் சாத்தியம் போல்... ////

  எதிர்பாக்கவே இல்ல இப்படி என்று!
  இதயதுடிப்பை ஒரு செக்கண்ட் நிருத்திய இந்த வரி..
  ம்ம்ம் உண்மையான வரிகள் தான்.
  நல்ல பதிவு அக்கா..
  தொடர்ந்து இது போல் எழுதவும்..

  4 அல்லது 5 மாதங்கலுக்கு முண்பு இது போலவே
  தெலுங்கில்
  oh my friend
  ஒரு திரை படம் வெலி வந்தது!அதுவும் இது போலத்தான்!
  இதர்க்கு மேல் எண்ண சொல்வது தெரியலவார்த்தைகல் வர மாட்டீங்குது!
  நன்றி அக்கா...

  ReplyDelete
 97. @கீதா
  //தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
  http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_15.html//

  என்னை அறிமுகம் செய்ததுக்கு ரொம்ப நன்றிங்க

  ReplyDelete
 98. @மகேஷ்

  வாங்க மகேஷ்.. நலம் தானே?

  முதன் முதலா என் ப்ளாக்கிற்கு வந்ததுக்கு நன்றி மகேஷ்.

  //இதயதுடிப்பை ஒரு செக்கண்ட் நிருத்திய இந்த வரி..//

  ஹி..ஹி..ஹி.. எனக்கும் கஷ்ட்டமா தான் இருக்கு! இப்படி ஒரு ப்ரன்ட் கிடைக்கலையேன்னு ஹி../.ஹி...ஹி.. கூல்! மகேஷ் மூலமா யாருக்காவது நல்ல நட்பு கிடைச்சு அவங்க இதே போல் நிஜமான பதிவு எழுதலாம் :-)

  ரொம்ப நன்றி மகேஷ்

  //4 அல்லது 5 மாதங்கலுக்கு முண்பு இது போலவே
  தெலுங்கில்
  oh my friend
  ஒரு திரை படம் வெலி வந்தது!அதுவும் இது போலத்தான்!

  //

  ஹாப்பி டேஸ் பார்த்திருக்கேன். இந்த படத்தை இனி தான் பார்க்கணும் :-)

  வருகைக்கு நன்றி மகேஷ்

  ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)