முதியோர் இல்லத்திலிருந்தே எடுக்கப்பட்டவை

ஐயிரண்டு மாதம் கருவறையிலும்
இன்றுவரை நெஞ்சிலும் சுமக்கின்றேன்
கண்ணா!
கடைசி நாட்களில் மட்டும்
நான் பாரமாகி போனதேனோ?

நடையிலேயே பலமணிநேரங்கள்
என் தோள்களிலும்
தலைமுடியை கோதிக்கொண்டே மடியினிலும் சுமந்தேன்
கண்ணா!
உன் வீட்டின் சமையலறையிலும்
தோட்டத்தின் ஒரு மூலையில் சிறுபடுக்கையிடவும்
பாவியெனக்கு இடமில்லாமல் போனதேனோ?


தவழும் போது கீழே விழுந்தாலும்
உனக்கு முன் கண்ணீர் வடித்தேன்
இன்று வரை என் கண்ணீருக்கு
காரணமாக போகிறவன்
நீ என்று அன்றே அறியேன்


உனக்காக பல இரவுகள்
விடியலுக்கு பிறகும் விட்டுகொடுத்தேன்
இன்றும் எல்லா இரவுகளும் உன்னால்
தூங்காமல் துக்கத்தில் கழிக்கின்றேன்


பிஞ்சு உடலில் சிறுகாயம் கண்டு
நெஞ்சம் பதறி துடிப்பேன்-நீயோ
நஞ்சை தடவிய வார்த்தையால்
நெஞ்சம் கிழித்ததை
என்னவென்று சொல்வேன்


உன் ஒவ்வோர் வளர்ச்சி பார்க்கையில்
புதிதாய் உயிர்பிப்பேன்
உன் உச்சக்கட்ட வளர்ச்சியில் இந்நிலையென்றறிந்திருந்தால்
அன்றே உயிர்மரித்திருப்பேன்

ஏனோ உன்னுள்ளம் என்னை ம(றுத்து)றந்துவிட்டது
ஏனோ இந்நிலை என என்னுள்ளம் தினமும் வாடுகிறது


நிராகரிக்கப்பட்ட போதும்
நீ நலமுடன் வாழவே
என் பிரார்த்தனைகள்
உன் நினைவில் நானில்லாத போதும்
உயிர் பிரியும் வரையில்
உனக்காகவே என் வேண்டுதல்கள்


40 comments:

 1. kavidhaiyum sindhanayum azhagu.

  wish you all the best

  ReplyDelete
 2. கைவிடப்பட்ட தியாக ஜீவன்கள்
  கவனிப்பாரற்று திரிகின்றன
  கண்ணீர் நிலை என்றுதான் மாறுமோ
  சில இரும்பு இதயங்கள்,
  உருகினாலன்றி,இவ்விழுக்கு மாறாது.
  இன்றைய இளமை நாளைய முதுமை
  அதை நாம் மறந்தால், நாமும்
  நாளைய அணாதைகள்தான்

  வாழ்த்துகளுடன்
  ஆஷிக்

  ReplyDelete
 3. முதல் போஸ்டிற்கு வாழ்த்துக்கள்..!! வாழ்த்துக்கள்..!!

  ReplyDelete
 4. ஆமி ரொம்ப நல்லா இருக்கு.

  ReplyDelete
 5. @mohammed
  உங்க பேச்சு போல் உங்க கருத்தும் ரொம்ப ரத்தின சுருக்கம் தான்.

  முதல் ஆளாய் ஓடி வந்ததற்கு மிக்க நன்றி!
  தொடர்ந்து வந்துடுங்கோ :)

  ReplyDelete
 6. ஆஷிக்
  உங்க மனசுல முதியோர்களின் நிலை பற்றிய கவலை தெரிகிறது. நன்கொடையா இவங்களுக்கு உதவுவதை விட அவரவர் பெற்றோர்களை கடைசி காலம் வரைக்கும் பாத்துட்டு இருந்தாலே கண்ணீர் நிலை மாறும்.

  ReplyDelete
 7. ஹாய் ஜெய்லானி!
  மிக்க நன்றி! மிக்க நன்றி!
  இது போல தொடர்ந்து வந்துடுங்க. காத்திட்டிருப்பேன்

  ReplyDelete
 8. கோமு

  நல்லா இருக்கீங்களா? ரொம்ப தேங்க்ஸ் கோமு!

  ReplyDelete
 9. வந்துட்டேன் ஆமி! வாழ்த்துக்கள்! தொடர்ந்து கலக்குங்க. அப்படியே நம்ப பிளாக் பக்கமும் வாங்க :-)

  ReplyDelete
 10. ப்ளாக் போட்டதுக்கு வாழ்த்துக்கள் ஆமினா!!

  இந்த இயந்திர வாழ்க்கையில் பெற்றோர் கூட பாரமாகி தான் போறாங்க சில வளர்ந்த பிள்ளைங்களுக்கு...!விதி வலியது!!ஒதுக்கும் வளர்த்த கடாவுக்கும் இப்படி ஒரு நிலை எதிர்காலத்தில் வரலாம்..ம்ம்..அந்த கவிதை ரொம்ப டச்சிங் ஆ இருந்தது...

  ReplyDelete
 11. ஆமி, குட்டி சுவர்க்கம்னதும் குழந்தைகளைப்பத்தியோன்னு ஆசையோட ஓடி வந்தேன், வயதில் முதிர்ந்த குழந்தைகளின் இன்றய நிலையைக் காட்டியிருக்கிங்க.

  உங்க பிளாக்கும் நல்ல முறையில் சிறக்க வாழ்த்துக்கள்;-)

  ReplyDelete
 12. ஆரம்பமே அமக்களமா இருக்கு ஆமி.. வாழ்த்துக்கள். பாத்ததுமே மனசுல பதியற மாதிரி இருக்கு. குட்டி சொர்க்கத்துல எடுத்ததுமே முதியோரின் நிலையை அழகா கவிதை நயத்தோடு சொல்லிருக்கீங்கப்பா... அன்பும் ஆதரவும் அற்ற, அனைத்து சொந்தங்களும் கொண்ட அநாதைகள். தன்நிலை எண்ணி எண்ணி ஒவ்வொரு நாளும் நரகமாய் நாளைக் கழிக்கும் இவர்களின் நிலைமை மாறும் நாள் எந்நாளோ....?

  டச்சிங் டாபிக் ஆமி. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் ஆமினா....அழைப்புக்கு நன்றி....

  ஆமினாகிட்ட இருந்து இப்படி ஒரு பதிவ எதிர்பார்க்கல...ரொம்ப உணர்வுபூர்வமான கவிதை...ஒவ்வொரு வரியும் முதியவர்களை ஒதுக்குபவர்களுக்கான ஒரு தூக்கு தண்டனை....
  மீண்டும் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 14. வாங்க கவிசிவா!
  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!

  பின்னாடியே வந்துடுறேன் உங்க ப்ளாக்குக்கு :))

  ReplyDelete
 15. ஹாய் ஆனந்தி!
  என்னத்த சொல்ல! சம்பாத்திக்கிறேன்னு பணத்த மட்டும் சேர்த்துவச்சுட்டு பெத்தவங்கள விட்டுடுறாங்க. இன்னைக்கு நாம் பெற்றோர்களை ஒதுக்கி வைத்தால் நம்மைபார்த்து வளரும் நாம் பெற்ற பிள்ளைகளும் அதையே தான் செய்வார்கள் என இப்போது புரிவதில்லை.

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி பூலோக தேவதையே!

  ReplyDelete
 16. வாங்க ஜெயா!
  ஆசையோட வந்தீங்களா? கவலைபடாதீங்க. எல்லாருக்கும் ஏத்த மாதிரி வச்சுடுவோம்!

  மிக்க நன்றி ஜெயா!

  ReplyDelete
 17. ராதா
  எல்லாம் நீங்க கொடுக்குற எனர்ஜி தான் :)

  ஒவ்வொருத்தவங்ககிட்ட பேசும் போதும் ஒவ்வொரு விதமான சோக கதை சொல்றாங்க ராதா. கேக்கும் போதே மனசுக்கு கஷ்ட்டமா இருந்தது. நம்மூரில் ஒரு அம்மா மகன் அமெரிக்கால இருந்து கூப்பிட்டான்னு போனாங்க. 1 வாரம் வரை நல்லா பாத்துக்கிட்டவங்க அதுக்கு பிறகு வேலைகாரியை வேலையிலிருந்து நீக்கி அதற்கு பதில் அந்த பெரிய மனுஷியை பாடாபடுத்த ஆரம்பிச்சுட்டாங்க. பாவம் அந்த அம்மாவால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. உடனே அந்த நாய்கள் “நீ இங்கேயிருந்தா எங்களுக்கு எந்த பிரோஜனமும் இல்லை” அப்படின்னு சொல்லி முதியோர் இல்லத்துல சேர்த்துட்டாங்க. கேக்கும் போது அழுகை தான் வந்தது .

  மிக்க நன்றி ராதா!

  ReplyDelete
 18. @விழியில் விழிமோதி

  வாங்க நண்பா!
  வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல!
  /ஆமினாகிட்ட இருந்து இப்படி ஒரு பதிவ எதிர்பார்க்கல//
  ஏன் சொல்ல மாட்டீங்க? நடத்துங்க நடத்துங்க.....

  கருத்துக்களுக்கு மிக்க நன்றி. மீண்டும் வாழ்த்துக்களுக்கு நன்றி (எப்பூடி?) :))

  ReplyDelete
 19. சகோதரி,வலைஉலக வரவிற்கு என் அன்பான வரவேற்புக்கள்.முதல் பதிவுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுதுங்கள்.படிக்க ஆவலுடன் காத்திருக்கின்றேன்.ஒரு சிறிய சந்தேகம்.அறுசுவையில் களை கட்டும் ஆமினாவும் நீங்களும் ஒன்றா?

  ReplyDelete
 20. ஆமினா,குட்டி சுவர்க்கம் மிக மிக அருமை ஒரு நிமிடம் கண் கலங்க வச்சிட்டிங்க பா, நீங்க மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  மனோ பாரதி

  ReplyDelete
 21. ஸாதிகா

  வரவேற்புக்கு மிக்க நன்றி ஸாதிகா. உங்களை இங்கே பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.

  //.அறுசுவையில் களை கட்டும் ஆமினாவும் நீங்களும் ஒன்றா? //
  அதே ஆமினா தான் :)

  ReplyDelete
 22. ஆமினா கவிதை அருமை.வலைப்பூவில் காலடி எடுத்து வைத்து கலக்கப் போகும் ஆமினாவிற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 23. மனோ
  முதல் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும், பதிவுக்கும் மகிழ்ச்சி கலந்த நன்றி டா.

  ReplyDelete
 24. ஆசியா
  மிக்க நன்றி. உங்க ப்ளாக்குக்கெல்லாம் வந்து தான் எனக்கு இந்த மாதிரி ஆசைலாம் வந்துச்சு. மீண்டும் நன்றி!

  ReplyDelete
 25. //இது போல தொடர்ந்து வந்துடுங்க. காத்திட்டிருப்பேன்//

  முதல் போஸ்டினால ஓரே ஒரு கமெண்ட்தான் ..ஆனா அடுத்தடுத்த போஸ்டுகளில் ரெண்டுக்கு மேலே கமெண்ட் இருக்கும் . இனி தொடர்ந்து வருவேன் இன்ஷா அல்லாஹ் :-))

  ReplyDelete
 26. ஆமினா கவிதை அருமை.கலக்கப் போகும் ஆமினாவிற்கு வாழ்த்துக்கள்.  இதுதான் பெத்தமனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்று சொல்வாகளோ?

  ReplyDelete
 27. ஜெய்லானி
  நான் சின்ன பொண்ணு! இப்படிலாம் பயமுடுத்தினா அழுதுடுவேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
  . //இனி தொடர்ந்து வருவேன்// வாங்கோ வாங்கோ!!!!

  ReplyDelete
 28. யோகராணி!
  வருகைக்கு நன்றி யோகா! வாழ்த்துக்களுக்கு பல நன்றிகள்.

  உண்மை தான். பிள்ளை பெற்றோர்களாக மாறும் போது தான் அந்த வலியும் வேதனையும் உணர முடியும்.

  ReplyDelete
 29. ஆமி முதலில் உங்க முயற்ச்சிக்கு எனது வாழ்த்துக்கள்.உங்கள் கவிதை அருமை.பிள்ளைகள் வளர்ந்த பிறகு பெற்றோர் அவர்களுக்கு பாரமாகிவிடுகிறார்கள்.

  ReplyDelete
 30. சுந்தரி
  மிக்க நன்றி டா.
  என்ன செய்ய. அவரவர் திருந்தினாலொழிய இந்நிலை மாறாது. எங்கே முதியோர் இல்லம் எண்ணிக்கை தான் நாளுக்கு நாள் கூடுது:(

  ReplyDelete
 31. mmm , muthal postvaan thukkaL
  urukkamaana kavithai

  ReplyDelete
 32. @ஜலீலாக்கா
  அப்பா...............டா..............

  வந்தாச்சா? நன்றி அக்கா!!

  ReplyDelete
 33. முதுமைக்கு,

  காது கொடு,
  கை கொடு,
  கண் கொடு,
  தோள் கொடு,
  மனம் கொடு.

  முதுமையில்,

  மகராசனாய்,
  மகராசியாய் ,
  வாழவிடு,
  நீயும் நன்றாய்,
  வாழ்ந்திடுவாய்.
  _________________

  ReplyDelete
 34. கிங் கார்த்திக்

  எப்படி பாஸ் இருக்கீங்க? கவிதை சூப்பரோ சூப்பர்!

  ReplyDelete
 35. அருமை. முதிர்வயதிலும் கொடுமையிலும் மாறாத தாயின் மனநிலை, நல்ல கருத்துகள்

  ReplyDelete
 36. சகோ சுல்தான் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! கஷ்ட்டப்பட்டு சுமந்த தாயையேயே சீக்கிரமாக எளிதாக எறிந்துவிடுகிறார்கள். பின்னாளில் தான் அதன்வேதனையை அனுபவிக்கிரார்கள்.
  மீண்டும் மனமார்ந்த நன்றி !

  ReplyDelete
 37. படங்களும்..கவிதையும் அருமை..

  நன்கொடையா இவங்களுக்கு உதவுவதை விட அவரவர் பெற்றோர்களை கடைசி காலம் வரைக்கும் பாத்துட்டு இருந்தாலே கண்ணீர் நிலை மாறும்.//

  உங்களோட இந்த பின்னூட்டம் அதை விட அருமை

  ReplyDelete
 38. @ஹரிஸ்

  முதல் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி !!!

  உண்மையை சொன்னால் பலருக்கும் கசக்கும் என்ன சொல்வது? மனமார்ந்த நன்றிங்க

  ReplyDelete
 39. மிகவும் உணர்வுப்பூர்வமான வரிகள்.நியாயமான மனக்குமுறல்கள்.

  ReplyDelete
 40. @கே.ஆர்.விஜயன்
  மிக்க நன்றி சகோ

  ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)