3 நாட்களுக்கு முன் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்க ஸ்டுடீயோக்கு  செல்ல நேர்ந்தது. எப்பவும் கொசு விரட்டும் அல்லது யூஸ் ஆகாத கேமராவ தொடச்சு தொடச்சே வெளுக்க வைக்கும் வேலையில் ஈடுபடும் போட்டோக்ராபர் அன்னைக்கு படுபயங்கர பிசி. கூட்டம் வாசல் வரை படர்ந்தது. எல்லாருமே கிராமத்தாளுங்க. சிலர் எங்க ஊர் பாட்டீஸ்.

"இந்த மவராசி வந்தாலே இதே பொழப்புத்தேன். அத மாத்த,இத மாத்தன்னு மனுஷ உயிர வாங்கிட்டுதேன் மறுசோலி பாக்கும்" இதான் என் காதில் முதலில் விழுந்த வாக்கியம். என்னத்துக்கு சொன்னாங்கன்னு தெரியல. ஆனா நம்ம அம்மாவ தான் இப்படி புகழ்றாங்கன்னு மட்டும் தெரிஞ்சது. பரவால்லையே பாட்டீங்க கூட அரசியல்ல பயங்கரமா கலக்க ஆரம்பிச்சுட்டாங்க..... வெயிட் பண்ற நேரத்துக்கு இதையாவது கேட்டுட்டு இருப்போம்னு ஐடியா ;-)ஐஞ்சு நூறுல இருந்து ஆய்ர ரூபாய்க்கு மாத்தும்போதே தெரியுமடீ......இப்படிதேன் நம்மல அல கழிக்க போகுதுன்னு- இது இன்னொரு பாட்டியின் புலம்பல். இப்ப தான் புரிஞ்சது. ஆனா முதியோர் ,விதவைக்கான  மாத  உதவிதொகை  கூடுனதுக்கும் இவங்க போட்டோ கடைல குழுமியிருந்ததுக்கும் என்ன காரணம்னு தெரியாம மண்டைக்குள்ள புழு ஊறுன மாதிரி இருந்துச்சு. இதுக்கு மேல ஒவ்வொருத்தவங்க பேச்சையா கேட்டா தல வெடிச்சாலும் வெடிச்சுடும்னு பயந்துட்டு நானே கேட்டுவிட்டேன் புலம்பிய பாட்டியிடம்....

"ஏம்மா உனக்கு தெரியாதா? அடுத்த மாசத்துலருந்து பேங்குல போய் ஓபி பணத்த எடுத்துக்கணுமாம். அதுக்குதேன் 2 போட்டோ எடுத்துட்டு வர சொன்னியான்  எங்கஊர் தபாலுகாரேன். என்னமோ கைல ஒரு அட்ட கொடுப்பாங்களாம். அத கொண்டுட்டு அந்த பொட்டில வச்சா பணத்த எடுத்துக்கலாமாம். இதெல்லாம் தேவையா??"

நல்லது தானே பாட்டி. இனி நீங்க எப்ப போஸ்ட்மேன் வரார்... எப்ப பணத்த தருவார்ன்னு காத்திட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லைல.

அடப்போமா...... எனக்கு என் பேர கூட எழுத தெரியாது.  எதாது சிட்டைய (சீட்/பார்ம்) கொடுத்தா எங்கூர் புள்ளைகள கெஞ்சிட்டிருப்பேன். இந்த லச்சணத்துல எப்படி பேங்க் வரைக்கும் போய் எடுக்குறது? அந்த எழவெல்லாம் நமக்கு தெரியாதே தாயீ"
என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ம் கொட்டிட்டு இருந்தேன். 
உடனே  40 வயது மதிக்கதக்க சகோதரி (விதவைக்கான உதவி தொகை பெறுபவராக இருக்க கூடும்) பாட்டியிடம்  "அட நீங்க வேற........ முன்னலாம் 500 ரூபா கொடுத்துட்டிருக்கும் போது போஸ்ட் காரேன் 20 ரூபா வாங்குனான். இப்ப 50 ரூபால வாங்குறான். அதுல வேற எப்ப வருது ? எப்ப வருதுன்னு அவன்ட்ட கேட்டுட்டிருக்கணும். 10ந் தேதில இருந்து 20 ந்தேதி வரைக்கும் வெளியூர்க்கோ கடதெருக்கோ போக கூடாது. ஒரு தடவ நம்ம வீட்ல இல்லைன்னா அப்படியே சுருட்டிடுறானுங்க (??!! ). ஏடிஎம் கார்டு கொடுத்துட்டா இவனுங்களுக்கு மொய் வைக்க அவசியம் இல்லைல? சாவகாசமா எப்ப வேணாலும் போய் எடுத்துக்கலாம்" னு சொன்னாங்க.

ஓ இப்படிலாம் நடக்குதா? ஆமிக்கு இது பத்தி தெரியாததுனால 2 பக்கமும் ம் கொட்டிட்டும் தலைய ஆட்டிட்டும் இருக்குறது தவிர வாய்க்கு வேலையில்லாம போச்சு :-) ஆனாலும்  கிராமத்து பாட்டியை நோக்கி இதுக்கு என்ன சொல்றீங்க? என்பது போல் பார்த்தேன்.(எவ்வளவு நேரம் தான் சும்மாவே உக்கார்ந்துருக்குறது? யாராது சண்ட போட்டா தானே கொஞ்சமாவது பொழுது போகும் ஹி...ஹி...ஹி...)

உடனே கிராமத்து பாட்டி " நீ இருபது  போகுது அம்மது போகுதுன்னு கவலபடுற! ஆனா எங்க ஊர்ல அந்த  பேங்கு பொட்டிலாம் (ஏடிஎம்) இல்ல. வரதா இருந்தா டவுனுக்குதேன் வரணும். வயசான காலத்துல எத்தனவாட்டி அலயுறது?"

இப்படியாக பேச்சு நீண்டுட்டே இருந்து கடைசில போன அம்மா ஆட்சில  மழைநீர் சேகரிப்பு திட்டத்தின் தோல்வி,  H  ரேஷன் கார்ட், ரேஷன்கார்டில் போட்டோவில் உள்ள நபர் தான் பொருள் வாங்க வேண்டும் என்ற திட்டம் பக்கம் போனது. அதெல்லாம் இந்த பதிவுக்கு தேவையில்லாததுனால முடிவுரைக்கு போய்டலாம் (அதெல்லாம் ஞாபகம் வச்சுக்கோங்க..... ஓட்டு கேட்ட அன்னைக்கு வரவங்கள அடுத்து 5 வருஷத்துக்கு பாக்க முடிலன்னாலும் அடுத்து மறுபடியும் ஓட்டு கேக்க வந்தா ஆரத்தி எடுங்க- இது போட்டோக்ராபரின் கிண்டல்)
நேத்து கொரியர் கொடுக்க வந்த போஸ்ட்மேன் இடம் இத பத்தி பேச்சு கொடுக்கும் போது " ஒருத்தவங்க ஏடிஎம் கொடுக்கணும்னு சொல்றாங்க. இன்னொருத்தவங்க வேண்டாம்னு சொல்றாங்க. பிரச்சனையா இருக்குறதுனால பெண்டிங்ல இருக்கு. இப்போதைக்கு இந்த பிரச்சனை முடியாது"ன்னு மேலோட்டமா சொல்லிட்டு ஓடிட்டார்.
ஆக இதுக்கு தீர்வு என்னான்னா
ஏடிஎம் மூலம் பணம் கிடைக்கும் படி செய்ற திட்டத்த  ஒருமனதாக நான் வரவேற்கிறேன். இது கண்டிப்பாக உன்னதமான திட்டம். போற்றப்பட வேண்டிய திட்டம். இதனால ஒவ்வொரு ஆளிடமும் அநியாயமாக 20 ரூபா 50 ரூபான்னு மொய் வாங்கி குடும்பம் நடத்த வேண்டிய நிலை தபால்காரர்களுக்கு வராது. மட்டுமில்லாமல் சில பல காரணங்களால வெளியூர்க்கு போய்ட்டா பணம் போச்சேன்னு கவல படுற நிலையும் பயனாளர்களுக்கு இருக்காது.

ஆனா அதுக்கு முன்னாடி
பயனாளர்களில் பலர் முதியோர்கள் என்பதால் அவர்களுக்கு எழுதபடிக்கவோ அல்லது  பக்கத்து டவுன்க்கு வந்து பணம் எடுத்துட்டு போற அளவுக்கு அவங்க உடல் நிலையோ ஒத்து வராது. அப்பறம் உதவி செய்வதாய் சொல்பவரிகளினால் ஏற்படும்  சூழ்(ச்சி)நிலையை அறியும் பக்குவம் குறைவு. அதுனால கிராமங்களிலும் ஏடிஎம்மை நிறுவ வேண்டும். அதாவது கண்டிப்பா கிராமபுறங்களில் தபால்நிலையம் இருக்கும். ஒவ்வொரு தபால் நிலையத்திலும் ஏடிஎம் நிறுவ வேண்டும் (எப்படியும் போஸ்ட் ஆபிஸ் மூலமாவோ ஸ்டேட் பேங்க் மூலமாவோ தான் பணத்த கொடுக்க போறாங்க என்பதால் இந்த போஸ்ட் ஆபிஸ் ஏடிஎம் ஐடியா). அதுவும் குருகிய காலத்துல இது சாத்தியம் இல்லாத பட்சத்துல குறைஞ்சது ஏடிஎம் உபயோகிக்க தெரியாத ஒவ்வொருவருக்கும் உபயோகிக்கும் முறையை பற்றிய பயிற்சியை சொல்லிதர வேண்டும். அதுக்கு முன்னாடி எல்லா ஏடிஎம்மிலும் ஒரே மாதிரியான பணம் எடுக்கும் முறையையும் அமல்படுத்த வேண்டும்.  ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்ப்ப்பா.................... ஒரு தீர்வுக்கு எத்தன வழிமுறைய சொல்ல வேண்டியிருக்கு :-(
டிஸ்கி- ஏதோ இப்போதைக்கு எனக்கு தெரிஞ்ச சின்ன ஐடியா சில்லி ஐடியாவாகவும் இருக்கலாம் :-) நல்லதொரு ஆலோசனை/தீர்வு தெரிஞ்சவங்க தயவு செய்து சொல்லுங்கப்பா!!!!

டவுட்டு- முதியோர்/விதவை உதவி தொகை  பெறும் பயனாளிகளின்  பெயரை ரேஷன் கார்டில் இருந்து நீக்குவது என்னாத்துக்கு???
________________________________________________________

ஒரு பைத்தியத்தின் அறிவுறை-  உன்னுடைய ஒவ்வொரு செய்கையையையும் நெனைச்சு பாக்கும் போது உன்னைய நெனச்சு நீயே பெருமைபடுவதாக இருக்கணும். அப்ப தான் மெய்யாலுமே ஊர் உன்னைய மதிக்கும். நீயும் நல்ல மனிதனாய் சமுதாயத்தில்  தலைநிமிர்ந்து நடக்க முடியும். ஒரு பயலும் உன்னைய கேள்வி கேக்க முடியாது.
________________________________________________________
என் டைரியிலிருந்து- தனிமையை தேடி அலைகிறேன். வெறுமையை நெருங்காத வரை.....
________________________________________________________

, ,

37 comments:

 1. இதை விட அருமையாக மக்கள் கணினி மையம் என்று மூன்று கிராமத்திற்கு ஒரு மையம் என்று தனியார் அரசு கூட்டு முயற்ச்சியில் திட்டம் ஒன்று ரொம்ப நாளாக கிடப்பில் கிடக்கிறது... அங்கு சென்ட்ரல் பேங்க் ஒரு கிளை போல் செயல்பட வழி வகுத்தும் வைத்துள்ளது... அநேகமாக இது முதியவர்களுக்கு இந்த வழியில் செயல் படுத்தினால் அருமையான திட்டம் தான்..
  இதில் இருக்கும் ஒரே பிரச்சினை, பல நபர்கள் மக்கள் கணினி மையம் எடுத்திருப்பதே மக்களிடம் பணத்தை கறக்க தான்.. ஆகையால் அரசு விழிப்புடன் இருந்து இந்த திட்டத்தை கவனித்தால் உருப்படியாய் இருக்கும்.. ஆனால் இதை இப்பொழுது உள்ள எந்த அரசிடமும் எதிர்பார்க்க முடியாது என்பதும் உண்மை..

  ReplyDelete
 2. அந்தம்மா!!! ஒரு திட்டத்தை செயல்படுத்தும் மும் முன் எதையும் முழுசா யோசிக்காம, பின் விளைவுகள் பத்தி சிந்திக்காம அறிவிச்சிடுறாங்க.... சிட்டில வாழ்ற 90% பேருக்கே ஏ.டி.எம் யூஸ் பண்ண தெரியாது, இதுல கிராமத்துல இருக்குற வயசானதுகளுக்கு என்ன தெரியும், இதுல எத்தனை கிராமத்துல ஏ.டி.எம் இருக்குமாம், இந்த சின்ன விஷயம் கூட அவர் யோசிக்காமல் இந்த இத்துப்போன திட்டத்தை எதுக்கு அறிவிச்சாங்களாம்???

  இந்தம்மா முடிவெடுக்கும் முன் அதிகாரிகளை கலந்தாலோசித்தால் அனைவருக்கும் நலம்...

  சில நேரங்களில் சிறப்பாக செயல்பட்டாலும் பல பல பல பல நேரங்களில் படுமுட்டாள்தனமாகவே செயல்படுகிறார்....

  ReplyDelete
 3. சிலர் டீசண்டாக இருக்கிறார்கள்.உள்ளே போனால் வெளியே வராமல் கடுப்பேற்றுகிறார்கள்.முதியவர்கள்-அதிலும் எழுதப்படிக்க தெரியாதவர்கள்- என்ன செய்வார்கள்?

  ReplyDelete
 4. ஒருமனதாக நான் வரவேற்கிறேன்...

  ReplyDelete
 5. ஸலாம் சகோ.ஆமினா,
  ம்ம்ம்... பழையபடி ஜெ.துக்ளக் தர்பார் ஆரம்பிச்சாச்சா..!

  ஒரு சட்டம் போடுவதற்கு முன்னாள் தீர ஆலோசிக்க வேண்டும்.

  ஏடிஎம் எல்லா கிராமத்திலும் இல்லை.
  வயசான காலத்தில் டவுனுக்கு வீண் வெட்டி பேருந்து அலைச்சல் வேண்டாம் என்று யாரிடமாவது கொடுத்து 'பின் நம்பர்' சொல்லித்தான் அனுப்புவார்கள்.
  பின் பணம் கைக்கு வந்து சேருமா தெரியாது.
  முன்னராவது போஸ்ட் மேனுக்கு அம்பதுதான் போச்சு.
  இப்போ "ஏடிஎம் டெலிவரி பாய்க்கு"(அநேகமாய் பேராண்டி) மொத்த பணமும் பாக்கெட் மணிக்கே போக வாய்ப்பிருக்கு. :-(
  முதியோர் எல்லாரும் கற்றோர் இல்லை.
  இதில் வயதான பல கற்றோருக்கே ஏடிஎம் உபயோகிக்க தெரியாது.
  இந்த கார்டை வேறு பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
  பின் நம்பர் வேறு நியாபகம் வைத்திருக்க வேண்டும்.

  ஆகவே, என்னைக்கேட்டால்... முதியோர்களை வயசான காலத்தில் அலைய விடாமல்...
  நேரே அவர் இடத்திற்கே சென்று அவர் கையில் ஒப்படைப்பதே சிறந்தது.

  அதில், கால தாமதம் அல்லது கமிஷன் அடிப்பது எல்லாம் பெருங்கிரிமினல் குற்றம் என்று அறிவிக்கப்பட்டு தடுக்கப்பட வேண்டும்.

  முடியாது என்றால்... இன்னும் சீக்கிரமாக சென்று சேர கூரியரில் அனுப்ப வேண்டும்.

  'நவீனப்படுத்துகிறேன் பேர்வழி' என்று இல்லாத ஊருக்கு வழி சொல்லி அலைக்கழிக்க கூடாது.

  சகோ.ஆமினா, நீங்களே சொல்லுங்கள்... பட்டிக்காட்டுக்கு கூரியர் உடனே போகுமா இல்லை ஏடிஎம் போகுமா..?

  ஏடிஎம் போறதுக்கு முன்னாடி அதில் பணம் போட வேன் போகவர அங்கே சாலை போகணும். அப்புறம் அங்கே மின்சாரம் போகணும். அப்புறம் அங்கே ஒரு செக்யூரிட்டி போகணும். அதுக்கப்புறம்... ஸ்ஸ்ஸ்...

  இதுக்குள்ளே கூரியர் பல முறை போயிரும்.

  As usual JJ rocks again..!

  ReplyDelete
 6. ///டவுட்டு- முதியோர்/விதவை உதவி தொகை பெறும் பயனாளிகளின் பெயரை ரேஷன் கார்டில் இருந்து நீக்குவது என்னாத்துக்கு??? ///

  ---அடப்பாவமே...! இதென்ன கொடுமை..!

  "நாம இவங்களை ஏடிஎம் கார்டு கொடுத்து அலைக்கழிச்சா ஆட்டோமேடிக்கா அவங்களே நொந்து நூடுல்சாகி 'மேலே' போயி சேர்ந்துவாங்கன்னு" ரொம்ப அட்வான்சா முடிவு பண்ணினாப்ல இருக்கே..!?

  இல்லேன்னா...
  இனி,
  ஏடிஎம் -இல் அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்எண்ணெய், பாமாயில்... எல்லாம் சைடுல கொட்டுறாப்ள ஏதும் புது புரட்சி மாற்றம் கொண்டு வரப்போறாங்களா..? ஒருக்கா அப்படி இருக்கலாம் சகோ..!

  ReplyDelete
 7. ஆமி நல்ல பதிவு போட்டிருக்கீங்க. நானும் ஃபேமிலி பென்ஷன் வாங்க்ரவதான் ஆனா இது வேர மாதிரி. ஏ. டி. எம். கார்ட் முடல் முறை யூஸ்பண்ணும்போது சொதப்பிட்டு. என் அசட்டுத்தனத்தையெல்லாம் இங்க சொல்லவேனாம்னு பாக்கரேன்.

  ReplyDelete
 8. வெற்றியா? தோல்வியா என்பதை பொறுத்திருந்து பார்த்தால் தெரியுது.

  ReplyDelete
 9. சில்லி ஐடியா இல்லீங்க... நல்ல ஐடியாதான் கொடுத்திருக்கீங்க...

  ReplyDelete
 10. //உள்ளே போனால் வெளியே வராமல் கடுப்பேற்றுகிறார்கள்.முதியவர்கள்-அதிலும் எழுதப்படிக்க தெரியாதவர்கள்- என்ன செய்வார்கள்?// இனி முதியவர்கள் ஏ டி எம்முக்குள் நுழைந்தால் கியூ மைல் கணக்கில் நிற்கும்.

  ReplyDelete
 11. இரண்டு சாய்ஸூம் குடுக்கலாம் என்று தோணுது. விரும்பியவங்க தபால் மூலம் பெறக் கூடிய வசதியும், மற்றவர்கள் ஏடிஎம் மூலம் பணம் பெறும் வசிதியும் ஏற்படுத்திக் குடுக்கலாம். இது வரை ஏடிஎம் யூஸ் பண்ணாதவர்களை திடீரென்று செய்யச் சொல்வது நல்லா இல்லை.

  ReplyDelete
 12. நல்ல திட்டம்தான் ஆனா மிஸ் யூஸ் பண்ண நெறைய சான்ஸ் இருக்கே

  ReplyDelete
 13. @சூர்யஜீவா
  //இதை விட அருமையாக மக்கள் கணினி மையம் என்று மூன்று கிராமத்திற்கு ஒரு மையம் என்று தனியார் அரசு கூட்டு முயற்ச்சியில் திட்டம் ஒன்று ரொம்ப நாளாக கிடப்பில் கிடக்கிறது... //

  3 கிராமத்துக்கு ஒன்னு என்பதும் இடிக்குமே சகோ...

  மட்டுமில்லாமல் கணினிமையம் மூலம் பணம் பரிமாற்றம் என்பது பலவழிகளில் பிரச்சனையை தானே அவர்களுக்கு கொடுக்கும்

  //ஆனால் இதை இப்பொழுது உள்ள எந்த அரசிடமும் எதிர்பார்க்க முடியாது என்பதும் உண்மை..//
  நிதர்சனம்
  அவங்கவுங்க தனக்கு சொத்து சேக்குறதுலையே கண்ணும் கருத்துமா இருக்காங்க. இதுல எங்கே அவங்களுக்கு எளியவரின் நிலை புரிய போகுது

  ReplyDelete
 14. @ஐத்ருஸ்
  //சிட்டில வாழ்ற 90% பேருக்கே ஏ.டி.எம் யூஸ் பண்ண தெரியாது, இதுல கிராமத்துல இருக்குற வயசானதுகளுக்கு என்ன தெரியும்,//
  உண்மை தான் சகோ
  நானே பல சமயங்களில் பல்ப் வாங்கியிருக்கேன் :-( ஒவ்வொரு ஏடிஎம்மும் செயல்முறைகள் வேறூபடுவதால் நமக்கே சில நேரங்களில் குழப்பம் வந்துவிடுகிறது.

  ஒரு செயலை செய்யும் முன் அதற்கான சாதகமான சூழலை உருவாக்குவதும், நடைமுறைபடுத்துவதற்கான சாத்திய கூறுகள், மக்களின் உபயோகிக்கும் திறமை ஆகிவற்றை பற்றி கலந்தாலோசிப்பதே சிறந்த அரசுக்கு எகா

  ReplyDelete
 15. சகோ ஒருவேளை எல்லோரையும் சர்ச் பார்க்ல படிச்சவங்கன்னு முடிவு பண்ணிட்டாங்களோ என்னவோ!

  ReplyDelete
 16. நல்ல பதிவு,
  ஏ டி எம் கார்டு கொடுப்பது நல்ல முடிவுதான், ஆனால் எல்லா கிராமங்களிலும் ஏ டி எம் மெசின் நிறுவுவது இயலாத காரியம், அதற்க்கு பதில் ப்ரீ பெய்ட் கார்டு கொடுக்கலாம், கிராம போஸ்ட் ஆபீசில் பாயிண்ட் ஆப் சேல் மெசின் மூலம் கார்டு ஸ்விப் செய்து மக்களுக்கு பணம் கொடுக்கலாம்.

  ReplyDelete
 17. நல்ல சொல்லிருக்கிங்க...
  உங்க டவுட்டு..., (எல்லாருக்கும் தான்)
  பதிவுக்கு நன்றி

  ReplyDelete
 18. நல்லதொரு பதிவு நீங்க சொல்லவேண்டியதை சொல்லிட்டிங்க கேக்கிறவங்களிற்கு கேட்டு செய்யவேண்டியதை செய்தாங்கன்னா சரி

  ReplyDelete
 19. //தனிமையை தேடி அலைகிறேன். வெறுமையை நெருங்காத வரை...//

  Super.

  Pakirvum arumai.

  ReplyDelete
 20. அவ்ளோ கிவில் நின்று போதும் போதும் என்றாகிடுமே, முதியவர்களுக்கு ரொம்ப சிரமம் தான்

  ReplyDelete
 21. @சண்முகவேல்
  //சிலர் டீசண்டாக இருக்கிறார்கள்.உள்ளே போனால் வெளியே வராமல் கடுப்பேற்றுகிறார்கள்.//
  அப்படிலாம் பொசுக்குன்னு சொல்லிடாதீங்கோ... அந்த டீசன்ட் பார்ட்டிக்கு உள்ளே என்ன பிரச்சனையோ (நாங்களும் பட்டுருக்கோம்ல ஹி...ஹி...ஹி...)

  படிச்சவங்க பலருக்குமே தில்லாலங்கடி காட்டிட்டு இருக்கு ATM. சில நேரங்களில் எரர் வந்தால் நமக்கே கொஞ்சம் தடுமாற்றம் வருது. பெரியவங்களுக்கு இது செட் ஆகாதுன்னே நெனைக்கிறேன். ஆனா ஓரளவுக்காவது உபயோகிக்க தெரிந்தவர்களுக்கு கண்டிப்பாக வரப்ரசாதம் தான்

  ReplyDelete
 22. @சகோ ஆஷிக்

  வ அலைக்கும் சலாம் வரஹ் சகோ

  //
  சகோ.ஆமினா, நீங்களே சொல்லுங்கள்... பட்டிக்காட்டுக்கு கூரியர் உடனே போகுமா இல்லை ஏடிஎம் போகுமா..? //
  கூரியர் பாய்க்கும் போஸ்ட்மேனுக்கு அவ்வளவா வித்தியாசம் இல்லையே,... கொஞ்ச நாள்ல கூரியர் பாயும் போஸ்ட்மேன் ரேஞ்சுக்கு கமிஷன் கேட்க ஆரம்பிச்சுடுவார். அதுவுமில்லாமல் கமிஷன் கொடுக்கும் முறையே இந்த பாட்டிங்க தான் ஆரம்பிக்கிறாங்க. அப்ப தான் அவுகளுக்கு மட்டும் ஸ்பெஷலா சீக்கிரமா வந்துடுமாம் அப்படியொரு நம்பிக்கை :-) ஆக அரசே சட்டம் போட்டு அதை தடை செய்தாலும் சில அப்பாவி பாட்டீஸ் அதெல்லாம் கண்டுக்காம தன் அபிமான போஸ்ட்மேன்களுக்கோ கூரியர்மேன்க்கோ மொய் கொடுத்து அவங்கள சந்தோஷப்படுத்தும் வாய்ப்பு அதிகம் சகோ :-(

  போட்டோ எடுக்க வந்த பாட்டிகளில் அநேகர் "போன தடவ எலக்‌ஷன்க்கு தான் போட்டோ எடுத்தேன். எங்கே வச்சேன்னே மறந்துச்சுன்னு சொன்னாங்க/ நீங்க சொல்வது போல் கார்டை பத்திரப்படுத்தி வைப்பது அவர்களூக்கு சவாலாக தான் இருக்கும். அது போக படித்தவர்களே பின் நம்பரை கார்டில் எழுதி வைக்கிறார்கள் மறதி பிரச்சனைக்காக. பெரியர்வர்கள் எம்மாத்திரம்? ஆக இதொன்றை வைத்தே ஊரில் உள்ள திருடன்களெக்கெல்லாம் கொண்டாட்டமாக தான் இருக்கும். சில நேரங்களில் பேராண்டிகளுக்கும் கூட :-)

  ReplyDelete
 23. @சகோ ஆஷிக்

  /////டவுட்டு- முதியோர்/விதவை உதவி தொகை பெறும் பயனாளிகளின் பெயரை ரேஷன் கார்டில் இருந்து நீக்குவது என்னாத்துக்கு??? ///

  ---அடப்பாவமே...! இதென்ன கொடுமை..!//

  பாவம் தான் சகோ. இதிலும் என்ன கொடுமைன்னா கொஞ்சம் பொழைக்க தெரிஞ்சவங்களாம் தப்பிச்சுடுறாங்க. நீக்க முடியாத அளவுக்கு அவங்க ஆள்பலத்தையோ பண பலத்தையோ (லஞ்சம்) கொடுத்து இதுல இருந்து தப்பிச்சுடுறாங்க. மீதி உள்ள அப்பாவிங்க???!!!!

  இதுல இனொரு கொடும என்னன்னு கேட்டீங்கன்னா எனக்கு தெரிஞ்ச அளவுக்கு இப்பலாம் திருமணம் ஆன உடனேயே ஒரே வீட்டில் இருந்தாலும் கூட தனக்கென தனியாக ரேஷன் கார்ட் வைச்சுக்க பல தம்பதிகள் விரும்புறாங்க. ஆக ஏற்கனவே அவங்க குடும்ப உறுப்பினர்கள் பேரு நீக்கியது போக முதியோர் பேர் மட்டும் தான் இருக்கும். அத வச்சு தான் அவங்க அத்யாவசிய பொருட்களையும் இலவச பொருட்களையும் வாங்குறாங்க ரேஷன்கடையில். அவங்க பேரே போச்சுன்னா ரேஷன் கார்ட் ரத்தாகிடும். ஆக இனி ரேஷன் சாமான் இல்ல, இலவச அரிசி இல்ல, இலவச வேஷ்ட்டி சேல இல்ல, ரேஷன் கார்ட் இருந்தா தான் இலவச பொருட்களான கேஸ்,டீவி, பேன்,மிக்ஸி,கறவை மாடு எதுவும் இல்ல. இது தான் இவங்களோட ராஜதந்திரம்........

  ReplyDelete
 24. @சிபி
  //வெற்றியா? தோல்வியா என்பதை பொறுத்திருந்து பார்த்தால் தெரியுது//

  வரும்முன் விவாதிப்போம் :-)

  ReplyDelete
 25. வானதி

  இரு முறையும் கொண்டு வரதும் பெட்டர் தான். சில காலங்களுக்கு மட்டும். போக போக ஏடிஎம் உபயோகிக்கும் பெரியோர்களின் எண்ணிக்கை (நெக்ஸ்ட் ஜெனெரெஷன்) அதிகமாகும் போது மெல்ல மெல்ல போஸ்ட் மேன் முறையும் ஒழியும் என்றே தோன்றுகிறது

  ReplyDelete
 26. சகோ
  Naazar - Madukkur
  //அதற்க்கு பதில் ப்ரீ பெய்ட் கார்டு கொடுக்கலாம், கிராம போஸ்ட் ஆபீசில் பாயிண்ட் ஆப் சேல் மெசின் மூலம் கார்டு ஸ்விப் செய்து மக்களுக்கு பணம் கொடுக்கலாம்.//
  இதுவும் சரியான யோசனை தான். வருகைக்கு நன்றி சகோ

  ReplyDelete
 27. சகோ சூர்ய ஜீவா
  சகோ வைரை சதீஷ்
  சகோ ஐத்ரூஸ்
  சகோ ஆஷிக்
  சகோ சண்முகவேல்
  சகோ ரெவெரி
  லெட்சுமி மாமி
  சகோ சிபி
  சகோ பாலா
  சாதிகா அக்கா
  வானதி
  சகோ ராக்கெட் ராஜா
  சகோ பிரகாஷ்
  சகோ விக்கி
  @சகோ நாசர்
  @சின்னதூரல்
  @அம்பலத்தார்
  @சகோ குமார்
  @ஜலீலாக்கா

  உங்களனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றிகள்

  ReplyDelete
 28. வரவேற்கபடவேண்டிய ஐடியா

  ReplyDelete
 29. நீண்ட நாட்களின் பின் இணைவதில் மகிழ்ச்சி.. சகோ.. நலமா?
  நல்ல சிந்தனை , நல்ல கேள்வி நியாயமானது தான்..
  பகிர்வுக்கு அன்புடன் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 30. ஃஃஃஃஃஇந்த லச்சணத்துல எப்படி பேங்க் வரைக்கும் போய் எடுக்குறது? ஃஃஃஃ

  இந்த கேள்வியில் தப்பே இல்லிங்க.. ஒரு இளம் பையனே எடுக்க தயங்கினான்..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  7 ம் அறிவு பாடலில் ஹரிஷ் ஜெயராஜ் அரைத்தமாவும், சுட்ட வடையும்

  ReplyDelete
 31. There are many difficulties in implementing this. May be if the ATM's are provided with a fingerprint scanner instead of PIN number, usage will be much simpler.
  They also must make the card usage much simpler, like there should be no need to go through several menu options on the screen.
  These are too much to expect from our "efficient" government.

  ReplyDelete
 32. நல்லா யோசிக்குறீங்க....நல்ல ஐடியா....

  ReplyDelete
 33. அக்கா அடுத்த பதிவு எப்போது என காத்துக்கொண்டு இருக்கேன்

  ReplyDelete
 34. //These are too much to expect from our "efficient" government.//

  ஹா......ஹா.......ஹா.......

  இலவசம் கொடுத்து மக்கள சோம்பேறியாக்குறது மட்டும் தான் இப்போதைக்கு அவங்க கிட்ட expect பண்ணமுடியும் :-)

  நன்றி சகோ வரவுக்கு

  //அக்கா அடுத்த பதிவு எப்போது என காத்துக்கொண்டு இருக்கேன் //
  ஆஹா... என்னையும் நம்பி!!
  3 பதிவு எழுதி வச்சு சா பூ த்ரீ போட்டுட்டு இருக்கேன் சகோ. இன்ஷா அல்லாஹ் இன்னைகு நைட் அல்லது நாளைக்கு காலைல வந்துடும்

  நன்றி சகோ ராஜேஷ்
  நன்றி சகோ செண்பகம்
  நன்றி தம்பி மதி சுதா
  நன்றி நிகாஷா
  நன்றி சகோ ராக்கெட் ராஜா

  ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)