நிர்மலா பெரியசாமியால் ஜீ தமிழ் தொலைகாட்சியில் நடத்தப்படும் நிகழ்ச்சியை பார்க்க சொல்லி அம்மா அடிக்கடி சொல்வார். என்னதான் இருக்கு என மதியவேளைகளில் ஒருமுறை பார்த்த போது, அழுதுகொண்டே அப்பெண் சொல்லும் குடும்ப பிரச்சனையை புரிந்துகொள்ளமுடியவில்லை. எப்படியோ புரிஞ்சுக்கிட்டு பார்த்துக்கொண்டு வரும் நேரத்தில் திடீரென சண்டையில் முடிகிறது... இதெல்லாம் நமக்கு ஒத்துவராது :-)  என ஒதுங்கினாலும் அவ்வபோது விளம்பரம் பாடாய்படுத்தும் :( ... அந்த விளம்பரத்திலும் நான் மேலே சொன்ன அழுகை மற்றும் சண்டை தான்.... டி ஆர் பி ரேட் தான் முதன்மையான காரணம் இதற்கு.... ஒருமணி நேரமோ அரை மணி நேரமோ ஓடுகிறதென நினைக்கிறேன். (நான் டீவி பாக்குறதில்லைங்குறது இப்பவாவது நம்புங்க மக்கா...நம்புங்க!)

சிறுவயதில் வீட்டில் நடக்கும் குடும்ப பிரச்சனைகளில் தாத்தா தான் நாட்டாமை. தாத்தா அருகில் அமர்ந்துகொண்டு, தாத்தா காலை பிடித்துக்கொண்டே  அவர்கள் பேசுவதை கேட்பதுண்டு (தேவர் மகன் சிவாஜியையும் அதில் வரும் நண்டு சுண்டுகளையும் கற்பன பண்ணிக்கோங்க)...  பிரச்சனைக்குரிய கணவன் மனைவியை (இது சித்தி-சித்தப்பா, மாமா-மாமி என குடும்ப உறுப்பினராகத்தான் இருக்கும்) தனித்தனியாக அழைத்து விசாரிப்பார். அதன் பின் இருவரையும் வைத்து அறிவுரை சொல்லி அனுப்புவார். அவ்வளவுதான் பிரச்சனை முடிந்தது...  (பெரியவங்க சண்டைல சின்னபசங்க ஏன் விட்டாங்க?ன்னு யோசனையா இருக்கா??? நானும் எங்க அக்காவும் "இது  என் காலு, அது உன் கால்" என தாத்தாவின் காலில் பாகப்பிரிவினை சண்டை போடுவதால் அந்த மொக்கை பிரச்சனைகளை காதில் வாங்குவதில்லை. அதுனால அவுங்களும் கண்டுக்கலையோ என்னவோ..)

ஏனோ அந்த நிகழ்ச்சியையும் அதில் வந்த சண்டைகளையும் பார்க்கும் போது வீட்டுல் நடந்த பஞ்சாயத்துகள் நியாபகத்துக்கு வந்தன...

1. குடும்பத்தில் பேசி முடிக்க முடியாத பிரச்சனையையா மீடியா தீர்த்துவிட போகிறது?

2. கணவனின் குறைகளை  நிகழ்ச்சியில் சொல்கிறார்கள். இது நிச்சயம் அந்த ஆணை அவமானப்படுத்தவே செய்யும். அதன் பின் எப்படி எல்லாவற்றையும் மறந்து அந்த ஆண் மீண்டும் இணைவானா... அப்படி மீண்டும் இணைந்தால் அவன் ஆயிரத்தில் ஒருவன் :-)

3. அடிதடியை  அனைவர் பார்க்கும் நிகழ்ச்சியில் காட்டுவதால் பிரச்சனை பெரிதாகுமே தவிர தீர்வு நோக்கி போய்விடுமா? இது மேலும் இரு குடும்பத்திற்கும் விரிசலைதானே உண்டாக்கும்...

4. இப்பலாம் கவுன்சிலிங் பண்றவங்க நிறைய பேரு இருக்காங்க. அவங்க கிட்ட நம் பிரச்சனையை சொன்னால் பிரச்சனையை முடிஞ்சளவு தீர்க்கவாவது பாப்பாங்க. அதை விடுத்து 'இதான் கணவன், இதான் மனைவி, இதான் பிரச்சனை என டிவியில் சொல்வதன் மூலம் என்ன சொல்ல வராங்க? பிரச்சனையை தீர்க்குறது எப்படின்னா???

என்னமோ....

எனக்கு நம்பிக்கை இல்ல... இது போன்ற நிகழ்ச்சிகளில் தீர்வு கிடைக்குமான்னு தெரியல.. கெடைச்சா நல்லது தான்! :-)

ஆங்க்... தாத்தா பத்தி சொன்னேன்ல??? இந்த பதிவின் அடுத்த சாரம் இதுதான்... இப்பலாம் கூட்டுகுடும்ப உறவு முறை சிதைஞ்சுட்டே வரதுனால  நம் பிரச்சனையை அடுத்தவர்களிடம் சொல்லும் நிலையே கூடிக்கொண்டு வருகிறது. நம் அருகில் அனுபவம் கொண்ட பெரியவர்கள் இப்போதெல்லாம் இல்லாததால், அல்லது இருக்க வைக்க விரும்பாததால் கோர்ட்களில் குடும்பநல வழக்குகள் அதிகமாய்ட்டே வருது....  (ஆமி! நீ மட்டும் என்ன கூட்டுகுடும்பத்துலையா இருக்க?ன்னு ஆரோ  சீண்டுதாக... வேண்டாம் அழுதுடுவேன்:-)

வேறொன்னும் இல்லைங்க.. என்னை பொறுத்தவரை, நான் பார்த்த வரை குடும்ப பிரச்சனைகளுக்கு காரணமே இந்த  பொண்ணு பெத்த அம்மா-அப்பாவாகதான் இருக்காங்க...  செல்லமாக வளர்ந்த தன் மகளை ஒரு சொல் கூட சொல்லவிடாது , கணவன் மனைவிக்குள் ஈகோவை உருவாக்குவதற்கு பெற்றோர்களே முக்கியகாரணமா இருக்காங்க...  இப்படிதான் செல்லமாக வளர்ந்த என் உறவு பெண், தன் அம்மாவிடம் முறையிடுகிறாள்...

பொண்ணு- அவர் துணியெல்லாம் நானே தொவைக்கவேண்டியிருக்குமா

அம்மா- அதுகளுக்கெல்லாம் துணி தொவைச்சு போடவா உன்ன கட்டிகொடுத்தேன்...  

(ஆமியாக இருந்தால் - அப்பன்னா வாசிங் மெஷின் வாங்கி கொடுமா... # கருத்துல கண்ணா இருக்கோணும் :-)))

பொண்ணு- காலைல போனா நைட் தான் வராரு.. நானே எல்லா வேலையும் பாக்க வேண்டியிருக்கு

அம்மா- நீ என்ன வேலைக்காரியா டீ?? இதென்ன கொடுமையா இருக்கு..

(ஆமியாக இருந்தால்- அப்பன்னா ஒரு வேலைக்காரப்பொண்ணு  அனுப்புமா... # நாங்களாம் ஆரு :-)))

___________________________

இப்படிதான்... தன் அம்மாவிடம் தன் குறைகளை சொல்ல போக அவர்களோ அதை பெரிதாக்கி  5 வருடங்கள் கழித்து டைவர்ஸில் வந்து முடிச்சு வைக்கிறாங்க சுவாகா!!! 

சரி கருத்துவேறுபாடு பிரிஞ்சுட்டாங்க.. அதன் பின் அப்பெண்ணுக்கு மறு வாழ்க்கை இருக்கு..இல்லைன்னு சொல்லல...  "இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ, இப்ப அம்மா அப்பா பாத்துப்பாங்க. அவங்க காலத்துக்கு பிறகு உன் நிலை? உன் குழந்தை நிலை? உன் பாதுகாப்பு? ன்னு கேள்வி அடுக்குனா  நம்மல ஏற எறங்க பாக்குதுங்க (மறுமணம் தீண்டாமை செயலோ? அட கூறுகெட்ட பக்கிகளா.....)

என்னமோ போங்க! ஆங் என்னன்ன இந்த பதிவுல சொல்லியிருக்கேன்?? சுருக்கமா சொல்லிடுறேன்...

1. சொல்வதெல்லாம் உண்மை - மீடியா குடும்ப பிரச்சனையை தீர்க்குமா இன்னும் விரிசலை ஏற்படுத்துமா?

2. நாட்டாம தாத்தா - இப்பலாம் அனுபவமுள்ள பெரியவங்க நம் பக்கத்தில் இல்லாததால நம் குடும்ப பிரச்சனைகளை நம்மால் எளிதில் தீர்த்துக்க முடியல... சாதாரண பிரச்சனையையும் இடியாப்ப சிக்கலாக்கிடுறோம்.

3. பிரச்சனைக்கு யாரு காரணம்-  அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள், தெளிவற்ற பெற்றோர்களின் ஆலோசணைகள்...

தீர்வு- பெற்றோர்களே... கல்யாணம் பண்ணி கொடுத்ததோட உங்க வேலை முடிஞ்சுடுச்சு... தயவு செய்து ஒதுங்கி வேடிக்கை மட்டும் பாருங்க! தடுக்கி கீழ விழுந்தா அவங்களா எந்திரிக்கட்டும்... விட்டுதள்ளுங்க....

குளிக்குள் தள்ளப்பட்டால் மட்டுமே நீங்க என்ட்ரி கொடுங்க!  பெற்றோர்கள் ஒதுங்கியிருந்தாலே பல பிரச்சனைகளுக்கு முற்றுபுள்ளி கிடைக்கும்....

முற்றுப்புள்ளி :-)))))

, ,

68 comments:

  1. இதுக்குத்தான் நான் இப்படி புரோகிராம் பார்ப்பதே இல்லை.குடும்ப கதையை சந்திக்கு இழுத்து அசிங்கம் பண்ணு கின்றார்கள்.அதிலும் சீரியலில் ஒரே அழுகாச்சி காட்சிகள் வருவதைப்போல் டி வி ஷோக்கலிலும் அழுவது ரொம்ப அபத்தமாக உள்ளது.

    ReplyDelete
  2. மாசா அல்லாஹ்....
    நான் நினைத்ததை சொல்லிவிட்டாய் ஆமி....
    குடும்ப உறவுகளின் குறைகளை எப்படித்தான் மீடியாவில் சொல்லிவிட்டு நம் ஊருக்குள் நுழைய முடியும்???

    இதுல அடி தடி வேற....

    நம்ம மக்களுக்கு அழுதா தான் போதுமே???

    உலகத்துல வேற குடும்ப நல ஆலோசகரே இல்லையா னு கேட்குறேன்???

    சமூக அக்கரையுள்ள பதிவு....வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. 1. சொல்வதெல்லாம் உண்மை - மீடியா குடும்ப பிரச்சனையை தீர்க்குமா இன்னும் விரிசலை ஏற்படுத்துமா? //////

    அது ஒரு மொக்கை புரோகிராம் ஆமினா! பார்த்தால் எரிச்சல்தான் வரும்! இந்த நிகழ்ச்சி ஒருபோதுமே குடும்பப் பிரச்சனைக்குத் தீர்வாகாது! மேலும் மேலும் குடும்பங்களுக்குள் விரிசலையே உண்டுபண்ணும்! நீங்க சொன்னது மாதிரி அவமானப்படுத்தல்கள் தான் அதிகம்!

    அப்புறம், பிள்ளைகள் திருமணம் ஆகிவிட்டால், பெற்றோர் அதில் தலையிடக் கூடாது என்பதும் ஒரு நல்ல கருத்து! வாழ்வோ சாவோ? அவங்களோட அப்டீன்னு விட்டிடோணும்!

    மொத்தத்துல நல்ல பதிவுங்கோ :))

    ReplyDelete
  4. இந்த மாதிரி நிகழ்சிகளால் நன்மையா????

    சரியா சொன்னீங்க தீர்வு

    ReplyDelete
  5. நிகழ்ச்சி பற்றிச் சொன்னதெல்லாம் சரிதான். நம் நலனில் அக்கறை கொண்டு செய்யப்படுவதில்லை நிகழ்ச்சி.

    // நான் பார்த்த வரை குடும்ப பிரச்சனைகளுக்கு காரணமே இந்த பொண்ணு பெத்த அம்மா-அப்பாவாகதான் இருக்காங்க..//
    இது எல்லாருக்கும் பொருந்தாது ஆமினா. மருமகளைக் கொடுமைப்படுத்தும் மாமனார்-மாமியார்-நாத்தனார்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். கொடுமை என்றால் - பழைய காலம் போல அடித்து, உணவு கொடுக்காமல் என்றில்லை. மனரீதியாக உளைச்சல் கொடுப்பது, மகனிடம் மனைவியைக் குறித்து தவறான புகார் செய்வது, ஏன் கணவனே அப்படிச் செய்வது, பணத்திற்காக மகன் மனைவியைப் பிரிய நேர்ந்தாலும் பரவாயில்லை என்று நினைப்பது... இதெல்லாம் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

    பெண்ணின் பெற்றோர்களாவது, விவாகரத்து என்ற எல்லையைத் தொட்டுவிடுமோ என்று அஞ்சுவார்கள். நீங்கள் சொன்னமாதிரி பெற்றோர் அட்லீஸ்ட் அந்த எல்லைக்கு வந்தபின்பாவது அடங்குவார்கள்.

    ஆனால் ஆண்களின் பெற்றோருக்கு எந்த எல்லையும் கிடையாது. விவாக்ரத்தைச் சொல்லியேதான் மிரட்டி, நினைத்ததைச் சாதிபார்கள். விவாகரத்து ஆனாலும், மகனை உடனே மார்க்கெட்டில் இறக்கிவிடலாம்!! :-(((((((

    ReplyDelete
  6. தமிழ் சேனல்களில் சிறந்த காமடி ப்ரோக்ராம் இது. நாட்டாமை நிர்மலா மேடம் செய்யற லந்து கொஞ்சமா..நஞ்சமா..!!

    ReplyDelete
  7. இதுக்கு டைம் வேஸ்ட் பண்ணதுக்கு கால் கிலோ கோந்து(பொங்கல்) செஞ்சிருக்கலாம் நீங்க!!

    ReplyDelete
  8. வணக்கம் சகோதரி. என் மனதில் தோன்றியதை அப்படியே எழுதிவிட்டீர்கள். அந்த நிகழ்ச்சி கண்டிப்பாக பிரச்சனைகளை தீர்த்து வைகாது . அதிகப்படுத்தவே செய்யும் என்பது எனது கருத்து. அத்துடன் அதில் பங்கேற்பவர்கலேல்லம் அடித்தட்டு மக்களாகவே உள்ளார்கள். பாவம் அவர்கள் பிறர் பார்க்கும் காட்சி பொருளாகிறோம் என்று அறியாதவர்களாக உள்ளார்கள்.

    ReplyDelete
  9. நீங்கள் கூறுவது மிகவும் சரி!.

    டி.வி.க்களுக்கு குடும்பத்தை சேர்த்து வைக்கவேண்டும் என்னும் பொதுநலமெல்லாம் கிடையாது, அவர்களுக்கு தேவை டி.ஆர்.பி ரேட் அவ்வளவுதான்.



    ReplyDelete
  10. //தடுக்கி கீழ விழுந்தா அவங்களா எந்திரிக்கட்டும்... விட்டுதள்ளுங்க.... //



    சரியா சொன்னீங்க ஆமீ .எங்கம்மா எனக்கு திருமணம் ஆனப்போ சொன்னாங்கா ...அப்ஸ் அன்ட் டவுன்ஸ் எல்லா இடத்திலும்(புகுந்த /பிறந்த ) இருக்கும் எல்லா விஷையதையும் பூதாகரமாக்க கூடாது ..
    ..அப்புறம் இந்த டாக் ஷோஸ்..கடந்த முறை சென்னையில் போனப்போ பாத்தேன் ஒரு நிகழ்ச்சி நடத்துவர் அந்த பிரச்சினையை ஊதி தம்பதியரை பிரிப்பதிலேயே குறியா இருந்தார் .மற்றும் பல லட்சம் பேர்(tv) முன்னிலையில் ஒரு கணவன் மனைவியடம் மன்னிப்பு கேட்க வைக்கிறாங்க ..அந்த மன்னிப்பை அவரே வீட்டில்தனிமையில் கேட்டிருந்தா போதுமே ..இப்படி நாலு பேர் முன் தேவையா
    பெரும்பாலும் வாழ்க்கையின் கடை நிலையில் இருப்போரை தேர்ந்தெடுத்து இந்நிகழ்ச்சிக்கு வர வைக்கிறார்களோ என்று தோன்றுகிறது

    ReplyDelete
  11. நானும் எங்க அக்காவும் "இது என் காலு, அது உன் கால்" என தாத்தாவின் காலில் பாகப்பிரிவினை சண்டை //
    ஆத்தாடி !!!! என்னா ஒரு டெர்ரர் ..தாத்தா கால்களுக்கே பாகப்பிரிவினையா :)))))))))

    ReplyDelete
  12. // தீர்வு- பெற்றோர்களே... கல்யாணம் பண்ணி கொடுத்ததோட உங்க வேலை முடிஞ்சுடுச்சு... தயவு செய்து ஒதுங்கி வேடிக்கை மட்டும் பாருங்க! தடுக்கி கீழ விழுந்தா அவங்களா எந்திரிக்கட்டும்... விட்டுதள்ளுங்க.... //

    அருமையான வரிகள்..... பெண்ணின் பெற்றோர்கள் தான் பாதிக்கும் மேற்பட்ட விவாகரத்திற்க்கு காரணம்... அப்பாடா!! கடைசி கடைசியா உங்க போஸ்ட்ல ஒரு உருப்படியான விஷயம் சொல்லி இருக்கீங்க....

    ReplyDelete
  13. என்னைப் பொறுத்தவரை பெண்கள் தவிர்க்க வேண்டிய நிகழ்ச்சி இதுவென்றே சொல்வேன்..

    ReplyDelete

  14. //பெற்றோர்கள் ஒதுங்கியிருந்தாலே பல பிரச்சனைகளுக்கு முற்றுபுள்ளி கிடைக்கும்....//

    முற்றிலும் உண்மை ஆமினா!
    தேவையான் அருமையான பதிவு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. ஹி ஹி ஹி...
    ரொம்ப நாளைக்கப்புறம் உங்க பக்கம் கருத்திடுறேன் முதல்ல வட பஜ்ஜிய கொண்டுவந்து வையுங்க...
    எல்லாமே கேட்டுத்தான் வாங்க வேண்டியிருக்கு...:(

    இந்த டீ வீ ப்ரோகிராம் எல்லாம் சப்ப..சும்மா ஒரு கிளு கிளுப்புக்குத்தான்...
    சுவாரஷ்யமான நிகழ்ச்சி செய்யிரோம் என்னுட்டு மத்தவண்ட வாழ்க்கையில மூக்க நுழைச்சிக்கொண்டு ....

    நிச்சயமா ஒரு சரியான திர்வ இவங்களால சொல்ல முடியாது வேணும்ணா அவங்க பிரச்சனைக்கு உரமிடுவதாத்தான் இந்த ப்ரோகிராம்கள் அமையும்...

    குடும்ப பிரச்சனை தொடர்பா நான் முன்னர் ஒரு பதிவிட்டுருக்கிறேன் நேரமிருப்பின் இந்த லிங்கில் சென்று படியுங்
    http://citukuruvi.blogspot.com/2012/06/blog-post_12.html

    ReplyDelete
  16. பெற்றோர்களே... கல்யாணம் பண்ணி கொடுத்ததோட உங்க வேலை முடிஞ்சுடுச்சு... தயவு செய்து ஒதுங்கி வேடிக்கை மட்டும் பாருங்க!
    பல சிக்கல்களுக்கும் இது, இந்த மேட்டர்தான் அடிப்படையே!ஆனால் இரு வீட்டு பெற்றோரும் என்று வந்திருக்கணுமோ?

    ReplyDelete
  17. மனசைத் திறந்து கொட்டுங்கன்னு சொல்லிச் சொல்லியே பிரச்னையைப் பெரிசு பண்ணி டிஆர்பி ஆதாயம் மட்டுமே குறியா இந்த மாதிரி நிகழ்ச்சிகள் இருக்குன்னு எனக்கு தோணுது கேள்விப்பட்ட வரையில. ஏன்னா... நான் தொலைக்காட்சி பாக்கறதில்லம்மா...

    ReplyDelete
  18. அஸ்ஸலாமு அழைக்கும் அம்மு..

    அருமையான பதிவு..! இந்த நிகழ்ச்சி நானும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பார்த்தேன்..!!

    நடுவராக இருக்கும் நிர்மலா பெரியசாமி பிரச்சனைக்கு தீர்வை சொல்வதை விட.. பிரச்சனையை ஊத்தி பெரிதாக்குவது போலவே எனக்கு தோன்றியது..! அவர்களாகவே சுமூகமாக ஒரு முடிவுக்கு வரப்போகின்றார்கள் என்ற நிலை வந்து விட்டால் நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்துவதற்காக வேண்டும் என்றே ஒரு சில லூசுத்தனமான கேள்விகள் கேட்டு மறுபடியும் பிரச்சனையை புகைய வைக்கிறார்..!! இந்த நிகழ்ச்சி மட்டுமல்ல நீயா நானா என்றொரு நிகழ்ச்சி அதிலும் இதே கதை.. புருசன் பத்தி பொண்டாட்டியும் பொண்டாட்டி பத்தி புருஷனும் நாட்டாமை அறிவாளி கோபிக்கிட்டே பஞ்சாயம் வைச்சத பாக்கும் போது அழுகுறதா சிரிக்கிறதான்னு ஒன்னும் புரியல போ..!

    நிகழ்ச்சி என்னமோ பாக்க நல்லாத்தான் இருக்கு ஆனால் இப்படி நாலு பேருக்கு மத்தியில்.. ஒருவரை ஒருவர் குறை சொல்லி கேவலப்படுத்தி விட்டு எப்படி இவர்களால் நாலு சுவற்றுக்குள் இனிமையாக இல்லறம் நடத்த முடியும்??

    கொடும..!!

    அருமையான பதிவுக்கு வாழ்த்துக்கள் அம்மு.!

    ReplyDelete
  19. @ஸாதிகா அக்கா

    // இதுக்குத்தான் நான் இப்படி புரோகிராம் பார்ப்பதே இல்லை.குடும்ப கதையை சந்திக்கு இழுத்து அசிங்கம் பண்ணு கின்றார்கள்.அதிலும் சீரியலில் ஒரே அழுகாச்சி காட்சிகள் வருவதைப்போல் டி வி ஷோக்கலிலும் அழுவது ரொம்ப அபத்தமாக உள்ளது.
    //

    அழுகை எனக்கு அபத்தமாக தெரியலக்கா... ஏன்னா தன் பிரச்சனையை பிறரிடம் சொல்லும் போது நிச்சயம் நம்மை மீறி நம் சோகம் வெளிப்படவே செய்யும். ஆனால் இதை தனக்கு சாதகமாக்கிகொள்கிறார்கள் மீடியாக்காரர்கள்... அவர்களை அழுக வைத்து, அதன் மூலம் விளம்பரத்தை தேடிக்கொள்கிறார்கள்...

    ஆனால் பல சமயங்களில் இது வெறூம் நாடகம் தானா என்ற எண்ணத்தையும் உருவாக்குது! என்னமோ :-)

    ReplyDelete

  20. @ஆஷா...

    ம்ம் சரியாசொன்ன ஆஷா... என் மாமியாரிடம் என்னவர் பற்றி ஏதேனும் சொன்னால் (மாமிக்கு ஆமி மேல என்ன நம்பிக்கையோ தெரியல.. எப்பவும் நம்ம பக்கம் தான் சப்போர்ட் பண்ணுவாக) ஏன் நம்ம விஷயத்தை அடுத்தவர்களிடம்(?!) சொல்ற? என்பார்... அதே போல் தான் எந்த பெண்ணும் தன் கணவன் தன் அம்மா, அக்கா,தங்கைகளிடம் தன் மனைவியை பற்றி குறை சொல்வதை விரும்புவதில்லை... இதுவே பெரிய பிரச்சனைக்கு வழி அமைத்துவிடும் போது, அடிதடி வரை இறங்கும் இந்நிகழ்ச்சிகளால் எப்படி தீர்வு எட்ட முடியும் என்பதே என் சந்தேகம்...

    //நம் ஊருக்குள் நுழைய முடியும்???//
    ம்ம்... இது நான் சொல்ல மறந்த விஷயம். நினைவூட்டலுக்கு நன்றி!
    நன்றி ஆஷா...

    ReplyDelete
  21. @மனசாட்சி
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மனசாட்சி

    ReplyDelete
  22. @ஹுசைனம்மா..

    //இது எல்லாருக்கும் பொருந்தாது ஆமினா.//
    சரிதான். இந்த காலத்தில் மன உளைச்சல் வழியாகதான் பெண்களுக்கு கொடுமைகள் நடத்தப்படுகிறது. அதன் மூலம் குடும்பத்தில் பிரச்சனை பூதாகரமாகிறது. இது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு பக்கம் தான் ஹுசைனம்மா... நான் பார்த்த வரையில் பெண்ணின் அம்மா தான் தன் பெண்ணிடம் ஈகோவை வளர்த்துவிடுறாங்க-இதான் பிரச்சனையின் முக்கிய மறுபக்கம்! அம்மாவிடம் குறை சொன்னால் அதை சரி செய்யத்தான் நினைக்கணுமே தவிர்த்து மேலும் தன் மகளை ஏத்திவிடும் பெற்றோர்கள் அதிகம் பார்க்கிறேன்! டைவர்ஸ் என கணவனின் பெற்றோர்கள் போகும் போது தான் இவர்கள் அடங்குகிறார்கள்.. அதுவரைக்கும் இரு தரப்பினரும் சரிக்கு சமமா தான் போட்டி போட்டு கடுகு பிரச்சனையை மலையாக்குகிறார்கள்...

    //ஆனால் ஆண்களின் பெற்றோருக்கு எந்த எல்லையும் கிடையாது. விவாக்ரத்தைச் சொல்லியேதான் மிரட்டி, நினைத்ததைச் சாதிபார்கள். விவாகரத்து ஆனாலும், மகனை உடனே மார்க்கெட்டில் இறக்கிவிடலாம்!! :-(((((((//

    உண்மை தான் ஹுசைனம்மா.. ஏற்றுக்கொள்கிறேன்..

    வருகைக்கும் அழகிய கருத்து பரிமாற்றத்திற்கும் நன்றி ஹுசைனம்மா..

    ReplyDelete
  23. @சிவா
    //தமிழ் சேனல்களில் சிறந்த காமடி ப்ரோக்ராம் இது. நாட்டாமை நிர்மலா மேடம் செய்யற லந்து கொஞ்சமா..நஞ்சமா..!!//

    ஆமா.. ஆமா.. மெட்ராஸ் பவன் சிவாலாம் தோத்துடுவாரு! :-))

    ReplyDelete
  24. @சிவா

    //இதுக்கு டைம் வேஸ்ட் பண்ணதுக்கு கால் கிலோ கோந்து(பொங்கல்) செஞ்சிருக்கலாம் நீங்க!! ///

    க்ர்ர்ர்ர்ர்ர்ர்,......

    'சமையலே தெரியாத ஒரு பெண் என் அண்ணியாக, சிவாவின் மனைவியாக கிடைக்க' பிரார்த்தனைகள் !!!

    ReplyDelete
  25. @சரண்துரை

    வணக்கம் சகோதரி. என் மனதில் தோன்றியதை அப்படியே எழுதிவிட்டீர்கள். அந்த நிகழ்ச்சி கண்டிப்பாக பிரச்சனைகளை தீர்த்து வைகாது . அதிகப்படுத்தவே செய்யும் என்பது எனது கருத்து. அத்துடன் அதில் பங்கேற்பவர்கலேல்லம் அடித்தட்டு மக்களாகவே உள்ளார்கள். பாவம் அவர்கள் பிறர் பார்க்கும் காட்சி பொருளாகிறோம் என்று அறியாதவர்களாக உள்ளார்கள்.
    //

    வாங்க சகோ சரண்... தீர்த்து வைக்காது என்பது தான் என் கருத்தும். ஒரு நிகழ்ச்சியில் நிர்மலா சொல்லியிருப்பார் "ஏகப்பட்ட மக்கள் பிரச்சனைகளோட காத்திருக்காங்க நம் நிகழ்ச்சியில் சொல்வதற்காக" என்று... இவர்களின் நோக்கம் நிகழ்ச்சி நடத்துவதோடு சரி... அந்த நிகழ்ச்சியில் அந்த பிரச்சனை குறித்து விவாதிப்பதோட சரி.. அடுத்த பிரச்சனைக்கு தாவுவாங்க! இதனால் எப்படி தீர்வு கிடைக்கும்னு நெனைக்கிறாங்க மக்கள்?

    ஒரு நாளில் ஒரு பிரச்சனையை கையில் எடுப்பவர்கள் அந்த நிகழ்ச்சி நேரத்தில் எப்படி பல வருட பிரச்சனைகளை சில நிமிடங்களி தீர்க்க முடியும்? இதை மக்களும் உணர்வதில்லை...

    ராக்கி என்ற நடிகையின் மூலம் இதுபோல் ஹிந்தி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஒரு வாலிபர் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டார். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது... ஒரு பெண் அளித்த பேட்டியில் எனக்கு பணம் தருவதாக சொல்லியிருந்தாங்க. அதான் நிகழ்ச்சிக்கு வந்தேன். ஆனா எனக்கு தெரியாம எங்க வீட்லையே கேமரா வச்சு என்னை அசிங்கப்படுத்திட்டாங்க என்றார்! ??!!!!!

    ஒரு பிரச்சனையை விவாதித்து, இரு தரப்பினரும் சமாதானம் ஆகி தீர்வு எட்டப்பட்ட நிலையில் நிகழ்ச்சி முடிக்கப்பட்டால் யாரால் என்ன கேள்வி கேட்க முடியும்?

    நல்ல கருத்து முன் வைத்தீங்க. நன்றி சகோ

    ReplyDelete
  26. வீட்டுக்குள்ளே இருந்தாலும் கவனமா இருங்க பெண்களே!

    மதுரை: பள்ளி, கல்லூரி, அலுவலகம் என்று வெளியே செல்லும் பெண்களுக்குத்தான் அச்சுறுத்தல்கள் ஏற்படும் என்றில்லை. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூட அச்சுறுத்தல்களும், அவர்களின் பாதுகாப்பிற்கு கேள்விக்குறி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

    நம் வீட்டிற்குள் கேபிள், பிளம்பிங், எலக்ட்ரிகல் வேலை என்று நுழையும் சில நபர்கள் நமக்குத் தெரியமாலேயே ஸ்பை கேமராவை பொருத்திவிட்டு சென்றுவிடுகின்றனர்.

    இவற்றை படம் பிடித்து அதனை பல ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து காசு பார்த்து விடுகின்றனர்.

    இது நடந்தது மும்பை, டெல்லி, சென்னை போன்ற பெரு நகரங்களில் இல்லை.

    நாகரீக வாசம் அதிகம் எட்டிப்பார்க்காத மதுரை மாவட்டத்தில்தான்.

    மதுரை அருகேயுள்ள கிராமமும் நகரமும் கலந்த ஒரு ஊரில்தான். இந்த சம்பவம் நடந்துள்ளது.

    பெரும்பாலும் அந்த ஊர்ப் பெண்கள் எல்லாம்... வீட்டுக்கு பின்புறத்தில் நான்கு பக்கமும் தென்னந்தட்டி மறைத்துக் கட்டப்பட்டிருக்கும் ‘பாத்ரூம்'களில்தான் குளிக்க வேண்டும், உடை மாற்ற வேண்டும்.

    விஷமக்கார இளைஞர்கள் சிலர், அந்த தட்டிக்கு இடையில் கேமராக்களை வைத்து படம் பிடித்துள்ளனர்.

    அதேபோல, படுக்கை அறைகளிலும் கேமராக்களை வைத்து படம்பிடித்துள்ளனர்.

    அவற்றையெல்லாம் எம்.எம்.எஸ், ப்ளூ டூத், மெமரி கார்டு என்று தங்களுக்குள் பகிர்ந்தது மட்டுமல்லாது, சி.டி. போட்டு விற்பனையும் செய்திருக்கிறார்கள்.

    கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக நடந்து வந்த இந்த அநியாயம்... சமீபத்தில்தான் வெளிச்சத்துக்கு வந்தது.

    அந்த ஊரைச் சேர்ந்த ஒருவன், தன்னுடைய செல்போனில் ‘படம்' பார்த்துக் கொண்டிருந்தது ஊரார் கண்களில் சிக்கியது.

    போலீஸ் வரை போனால் ஊர்ப் பெண்களின் மானம் பறிபோகும் என்று பதறிய ஊர்க்காரர்கள், எல்லா இளைஞர்களின் மெமரி கார்டுகளையும் பறிமுதல் செய்து எரித்திருக்கிறார்கள்.

    பாதிப்பிற்குள்ளான பெண்கள் தற்கொலைக்கு செய்து கொள்ள துணிந்திருக்கின்றனர்.

    இது, எங்கோ... யாருக்கோ... நடந்த சம்பவமில்லை. எங்கும் நடந்துகொண்டிருக்கும் கொடுமையே.

    கொஞ்சம் உஷாராக இல்லாவிட்டால், யார் வேண்டுமானாலும் இதில் சிக்கக்கூடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

    ‘நடிகைகள் தங்கும் பிரமாண்ட ஹோட்டல்களின் அறைகள், புதுமண ஜோடிகள் தங்கும் டூரிஸ்ட் ஸ்பாட் விடுதி அறைகள், ஜவுளிக் கடைகளின் டிரெஸ்ஸிங் ரூம்கள்... இங்கெல்லாம் ரகசிய கேமராக்கள் பதுங்கி இருக்கலாம்... ஜாக்கிரதை' என்று ஏற்கெனவே ஏகப்பட்ட எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வரும் நிலையில் வீடுதேடி வரும் வில்லங்கங்களை எப்படி சமாளிப்பது என்று கூறியுள்ளனர் நிபுணர்கள்.

    சீனாவில் இருந்து ‘ஸ்பை பாத்ரூம் கேமரா'ங்கிற பேரில், டூத் பிரஷ், பாத்ரூம் க்ளீனிங் பிரஷ், சோப் பாக்ஸ்ல எல்லாம் வைக்கிற மாதிரி விதவிதமான கேமரா மார்க்கெட்ல குவியுது..

    ஆனால் தற்போது ஹைடெக், காம்பாக்டு மொபைல்கள் வந்துட்டதால, அதை பாத்ரூம்ல வைக்குறதும் ஈஸி, எடுத்த காட்சிகளை ப்ளூ டூத், சி.டினு பகிர்ந்துக்கறதும் சுலபம் என்கின்றனர்.

    வீட்டிற்குள் உள்ள பெண்கள்தான் ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும்.

    பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சிலிண்டர் பாய், தண்ணீர் கேன் கொண்டு வருபவர், கேபிள்காரர் என்று வீட்டிற்குள் நுழைபவர் தெரிந்த நபராகவே இருந்தாலும் அலர்ட்டா இருக்கவேண்டும்.
    அவர் வேலை முடிச்சுப் போறவரைக்கும் கண்காணிச்சுட்டே இருந்து அனுப்பி வைக்கவேண்டும் என்கின்றனர்.

    சம்பந்தப்பட்ட நபர்கள் வெளியே சென்ற உடன் வீட்டிற்குள் உள்ள பொம்மை, நைட் லேம்ப், சுவர்க்கடிகாரம் என வீட்டில் இருக்கும் பொருள் ஏதாவது இடம் மாறியிருந்தால் அதை கண்காணிக்கவேண்டும் என்று கூறியுள்ளனர் நிபுணர்கள்.

    அதேசமயம் அநாவசியமா யாரையும் வீட்டுக்குள்ள அனுமதிக்கக் கூடாதுங்கறதுல கவனமா இருக்கணும்.

    இது குறித்து பேசிய மதுரை மாவட்ட எஸ்.பி பாலகிருஷ்ணன், "இப்படியொரு சம்பவம் நடந்ததாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்கவில்லை.

    விஷயம் வெளியில் தெரிந்ததுமே பல பெண்கள் தற்கொலைக்கு முயன்றதால்... பயந்துபோன ஊர்க்காரர்கள் புகார் தரத்தயங்குகிறார்கள் என்று தெரிகிறது.

    "உங்கள் வீட்டில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்து அதை நீங்கள் கண்டுபிடித்துவிட்டால், உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க வேண்டும்.

    பெயரை வெளியிட விருப்பம் இல்லாவிட்டால், போன் மூலமாகவே தகவலாக சொல்லலாம்.
    புகார் கொடுக்கும்பட்சத்தில், போன் பேச்சு (வாய்ஸ் ரெக்கார்ட்), வீடியோ போன்றவற்றை ஆதாரமாகக் கொடுக்கலாம்.

    இவை எதுவுமே இல்லை என்றாலும் கவலைப்படத் தேவைஇல்லை. எழுத்துப்பூர்வமாக ஒரு புகார் கொடுத்தாலே... கண்டிப்பாக விசாரித்து நடவடிக்கை எடுப்போம்.

    சம்பந்தப்பட்ட குற்றவாளியின் லேப்டாப், செல்போன் போன்றவற்றிலிருந்தே ஆதாரங்களை நாங்கள் சேகரித்துவிடுவோம் .

    http://tamil.oneindia.in/news/2012/09/19

    ReplyDelete


  27. இந்த நிகழ்ச்சி மூலமா 5 வருஷம் முன்னாடி நடந்த 3 கொலைகள் அம்பலப்படுத்தப்பட்டு ஒருத்தன் கம்பி எண்ணிகிட்ருக்கான்

    ReplyDelete
  28. @மாத்தியோசி - மணி said...

    1. சொல்வதெல்லாம் உண்மை - மீடியா குடும்ப பிரச்சனையை தீர்க்குமா இன்னும் விரிசலை ஏற்படுத்துமா? //////

    அது ஒரு மொக்கை புரோகிராம் ஆமினா! பார்த்தால் எரிச்சல்தான் வரும்! இந்த நிகழ்ச்சி ஒருபோதுமே குடும்பப் பிரச்சனைக்குத் தீர்வாகாது! மேலும் மேலும் குடும்பங்களுக்குள் விரிசலையே உண்டுபண்ணும்! நீங்க சொன்னது மாதிரி அவமானப்படுத்தல்கள் தான் அதிகம்!

    அப்புறம், பிள்ளைகள் திருமணம் ஆகிவிட்டால், பெற்றோர் அதில் தலையிடக் கூடாது என்பதும் ஒரு நல்ல கருத்து! வாழ்வோ சாவோ? அவங்களோட அப்டீன்னு விட்டிடோணும்!

    மொத்தத்துல நல்ல பதிவுங்கோ :))
    //

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  29. @Syed Ibramsha

    நீங்கள் கூறுவது மிகவும் சரி!.

    டி.வி.க்களுக்கு குடும்பத்தை சேர்த்து வைக்கவேண்டும் என்னும் பொதுநலமெல்லாம் கிடையாது, அவர்களுக்கு தேவை டி.ஆர்.பி ரேட் அவ்வளவுதான்.//

    நிகழ்ச்சியை பார்த்தால் அப்படிதான் தோன்றுகிறது

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  30. @angelin

    //முன்னிலையில் ஒரு கணவன் மனைவியடம் மன்னிப்பு கேட்க வைக்கிறாங்க ..அந்த மன்னிப்பை அவரே வீட்டில்தனிமையில் கேட்டிருந்தா போதுமே//

    ஹா..ஹா..ஹா..

    எப்படியும் வீட்ல, சொந்தக்காரங்க, கிராமம் என்றால் ஊர் பஞ்சாயத்துல என இவர்களால் தீர்க்க முடியாத குடும்ப பிரச்சனையை ஒரு மணி நேர ப்ரோக்ராம் தீர்த்திடும் என்பதில் எனக்கும் கூட நம்பிக்கை இல்லை ஏஞ்சலின்

    //பெரும்பாலும் வாழ்க்கையின் கடை நிலையில் இருப்போரை தேர்ந்தெடுத்து இந்நிகழ்ச்சிக்கு வர வைக்கிறார்களோ என்று தோன்றுகிறது//

    ஆம் ஏஞ்சலின்... இதுவரை நான் பார்த்ததெல்லாம் அந்த வகையறா தான்...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஏஞ்சலின்

    ReplyDelete
  31. @ஏஞ்சலின்

    //நானும் எங்க அக்காவும் "இது என் காலு, அது உன் கால்" என தாத்தாவின் காலில் பாகப்பிரிவினை சண்டை //
    ஆத்தாடி !!!! என்னா ஒரு டெர்ரர் ..தாத்தா கால்களுக்கே பாகப்பிரிவினையா :)))))))))//

    ஹா..ஹா..ஹா...

    பின்ன.. நால பின்ன சொத்துபிரச்சனை வரும் போது நம்மல ஏமாத்திட கூடாதுல ஹி..ஹி..ஹி...

    ReplyDelete
  32. சிராஜ் said...

    // தீர்வு- பெற்றோர்களே... கல்யாணம் பண்ணி கொடுத்ததோட உங்க வேலை முடிஞ்சுடுச்சு... தயவு செய்து ஒதுங்கி வேடிக்கை மட்டும் பாருங்க! தடுக்கி கீழ விழுந்தா அவங்களா எந்திரிக்கட்டும்... விட்டுதள்ளுங்க.... //

    அருமையான வரிகள்..... பெண்ணின் பெற்றோர்கள் தான் பாதிக்கும் மேற்பட்ட விவாகரத்திற்க்கு காரணம்... //

    ம் உண்மை தான்.. நான் பார்த்தவரையில் அப்படிதான் நடக்குது...

    //அப்பாடா!! கடைசி கடைசியா உங்க போஸ்ட்ல ஒரு உருப்படியான விஷயம் சொல்லி இருக்கீங்க....//

    க்ர்ர்ர்ர்ர்ர்ர்.... ஈ ஆடுற மொக்க ப்ளாக்-டீக்கடைக்கு இது எவ்வளவோ தேவல!

    ReplyDelete
  33. @மதுமதி

    //என்னைப் பொறுத்தவரை பெண்கள் தவிர்க்க வேண்டிய நிகழ்ச்சி இதுவென்றே சொல்வேன்..//

    படிப்பினை அற்ற நிகழ்ச்சி தான்...

    வருகைக்கு நன்றி சகோ...

    ReplyDelete
  34. புலவர் சா இராமாநுசம் said...


    //பெற்றோர்கள் ஒதுங்கியிருந்தாலே பல பிரச்சனைகளுக்கு முற்றுபுள்ளி கிடைக்கும்....//

    முற்றிலும் உண்மை ஆமினா!
    தேவையான் அருமையான பதிவு! வாழ்த்துக்கள்!
    //

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா

    ReplyDelete
  35. @மு.ஜபருல்லாஹ் அண்ணா

    பெற்றோர்களே... கல்யாணம் பண்ணி கொடுத்ததோட உங்க வேலை முடிஞ்சுடுச்சு... தயவு செய்து ஒதுங்கி வேடிக்கை மட்டும் பாருங்க!
    பல சிக்கல்களுக்கும் இது, இந்த மேட்டர்தான் அடிப்படையே!ஆனால் இரு வீட்டு பெற்றோரும் என்று வந்திருக்கணுமோ?

    //

    பெரும்பாலும் மாமியார் கொடுமை பத்தி எல்லாருக்கும் தெரியும் அண்ணா... ஆனா இன்னொரு பக்கத்தை யாரும் ஆராய்வதில்லை!

    பெண்ணூக்கு அறிவுரை வழங்க வேண்டிய பெற்றோர்கள் மேலும் மேலும் தூண்டி விடுவதன் மூலம் தான் பொருமையிழந்து சண்டை பெரிதாகிறது...

    நன்றி அண்ணா

    ReplyDelete
  36. @பால கணேஷ் அண்ணா

    மனசைத் திறந்து கொட்டுங்கன்னு சொல்லிச் சொல்லியே பிரச்னையைப் பெரிசு பண்ணி டிஆர்பி ஆதாயம் மட்டுமே குறியா இந்த மாதிரி நிகழ்ச்சிகள் இருக்குன்னு எனக்கு தோணுது கேள்விப்பட்ட வரையில. ஏன்னா... நான் தொலைக்காட்சி பாக்கறதில்லம்மா...//

    எனக்கு நிர்மலாவின் பங்களீப்பு பிடித்திருக்கிறது... அவரின் ஆளுமைதிறன் அற்புதமா இருக்கு.. பட் நிகழ்ச்சியின் கான்சப்ட் தான் வெறுக்கிறேன்...

    //ஏன்னா... நான் தொலைக்காட்சி பாக்கறதில்லம்மா...////

    கொல்லக்காலமா அதான் நானும் சொல்லிட்டிருக்கேன். ஒரு பக்கியும் நம்ப மாட்டேங்குதுகண்ணா :-)

    ReplyDelete
  37. @சர்மி

    வ அலைக்கும் சலாம் வரஹ்...

    //ஒருவரை ஒருவர் குறை சொல்லி கேவலப்படுத்தி விட்டு எப்படி இவர்களால் நாலு சுவற்றுக்குள் இனிமையாக இல்லறம் நடத்த முடியும்?? //

    இதான் என் கேள்வியும்! :( இது போன்ற நிகழ்ச்சிகள் முழுதாக ஒரு பிரச்சனையை ஆராய்ந்து தீர்க்க கூடியதாக இருந்தால் நிச்சயம் வரவேற்கதயார்...

    நிகழ்ச்சிக்கு பின்னரான வாழ்க்கை பற்றி அவர்களும் போடுவதில்லை!

    நீயா நானா -அதெல்லாமா பாக்குற? அதெல்லாம் அதிமேதாவிங்க பாக்குற ப்ரோக்ராம் ஆச்சே... :-) :-)

    ReplyDelete
  38. @உண்மைகள்

    செய்தி பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  39. siraj
    //அருமையான வரிகள்..... பெண்ணின் பெற்றோர்கள் தான் பாதிக்கும் மேற்பட்ட விவாகரத்திற்க்கு காரணம்... அப்பாடா!! கடைசி கடைசியா உங்க போஸ்ட்ல ஒரு உருப்படியான விஷயம் சொல்லி இருக்கீங்க....//

    ம்ம்..நானுந்தேன்

    ReplyDelete
  40. \\சொல்வதெல்லாம் உண்மை- சாத்தியமா?\\

    ஏன் சாத்தியமில்லை சகோதரி? கொஞ்சம் யோசித்து பாருங்க..
    எப்படியோ அவர்கள் வீட்டு உண்மைகள் வெளியே வந்துடுதுல்ல?

    \\ குடும்பத்தில் பேசி முடிக்க முடியாத பிரச்சனையையா மீடியா தீர்த்துவிட போகிறது?\\
    ஏன் தீர்க்க முடியாது?
    சரவணன்-மீனாட்சி ஒரு தம்பதி போதும் உதாரணத்திற்கு!

    \\நான் டீவி பாக்குறதில்லைங்குறது இப்பவாவது நம்புங்க மக்கா...நம்புங்க!\\
    டீவி பார்க்குறதில்லைன்னா இதை மட்டும் எப்படி பார்த்தீங்க? :D

    நானும் டீவி பார்ப்பதில்லை.. நம்புங்க!!

    ReplyDelete
  41. // க்ர்ர்ர்ர்ர்ர்ர்.... ஈ ஆடுற மொக்க ப்ளாக்-டீக்கடைக்கு இது எவ்வளவோ தேவல!//

    டீக்கடை எனக்கு ஒன்லி டைம் பாஸ்....பட் இது உங்களுக்கு வாழ்க்கை... கடைய தொறந்தா பத்திக்கிடுதில்ல..அது தான் விஷயம்... பட் இனி வாரம் ஒரு போஸ்ட் போடலாமான்னு யோசிக்கிறேன்... நிறைய சகோஸ்கிட்ட இருந்து ரிக்வஸ்ட்.... அடிக்கடி பதிவெலுத சொல்லி, பட் ஆக்கப்பூர்வமா மட்டுமே எழதனுமாம்....இதெல்லாம் நம்மால முடியுமா?? அதான் யோசிச்சிகிட்டு இருக்கேன்...

    ReplyDelete
  42. சிந்திக்க கூடிய ஒரு நல்ல பதிவு...பழைய சகோ ஆமினாவை இந்த பதிவில் நான் பார்க்கிறேன். இந்த மாதிரி பதிவைதான் நான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன். வாழ்க வளமுடன்

    ReplyDelete
  43. ஆஹா.. சொல்வதெல்லாம் உண்மை.. எங்கட அம்மாவும் பார்ப்பா... நான் எப்போதாவது பார்ப்பதுண்டுதான்ன்ன்.... ஒரே சோகம், அழுகை.. மனதுக்கு ஒரு மாதிரி இருக்கும்...

    ஆனாலும், வாழ்க்கையில் எப்படியெல்லாம் பிரச்சனைகள் வருகிறது, உலகில் மக்கள் எப்படியான பிரச்சனைகளினால் துன்பப் படுகிறார்கள் என்பதை அறிய அது உதவுகிறது...... அதை மட்டும் கவனிப்பேன்ன்...

    ReplyDelete
  44. அருமையான கருத்துக்கள் !!!!.......பகிர்வுக்கு மிக்க நன்றி தோழி .மேலும் தொடர வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  45. #குடும்பத்தில் பேசி முடிக்க முடியாத பிரச்சனையையா மீடியா தீர்த்துவிட போகிறது?
    #

    அதானே....மீடியாவுக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் அப்படி என்ன ஆர்வம்?மக்களுக்கு உதவ வேண்டும் என இதுவரை ஏதாவது ஒரு தொலைக்காட்சியாவது ஏதாவது பொது சேவைகள் புரிந்து உள்ளதா?எல்லாம் டி ஆர் பி செய்யும் மாயை

    ReplyDelete

  46. அறியாமையின் காரணமாகவோ வேண்டுமென்றோ இஸ்லாத்தின் மீது சேறு வாரியிறைப்பது இன்று பலருக்கும் ஒரு தொழிலாகிவிட்டது.

    தாங்கள் சார்ந்துள்ள மார்க்கங்களில், பின்பற்றக்கூடிய கொள்கைகளில் பெண்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் உரிமைகள் எவை?

    மறுக்கப்பட்டிருக்கும் உரிமைகள் எவை?

    பெண்களுக்குரிய மரியாதை, கண்ணியம், கௌரவம் எவை?

    அவை எவ்வாறு போற்றப்படுகின்றன என்பதைச் சிந்தித்து ஆராய்ந்து குறை நிறைகளைக் கண்டு நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக முஸ்லிம் பெண்களைப் பார்த்து விமர்சன அம்புகளை ஏவி விடுகிறார்கள்.


    இங்கு சொடுக்கி >>> இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறதா? கொடுமைப்படுத்துகிறதா? ஹிஜாப் (பர்தா) <<<<< படிக்கலாம்


    .

    ReplyDelete
  47. இதனால பிரச்சனை தீருதா என்பது கேள்விக்குறியான விஷயம் தான் அதில் மாற்று கருத்து இல்லை

    ஆனால் பல சமூக விரோதிகளை மக்களுக்கு அடையாளம் காட்டுறாங்க. அது சரின்னு தான் சொல்லுவேன்,

    ஏன்னா இன்னைக்கு இருக்குற சமூக மக்கள் தனக்கு எந்த பிரச்னையும் இல்லாம பாத்துக்கணும் அவ்வளவுதான், மத்தவங்க நாசமா போனா நமக்கென்ன என்று நினைகிறார்கள்.

    அதனால தான் தனக்கு எதிர் வீட்டிலேயே கேவலமான சமூக விரோதிகள் இருந்தாலும் வெளியே சொல்றதில்லை.

    அதனாலதான் சில கேவலமான பிறவிகள் எல்லாம் எந்த வித கூச்ச நாச்சமும் இல்லாம திரியுதுங்க.

    இவர்களை சமூகத்திற்கு அடையாளம் காட்டுவதன் மூலம் பலர் எச்சரிக்கையா இருப்பார்கள் என்பது என் கருத்து.

    ReplyDelete
  48. "க்ர்ர்ர்ர்ர்ர்ர்.... ஈ ஆடுற மொக்க ப்ளாக்-டீக்கடைக்கு இது எவ்வளவோ தேவல! "

    க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...............
    எங்கள் "போர்வாள்" சிராஜ் அவர்களின் ப்ளாக்கை ஈஈ ஆடுற மொக்க ப்ளாக் என்று வர்ணித்து எழுதியதற்கு எதிர்ப்பு தெரிவித்து குட்டிசுவர்க்கம் ப்ளாக் எதிரே வட பஜ்ஜியுடன் மறியல் நடைபெறும் என அறிவிக்கிறேன்.

    ReplyDelete


  49. // எதிர்ப்பு தெரிவித்து குட்டிசுவர்க்கம் ப்ளாக் எதிரே வட பஜ்ஜியுடன் மறியல் நடைபெறும் என அறிவிக்கிறேன்.//

    நாகூர் மீரான் அண்ணா... எங்கே இருக்கீங்க? இந்த கொடுமைய என்னான்னு வந்து கேளுங்க!

    எங்கண்ணே நாகூர்மீரான் எங்கேயாச்சும் கமென்ட் சண்டை போட்டுட்டிருப்பாரு... குட்டிசுவர்க்கத்துல தேடுறாங்கன்னு சொல்லி அனுப்புங்க!

    அண்ணன் போராட்டக்காரர்களை அடக்கி ஒடுக்குவார் :-)

    ReplyDelete
  50. @அந்நியன்

    siraj
    //அருமையான வரிகள்..... பெண்ணின் பெற்றோர்கள் தான் பாதிக்கும் மேற்பட்ட விவாகரத்திற்க்கு காரணம்... அப்பாடா!! கடைசி கடைசியா உங்க போஸ்ட்ல ஒரு உருப்படியான விஷயம் சொல்லி இருக்கீங்க....//

    ம்ம்..நானுந்தேன் //

    அட நல்லா இருந்துடுவீகளா.....

    ReplyDelete
  51. @ஆளுங்க

    //ஏன் சாத்தியமில்லை சகோதரி? கொஞ்சம் யோசித்து பாருங்க..
    எப்படியோ அவர்கள் வீட்டு உண்மைகள் வெளியே வந்துடுதுல்ல?//

    இந்த கோணத்துல நான் யோசிக்கவே இல்ல சகோ.. நீங்க ஜீனியஸ் தான் :-)

    //ஏன் தீர்க்க முடியாது?
    சரவணன்-மீனாட்சி ஒரு தம்பதி போதும் உதாரணத்திற்கு!//

    ஓ இந்த சாதனைலாம் பண்ணியிருக்கா? அப்பறம் மெட்டிஒலில வெஷம் குடிச்சு செத்து போன போஸ்ஸை அடுத்த நாள் உயிர்கொடுத்தாங்க அதெல்லாம் விட்டுட்டீங்க...

    நானும் டீவி பாக்குறதில்ல நம்புங்க ஹி..ஹி..ஹி...

    ReplyDelete
  52. @சிராஜ்

    //பட் இது உங்களுக்கு வாழ்க்கை..//

    என்ன இது? எனக்கே தெரியாம என்னன்னமோ கத விடுறீய? அய்யோ பயமா இருக்கே!

    // கடைய தொறந்தா பத்திக்கிடுதில்ல..அது தான் விஷயம்... //

    ஏதோ மொக்கைல ஓடிட்டிருக்கு... அதுவும் பிடிக்கலையா???

    //பட் இனி வாரம் ஒரு போஸ்ட் போடலாமான்னு யோசிக்கிறேன்... //

    அய்யோ இந்த கொடுமைய எங்கே போயி சொல்லுவேன்!

    //பட் ஆக்கப்பூர்வமா மட்டுமே எழதனுமாம்....இதெல்லாம் நம்மால முடியுமா?? அதான் யோசிச்சிகிட்டு இருக்கேன்...//

    ஹா..ஹா..ஹா..
    ஆக்கபூர்வமா? அதுவும் உம்மட்ட இருந்து? ROFL ROFL ROFL

    அய்யோ.. முடியல... ஹா..ஹா..ஹா..
    சிராஜ் இத படிச்சதுல இருந்து இப்ப வரைக்கும் சிரிப்பு நிறுத்தல!

    ReplyDelete
  53. @அவர்கள் உண்மைகள்

    //சிந்திக்க கூடிய ஒரு நல்ல பதிவு...பழைய சகோ ஆமினாவை இந்த பதிவில் நான் பார்க்கிறேன். இந்த மாதிரி பதிவைதான் நான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன். வாழ்க வளமுடன்//

    :-)

    நன்றி சகோ

    வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி...

    ReplyDelete
  54. @அதிரா

    வாங்கோ அதிரா.. நலமா?

    //ஆனாலும், வாழ்க்கையில் எப்படியெல்லாம் பிரச்சனைகள் வருகிறது, உலகில் மக்கள் எப்படியான பிரச்சனைகளினால் துன்பப் படுகிறார்கள் என்பதை அறிய அது உதவுகிறது...... அதை மட்டும் கவனிப்பேன்ன்...//

    இதுக்கு செய்திதாள், செய்தி சேனல் ன்னு நிறையா இருக்கே அதிரா... இதில் சொல்லபோவதால் என்ன தீர்வு எட்டபோகபோகுது? ஒன்னும் இல்ல! ஜீரோ....

    இதான் என் ஆதங்கம்...

    நன்றீ அதிரா

    ReplyDelete
  55. @அம்பாளடியாள்

    //அருமையான கருத்துக்கள் !!!!.......பகிர்வுக்கு மிக்க நன்றி தோழி .மேலும் தொடர வாழ்த்துக்கள் .//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி

    ReplyDelete
  56. @NKS.ஹாஜா மைதீன்

    #குடும்பத்தில் பேசி முடிக்க முடியாத பிரச்சனையையா மீடியா தீர்த்துவிட போகிறது?
    #

    அதானே....மீடியாவுக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் அப்படி என்ன ஆர்வம்?மக்களுக்கு உதவ வேண்டும் என இதுவரை ஏதாவது ஒரு தொலைக்காட்சியாவது ஏதாவது பொது சேவைகள் புரிந்து உள்ளதா?எல்லாம் டி ஆர் பி செய்யும் மாயை
    //

    அதானே... கணவனையோ மனைவியையோ நல்லா அவமானப்படுத்தியாச்சு... பத்தா குறைக்கு அடிக்க வச்சாச்சு! இத விட என்ன வேண்டும் சேர்த்து வைக்கிறதுக்கு.... இவர்களின் சுயநலம் அடிதட்டுமக்களுக்கு எளிதில் புரியாது!

    வருகைக்கு நன்றீ சகோ

    ReplyDelete
  57. @வாஞ்சூர் அப்பா

    சலாம் அப்பா.. நலமா இருக்கீங்களா...

    பதிவை படித்தேன், இஸ்லாமிய பெண்மணி தளத்தின் லிங்க் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி அப்பா

    வருகைக்கும் பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  58. //ஆனால் பல சமூக விரோதிகளை மக்களுக்கு அடையாளம் காட்டுறாங்க. அது சரின்னு தான் சொல்லுவேன்,
    //

    சமூக விரோதிகளை காட்டக்கூடிய நிகழ்ச்சியாக இருக்கும்பட்சத்தில் இது சரி தான். ஆனால் ஏன் குடும்பத்தை மையப்படுத்திய விஷயமாக இது இருக்க வேண்டும்? குடும்பத்தை சேர்ப்பது இவர்களின் நோக்கமாக இல்லை என்றாலும் கூட பெண்களுக்கு நீதி வழங்க கூடிய விஷயமாகவும் இருக்கும்படி செய்யலாம்... அதுவும் இல்லை! பத்தோடு பதினொன்னாதான் இதனை பார்க்கிறேன்!

    //இவர்களை சமூகத்திற்கு அடையாளம் காட்டுவதன் மூலம் பலர் எச்சரிக்கையா இருப்பார்கள் என்பது என் கருத்து.//

    இத்தகய குற்றங்களை செய்ய கூடியவர்களின் முகத்திரையை கிழிக்கும் நிகழ்ச்சியாக இருக்கும் பட்சத்தில் என்னுடைய ஆதரவு என்றும் உண்டு.. ஆனால் இவர்களின் கான்சப்ட் முட்டாள்தனமானது!

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  59. @அசீம் பாட்ஷா

    //எங்கள் "போர்வாள்" சிராஜ் அவர்களின்//

    ஹா..ஹா..ஹா...

    இப்ப கூட கசாலி அண்ணா ப்ளாக்ல டிஸ்யூம் டிஸ்யூம் பண்றாரு! :-))

    //
    க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...............
    எங்கள் "போர்வாள்" சிராஜ் அவர்களின் ப்ளாக்கை ஈஈ ஆடுற மொக்க ப்ளாக் என்று வர்ணித்து எழுதியதற்கு எதிர்ப்பு தெரிவித்து குட்டிசுவர்க்கம் ப்ளாக் எதிரே வட பஜ்ஜியுடன் மறியல் நடைபெறும் என அறிவிக்கிறேன்.//

    அதெப்படி அவரோட ஆதராவளர்கள் எல்லாரும் அவர மாதிரியே இருக்கீங்க.. உங்க ப்ளாக்லையும் ஒன்னுமே காணாமே :-)

    தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியா ஹா..ஹா..ஹா...

    சுத்தம் :-)

    ReplyDelete
  60. மாத்தி மாத்தி உங்களின் மற்றும் சகோதரர்களின் படித்துவிட்டு பின்னூட்டம் இடவே நேரம் சரியாக இருக்கிறது, பதிவு எழுத எங்கே நேரம்.
    அதான் எங்கள் தாங்கள் பதிவுகள் எழுதிவிடுகிறிர்களே சகோதரி ஜமாயுங்க.

    ReplyDelete
  61. அடபோங்க அக்கா.. இன்னிக்கு புரோக்ராம்ல செம இன்ட்ரெஸ்ட்டிங் குடும்ப பிரச்சின... அய்யே இன்னைக்கு என்ன உப்பு சப்பில்லாம இப்புடி முடிஞ்சி போச்சின்னு... இப்பெல்லாம் இத தொடர்ந்து பார்க்கும் ரசிகர்கள சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.. இப்ப போயி?

    அப்புறம் இதற்கெதிரா பலரும் கோடி தூக்கி இருகாங்கன்னு கேள்வி.. சில பல வழக்குகள் கூட போடப்பட்டு இருக்காம்.. கூடிய சீக்கிரம் "லட்சுமியின் கதையல்ல நிஜத்திற்கு " நடந்தது இதுக்கும் நடக்கும்னு தோணுது...

    ReplyDelete
  62. என்ன திடீர்ன்னு புரொஃபைல் போட்டோ மாத்திட்டு??!! யாரோ புது ஆமினான்னுல நினைச்சேன். என் பொண்ணுக்கு போட்டியா பையனுக்கு ஆள் சேர்க்க பார்க்குறியா ஆமினா? அது நடக்காதும்மா நடக்காது.

    ReplyDelete
  63. தூயா, மற்றும் என் அம்மா ரெண்டு பேரும் விரும்பி பார்ப்பாங்க. நிகழ்ச்சியில அடிதடி இல்லைன்னா தூயாக்கு பிடிக்கவே பிடிக்காது. அதில் நல்ல விஷயமா வருதுன்னு நான் திட்டுவேன். அப்படியும் அம்மாவோடு உக்காந்து பார்ப்பா.

    ReplyDelete
  64. ஆமா ஆமினா.... நிர்மலா தன் பெயரை தானே கெடுத்துக்கிட்டது மாதிரி தான் தெரியுது..... என்னிக்கோ ஒரு நாள் பார்த்தப்போ பண மோசடியில் நல்ல தீர்ப்பு கொடுத்ததா ஞாபகம்.... இனிமேல் அந்த பண மோசடி நபரின் வலையில் விழுபவர்கள் எண்ணிக்கை குறையும்....

    //(ஆமியாக இருந்தால் - அப்பன்னா வாசிங் மெஷின் வாங்கி கொடுமா..// ஓ..... உங்க கணவர் தான இப்படியெல்லாம் உங்க அம்மாகிட்ட போய் சொல்லி சீர் வாங்கிட்டு வான்னு சொன்னது?!.... எப்பூடீ?

    ஆங்.... ஒண்ணு சொல்ல மறந்துட்டேன்... நானும் டீவி பார்க்குறதில்ல.... நானும் டீவி பார்க்குறதில்ல....எல்லாரும் சொல்றீங்க...நானும் சொல்லிட்டேன்..... ஹி..ஹி...

    ReplyDelete
  65. ம் ம்... ஆமின்னாலே சுவாரசியமான பதிவுகள் தானே....
    என்ன ஆமினா...
    கரெக்ட்டுதானே....

    ReplyDelete
  66. //1. சொல்வதெல்லாம் உண்மை - மீடியா குடும்ப பிரச்சனையை தீர்க்குமா இன்னும் விரிசலை ஏற்படுத்துமா?//

    இந்த நிகழ்ச்சியை பார்க்கும் உங்கள் கண்ணோட்டம் தவறாக இருக்கிறது என்றே நினைக்கிறேன் டிவி வரை பிரச்சனையை எடுத்துவருபவர்கள் ஒன்றுசேர்வதர்க்காக அல்ல பிரச்சினையை நாட்ற்க்கே வெளிச்சம் போட்டு கான்பிப்பதர்க்காக. இது நிகழ்ச்சியில் கலந்துகொல்பவர்களின் பிரச்சனையை தீர்ப்பதற்காக அல்ல இப்படி எல்லாம் பிரச்சினைகள் இருக்கின்றன இதைப்பார்து பார்வையாளர்களே விழித்துக்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஊரே பார்த்து சிரிக்கும் என்று தெறிந்துதான் இந்த நிகழ்ட்சியில் கலந்துகொல்கிறார்கள். அந்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தவறானது அல்ல அதன் மீதானா உங்கள் பார்வை தவராக இருக்கிறது. முடிந்தால் ஜீ டிவியில் வரும் க்ரைம்பேட்டரோல் என்ற நிகழ்ச்சியையும் பாருங்கள் குற்றவாளிகளிடம் இருந்து உங்களை காப்பாற்றிக்கொல்ல உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  67. //2. நாட்டாம தாத்தா - இப்பலாம் அனுபவமுள்ள பெரியவங்க நம் பக்கத்தில் இல்லாததால நம் குடும்ப பிரச்சனைகளை நம்மால் எளிதில் தீர்த்துக்க முடியல... சாதாரண பிரச்சனையையும் இடியாப்ப சிக்கலாக்கிடுறோம்.

    3. பிரச்சனைக்கு யாரு காரணம்- அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள், தெளிவற்ற பெற்றோர்களின் ஆலோசணைகள்... //

    நாட்டாம தாத்தாக்களை எல்லாம் முதியோர் இல்லத்தில் விட்டுட்டு வருத்தப்பட்டா என்ன பிரயோஜனம்.

    ReplyDelete
  68. //இதுக்கு செய்திதாள், செய்தி சேனல் ன்னு நிறையா இருக்கே அதிரா... இதில் சொல்லபோவதால் என்ன தீர்வு எட்டபோகபோகுது? ஒன்னும் இல்ல! ஜீரோ....

    இதான் என் ஆதங்கம்...// இன்னுமா மீடியாக்களில் வரும் செய்திகளை எல்லாம் உண்மை என்று நம்பிக்கொண்டு இருக்கிறீர்கள். அனைத்து நிருபர்களும் காவல் துறையுடன் கூட்டனி வைத்துள்ளனர் 75% உண்மைகள் ஊடகங்களால் இருட்டடிப்புசெய்ப்படுகிறது. ஆளும் அரசினால் உளவுத்துரை மற்றும் காவல்துரையால் மட்டுறுத்தப்படுகிறது நிர்வாகத்தால் ஒருதலைசார்பு படுத்தப்படுகிறது.

    ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)