உறவை முறித்து சென்ற பின்னும்
உன்னுள்ளத்தில் தொடரும்
என்னைபற்றிய  நினைவுகள்

பிரிவின் தனிமையில்
அவஸ்தைகளை எண்ணி
புழுவாய் துடிக்கும் உன் வேதனைகள்!


எங்கேனும் என் பெயரைக்கண்டால்
நான்தானோ என
வைராக்கியத்தை எறிந்து ஆராயும் உன் பார்வைகள்

எதார்த்தமாய் அமையும் சந்திப்புகளில்
கோபம் மறந்து உதிர்க்கும்
உன் நல விஷாரிப்புகள்

உன்னையும் அறியாது
உன்னில் அவ்வபோது எழும்பும்
என்னை நோக்கிய  சிந்தனைகள்!

என்ன நேர்ந்தபோதும்
அவளைவிட்டு விலகியிருக்க கூடாதென
என்றேனும் என்னையெண்ணி
நீ விடும் கண்ணீர் துளிகள்!

அடடா...
பிரிவும் இனிக்குதடா!
தனிமையையும் சுகமாக்கினாயடா...

டிஸ்கி- மாசத்தொருக்காவாவது பதிவு போடலன்னா பிரபலபதிவர்ன்னு ஒத்துக்க மாட்டாங்களாம்(அஹ்ஹூ...அஹ்ஹூ)-  காணாமல் போன கனவுகள் ராஜிக்கா கொடுத்த டிப்ஸ் :-)) அதுக்காக பேஸ்புக்கில் போட்ட அழுவாச்சி காவியத்தை லேசா டிங்கரிங் பண்ணி இங்கேயும் போட்டிருக்கேன் :-))))

, ,

32 comments:

  1. கவிதை விட டிஸ்கி தான் எனக்கு புடிச்சு இருக்கு :)-

    ReplyDelete
  2. நமக்கு அதான் ஒழுங்கா வரும் :-)))

    ReplyDelete
  3. இம் மறு ஒலிபரப்பா ??? நடத்துங்க
    அதென்ன அழுவாச்சி
    ஓஹோ அழுகாச்சி தான் இப்படி சொல்றீங்களா ??

    அஹ்ஹு அஹ்ஹு - சிறுகுறிப்பு வரைக

    ReplyDelete
  4. @சகோ ரப்பானி

    //அதென்ன அழுவாச்சி
    ஓஹோ அழுகாச்சி தான் இப்படி சொல்றீங்களா ??//

    மீ ஊரு பாஷை ஹி..ஹி..ஹி.

    //அஹ்ஹு அஹ்ஹு - சிறுகுறிப்பு வரைக //
    அவ்வ்வ்வ்வ்வ் என சொல்வதை சில சகோக்கள் விருப்பாததன் காரணமாக எதிர்வரும் தேர்தல்களில் அவர்கள் ஓட்டை உடைக்க கூடாதென்ற அரசியல் தந்திரத்தின் அடிப்படையில் அவ்வ்வ்வ்வ்வ் என்பதை அஹ்ஹூ அஹ்ஹூ என நான் மாற்றிக்கொண்டேன் அஹ்ஹூ அஹ்ஹூ :-))


    சகோக்களின் புரட்சியின் விளைவாக சிட்டிசன் கூட அஃஃஃஃஃஃஃஃஃ என மாற்றிவிட்டாரென்றால் பாத்துக்கோங்களேன் :-)))

    ReplyDelete
  5. கவிதை ரொம்ப நல்லா இருக்கு....
    சொந்தமா?? இல்லை படித்ததில் பிடித்ததா???

    :-)))))))))))))))))))))))

    ReplyDelete
  6. //உன்னையும் அறியாது
    உன்னில் அவ்வபோது எழும்பும்
    என்னை நோக்கிய சிந்தனைகள்! //


    அட்ரா.. அட்ரா..

    ReplyDelete
  7. ஜூப்பர்...அப்ப அப்ப இந்த மாதிரி ஏதாவது எழுதுங்க இல்லைனா மறந்துடும் (கவிதை எழுதுவதை சொன்னேன்)

    ReplyDelete
  8. அழுகாச்சி கவிதை என்னை அழுகாச்சிக்கு ஆளாக்கியது.

    ReplyDelete
  9. டிஸ்கி கவிதைக்கு கூடுதல் அழகு கொடுக்குது ஆமீனா

    ReplyDelete
  10. ஆமி கவிதையிலும் கலக்குரே நடக்கட்டும் நடக்கட்டும்

    ReplyDelete
  11. @சிராஜ்

    //கவிதை ரொம்ப நல்லா இருக்கு....
    சொந்தமா?? இல்லை படித்ததில் பிடித்ததா???

    :-)))))))))))))))))))))))//

    ம்ம்.. சொந்தமா எழுதி அது பிடிச்சு போனதால் நானே நூறுதடவைக்கு மேல படிச்சுட்டேன்.. அப்ப இது படிச்சதில் பிடிச்சது தானே :-)

    ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு ஆகாது!

    ReplyDelete
  12. @இந்திரா

    ////உன்னையும் அறியாது
    உன்னில் அவ்வபோது எழும்பும்
    என்னை நோக்கிய சிந்தனைகள்! //


    அட்ரா.. அட்ரா..//

    நானும் உங்க அளவுக்கு ட்ரை பண்ணேன் இந்திரா.. ஆனாலும் வரல :( இனி தெனமும் 10 மணி நேரம் பேஸ்புக்கில் உங்க போஸ்ட்லாம் பாக்கணும்.. அப்பவாவது உங்களை போல் அதி சிறந்த எழுத்தாளராக நான் வரேன்னான்னு பாக்கலாம்

    அட்ரா..அட்ரா... இன்னைக்கு இந்திரா வானத்துல தான் மெதப்பாங்க :-)

    ReplyDelete
  13. @மனசாட்சி

    //ஜூப்பர்...அப்ப அப்ப இந்த மாதிரி ஏதாவது எழுதுங்க இல்லைனா மறந்துடும் (கவிதை எழுதுவதை சொன்னேன்)//

    ஹி..ஹி..ஹி.. மறக்க கூடாதுன்னு தான் அப்பப்ப வருது போஸ்டும் சிலபல மொக்கை கவிதைகளூம் :-)))

    ReplyDelete
  14. @மதுமதி

    அழுகாச்சி கவிதை என்னை அழுகாச்சிக்கு ஆளாக்கியது.
    //

    ரொம்ப அறுத்துட்டேனோ :-)))))))

    ReplyDelete
  15. @குட்டன்

    நன்றி சகோ...

    ReplyDelete
  16. @ரூபி

    //டிஸ்கி கவிதைக்கு கூடுதல் அழகு கொடுக்குது ஆமீனா //

    அப்படியா சொல்றீங்க...

    அப்ப அடுத்த பதிவு முழுக்க டிஸ்கியா போட்டு தாக்கிடலாம் ஹி..ஹி..ஹி...

    ReplyDelete
  17. @மாமி

    //ஆமி கவிதையிலும் கலக்குரே நடக்கட்டும் நடக்கட்டும்//

    எல்லாம் உங்களோட சேர்ந்ததுனால வந்த எபெக்ட் மாமி!

    மாமி இஸ் தி சீக்ரேட் ஆப் ஆமி எனர்ஜி :-)))

    ReplyDelete
  18. கவிதையை வாசித்து விட்டு ஒரு நிமிடம் கண்னடைத்து யோசித்தேன்இன்றைய உலகில் விட்டுகொடுக்கும் மனப்பான்மை இல்லாததால் காதலும்,திருமண வாழ்க்கையும் வெறும் ஒரு சடங்காகிபோய்விட்டதை எடுத்துக்காட்டுவது போலதுதா இருந்தது.
    அருமை சகோதரி ஆமினா உங்கள் கவிதை.

    ReplyDelete
  19. அடுத்த பதிவர் சந்திப்பில் ஆமியின் கவிதை உண்டு போல தெரியுதே

    ReplyDelete
  20. அழுவாச்சி கவிதை நல்லாவே இருக்குது. கவிதை பாடறவங்க லிஸ்ட்ல உங்க பேரையும் சேர்த்துரலாம் போலருக்குதே... டிஸ்கி...? நான் ஒத்துக்கறேம்மா... நீங்க பிரபல பதிவர்தான்!

    ReplyDelete
  21. //உன் நல விஷாரிப்புகள்//
    New type kavithai thamizh??????

    ReplyDelete
  22. சூப்பர் ரிப்ளை கமெண்ட். ஆமி நான் கைவைக்காத விஷயம்னா அது கவித எழுதுரதைத்தான். அயோபாவம் பொழைச்சு போகட்டும்னு விட்டு வச்சிருக்கேனாக்கும்

    ReplyDelete
  23. @அசீம் பாட்ஷா

    //கவிதையை வாசித்து விட்டு ஒரு நிமிடம் கண்னடைத்து யோசித்தேன்இன்றைய உலகில் விட்டுகொடுக்கும் மனப்பான்மை இல்லாததால் காதலும்,திருமண வாழ்க்கையும் வெறும் ஒரு சடங்காகிபோய்விட்டதை எடுத்துக்காட்டுவது போலதுதா இருந்தது.
    அருமை சகோதரி ஆமினா உங்கள் கவிதை.//

    உண்மை தான். திருமணம் என்பது சொற்ப இடங்களில் மட்டுமே இருமணம் இணையும் தருணங்களாக இருக்கிறது.

    அதனாலேயே விவாகரத்து, குடும்ப பிரச்சனை என பலர் பல வித பிரச்சனைகளில் சிக்கிவிடுகிறார்கள்.

    ஈகோ துறந்து மனம் விட்டு பேசினாலே எல்லா பிரச்சனைகளுக்கும் முற்றுபுள்ளி வைத்துவிடலாம். அதன் பின் நோ கண்ணீர், நோ அழுவாச்சி காவியம் :-))

    கருத்துக்கு நன்றி சகோ.

    ReplyDelete

  24. @எல்.கே

    //அடுத்த பதிவர் சந்திப்பில் ஆமியின் கவிதை உண்டு போல தெரியுதே //


    எனக்கும் மனசாட்சி, இரக்க சுபாவம் லாம் இருக்கும். அந்தளவுக்கெல்லாம் கொடுமபடுத்த மாட்டேன் எல்.கே :-)

    ReplyDelete

  25. @சகோ பாலகனேஷ்
    //அழுவாச்சி கவிதை நல்லாவே இருக்குது. கவிதை பாடறவங்க லிஸ்ட்ல உங்க பேரையும் சேர்த்துரலாம் போலருக்குதே.//

    பெரியவங்க நீங்கலாம் இருக்கும் போது நான் எப்படி????ஹி...ஹி..ஹி...

    //டிஸ்கி...? நான் ஒத்துக்கறேம்மா... நீங்க பிரபல பதிவர்தான்!//
    ஏய்... மக்கா... கேட்டுக்கோங்க.. நானும் பிரபலப்பதிவர் தான்... :-)))))

    ReplyDelete

  26. @peer
    //உன் நல விஷாரிப்புகள்//
    New type kavithai thamizh??????//

    மாற்றிவிடுகிறேன் ஐய்யா :-)

    ReplyDelete


  27. @லெட்சுமி மாமி
    //சூப்பர் ரிப்ளை கமெண்ட். ஆமி நான் கைவைக்காத விஷயம்னா அது கவித எழுதுரதைத்தான். அயோபாவம் பொழைச்சு போகட்டும்னு விட்டு வச்சிருக்கேனாக்கும்///

    நீங்க களத்துல குதிச்சீங்க அப்பறம் ராஜி, கோவை சரளா, அம்பாளடியாள், சசிகலா, ஸ்வராணி எல்லாரும் போராத்தில் குதிப்பாங்க! எதிர்பதிவு போடுவாங்க!

    இந்த பதிவுலகம் முதல் உலகபோர் காணூம் !!

    வேண்டாம் மாமி வேண்டாம்.. அமைதி நிலவ வேண்டி எங்கள் பிழைப்பில் கை வைக்காதீர் :-))

    ReplyDelete
  28. இருமனம் இணைந்த தாகச் சொல்லி திருமண செய்து கொண்டவர்கள், இன்று இரு துருவங்களாகப் பிரிவது ஏனோ அதிகரித்து விட்டது! கவிதை அருமை!

    ReplyDelete
  29. கவிதை ரொம்ப நல்லா இருக்கு.

    ReplyDelete
  30. ஓக்கே ஆமி எல்லாரும் பொழைச்சு போகட்டும் நான் அந்தப்பக்கமே வரல்லே போதுமா

    ReplyDelete
  31. மாஷா அல்லாஹ்...
    உங்க ஸைட் அழகா இருக்கு ஆமி....
    நீண்ட நாலாக இந்தப்பக்கத் வரலையா...அதான்...ரொம்ப வருத்தமா இருக்கு...
    இன்ஷா அல்லாஹ் இனி தவரமாட்டேன்....

    ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)