ரம்ஜான் பர்சேஸ் முடிக்க நைட் ரொம்ப லேட் ஆச்சு. ரொம்ப நேர காத்திருப்புக்கு பின் ஒருட்டில் இருந்து வந்த ஆட்டோவை வழிமறிச்சு :-) ஏறியாச்சு. நான் எந்த இடமென சொல்லாமலேயே சரியாக என் வீட்டு வாசலில் ஆட்டோ நின்றது(அந்தளவுக்கா பெரிய ஆளு?) கொடுத்த பணத்தையும் வாங்க மறுத்தார் ட்ரைவர். டபுள் ஆச்சர்யம். ஏன் என்பது போல் நான் பார்த்த பார்வையை பார்த்து
"என்னை ஞாபகம் இல்லையா? கலீல்!!" என சொன்னதும் சடன் ப்ரேக் போட்டது போல கொஞ்சம் ஆடி அப்பறம் ஸ்டெடி ஆனேன்.
எந்த கோ-எஜுகேஷன் ஸ்கூலிலும் பசங்களுக்கும் பொண்ணுங்களுக்கும் தான் அதிகமா போட்டி இருக்கும். ஒரு பொண்ணு க்ளாஸ் பர்ஸ்ட் வந்த்ட்டா பசங்க அத பெரிய விஷயமா நினைக்கிறதே இல்ல. ஆனா அதுவே தப்பி தவறி ஒரு பையன் க்ளாஸ் பர்ஸ்ட்டாவோ லீடராவோ வந்துட்டான்.............. பொறாமைக்கு கிலோ கணக்கும், லிட்டர் கணக்கும் பத்தாது. எல்லா க்ளாஸ் போலவும் எங்க க்ளாஸ்லையும் நாங்க தான் பசங்கள விட படிப்புல டாப் (அப்பன்னா உன்னைய விட நல்லா படிக்கிறவங்கள என்னன்னு சொல்லுவ?) ஆனா எங்கிருந்தோ வந்து இடையில் சேர்ந்தவன் தான் கலீல் ரஹ்மான். வரும் போதே மொத்தமா எல்லா வகுப்பு புத்தகத்தையும் கரச்சு ஜூஸ் போட்டு குடிச்சுட்டான் போல.... புத்தகம் சார்ந்த கேள்வியாகட்டும் அல்லது பொதுவான விஷயங்களாக இருக்கட்டும், டீச்சர் கேட்கும் கேள்விகளுக்கு முதலில் காதுல நொய்ய்ன்னு சத்தம் வருவது அவன் குரலாக தான் இருக்கும். நல்லா படிக்கிறோம்ங்குற கெத்து :-) கொஞ்சம் கூட பயபுள்ளைகிட்ட இருக்காது. அதுனால தான் கொஞ்ச நாள்லையே ஸ்கூல்க்கே (வாட்ச்மேன், சமையல் காரம்மா,பியூன் உட்பட) பிரன்ட் ஆனான். அவனின் கையெழுத்தை பார்த்த பிறகு தான் என் கையெழுத்தை திருத்த வேண்டி ரொம்ப கஷ்ட்டப்பட்டு ப்ராக்டிஸ் பண்ணேன். அவனை பார்த்து அதிகாம பொறாமை பட்டு கோபத்தால் அவனை வெறுத்த நாட்களில் தான் கட்டுரை போட்டியில் நான் கலந்துக்கொள்ள எனக்காக அவனே ஒரு கட்டுரை எழுதி அதை மனப்பாடம் பண்ணியாவது களிமண் மண்டைல ஏத்தி போட்டி நடக்கும் போது கொட்ட சொன்னான். அன்னைல இருந்து என் கண்ணுக்கு அவன் என் தம்பியா, ரொம்ப நாள் பழகுனவன உறவின் உணர்வா தான் தெரிஞ்சான். (உனக்கு நல்லது செஞ்சா உன் சொந்தக்காரனாக்கும்???)
கொஞ்சம் கூட வினையம் இல்லாம ஒருத்தனால பழக முடியுமான்னு இப்ப வரை நான் வியந்த நாட்கள் அதிகம். ஹயர் செகன்ட்ரிக்கு போன பிறகு ஏற்பட்ட பிரிவு அப்படியே நிரந்தரமானது.
அதுக்கப்பறம் இன்று தான் அவனை பார்க்கிறேன். அதுவும் இந்த கோலத்தில்........ :-( பார்த்ததுமே கலீல் தானே நீ?"ன்னு கேட்டிருந்தா பரவால்ல. அவன்கிட்டையே நீ யார் என்பது போல் பார்த்ததால் எனக்கே அவன் முகத்தை பார்க்க கொஞ்சம் கஷ்ட்டமாக இருந்தது.(இருட்டு, மறதி,கேட்க தயக்கமா இருந்துச்சுன்னு 10 நிமிஷத்துக்கு ஒரு முறை நான் சொன்ன காரணங்களை நம்பினானா இல்லையான்னு புன்னகை வச்சு கண்டுபுடிச்சுட்டேன் :-( ஆனா எண்ணெய் தடவாத முடி, தாடி வளர்ந்த முகம், உயரம்னு சொன்ன சப்ப கரணத்த மட்டும் அப்படியான்னு கேட்டான்.....அப்பாவி :-)
எப்படியெல்லாமோ வர போகிறான் என எதிர்பார்த்த அவனை ஆட்டோ ட்ரைவராய் பார்க்க கஷ்ட்டமாகவும் அதே சமயம் என்னையறியாமல் கோபமும் வந்தது. கேட்டேவிட்டேன்
"படிக்கிற வயசுல எதுக்குடா இதெல்லாம்?"
கொஞ்சம் கூட முகத்தில் சலனமின்றி அதே புன்னகையுடன்
"படிக்கிற வயசுல படிச்சே ஆகணும்ங்குறதுக்காக தான் இதெல்லாம்" என்றான்.
காலேஜ் போக மீதி நேரம் ஆட்டோ சவாரி தான் அவன் படிப்புக்கான கட்டணத்தை செலுத்துகிறது என்பதையும் அவன் அம்மாவிற்கு கஷ்ட்டத்தை கொடுக்க கூடாது என்பதற்காக தன் கல்வி செலவுக்கு அவர்களை இது வரை தொந்தரவு செய்ததில்லை என்பதையும் அவன் சொல்லாமலேயே புரிந்துக்கொண்டேன் அவன் சொன்ன தொனியில். (அம்மா திருமண நிகழ்ச்சிகளில் சமையல் செய்யும் கான்ட்ராக்டர் மூலமாக சமையலை தவிர்த்து மற்ற வேலைகளை செய்பவர் :-(
இப்ப இருக்குற பசங்க பக்கத்துல அவனை வச்சு கற்பன பண்ணி பார்த்தேன். சத்யம்,மாயஜால்,ECR,EA,ஹெல்மேட் என்ற முகமூடியில் கேர்ள்பிரன்டுடன் நகர்வலம்........ அப்பப்பப்பா..............உடலெல்லாம் சிலிர்த்தது. அவனை பார்த்து ஒரு சல்யூட் போட கைகள் துடித்தது. விடைபெற்று போகும் போது உதவி வேணும்னா தயங்காம கேளுன்னு சொல்ல நான் வாய் திறக்கும் போது
"எதாவது ஹெல்ப் வேணும்னா தயங்காம கேளு. நா இருக்கேன். என்ன?" என கேட்டான். நண்பேன்டா....!!!!!!!! (குடியரசு தலைவர் பேரு என்ன? ஐநா சபை எங்கே இருக்குன்னு என் மகன் கேட்கும் காலம் சீக்கிரமே வரும். அப்போ கண்டிப்பா உன் உதவி தேவைப்படும் ஹி...ஹி...ஹி...)
டிஸ்கி: பெற்றோர்களே.... உங்க குழந்தைகளை கஷ்ட்டம் என்பது தெரியாமல் வளர்ப்பதில் குற்றமில்லை தான். ஆனாலும் கொஞ்சமாவது குடும்ப சூழ்நிலையை(அதையாவது) சொல்லுங்க. அப்ப தான் அவங்களுக்கும் பணத்தின் அருமையும், கல்வியின் பெருமையும், எதிர்காலத்தை பற்றிய பயமும், கல்லும் முள்ளும் நிறைந்த வாழ்க்கையை பற்றிய தெளிவும், வாழ்வின் முன்னேற்றங்களுக்கான பாதைகளும் புலப்படும். வறுமைய சொன்னா படிப்புல கவனம் இல்லாம போய்டும்னு நெனைச்ச பசங்க வாழ்ந்த காலம் 80ஸ் ஓட ஓடி போச்சு. இப்ப இருக்குற பசங்க sharp knife. கஷ்ட்ட நிலையில் வறுமைய அறுத்து சாதிக்கவும் தெரியும். ஊதாரிதனத்தால் தன் இளமை மற்றும் வாழ்க்கையை அறுத்து பலியிடவும் தெரியும். கவனம் :-)

என் டைரியிலிருந்து :
எந்த அடிகளும் என்னை சாய்ப்பதில்லை. ஆனால் ஒவ்வொரு ஆபத்திலிருந்தும் பாடம் கற்க விரும்புகிறேன். அடுத்த முறை விழாமல் இருப்பதற்காக......Tweet | ||||
இன்றைய தேதியில் தேவையான அறிவுரை..
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி..
கடைசில சொன்னீங்க பாருங்க மெசேஜ்! சூப்பர்!
ReplyDeleteஅருமையான பதிவு சகோ
ReplyDeleteஆனால் அவனது கடின உழைப்புக்கு உதவி மனப்பான்மைக்கும் கண்டிப்பா ன்மானம் உண்டு
அருமையான சந்திப்பும் பதிவும், அட்வைஸ்களும் அருமை அருமை...!!!
ReplyDeleteஅருமையான சந்திப்பும் பதிவும்.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் ஆமினா!
ReplyDeleteசகோ கலீலுர் ரஹ்மானுக்கு இறைவன் வளமான வருங்காலத்தைக் கொடுப்பானாக! படிக்கும்போதே இதயம் கனக்கிறது :(
//கொஞ்சமாவது குடும்ப சூழ்நிலையை(அதையாவது) சொல்லுங்க. அப்ப தான் அவங்களுக்கும் பணத்தின் அருமையும், கல்வியின் பெருமையும், எதிர்காலத்தை பற்றிய பயமும், கல்லும் முள்ளும் நிறைந்த வாழ்க்கையை பற்றிய தெளிவும், வாழ்வின் முன்னேற்றங்களுக்கான பாதைகளும் புலப்படும்//
கரெக்டான வார்த்தைகள் தோழி! 'சின்ன வயசில ஏன் தேவையில்லாத கவலை பிள்ளைகளுக்கு'ன்னு நினைக்காம, குடும்ப சூழ்நிலைகளையும் வாழ்வின் கஷ்ட நஷ்டங்கள் ஒவ்வொன்றையும் வயதுக்கேற்ற வகையில் அவ்வப்போது சொல்லி புரிய வைக்கவேண்டும்.
// நான் எந்த இடமென சொல்லாமலேயே சரியாக என் வீட்டு வாசலில் ஆட்டோ நின்றது// எந்த இடம்ன்னு சொல்லாமலே கடைசிவரை ஆட்டோவில் பயணைத்த முதல் பெண்மனி ஆமினாதான்.
ReplyDeleteசகோ கலீலின் முயற்சியும்,,பக்குவமும் நெஞ்சை நெஞ்சை நிறைக்கின்றது.
இன்றைய சூழலுக்கு ஏற்ற ஒரு பதிவை பகிர்ந்துகொண்டீர்கள் அருமை....
ReplyDelete//எந்த அடிகளும் என்னை சாய்ப்பதில்லை. ஆனால் ஒவ்வொரு ஆபத்திலிருந்தும் பாடம் கற்க விரும்புகிறேன். அடுத்த முறை விழாமல் இருப்பதற்காக......///
சூப்பர்
மனதை தொட்ட அனுபவ பதிவு.பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteபடிக்கிற பயல் இப்படி ஆயிட்டாரே என்று பதட்டமா வாசிச்சேன். இந்த வயசில் இவ்வளவு பொறுப்பா! கண்டிப்பா நல்லா வருவார்.
ReplyDeleteமனிதன் ...
ReplyDelete@கருன்
ReplyDelete//!* வேடந்தாங்கல் - கருன் *! said...
இன்றைய தேதியில் தேவையான அறிவுரை..
பகிர்வுக்கு நன்றி..//
எல்லா தேதிக்கும் இல்லையா? :-))
மிக்க நன்றி சகோ
@ஜீ
ReplyDelete//கடைசில சொன்னீங்க பாருங்க மெசேஜ்! சூப்பர்!//
பாத்துட்டேன் ஜீ :-) மிக்க நன்றி
@ஹரிணி
ReplyDelete//அருமையான பதிவு சகோ
ஆனால் அவனது கடின உழைப்புக்கு உதவி மனப்பான்மைக்கும் கண்டிப்பா ன்மானம் உண்டு//
உண்மை தான் ஹரிணி. கஷ்ட்டத்தை உணர்ந்தவன் தான் வாழ்க்கையின் உன்னத நிலையை அடைவான்
@நாஞ்சில் மனோ
ReplyDelete//அருமையான சந்திப்பும் பதிவும், அட்வைஸ்களும் அருமை அருமை...!!!//
மிக்க நன்றி சகோ
@சே.குமார்
ReplyDelete//அருமையான சந்திப்பும் பதிவும்//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
@அஸ்மா
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வரஹ்..
//சகோ கலீலுர் ரஹ்மானுக்கு இறைவன் வளமான வருங்காலத்தைக் கொடுப்பானாக!//
ஆமீன் ஆமீன்
//வயதுக்கேற்ற வகையில்//
இத நான் சொல்ல நினைச்சு மறந்துட்டேன்.... இருக்குறதுலையே இதான் முக்கியம் :-) மிக்க நன்றி அஸ்மா உங்கள் கருத்துக்கும் துஆவிற்கும்
@ஸாதிகா அக்கா
ReplyDelete//// நான் எந்த இடமென சொல்லாமலேயே சரியாக என் வீட்டு வாசலில் ஆட்டோ நின்றது// எந்த இடம்ன்னு சொல்லாமலே கடைசிவரை ஆட்டோவில் பயணைத்த முதல் பெண்மனி ஆமினாதான்.//
எக்கோவ்வ்வ்வ்வ்
இது சென்னை இல்ல. கீழக்கரையோட சின்ன ஊராக்கும். கடைதெருக்கு போனாலே "இன்னார் பேத்தி தானே நீ? இன்னார் மருமக தானே நீன்னு முகத்த பாத்தே சொல்லிடுவாங்க :-( இந்த அனுபவம் நிறைய முறை நடந்துருக்கு எனக்கு (அத்தா ஆட்டோ ட்ரைவர் என்பதாலும் :-)
@மாணவன்
ReplyDelete//இன்றைய சூழலுக்கு ஏற்ற ஒரு பதிவை பகிர்ந்துகொண்டீர்கள் அருமை....
//எந்த அடிகளும் என்னை சாய்ப்பதில்லை. ஆனால் ஒவ்வொரு ஆபத்திலிருந்தும் பாடம் கற்க விரும்புகிறேன். அடுத்த முறை விழாமல் இருப்பதற்காக......///
சூப்பர்//
மிக்க நன்றி சகோ
@அவர்கள் உண்மைகள்
ReplyDelete//மனதை தொட்ட அனுபவ பதிவு.பகிர்வுக்கு நன்றி//
மிக்க நன்றீங்கோ
@வானதி
ReplyDelete//படிக்கிற பயல் இப்படி ஆயிட்டாரே என்று பதட்டமா வாசிச்சேன். இந்த வயசில் இவ்வளவு பொறுப்பா! கண்டிப்பா நல்லா வருவார்.//
கண்டிப்பா
@suryajeeva said...
ReplyDeleteமனிதன் ...//
:-)
வருகைக்கு நன்றி சகோ
வழமையாகவே உங்களின் எழுத்து நடையில் ஒரு நல்ல மனிதரின் முயற்சியை வெளி படுத்தி இருக்கீங்க ..
ReplyDeleteஅவரின் எண்ணங்கள் நிறைவேற இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.ஆமினா.
ReplyDeleteமிக அருமையான பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.
சகோ கலீலுர் ரஹ்மானுக்கு இறைவன் வளமான வருங்காலத்தை கொடுப்பானாக..!
இதுபோன்று கஷ்டப்பட்டு படித்த சில பள்ளித்தோழர்களை எனக்கும் தெரியும் சகோ. அவர்களிடம் இருந்த அந்த விடா முயற்சியும் வைராக்கியமும் சிறுவயதிலேயே உள்ள பக்குவமும் அறிவு முதிர்ச்சியும் என்னையும் ஆட்கொண்டு பட்டை தீட்டின.
இவ்விஷயத்தில் மேலும் நிறைய கருத்துக்கள் சொல்லத்தான் ஆசை. எனினும் நீளம் கருதி அதை இங்கே தவிர்த்து என் வலைப்பூவில் தனி எதிர்பதிவாக இடலாம் என்று உள்ளேன்.
'படிக்கிற வயசுல எதுக்குடி இதெல்லாம்..?'
இது தலைப்பு..! எப்பூடி..?
===================================
(அப்புறம்.... பல்பு பதிவிலிருந்து உங்கள் பதிவுகளில் ஒரே படங்கள் எதற்கு ஒன்றுக்கு மேற்பட்டு பல
முறை ரிபீட் ஆகின்றன..?)
ஆமி நல்ல பதிவு இந்தசகோதரரைப்பற்றி பலரும் தெரிஞ்சுக்கணும். அவருக்கு வளமான எதிர்காலத்தை ஆண்டவன் அருள்வார்.
ReplyDelete(அப்புரம் ஆமி இந்தபதிவு மிகவும் நன்றாக இருப்பதாக L.K. சொல்ல சொன்னார்)
@அரசன்
ReplyDelete//வழமையாகவே உங்களின் எழுத்து நடையில் ஒரு நல்ல மனிதரின் முயற்சியை வெளி படுத்தி இருக்கீங்க ..
அவரின் எண்ணங்கள் நிறைவேற இறைவனை வேண்டிக்கொள்கிறேன்//
மிக்க நன்றி சகோ
உங்கள் வேண்டுதலுக்கு இறைவன் செவிசாய்க்கட்டும்
@ரத்னவேல்
ReplyDeleteமிக்க நன்றி ஐயா
@ சகோ ஆஷிக்
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வரஹ்...
//சகோ கலீலுர் ரஹ்மானுக்கு இறைவன் வளமான வருங்காலத்தை கொடுப்பானாக..!//
ஆமீன்
//என்னையும் ஆட்கொண்டு பட்டை தீட்டின.//
நல்லா தான் தீட்டியிருக்காங்க............ :-))
//என் வலைப்பூவில் தனி எதிர்பதிவாக இடலாம் என்று உள்ளேன்.
//
வரவேற்கிறேன்........ என் பதிவுக்கு முதல் எதிர்பதிவிட்ட முதல் பதிவர் என்ற பெயரை வாங்குவீங்க.........
//இது தலைப்பு..! எப்பூடி..?//
உங்கள ஏலக்காய் தீட்டுனவங்க சாரி சாரி பட்டைய திட்டுன சக மாணவிகள பத்தினா தலைப்பு ஓக்கே தான் !!!
விரைவில் எதிர்பார்க்கிறேன்
//(அப்புறம்.... பல்பு பதிவிலிருந்து உங்கள் பதிவுகளில் ஒரே படங்கள் எதற்கு ஒன்றுக்கு மேற்பட்டு பல
முறை ரிபீட் ஆகின்றன..?)//
எத சொல்றீங்க? புரியல சகோ........
அப்பறம் நான் ஒத்த சொல்லுல இதுவரைக்கும் இராம்நாட் தவிர எதுக்கும் பேரு வச்சதில்ல :-)
@லெட்சுமி மாமி & எல் கே
ReplyDeleteநன்றி மாமி
எல்.கே மிக்க நன்றி சகோ. என் பதிவை தொடர்ந்து நீங்க படிக்குறத கேள்விபட்டு ரொம்ப சந்தோஷமா இருக்கு :-))
உழைத்து வாழ வேண்டும் எனும் உணர்வோடும் தம் பெற்றோரிற்குச் சிரமம் கொடுக்காது சொந்தக் காலில் படித்து முன்னேற வேண்டும் எனும் நோக்கோடு இருக்கும் இந்த நண்பனின் எதிர்காலம் மேலும் சிறக்க என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteநல்லதோர் வாழ்க்கைப் பாடத்தினைப் பதிவினூடாகப் பகிர்ந்திருக்கிறீங்க.
ReplyDeleteபெற்றோருக்கான அறிவுரையினையும் அழகுறச் சொல்லியிருக்கிறீங்க.
நன்றி அக்காச்சி.
டிஸ்கி மிக சிறப்பான வார்த்தைகள்.பதிவு சிந்தனையை கூட்டுகிறது.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் சகோ!
ReplyDeleteதலைப்ப பாத்த ஒடன..ஷாமுக்கு தான் எதாவது அறிவுறை :( சொல்லிவச்சிங்கலோன்னு நெனச்சேன்..
அல்ஹம்துலில்லாஹ்..உங்கள் நண்பருக்கு அல்லாஹ் எல்லா நலனையும் தர போதுமானவன்..
கலீல் பாய் அப்டி என்னை மாதிரி..கஷ்டப்பட்டு படிக்கிரதுல..அவரு நல்ல மார்க்கு வாங்குனாரு..நானு...ம்ம்..நல்ல மார்க்குதா..ப்ச்..மார்க்கா முக்கியம் முயற்சிதானெ..
கட்டுரை எழுதி குடுத்ததெல்லா சரி...ரிசல்ட் என்ன?? அத சொல்லவே இல்லையே...ம்ம்ம்..
இந்த பயபுள்ளதா..நீங்க இப்டி பதிவராகி எங்களைல்லா #$%^&*@துக்கு,அன்னைக்கே உங்கள தயார் படுத்துனதா???.
சரி ஆட்டோக்கு காசு கொடுத்தீகலா இல்லியா??..
ஆனாலும் ரொம்ப தைரியம்தான்..வழி சொல்லாம வீடுவரைக்கும். என்ன தூங்கிட்டிங்கலாக்கும் ஆட்டோல..:)
//அவனை பார்த்து ஒரு சல்யூட் போட கைகள் துடித்தது.//
ரெண்டு கைலயும் சல்யூட் அடிக்கப்படாது..அப்பாவியா இருக்கும்..வெரப்பா நின்னு சிங்கில் ஹேண்ட் யூஸ் பண்ணனும்,..
சிவப்பு வண்ண எழுத்துக்களுக்கு அப்ளாஸ்..அரும்மையா சொல்லி இருக்கீங்க..
கடைசியா உள்ள கருப்பு வண்ண எழுத்துக்கள்...நெசமாவே உங்ங்ங்க டைரில இருந்துதானா....??????? :)
நான் லா டவுட்டு ஆகலப்பா..:(
அன்புடன்
ரஜின்
கஷ்ட்டமான குடும்ப சூழ்நிலையில் வாழ்ந்து வளர்ந்து தம் படிப்பிற்கும் தாமே சொந்தமாய் சம்பாதித்து படிப்புதனை கடந்து...
ReplyDeleteஇன்று ஆட்டோ ஓட்டி பிழைக்கும் கலீல் ரஹ்மானை போன்று எத்தனையோ மனிதர்கள் நடமாடுகிறார்கள் இந்தியாவில்.
ஏங்க...கலீல் ரஹ்மான் தாடி வைத்திருப்பது உங்களுக்கு பிடிக்க வில்லையா?
அருமையான பதிவு வாழ்த்துக்கள்.
இந்த வயசில் இவ்வளவு பொறுப்பா...
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்.. சகோதரி..
ReplyDeleteமுதல் தடவை உங்கள் தளத்திற்கு வரேன்.. உண்மையில் ரொம்பவும் கவர்ந்துவிட்டது நீங்கள் சொன்ன விதம். அருமை.. இனி நானும் உங்களை நம்பி...
all voted
ReplyDeleteஆட்டோ நண்பன் மனதை கவர்ந்துவிட்டார்...மனதிற்குள் மாற்றம் ஏற்பட இந்த பதிவு உறுதுணையாக இருக்கிறது.... காமெடியாக சொன்னாலும் கருத்துள்ள விசயத்தை முளையில் அறைந்து சொல்லிவிட்டீர்கள்... நன்றி
ReplyDeleteசல்யூட் உங்கள் நண்பருக்கு..
ReplyDeleteசல்யூட் உங்கள் நண்பருக்கு..
ReplyDelete"எதாவது ஹெல்ப் வேணும்னா தயங்காம கேளு. நா இருக்கேன். என்ன?" என கேட்டான். நண்பேன்டா....!!!!!!!!////
ReplyDeleteஉண்மையிலே சிறந்த நண்பர் அவர்...
@நிரூ
ReplyDeleteநன்றி தம்பி
@சண்முகவேல்
ReplyDelete//டிஸ்கி மிக சிறப்பான வார்த்தைகள்.பதிவு சிந்தனையை கூட்டுகிறது.///
மிக்க நன்றி சகோ
@சகோ ரஜின்
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வரஹ்
//ஷாமுக்கு தான் எதாவது அறிவுறை :( சொல்லிவச்சிங்கலோன்னு நெனச்சேன்.///
உங்க அறிவே அறிவு தான் சகோ..... உங்கள எப்படி காலேஜ் வரைக்கும் கொண்டுவந்தாங்கோ :-) ஓ நீங்க தான் பர்ஸ்ட் க்ளாஸாச்சே?!!
அதுசரி......எதுக்கு வருத்தம்? ஷாம்க்கு அறிவுரை சொல்லலைன்னா????
//கஷ்டப்பட்டு படிக்கிரதுல..//
எது? இப்ப வரைக்கும் கஷ்ட்டப்பட்டு ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எழுததுறீங்களே???? அந்த கஷ்ட்டப்பட்டா???? :-))
//ரிசல்ட் என்ன?? //
பப்ளிக் பப்ளிக்
உங்க தங்கை என்ன ரிசல்ட் வாங்கியிருப்பான்னு உங்களூக்கு தெரியாதா??? அண்ணன் போல் தங்கை :-) ஹி...ஹி....ஹி.....
//நீங்க இப்டி பதிவராகி எங்களைல்லா #$%^&*@துக்கு,அன்னைக்கே உங்கள தயார் படுத்துனதா???.//
#$%^&*@-இத நான் பில்-அப் பண்ணவா சகோ????
//சரி ஆட்டோக்கு காசு கொடுத்தீகலா இல்லியா??..//
ஹி...ஹி...ஹி.... கிப்டுக்கு பதிலா துட்டு :-)
//என்ன தூங்கிட்டிங்கலாக்கும் ஆட்டோல..:)//
மதுரை மண்டபம் மெயின் ரோட்ல போய்ட்டு இருந்துச்சு. அதான் கண்டுக்கல.... சரியா எங்க ஏரியா டேர்ன் ஆகும் போது மொத வீடு. சட்டுன்னு நிப்பாட்டிட்டாப்ல. தூங்கலாம் இல்ல.... ஆடி தள்ளுபடி 50 % போட்டதுக்கு 75% போட்டா இன்னும் அதிகமா துணிமணி வாங்கியிருக்கலாம்னு அம்மா அக்கா கூட டிஸ்கஸ்ல இருந்தேன் ;-)
//நெசமாவே உங்ங்ங்க டைரில இருந்துதானா....??????? :)//
கண்டுபிடிங்களேன்!!!!!?????
அதென்ன லா டவுட்டு? ஏன் பிஎல் பண்ணிட்டு இருக்கீங்களா? :-)
@அந்நியன்
ReplyDelete//ஏங்க...கலீல் ரஹ்மான் தாடி வைத்திருப்பது உங்களுக்கு பிடிக்க வில்லையா?//
என்ற மவனுக்கு தான் பிடிக்கல.... கலீல் ஆட்டோல ஸ்கூல்க்குலாம் போக மாட்டானாம் :-)
@ரெவெரி
ReplyDelete//இந்த வயசில் இவ்வளவு பொறுப்பா...//
அதான் எனக்கும் ஆச்சர்யமா இருந்துச்சு ரெவெரி
@சகோ தவ்பிஹ்
ReplyDelete//அஸ்ஸலாமு அலைக்கும்.. சகோதரி..
முதல் தடவை உங்கள் தளத்திற்கு வரேன்.. உண்மையில் ரொம்பவும் கவர்ந்துவிட்டது நீங்கள் சொன்ன விதம். அருமை.. இனி நானும் உங்களை நம்பி...//
வ அலைக்கும் சலாம் வரஹ்.....
மொத தடவ வந்ததுனால என்னையும் நம்பியிருக்கீங்க.... நல்லவேள நா தப்பிச்சேன் :-)
தொடர்ந்து வாங்க சகோ!!!
@மாய உலகம்
ReplyDelete//ஆட்டோ நண்பன் மனதை கவர்ந்துவிட்டார்...மனதிற்குள் மாற்றம் ஏற்பட இந்த பதிவு உறுதுணையாக இருக்கிறது.... காமெடியாக சொன்னாலும் கருத்துள்ள விசயத்தை முளையில் அறைந்து சொல்லிவிட்டீர்கள்... நன்றி//
மூளைக்கே ஆணி போச்சா :-))
நன்றி சகோ ராஜேஷ்
@அமுதா
ReplyDeleteநன்றி அமுதா
@பிரகாஷ்
ReplyDelete//"எதாவது ஹெல்ப் வேணும்னா தயங்காம கேளு. நா இருக்கேன். என்ன?" என கேட்டான். நண்பேன்டா....!!!!!!!!////
உண்மையிலே சிறந்த நண்பர் அவர்...//
உண்மை தான் :-)
மிக்க நன்றி சகோ
நல்லதொரு மனிதரை அறிமுகப் படுத்தியிருக்கீங்க.. பாராட்டுகள்.
ReplyDeleteஇறைவன் அவருக்கு எல்லா நலன்களையும் கொடுக்கட்டும்.
மிக நல்ல பகிர்வு.இந்தக் காலத்திலும் இப்படியும் மாண்வர்கள் இருக்காங்கன்னு நினைக்கும் பொழுது சந்தோஷமாக இருக்கு.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteடிஸ்கி: பெற்றோர்களே.... உங்க குழந்தைகளை கஷ்ட்டம் என்பது தெரியாமல் வளர்ப்பதில் குற்றமில்லை தான். ஆனாலும் கொஞ்சமாவது குடும்ப சூழ்நிலையை(அதையாவது) சொல்லுங்க. அப்ப தான் அவங்களுக்கும் பணத்தின் அருமையும், கல்வியின் பெருமையும், எதிர்காலத்தை பற்றிய பயமும், கல்லும் முள்ளும் நிறைந்த வாழ்க்கையை பற்றிய தெளிவும், வாழ்வின் முன்னேற்றங்களுக்கான பாதைகளும் புலப்படும். வறுமைய சொன்னா படிப்புல கவனம் இல்லாம போய்டும்னு நெனைச்ச பசங்க வாழ்ந்த காலம் 80ஸ் ஓட ஓடி போச்சு. இப்ப இருக்குற பசங்க sharp knife. கஷ்ட்ட நிலையில் வறுமைய அறுத்து சாதிக்கவும் தெரியும். ஊதாரிதனத்தால் தன் இளமை மற்றும் வாழ்க்கையை அறுத்து பலியிடவும் தெரியும். கவனம் :-)
ReplyDeleteஅருமை சகோதரி தரமான
ஆக்கத்தினை படைத்து உங்கள் எண்ணக் கருவினை இவ்வாறு வெளியிட்டிருப்பது பாராட்டுதற்குரிய விடயம் .வாழ்த்துக்கள் .முடிந்தால் இன்று என் தளத்திற்கு வாருங்கள் .இன்றைய பகிர்வினை பலரும் பார்வையிட வேண்டும் என்பது எனது நோக்கம் .ஆதலால் உங்கள் ஓட்டுகளையும் வழங்கத் தவறாதீர்கள் .இதை அன்போடு
கேட்டுக்கொள்கின்றேன் .மிக்க நன்றி பகிர்வுக்கு ............
அஸ்ஸலாமு அலைக்கும்.
ReplyDeleteஏழ்மையிலும் கல்வி கற்பவர்களுக்கு ஊக்கமளிக்கும் பதிவு. பகிர்வுக்கு நன்றி சகோதரி!
சூப்பர் boss
ReplyDeleteஆண் பிள்ளைகள் மட்டும் இல்ல இப்ப பெண் பிள்ளைகளுக்கும் எந்த கழ்டமும் தெரிவதில்லை.
ReplyDeleteபிள்ளைகள் எல்லாம் பெத்தவர்கள் கடமை என்றும் சொல்லி ஜகா வாங்கும் இந்த காலத்திலும் கலீல் போல மூலை முடுக்குகலில் சில பிள்ளைகள் இருக்கத்தான் செய்கிறார்கள்,