ஆறு மாதங்களுக்கு முன்னால்..
 இப்ப தான் ஆமியோட கால் லக்னோல பதியுது. 2 நாள் ட்ராவலில் முழுவதும் நம்மூர் சீரியல்கள் ஞாபகம் தான். வீட்டுக்கு போனதும் முதல் வேலையா சன் டீவியை ஓபன் பண்ணனும்னு நெனச்சுட்டே போனா  “தமிழ் சேனல் நை”  அப்படின்னு சொல்லிட்டான் அந்த கேபிள் கடங்கார பயபுள்ள. என்ன செய்ய? சோகத்தோட சேனலை ஓபன் பண்ணி ஹிந்தி சீரியலாவது பாக்கலாம்னா நம்மூர் சீரியலே பெட்டர். ஒரு அழுகை சீனையே 4 எபிசோட்க்கு இழுத்தடிச்சுட்டாங்க. அந்த நேரத்துல பொலம்பிட்டிருக்கும் போது தான்  சில நல்ல புரோக்ராம்லாம் கண்ணுக்கு மாட்டுச்சு. 



எமோஷனல் அட்யாச்சார்:



இங்கே சக்க போடு போடும் நிகழ்ச்சிகளில் இதுக்கு தான் முதலிடம். நமக்கு தான் அடுத்தவங்க விஷயங்களில் மூக்கை நுழைப்பதெல்லாம் குலாப்ஜாமூன் சாப்பிட்ற மாதிரில. 

இந்த நிகழ்ச்சி எது பத்தினதுன்னா
காதலர்களோ தம்பதிகளோ அவங்க ஆள் மேல சந்தேகம் வந்து   லோயல்டி டெஸ்ட் நடத்த நெனச்சு எமோஷனல் அட்யாச்சார்க்கு அப்ளிகேஷன் கொடுத்துட்டு போயிடணும். அவங்க சந்தேகப்படும் நபரை அவருக்கே தெரியாமல் ஏஜெண்ட் மூலம் கண்காணிப்பாங்க. கடைசியா டெஸ்ட் நடத்த சொன்னவங்கள கூப்பிட்டு எடுத்த வீடியோக்களை காமிப்பாங்க. கிளைமாக்ஸ் தான் ரொம்ப சுவாரசியம். ஏஜெண்டும்,அந்த நபரும் இருக்கும் இடத்துக்கே கூடிட்டு போய் அடிச்சாலும் பரவாயில்ல, சேர்ந்தாலும் பரவாயில்லன்னு வேடிக்கை மட்டும் பாப்பாங்க. 
காதலர்களா இருந்தா ஈசியா போயிறாங்க. தம்பதிகளா இருந்தா அதுவும் டெஸ்ட் நடத்த சொன்னவ பெண்ணா இருந்தா தப்பு ஆண் மேல் இருந்தாலும் பாவம் பொண்ணு தான் கெஞ்சுவா. 

இந்த ப்ரோக்ராம்க்கு சில தரப்பினர் எதிர்ப்பு தெரிவிச்ச போதும் கூட இதை பார்த்தாவது இளைய சமுதாயம் திருந்தட்டும்னு என்னை மாதிரி பல நல்லுள்ளங்கள் ஆதரவு கொடி காட்டுறாங்க. 

டிஸ்கி: யாராவது புதுசா ஆள் வந்தா ஜாக்ரதையா இருந்துக்கோங்க. 


axe ur ex:
இதுவும் கிட்டதட்ட மேலே சொன்ன நிகழ்ச்சி போல் தான். ஆனா நம்ம யாரை பழிவாங்க நினைக்கிறோமோ அவங்களை பத்தின டீடெயில்ஸ சொல்லிடணும். அவங்க எந்த வகையிலெல்லாம் பழி வாங்கணுமோ அப்படிலாம் பழி வாங்குவாங்க.

வெவரமா சொல்லணும்னா.....
ஒரு பொண்ணு ஒரு பையனை ஏமாத்திட்டா. அந்த பையன் இவங்ககிட்ட போட்டு கொடுப்பான். அவங்க என்ன செய்வாங்கன்னா அந்த பொண்ணூக்கு போன் போட்டு இண்டர்வியூன்னு வர சொல்லி அந்த பொண்ணும் போகுது. அங்கே போனா மேனேஜன் ௧ க்ளாஸ் ஸ்டூடண்ட் கிட்ட கேக்குற கேள்விகளையெல்லாம் கேட்பார். சர்டிபிகேட்டில் ராக்கெட் விட சொல்லி நோஸ் கட் பண்ணுவார்.


அப்பறம் ஆட்டோவில் போகும் போது ட்ராபிக் போலிஸ் ஏறி ஊர் முழுவதும் சுத்த சொல்லி கடைசியில் ஏறின எடத்துலையே நிறுத்த சொல்லி லெக் கட் பண்ணுவார்.
அதன் பிறகு அந்த பொண்ணு ட்ரஸ் எடுக்க கடைக்கு போனதும் 2 திருடன்கள விட்டு கதவடைக்க சொல்லிட்டு கோமாளி ட்ரஸ் போட்டுட்டு வர சொல்லி கேண்ட் கட் பண்ணுவாங்க. இப்படியாக செய்துட்டு கடைசியா போட்டு கொடுத்த பையனை வர சொல்லி எதுக்காக இப்படிலாம் செய்றாங்கன்னு சொல்ல சொல்லி முடிச்சுடுவாங்க.

டிஸ்கி: யார்கிட்டவாவது சண்ட போட்டா ஒடனே சேர்ந்திடுங்க. இல்லைன்னா அடுத்த எபிசோட்ல உங்களை வீ சேனலில் பாக்கணும்

பிக்பாஸ்:
சல்மான்கான் தான் நிகழ்ச்சி தொகுப்பாளர். ஒரு 12 பேரை செலக்ட் பண்ணி(காசு வாங்கிட்டு தான்) ஒரு வீட்டுக்குள்ள அடச்சு போட்டுடுவாங்க. கம்யூட்டர் நெஹி,செல்போன் நெஹி, டீவி,ரேடியோ நெஹி. அவங்களே சமச்சு அவங்களே சாப்பிடணும். எல்லா வேலையும் அவங்களே செய்யணும். வாரம் ஒரு முறை ஆளை விலக்கிடுவாங்க. அப்பப்ப பிக்பாஸ் முகம் காட்டாமலேயே ஆடியோவில் கட்டளையிடுவார். அவங்களுக்குள்ள நடக்கும் பேச்சு,சண்டை,வாய்தகராறு தான் இதில் பிரசித்தம்.

ஆரம்பத்தில் நடக்குமா நடக்காதுன்னு பல பிரச்சனைகளுக்கு மத்தியில் வெற்றிகரமாக நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. ஆனா எல்லாமே மந்தமா தான் போச்சு. ரஸ்லிங் ல இருப்பாரே க்ரேட் கலி அவர் வருவதாக அறிவிப்பு வெளியானதும் எல்லோர் பார்வையும் பிக்பாஸ்க்கு திரும்பியது.


எப்படி சாப்பிடுவார், எப்படி சின்ன கட்டிலில் படுப்பார் என பல கேள்விகளுக்கு மத்தியில் நானும் சுவாரசியமா பார்த்துட்டு இருந்தேன். ஆனா அந்த பாறை மென்மையானதுன்னு பிறகு தான் தெரிஞ்சது. எல்லார்கூடவும் நல்லா ஒத்து போனார். நல்ல மனுஷன். வாயை திறக்கவே மாட்டார். அதிகமா எதிர்பார்த்த என்னை மாதிரி ஆளுங்களுக்கு ரொம்பவே ஏமாற்றம் தான். எல்லாமே சப்புன்னு போனத பாத்து நிர்வாகம் மீண்டும் ஒரு அதிரடியை களம் இறக்கியது. டாலின்னு ஒரு பொண்ணு(?). வாயை திறந்தாலே வன்முறை தான். வந்த நாளு நாளில் 4  பேர் கூட சண்ட. 2  பேரை அழுக வச்சுடுச்சு. இப்ப நல்லா சுறுசுறுப்பா போகுது. 
ஜெயிக்கிறவங்களுக்கு லம்ப்பான அமவுண்ட் காத்திட்டிருக்குங்க. சும்மாவா?


மாஸ்டர் செப் இந்தியா
மக்களின் நல் வரவேற்புடன் ஓடிட்டு இருக்கு. அக்‌ஷய் குமார் தான் தொகுத்து வழக்குறார். அவரின் சமையலை பார்க்கவே இந்நிகழ்ச்சியை பார்க்கலாம் (சமையல் மட்டும் தான் நல்ல பண்றார்லாம் நான் சொல்லவே மாட்டேனே) 
6 மாசத்துக்கு முன் பக்கத்து வீட்டு பொண்ணு என் தோசையும்,சட்னியையும் சாப்பிட்டுட்டு என் நேமை கொடுத்துடுச்சு. அடப்பாவி மக்கா எனக்கு ஒழுங்கா வரதே அது மட்டும் தானேன்னு நொந்துகிட்டு 4 மாசமா அது கண்ணுக்கு படாம ஒளிஞ்சதுல என் எனர்ஜியே போச்சு (மும்பைல நடப்பதால் ஆடிஷனில் கூட கலந்துக்கல. கூப்பிட்டாலும் போயிருக்க மாட்டேன் என்பது வேறு கதை.) 
மேட்டருக்கு வாங்க........
அக்‌ஷய் சமைக்கிற மாதிரி எல்லாரும் சமைக்கணும். நல்லா சமைக்கிறவங்க அடுத்த நிலைக்கு போவாங்க. இடையில் கஷ்ட்டமான பல போட்டிகளும் உண்டு. போனவாரம் சென்னை ஸ்பெஷல் புரோட்டான்னு போட்டாங்க.
(அவங்களுக்கு தலப்பாகட்டு பிரியாணி(?) தான் பேமஸ்ன்னு தெரியாது போல)


க்ரோர்பதி:
இது அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி. இதெல்லாம் அறிவாளிகளும், அறிவை வளத்துக்க நினைப்பவங்களும் பாக்க வேண்டிய நிகழ்ச்சி என்பதால் ஆமி எட்டி கூட பார்ப்பதில்லை :)



படங்கள்:கூகுள்

38 comments:

  1. ஹலோ ” சாஸ் பி பஹு த்தி”” அந்த சீரியல் முடிஞ்சிடுச்சா இல்ல இன்னும் ஓடுதா...ஹா..ஹா.. :-))))

    ReplyDelete
  2. ஆமி இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் எங்க ஊர் டிவியிலும் வருது. என்ன விஷயம்னா எல்லாருமே பஹாசா இந்தோனேஷியாவில் பேசுவாங்க :(. இவற்றுக்கெல்லாம் நதிமூலம் ரிஷிமூலம் எல்லாம் ஆங்கில சேனல்கள்தான் :)

    ReplyDelete
  3. //இங்கே சக்க போடு போடும் நிகழ்ச்சிகளில் இதுக்கு தான் முதலிடம் //

    சைத்தானோட முதல் வேலை புருஷன் , பொண்டாட்டியை பிரிக்கிறதுதான் .. இது யாருக்கு புரியுதோ (( கண்டிப்பா ஒரு முஸ்லீமுக்கு இது தெரியும் )) அவங்க கிட்ட இந்த வேலை எப்பவும் நடக்காது


    //நம்ம யாரை பழிவாங்க நினைக்கிறோமோ அவங்களை பத்தின டீடெயில்ஸ சொல்லிடணும். அவங்க எந்த வகையிலெல்லாம் பழி வாங்கணுமோ அப்படிலாம் பழி வாங்குவாங்க//

    பாவம் அந்த பொண்ணு / ஆண் ...ஏன் இந்த கொலவெறி


    பிக் பாஸ் ... நானெல்லாம் பொருமையின் சிகரம் ஹி..ஹி..

    ReplyDelete
  4. //அறிவாளிகளும், அறிவை வளத்துக்க நினைப்பவங்களும் பாக்க வேண்டிய நிகழ்ச்சி என்பதால் ஆமி எட்டி கூட பார்ப்பதில்லை :) //


    ஹா..ஹா...ஹா..ஹா..ஹா....!!

    ReplyDelete
  5. ஹாய் ஆமினா! குட்டி சுவர்க்கம் அது ஒரு பெரிய சுவர்க்கம்.
    பல் சுவையும் அடங்கிய பழக் கூடை, மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. ஆமி,
    பொறுத்து பொறுத்து பாத்துட்டு, என்ன எழுதனு தோனாமா, இந்த டி.வி. சீரியலையாவாது எழுதுவோம்னு, கோவத்துலயும், வெறிலேயும் பாரா பாராவா விளாசித்த் தள்ளிட்டீங்க போல :))
    எழுதுங்க எழுதுங்க அப்படியே வாங்க, எங்கே போயிர போகுது, தளராமல் அப்படியே அதே உற்சாகத்துடனே வந்துகிட்டு இருங்க.விடக்கூடாது, ஆமி யாருனு காட்டிரனும் சரியா :))
    வெரிகுட்
    ஆமினா..சூப்பர்

    ReplyDelete
  7. //” சாஸ் பி பஹு த்தி”” அந்த சீரியல் முடிஞ்சிடுச்சா இல்ல இன்னும் ஓடுதா.//
    ஜெய்லானி நான் ஹிந்தி சீரியல் பார்த்த 4 வது நாளே நொந்துட்டேன். இனியுமா பாப்பேன்?
    நீங்க அந்த சீரியல்க்கு மிகப்பெரிய ரசிகை போல ?:))

    ReplyDelete
  8. கவி!
    இங்கேயும் பல புரோக்ராம்லாம் ஆங்கில சேனல் தான். என்ன கொடுமைன்னா இவங்களே ஆங்கில சேனல் பார்த்து தான் காப்பி அடிகிறாங்க. இவங்கள பார்த்து நம்ம தமிழ் சேனல் காப்பி அடிக்கிறாங்க.

    சீரியல் தான் கவிக்கு புடிக்காது. அதையாவது பாருங்க!

    ReplyDelete
  9. //பாவம் அந்த பொண்ணு / ஆண் ...ஏன் இந்த கொலவெறி//
    கேஸ் போட்டு ப்ரோக்ராமையே இல்லாம பண்ணிடலாம் ஜெய்லானி! இதுக்கெல்லாம் வருத்தப்படலாமா?

    ReplyDelete
  10. நன்றி யோகராணி!

    உங்க நடையில் என் ப்ளாக்கிற்க்கு சொன்ன வாழ்த்து கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

    ReplyDelete
  11. நண்பா

    //இந்த டி.வி. சீரியலையாவாது எழுதுவோம்னு, கோவத்துலயும், வெறிலேயும் பாரா பாராவா விளாசித்த் தள்ளிட்டீங்க போல :))//

    அது டீவி சீரியல் இல்ல. நிகழ்ச்சி!

    ம்ம்.....நன்றி ஆஷிக்

    ReplyDelete
  12. /////////////--//அறிவாளிகளும், அறிவை வளத்துக்க நினைப்பவங்களும் பாக்க வேண்டிய நிகழ்ச்சி என்பதால் ஆமி எட்டி கூட பார்ப்பதில்லை :) //


    ஹா..ஹா...ஹா..ஹா..ஹா....!! /////////

    உண்மைய சொன்னா ஒத்துக்கணும், ஆராயப்படாது.

    ReplyDelete
  13. ஆமி முதியோர் காப்பகத்துல இருந்து டக்குனு டிவி நிகழ்ச்சிக்கு போய்டீங்க.. மக்கள் எல்லாரும் மடத்தனமாக இந்த மாதிரி ப்ரோக்ராம்களை பார்க்கிறார்கள் என்றால்.... ம்ம்.. ஒன்றும் சொல்வதற்கு இல்லை. நல்லா பண்ணுறாங்கப்பா.. குடும்பத்த பிரிக்கறதுக்கு ஒரு ப்ரோக்ராம்.. அதுக்கு அமோக வரவேற்பு... பேஷ் பேஷ்.. அடுத்தவன அழவச்சு பாக்குறதுல என்ன ஒரு ஆனந்தம்...

    ReplyDelete
  14. ஆமினா..இந்த நிகழ்ச்சிகள் எல்லாமே கேள்வி பட்டு இருக்கேன்..ஆனால் க்ரோர்பதி தவிர எதுவும் பார்த்தது இல்லை....."இடியட் பாக்ஸ்" இல் நல்ல விஷயங்களும் ஏராளமாய் இருக்கு..ஆமி நல்ல பதிவு...:)))

    ReplyDelete
  15. ஆமி, பிக் பாஸ் பார்த்திருக்கேன், நீங்க சொன்னது பாதி கொடுமைகள் தான்னு நினைக்கிறேன், இன்னும் நிறைய நிறைய இருக்கு. அமிதாபின் ப்ரோகிராம் பார்ப்பேன், மற்றவைகளில் எனக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை.

    உங்க ப்ளாக் சிறக்க என்னோட வாழ்த்துக்கள் :))

    ReplyDelete
  16. //முதியோர் காப்பகத்துல இருந்து டக்குனு டிவி நிகழ்ச்சிக்கு போய்டீங்க//
    அங்கேயே இருந்தா அழுகையா வருது. அதான் இந்த பக்கம் வந்துட்டேன் ராதா

    மடத்தனமா பாக்குறாங்களா?
    நீங்க வேற. சீரியலில் அவங்களுக்கு என்ன ஆச்சோ? இவங்களுக்கு என்ன ஆச்சோன்னு அழுகுறதுக்கு இந்த புரோக்ராம்களே மேல்.

    மிக்க நன்றி ராதா

    ReplyDelete
  17. ஆனந்தி!
    அப்ப இனிமே நானும் உங்களையே பாலோ பண்றேன்.

    மிக்க நன்றி ஆனந்தி

    ReplyDelete
  18. சீரியலா அப்படின்னா என்னா ஆமினாக்கா..[நிச்சயமாக அதுக்கெல்லாம் நமக்கு நேரமுமில்லை அதைபார்க்க பிடிப்பதுமில்லை..

    அதுசரி டிவின்னா என்னா[இது ஓவர்தான் இருந்தாலும்]

    முதல் வருகை அதுதான் ஏதாவது சொல்லிட்டுபோகனுமுல்ல.

    ReplyDelete
  19. வாங்க பவி

    கண்டிப்பா கொடுமை தான் பவி. இப்படிலாம் செய்றாங்கன்னு நெனச்சு புலம்புனாலும் அதையெல்லாம் பாக்கும் போது இப்படிலாமா மனுஷங்க (குறிப்பா எங்க்ஸ்டர்ஸ்) இருக்காங்கன்னு வேதன பட வைக்குது. புலம்ப வேண்டியது தான் மிச்சம்.

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  20. மலிக்கா

    நீங்க டீவின்னா என்னன்னு சொன்னது கூட நான் ஒத்துக்குவேன். ஆனா அக்கான்னு சொன்னத எங்கே போய் சொல்லி அழுக?:( இதுக்கே ஹை கோர்ட்ல உங்கள சந்திக்கிறேன் :))

    முதல் வருகைக்கும் பதிவுக்கும் மனமார்ந்த நன்றி மலிக்கா

    ReplyDelete
  21. ஆமி நானும் கரோர்பதி பாப்பேன். முதல்ல சனி ஞாயிறு மட்டுமே வந்தது. இப்ப டெயிலி வரது இல்லியா அதனால இண்ட்ரெஸ்டிங்கா இல்லை.
    ட்ராவல் லிவிங்க் நல்லா இருக்கு. பல நாடுகள்,
    கண்ணுக்கு குளிர்ச்சியா பல சீனரிகள். என்று நல்லாவே இருக்கு.

    ReplyDelete
  22. கோமு

    உண்மை தான். வாரம் 2 முறை போடும் போது இருந்த சுவாரசியம் இப்ப இல்ல. ஏதோ நமக்கும் தெரிஞ்ச பொது அறிவு கேள்வி கேட்பதால் (பதில் தான் தெரியாதே) பார்ப்பேன். அந்த டைம் முடிறதுக்குள்ள 4 ஆப்ஷனையும் நான் செலக்ட் பண்ணிடுவேன்:)

    ட்ராவல் லிவிங் நான் சென்னையில் இருக்கும் போது பார்த்தது. இங்கே எல்லாவற்றையும் பாக்க முடிவதில்லை. ஷாம் தான் கார்டூன் சேனலே கதின்னு கெடப்பான். நான் ரிமோட் வாங்குனா ஊரையே கூட்டிடுவான் :(

    ReplyDelete
  23. ஆமி,

    ம்ஹூம் என்ன ஆமி எங்க வீட்டில டிவி இல்லைன்னு உங்களுக்கு எப்படி தெரியும்;(
    இந்த நிகழ்ச்சி எதுவுமே நான் பாத்தது இல்ல.

    உங்க வர்ணனை நல்லாயிருக்கு ;-) சீக்கிரமா கனக்‌ஷன் குடுத்து பாத்துடுறேன்;-)
    இன்னும் கலக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. உங்க‌ ப்ளாக்கும் எழுத்தும் ந‌ல்லாயிருக்குங்க‌ ஆமீனா இர்ஷாத் ப்ளாக்'ல‌ உங்க‌ க‌மெண்ட் பார்த்துதான் உங்க‌ ப்ளாக் தெரிஞ்ச‌து சூப்ப‌ராயிருக்கு வாழ்த்துக்க‌ள்.

    ReplyDelete
  25. வாங்க கண்மணி

    நண்பர் இர்ஷாத் மூலமா வந்தீங்களா! மிக்க மழிச்சி!
    தொடர்ந்து வந்துடுங்க.
    வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்!(என் தோழியின் பெயர் கண்மணி. எனக்கு பிடித்த பெயரும் கூட :)

    ReplyDelete
  26. டீவி இல்லாத வீடா? என்ன ஜெயா உலக அதிசயப்பட்டியலில் உங்களை சேக்க காணாம்?

    பசங்க படிப்புக்கு இப்ப இருந்தே டீவிக்கு நோ ஆ?

    சீக்கிரம் வாங்கிடுங்க.

    வருகைக்கு நன்றி ஜெயா!

    ReplyDelete
  27. aammina vathuddeeeeeeen
    hi comment thaan ezutha mudiyala

    ReplyDelete
  28. @ஜலீலாக்கா
    ஆசையாக ஓடி வந்த என்னை ஏமாற்றாதீங்கக்கா!!!!! ம்ம்

    வந்ததுக்கும் கருத்துக்கும் மனம் நிறைந்த நன்றிகள் பல!

    ReplyDelete
  29. எப்புடி ஆமினா இப்புடி.....
    சும்மா பிச்சு உதறிட்டிங்க போங்க....
    என்னது தொலைக்காட்சிகூட பார்க்கிறீங்களா....

    ஆமா ஆமி, மேலே சொன்னதெல்லாம்
    தொலைக்காட்சி நிகழ்ச்சிகளா..........

    நல்ல வேளை நான் தமிழ்நாட்டுலதான்
    இருக்கேன்...

    இருந்தாலும் இப்படியெல்லாம் எழுதி
    எச்சரிக்கை செய்து என்னைக் காப்பாற்றியதற்கு நன்றி..........

    ReplyDelete
  30. @செந்தில் குமார்
    நடிப்பின் திலகமே!

    //ஆமா ஆமி, மேலே சொன்னதெல்லாம்
    தொலைக்காட்சி நிகழ்ச்சிகளா..........//
    யார் சொன்னா இதெல்லாம் தியேட்டரில் நான் பார்த்த படங்கள். நீங்க பாத்தீங்களே அதே மாதிரி. கஷ்ட்டப்பட்டு ஒரு பொண்ணு எழுதுனா இப்படி அழ வைக்கிறதே செந்திலுக்கு வேலையா போச்சு.

    ReplyDelete
  31. பத்திமாம்மா!

    எப்படி இருக்கீங்க? மகள் இருக்கும் இடத்தை தேடி கண்டுபிடிச்சு ஒரு வழியா கமெண்டும் போட்ட்டாச்சா? !!

    ஷெரினை, பாப்பாவை கேட்டதாக சொல்லுங்க :)

    ReplyDelete
  32. மிக நல்ல பதிவு.. ரசித்தேன்

    ReplyDelete
  33. @ சதீஷ் குமார்

    ரசிச்சு படிச்சதுக்கு மிக்க நன்றி :)

    ReplyDelete
  34. ஓ ... டி.வியில இத்தன சேனல் இருக்கா. இந்தன புரோகிராமா... சன் டி.வி அதுவும் செல்லமே, டிலா நோ டிலா... அரட்டை அரங்கம், இது தவிர வேறு எதுவும் தமிழக மக்களுக்கு தெரியாது... அது ஏங்க ஸ்பெக்ரம் ஊழல் பத்தி எதாவது சிறப்பு செய்தி சொன்னால் ,செய்தி முடியும் வரை தமிழகமே கரண்டு கட்டானாலும் ஆச்சரியம் இல்லை.

    ReplyDelete
  35. என்ன செய்ய? நம்மூர்க்கு சன் டீவியும் அதுல உள்ள சீரியலும் தான் கண்ணுக்கு தெரியுது. கேபிள் என்றாலே சன் டீவி தான்னு பேராகி போச்சு!

    //அது ஏங்க ஸ்பெக்ரம் ஊழல் பத்தி எதாவது சிறப்பு செய்தி சொன்னால் ,செய்தி முடியும் வரை தமிழகமே கரண்டு கட்டானாலும் ஆச்சரியம் இல்லை.//
    சிந்திக்க கூடிய விஷயம் தான் :) இதெல்லாம் தொழில் ரகசியம். பப்ளீக் பண்ண கூடாது..அவ்வ்வ்வ்வ்வ்

    இதை கவனிச்சுருக்கீங்களா?!
    தேர்தல் நேரத்தில் டீவில கீழ வரில எத்தனை தொகுதில வெற்றி அப்படின்னு டிஸ்ப்லே ஆகிட்டு இருக்கும். அதுவரை மெதுவா எழுத்து கூட்டி கூட நம்மால படிச்சுட முடியும். அந்த கட்சி தோத்து போனா மெதுவா நகரும் அதே வரி ஜெட் வேகத்தில் ஓடும். என்னதான் செய்தாலும் பாக்க முடியாது :)

    ReplyDelete
  36. pls change ur back groun colour..

    ReplyDelete
  37. @Reddiyur

    ஏன்ங்க என்ன ஆச்சு???

    ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)