அறுசுவையில் எழுதிய பெரிய கதை :-)
டிஸ்கி:- இது போல் உங்களுக்கோ உங்களை சார்ந்தவர்களுக்கோ இந்த கதையில் உள்ளது போல் அனுபவம் ஏற்பட்டால் "குட்டி சுவர்க்கம்" வலைப்பூ ஓனர் சகோ.ஆமினா நேற்று எழுதிய என் டைரியில் --க்கு என் அனுபவ பதிவு இது..! என்ற வரியை சேர்க்கவும். தேவையில்லாம யாரும் பல்ப் வாங்க கூடாது பாருங்க!!!
டிஸ்கி:- இது போல் உங்களுக்கோ உங்களை சார்ந்தவர்களுக்கோ இந்த கதையில் உள்ளது போல் அனுபவம் ஏற்பட்டால் "குட்டி சுவர்க்கம்" வலைப்பூ ஓனர் சகோ.ஆமினா நேற்று எழுதிய என் டைரியில் --க்கு என் அனுபவ பதிவு இது..! என்ற வரியை சேர்க்கவும். தேவையில்லாம யாரும் பல்ப் வாங்க கூடாது பாருங்க!!!
என் வீட்டின் எதிரில் நீ குடிவந்தாய். அன்று தான் முதன் முதலாக உன்னை  சந்தித்தேன். அந்த நாள் கண்டிப்பாக என் வாழ்வில் மறக்க முடியாத நாள் தான்.  எப்படி முடியும்? கருப்பு நாளில் நான் கண்ட திருநாள் அல்லவா அது! ஆசையாய்  நான் எழுதிய பல கவிதைகள் அடங்கிய என் டைரியை என் தாத்தா வேண்டுமென்றே பழைய  புத்தகங்களோடு சேர்த்து சொற்ப பணத்திற்கு விற்றார். காரணம் அந்த வயதில் என்  ஆழம் மிகுந்த உணர்வுகளின் பிரதிபலிப்பு. அவர்களுக்கு வேறும் கிறுக்கல்  என்பதையும் மீறி வேறு எண்ணம் என் பருவ வயதில் குடி போக கூடாது என்ற பயம்.  எல்லாம் புரிந்த போதும் ஏனோ என் மனம் அந்த வயதில் ஏற்றுக்கொள்ள  மறுத்துவிட்டது. தாத்தாவின் செயலை விட அவரின் சொற்கணைகள் தான் என்னை சுக்கு  நூறாய் தகர்த்துக்கொண்டிருந்தது. ஒவ்வொரு வார்த்தைகளும் தீயினும் வலியதாய்  சுட்டெரித்தது.அந்த கொடுமையை எவ்வாறு விவரிப்பேன்?. என் மனதில் எதுவும்  இல்லை, எவனும் குடிவரவில்லை என்பதை தீயில் நனைந்து நிரூபிக்க நான் சீதை  அல்லவே!
அன்று தான்!.....
உன்னை முதன் முறையாக சந்தித்தேன். புதுவீட்டுக்காக காய்ச்சிய பாலை ஒரு  கிண்ணத்தில் ஏந்தி என் வீட்டு வாசலில் நின்றாய்.நான் என் கண்ணீரை நான்  துடைத்ததை நீ பார்த்திருக்கக்கூடும். சட்டென எழுந்து அங்கிருந்து விலகி என்  அறை புகுந்தேன். ஆனால்  “ஏன் வந்தாய்?” என என் நெஞ்சம் என்னை கேள்வி  கேட்டது! உன் காந்த பார்வையின் ஈர்ப்பில் என் பாறை மனமும் ஈர்க்கப்பட்டது.  என்னவன் எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென நான் ரசித்து ரசித்து எழுதிய  வரிகளின் சொந்தக்காரன் என் கண் எதிரில் நின்ற போது நான் அடைந்த இனம்  புரியாத சந்தோஷத்தை எவ்வாறு இந்த காகிதத்தில் பூட்டுவேன்? மீண்டும்  உன்னை  காண வந்தபோது நீ அங்கு இல்லை. கனவாக இருக்குமோ என நினத்த வேளையில் அம்மா  பால் குவளையை நீட்டினாள். உண்மை தான்.எதுவும் நிழல் அல்ல. நிஜம் தான்.  வந்தவன் நீயே தான்.ஒவ்வொரு முறையும் என் கற்பனையில் நுழையும் என்  கனவுமன்னன் தான். யார் என பார்க்காமலேயே,யார் என தெரியாமலேயே  எனக்கானவனுக்கு நான் கொடுத்த அதே உருவம் தான். தனிமை இரவுகளில் கை கொடுத்த  துணையானவன் தான். நீயே தான்.
(பழகிய  ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடந்த உண்மையான சம்பவம் இது. கதைக்காக சில மாற்றங்களோடும் அவளே டைரியில் எழுதுவது போலவும்......)
| Tweet | ||||

அருமை..
ReplyDeleteஅங்க கதை வாசிச்சு இங்க கருத்து போடுறன்
ReplyDeleteகதை கலக்குது
இது உண்மையா, கதையா புரியலையே...??
ReplyDeleteஆமி அறுசுவையில் போயி பூராகதையும் படிச்சதும் மனசே பாரமாகிப்போச்சு. எப்படி இவ்வளவு யதார்த்தமா எழுதமுடியுது. ரொம்ப நல்ல கதை சொல்லி இருக்கீங்க. என்ன சோக மா இருக்கு.
ReplyDeleteஉண்மைக்கதையை எழுத்தில் வடித்த விதம் உணர்வுப் பூர்வமானது,சோக முடிவு தான் மனதை ஏதோ செய்கிறது.
ReplyDeleteமனங்கவர்ந்த கதை அருமை.
ReplyDeleteஅருமையான கதை.
ReplyDeleteநல்லா இருக்கு.
பிடிச்சிருக்கு.
இதை படிச்சதுக்கு...
வாழ்த்துக்கள்!
அப்புறம் ஒரு முக்கியமான சேதியை சொல்ல மறந்துட்டேன் எப்படி சொல்றதுனு தெரியலை சொல்ல முடியாமலும் இருக்க முடியலை.
ReplyDeleteவந்து...வந்து....வந்து தப்பா நினைக்ககூடாது
தமிழ் மணம் ஓட்டு போட்டுட்டேன் பதிலுக்கு ஒரு ஓட்டு போட்டடனும்.
கதை, கவிதை பெரிய ஆல் ரவுண்டர் ஆகிட்டீங்க.
ReplyDeleteஅருமையான கதை சகோ.
அருமை...
ReplyDeleteஉண்மையா... கதையா?
படிக்க படிக்க நன்றாக இருக்கு.
ReplyDeleteஆமி அருமையான நடை. செம ப்ளோ .
ReplyDeleteமனங்கவர்ந்த கதை ஆமி...உண்மை கதையா?
ReplyDeleteசூப்பர் கதை. ஏற்கனவே படிச்சது தான் இருந்தாலும் சுவாரஸ்யமாக இருக்கு.
ReplyDeleteகதியின் முடிவுதான் மனதை கனக்கசெய்து விட்டது.
ReplyDeleteஃஃஃஃதேவையில்லாம யாரும் பல்ப் வாங்க கூடாது பாருங்கஃஃஃஃ
ReplyDeleteநல்ல எச்சரிக்கை தாங்க சகோதரி..ஹ..ஹ...