சமீபத்தில் மீண்டும் அந்த செய்தி கேட்க நேர்ந்தது...

"பட்டும் புத்திவரல... இன்னும் அப்படியே தான் இருக்கான்" என்று புலம்பினார் உறவினர்..

அப்போதுதான் மரணதண்டனை பக்கம் கவனம் திரும்பியது... கூடவே ஒரு நண்பர் பேஸ்புக்கில் பகிர்ந்த ஒரு படமும் நியாபகத்திற்கு வந்து இப்பதிவை எழுத தூண்டியது...

சரி தூக்குதண்டனை பற்றி நண்பர்கள் , தோழிகளிடம்  கருத்துகேட்ட போது அவர்களின் ஒருமித்த பதில்:
1. உயிரை எடுக்கும் உரிமை கடவுளுக்கு மட்டுமே உண்டு
2. தூக்கு தண்டனை கொடுத்ததுனால சமூகத்தில் குற்றங்கள் குறைந்ததா என்ன? அப்படியே தானே இருக்கு?
இது சரியான கருத்து தானா? இல்லை தவறான புரிதலா?? இதை முடிவு செய்யும் முன் சில சம்பவங்களை பார்த்து விடுவோம்...

 நண்பர் பகிர்ந்த ஒரு குற்றவாளியின் புகைப்படம் பற்றி!
எப்படி இருந்த நான் எப்படி ஆய்ட்டேன்.
வாழ்க சட்டம்! வளர்க அதன் ஓட்டை

அந்த குற்றவாளி பற்றி சிறு விளக்கம் :-  கை இல்லாத ஊன முற்றவனாம்... சவுமியா என்ற கேரள பெண்ணை ரயிலில் போய்க்கொண்டிருக்கும் போது கற்பழிக்க முயற்சி செய்திருக்கிறார்.  பயந்து போயி ஓடும் ரயிலில் இருந்து குதித்திருக்கிறார் அந்த பெண். தலையில் பலத்த அடி... அந்த கொடூர நாய்  அப்போதும் விடாமல், அவனும் குதித்து தண்டவாளத்தில் வைத்து  கற்பழித்திருக்கிறான்.  வெகுவிரைவிலேயே அவனுக்கு மரணதண்டனையும் இரட்டை ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது...

இப்ப என்ன மேட்டருன்னா... தொர  ஜெயில்ல கொடுக்குற  சாப்பாடுலாம் சாப்பிட மாட்டாராமாம்...  காலைல இட்லி, மதியம் பிரியாணி, நைட் பரோட்டான்னு மெனு கொடுக்குறாராமாம்.. இதெல்லாம் கொடுக்கலைன்னா தலைவரு உண்ணாவிரதம் இருப்பாராமாம்...

ஆயுள் தண்டனை இவனை எந்தளவுக்கு மாற்றத்தை கொடுத்தது????  பயம் எதாவது வந்துச்சா??? எப்படியும் கருணை மனு போட்டு நம்மல விட்டுடுவாய்ங்கன்னு ஒரு நம்பிக்கை தான்!  6 மாசம் கழிச்சு நீதிமன்றத்திற்கு கூடிட்டு வரும் போது பாக்கணுமே சார்ர! அடேங்கப்பா... சின்னதம்பி பிரபு தோத்துபோயிடுவாரு :-)

சரி உறவினர் சொன்ன அந்த நபர் பற்றி சில விளக்கங்கள் :

பெயரில் மட்டுமே முஸ்லீம்மை தாங்கிக்கொண்டிருக்கும் இவர் ஒரு பெண்ணை கற்பழித்ததற்காக  சிறை சென்றவர்.  பண வசதியின் காரணமகாக  6 மாதத்தில் திரும்ப வந்துவிட்டார்.  அந்த 6 மாத காலத்தில் போலிசாரால்  எவ்வளவு சித்ரவதை அனுபவித்தார் என்பதை அவர் மூலமே பலமுறை கேட்டதுண்டு. என் அவதானிப்புபடி சில காலங்கள் மட்டுமே அந்த பயத்துடன் இருந்தார்... மீண்டும் அடிக்கடி அம்மாவின் "பட்டும் திருந்தல" என்ற வார்த்தை அவ்வபோது ஒலித்துக்கொண்டிருக்கும்!

சரி இவருக்கு கொடுக்கப்பட்ட சிறை தண்டனையும், அபராத தொகையும் எந்த அளவுக்கு குற்றங்களை குறைத்தது??? இவருக்கு அதிகப்படியான தண்டனை விதித்திருந்தால் சமூகத்தில் குற்றங்கள் குறையுதோ இல்லையோ, அவர் வீட்டு வாரிசுகள் "ஜெயில்க்கு போனா என்ன? எங்க வீட்ல எப்படியாவது கூடிட்டு வந்துடுவாங்க" என சொல்ல மாட்டார்கள் இல்லையா? வாரிசுக்கு வாரிசுகள் என குற்றத்திற்கான தண்டனையின் வீரியத்தை உணர்ந்து கட்டுகோப்பாக வளர்ப்பார்கள் இல்லையா??? இனிமே எல்லாரும் பணத்தை முன்கூட்டியே நீதிமன்றத்துல அபராதமா கட்டி அதுக்கப்பறம்  பொழுதுபோக்குக்காக கற்பழிச்சாலும் ஆச்சர்யப்படுவதற்கில்ல!

டுத்து,
என் பள்ளியின் அருகில் நடந்த சம்பவம். மருமகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொழுத்திட்டார்  மாமியார்.... அப்பெண்ணின் கணவனும், மாமியாரும் சும்மா கொஞ்ச நாள் ஜெயில்ல இருந்தாங்க... ஜெயிலில் இருந்து திரும்பி வந்த சில மாதங்களில்  அந்த வீட்டை விற்க ஆட்களை கூடிட்டு  வந்திருந்தாங்க.. எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அவர்கள் பேசிகொண்டிருந்த காட்சி இன்னும் கண்ணில்...  அவ்வளவுதான்... வீட்டை வித்துட்டு  சென்னை மதுரைன்னு போய்ட்டா அங்குள்ள  எவனுக்கு என்ன சேதி தெரிய போகுது??? மாமியார் வீட்ல ஜெயில் கம்பிக்கு பெயின்ட் அடிச்சுட்டிருந்தவன் புதுமாப்பிள்ளையாகிடுவான்... பாவம் இன்னொரு குடும்பம், இன்னொரு அப்பாவி பெண்.....,அடுத்து மீண்டும் முளைக்கும்  மாமியார் கொடுமைன்னு போக வேண்டியது தான்....

கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் கைப்பற்றப்பட்ட சிறுவன் பற்றி முன்பு எம்மூரில் மிக பரபரப்பாக பேசினாங்க... இப்ப மூச்! அவ்வளவுதான்.. சட்டம் தன் கடமையை செய்யும்.. பணம் வாங்கி :) காக்கா கொத்திடுச்சாம்... அதுனால செத்துட்டானாம்! ப்ரேத பரிசோதனை ரிப்போர்ட் அப்படிதான் சொல்லுதாம்! :) :'(
பிரியாணி கொடுப்பீங்கன்னு நம்பி
தானே ஜெயிலுக்கு சுத்திபாக்கலாம்னு
வந்தேன்??!!!


ப்பறம் இன்னொரு விஷயம்.... பல பேரை கொன்ற, மும்பையில் பிடிபட்ட தீவிரவாதி கசாப் இப்ப என்னா பந்தாவா போறாரு.. வராரு... அட அட அட! பேசாம நம்மலும் ஜெயிலுக்கு போனா சம்பாதிக்காம 3 வேளைக்கும் சாப்பிடலாம் போல... வாவ்வ்வ்வ்வ்வ்... ஜெயிலுக்கு போறதுக்கும் குடுத்து வச்சுருக்கணும் மக்கான்னு இவனுங்கள பார்த்து தான் தெரிஞ்சுக்கிட்டேன்... எப்பவாது விசாரணைன்னு கோர்ட்க்கு கூட்டிட்டு போவானுங்க... ச்ச.. அதென்ன பெரிய விஷயம்? சம்மந்தம் சம்மந்தமில்லாம பதில் சொல்லி ஜட்ஜ் மண்டைய போட்டு பிச்சிக்க வைக்க தான் பயிற்சி எடுத்திருக்கோமே.... அந்த வித்தை பத்தாதா? எப்படியும் சமாளிச்சுக்கலாம்! - இப்படிதான் நெனைப்பானுவ!

ஆக... இன்னொரு தீவிரவாதிக்கு நம்ம எளிமையான வழியை உருவாக்கி கொடுத்துட்டோம் இல்லையா? :'(  மீண்டும் ஒரு சம்பவம் நடந்து ஆயிரம் மக்களை கொல்ல திட்டம் தீட்ட முயற்சித்தாலும் மனதில் துளி அளவும் பயம் இருக்காது அத்தீவிரவாதிக்கு... ஏன்னா விசாரணைன்னு சொல்லி எப்படியும் நாட்களை கடத்துவாய்ங்கன்னு தெரிஞ்சு போச்சு...

இதுல வேற எத்தனையோ நாடு தூக்குதண்டனையை ரத்து பண்ணுச்சாம்! ஐநா ல கூட தீர்மானம் கொண்டு வந்தானுவளாம்...! பயபுள்ளைங்க வேற மரண தண்டனை வேண்டாம்னு 'மரணதண்டனை எதிர்ப்பு மாநாடு'ன்னு கூட்டுதுங்க.. இத பார்க்கும் குற்றவாளிகள் அல்லது குற்றம் செய்ய நினைப்பவர்கள் நாம தெகிரியமா கொலை, கற்பழிப்பு செய்வோம்,நம்ம விசாரணை முடியைரதுக்குள்ள மரணதண்டனையை முழுக்க ரத்து பண்ணிடுவாய்ங்கன்னு தொலைநோக்குதிட்டம் போட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை :-)

என் கேள்வி.............

1. உயிரை எடுக்கும் உரிமை கடவுளுக்கு மட்டுமே  உள்ளது.. மனிதர்களுக்கில்லை எனில் ஒரு உயிரை கொடூர முறையில் பறித்தவனுக்கு யார் உரிமை கொடுத்தது?

2. ஒருவனுக்கு ஆசிரியர் கொடுக்கும் தண்டனை  மாணவர்களிடையே பயத்தை ஏற்படுத்தும் போது, ஒரு குற்றவாளிக்கு கொடுக்கப்படும் உச்சபட்ச தண்டனையால் சமூகத்தில்  குற்றங்கள் 100 சதவீதம் ஒழியவில்லை என்றாலும் பயம்மாவது ஏற்படுத்தாதா? ஐய்யோ.. இப்படி செஞ்சா நம்ம உயிரும் போய்டும்னு பயம் வராதா? அப்பாலிக்கா ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்... அதையும் சொல்லிடுறேன்... தண்டனைகள் அதிகமா உள்ள நாட்டில் தான் குற்றங்கள் கம்மியா இருக்கு!  நீங்க வேணும்னா கூகுளார் கிட்டையும் விக்கி பய கிட்டையும் கேளுங்க! சொல்லுவானுவ!

3. தினசரிகளில் செய்தி செவியேற்கும்போது "இவனையெல்லாம் நடுரோட்ல அடிச்சு சாவடிக்கணூம்"ன்னு தானாகவே  சொல்லும் நாக்கு  சில காலங்கள் கழிந்ததும் அந்த குற்றத்தின் வீரியத்தை மறந்து "மரணதண்டனை லாம் வேண்டாம்" என சொல்வது எப்படி நியாயமாகும்? நாட்கள் கடந்ததும் குற்றத்தின் அளவு குறைந்துவிட்டதோ??? அல்லது பாதிக்கப்பட்டவர் நம் உறவினர் இல்லையே.., எவனோ ஒருத்தன் பாதிக்கப்பட்டா நமக்கென்ன என்ற சுயநல/அலட்சிய போக்கா??

4. பாதிக்கப்பட்டவங்க பார்வையில் இருந்து சட்டத்த அனுகுங்க... அவஙகளுக்கு தான் தெரியும் இழப்பின் வலி...குற்றம் செஞ்சவனின் பார்வையில் இருந்து சட்டத்த அணுகாதீங்க... அப்டி செஞ்சா இப்ப இருக்கிற மாதிரி குற்றங்களின் எண்ணிக்கை கூடுமே ஒழிய குறையாது..

5.  சிட்டிசன், ரமணான்னு பாக்கும் போது கை தட்றோம்... மேடைன்னு வந்துட்டா ஆச்சா, பூச்சான்னு மரணதண்டையே ஒழிகன்னு கோஷம் போடுறோம்..  அப்ப என்னதான்பா பண்ணனும்னு சொல்றீங்க கொலை குற்றவாளிய?

6. ஏற்கனவே இந்திய நீதி மன்றங்கள்ள நிலுவையில் உள்ள கேஸ்களின் எண்ணிக்கை கோடிகளை தொட்டுவிட்டது..இதில் குற்றவாளிகல மன்னிச்சு மன்னிச்சு வெளில விட்டுகிட்டு இருந்தா... வெளங்கிடும்.... இயல்பான வழிகள்ள யோசிங்க..உணர்ச்சிவசப்பட்டு அசாதாரணமா யோசிக்காதீங்க....

குறிப்பு : சில பேர் ரொம்ப புத்திசாலித் தனமா தூக்கு போட்ட பிறகு அவன் குற்றமற்றவன்னு தெரிஞ்சா என்ன பண்ணுவீங்கன்னு கேட்பாங்க... ஐயா விசாரணை முடிஞ்சு 100% உறுதியான குற்றவாளியதான் தூக்குல போட சொல்றோம், மற்றவங்கள இல்ல...
அப்படின்னா, குற்றமற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுப்பது மட்டும் ஓக்கேவா??? நீதித்துறையையும், விசாரணை முறையையும் நேர்மை ஆக்குங்கப்பா... அது தான் இன்றைய கட்டாய தேவை... குற்றத்துக்கு அபராதம்னு, 3 மாசம் ஜெயில்ன்னு காமெடி பண்ணாம கொஞ்சம் நல்லபுள்ளையா சீரியஸ்ஸான பனிஷ்மென்ட் கொடுத்துபாருங்க! காமெடி பண்றதே சட்டத்துக்கு வேலையா போச்சு! ஹைய்யோ...ஹைய்யோ


நன்றி-கூகுள் இமேஜ்,

, , ,

65 comments:

  1. அப்பாவி பொதுமக்கள் பலரை கொள்ள காரணமான கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளான பாட்சா மற்றும் மதானி போன்றவர்களுக்கு மரண தண்டனை தரப்பட வேண்டும் என்கிறார்களே, அது பற்றி உங்கள் பொன்னான கருத்து என்ன ?

    ReplyDelete
  2. உயிரை எடுக்கும் உரிமை கடவுளுக்கு மட்டுமே உள்ளது.. மனிதர்களுக்கில்லை எனில் ஒரு உயிரை கொடூர முறையில் பறித்தவனுக்கு யார் உரிமை கொடுத்தது? ////////

    முதலாவது வினாவே செம........

    ReplyDelete
  3. Palikku palithan sariyanathu.
    islamic sattathai ulagil ullavargal pen patrinal ulahatthil kutram undagathu......! Quran:2/178
    quran:5/25
    ethupola pala satchigal quranel ullathu......

    ReplyDelete
  4. ஸலாம்,
    அட மத்தவங்களை விடுங்க. முஸ்லிம் அரசியல் கட்சி தலைவர்களே மரண தண்டனை ஒழிப்பு மாநாட்டில் கலந்துக் கொள்கிறார்களே. அப்போ அவங்களை என்ன சொல்லுவீங்க?

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    அருமையான பதிவு சகோ நன்றி

    மரணதண்டனையில் மனித சமூகத்திற்கு வாழ்வு இருக்கிறது பார்க்க:

    وَلَكُمْ فِي الْقِصَاصِ حَيَاةٌ يَا أُولِي الْأَلْبَابِ لَعَلَّكُمْ تَتَّقُونَ
    அறிவுடையோரே பழிக்குப் பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது.(இச்சட்டத்தினால் பிறரை கொலை செய்வதிலிருந்து விலகிக் கொள்வீர்கள்)2:179

    ReplyDelete
  6. பாஷாவும் மதானிகளும் குற்றவாளிகள் என்றால் தூக்கிலிட வேண்டியது தான். ஆனால் அவர்கள் தான் உண்மையான குற்றவாளிகள் என்று கோர்ட் ஆதாரத்துடன் நிரூபித்தால். ஏனெனில் அப்சல் குரு வழக்கில் எந்தவொரு ஆதாரமுமில்லாமல் கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்த தூக்கு தண்டனை என்று நீதிமன்றம் சொல்லுகிறது. இந்த மாதிரி இல்லாமல் நேர்மையான முறையில் விசாரித்து மரண தண்டனை கொடுக்க வேண்டும்.

    ReplyDelete
  7. பெரும்பாலும் கோர்ட் நீதியான முறையில் தான் விசாரிக்கிறார்கள் என்று சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஏனெனில் நம்பிக்கை அடிப்படையில் அயோத்தி பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு கொடுத்த அயோக்கியத்தனத்தை தாங்களும் அறிவீர்கள் அல்லவா?

    ReplyDelete
  8. அப்புறம் மதானி மீது அரசு சுமத்திய குற்றச்சாட்டு பொய் என கோர்ட் அவரை விடுதலை செய்து விட்டதை கருத்து சொன்னவர் அறியவில்லை போலும். ஆனாலும் கோவை குண்டு வெடிப்பில் (இது குறித்து கோர்ட் விசாரித்து தீர்ப்பு சொல்லியிருக்கிறது) பாதிக்கப்பட்ட மக்களை மட்டும் நினைத்து கவலைப்படுபவர் (நாங்களும் கவலை படுகிறோம். எனவே தான் குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்கள் எவராக இருந்தாலும் தண்டனை பெற வேண்டும் என்று சொல்லுகிறோம்) அதற்கு இரண்டு மாதத்திற்கு முன்னர் நவம்பர் கலவரத்தில் பதினெட்டு முஸ்லிம்கள் காவலர்கள் மற்றும் இந்துத்துவ காவி கும்பல்களால் எரித்து கொல்லப்பட்டதற்கு ஒரு விசாரணையும் நடக்கவில்லை என்பதையும் அறிவாரோ?

    ReplyDelete
  9. //இப்ப என்ன மேட்டருன்னா... தொர ஜெயில்ல கொடுக்குற சாப்பாடுலாம் சாப்பிட மாட்டாராமாம்... காலைல இட்லி, மதியம் பிரியாணி, நைட் பரோட்டான்னு மெனு கொடுக்குறாராமாம்.. இதெல்லாம் கொடுக்கலைன்னா தலைவரு உண்ணாவிரதம் இருப்பாராமாம்... //

    ஐயோ! பாவம். :))

    ReplyDelete
  10. @கோவி...

    முதல் தடவையா கமென்ட் போட்டதுக்கு நன்றிங்க!

    இதோ என் பொன்னான கருத்து...

    தப்பு பண்ணவுக யாரா இருந்தா என்ன சகோ.கோவி கன்னன்?? யாராக இருந்தாலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒடனே மரணதண்டனைய கொடுங்கன்னு சொல்லி தானே பதிவு போட்டிருக்கேன்.. அதுல மதானியா இருந்தா என்ன அப்துல் கலாமா இருந்தா தான் என்ன???? இல்ல கோவி கண்ணனுக்கு தூக்கு தண்டனைய அறிவிச்சுட்டா "ஐய்யோ அவர் எனக்கு தெரிஞ்ச ப்ளாக்கர்" ன்னு நான் சபோர்ட் பண்ண முடியுமா சொல்லுங்க? :-)

    ஆமா கோவைல குண்டுவெடிப்பு நடத்து கொல்ல காலமாச்சே... குற்றம் நிரூபிக்கப்பட்டதா??? அப்பன்னா ஏன் இன்னும் வச்சுட்டே இருக்காங்களாம்?? யோசீச்சீங்களா????

    அதுக்குதான் சொன்னது... ஆமை வேகத்தில் செயல்படாமல் துரிதமா செயல்பட்டுங்கன்னும் நீதித்துறையையும், விசாரணை முறையையும் நேர்மை ஆக்குங்கப்பான்னும் சொல்லியிருக்கேன்... அது தான் இன்றைய கட்டாய தேவை.

    ReplyDelete
  11. நீங்கள் விட்டு விட்ட ஒரு சின்ன விடயம்..
    பொதுவாக தவறு செய்பவர்களுக்கு எப்படிப்பட்ட தண்டனை கொடுத்தாலும், அது பற்றி எந்தக் கவலையும் படாத நிலையில், தவறு செய்யாமல் வாழ்பவர் சிலர். தான் அல்லது உறவுகள் தவறு செய்து, அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்கப் படக் கூடாது என்பவர்கள் சிலர். குற்ற வாளிகளால் பாதிக்கப் பட்டு, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கட்டாயம் கொடுக்கப் படவேண்டும் என்று சொல்பவர்கள் சிலர். இதில் மரண தண்டனை தேவை இல்லை என்று சொல்லும் கூட்டத்தில் அரசியல் இலாபம் தேடுபவர்கள், உலகமே இரண்டானாலும் இஸ்லாமிய கொள்கைகளை அனுமதிக்கக் கூடாது என்று கூவுகிரவர்கள் மற்றும் தாம் நல்ல மனிதர்கள் என்று தவறாக தம்மைத் தாமே நினைத்துக்கொண்டிருக்கும் சிலர் தவிர எஞ்சியவர்களில் பெரும்பாலானோர், ஏதோ ஒரு ரீதியில் தவருகளோடு சம்பந்தப் பட்டிருக்கலாம். அதே நேரம், மரண தண்டனை வேண்டும் என்று சொல்பவர்களில் முஸ்லிம்கள் தவிர ஏனைய அனைவரும் பாதிக்கப் பட்டவர்களே.. மரண தண்டனை வேண்டாம் என்று சொல்பவர்கள எப்போதாவது பாதிக்கப் பட்டால் மட்டுமே வேண்டும் என்ற பகுதிக்குள் நுழைவர். தமக்கு அல்லது தமது உறவுகளுக்கு கஷ்டம் நேர்ந்தால், அது உண்மையானது, மிகவும் வலியானது.. மற்றவர்களுக்கு நேர்ந்தால், மரண தண்டனை கொடூரமானது.. என்ன இந்த இரு நிலைப்பாடு?

    இஸ்லாம் இவற்றை ஒழுங்காக சொல்லிப் புரிவைத்து அழகான முறையில் சட்டமும் இயற்றி உள்ளது.. அல்லாஹ் நன்கறிந்தவன்..

    ReplyDelete
  12. கொலை செய்தவனுக்கு மரணம் தான் தண்டனையாக வழங்க படவேண்டும் இதில் பாட்சாவானாலும் பரமு ஆனாலும் ஒரே நிலைதான் இதில் எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது.கேள்வி கேட்ட சிங்கை சொம்பு தூக்கியின் உள் நோக்கம் வேறு என்பது எல்லோருக்கும் தெரியும்

    ReplyDelete
  13. கோவி கண்ணன்,

    குற்றம் நீதியுடன் விசாரித்து நிரூபிக்கப்பட்டால் மதானி என்ன யாரை வேண்ட்மென்றாலும் தூக்கில் போடலாம்.. உங்களைக்கூட...

    ஹ..ஹா..ஹா..ஹா

    சரி..சரி.. டென்ஷன் ஆக வேண்டாம்...

    என்னைக்கூட...

    நீதி சரியாக இருக்கணும் இல்லையா?? அதுனால எல்லா கலவர வழக்குகளையும் எடுத்து குற்றவாளி யார இருந்தாலும் தூக்குல போட சொல்லுங்க...

    ReplyDelete
  14. சலாம் சகோ. அருமையான பதிவு. நம்ம கருத்து கண்ட(நொந்த)சாமிக்கு திடீர் திடீர்னு கருத்து வந்து குருத்துல பாயும். இங்கு வாந்தி எடுத்து இருக்குற க க மோடி வகையறாக்கள் பற்றியும் அவர்களின் தண்டனை பற்றியும் கருத்து சொல்லலையே. இந்த மாதிரி உளர்வதற்கு தான் நம்முடைய மூத்த பதிவர்களால் பலமுறை டவுசர் கலட்டபட்டவர் தான் இந்த க க.

    ReplyDelete
  15. கோவி கண்ணன்....

    என்னமோ முஸ்லிம்கள் எல்லாம், மாற்று மதத்தவரை மட்டுமே தூக்கில் போட சொல்றாங்க அப்டிங்கிற மாதிரி சொல்லி இருக்கீங்க.. நீங்க திருந்தவே மாட்டீங்களா????

    இந்த பதிவுல கூட அஜ்மல் கஸாப்புக்கு கொடுங்கன்னு சொல்லப்பட்டு இருக்கிறதே?? அஜ்மல் கஸாப் முஸ்லிம் தானே????

    சரி விடுங்க... சவ்தி தானே இஸ்லாத்திற்கு ரெப்ரசன்டேடிவ் உங்கள பொறுத்த அளவுல???? அங்கு நடைபெறும் தலைவெட்டுக்கள் பெறுபவர்களில் பெரும்பான்மை முஸ்லிம்கள் தான்... போய் செக் பன்ணிக்கங்க...

    நாங்க நீதியோட தான் சார் இருக்கோம்...உங்ககிட்ட தான் அது கம்மியா இருக்கு... நீங்க எந்த கொள்கைல வேணும்னாலும் இருங்க.. பட் நீதி, நேர்மையோட இருங்க...

    ReplyDelete
  16. //அப்புறம் மதானி மீது அரசு சுமத்திய குற்றச்சாட்டு பொய் என கோர்ட் அவரை விடுதலை செய்து விட்டதை கருத்து சொன்னவர் அறியவில்லை போலும்//

    நன்றாகவே அறிந்தோம், அதே போல் குஜராத் நீதிமன்றங்கள் மோடி குற்றவாளி இல்லைன்னு தீர்ப்பு சொன்னால் உங்களுக்கு ஏற்பாக இருக்குமா ?

    //ஏனெனில் அப்சல் குரு வழக்கில் எந்தவொரு ஆதாரமுமில்லாமல் கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்த தூக்கு தண்டனை என்று நீதிமன்றம் சொல்லுகிறது//

    இது போல் மோடிக்கு கூட ஆதாரம் இல்லை, மேலும் அவரது மானிலத்தை சிறப்ப்பாக நடத்துகிறார் என்று சொல்லுகிறார்கள். நீதிமன்றம் ஆதரத்தின் அடிப்படையில் செயல்படுவது, ஆதாரம் இல்லாமல் கொலை செய்தால் நீங்கள் குற்றவாளி இல்லை என்று தான் நீதிமன்றம் சொல்லும். நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்கள் அனைவரும் உத்தமர்கள் இல்லை.

    //அதற்கு இரண்டு மாதத்திற்கு முன்னர் நவம்பர் கலவரத்தில் பதினெட்டு முஸ்லிம்கள் காவலர்கள் மற்றும் இந்துத்துவ காவி கும்பல்களால் எரித்து கொல்லப்பட்டதற்கு ஒரு விசாரணையும் நடக்கவில்லை என்பதையும் அறிவாரோ?//

    அறிவோம் அறிவோம்....மேலும்

    கீழவெண்மணி 40 பேர் எரித்து கொலை செய்யப்பட்ட பிறகு பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் படுகொலை செய்தவர்களைத்தான் தலையை வெட்டி கொலை செய்தார்கள், 19 பேர் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களை பாதிப்புக்கு ஆளாக்கினவர்களைத்தான் குண்டு வைத்து கொல்ல வேண்டும், அப்படி வைத்தால் யாரும் எதுவும் கேட்கப் போவதில்லை, பழிக்கு பழி கேட்டகரியில் வரும், ஆனால் அப்பாவிகளைக் கொல்லும் நோக்கத்துடன் பொது இடத்தில் குண்டு வைத்தவனுக்கும், அதைத் தூண்டியவனுக்கும் ஏன் மரண தண்டனை கேட்கவில்லை ? உங்களின் மரண தண்டனைக்கான நியாங்கள் எந்த வகை ?

    ReplyDelete
  17. /* 19 பேர் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களை பாதிப்புக்கு ஆளாக்கினவர்களைத்தான் குண்டு வைத்து கொல்ல வேண்டும், அப்படி வைத்தால் யாரும் எதுவும் கேட்கப் போவதில்லை, பழிக்கு பழி கேட்டகரியில் வரு */

    இது ரொம்ப வேலிட் பாயிண்ட்... நிச்சயம் குற்றம் செய்யாதவங்கள எந்த ஒரு காரணத்துக்காகவும் கொல்ல முடியாது... அது மாபெரும் அநீதி.... அப்பாவிகளை கொல்லும் எவருக்கும் மரண தண்டனையே பரிசு கொடுக்கப்படவேண்டும்... இது தான் இஸ்லாம் சொல்வது... இதில் எங்களுக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை....

    குண்டு வைத்தவர்கள் முஸ்லிம்கள் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால்... அதற்கு துணை போனவர்கள் யாராக இருந்தாலும் தூக்கில் போடுவதில் என்ன ஆட்சேபணை இருக்க முடியும்????

    ReplyDelete
  18. Feroz has left a new comment on your post "மரண தண்டணை எதிர்ப்போர் கவனத்திற்கு!!!":

    சலாம் சகோ. அருமையான பதிவு. நம்ம கருத்து கண்ட(நொந்த)சாமிக்கு திடீர் திடீர்னு கருத்து வந்து குருத்துல பாயும். இங்கு வாந்தி எடுத்து இருக்குற க க மோடி வகையறாக்கள் பற்றியும் அவர்களின் தண்டனை பற்றியும் கருத்து சொல்லலையே. இந்த மாதிரி உளர்வதற்கு தான் நம்முடைய மூத்த பதிவர்களால் பலமுறை வாங்கிக்கட்டிக்கொண்டவர் தான் இந்த க க.

    ReplyDelete
  19. நன்றி சகோ ஆமினா. நண்பர் கோவி. இங்கு கருத்து சொன்ன அனைவரும் உண்மை குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று தான் சொல்கிறார்களே ஒழிய தான் இனம் என்பதால் காப்பாற்றப்பட வேண்டும் என்று எங்கும் சொல்லவில்லை. ஆனால் ஒரு தலைபட்சமாக மதானியையும் இந்த ஆட்டத்தில் சேர்த்தது தான் வியப்பு. மோடி தன்னை குற்றமற்றவர் என்று எங்கும் வாதிட முடியாது காரணம் கையும் மெய்யுமாக தெகல்காவால் அவருடைய சகாக்கள் பிடிபட்டு இருக்கிறார்கள். நாம் வாழும் இந்த கேடுகெட்ட நீதித்துறை வாழும் நாட்டில் தான் வாய்மையே வெல்லும் என்பது போக வாயே வென்று கொண்டு(று)இருக்கிறது. பார்த்து சூதனாமா இருங்க கோவி மதானியை கோர்ட் நிரபராதி என்று (தமிழ்நாடு) சொன்னதற்கு மாற்றமாக சொல்லி இருக்க நீங்க மாற்றி சொல்வது கோர்ட் அவமதிப்பு கேஸ் வந்துட போவுது.

    ReplyDelete
  20. //குண்டு வைத்தவர்கள் முஸ்லிம்கள் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால்..//

    இந்த ஆதாரங்களை ஏன் மோடி வகையறாக்களுக்கு நீங்களெல்லாம் பொறுத்திப் பார்ப்பது இல்லை ?

    ReplyDelete
  21. //Feroz has left a new comment on your post "மரண தண்டணை எதிர்ப்போர் கவனத்திற்கு!!!":
    //

    எடிட் செய்து போடும் அளவுக்கு ஆபாச பின்னூட்டமா ? ஆவ்....உண்மையான முஸ்லிம் ஒருபோதும் இப்படியெல்லாம் எழுதமாட்டான் என்ற முறையில் அப்படியே வெளி இட்டு இருக்கலாமே.

    ReplyDelete
  22. //அதே போல் குஜராத் நீதிமன்றங்கள் மோடி குற்றவாளி இல்லைன்னு தீர்ப்பு சொன்னால் உங்களுக்கு ஏற்பாக இருக்குமா ?//
    இங்கே நீதிமன்றமாக இருந்தாலும், காவல்துறையாக இருந்தாலும் இரட்டை அளவுகோல் உண்டு கோவியாரே. மகாராஷ்டிரா சிறை சாலைகளில் இருப்பவர்கள் குறித்த அறிக்கை இரண்டு வாரங்களுக்கு முன்னர் வந்ததே.அதை தாங்கள் அறிவீரோ? மோடி கேடி தான் என்று சஞ்சீவ் பட் போன்ற உயர் அதிகாரிகள் சொன்னாலும் அதை இந்த நீதிமன்றங்கள் எடுத்து கொள்ளாது. ஆனால் கோத்ரா இரயிலை கொளுத்துவதற்காக பெட்ரோல் எங்கள் பங்கில் தான் வாங்கினார்கள் என்று அந்த ஊழியர் பொய் சொன்னாலும் (தெஹெல்காவின் வீடியோவில் சஞ்சய் என்ற பெட்ரோல் பங்க ஊழியர் கொடுத்த வாக்குமூலம்) நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும். இது தான் பல நீதிமன்றங்களின் நிலை. இதில் எஸ்.ஐ.டி அடிக்கும் கூத்துக்கள் தனி. மேலும் கொலை கேசில் ஆச்சாரியாருக்கு ஜாமீன், ஆனால் முஸ்லிம்கள் சிறைபட்டால் ஜாமீன் கிடைக்காமல் எட்டு வருடங்கள் (குற்றபத்திரிக்கை கூட தாக்கி செய்யாமல்) வாட வேண்டியது தான். இது தான் அப்பட்டமான நிலை. அத்தி பூத்தாற் போன்று வரும் சில தீர்ப்புக்கள் இதற்கு விதிவிலக்கு. எனவே எவன் தவறு செய்தாலும் அவனுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பது தான் எங்கள் நிலை.

    ReplyDelete
  23. //மேலும் அவரது மானிலத்தை சிறப்ப்பாக நடத்துகிறார் என்று சொல்லுகிறார்கள். //
    இராஜபக்சே கூட சிங்களவர்களிடம் கேட்டால் நன்றாக தான் ஆட்சி புரிகிறார் என்று சொல்லுவார்கள். ஆனால் மோடி நன்றாக ஆட்சி புரியும் இலட்சணத்தை "வைப்ரன்ட் குஜராத்" என்று பிரன்ட்லைன் இதழ் ஆதாரத்துடன் போட்டு கிழித்ததை மறக்க கூடாது கோவியாரே.

    மேலும் பாதிக்கப்பட்டவனாக இருந்தாலும் கூட சட்டத்தை தன் கையில் எடுக்க கூடாது என்று தான் நான் சொல்லுகிறேன். பின்னர் எதற்காக காவல்துறையும் நீதி துறையும்?

    ReplyDelete
  24. salam aapa!
    sema sema summa "nachunu"nu solli erukinga!
    puriya vendiyavargaluku purinja sari!

    ReplyDelete
  25. @சகோ கோவி..

    உங்களையெல்லாம் எந்த வகைல சேர்க்குறதுன்னே தெரியல :-) ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா....

    இத்தன பேருக்கு முன்னாடி உங்கள சங்கடப்படுத்த வேணாமேன்னு நல்ல எண்ணத்துல சகோ பெரோஸ் வருத்தப்பட்டாலும் பரவாயில்லைன்னு நெனச்சு ஒரே ஒரு வார்த்தையை மட்டும் நீக்கி மீண்டும் கமென்ட் போட்டேன்..... பாவம் நீங்களே வாய்விட்டு கேட்டபொறவு என் சகோதரர் போட்ட கமென்ட்டை அப்படியே வெளியிடுவதே சிறந்ததுன்னு நெனைக்கிறேன். மேல இருக்கு... பாருங்க! முடிஞ்சா வரிக்கு வரி பதில் சொல்லுங்க :-)

    விதி வலியது :-))))))))))))))))

    ReplyDelete
  26. //.உண்மையான முஸ்லிம் ஒருபோதும் இப்படியெல்லாம் எழுதமாட்டான் என்ற முறையில் அப்படியே வெளி இட்டு இருக்கலாமே.//

    உங்க ப்ளாக்ல போட்ட கமென்ட்லாம் எப்ப வெளியிட போறீங்க :-)

    வஹாபி மகுடத்தில சிராஜ் கமென்ட்டை நீங்க பப்ளீஸ் பண்ணலன்னு கேள்விபட்டேன்... அவ்வளவு ஆபாசமாவா இருந்துச்சு?????????? உண்மையான முஸ்லீம் அப்படியெல்லாம் ஒருபோதும் எழுதமாட்டான் என்ற முறையில் கோவியாரும் அப்படியே வெளியிட்டிருக்கலாமே???? அல்லது உண்மையான முஸ்லீம்மின் லட்சணத்தை பாருங்கன்னு எங்க மொகத்துல கரியை பூசலாமே??? வை கோவி சார் ? நீங்க ஏன் அப்படி செய்யல? ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப நல்லவர் நீங்க :-)

    ReplyDelete
  27. RSSன் நரமாமிச மோடி யின் ஆட்சியில் குஜராத் தில் பாலும் தேனும் ஓடுவதாக பிரசாரம்.ஆனால்
    ஹிட்லரின் ஆட்சியில் ஜெர்மனி யானது அப்பவே நல்ல கட்டமைப்பு களுடன் நன்றாக முன்னேறி இருந்தது. இருந்தாலும் யாரும் ஹிட்லரை நல்லவர் னு சொல்லமாட்டாங்க.

    யாராக இருந்தாலும் நடு ரோட்டில போஸ்ட் கம்பத்தில் தூக்கில போடனும் . அப்போதுதான் குற்ற செயல்கள் குறையும்.

    ReplyDelete
  28. சிறந்த பதிவு. சட்டங்கள் கடுமையானால்தான் குற்றங்கள் குறையும்.

    ReplyDelete
  29. //அதே போல் குஜராத் நீதிமன்றங்கள் மோடி குற்றவாளி இல்லைன்னு தீர்ப்பு சொன்னால் //

    கோவி சார்!, இப்ப எந்த நீதிமன்றம் மோடியை குற்றவாளின்னு சொல்லி அவரு எந்த சிறையில தண்டனையை அனுபவச்சிக்கிட்டு இருக்காரு?. :(((

    உங்களுக்கு அவர் நிரபராதின்னா இருந்துட்டு போகட்டும் அதில் எந்த ஆட்சேபனையும் கிடையாது, ஒரு கூட்டமே மோடியை நல்லவன்னுதான் சொல்லிக்கிட்டு திரியுதுங்க, நீங்களோ நானோ கூறுவதால் ஒருத்தர் குற்றவாளியாகவும் முடியாது அல்லது நிரபராதியாகவும் முடியாது, மேலும், மனிதர்கள் உண்டாக்கி வைத்திருக்கும் சட்டம் மிக பலவீனமானது என்பதை சொல்லித்தெரியவேண்டிய அவசியம் இல்லை, பணம், வழக்காடும் திறமை, பொய்சாட்சி இத்யாதி இத்யாதிகள் ஒருவனை குற்றவாளியாவோ அல்லது நிரபராதியாகவோ தீர்மானிக்கிறது என்பதை நம் முன் நடந்தேறும் காட்சிகள் இதை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

    1999ம் வருஷம் தாரசிங் (ன்னு ஒருத்தன்) தலமையில் பாதிரியாரும் அவருடைய மகன்களும் சர்ச்க்கு வெளியே நின்ற ஜீப்பில் வைத்து தூங்கிக்கொண்டிருந்த நிலையில் உயிரோடு எரித்து கொல்லப்படுகின்றனர். வழக்கு நடந்து 2003ம் ஆண்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது, அப்பீலுக்கு மேல் அப்பீல் (குற்றம் செய்தவன் போட்டு) அதை ஆயுள் தண்டனையா மாத்திக்கிட்டான், இது சாதரணமா நடக்குறதுதான் ஆனால் தண்டனையை ரத்து செய்து நீதிபதி வழங்கினார் பாருங்கள் ஒரு தீர்ப்பு :(( அதுதான் நாம் கீழே படிக்க போறது

    //இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சதாசிவம், பி.எஸ்.சவுகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. கடந்த மாதம் 15ம்தேதி இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று கூறப்பட்டது."தாராசிங்கும் அவரது கூட்டாளியும் செய்த குற்றம் கண்டனத்துக்கு உரியது தான். ஆனால், எல்லாக் கொலை வழக்குகளுக்கும் மரண தண்டனை விதிக்க முடியாது. எனவே, ஐகோர்ட் இவர்களுக்கு விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்கிறோம்' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.//

    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=171039

    அப்படியானால் எந்த கொலை வழக்கிற்கு மரண தண்டனை என்று வகைப்படுத்தியுள்ளனர்?, இவன் செய்த குற்றம் நிலத்தகராறுக்காவோ அல்லது குடும்பப்பிரச்சினைக்காகவோ அல்ல என்பது தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு தெரிந்திருக்க நியாமில்லையோ?    


    நான் மேலே கூறிய சம்பவம் ஒரு சிறு உதாரணமே, இதே போல் எத்தனையோ (குறிப்பாக) கொலை வழக்குகள் தீர்ப்பு வழங்கப்படாமல் நிலுவையில் இருக்கின்றன/அல்லது வழங்கிய தீர்ப்புக்கள் அப்பீல்கள் மற்றும் கருணையடிப்படையில் குறைக்கப்பட்டிருக்கின்றன.



    இவற்றிற்கெல்லாம் என்ன தீர்வு?,

    உங்கள் கூற்றுப்படி நாங்கள் இஸ்லாமியர்கள் (மதவாதிகள்) ஒரு தலைபட்சமாக இருக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள், மோடி, கோவை பாஷா, மாதானி போன்றவர்களைப்பற்றி கவலைப்படுகின்ற நடுநிலை (?!) தவறாத உங்களை போன்ற நியாயவான்கள் இது போன்ற குற்றங்களை தடுக்க கொடுக்கும் பரிந்துரை தான் என்ன?. ஜெயிலில் வைத்து களி (?) திங்க வைப்பதுதானா?. அப்படியெனில் நீங்கள் பரிந்துரைக்கும் தண்டனையைத்தான் மோடியை தவிர்த்து மற்றவர்கள் அனுபவித்து விட்டார்களே?! அப்புறம் ஏன்????.


    நீங்கள் கூறுவதுபோல் மோடி குற்றமற்றவர், நாட்டை முன்னேற்றும் திறமைசாலி என்றாலும் கூட அவர் இதுவரை ஜெயிலுக்கு சென்று களி திங்கவில்லையே அப்புறம் ஏன் அவரைக்குறித்து நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்கள்?.

    தண்டனைகள் குற்றங்களை குறைக்க வழி செய்ய வேண்டுமேயொழிய குற்றம் செய்ய தூண்டுவதாக இருக்கக் கூடாது என்பதுதானே இந்த பதிவின் சாரம்சம், எங்கேனும் இஸ்லாமியன் தவறு செய்தால் தண்டனை கொடுக்கக்கூடாது என்று இந்தப்பதிவில் இருக்கிறதா?.

    இஸ்லாமிய கொள்கையின் அடித்தளமே இவ்வுலகில் இல்லை என்றாலும் மறுவுலகில் நிச்சயம் தண்டனை உண்டு என்பதுதானே அது உங்களுக்கு நன்றாகவே தெரியும்தானே?. இதை உண்மை என்று நம்பினால்தானே இறைவனுக்கு கட்டுப்பட்டவன் (முஸ்லிம்) இல்லையெனில் இறைவனை நிராகரித்தவன். (இது பாஷான்னாலும், மாதானின்னாலும், மோடின்னாலும் பொருந்தும்தானே).

    ReplyDelete
  30. Good post sister. Well needed for this time

    ReplyDelete
  31. ஸலாம் சகோ.ஆமினா,
    ஆணித்தரமான அதிரடி மெகா கலக்கல் பதிவு..!
    மாஷாஅல்லாஹ் அசத்திட்டீங்க சகோ.ஆமினா..!
    இப்பதிவு அருமை என்றால்... இதன் பின்னூட்டங்கள்... திரு.கோவி கண்ணன் பெயரை இனி "காவி கண்ணன்" என்று மக்களுக்கு நன்கு பதிய வைத்து விடும்..! :-)))))

    ஏற்கனவே... சகோ.ஷேக் தாவூத் சரியான பதிலடி கொடுத்துள்ளார் என்றாலும்... நானும் எனது பங்குக்கு சொல்லியாகணும்..!

    அந்த அளவுக்கு "தற்போதைய காஷ்மீர் முதல்வர்" அப்சல் குரு என்ற நினைப்பில் உள்ளார்..! அதனால்தான் அவர் அதிகார துஷ்பிரயோகம் செய்து தூக்கில் இருந்து தப்பி இருக்கிறார் என்ற நினைப்பில் இருக்கார்..! ஹிந்துத்துவாக்கள் எவ்ளோவோ... தேவலை போல திரு.காவி கண்ணன் வாதங்களுக்கு..!

    ஆயுள் தண்டனைக்கும் அதிகமான ஆண்டுகள் சிறையில் இருந்ததால்... இந்திய சட்டப்படி... ராஜீவ் கொலையாளிகள் விடுதலை செய்யப்படவேண்டியவர்கள்..! நான் முன்பே இதனை சகோ.ஹைதர் அலி பதிவில் சொல்லி இருக்கேன். 23 ஆண்டுகள் தண்டனைக்கு பிறகு அவர்களுக்கு இனி தூக்கு தண்டனை என்றால் திரு காவிகண்ணன் அதனை நீதி என்று ஏற்றுக்கொள்வாரா...? ஹா...ஹா...ஹா...

    இதே நியதியை கோவை குண்டுவிடுப்பு பயங்கரவாதிகளுக்கும் நான் பொருத்துவேன்..! என்ன சொல்வார் திரு.காவி கண்ணன்..? :-)))

    தூக்கு தண்டனை என்றால்... அதிக பட்சம் ஓரிரு ஆண்டுகளிலேயே வழக்கு விசாரிக்கப்பட்டு ஆதாரப்பூர்வமாக தீர்ப்பு கொடுக்கப்பட வேண்டாமா..? என்னய்யா நேர்மையான சட்டம் இது..? இதுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு,,,, "பொன்னனான கருத்து" கூற வேண்டுமாம்..!

    /////கோவி கண்ணனுக்கு தூக்கு தண்டனைய அறிவிச்சுட்டா "ஐய்யோ அவர் எனக்கு தெரிஞ்ச ப்ளாக்கர்" ன்னு நான் சபோர்ட் பண்ண முடியுமா சொல்லுங்க? :-)/////---'பொண்ணான கருத்து' செம்மை.... ஆஹா....நச்...!!!

    சூப்பர் பதிவு... & சூப்பர் பின்னூட்டங்கள்..!

    ReplyDelete
  32. ISLAM ADMITTED CAPITAL PUNISHMENT. THATS IT!

    DON'T NEED ARGUMENT!!

    ReplyDelete
  33. அருமையான பதிவு சகோதரி. (ஒரு சில) மரணதண்டனை எதிர்பாளர்கள் ஒரு வேலை நாமும் இதே கேசில் மாட்டினால் என்ன செய்வது என்ற பயமோ??? சும்மா தமாசு. இவர்களது பயம் எல்லாம் எங்கே ( இஸ்லாமிய ) படைதவனுடைய சட்டத்தை ஏற்பதா ???? என்பதுதான்.

    நன்றி
    செய்யது
    துபாய்

    ReplyDelete
  34. Amina..summa irundha Siraj singaththa siluppi vittuteenga. sandhosamaa?

    ReplyDelete
  35. சமூக நலன் என்ற போர்வையில் பக்கசார்பினைத் திணிக்கும் பதிவாக இதனைக் காண்கின்றேன். உண்மையில் இந்தியச் சட்டங்கள் பலவீனமானவை என்பதை நாம் நன்கு அறிவோம் .. !!! இந்தியாவில் மரணத் தண்டனைக்குத் தடையும் இல்லை .. !! இருந்தும் ஆதாரங்கள் என்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றார்கள்.. அத்தோடு பல குற்றவாளிகள் தப்புவதற்கு முக்கிய காரணி மரண தண்டனை இல்லாமல் இல்லாதது அல்ல !!! மரண தண்டனை இருந்த போதும் விசாரணைகள் செய்வோருக்கு போதிய அறிவில்லாமையே !

    விசாரணை துறையில் போதிய முதலீடுகளை அரசு செய்யவில்லை .. பல தொழில்நுட்பங்கள், பயிற்சிகள் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இருக்கின்றது.

    மற்றப்படி சகோதரி சொல்ல நினைப்பது எல்லாம் சமூக அக்கறையால் எழுந்தவையாக தோன்றவில்லை , மாறாக இஸ்லாமிய ஷரியாத் திணிப்புவாதமாக நான் கருதுகின்றேன்.

    ஒருவேளை இஸ்லாம் மரண தண்டனையை ஏற்காமல் இருந்தால், உங்கள் பதிவு வேறுவிதமாக இருந்திருக்கும்..

    ஷர்புதீன் சொன்னது உண்மை.. இஸ்லாம் மரண தண்டனையை ஏற்கின்றது அவ்வளவே !!! அதனால் அதனை ஆதரிக்கின்றீர்கள் ..

    சிந்தனையும் சமூக நலனும் சுயமாக எழாமல் புறக் காரணிகளின் திணிப்பால் எழுவதால் இங்கு பல விதண்டாவாதங்கள் எழுகின்றன ...

    ReplyDelete
  36. @இக்பால் செல்வன்

    //பக்கசார்பினைத் திணிக்கும் பதிவாக//

    எந்த பக்கத்துக்கு சப்போர்ட் பண்ணியிருக்கேன்னு சொல்ல முடியுமா :-)

    //மரண தண்டனை இருந்த போதும் விசாரணைகள் செய்வோருக்கு போதிய அறிவில்லாமையே !//
    குறிப்பில் நான் கொடுத்த //நீதித்துறையையும், விசாரணை முறையையும் நேர்மை ஆக்குங்கப்பா... அது தான் இன்றைய கட்டாய தேவை... // என்பதை படிச்சீங்களா?? அதை தானே நானும் சொல்லியிருக்கேன் :-)

    //மற்றப்படி சகோதரி சொல்ல நினைப்பது எல்லாம் சமூக அக்கறையால் எழுந்தவையாக தோன்றவில்லை , மாறாக இஸ்லாமிய ஷரியாத் திணிப்புவாதமாக நான் கருதுகின்றேன்.//

    பாருங்க...எங்காச்சும் இஸ்லாமை கொண்டு வந்திருக்கேனான்னு?:-) சரி விடுங்க உங்க கண்ணுக்கெல்லாம் எல்லாமே திணிப்பா தான் தெரியும்.

    இப்ப நீங்க சொல்லுங்க சகோ இக்பால். நான் ஒருவனை எனக்கு பணம் திருப்பி தரலன்னு கொலபண்ணிடுறேன்.

    போதிய அறிவு கொண்ட நீங்கள் நீதிபதியா இருக்கீங்க. பல தொழில்நுட்பங்கள், பயிற்சிகள் கொடுக்கப்பட்டு, போதிய முதலீடும் வழங்கப்பட்டு உலகம் போற்றும் நிலையில் உங்கள் விசாரணை துறை இருக்கு!

    ஆமினா ஒரு கொல பண்ணிட்டு வர்ரா.... சார் என்ன தண்டனை கொடுப்பீங்க??

    நீங்க மரணதண்டனை கொடுத்துட்டா என்னோட கொலைகுற்றங்கள் முற்றுக்கு வந்துடும். இல்லையா? ஆயுள் தண்டணை கொடுத்தா எப்படியும் கொஞ்ச நாள்ல திரும்பி வர எக்கசக்கமா ஓட்டை வச்சுருக்காங்க. தப்பிச்சு வந்துடுவேன்! அரசியல் பிண்ணனி இருக்கு என்னிடம்... இன்னொரு கொலையும் செய்வேன். இதை பார்க்கும் பொடி பொடி ரவுடிகளும் கொலைன்னா அல்வா சாப்பிடுறதுன்னு முடிவுக்கு வந்திடுவாங்க.

    -இப்ப அறிவா பதில் சொல்லுங்க. என்ன தண்டணை எனக்கு பரிந்துரை செய்வீங்க! நான் வெட்டி கொலை செய்த குடும்பத்துக்கு என்ன நீதி வழங்கிதர போறீங்க??!!

    மரண தண்டனை கொடுத்தா உங்க நேர்மை, அறிவு பற்றி உலகிற்கு

    //ஒருவேளை இஸ்லாம் மரண தண்டனையை ஏற்காமல் இருந்தால், உங்கள் பதிவு வேறுவிதமாக இருந்திருக்கும்..//

    இஸ்லாம் எப்பவும் சரியான ஒன்றை தான் சொல்லும் என்பதில் எனக்கு மாற்று கருத்தே இல்லை சகோ. அனைவருக்கும் பொதுவான, தர்க்கரீதியான விஷயத்தையே சட்டமாக்கும். சோ மரணதண்டனையை ஏற்காமல் இருந்தால் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அப்படி இஸ்லாம் 'கொலை செய்தவனை சுதந்திரமாக அலைய விட்டால்' என் பதிவே வேற மாதிரி இருந்திருக்கும்! என்னடா சட்டம் இது? இவ்வளவு ஓட்டையோட இருக்கு.. இதெல்லாம் பாலோ பண்றீங்க? வெட்கமா இல்லையா?'ன்னு தூக்கி போட்டுட்டு போயிருப்பேன் :)

    //ஷர்புதீன் சொன்னது உண்மை.. இஸ்லாம் மரண தண்டனையை ஏற்கின்றது அவ்வளவே !!! அதனால் அதனை ஆதரிக்கின்றீர்கள் .//

    ஒன்றை வெறுக்கவும் விருப்பப்படவும் லாஜிக்கான பாய்ன்ட் இருக்கணூம்ல சகோ... மேல பாருங்க... ஏதோ என்னால முடிஞ்சளவுக்கு மரணதண்டனை ஏன் வேண்டும்னு போட்டிருக்கேன். சும்மா சும்மா இஸ்லாம் சொல்லுச்சுங்குறதுக்காக மூளையில் எதையும் ஏற்கவில்லை. எதையும் சிந்தித்து உடன்பட்ட பின் ஏற்க சொல்லியே எம் மார்க்கம் கற்றுகொடுத்துள்ளது. சர்புதீன்னை போல் 'ISLAM ADMITTED CAPITAL PUNISHMENT. THATS IT! DON'T NEED ARGUMENT!! என சொல்ல என் மனசாட்சி எடம் கொடுக்கல! அவுக அப்படி தான் போல!

    சகோ.சர்புதீன்.. இனிமேலாவது சிந்திச்சு செயல்படுங்க :) பாருங்க சகோ.இக்பால் உங்கள எந்த ரேன்ச்க்கு ஆக்கிட்டாருன்னு :-)

    நீங்க மன்னிச்சுகிட்டே இருங்க கூலிக்கு கொலை செய்றவனெல்லாம் அப்பாவிகள கொன்னு பணக்காரன்கல வாழ வச்சிகிட்டே இருக்கட்டும்

    போங்கப்பா நீங்களும் உங்க மரண தண்டனை எதிர்ப்பும் !!!???!!!

    ReplyDelete
  37. @சகோ இக்பால்

    சாரி இந்த வரியை விட்டுட்டேன்

    //சிந்தனையும் சமூக நலனும் சுயமாக எழாமல் புறக் காரணிகளின் திணிப்பால் எழுவதால் இங்கு பல விதண்டாவாதங்கள் எழுகின்றன ...//

    சிந்தனையும் சமூக நலனும் சுயமாக கொண்டு புறக்காரணிகள் திணீப்பில்லாமல் எழும் 'மரணதண்டனை குறித்து உங்கள் புரிதல் அறிய ஆவல்... அதே சிந்தனையும் சமூக நலனும் சுயமாக எழுந்த சகோ.இக்பால் செல்வன் ஆகிய நீங்கள் கொலைகுற்றவாளியான ஆமினாவிற்கு என்ன தண்டனை கொடுப்பீங்கன்னு தெரிஞ்சுக்கணும். அதையும் சொல்லிடுங்க! :-) :-) :-)

    ReplyDelete
  38. //ஆமினா ஒரு கொல பண்ணிட்டு வர்ரா.... சார் என்ன தண்டனை கொடுப்பீங்க??//

    எனக்கு மரண தண்டனையில் உடன்பாடில்லை .. சாகும் வரை சிறையில் இருக்கும் படி தான் தண்டனைக் கொடுப்பேன் !!!

    கொலைக்கு கொலை என்பது எவ்வகையிலும் தீர்வாகாது ... குற்றம் செய்ய யத்தனிப்பவர்கள் குற்றம் தவறு என்று உணரும் உளமாற்றம் பெற வேண்டும், மாறாக அச்சத்தை மனதில் விதைத்து குற்றங்களை கட்டுப் படுத்த நினைப்பது தீர்வாகாது ... !!!

    //என்னடா சட்டம் இது? இவ்வளவு ஓட்டையோட இருக்கு.. இதெல்லாம் பாலோ பண்றீங்க? வெட்கமா இல்லையா?'ன்னு தூக்கி போட்டுட்டு போயிருப்பேன் :)//

    ஹிஹி !!! அதைத் தான் நாங்களும் சொல்றோம் .. ஷரியா எந்தளவுக்கு நவீன காலத்துக்கு பொருத்தமாக இருக்கு சொல்லுங்க.. இதெல்லாம் பாலோ பண்றீங்க.. வெட்கமா இல்லையா ? என்று தான் சொல்கின்றோம் ...

    ஷரியாவை உலகம் முழுவதும் நிறுவ முயல்பவர்களை இப்படித் தான் பார்க்கின்றேன் ..

    உயிரே போகும் நிலையில் அறுவை சிகிச்சை செய்துக் கொள்ள மாட்டேன் .. 2000 ஆண்டுகளுக்கு முன் இருந்த சித்த வைத்திய முறையை மட்டுமே ஏற்பேன் என சொன்னால் எப்படி இருக்கும் ..

    காலத்துக்கு தக்கவாறு மாற்றங்கள் அனைத்திலும் வேண்டும் .. இதில் மதம் என்ன் மண்ணாங்கட்டி என்ன ?!!!

    ReplyDelete
  39. @ ஆமினா - நான் நீதிபதி அல்ல .. சட்டம் கற்றவன் அல்ல .. ஒவ்வொரு நாடுகளும் தத்தமது சூழலுக்கு ஏற்ப சட்டத் திட்டங்களை வகுத்து வைத்துள்ளன.. ஒன்று மற்றொன்றை விட அனைத்திலும் சிறந்தது அல்ல. ஒவ்வொரு விதத்தில் ஒவ்வொன்றும் சிறப்பானதாக இருக்கக் கூடும் ... !!!

    திருடியவனின் கையை வெட்டி விட்டால் ... சரியாகி விடுமா ? ஒருவன் திருடுகின்றான் என்றால் அதில் அவனின் குற்றம் பாதித் தான் மீதிப் பாதி இந்த சமூகமே காரணம் .. அதனை அறிந்து நிவர்த்தி செய்ய முற்பட வேண்டும் என்பதே எனதுக் கருத்து !!!

    அது சரி !!! மதம் மாறினாலே மரண தண்டனைக் கொடுக்க வேண்டும் அன்றல்லவா ? பல நாடுகளில் சட்டமாக இருக்கின்றது .. அது நியாயத் தராசில் எந்தளவுக்கு நியாயமானது சொல்லுங்கள் ... !!!

    ReplyDelete
  40. சரி சட்டத்தின் சந்து பொந்துகளை பயன்படுத்தி நீங்கள் வெளியே வந்துவிடுவீர்கள் ( இந்திய சட்டத்தின் நிலை அப்படி இருக்கு என்பது உண்மையே ) ....

    ஆனால் ஒருவேளை நீங்கள் குற்றமே செய்யாமல் சந்தர்ப்ப சூழல்களாலும், பொய் சாட்சியங்களாலும், இன்ன பிற சந்து பொந்துகளாலும் குற்றம் என முடிவுக்கு வந்து உங்களை கொன்று விடுகின்றார்கள், அதான் மரண தண்டனைக் கொடுத்து விடுகின்றார்கள் ...

    கொஞ்ச காலம் கழித்து தான் உண்மையான குற்றவாளி பிடிபடுகின்றான் ..

    இப்போ சொல்லுங்க.. அந்த சட்டத்தாலோ ? அல்லது கடவுளாலோ மாண்டவனை உயிர்ப்பிக்க முடியுமா ??? !!!

    இப்படி நடக்கவும் வாய்புள்ளது என்பது ஏன் பலருக்கு தெரிய மாட்டேங்குது ... !!!

    ReplyDelete
  41. @இக்பால் செல்வன்

    //எனக்கு மரண தண்டனையில் உடன்பாடில்லை .. சாகும் வரை சிறையில் இருக்கும் படி தான் தண்டனைக் கொடுப்பேன் !!!//

    எதிர்பார்த்த அதே பதில் தந்தமைக்கு நன்றி சகோ.இக்பால்

    ஆக.. நான் கொல பண்ணா எனக்கு அரசாங்க செலவுல 2 வேலைக்கும் சாப்பாடு :-) வார்ரே...வா..! சீக்கிரம் உங்க தலைமையின் கீழ் நீதித்துறை செயல்படவேண்டும் சகோ.. அவனவன் ஒழைச்சு சம்பாதிச்சாலும் ஒருவேள கஞ்சிக்கு நாயா பேயா அலையுறான்.. பட் எனக்கு காலம் முழுக்க அரசாங்க செலவில் கவனிப்பு,பராமரிப்பு எக்ஸட்ட்ர்ரா..எக்ஸட்ட்ரா... வாவ்வ்வ்வ்வ்வ்

    ஆக, இத பார்க்குற அடுத்தவனுக்கும் 'கொல பண்ணா என்ன பண்ணிட போறாய்ங்க. காலம் முழுக்க ஜஸ்ட் ஜெயில் தானே' ன்னு தோணாதா :-)

    ஏங்க கொல பண்ண காட்டுமிராண்டி நெலைல இருந்துதான் யோசிப்பீங்களா எல்லாரும்??? பாதிக்கப்பட்டவன் நிலையில் இருந்து பாக்கவே மாட்டீங்களா? :-)

    ReplyDelete
  42. @இக்பால்

    //ஹிஹி !!! அதைத் தான் நாங்களும் சொல்றோம் .. ஷரியா எந்தளவுக்கு நவீன காலத்துக்கு பொருத்தமாக இருக்கு சொல்லுங்க.. இதெல்லாம் பாலோ பண்றீங்க.. வெட்கமா இல்லையா ? என்று தான் சொல்கின்றோம் //

    கொலை செய்தவனுக்கு தண்டனை கொலை தான்னு சொல்லுது.

    அப்படி அவனை மன்னிக்கும் தகுதி பாதிக்கப்பட்டவனின் பகுதிக்கு சென்றுவிடுகிறது.

    இது லாஜிக்கா????? இல்ல கொல பண்ணிட்டா உனக்கு சாப்பாடு, சம்மந்தமே இல்லாத ஒருவரின் பொதுமன்னிப்பு- இது லாஜிக்கா??? ஹா..ஹா..ஹா..

    அதுனால் தான் சகோ சொல்றேன்! நவீனகாலத்துக்கும் பொருந்தி வரதுனால தான் ஷரீஅத் சட்டத்தை சீன்னு தூக்கிபோட முடியல ஹி..ஹி..ஹி...

    ஒரு கைல ஓட்ட ஒடசல் தட்டு, இன்னொரு கைல சில்வர் தட்டு! - அறிவுள்ள நானோ சில்வர் தட்டை தான் தேர்ந்தெடுப்பேன். காரணம் கேட்டா ஓட்ட இருக்கு, நெழிஞ்சுடுச்சு, அத வச்சு கஞ்சி குடிக்க முடியாதுன்னு தான் சொல்லுவேன்.

    ஓட்ட ஒடசல் தட்டு தான் வேணும்னு சொல்லி சில்வர் தட்டுக்கு கொற சொன்னா அறிவுடைமை ஆகுமோ :-) உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன் :-)

    ReplyDelete
  43. @ இ.செல்வன் /////சாகும் வரை சிறையில் இருக்கும் படி தான் தண்டனைக் கொடுப்பேன் !!!//// ----இது புதுசா இருக்கே...? எந்த நாட்டில் இப்படி தராங்க...? சரி, நீதியும் நியாயமும் உள்ள உங்க கோர்ட்டில் தரீங்க..! ஓகே.

    அதெப்படிங்க.... என் வீட்டாரை, என் உறவினரை கொன்றவன்க்கு என் காசில் மூணு வேளை சோறு போட்டு சாகும் வாராய் வாழ வைப்பீங்க..? இஸ்லாமிய பதிவுகள் திரட்டிகளில் வந்தாலே சகிக்காத.. ஜீரணிக்க முடியாத... வயிறு எரியும் நீங்கள் திரு.காவி கண்ணன் போன்றவர்கள் எல்லாம் எப்படிங்க உங்கள் வீட்டினரை நாசம் செய்து... கண்ட துண்டமாக வெட்டி கொன்ற கொலையாளிக்கு.... உங்க சொந்த காசில் உழைத்து வரி கட்டிய காசில்... சோறு போட்டு வாழ வைப்பீங்க...? என்னே ஒரு முரண்..?

    உங்களுக்கே பொருத்தமாவே இல்லையே... நீங்க சொல்லும் உங்க நியதி...?

    ReplyDelete
  44. @சகோ.இக்பால்

    //உயிரே போகும் நிலையில் அறுவை சிகிச்சை செய்துக் கொள்ள மாட்டேன் .. 2000 ஆண்டுகளுக்கு முன் இருந்த சித்த வைத்திய முறையை மட்டுமே ஏற்பேன் என சொன்னால் எப்படி இருக்கும் ..//

    சத்தியா, கண்டிப்பா நீங்க சொல்ற இந்த பாய்ன்ட் சூப்பர்!

    அப்படி இருந்தா நிச்சயமா அது அடிமுட்டாள் தனமான விஷயமாகத்தான் இருக்கும் சகோ!

    ஆனா எக்காலத்துக்கும் பொருந்தி வரும் ஒரு மருத்துவத்தை எந்நாளும் ஏற்கமாட்டேன்னு சொன்னால் எப்படி இருக்கும் :-))

    //காலத்துக்கு தக்கவாறு மாற்றங்கள் அனைத்திலும் வேண்டும் .. இதில் மதம் என்ன் மண்ணாங்கட்டி என்ன ?!!!//- மனிதன் ஏற்படுத்திய சட்டங்களுக்கு தான் திருத்த மசோதா அடிக்கடி கூட்டணூம் :) இது தான் மனித இனம், இப்படிதான் இருப்பான், இப்படி தான் காலம் இருக்கும் என முன்பே தீர்மானிக்கப்பட்டு எழுதப்பட்ட சட்டத்டில் எப்படி மாற்றம் தேவைப்படும்?? அப்படி மாத்தி மாத்தி சொன்னா சட்டத்தை சொன்னவர் எப்படி கடவுளாக ஏற்க முடியும்???

    கொலை செய்தவனுக்கு நீதி நிலைநாட்ட கொலையே தண்டனையாக கொடுங்க என சொல்றதுல என்ன பழமையை கண்டுட்டீங்க !??! இது இப்போவும் அழகா பொருந்தி வருதே சகோ.இக்பால்! அப்படி பண்ணா அடுத்தவன் பயப்படுறான் - இதுவும் இந்த காலத்துக்கு பொருந்தி வருதே சகோ.

    :-)

    இந்த பதிவை மதவெறி கண்ணோட்டத்தோடு நோக்காமல் பார்க்கும் படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன் :-)))

    ReplyDelete
  45. அப்படி சாகும்வரை சிறையில் சோறு போட தீர்ப்பு சொல்லிட்டு.... அடுத்து நீங்க என்ன சொல்றீங்கன்னா..... அதுதான் செமை காமடி..!

    ///கொலைக்கு கொலை என்பது எவ்வகையிலும் தீர்வாகாது ... குற்றம் செய்ய யத்தனிப்பவர்கள் குற்றம் தவறு என்று உணரும் உளமாற்றம் பெற வேண்டும், மாறாக அச்சத்தை மனதில் விதைத்து குற்றங்களை கட்டுப் படுத்த நினைப்பது தீர்வாகாது ... !!!///

    சரிங்க.... நீங்க சாகும் வரை சிறை என்று தீர்ப்பு அளித்த அந்த கொலை குற்றவாளி... அடுத்த நாளே " மனம் வருந்தி உண்மை உணர்ந்து நான் திருந்திட்டேன்..." என்றால்... அவன் உளமாற்றம் அடஞ்சிட்டான் என்று ரிலீஸ் பன்னிருவீங்க தானே..? அதுதானே தர்மம்..? அதுதானே நியாயம்..? உங்க கோர்ட்டில்... அதுதானே தண்டனை தந்ததன் நோக்கம்...?

    ஹி... ஹி.... இப்படித்தான் மனித சட்டங்கள் சிதிப்பா சிதிக்கும்....

    /// நான் நீதிபதி அல்ல .. சட்டம் கற்றவன் அல்ல .. //// ஆமாம்... இதை மட்டும் சரியா சொன்னீங்க.... அதனால்த்தான்.... சட்டமும் நீதியும் நியாயமும் தெரிந்த இறைவனின் சட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்...

    அதனால்தான்... சட்டம் தெரியாத... பாதிக்கபப்ட்டவனின் மனநலம் அறியாத.... "இக்பால் செல்வன் களின் சட்டங்களை" பார்த்து..... என்னடா சட்டம் இது? இவ்வளவு ஓட்டையோட இருக்கு.. இதெல்லாம் பாலோ பண்றீங்க? வெட்கமா இல்லையா?'ன்னு தூக்கி போட்டுட்டு போயிக்கிட்டு இருக்கோம்... ஹி..ஹி...ஹி..

    ReplyDelete
  46. /* சரி சட்டத்தின் சந்து பொந்துகளை பயன்படுத்தி நீங்கள் வெளியே வந்துவிடுவீர்கள் ( இந்திய சட்டத்தின் நிலை அப்படி இருக்கு என்பது உண்மையே ) ....

    ஆனால் ஒருவேளை நீங்கள் குற்றமே செய்யாமல் சந்தர்ப்ப சூழல்களாலும், பொய் சாட்சியங்களாலும், இன்ன பிற சந்து பொந்துகளாலும் குற்றம் என முடிவுக்கு வந்து உங்களை கொன்று விடுகின்றார்கள், அதான் மரண தண்டனைக் கொடுத்து விடுகின்றார்கள் ...

    கொஞ்ச காலம் கழித்து தான் உண்மையான குற்றவாளி பிடிபடுகின்றான் ..

    இப்போ சொல்லுங்க.. அந்த சட்டத்தாலோ ? அல்லது கடவுளாலோ மாண்டவனை உயிர்ப்பிக்க முடியுமா ??? !!!

    இப்படி நடக்கவும் வாய்புள்ளது என்பது ஏன் பலருக்கு தெரிய மாட்டேங்குது ... !!!

    */

    சகோ...இது நீதித்துறை மற்றும் காவல் துறையின் பிரச்சனை... நியாயமாக நீதித்துறையை சரி செய்யச் சொல்லி தான் நாம் போராட வேண்டும்...
    மாறாக நாம் தூக்கு தண்டனையை நிறுத்த சொல்லி போராடிக் கொண்டு இருக்கிறோம்...


    எது தவறோ அதை *மட்டுமே* தான் சரி செய்ய வேண்டும்....

    கேன்சர் வந்தால் காய்ச்சலும் வரும்.. நீங்கள் சொல்வது காய்ச்சலுக்கு மருத்துவம் பார்ப்பது..
    நான் சொல்வது கேன்சருக்கு மருத்துவம் பார்ப்பது..

    எது சிறந்தது என்பதை உங்கள் முடிவிற்கே விட்டு விடுகிறேன்

    ReplyDelete
  47. ////கொஞ்ச காலம் கழித்து தான் உண்மையான குற்றவாளி பிடிபடுகின்றான் ..

    இப்போ சொல்லுங்க.. அந்த சட்டத்தாலோ ? அல்லது கடவுளாலோ மாண்டவனை உயிர்ப்பிக்க முடியுமா ??? !!!

    இப்படி நடக்கவும் வாய்புள்ளது என்பது ஏன் பலருக்கு தெரிய மாட்டேங்குது ... !!!///


    ----உங்களுக்காகவே தனியா எடுத்து "குறிப்பு" ன்னு பதிவில் கடைசியா தனியா எடுத்து போட்டும்.... ம்ஹூம்.... படிக்கலை.... படிக்கலை... படிக்கலை.... என்னத்த சொல்ல.

    ReplyDelete
  48. @சகோ.இக்பால்

    // ஒருவன் திருடுகின்றான் என்றால் அதில் அவனின் குற்றம் பாதித் தான் மீதிப் பாதி இந்த சமூகமே காரணம்//

    ரொம்ப சரியா சொன்னீங்க.. இதை தான் இஸ்லாமும் சொல்லுது... குற்றங்கள் குறைய சமூகம் நல்லா இருக்கணும்..
    அதுக்கு தான் சமூக கடமைகள் என்று பலவற்றை இஸ்லாம் வலியுறுத்துகிறது...


    உதாரணமா சொல்லணும்னா... அண்டை வீட்டார் பசித்திருக்க நீ உணவு உண்ணாதே... ஏழைகளுக்கு ஜகாத் கொடுத்து வருமையை ஒழியுங்கள்...
    எவன் ஒருவன் அநியாயமாக ஒரு உயிரை கொல்கிறானோ அவன் மனித சமூகம் அனைத்தையும் கொன்றவன் போலாவான்...
    இது போல எண்ணற்றவற்றை சொல்லி விட்டு...

    இதையும் மீறி நடப்பவர்களை கடுமையாக தண்டியுங்கள் என்று சட்டம் சொல்கிறது.... இதில் தவறு என்ன இருக்கிறது???

    சமூகத்தை திருத்தணும்னு சொல்றீங்க.. எப்படி திருத்துவீங்க??? உங்ககிட்ட ஏதும் சட்டம் இருக்கா???

    ReplyDelete
  49. ///சமூகத்தை திருத்தணும்னு சொல்றீங்க.. எப்படி திருத்துவீங்க??? உங்ககிட்ட ஏதும் சட்டம் இருக்கா???///

    ---காலு கை மூளை எல்லாம் நன்றாக திட காத்திரமாக இருந்தாலும்... உழைத்து பிழைக்க அலுப்பு பட்டுக்கிட்டு... அலைஞ்சு திரிஞ்சு பிச்சை எடுக்க சோம்பல் பட்டுட்டு... உக்கார்ந்த இடத்தில் சாப்பாடு வரணும்னா என்ன வழின்னு யோசிச்சா... ஹை... ஐடியா....!

    ஒருத்தனை நட்ட நடு ரோட்டுல பட்ட பகலில பலர் சாட்சியா போட்டுத்தள்ள வேண்டியது. அப்படியே கொலை குற்றவாளியாகி சாகும்வரை சிறையில் தங்கி கையேந்தாமல்... அலையாமல் திரியாமல்... மணியடிச்சா சோறு... மாமியார் வீடு...! சூப்பர்...! மொத்த சமூகமும் இன்னும் கொஞ்சம் காலத்தில் சிறைக்கூடத்தில் தான் இருக்கும் போல இருக்கு..! இப்போவே சிறை எல்லாம் பத்தலை..! நிரம்பி வழியுது..!

    எவனாவது சிறைக்கூடங்களுக்கு குண்டு வச்சு கேள்வி பட்டு இருக்கீங்களா..? அவனுக்கு பிடிச்ச இடம்... அவனுக்கு பிடிச்ச மக்கள்... எப்படி வைப்பான் குண்டு..? ஹி..ஹி...

    தீர்ப்புக்கு பிந்தைய சிறைகளை ஒழிப்போம்..!

    ReplyDelete
  50. @இக்பால் செல்வன்,
    மதம் மாறியவர்களுக்கு மரண தண்டனை கொடுப்பது அப்பட்டமான இஸ்லாமிய மீறல். அப்படி தண்டனை கொடுக்க சொல்லி இஸ்லாத்தில் எங்கேயும் சொல்லப்படவில்லை. இஸ்லாத்தை தவறாக விளங்கிய சில நாடுகள் இந்த தவறுகளை செய்கின்றன. இதற்கு இஸ்லாம் எவ்வாறு பொறுப்பேற்க முடியும்? இவ்வாறு தண்டனை கொடுப்பதற்கு எதிராக தான் குர்ஆனில் கருத்து வருகிறது.

    இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன். அல்குர்ஆன் (2 : 256)

    நம்பிக்கை கொண்டு, பின்னர் (ஏக இறைவனை) மறுத்து, பிறகு நம்பிக்கை கொண்டு, பின்னர் மறுத்து, பிறகு (இறை) மறுப்பை அதிகமாக்கிக் கொண்டோரை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை. அவர்களுக்கு வழி காட்டுபவனாகவும் இல்லை. அல்குர்ஆன் (4 : 137)

    ReplyDelete
  51. இஸ்லாத்தை ஏற்றுவிட்டு மறுத்தவனைக் கொல்ல வேண்டும் என்பது இஸ்லாமியச் சட்டமாக இருந்தால் இஸ்லாத்தை ஏற்று விட்டு மறுத்தவுடன் மதம் மாறியவன் கொல்லப்பட்டு விடுவான். மீண்டும் அவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கான அவகாசம் அவனுக்குக் கிடைக்காது. ஆனால் இந்த வசனத்தில் இஸ்லாத்தை ஏற்று மறுத்த பிறகும் இஸ்லாத்தை ஏற்பதைப் பற்றிச் சொல்லப்படுகிறது.

    மதம் மாறியவன் கொல்லப்பட வேண்டும் என்ற சட்டத்தை நபி (ஸல்) அவர்கள் செயல்படுத்தியிருந்தால் இரண்டாவது தடவையும் ஒருவனால் எப்படி இஸ்லாத்தில் நுழைந்திருக்க முடியும்? இதன் பின்பு அவன் எப்படி மீண்டும் மறுத்திருக்க முடியும்? மதம் மாறியவர்கள் கொல்லப்படாமல் இருந்தால் தான் இது சாத்தியம்.

    மதம் மாறியவன் கொல்லப்பட வேண்டியவன் என்றால் அவன் கொல்லப்பட்டப் பிறகு நான் அவனுக்கு நேர்வழி காட்ட மாட்டேன் என்று அல்லாஹ் கூறுவது பொருத்தமில்லாமல் ஆகிவிடும். பல முறை மதம் மாறினாலும் இஸ்லாமிய அரசாங்கத்தால் அவன் கொல்லப்படாமல் உயிருடன் இருக்கும் போது தான் நேர்வழி காட்ட மாட்டேன் என்று அல்லாஹ் கூறுவது பொருத்தமாக அமையும். ஏனென்றால் நேர்வழி காட்டுதல் என்பது உயிருள்ளவர்களுக்கே சாத்தியம்.

    ReplyDelete
  52. //எனக்கு மரண தண்டனையில் உடன்பாடில்லை .. சாகும் வரை சிறையில் இருக்கும் படி தான் தண்டனைக் கொடுப்பேன் !!! //

    அட..அட என்ன ஒரு சூப்பர் தண்டனை .இதை சீக்கிரமே நடைமுறைக்கு கொண்டு வாங்க . ஏதோ கொஞ்ச நஞ்சம் பிச்சை எடுத்துகிட்டு ரோட்டில தூங்கிகிட்டு இருக்கிற ஆட்கள் எல்லாம் யாரையாவது போட்டு தள்வி விட்டு உள்ளே வந்தாலாவது டைம் டூ டைம் நல்ல கவர்மெண்ட் சாப்பாடு கிடைக்கும் . சீக்கிரமே இந்தியாவில் வறுமை ஒழிந்து வல்லரசு ஆகிடும் ஹா..ஹா.. :-))).


    ஒரு நீதிபதிக்கு உரிய பக்குவம் உங்ககிட்டே நிறையவே இருக்கு. ஆனா அவனுங்களுக்கு என் வீட்டு வரி பணத்தில செலவு செய்ய எனக்கு உடன்பாடில்லை .உங்க சம்பலத்துல முதல்ல ஒரு கைதிய வாழ வையுங்க :-)

    ReplyDelete
  53. ஸலாம் சகோ.ஆமினா,

    ரொம்ப அசத்தலரான பதிவு டியர் :)

    எங்க ஊர்ல பச்சை மண் 10 வயதுத சிறுமியை கடத்தி கப்பம் கேட்டார்கள் கொடுக்கவில்லை என்றதும் சிறுமியை பாலியல் துஸபிரயோகம் செய்து கொலை செய்து விட்டு கிணற்றில் போட்டு விட்டனா;. பின் விசாரணையில் 3 இளைஞர்கள் பிடிபட்டு ஆயுள் தண்டணை வழங்கப்பட்டது. அரசுக்காக.பட் அந்த நீதிபதிக்கு அது பிடிக்கவில்லை ..விசாரணை என்ற பெயரில் கடத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அவர்களை அழைத்து சென்று போட்டாரே எண்கவுண்டரில்... சோ இது தான் வேண்டும் ..குற்றத்திற்கு ஏற்ற தண்டனை..கொஞ்ச பயலுங்க தப்பிச்சிறுக்காங்க... எல்லோருக்கும் இருக்குல மறுமை நாள்ல... மரணஅடி .:)

    ReplyDelete
  54. //நான் கொல பண்ணா எனக்கு அரசாங்க செலவுல 2 வேலைக்கும் சாப்பாடு :-) வார்ரே...வா..! சீக்கிரம் உங்க தலைமையின் கீழ் நீதித்துறை செயல்படவேண்டும் சகோ.. அவனவன் ஒழைச்சு சம்பாதிச்சாலும் ஒருவேள கஞ்சிக்கு நாயா பேயா அலையுறான்.. பட் எனக்கு காலம் முழுக்க அரசாங்க செலவில் கவனிப்பு,பராமரிப்பு எக்ஸட்ட்ர்ரா..எக்ஸட்ட்ரா.//

    ஜெயிலில் சுகபோகமாக வாழ்ந்த அனுபவமோ ... இந்திய ஜெயிலில் முன்னே பின்னே சென்று பார்த்ததில்லை போலும் ... அவர்கள் கொடுக்கும் சாப்பாடும், டாய்லட்டுகளின் நிலையும், படுக்கை அறையும் சொர்க்கமாக தெரிகின்றது போல உங்களுக்கு ...

    //அதுனால் தான் சகோ சொல்றேன்! நவீனகாலத்துக்கும் பொருந்தி வரதுனால தான் ஷரீஅத் சட்டத்தை சீன்னு தூக்கிபோட முடியல ஹி..ஹி..ஹி... //

    கடைசியில் உங்களின் ஆசை வெளிப்பட்டு விட்டது ... தானே முதலில் மரண தண்டனையைக் கொண்டு வரச் சொன்னீர்கள் இப்போ ஷரியா சட்டத்தை கொண்டு வர சொல்லுகின்றீர்கள் .. இதனை இந்தியாவில் இருக்கும் ஏனைய 90 சதவீதம் பேரும் ஏற்பார்களா .. உங்கள் விருப்பத்தை 90 சதவீதம் பேர் மீது திணித்துப் பாருங்கள் தெரியும் ..

    ReplyDelete
  55. @ ~முஹம்மத் ஆஷிக் citizen of world~ -

    சரி குற்றம் சாட்டப்பட்டவர் தான் 100 % குற்றவாளி என்று நிரூபிக்க உங்களிடம் புதுவகை முறைகள் இருக்கின்றதா .. இருந்தால் கூறுங்கள் .. நானே உங்கள் மீது பொய் புகார் கூறி, எனது அரசியல், பண அதிகாரம் மூலம் உங்களை குற்றவாளியாக்கி தூக்கில் போட்டுவிட்டால் .. நீங்கள் அப்போதும் மரணதண்டனை தான் சரி என்பீர்களா ....

    ReplyDelete
  56. ஆமினா -// எக்காலத்துக்கும் பொருந்தி வரும் ஒரு மருத்துவத்தை எந்நாளும் ஏற்கமாட்டேன்னு சொன்னால் எப்படி இருக்கும்//

    இது என்ன புதுவகை கண்டுப் பிடிப்பாக இருக்கு .. எக்காலத்துக்கும் பொருந்தும் மருத்துவம் என்று ஒன்று உண்டா.. இருந்தால் சொல்லுங்கள் .. பார்ப்போம் ... நாளை புதுவகை நோய்கள் வந்தால் புதுவகை மருந்துகள் கண்டுப் பிடிக்கத் தான் வேண்டும் .. புதுவகை குற்றங்கள் வந்தால் புதுவகை தண்டனைகள் உண்டாக்கத் தான் வேண்டும் .. ஹிஹி .. கடவுளின் தூதர் என்று பொய் சொல்லியவர்களால் படைக்கப்பட்ட 1400 ஆண்டுக்களுக்கு முந்திய ஷரியாவில் தேடினால் கிடைக்காது ......ஹிஹி

    ReplyDelete
  57. @ ~முஹம்மத் ஆஷிக் citizen of world~ - // மனம் வருந்தி உண்மை உணர்ந்து நான் திருந்திட்டேன்//

    பொய் சொன்னால் அவன் உண்மை சொல்கின்றான் என்பதை எப்படி கண்டுப் பிடிப்பீங்க .. சொல்வது எல்லாம் உண்மை என நம்புவிடுவீர்கள் போல ..

    கடவுளின் தூதன் நான் என்று சொல்லிய பொய்யையே உண்மை என நம்பியவர்களுக்கு இதுவும் உண்மையாகத் தான் தெரியும் ...

    ReplyDelete
  58. @ ஆமினா - //கேன்சர் வந்தால் காய்ச்சலும் வரும்.. நீங்கள் சொல்வது காய்ச்சலுக்கு மருத்துவம் பார்ப்பது..
    நான் சொல்வது கேன்சருக்கு மருத்துவம் பார்ப்பது..//

    கேன்சர் பேசண்டுக்கு காய்ச்சல் வந்தால் முதலில் நீங்கள் காய்ச்சலுக்கு acetaminophen கொடுப்பீங்களா .. இல்லை ஜூரத்தில் கிடக்கட்டும் அவன் . கொண்டு போய் கீமோதெராபிக் கொடுப்பீங்களா .. மருத்துவம் படித்தவர்களைக் கொஞ்சம் கேட்டுப் பாருங்கள் .. ஹிஹி

    ReplyDelete
  59. //அண்டை வீட்டார் பசித்திருக்க நீ உணவு உண்ணாதே... ஏழைகளுக்கு ஜகாத் கொடுத்து வருமையை ஒழியுங்கள்...
    எவன் ஒருவன் அநியாயமாக ஒரு உயிரை கொல்கிறானோ அவன் மனித சமூகம் அனைத்தையும் கொன்றவன் போலாவான்...
    இது போல எண்ணற்றவற்றை சொல்லி விட்டு..//

    இதைத் தான் உலகின் நூறுக் கோடி முஸ்லிம்களும் பின்பற்றி வருகின்றார்கள் .. வறுமையை ஒழித்துவிட்டீர்களா ... சமூகத்தை திருத்திவிட்டீர்களா .. இன்னும் மேல் நாடுகளிடம் தான் பல இஸ்லாமிய நாடுகள் பிச்சை எடுத்து வருகின்றன ... அது போகட்டும் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் வறுமையாவது ஒழிக்க முடிந்தத்தா இந்த சட்டம் .. ஏன் மும்பை புறச் சேரிகளில் போய் பார்த்ததுண்டா. உண்ண உணவில்லாமல், படுக்க இடமில்லாமல், உடுக்க உடையில்லாமல் எவ்வளவு முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள் .. நீங்களோ,,உங்களது சட்டமோ என்ன செய்தது ... அதே நகரில் கோடி கோடியாக பணத்தில் புரளும் முஸ்லிம்களும் உண்டு .. முதலில் உங்கள் அசுத்தங்களை சுத்தம் செய்ய ஒரு வழி செய்யுங்கள் ...

    மும்பை தெருக்களில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு வாழ்வளிக்க எத்தனை இஸ்லாமிய இளைஞர்கள் முன்வருவீர்கள் சொல்லுங்கள் ... 1400 ஆண்டுகளாக திருத்த முடியாத சட்டங்களும் நம்பிக்கைகளுமா வருங்காலத்தில் சமூகத்தை திருத்த முடியும் என்கின்றீர்கள் ..

    உடனே சு.பி. போன்றோர் அவர்கள் உண்மை முஸ்லிம் இல்லை , பெயர் தாங்கி முஸ்லிம்கள் எனக் கதைக் கட்டுவார் ... நொண்டிச் சாக்குகளை கேட்டு கேட்டு காது புளித்துவிட்டது ...

    ReplyDelete
  60. @ பி.ஏ.ஷேக் தாவூத் - //மதம் மாறியவர்களுக்கு மரண தண்டனை கொடுப்பது அப்பட்டமான இஸ்லாமிய மீறல். அப்படி தண்டனை கொடுக்க சொல்லி இஸ்லாத்தில் எங்கேயும் சொல்லப்படவில்லை. இஸ்லாத்தை தவறாக விளங்கிய சில நாடுகள் இந்த தவறுகளை செய்கின்றன. இதற்கு இஸ்லாம் எவ்வாறு பொறுப்பேற்க முடியும்? இவ்வாறு தண்டனை கொடுப்பதற்கு எதிராக தான் குர்ஆனில் கருத்து வருகிறது.//

    அப்பா நீங்களாவது ஒத்துக் கொண்டீர்களே ! இதைத் தான் நானும் சொல்ல வருகின்றேன் .. இன்னும் குரானில் இல்லாத பல சடங்கு சம்பிரதாயங்கள் பலவும் இஸ்லாம் என்ற பெயரில் உலகம் முழுதும் தாறு மாறாக பிரசங்கிக்கப்பட்டு மேற்குலகம் நோக்கிய போர்களையும், மத மாற்று வேலைகளில் ஈடுபடுத்தப் பட்டு வருகின்றது. இஸ்லாமிய அறிஞர்களிடையே எது சரி எது தவறு என்று முடிவுக்கு வரவில்லை ..

    முதலில் இஸ்லாமிய உலகில் உள்ள தவறுகளை திருத்தி சட்டங்களை மாற்ற ஒரு முயற்சி செய்யுங்கள் .. அப்படியான மாற்றத்தைத் தான் நாங்களும் கோருகின்றோம் .

    ReplyDelete
  61. பொதுவில் எல்லோருக்கும் "எனது" கருத்தாக இது!

    ஒரு டாக்டர் தனக்கு தெரிந்த மருத்துவத்தை அளித்திருப்பார் முன்னே, தற்போது அதற்க்கு மாற்று கருத்து கிடைத்தால் அதனை உடனே செயல்படுத்துவார். அதே போல் மதத்தில் செய்ய முடியாது. நம்பகத்தன்மை பிரச்சனை வரும். டாக்டருக்கு அது கிடையாது! பீ ஜெ போன்ற அறிஞர்களுக்கு அது உண்டு!

    இதில் எனக்குள்ள டவுட்டு, அறிஞர்களுக்கு அறிவு விருத்தியே கிடையாதா? அதன் மூலம்., தான் முன்னே சொன்னது தவறு என்று இன்று ஒத்துக்கொண்டு அதனை மாற்ற / திருத்த முடியாதா? இல்லே அந்த கருத்துகளில் முன்னேற்றம்தான் கிடையவே கிடையாதா? இல்லை மதங்களில் உள்ள உண்மையான கருத்தை முதல் முறை வாசிக்கும் /புரிந்து கொள்ளும் போதே மிக சரியாக விளங்கி கொண்டுவிட்டார்களா? ( ஒரு சிறிய உதாரணம் பிறை சம்பந்தமானது )

    கடவுள் எக்காலத்துக்கும் பொருத்தமானதைதான் சொல்வார், அதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு என்று நீங்கள் சொல்வதை / அதனை அப்படியே ஏற்றுகொள்கிறேன்.,ஆனால் அதனை மொழி பெயர்த்து சொன்னவர்கள் உங்கள் காதுகளில் யார்... கடவுளா... ? பீ ஜெ போன்ற அறிஞர்களா? ( இப்பொழுது மீண்டும் இரண்டாவது பாராவை படிக்கவும்)

    ( பீ ஜெ பொதுவில் மிக பிரபலமான இஸ்லாமிய அறிஞர் என்பதால் அவரது பெயர் உபயோகபடுத்தி உள்ளேன்.,)

    ReplyDelete
  62. //விசாரணை துறையில் போதிய முதலீடுகளை அரசு செய்யவில்லை .. பல தொழில்நுட்பங்கள், பயிற்சிகள் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இருக்கின்றது.//

    //உண்மையில் இந்தியச் சட்டங்கள் பலவீனமானவை என்பதை நாம் நன்கு அறிவோம் ..//

    //புதுவகை குற்றங்கள் வந்தால் புதுவகை தண்டனைகள் உண்டாக்கத் தான் வேண்டும்// இக்பால் செல்வன்


    இன்னும் உண்டாக்கவில்லை, இந்தியச்சட்டங்கள் தற்பொழுது நிகழும் குற்றங்களுக்கு ஏற்றதாக இல்லை அப்படித்தானே Mr. செல்வன்.

    அப்புறம் எப்படி இப்படி..

    //உயிரே போகும் நிலையில் அறுவை சிகிச்சை செய்துக் கொள்ள மாட்டேன் .. 2000 ஆண்டுகளுக்கு முன் இருந்த சித்த வைத்திய முறையை மட்டுமே ஏற்பேன் என சொன்னால் எப்படி இருக்கும் ..//

    தக்க மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பிதற்றுகிறீர்கள்?


    //ஜெயிலில் சுகபோகமாக வாழ்ந்த அனுபவமோ ... இந்திய ஜெயிலில் முன்னே பின்னே சென்று பார்த்ததில்லை போலும் ... அவர்கள் கொடுக்கும் சாப்பாடும், டாய்லட்டுகளின் நிலையும், படுக்கை அறையும் சொர்க்கமாக தெரிகின்றது போல உங்களுக்கு ...//

    ஒஹோ! இதுதான் கடுமையான தண்டனையோ?! :o

    ராசா, கனிமொழி, இன்னும் தன்மீது உள்ள குற்றத்தை திசை திருப்ப நெஞ்சு வலி நாடகம் நடத்தி ஹாஸ்பிடல் போகும் அரசியல்வாதிகள் அனைவரும் ரெம்ப கஷ்டம்தான் படுகிறார்கள் போலும். அல்லது இவர்கள் எல்லாம் அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட நல்லவர்கள் என்கிறீர்களா?. சொன்னாலும் சொல்வீர்கள்.

    இருப்பவனுக்கு ஒரு சட்டம் இல்லாதவனுக்கு ஒரு சட்டம் என்று கேவலமான மனித மனங்களுக்கு ஏற்றவாறு சட்டத்தை மாற்றிக்கொண்டிருப்பது உங்களுக்கு தெரியாதாத Mr. செல்வன்?.


    ///இதெல்லாம் பாலோ பண்றீங்க.. வெட்கமா இல்லையா ?// என்று கேட்கும் உங்களை
    உண்மையை மறந்து/மறைத்து இப்படி பின்னூட்டமிட உங்களுக்கு
    வெட்கமாக இல்லையா Mr. செல்வன்? என்று கேட்க எங்களுக்கு என்ன தயக்கம் இருக்கவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?.

    //எனக்கு மரண தண்டனையில் உடன்பாடில்லை .. சாகும் வரை சிறையில் இருக்கும் படி தான் தண்டனைக் கொடுப்பேன் !!!//

    சிறையில் இருந்து அவன் எதை சாதிப்பதற்கு?. அப்படியானால் அவனால் கொலையுண்டு இறந்தவனை உயிர்ப்பிக்கும் ஆற்றல் பெற்றவரோ நீங்கள்? அதனால்தான் பாதிக்கபட்டவனைவிட பாதிப்புள்ளாகியவனுக்கு செம்புதூக்குகிறீரோ?.


    //குற்றம் செய்ய யத்தனிப்பவர்கள் குற்றம் தவறு என்று உணரும் உளமாற்றம் பெற வேண்டும்//

    ஐய்யய்ய! சின்னப்புள்ளத்தனமாவுள்ள இருக்கு. பல முறை சிறைக்கு போய் வந்தவனே எத்தனிக்க மாட்டேங்கிறான், இதுல புதுசா வேற எத்தனிக்கிறாங்களாம்.



    //சரி குற்றம் சாட்டப்பட்டவர் தான் 100 % குற்றவாளி என்று நிரூபிக்க உங்களிடம் புதுவகை முறைகள் இருக்கின்றதா ..//

    இப்படி கூறும் நீங்கள்

    //கடவுளின் தூதன் நான் என்று சொல்லிய பொய்யையே உண்மை என நம்பியவர்களுக்கு இதுவும் உண்மையாகத் தான் தெரியும் ...//

    இதை எப்படி மட்டும் எப்படி பொய் என்று இவ்வளவு உறுதியாக கூறுகிறீர்கள் Mr. செல்வன்? :((((


    //சிந்தனையும் சமூக நலனும் சுயமாக எழாமல் புறக் காரணிகளின் திணிப்பால் எழுவதால் இங்கு பல விதண்டாவாதங்கள் எழுகின்றன ...//

    ஆம்! சிந்திக்காமல் இஸ்லாமிய எதிர்ப்பை மட்டுமே குறிக்கோளாக கொண்டு கருத்துக்கூறும் உங்களைப்போன்ற ஒரு பக்க சார்பு மதஎதிர்ப்பு கொண்டவர்களால் ??!!!. :((((((

    ReplyDelete
  63. திரு.இக்பால் செல்வன் :-///////ஒருவேளை அப்பாவி ஒருவனை கொன்றுவிட்டால் பின்னர் அவன் அப்பாவி அல்ல என தெரிய வந்தால் இந்த சட்டம் அல்லது மதம் செத்தவனை உயிர்ப்பிக்குமா/////////

    அடா...அடா.....அடா........அடா...........!

    என்னே ஒரு பொருளற்ற வறட்டு வாதம்....!!!

    ஏனுங்கோ....

    உங்க கோர்ட்டில் கொலை செஞ்சவன்னு தீர்ப்பு சொல்லி ஒரு 20 வயசு காரனுக்கு ஆயுசு முழுக்க சிறையில் போட்டு.... என்னோட வீட்டுவரி... தண்ணீர் வரி... மின்சார வரி... எல்லா வரியையும் பிடுங்கி அநியாயமா.... அவனுக்கு சோறும் போட்டுட்டீங்க....

    ஓகே... தொலையட்டும்....

    இப்போ அவன் தொண்ணூறு வயசு கிழமாகி சிறையில் கிடக்கான்... அப்போதான் தெரியுது... அவன் கொலை பண்ணலை... வேறு ஒருத்தன் கொலை பண்ணினான்னு.... அவனை பிடிக்க போனால்... அவன் போன வருஷமே இயற்கையா செய்துட்டான்னு தெரியுது......

    இப்போ அந்த அப்பாவி தொண்ணூறு வயசு கிழத்துக்கு அவனோட இருபது வயசு வாழக்கையை யாருங்க திருப்பி தருவது....?!?!?!?!? நீங்களா.... உங்க சட்டமா.... எது..?

    ஹலோ அதிபுத்திசாலி.... திரு. இக்பால் செல்வங்கள் திரு. காவி கன்னன்ங்கள்... பதில் சொல்லுங்களேன்....!

    இது மட்டும் சரியா...?!?!?!?

    ReplyDelete
  64. அருமையான பதிவு சகோதரி.அனைத்து கேள்விகளும் அருமை.

    ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)