முன்னெச்சரிக்கை :அப்பறம் முன்கூட்டியே சொல்லிக்கிடுதேன். எனக்கு மத்தவங்கள மாதிரியெல்லாம் இரக்க குணம் சத்தியமா சத்தியமா சத்தியமா இல்லைங்க. பரிதாபப்படுவேன் அவ்வளவுதேன் ஹி...ஹி...ஹி... சோ அங்காங்கே கோபப்படுத்தும் சில விஷயங்கள் இருந்தால் மன்னிச்சூ!!!!!!!!!!!

நேத்து தான் ஒருத்தர் என் பதிவுலகின் அடுத்த புரட்சி-அடுத்தவிங்க சரக்கு லிங்க் காமிச்சு அதில் சில சந்தேகங்களை கேட்டிருந்தார் ஹி..ஹி..ஹி.. (ஆனாலும் உனக்கு ரொம்ப லொள்ளுலே... அதுவே மொக்கபதிவு! அதில கேள்வியா??????) அப்ப தான் நியாபகம் வந்துச்சு... அடுத்தவங்க சரக்கை  நம்ம சரக்கா மாத்தி நம்ம சரக்கா கொடுக்குறதா வாக்கு கொடுத்தோமே.. நிறைவேத்தாம இருக்கோமேன்னு (நீ அரசியல்ல தெகிரியமா நொழையலாம் ஆமி:-)


   மெட்ராஸ் பவனின் சரக்கை தான் இன்னைக்கு நாம கொஞ்சமா பாலிஸ் பண்ணி, அப்படிக்கா இப்படியாக இப்படிக்கா அப்படியாக திருப்பி போட்டு மாத்தி அடுத்தவிங்க சரங்கு என்ற பெயரில் குட்டிசுவர்க்கத்தில் சுத்தவிட போறோம்... யாசகம் கேட்பவர்களை பற்றிய பதிவு அது. சென்னையில் உள்ள பிச்சை கேட்பவர்களினை வகைபடுத்தி எழுதியிருந்தார்.  நாமெல்லாம் எப்போதும் "யாதும் ஊரே" என்ற உயரிய கொள்கையோட இருப்பதால்(ஹி...ஹி...ஹி...) எங்கெங்கெல்லாம்  அனுபவம் கிடைத்ததோ அதெல்லாம் தொகுக்குறேன். சரி வாங்க போகலாம்.

பெண்களின் ஒரே சந்தோஷம்
ஒரு முறை தி.நகரில் சுத்திட்டிருக்கும் போது (கடைசி வரைக்கும் கடைக்குள்ள போயி எந்த சேலையும் வாங்கல) அக்கா நச்சரிச்சுட்டே இருந்தா. 5 ரூபா இருந்தா கொடேன்...ன்னு! நானும் கொடுத்தா....... ஒடனே ஓடிப்போயி பின்னாடி நின்னுட்டிருந்த ஒரு அம்மாவிடம் கொடுத்தா. எனக்கு சரியான கடுப்பு. ஒரு ரூபா போடவே யோசிப்பேன். நீ ஏன் லூசு மாதிரி 5 ரூபா கொடுத்த என கேட்டா "அந்த பொம்பளைய நல்லா பாரேன்.. ஒரு சாயல்ல என் மாமியார் மாதிரியே இல்ல???" ஹி...ஹி...ஹி... அப்ப தான் புரிஞ்சது லோகத்துல பல பொம்மனாட்டிங்க இப்பதேன் தன் மாமியார கற்பன பண்ணி சந்தோஷப்பட்டுக்குறாங்க போல... அவ்வ்வ்வ்வ்

செய்யும் தொழிலே தெய்வம்???!!!
எங்க ஊரில் சின்ன வயசுல இருந்தே அந்த பெரியவரை பாக்குறேன். பக்கீர்ஷா எனப்படும் வகையை சேர்ந்தவர்.  இவர் தொழில் பிச்சை எடுப்பதென்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நீட்டா ட்ரஸ் பண்ணியிருப்பார். ஏன் இப்படி இவர் பிள்ளை இவரை இந்த நிலைக்கு தள்ளிவிட்டது என அவரிடமே கேட்க போக, காலரை தூக்கிக்கொண்டே சொன்னார்... "எம்மவிங்க வெளிநாட்டுல இருக்காங்க பேத்தியா(ள்)"....

( அவ்வ்வ்வ்வ்வ்வ் 2 ரூபா வேஸ்ட்டா போச்சே....... (பிச்சை எடுப்பது குலதொழிலாம். அதை விடமாட்டார்களாம். ஆனால் அடுத்த தலைமுறை இதெல்லாம் மூடநம்பிக்கை என அத்தொழிலிருந்து விலகி சுயமாய் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டனர்)

வருங்கால இந்தியா
மற்றவர்களாவது பரவாயில்ல... இந்த பொடிசுங்க இருக்குதுகளே.... தப்பிக்குறதுக்குள்ள சொத்தே காலியாய்டும். இவங்களுக்கு கொடுக்கப்பட்ட ட்ரைனிங் பக்கா... காசு கொடுக்காம தப்பிக்கவே முடியாது :-)

ஏன் டா இந்த வயசுல?

இதுக்குல்லாமா வயசு பாக்கணும்?

ஏன் டா படிக்க போறதுதானே

அதுக்குதான் கேக்குறேன். பணம் தாங்களேன்???

சரி என்னோட வரீயா? படிக்க வைக்கிறேன். சாயங்காலம் சின்ன சின்ன வேலைகள் பாரு கம்பெனியில்...

காசு  தரீங்களா இல்லையா??

 அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் (கொடுக்குறதே ஒத்த ரூபா... அதுல ஆயிரத்தெட்டு கேள்வின்னு திட்டிட்டு போவாய்ங்க.)

பாத்துக்கோ... நானும் ரவுடிதான்...
பணம் கேக்குற வரைக்கும் சாதுவா இருப்பாங்க. கொடுக்கலைன்னா அவ்வளவுதான்....

அவங்க வாய்ல இருந்து வர்ர கெட்ட வசனங்களுக்கு ஒரு குடும்பமே தூக்குபோட்டு செத்துடலாம். அதிலும் பொம்பள தாதான்னா சொல்லவே தேவை இல்ல...

தானாய் சேர்ந்த கூட்டம்
கோயில் தர்காக்களில் இவங்களின் ஒற்றுமை ரொம்பவே பாராட்டுக்குரியது. ஒரு ஆளுக்கு காசு கொடுத்துட்டு திரும்பினா போதும் ஊரே உங்க பின்னாடி! காசு வாங்கினவன் போற வழியெல்லாம் சொல்லிட்டே போவான்.. ஒடனே அவங்க நம்மல பிடிச்சுடுவாங்க. யே இல்லப்பான்னு சொன்னா, அப்ப அவனுக்கு மட்டும் கொடுத்தீங்க? ஏன் இப்படி ஓரவஞ்சன???? (அழுதுடுவேன்)

இப்ப ஆமிக்கதை :
ஒரு முறை சீரியஸா பேசிட்டே வாக்கிங் வரும் போது (எண்ணெய்வளமிக்க நாடுகள பத்தியா  பேசப்போறேன். எல்லாம் ஊர்வம்பு கதை தான்) அருகில் இருந்த அண்ணாவை காணவில்லை. சில நிமிடங்களில் மீண்டும் இணைந்தார்.

எங்கே போன?

டீ குடிக்க காசு கேட்டுச்சு அத பெருசு. சில்லர கொடுத்துட்டு வரேன்.

ம்ம்


ஏன் ஆமி... அவங்க பாவம் இல்ல?

எனக்கு அப்படி தெரியல... கை கால் இருக்குல!


அவங்களுக்கென்ன ஆசையா இப்படி பிச்சை எடுக்கணும்னு? நீ யார்க்கிட்டையாவது பணம்னு போயி நின்னுருக்கீயா?  கூச்சமா இருக்கும் தானே கேட்க?

ம் ஆமா

அதே தானே அவங்களுக்கும்? சரி அதே ஆள் உன்னைய பார்த்து "சீ போ வெளியே பணம்லாம் இல்லன்னு சொன்னா உன் ரியாக்‌ஷன் எப்படி இருக்கும்?

.............
அந்த இடத்தில் அம்மாவையும், அப்பாவையும் வச்சு பாரேன். நீ இப்படி சொல்ல மாட்ட!

...............

அண்ணா சொன்னது சரிதான். அவன்  சொன்னது சில தாக்கங்களை ஏற்படுத்தினாலும் என் பிடிவாதம் இன்னும் அப்படியே தான் இருக்கு என்னை விட்டு போகாமல்.  இந்தியாவில் தொழிலுக்கா பஞ்சம்????

உண்மையிலேயே யாசகம் கேட்கும் அளவுக்கு நிலமை இருப்பவர்களை வைத்துக்கொண்டு  புரட்சிகரதிட்டங்கள் கொண்டு வந்து என்ன பண்ண? மொதல்ல இத கவனிங்கப்பா...
தனி ஒருத்தனுக்கு உணவு இல்லைன்னா ஜகத்தை அழிக்க போறோம்னு கட்டுரையிலும்  கவிஞர் பெருமைக்கும் தான் சொல்லிட்டு திரியுறோம் :'(


, ,

50 comments:

  1. அரசியல் வியாதிகள் இலவசம்முன்னு சொல்லி குடுப்பதை காரில் வந்து வாங்கும் ஆட்களை பார்த்திருக்கிரேன் .

    அந்த மானாட மயிலாட பார்க்க கரெண்ட் வேனுமுங்களே...அவ்வ்வ் :-))

    ReplyDelete
  2. ///உண்மையிலேயே யாசகம் கேட்கும் அளவுக்கு நிலமை இருப்பவர்களை வைத்துக்கொண்டு புரட்சிகரதிட்டங்கள் கொண்டு வந்து என்ன பண்ண? மொதல்ல இத கவனிங்கப்பா... ///

    வழக்கம் போல நச்..

    ஆனால் இதில் பெரும்பாலும் இருப்பவர்கள் பெற்ற மக்களால் கைவிடப்பட்டவர்கள் தன் எனபது வருந்தத்தக்க விஷயம்.

    ///இந்தியாவில் தொழிலுக்கா பஞ்சம்???? //

    இவங்க தொழில் செய்ய கத்துக்குடுத்தாலும் மீண்டும் திரும்பி அதே நிலைமைக்குதான் திரும்புவார்கள் என்பது என் எண்ணம்

    ReplyDelete
  3. அரசியல் வியாதிகள் இலவசம்முன்னு சொல்லி குடுப்பதை காரில் வந்து வாங்கும் ஆட்களை பார்த்திருக்கிரேன் .

    அந்த மானாட மயிலாட பார்க்க கரெண்ட் வேனுமுங்களே...அவ்வ்வ் :-))
    //

    ஹா...ஹா...ஹா...

    மழைக்காக நிவாரண நிதி 2000 ரூபாய் கொடுத்த போது எங்கள் தெருவில் உள்ள பெரிய புள்ளிங்க ஒரு ரேஷன்கார்ட்க்கு 2000 ரூபாய்ன்னு வாங்கிக்கிட்டாங்க :'(

    என்னத்த சொல்ல???
    // அந்த மானாட மயிலாட பார்க்க கரெண்ட் வேனுமுங்களே...அவ்வ்வ் :-))//

    அவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  4. @Cute Parents

    சரியான வழியை காண்பித்து சட்டமும் நடைமுறைபடுத்தினால் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு பிற்காலத்தில் முழுவதுமாக ஒழிக்கலாம் Cute Parents :-)

    வருகைக்கு நன்றிங்க

    ReplyDelete
  5. //மழைக்காக நிவாரண நிதி 2000 ரூபாய் கொடுத்த போது எங்கள் தெருவில் உள்ள பெரிய புள்ளிங்க ஒரு ரேஷன்கார்ட்க்கு 2000 ரூபாய்ன்னு வாங்கிக்கிட்டாங்க :'( //

    அதேதான் , பப்ளிக்கா சொல்லவேனாமுன்னு நினைச்சேன் நீங்க சொல்லிட்டீங்க ....அப்புறம் பிளாகரா இருந்து என்ன புண்ணியம் ஹி..ஹி... :-))))

    ReplyDelete
  6. @ஜெய்லானி
    ///மழைக்காக நிவாரண நிதி 2000 ரூபாய் கொடுத்த போது எங்கள் தெருவில் உள்ள பெரிய புள்ளிங்க ஒரு ரேஷன்கார்ட்க்கு 2000 ரூபாய்ன்னு வாங்கிக்கிட்டாங்க :'( //

    அதேதான் , பப்ளிக்கா சொல்லவேனாமுன்னு நினைச்சேன் நீங்க சொல்லிட்டீங்க ....அப்புறம் பிளாகரா இருந்து என்ன புண்ணியம் ஹி..ஹி... :-))))//

    ஹி...ஹி...ஹி...

    உங்க பேர காப்பாத்த வேண்டாமோ ஹி...ஹி...ஹி..

    அப்பறம் ஜெய்லானி அறிமுகப்படுத்திய பதிவர்ன்னு சொல்லி என்ன பண்ண?? :-)

    ReplyDelete
  7. பதிவு கலக்கலா இருக்கு ஆமினா.சொல்ல வந்ததை தெளிவாக சொல்லிட்டீங்க.

    ReplyDelete
  8. சரியாக சொன்னாலும் அப்படிப்பட்ட ஒரு வர்க்கத்தினர் இருக்கத்தான் செய்கின்றனர்....இந்தியாவில் மட்டுமல்ல வல்லரசு நாடுகளிலும் தான்

    ReplyDelete
  9. தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் மானாட மயிலாட பாக்கலாம்!!!/////

    அப்போ, நிறையப் பேருக்கு உணவு இல்லைன்னா, ஜோடி நம்பர் ஒன் பார்க்கலாமா?

    ReplyDelete
  10. முன்னெச்சரிக்கை :அப்பறம் முன்கூட்டியே சொல்லிக்கிடுதேன். எனக்கு மத்தவங்கள மாதிரியெல்லாம் இரக்க குணம் சத்தியமா சத்தியமா சத்தியமா இல்லைங்க. /////

    அப்போ, எல்லோரையும் விட ரொம்ப ஜாஸ்தியா இருக்குமா?

    ReplyDelete
  11. (நீ அரசியல்ல தெகிரியமா நொழையலாம் ஆமி:-)//////

    ஹா ஹா ஹா எல்லாரும் அரசியல்ல குதிக்குறேன்னுதானே சொல்லுவாய்ங்க! நீங்க என்ன புதுஷா நொழையலாம்கறீங்க?

    ReplyDelete
  12. மெட்ராஸ் பவனின் சரக்கை தான் இன்னைக்கு நாம கொஞ்சமா பாலிஸ் பண்ணி,///////

    அப்போ அவரு எழுதினது பாலிஷ் பன்ணப்படாத மொக்கைப் பதிவுன்னு சொல்ல வர்ரேளா? ( ஹி ஹி ஹி ஹி எப்புடிக் கோர்த்துவிட்டோம்ல! )

    ReplyDelete
  13. நாமெல்லாம் எப்போதும் "யாதும் ஊரே" என்ற உயரிய கொள்கையோட இருப்பதால்(ஹி...ஹி...ஹி...) ///////

    அதென்னாங்க யாது ஊரே....? இப்போ சில இடங்கள் மட்டும்தான் இன்னிம் வில்லேஜா இருக்கு! அதாவது ஊர்!

    மத்தபடி நிறைய ஊர்கள் இப்ப சிட்டியா மாறிடுச்சே?

    அப்புறம் எப்புடி யாதும் ஊரேன்னு சொல்லுவீக?

    ReplyDelete
  14. ஹி...ஹி...ஹி... அப்ப தான் புரிஞ்சது லோகத்துல பல பொம்மனாட்டிங்க இப்பதேன் தன் மாமியார கற்பன பண்ணி சந்தோஷப்பட்டுக்குறாங்க போல... அவ்வ்வ்வ்வ் ///////

    ஹா ஹா ஹா செம ஜோக்! சரி உங்க மாமியரையும் இப்படித்தானே கற்பனை பண்ணுவீங்க? மருவாதியா உண்மையச் சொல்லுங்க!

    ReplyDelete
  15. லஞ்சமும் பிச்சையும் கூடிப்பிறந்த அண்ணன் தம்பிங்கபோல இவை இரண்டையும் சேர்த்தே விரட்டணும்.

    ReplyDelete
  16. ஹீ ஹீ மாட்டரே மெட்ராஸ் பவானில கையேந்தி பெற்றது......பிச்சையை ஒழிக்கணும் என்று அட்வைஸ்.... ஹா ஹா ரொம்ப நல்லா தேறிட்டிங்க ஆமினா

    ReplyDelete
  17. நல்லதோர் பதிவு ஆமினா!
    கிராமங்களில் இப்படி பிச்சைக்காரர்கள் இல்லை. நகரங்களில்தான் இவர்கள் தொல்லை.. அதிகமான பிச்சைக்காரர்கள் இதை ஒரு தொழிலாகவே செய்கிறார்கள். (ஒரு சிலரை தவிர்த்து)

    ReplyDelete
  18. அஸ்ஸலாமு அலைக்கும்,

    //இந்தியாவில் தொழிலுக்கா பஞ்சம்????///

    சரியா கேட்டுருக்கீங்க. சின்ன வயசுல, வெள்ளிக்கிழமை ஆனா என்னைய சில்லரைகளோட வீட்டுக்கு வெளியே உட்காரவைத்து, யாசகம் கேட்க வருபவர்களுக்கு கொடுக்க சொல்வார் தந்தை. கூட்டம் கூட்டமா வருவாங்க. ஆனா இப்ப யாரையுமே அப்படி காண முடியல. அப்படியே வந்தாலும் ஒன்றிரண்டு பேரு தான் வராங்க.

    ஒரு நாள் யாசகம் கேட்பவர்களுக்கு அம்மா உணவு கொடுத்து வர சொல்ல தேடி கண்டுபிடித்து கொடுத்திட்டு வந்தேன். இப்ப எங்க சொந்த ஊருக்கு வந்து விட்ட போதும், யாசகம் கேட்க வருபவர்களின் எண்ணிக்கை குறைவா தான் இருக்கு. ஊர்ல எங்கேயும் பார்க்க முடிவதில்லை. பட் வெள்ளிக்கிழமை ஜும்மாவிற்கு பிறகு சிலபலரை பார்க்க முடிகின்றது. இருப்பினும் இதுவும் முன்பை விட ரொம்ப குறைவே.

    ஆக, நீங்க சொன்ன படி (அடுத்த தலைமுறையினர்) பலரும் தங்கள் நிலையை புரிந்துக்கொண்டு ஏதேனும் வேலையை பார்த்து தங்களை காப்பாத்திருக்காங்கன்னு தான் தோணுது. அடுத்தடுத்த தலைமுறைகளில் யாசகம் கேட்பவர்களின் எண்ணிக்கை இன்னும் குறையும் என்றே நினைக்கின்றேன். இன்ஷா அல்லாஹ்

    அதேநேரம் இந்த நிலை குறையுமே தவிர முற்றிலும் ஒழிக்க முடியுமான்னு தெரில. காரணம், பலரும் சூழ்நிலைக்காக யாசகம் கேட்கின்றார்கள் என்ற போதும், சிலர் அறிந்தே இதில் சுகம் கண்டு அதில் திளைக்கவே விரும்புகின்றனர்.

    யாசகம் கேட்பதை அரசாங்கம் பல வழிகளில் குறைக்க முயற்சித்து கொண்டு தான் இருக்கின்றது. நம்மால் முடிந்தது என்றால், சில வழிமுறைகளை பின்பற்றலாம். நம் ஜகாத் பணத்தை பலருக்கும் பிரித்து கொடுக்காமல், இது போன்ற சிலரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தொழில் வைத்து கொடுக்கலாம். இப்படி பலர் செய்துக்கொண்டு தான் இருக்கின்றனர் என்ற போதும், மக்களிடம் இது குறித்த இறையச்சத்தை ஊட்டி மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். அது போல, சதக்காவை (தர்ம பணம்) கொண்டும் செய்யலாம்.

    ஆக இரண்டு பக்கமும் (நாமும் யாசகம் கேட்கபவர்களும்) சேர்ந்து, கூடவே அரசாங்கமும் சேர்ந்தால் இதில் நல்ல பயன் இருக்கும். இன்ஷா அல்லாஹ்

    குறிப்பு: //செய்யும் தொழிலே தெய்வம்// - இதற்கு பக்கத்தில் ஒரு கேள்வி குறி சேர்த்துக்கொள்ளுங்கள். //செய்யும் தொழிலே தெய்வம்?// - இப்படியாக

    ஜசாக்கல்லாஹ்

    வஸ்ஸலாம்,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  19. Asiya Omar said...

    பதிவு கலக்கலா இருக்கு ஆமினா.சொல்ல வந்ததை தெளிவாக சொல்லிட்டீங்க.
    //

    ரொம்ப நன்றிங்க ஆசியா

    ReplyDelete
  20. அருமை ..மிக்க அருமை ....உங்களின் பதிவை விட வலைபக்க தொடர்புகள் குறித்த கமெண்ட்ஸ் அருமை ,,குறிப்பாக
    இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :

    ReplyDelete
  21. @இம்ரான்

    ///சரியாக சொன்னாலும் அப்படிப்பட்ட ஒரு வர்க்கத்தினர் இருக்கத்தான் செய்கின்றனர்....இந்தியாவில் மட்டுமல்ல வல்லரசு நாடுகளிலும் தான்

    //

    எதுக்கெடுத்தாலும் எங்கம்மா அமெரிக்காலலாம் பிச்சக்காரங்க இருக்கவே மாட்டாங்கன்னு சொல்லுவாங்க... நீங்க என்ன இப்படி சொல்லிட்டீங்க :-)

    ReplyDelete
  22. @ஐடியா

    தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் மானாட மயிலாட பாக்கலாம்!!!/////

    அப்போ, நிறையப் பேருக்கு உணவு இல்லைன்னா, ஜோடி நம்பர் ஒன் பார்க்கலாமா?//

    உங்கள தவிர யாருக்கும் இந்த மாதிரியான அறிவார்ந்த கேள்விகள் கேட்கவே தெரியாதுங்கோ..!!!!

    ReplyDelete
  23. @ஐடியா

    //
    அப்போ, எல்லோரையும் விட ரொம்ப ஜாஸ்தியா இருக்குமா?//

    நா நல்லவன்னு இல்லைன்னு சொல்றேன்... மறுபடியும் மறுபடியும் என்னை நல்லவளாக்கிக்கிட்டு!!!!!! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    அப்பறம் யாரையும் திட்ட முடியாம போயிடும் ;-)

    ReplyDelete
  24. @ஐடியா

    //(நீ அரசியல்ல தெகிரியமா நொழையலாம் ஆமி:-)//////

    ஹா ஹா ஹா எல்லாரும் அரசியல்ல குதிக்குறேன்னுதானே சொல்லுவாய்ங்க! நீங்க என்ன புதுஷா நொழையலாம்கறீங்க?//

    ஏன் மாத்தியோசிக்குறத நீங்க மொத்தமா குத்தகைக்கு எடுத்துக்கிட்டீங்களா?? நாங்களாம் மாத்தி யோசிக்க கூடாதா ஹி..ஹி..ஹி..

    ReplyDelete
  25. @ஐடியா
    //நாமெல்லாம் எப்போதும் "யாதும் ஊரே" என்ற உயரிய கொள்கையோட இருப்பதால்(ஹி...ஹி...ஹி...) ///////

    அதென்னாங்க யாது ஊரே....? இப்போ சில இடங்கள் மட்டும்தான் இன்னிம் வில்லேஜா இருக்கு! அதாவது ஊர்!

    மத்தபடி நிறைய ஊர்கள் இப்ப சிட்டியா மாறிடுச்சே?

    அப்புறம் எப்புடி யாதும் ஊரேன்னு சொல்லுவீக?//

    அட ஒலக அறிவாளிகளா??????!!!!!

    ReplyDelete
  26. @ஐடியா

    //ஹி...ஹி...ஹி... அப்ப தான் புரிஞ்சது லோகத்துல பல பொம்மனாட்டிங்க இப்பதேன் தன் மாமியார கற்பன பண்ணி சந்தோஷப்பட்டுக்குறாங்க போல... அவ்வ்வ்வ்வ் ///////

    ஹா ஹா ஹா செம ஜோக்! சரி உங்க மாமியரையும் இப்படித்தானே கற்பனை பண்ணுவீங்க? மருவாதியா உண்மையச் சொல்லுங்க!//

    ஆத்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்தி.......

    மவராசி... நா ஒன்ன சொல்லல தாயி! இது திட்டமிட்ட சதி :(

    ReplyDelete
  27. @அம்பலத்தார் அண்ணா

    //ஹீ ஹீ மாட்டரே மெட்ராஸ் பவானில கையேந்தி பெற்றது......பிச்சையை ஒழிக்கணும் என்று அட்வைஸ்.... ஹா ஹா ரொம்ப நல்லா தேறிட்டிங்க ஆமினா//

    இத யாராவது சொல்லி பல்பு கொடுப்பாங்கன்னு பார்த்தேன்... சரியா நடந்துடுச்சு அவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  28. @அம்பலத்தார் அண்ணா

    //லஞ்சமும் பிச்சையும் கூடிப்பிறந்த அண்ணன் தம்பிங்கபோல இவை இரண்டையும் சேர்த்தே விரட்டணும்.//

    அச்சச்சோ...

    லஞ்சத்தை ஒழிச்சுட்டா நிறைய பேரு பிச்சை எடுக்க ஆரம்பிச்சுடுவாங்களே நீங்க வேற ஹி..ஹ்.இ...ஹி...

    ReplyDelete
  29. @காட்டான் அண்ணா

    //நல்லதோர் பதிவு ஆமினா!
    கிராமங்களில் இப்படி பிச்சைக்காரர்கள் இல்லை. நகரங்களில்தான் இவர்கள் தொல்லை.. அதிகமான பிச்சைக்காரர்கள் இதை ஒரு தொழிலாகவே செய்கிறார்கள். (ஒரு சிலரை தவிர்த்து)//

    ஆமாண்ணா
    பெரும்பாலும் கிராமங்களீல் நான் கூட பார்த்தது குறைவு தான். அங்கே கொடுக்கக்கூடியவர்கள் அரிது என்பதும் ஒரு காரணம். ஆனால் அதையே நகரத்தாரும் செய்ய ஆரம்பித்தால் நிச்சயம் விரும்பி செய்யும் வகையினர் ஒழிவார்கள்

    ReplyDelete
  30. @சகோ ஆஷிக்

    வ அலைக்கும் சலாம் வரஹ்...

    ஆம் சகோ. இப்போதெல்லாம் ரொம்ப கம்மி தான். எல்லாரும் கவுரமாய் சம்பாதிக்க விரும்பி வருகின்றனர். தொழிலாய் செய்தவர்கள் கூட அடுத்த தலைமுறை இதனை செய்ய கூடாது என்பதில் கவனமா இருக்காங்க. பக்கீர்ஷா முறை ஒழிந்துவருவது கண்கூடு! அல்ஹம்துலில்லாஹ்

    அம்மா பணமாக கொடுக்காமல் ஒரு ஆளுக்கு ஒரு கப் வீதம் அரிசி கொடுப்பார். சாதம் கொடுப்பார். தேவையான விஷயங்களை செய்யலாமே ஒழிய அவர்களுக்கு சொகுசை வழங்குவது வீண்.

    நீங்கள் சொன்ன விஷயம் ரொம்ப அருமை. நிச்சயம் நல்ல பயனை கொடுக்கும். வருடம் ஒரு ஆள் என தேர்ந்தெடுத்து செய்யலாம். உண்மையாக துன்பப்படுபவர்களை கண்டறிந்து தேவைபடும் வசதியை செய்து கொடுக்கலாம்

    அழகிய பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சகோ
    ஜஸக்கல்லாஹ் ஹைர்

    ReplyDelete
  31. @பெஸ்ட் எலக்ட்ரானிக் காரைக்குடி
    //அருமை ..மிக்க அருமை ....உங்களின் பதிவை விட வலைபக்க தொடர்புகள் குறித்த கமெண்ட்ஸ் அருமை ,,குறிப்பாக
    இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க ://

    உங்கள் முதல் வருகைக்கு நன்றிங்க
    பரவாயில்லையே.. பதிவோட அதையும் கவனிக்கிறீங்களா?

    மிக்க நன்றிங்க

    ReplyDelete
  32. யாசகம் பெறுவதில் எத்தனை வகைகள்? கலக்கலாய் தொகுப்பு.

    ReplyDelete
  33. @நிஜாமுதீன்
    //யாசகம் பெறுவதில் எத்தனை வகைகள்? கலக்கலாய் தொகுப்பு.//

    ஆமா சகோ... இன்னும் அதிகம் இருக்கு... ஹி...ஹி...ஹி..


    வருகைக்கு நன்றிங்க

    ReplyDelete
  34. அன்பு சகோதரி,

    நான் சில சமயங்களில்
    உண்மையிலேயே யாசகம்
    செய்துகொண்டிருக்கும் நபர்களை சந்தித்திருக்கிறேன்..

    " ஆனால் ஒரு விஷயம் அவர்கள் என்னிடம்
    காசுபணம் கேட்கவில்லை.... எனக்கு பசிக்குது என்று தான் கேட்டார்கள்..

    ஒருவேளை சாப்பாடு போட்ட பின்னர் யோசித்தேன்..
    இது போதுமா இவருக்கு..
    அடுத்த வேளை என்ன செய்வார் என்று..
    அவரை ஒரு முதியோர் காப்பகத்தில் சேர்த்துவிட்டேன்..""

    ஆனால் இன்றைக்கு யாசகம் என்ற பெயரில்
    பிழைப்பு நடத்துபவர்களே அதிகம்...

    அருமையா எழுதி இருக்கீங்க சகோதரி..

    (இப்படி எல்லாம் தலைப்பு வைக்க உங்களால் மட்டும்தான் முடியும்)

    ReplyDelete
  35. நல்லாவே மத்தியோசிகிரிங்களே...

    தலைப்பை சொன்னேன் - இப்ப அதுக்கு கூட 'பவர்" இல்லையே.

    ReplyDelete
  36. @மகேந்திரன் அண்ணா

    இப்படியானவங்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்து கொடுப்பது ரொம்பவே நல்ல விஷயம் அண்ணா. உங்கள் அழகிய மனதிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

    நீங்கள் சொல்வது போல் இதை தொழிலாக செய்பவர்கள் ஏராளம். அதை நினைக்கையில் தான் ஒட்டுமொத்தமாய் எல்லாரையும் வெறுக்கவேண்டியதாக உள்ளது.

    பல்லாவர ரயில்வேஸ்டேஷனில் 5 வருடங்களாகவே அந்த பெண்ணை பார்க்கிறேன். ஊனமுற்ற நிலையில் தவழ்ந்துக்கொண்டு தான் வருவார். அவருக்கு பணம் போடும் கூட்டத்தை விட வண்டியில் ஆரம்பரமாக சாமிபடங்களை வைத்து பிச்சை கேட்கபவ்ர்களுக்கு பணம் கொடுக்கும் கூட்டம் அதிகம்! என்ன சொல்ல? தகுதியானவர்க்கு உதவும் மனபக்குவம் நம்மிடம் இல்லையோ என பல நேரம் வருந்தியதும் உண்டு

    //
    (இப்படி எல்லாம் தலைப்பு வைக்க உங்களால் மட்டும்தான் முடியும்)//

    அவ்வ்வ்வ்

    எதார்த்தமா வச்சது தான் அண்ணா :-)

    தொடர் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி அண்ணா

    ReplyDelete
  37. @மனசாட்சி
    // நல்லாவே மத்தியோசிகிரிங்களே...

    தலைப்பை சொன்னேன் - இப்ப அதுக்கு கூட 'பவர்" இல்லையே.
    //

    ஹா...ஹா...ஹா..

    வாங்க வாங்க
    அது வேறொன்னும் இல்ல...

    பதிவு போட்டுட்டு அப்படியே பப்ளீஸ் பண்ணிட்டேன். அப்பதான் தலைப்பு வைக்கலன்னு தெரிஞ்சது... சட்டுன்னு மானாடமயிலாட தான் நியாபகம் வந்துச்சு.. (அதானே செமையா கலாய்க்கப்படுது ஹி..ஹி..ஹி..)

    நன்றிங்க

    ReplyDelete
  38. ஆமிக்கதைன்னு இருக்க நம்ம ஊர் ஆமிக்கதை ஏதோ சொல்லப்போறீங்களோன்னு நினைச்சிட்டே.பகிடி இல்லப்பா உண்மையாத்தான் !

    எனக்கும் எல்லாப் பிச்சைக்காரர்களிடமும் இரக்கம் வருவதில்லை.சிலர் சோம்பேறித்தனத்தாலேயே பிச்சை எடுக்கிறார்கள் !

    ReplyDelete
  39. அருமையா எழுதி இருக்கீங்க நன்றி

    ReplyDelete
  40. @ஹேமா

    ஆ........... ஆமிய்ய்ய்ய்யா..................ஆ...........


    சரியா சொன்னீங்க ஹேமா... அப்படிப்ப்பட்டவர்களால் ஒட்டுமொத்தமாய் எல்லாரையும் சந்தேகப்பட வைக்குது! :'(

    ReplyDelete
  41. @மாலதி

    மிக்க நன்றி மாலதி

    ReplyDelete
  42. யோசிக்க வேண்டிய விசயத்தை நகைச்சுவயுடன் அழகா சொல்லிட்டீங்க.

    ReplyDelete
  43. பெற்றுக்கொள்கிறேன்

    நன்றி எல்.கே

    ReplyDelete
  44. /* அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் */ - அப்படின்னா என்னங்க????

    ReplyDelete
  45. ரொம்ப லாவகமா எழுதுறீங்க ஆமினா.... குட் போஸ்ட்....

    ReplyDelete
  46. @சிராஜ்

    ///* அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் */ - அப்படின்னா என்னங்க????//

    அது அறிவாளி, மேதைகளின் மொழி ஹி..ஹி..ஹி..

    ReplyDelete
  47. @சிராஜ்

    //ரொம்ப லாவகமா எழுதுறீங்க ஆமினா.... குட் போஸ்ட்....//

    அட :-)
    எல்லாம் உங்களோட பழகுவதால் வந்த மாற்றமாக இருக்குமோ ஹி..ஹி..ஹி..

    நன்றிங்க

    ReplyDelete
  48. ஆமினா அக்கா. நான் புது வரவு. என் பக்கமும் வந்து பாருங்க.உங்க பதிவும் பின்னூட்டங்களும் அசத்துதுக்கா.

    ReplyDelete
  49. http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_3.html
    அங்கு கண்டு மகிழ்ந்து நிறைவாக வாழ்த்து சொல்லி வந்தேன்

    ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)