இப்படியொரு பதிவு போட ரொம்ப வருத்தமா தான் இருக்கு. இன்னைக்கு விட்டா இனி அடுத்த வருஷம் தான் சொல்ல முடியும். கெட்ட விஷயத்த ஏன் தள்ளி போடுவானே? அதான் இன்னைக்கு சொல்லிடுறேன். பையனின் படிப்பு குறித்து பேச வாய் திறந்த போதே நீங்க 50 ரூபா கொடுத்துட்டீங்களான்னு கேட்டாங்க அந்த டீச்சர். ரம்ஜானுக்காக ஒரு வாரம் ஸ்கூல் பக்கம் போகாததால் அவங்களோட ஏற்பாடு தெரியாமல் இருந்தது. நாம எப்ப அந்தம்மாகிட்ட கடன் வாங்குனோம்? இடையில அமினீசியா வந்துடுச்சோன்னு???திருதிருன்னு முழிச்சேன்.........
என் சந்தேகம் அவங்களுக்கு புரிஞ்சுடுச்சு போல!!! காரணத்த சொன்னாங்க.
டீச்சர்ஸ் டே செலிப்ரேட் பண்ண போறோம். அதுக்காக எல்லார்கிட்டையும் பணம் வசூல் பண்றோம்னு சொன்னாங்க. நல்லவிஷயம் தான். நம்ம பசங்கள மேய்க்கிற அப்பாவிகளுக்கு வருஷத்தில் ஒரு நாளுக்காக 50 ரூபா கொடுக்குறதுல என்ன கொறஞ்சா போய்ட போறோம்னு அடுத்து எதுவும் சொல்லாம கொடுத்தாச்சு.
நேற்று..................
சாப்பாடு கொடுக்க மதியம் போனேன். ஒரு வகுப்பறையில் உள்ள ஒட்டுமொத்த மாணவர்களும் வகுப்பறையின் வெளியே மணல்ல உக்காந்திருந்தாங்க. ஏதோ தப்பு பண்ணிடுச்சுங்க போல... அதான் இந்த பனிஷ்மென்ட்னு நெனச்சு பனிஷ்மென்ட் கொடுத்த டீச்சரம்மாவ எட்டி பார்த்தேன் அந்த ரூமில்.......... ஒட்டு மொத்த கூட்டமே அங்கே தான் இருந்தது. உள்ளே தடபுடலா பார்ட்டி.....
இதுல என்ன கொடுமைன்னா அவங்க பண்ற கூத்துக்கள வெயில்ல, மணல்ல உக்காந்துர்க்குற பசங்க பரிதாபமா நமக்கும் கொஞ்சம் கொடுக்க மாட்டாங்களா என ஏக்கமாக பார்த்தது தான் (இந்த கூத்து அரங்கேறியது சாப்பாட்டு வேளை என்பதால் பசி களைப்பில் அதனை வேடிக்கை பார்த்த மாணவர்களுக்கு எப்படியிருந்திருக்கும்???)
பார்ட்டி முடிஞ்சு வந்த மிஸ்ஸிடம் "அப்ப சில்ரன்ஸ் டே க்கு நீங்க பணம் கொடுத்து எங்க பசங்களுக்கு பார்ட்டி வைப்பீங்க தானே?"ன்னு சொன்னதன் உள்குத்து பாவம் புல்வெட்டு வெட்டின களைப்பில் வந்த மிஸ்க்கு புரியல (தப்பிச்சேன் :-)
"ஸ்கூல் பீஸ்,புக் பீஸ், டேர்ம் பீஸ், வேன் பீஸ், எக்ஸ்ட்ரா கரிகுலர் பீஸ்ன்னு லொட்டு லொசுக்கெல்லாம் வாங்குறது பத்தாதுன்னு இதையும் நம்ம தலைல கட்டுறாங்க"ன்னு சில பெற்றோர்கள் புலம்பிட்டு போனாங்க.
ஆனா எனக்கு அப்படிலாம் சத்தியமா தோணல........... என் நினைப்பெல்லாம் ஒரு ஸ்கூல் சீக்கிரமா கட்டி.............ஒரே மாசத்துல அம்பானியாகுறதுல தான் இருந்துச்சு :-)))))))
நல்லாசிரியர்களுக்காக என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.............
Tweet | ||||
நல்லாசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்களும்
ReplyDeleteஆமி ஸ்கூல் எல்லாம் கட்டி முடிச்சாச்சா. பசங்க க்யூ வரிசைல காத்துகிடக்காங்க. சீக்கிரம், சீக்கிரம்..........
ReplyDeleteஉள்குத்து வெளிகுத்து நு சொல்லி தப்பிக்க பாக்கறீங்களா...
ReplyDeleteசெம குத்துன்னு தான் நல்லா தெரியுதே..
இதுல என்ன கொடுமைன்னா அவங்க பண்ற கூத்துக்கள வெயில்ல, மணல்ல உக்காந்துர்க்குற பசங்க பரிதாபமா நமக்கும் கொஞ்சம் கொடுக்க மாட்டாங்களா என ஏக்கமாக பார்த்தது தான் (இந்த கூத்து அரங்கேறியது சாப்பாட்டு வேளை என்பதால் பசி களைப்பில் அதனை வேடிக்கை பார்த்த மாணவர்களுக்கு எப்படியிருந்திருக்கும்???)//
ReplyDeleteஇது வன்மையாக கண்டிக்கத்தக்கது, பிள்ளைகள் மேல் அக்கறை இல்லாத இவர்கள் ஆசிரியர்கள் இல்லவே இல்லை, நடமாடும் பேய்கள்... வேற என்னத்தை சொல்ல, ஓடி வந்து நாலு மிதி மிதிக்கணும் போல தோணுது...
இப்படிப்பட்ட ஆசிரியர்களால் எவ்வளவு பெயர்... தனியார் பள்ளியா அக்கா?
ReplyDeleteஉங்க எண்ணங்கள் விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள்
ReplyDeleteஅடக் கொடுமையே!! நாங்க படிக்கும்போது நாலணாவோ, எட்டணாவொ கொடுத்த ஞாபகம், அதுவும் ஆசிரியர் நிதிக்காகன்னு நினைக்கிறேன். இப்பல்லாம் குழந்தைங்க சின்ன க்ரீட்டிங்க்ஸ் தாங்களே வரைஞ்சு எடுத்துட்டு போறாங்க, அல்லது ரோஜா மாதிரி ஏதாவது சின்ன கிஃப்ட்.
ReplyDeleteஇது ரொம்ப ஓவரால்லா இருக்கு, நிஜம்ம்ம்ம்ம்மாவா? ஒண்ணும் கேக்காம வந்துட்டீங்களே!! :-((((
வருங்கால அம்பானிக்கு வாழ்த்துகள் ;-)
ReplyDelete//இதுல என்ன கொடுமைன்னா அவங்க பண்ற கூத்துக்கள வெயில்ல, மணல்ல உக்காந்துர்க்குற பசங்க பரிதாபமா நமக்கும் கொஞ்சம் கொடுக்க மாட்டாங்களா என ஏக்கமாக பார்த்தது தான் (இந்த கூத்து அரங்கேறியது சாப்பாட்டு வேளை என்பதால் பசி களைப்பில் அதனை வேடிக்கை பார்த்த மாணவர்களுக்கு எப்படியிருந்திருக்கும்???) //
ReplyDeleteநியாமான கோபம்.நீங்க எதுவுமே கேட்காமல் அம்பானி கனவுலே இருந்ததுதான் தப்பு.
நல்லாசிரியர்களுக்காக என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
ReplyDelete@KANA VARO
ReplyDelete:-)
@மாமி
அதுக்கு தான் மாமி ஏற்பாடு பண்ணிட்டு இருக்கேன்....... :-)
@suryajeeva
சிரிச்சுட்டே சொன்னதுனால அவங்க கண்டுக்கல........ :-)
@நாஞ்சில் மனோ
//ஓடி வந்து நாலு மிதி மிதிக்கணும் போல தோணுது... //
ஓடியாங்கோ ப்ளைட் பிடிச்சு........ :-)
@பிரபு
உண்மை தான் தம்பி.... சில ஆசிரியர்களால் பலருக்கும் அவபெயர் :-(
தனியார் தான் :-)
@அரசன்
//உங்க எண்ணங்கள் விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள் ///
ஹா....ஹா...ஹா......
@ஹுசைனம்மா
குழந்தைங்க தானா பண்ற அளவுக்கு இன்னும் எங்க ஊர் பக்கம் முன்னேறல.... அவங்களா ஆசபட்டாலும் கூட எதுக்கு வீண் வேலன்னு அம்மாமார்கள் செய்ய விடுறதில்ல :-( ஆனா டீச்சர்ஸும் விடுறதா இல்ல.......... "நீங்களா எல்லாரும் சேர்ந்து காசு சேர்த்து எதாவது வாங்குங்கன்னு சொன்ன ஆசிரியரை என் கண்முன்னே பார்த்த அனுபவமும் உண்டு :-(
//நிஜம்ம்ம்ம்ம்மாவா? ஒண்ணும் கேக்காம வந்துட்டீங்களே!! :-(((( //
அப்ப சும்மாக்காச்சுக்க்க்க்க்க்குமா??????? ஒன்னு இல்ல........நிறைய கேட்டாச்சு......அவங்களும் நிறையா பதில் சொன்னாங்க (அவங்களுக்கு அவங்க பக்கம் நியாயம்:-)
@அமைதிசாரல்
//வருங்கால அம்பானிக்கு வாழ்த்துகள் ;-) //
ஹி.....ஹி.......ஹி..........
உங்க அப்ரோச் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு ;-)
@சாதிகாக்கா
//நீங்க எதுவுமே கேட்காமல் அம்பானி கனவுலே இருந்ததுதான் தப்பு.//
:-)
ஒரு க்ரூப்பே நியாயம் கேட்க போய் அநியாயமா பல்ப் வாங்கிட்டு வந்தாச்சு :-(
@ரத்னவேல் சார்
வருகைக்கு நன்றி சார் :-)
ஸலாம் சகோ!
ReplyDelete//திருதிருன்னு முழிச்சேன்.........//
எப்போமே நீங்க லேட்டுதா போங்க...
//பசங்க பரிதாபமா நமக்கும் கொஞ்சம் கொடுக்க மாட்டாங்களா என ஏக்கமாக பார்த்தது தான்//
பாவம் பசங்க...
//அப்ப சில்ரன்ஸ் டே க்கு நீங்க பணம் கொடுத்து எங்க பசங்களுக்கு பார்ட்டி வைப்பீங்க தானே?"//
அதானெ பாத்தேன்,எங்கடா சும்மா வந்துடுவீங்களோன்னு..
//என் நினைப்பெல்லாம் ஒரு ஸ்கூல் சீக்கிரமா கட்டி.............ஒரே மாசத்துல அம்பானியாகுறதுல தான் இருந்துச்சு//
அட இதுகூட நல்ல ஐடியாதா??..
பட் நம்மூர்ல வேணா..சமச்சீர் அதுஇதுன்னு..சரியா பிஸ்னஸ் ஓடாது..வேர ஸ்டேட்ல ஓப்பன் பன்னுங்க...
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்...
அன்புடன்
ரஜின்
சில ஆசிரியர்களால் பலருக்கும் அவபெயர்.. எப்படியோ கடைசியில் வாழ்த்தாவது சொன்னீங்களே..
ReplyDeleteநன்றி..
ஸ்கூல் கட்டி அம்பானி ஆவறது நல்ல விசயம் தான்... அதுக்கு முன்னாடி ஸ்கூல் கட்றதுக்கு இந்த ஃபார்ம ஃபுல்லப் செஞ்சி என் கிட்ட சைன் வாங்கனும்... ஒரு சைனுக்கு 200 ரூபா.... :-)
ReplyDeleteபார்ட்டி முடிஞ்சு வந்த மிஸ்ஸிடம் "அப்ப சில்ரன்ஸ் டே க்கு நீங்க பணம் கொடுத்து எங்க பசங்களுக்கு பார்ட்டி வைப்பீங்க தானே?"ன்னு சொன்னதன் உள்குத்து பாவம் புல்வெட்டு வெட்டின களைப்பில் வந்த மிஸ்க்கு புரியல //
ReplyDeleteபணம் கேட்டீங்கள்ள புரிஞ்சாலும் புரியாத மாதிரி தான் இருப்பாங்க ஹி ஹி
எதெதுக்கு வசூல் பண்றதுன்னே இல்லையா? கொடுமை.
ReplyDeleteமறக்காம உங்க ஸ்கூல்ல எனக்கும் ஒரு வேலை போட்டுத்தந்திடுங்க அமீனா
ReplyDeleteஇதைலாம்.......
ReplyDeleteஎன்னத்த சொல்ல?
வாழ்த்துக்கள்.
தமிழ் மணம் ஓட்டும் போட்டாச்சு இதை எதுக்கு சொல்றேன்னா...
புறிஞ்சு இருக்கும்னு நினைக்கிறேன்.
கொடுக்கல் வாங்களில் கரெக்ட்டா இருக்கனும் என்பதே எனது கொள்கை.
எப்படியாச்சும் மக்கள் பணத்தைச் சுருட்டுவதில் தான் ஒரு கும்பல் குறியாக இருக்கிறதே.
ReplyDeleteமாணவர்களிடம் சொல்லிப் பெற்றோர் பணத்தினை வாரிச் சுருட்டிக் கொள்ளுவதில் ஒரு சில ஆசிரியர்கள் குறியாக இருப்பது வருத்தமளிக்கிறது,.
ReplyDeleteநல்லாசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்.
உங்க எண்ணங்கள் விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள்...நல்லாசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்களும்
ReplyDeleteஸலாம் சகோ.ஆமினா.
ReplyDeleteஇப்படியொரு மறுமொழி போட ரொம்ப வருத்தமா தான் இருக்கு..!
இன்னைக்கு விட்டா இனி அடுத்த வருஷம் 'அம்பானி'கிட்டே எப்படி சொல்ல முடியும்..?
நல்ல விஷயத்த ஏன் தள்ளி போடுவானேன்..?
-----------------------------------
'50 ரூபா கொடுத்துட்டீங்களா... டீச்சர்ஸ் டே செலிப்ரேட் பண்ண...'
---இதெல்லாம் படிச்ச உடனே புரிஞ்சிருச்சு...
இது அநியாயத்தை கண்டு பொங்கி எழும் சகோ.ஆமினாவின் இன்னொரு 'வீராவேச' பதிவுன்னு..!
"இதையும் எங்க தலைலதான் கட்டணுமா????"
பார்ட்டி முடியும் வரை யாரையும் டிஸ்டர்ப் பண்ணாம ஓரமா நிண்ணு வேடிக்கை பார்த்துட்டு...
//(ஃ)புல்வெட்டு வெட்டின களைப்பில் வந்த மிஸ்க்கு //
காதில் விழ முடியாத டெசிபலில் அவ்ளோ சன்னமா மனசுக்குள்ளேயே(?)...
//பார்ட்டி முடிஞ்சு வந்த மிஸ்ஸிடம் "அப்ப சில்ரன்ஸ் டே க்கு நீங்க பணம் கொடுத்து எங்க பசங்களுக்கு பார்ட்டி வைப்பீங்க தானே?"ன்னு// சொன்னதன் உள்குத்து பாவம்... இங்கே நிறைய பேருக்கு புரியல...
அந்த உள்குத்து...
//என் நினைப்பெல்லாம் ஒரு ஸ்கூல் சீக்கிரமா கட்டி.............ஒரே மாசத்துல அம்பானியாகுறதுல தான் இருந்துச்சு :-)))))))//
நீங்க அநியாயத்தை தட்டி கேட்கும் ஸ்டைலோ ஸ்டைல்... மீண்டும் ஒரு கலக்கு கலக்கிடீங்க சகோ.
'எதிர்கால அம்பானி'களுக்காக என் மனமுடைந்த கர்ர்ர்ர்ர்ர் புர்ர்ர்ர்ர் நறநறநறக்கள்.............
இனி, செப்.6 'அம்பானிகள் டே'..?
நல்லாசிரியர்களுக்காக என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.............
ReplyDeleteஇதைத்தான் என்னாலும் சொல்ல முடியும்.....
சகோ நீங்க சொல்வது நடந்துட்டுதான் இருக்கு...என்ன பண்றது பள்ளி இன்று பல்லிகளிடம்!
ReplyDelete@ரஜின்
ReplyDelete//எப்போமே நீங்க லேட்டுதா போங்க...//
ஆமா...ஆமா.... லேட்டா போனதுனால ஸ்கூல் வாசல்ல பனிஷ்மென்ட்க்காக நிக்கும் போது நீங்களும் தானே இருந்தீங்க?? எப்படிசகோ பழசெல்லாம் மறக்காம வச்சுருக்கீங்கோ??
//அதானெ பாத்தேன்,எங்கடா சும்மா வந்துடுவீங்களோன்னு..//
சகோ ஆஷிக் கிட்ட இதுக்காகவே தனியா க்லாஸ் போறேனாக்கும். அப்ப இப்படி பேசாம எப்படி சும்மா வரது??? :-))
//அட இதுகூட நல்ல ஐடியாதா??..
பட் நம்மூர்ல வேணா..சமச்சீர் அதுஇதுன்னு..சரியா பிஸ்னஸ் ஓடாது..வேர ஸ்டேட்ல ஓப்பன் பன்னுங்க...//
எந்த லோகத்துல இருக்கேள் அண்ணா???? ஊருக்கெல்லாம் போன் போட்டு நிலைமைய விஷாரிக்கிற பழக்கமெல்லாம் இல்லையா?? சமச்சீர் புத்தகத்தோட சேர்த்து எல் கே ஜி படிக்கிற ஷாம்க்கு மொத்தம் 9 புத்தகம் :-( அதே மெட்ரிக் சிலபஸ் தான். உப்புக்கு சப்பானியா சமச்சீர் கல்வி இருக்கு
இப்ப சொல்லுங்க. எங்கே ஸ்கூல் ஆரம்பிக்கணும்? :-)
@கருன்
ReplyDeleteஅதுவும் நல்லாசிரியர்களுக்காக மட்டும் தான் சொன்னேன் :-)
@மாய உலகம்
//ஸ்கூல் கட்டி அம்பானி ஆவறது நல்ல விசயம் தான்... அதுக்கு முன்னாடி ஸ்கூல் கட்றதுக்கு இந்த ஃபார்ம ஃபுல்லப் செஞ்சி என் கிட்ட சைன் வாங்கனும்... ஒரு சைனுக்கு 200 ரூபா.... :-)//
அதையும் html பார்மேட்ல கேப்பீங்களோ? :-)
@சண்முக வேல்
//எதெதுக்கு வசூல் பண்றதுன்னே இல்லையா? கொடுமை.//
ம்ம்
அடுத்த மாசம் கட்டிட திறப்பு விழாவாம். அதுக்கும் எங்க கிட்ட தான் எதிர்ப்பாப்பாங்கன்னு நெனைக்கிறேன் :-(
@அம்பலத்தார்
//மறக்காம உங்க ஸ்கூல்ல எனக்கும் ஒரு வேலை போட்டுத்தந்திடுங்க அமீனா//
சிபாரிசுக்கு வரும் போதே அமினாவ ஸ்கூல்க்கு கூடிட்டு வரதுனால உங்க ரிக்வஸ்ட் நிர்வாகத்தால் ரிஜெக்ட் செய்யப்பட்டு விட்டது :-)
@அந்நியன்
//கொடுக்கல் வாங்களில் கரெக்ட்டா இருக்கனும் என்பதே எனது கொள்கை.//
ஹி...ஹி...ஹி....
அந்நியனே இப்படி கேட்டா ஆமினா எம்மாத்திரம்? :-)
நீங்க போங்க.... ஓட்டோட வரேன் உங்க கடைக்கும் :-))))
@நிரூ
ReplyDelete//எப்படியாச்சும் மக்கள் பணத்தைச் சுருட்டுவதில் தான் ஒரு கும்பல் குறியாக இருக்கிறதே.//
ம்ம் :-(
@ரெவெரி
//உங்க எண்ணங்கள் விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள்...//
:-))
@பின்னூட்டவாதி சகோ ஆஷிக்
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வரஹ்
//எப்படி சொல்ல முடியும்..?//
மெயில், பேக்ஸ், இல்லைன்னா தந்தி மூலமா சொல்லிடுங்கோ
//-இதெல்லாம் படிச்ச உடனே புரிஞ்சிருச்சு... //
நா சொன்னது சரிதான்
நீங்க அவரா?
//"இதையும் எங்க தலைலதான் கட்டணுமா????"
//
ரொம்ப வலிச்சா கால்ல கட்டுங்க... யாரு வேணாம்னு சொன்னா?
_______________
//பார்ட்டி முடியும் வரை யாரையும் டிஸ்டர்ப் பண்ணாம ஓரமா நிண்ணு வேடிக்கை பார்த்துட்டு...
//(ஃ)புல்வெட்டு வெட்டின களைப்பில் வந்த மிஸ்க்கு //
காதில் விழ முடியாத டெசிபலில் அவ்ளோ சன்னமா மனசுக்குள்ளேயே(?)...//
******அப்போது, நுணி நாக்கு வரை சொல்ல வந்த என் அறிவுரையை இழுத்துப்பிடித்து நிறுத்திக்கொண்டேன். காரணம்... அவரின் அடுத்த வரி**************
*******. "ஏன் கண்ணு... நம்ம ஆசிக்கை பாரு... நல்லா படிச்சிட்டு... இங்கேயும் சம்பாரிச்சு கல்யாணம் கட்டி, அப்புறம் ஏஜெண்டு யாருக்கும் ஒரு காசு குடுக்காம... தானா சவூதி போயி எப்படி சம்பாதிக்குது...?"
அப்புறம் நான் என்ன சொல்ல முடியும்...?
ஒருவேளை... நான் சொல்ல வந்ததை என் தாயார்மட்டும் சொல்லி இருந்திருந்தால்... **********
ஸ்டார் இடபட்ட கமென்ட் எங்கோ எதிலோ படித்தது. இப்படி தான் வீராவேசமான எண்ணத்த இவ்வொருத்தவங்களுக்கு நிறுத்திக்கொண்டதுக்கு ஒரு காரணம் இருக்கும் :-)
//எதிர்கால அம்பானி'களுக்காக என் மனமுடைந்த கர்ர்ர்ர்ர்ர் புர்ர்ர்ர்ர் நறநறநறக்கள்.............
//
எதிர்கால அன்னா ஹசாரேக்கும் இந்தியன் தாத்தாவுக்கும் என் மனமார்ந்த வ வ வ வாழ்த்துக்க்க்க்கள் (பாருங்க சகோ.... வார்த்த கூட வழுக்குது)
@ஆகுலன்
மிக்க நன்றி சகோ
வருகைக்கு!!!
@விக்கியுலகம்
//சகோ நீங்க சொல்வது நடந்துட்டுதான் இருக்கு...என்ன பண்றது பள்ளி இன்று பல்லிகளிடம்!//
செம நச் பன்ச்:-)
இந்த கண்ராவியெல்லாம் பிடிக்காமல் தான் பிடித்த ஆசிரியர்(தனியார் பள்ளி) தொழிலை விட்டு விட்டு மிகவும் கவலையுடன் காலத்தை தள்ளி கொண்டு இருக்கிறேன்.
ReplyDeleteசொல்லுங்க எப்ப ஒரு ஒழுங்கான ஸ்கூல் ஆரம்பிக்கலாம்.
அஸ்ஸலாமு அலைக்கும் ஆமினா
ReplyDeleteஆசிரியர் தின பதிவு நகைசுவையுடன் அருமை.
///என் நினைப்பெல்லாம் ஒரு ஸ்கூல் சீக்கிரமா கட்டி.............ஒரே மாசத்துல அம்பானியாகுறதுல தான் இருந்துச்சு///
சூப்பர் ஐடியா.ஆனால் ஒரு ஸ்கூல் கட்டிட்டு அம்பானியாக முடியாது.
//உப்புக்கு சப்பானியா சமச்சீர் கல்வி இருக்கு//
கரெக்டா சொன்னீங்க. பீஸ் கூட குறைந்த மாதிரி இல்லை.
//இப்ப சொல்லுங்க. எங்கே ஸ்கூல் ஆரம்பிக்கணும்?//
சென்னையில் ஒப்பேன் பண்ணிடலாம்.
அம்பானி கனவு நிறை வேற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
உங்க கோபத்தை சொல்லிட்டீங்க ஆமினா; புரியுது. இப்பிடி எல்லாம் நடக்குது என்கிறது உங்க போஸ்ட்டிங் படிச்சு தான் எனக்கு தெரியுது. ஏன் இப்பிடி பண்றாங்க! கவலையா இருக்கு. சாரிங்க. ;((((
ReplyDeleteஅந்த சிலரை வச்சு எல்லாரையும் எடை போட மாட்டீங்கல்ல?
@அமுதா
ReplyDeleteஓ அப்படியா....... சொல்லவே இல்ல :-)
//சொல்லுங்க எப்ப ஒரு ஒழுங்கான ஸ்கூல் ஆரம்பிக்கலாம். //
உங்களோட பார்ட்னர் ஆகி ஸ்கூல் ஆரம்பிச்சா நா எப்படி அம்பானியாகுறது ஹி...ஹி...ஹி..... பல்லாவரத்திலையே கட்டிடலாமா? அங்கே தான் இப்போதைக்கு ஒழுங்கான ஸ்கூல்க்கு டிமான்ட்டா இருக்கு :-)
@ஆயிஷா
வ அலைக்கும் சலாம் வரஹ்..
//சூப்பர் ஐடியா.ஆனால் ஒரு ஸ்கூல் கட்டிட்டு அம்பானியாக முடியாது.//
கவலைய விடுங்க........ ஊர்முழுக்க நம்ம பிரான்ஜ் ஆரம்பிச்சுடலாம்....... அபேஸ்&நாமம் க்ரூப் ஆப் கம்பெனி :-)
//கரெக்டா சொன்னீங்க. பீஸ் கூட குறைந்த மாதிரி இல்லை.///
யாரோ ஒரு நீதிபதி இப்படி தான் பீஸ் வாங்கணும்னு சொன்னாங்களாம்......... சொன்னதோட நிக்குது. ஒரு சேதியும் காணாம் இன்பர்மேஷன் போர்டில் :-(
@இமா
//அந்த சிலரை வச்சு எல்லாரையும் எடை போட மாட்டீங்கல்ல? //
என் போஸ்டிங்கில் ஆசிரியரை குறை சொல்லலையே........ நிர்வாகத்தை தான் மறைமுகமாக சொல்லியிருக்கேன் இமா...... ஏன்னா ஏவியவரை விட்டுவிட்டு அம்பை குற்றம் சொல்லி என்ன பண்ண? :-))
தங்கள் பள்ளியில் நடந்த சம்பவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி. இந்தச்சிறு வயதிலேயே பிழையின்றி எழுதும் ப்ளாக்கர் ஆன உங்களுக்கு வாழ்த்துகள்(உங்கள் பதில் கமண்ட்டை படிக்கமாட்டேன்..எஸ்கேப்!!)
ReplyDelete// நாஞ்சில் மனோ said
ReplyDeleteநடமாடும் பேய்கள்... வேற என்னத்தை சொல்ல, ஓடி வந்து நாலு மிதி மிதிக்கணும் போல தோணுது...//
இந்தக்குழந்தையும் படுபயங்கரமா பாதிக்கப்பட்டு இருக்கு போல..!!
.ஒரே மாசத்துல அம்பானியாகுறதுல தான் இருந்துச்சு :-)))))))
ReplyDelete// hehe...என்னையும் சேர்த்துக்கோங்க!!! அம்பானி சிஸ்டர்ஸ் ஆகிடலாம் ஓக்கை.
ஆமா சகோ நீங்க எதுவுமே பேசாமலா சும்ம வந்தீங்க...
ReplyDeleteஆசிரியர் உருவில் இருக்கும் கொள்ளையர்களிடம் பேசாமல் வந்தது தவறு சகோதரி
:-)
ReplyDelete