இஸ்லாத்தை பற்றி பலருக்கும் பல எண்ணங்கள் இருக்கலாம். குர்ஆன் சொல்லும் விஷயங்கள் அறியப்பெறாத காரணத்தால் இஸ்லாம் என்ன சொல்கிறது என தெரியாமல் கூட இருக்கலாம். அப்படிபட்டவர்களுக்காக இஸ்லாம் பழைய காலத்திலேயே (கிட்டதட்ட கிபி 600க்கு முன்பிருந்தே…) இன்றைய புதுமையான விஷயங்களை தன்னகத்தே கொண்டு இன்று வரை தீயமாற்றம் பெறாமல் வளர்ந்துள்ளது என அறியத்தரவே இப்பதிவின் நோக்கம். என் கருத்துக்கள் தவறாய் இருக்கும் பட்சத்தில் சுட்டிகாட்டுங்கள் திருத்திக்கொள்ள வாய்ப்பாய் அமையும்.

பூப்பெய்தும் விழா

பாரம்பரியம்,கலாச்சாரத்தை எடுத்துசொல்ல கூடிய விழாவாய் இருந்த போதிலும் இன்று பலரால் வெறுக்கப்படும் அல்லது விமர்சனப்படுத்தப்படும்  ஒரு விழாவாக இப்போது நிலவுகிறது. இந்த வீட்டில் பருவமடைந்த பெண் இருக்கிறாள் என வரன் தேடுவோர்க்கு எளிதாய் தெரியவேண்டி நடத்தப்படுதாக சொல்லப்படுகிறது.

இது தேவையான ஒன்றா? கலாச்சாரத்தை கட்டி காப்பாத்துறோம் என்ற பேரில் பெண்களை இழிவுபடுத்துவதா?

 புதிதான; அர்த்தம் புரியாத சூழலுக்கு இழுக்கப்பட்டுள்ளோம் என்பதை கூட யோசித்து விடைபெற பல நாட்கள் அவகாசம் தேவைப்படும் அச்சிறுமிக்கு.
சகஜ சூழலுக்கு தன்னை மாற்றும் முன்பே அவளை அலங்கார பொம்மையாய் எல்லோர்க்கும் முன்னிலையில் பிரகடனப்படுத்துவது மன உளைச்சலுக்கு இட்டு செல்லாதா?

என்னை கேட்டால் இப்படியான சூழலில் அவளுக்கு தேவையான ஆறுதல்களும் அதை பற்றிய விழிப்புணர்வும் தருவது தான் அக்காலகட்டத்திற்கு அவளுக்கு தரும் பெரிய பரிசு. இப்போதாவது அக்கம் பக்கம் உள்ளவர்கள் யாரென்று தெரியாமல் இருக்கிறோம். ஆனால் அக்கால கட்டத்தில் ஒருவரை ஒருவர் தெரியாமலோ அல்லது எவ்விதத்தில்லாவது உறவினராக இல்லாமலோ இல்லை. அப்படியிருக்க பருமடைந்த பெண் இந்த வீட்டில் இருப்பாள் என அனைவருக்கும் தெரிந்திருக்கும். பின் ஏன்தான் இந்த நோக்கத்திற்காகதான் நடத்துகிறோம் என்று சப்பைகட்டு கட்டி இந்த தேவையில்லாத சடங்குகள்?  இப்படி ஊர் கூட்டி விஷேஷம் நடத்தப்படுவதால் பலன் என்னவோ மொய் கறக்க நினைக்கும் பெற்றோர்களுக்கும், இன்னும் மாமனார் வீட்ல எவ்வளவு கறக்கலாம் என எந்நாளும் துடித்துக்கொண்டிருக்கும் சிறுமியின் தகப்பனார் வீட்டார்க்கும்  தான். இஸ்லாம் இத்தகைய தேவையற்ற  சடங்குகளை வெறுக்கிறது. இஸ்லாத்தில் சொல்லப்படாத ஒன்றை செய்வதும் புதிதுபுதிதாய்  சம்ப்ரதாய சடங்குகளை புகுத்துவதும் வெறுக்கப்பட்ட செயலாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியது:
மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்படும் அனைத்தும் வழிகேடாகும்.(ஆதார நூல்-புகாரி)
யார் நம்முடைய இந்த மார்க்க விஷயத்தில் அதில் இல்லாத ஒன்றை புதிதாக உறுவாக்குகின்றாரோ அது மறுக்கப்பட்டுவிடும். (ஆதார நூல்: முஸ்லிம்)


திருமண முடிவு
 இன்றைய காலகட்டத்தில் சுயமாய் முடிவெடுக்கும் உரிமை அனைவருக்கும் விரும்பியோ வெறுத்தோ வழங்கப்பட்டுள்ளது. என் வாழ்க்கை… என் கையில்… ஆகையால் நான் தான் தீர்மானிப்பேன் என்ற குரல் சமீப காலமா தான் ஓங்கியிருக்கு.  அதுவும் வலுக்கட்டாயமாய் தான் இந்த உரிமையை மீட்டுள்ளோம். ஆனால் கொஞ்ச வருடங்களுக்கு முன்பு வரை பெண்களிடம் சம்மதம் கேட்பது என்பது எங்காவது படித்த குடும்பத்தில் மட்டுமே நிகழும் விஷயம். “அவளுக்கு என்ன நல்லது கெட்டது தெரியும்? நாம பாத்து எவன கட்டணும்னு சொல்றோமோ அவனுக்கு வாக்கப்பட வேண்டியது தான்”என சொல்லி சொல்லி எத்தனை கனவுகள் வெறும் கனவுகளாகவே இருந்திருக்கும்? எத்தனை பெண்கள் விருப்பமில்லாத அர்த்தமற்ற வாழ்க்கையை வாழ்ந்திருப்பார்கள்?

ஆனால்……………………

விதவைப்பெண்ணாக இருந்தாலும் அவளது சம்மதம் பெறவேண்டும். கன்னி பெண்ணாக இருந்தாலும் அவளது சம்மதம் பெற வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - ஆதார நூல்: புகாரி)

பாருங்கள்…. அக்காலத்திலேயே பெண்ணின் திருமண விருப்பத்தை உறுதிபடுத்திய பின்னரே; அவள் இன்னாரை திருமணம் செய்ய வாய் மொழியாக சம்மதம் தெரிவித்த பின்னரே திருமணம் நடத்தப்படவேண்டும் என கட்டளை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் விருப்பமில்லாதவர்களுக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவிட்டால் அத்திருமணத்தை ரத்து செய்ய கோரும் உரிமை பெண்ணுக்கு இருக்கிறது.  விருப்பமில்லாத வாழ்க்கை வாழ்ந்தால் உளவியல் ரீதியாக அவள் அனுபவிக்கும் எண்ணற்ற வேதனைகளை,மனக்குழப்பங்களை,தடுமாற்றங்களை அறிந்து அன்றே இத்தகைய சட்டங்கள் கொண்டுவரப்பட்ட ஒரே மதம் இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே. கணவன் இறந்து போனால்  மொட்டை அடிச்சுட்டு, வெள்ளை சேலை உடுத்தி, தாலி அறுத்து பொட்டை அழித்து வளையலை உடைத்து, பூவை உருவி…… (முன்பு உடன்கட்டை வேற) ஏற்கனவே மனவேதனையில் இருக்கும் பெண்ணை மீண்டும் மீண்டும் மரண வேதனை கொடுக்கும் சடங்குகளோ சம்ப்ரதாயங்களோ இஸ்லாத்தில் கிடையாது. மேலும் தாலி மெட்டி போன்ற பெண்ணை திருமணமானவள் என்று அடையாளப்படுத்தும் ஒரே காரணத்துக்காக ஏற்படுத்தப்பட்ட அர்த்தமற்ற விஷயங்கள் இல்லை.

சமீபத்தில் கணவன் இறந்த பெண்ணிற்கு நடத்தபட்ட சடங்குகளை பார்க்கையில் சொல்ல முடியாத அளவுக்கு வருத்தம் தொண்டையை அடைத்தது. படத்தில் காட்டுவது போன்று ஏற்கனவே இருக்கும் அலங்காரங்களை அழிக்கவில்லை. வாசலுக்கு கொண்டு வந்து சில விதவை பெண்களின் மூலம் சடங்கு நடத்தப்பட்டது. அழகாய் போட்டு வைத்து,பூ சூடி, கண்ணாடி வளையல்கள் இட்டு வீதியில் அமர வைக்கப்பட்ட அந்த பெண்ணிடம் முகம்பார்க்கும் கண்ணாடி கொடுத்து கடைசியாய் ஒரு முறை பார்த்துக்கொள் என்கிறார்கள். பின் ஒன்றன் பின் ஒன்றாக எல்லா அலங்காரங்களையும் கோர முகத்துடன் அழிக்கப்பட்டது……  இவையனைத்தையும் வீதியில் போவோர் வருவோர் அக்கம்பக்கத்திலுள்ளோர் வேடிக்கை பார்க்கும்படி தான் செய்யப்படுகிறது…. இவையெல்லாம் எதற்கு? இதுக்கு பிறகு உனக்கு வாழ்க்கை இல்லை என சொல்வதற்காகவா?
காலம் மாறிவிட்ட போதிலும் கூட சமூகத்தில் தனக்கு அவப்பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக விதவை பெண்ணானவள் விருப்பமிருந்தும் மறுமணம் செய்ய தயங்குகிறாள். அல்லது மற்றவர்களால் அவ்வாறு செய்யக்கூடாது என தடுக்கப்படுகிறாள். ஆனால் இஸ்லாத்தில் மறுமணம் செய்ய பெண்ணுக்கு முழு உரிமை உண்டு.  அவளின் விருப்பத்தை/பாதுகாப்பை மறுக்கவோ தடை செய்யவோ எவருக்கும் உரிமை இல்லை.

 வரதட்சணை :-
திருமண சந்தையாய் மாறிவிட்ட இக்கால திருமண நிகழ்ச்சி எல்லாருக்கும் நன்கு தெரியும்.  பெண் வீட்டார் குறிப்பிட்ட தொகையை பேரம் பேசி மாப்பிள்ளையை விலை கொடுத்து வாங்குகின்றனர். அப்படியிருந்தும் கூட  “இன்னும் பணம் வாங்கிட்டு வா” என மறைமுகமாக பல காரியங்களில் ஈடுபட்டு தன் மனைவியை பிறந்த வீட்டுக்கு துரத்துவதும், அவ்வாறு கிடைக்கவில்லை என்றால்  பெண்களை கொடுமைப்படுத்தி சாகும் அளவுக்கு பிரச்சனையை கொண்டு வருவதும் செய்திதாள்களின் மூலமாகவும் அண்டை வீட்டிலோ நம் நெருங்கிய வட்டத்திலோ அடிக்கடி கேள்விபடும் விஷயம். ஆனால் இஸ்லாத்தில் ஆண் தான் திருமணத்திற்கான தொகையை பெண்ணுக்கு பணமோ பொருளோ கொடுக்க வேண்டும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? இஸ்லாமிய ஆண் பெண்ணை திருமணம் செய்ய விரும்பினால் அப்பெண்ணிற்கு குறிப்பிட்ட தொகை (மஹர்) கொடுக்க வேண்டும். பெண் வீட்டார் எள்ளளவும் செய்யத்தேவையில்லை. அதுவுமில்லாமல் அத்தொகையை நிர்ணயம் செய்வதற்கும் பெண்களுக்கே உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. என்னவன் எவ்வளவு எனக்கு கொடுக்க வேண்டும் என்பதை நானே தீர்மானிப்பேன். இவ்வளவு மணக்கொடை கேள் என யாரும் சொல்ல அனுமதி இல்லை . மேலும் மணக்கொடையாய் கொடுக்கப்பட்ட பணத்தையோ பொருளையோ முழுவதுமாக அனுபவிக்கும் உரிமையும் பெண்களுக்கு மட்டுமே!

நீங்கள் மணம் செய்து கொண்ட பெண்களுக்கு அவர்களுடைய மஹர்களை மகிழ்வோடு கொடுத்து விடுங்கள்.  அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனம் விரும்பி அவர்கள் உங்களுக்குக் கொடுத்தால் அதைத் தாராளமாக மகிழ்வோடு புசியுங்கள்-(ஆதார நூல்-அல்குர்ஆன் 4 : 4)

:-)

பாத்தீங்களா? இஸ்லாத்தில் பெண்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமையை? மணமகனை தேர்ந்தெடுப்பதும் பெண்கள் தான். திருமணத்தொகை பெறுவதும் பெண்கள்தான். எல்லாவற்றையும் விட பிடித்தமானவரை திருமணம் செய்யும் உரிமை ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ளது. இத்தகைய பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நல்லதொரு சட்டங்கள் போன வருஷமோ முந்துன வருஷமோ ஏற்பட்டதல்ல…. நபி (ஸல்) வாழ்ந்த காலத்திலேயே  நடைமுறைபடுத்தப்பட்டுவிட்டது. இத்தகைய உரிமையெல்லாம் மகளிர் அமைப்புகள் மூலமாகவோ,போராட்டமோ, உண்ணாவிரதோ செய்து பெறப்பட்டதில்லை. 33 சதவீதம் தா என்று இன்றளவும் கெஞ்சிக்கொண்டிருக்கவும் இல்லை.  ஆணுக்கு பெண் எவ்விதத்திலும் குறைந்தவள் இல்லை என நிரூபிக்கும் பல சான்றுகள் திருக்குர்ஆனில் கொட்டி கிடக்கிறது!  என்றோ எங்களுக்கு சுதந்திர காற்று அனுபவிக்கும் உரிமை வழங்கப்பட்டுவிட்டது. இப்ப சொல்லுங்க…. இஸ்லாம் பெண்களை அடிமைபடுத்தும் மதமா (மார்க்கமா?)? இஸ்லாம் பெண்களை இழிவுபடுத்தும் மதமா (மார்க்கமா?)? 

இன்னும் அதிகமதிகம் உள்ளது. பதிவு நீள்வதால் இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ள பழைமை காலத்திலேயே கடைபிடித்த நவீன விஷயங்களை அடுத்தடுத்த பதிவுகளில் தொடர்கிறேன்.

அனைவருக்கும் ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

, , ,

56 comments:

  1. ஸலாம் சகோ.ஆமினா,

    முஸ்லிம் பெண்களே இதுபோன்ற இஸ்லாமிய பெண்ணுரிமை பற்றிய பதிவுகளை எழுதுவது மிக்கநன்று.

    //இன்னும் அதிகமதிகம் உள்ளது. பதிவு நீள்வதால் இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ள பழைமை காலத்திலேயே கடைபிடித்த நவீன விஷயங்களை அடுத்தடுத்த பதிவுகளில் தொடர்கிறேன்.//

    ---இறைநாடினால்...இன்னும் பல பதிவுகள் இத்தலைப்பில் எழுதலாம்..! அவசியம் தொடருங்கள் சகோ..!

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரி, முஸ்லிம்கள் தெரியாமல் செய்யும் மூடநம்பிக்கைதான் இஸ்லாம் என்று மாற்றுமத சகோதரர்கள் பலரும் நினைகிறார்கள். அதைபற்றியும் கொஞ்சம் எழுதவும். ஈத் முபாரக்

    ReplyDelete
  3. பக்ரீத் வாழ்த்துக்கள் சகோ..

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

    ஆமினாம்மா !

    அருமையான பதிவுகளில் ஒன்று.

    பாராட்டுக்கள்.

    தொடருங்கள்.

    தொய்வின்றி.

    தாங்களுக்கும்
    தங்களின் குடும்பத்தினருக்கும்
    ஈத் முபார‌க்

    வாஞ்சையுட‌ன் வாஞ்ஜூர்.

    ReplyDelete
  5. உங்களுக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள். அறியாத தகவல்களை அறிந்து கொண்டேன். நன்றி.

    ReplyDelete
  6. ஈத் முபாரக்....

    ReplyDelete
  7. புதிய தகவல்கள்

    ReplyDelete
  8. தியாக திருநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  9. ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள் ஆமீனா...

    ஒரு இஸ்லாமிய பெண்ணுக்கு இஸ்லாம் அந்த காலத்திலேயே தந்த முற்போக்கு ஆதரவு வியக்க வைக்கிறது...தொடருங்கள்..எல்லாரும் நிறைய தெரிந்து கொள்ள வாய்ப்புகள் ஏராளம்...

    அதே நேரத்தில் உங்களுக்கு பெண் என்ற பெயரில் மதத்தின் பேரால் ஏதாவது கட்டுப்பாடுகள் இருந்தால் அதையும் நீங்க விரும்பினால் எழுதுங்கள்.உலக மதங்களிலே அதிகம் தவறாய் புரிந்து கொள்ளப்பட்ட மதம் இஸ்லாம் தான்..அதை உங்களைப்போன்றோரால் தான் நிவர்த்தி செய்ய முடியும் சகோதரி...

    ReplyDelete
  10. இஸ்லாத் -சில வியசங்களை அறிந்து கொண்டேன்!இனிய பெருநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    மாஷா அல்லாஹ்...அருமையான கட்டுரை....தொடருங்கள்...

    இஸ்லாத்தில் பெண்களின் நிலை குறித்து ஆய்வு ரீதியாக படிக்க விரும்புபவர்களுக்கு டாக்டர் ஜமால் படாவி அவர்களின் இந்த கட்டுரை பயனளிக்கலாம்.

    http://www.institutealislam.com/the-status-of-woman-in-islam-by-dr-jamal-badawi/

    மேலும் முஸ்லிம் பெண்கள் குறித்த இந்த அழகான தளமும் பலனளிக்கலாம்..

    http://islamswomen.com/

    நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான் - (குரான் 33:35)

    வஸ்ஸலாம்...

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  12. ஈத் முபாரக் ஆமினா!

    ReplyDelete
  13. சகோதரி ஆமின,
    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மாடுள்ளஹி வ பரகதுஹ்,
    Masha'allah an interesting and an important one at the same time !!!

    Today, the only one problem, is that too much people had read the Qur'aan in arabic, without understanding what they are reading.
    If our ancestors read the meaning of the Al-Qur'aan in their mother tongue(tamil), today there won't be those type of problem...
    For the moment i only saw "பூப்பெய்தும் விழா", and i can tell you that i really dislike it. Even if i explain to my parents, they always told me that customs are important. But ISLAM is more important than customs, we can also say that is bid'ah to follow those customs. Islathin irunthal, ISLAM tavara verum ethuvum follow pannu koodathu.
    அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்படவர்களாக இருங்கள்; இன்னும் எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் அவனை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, அவனை வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவான்.(al-qur'aan 22:31)

    Let's talk about the marriage, it's the same problem.
    If they read some hadith about this matter, i don't think that they will done that mistake before.
    Ippo ula kalamgalil kooda varatsanai oru periya pirachchanai...subhanallah...
    Even now, i saw this i a big problem. If the al-qur'aan say that it's not to the bride to give the maher, it's to the groom to give it. and as i know :
    qur'aan => {4:24} இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான்.

    piragu :
    {4:25} உங்களில் எவருக்குச் சுதந்தரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ, அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;) அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்; ஆகவே முஃமினான அடிமைப்பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு, மணமுடித்துக் கொள்ளுங்கள் - அவர்களுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படிக் கொடுத்து விடுங்கள்; அப்பெண்கள் பரிசுத்தமானவர்களாகவும், விபச்சாரம் செய்யாதவர்களாகவும், கள்ளநட்புக் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும். எனவே, அப்பெண்கள் முறைப்படி திருமணம் முடிக்கப்பட்டபின் மானக்கேடாக நடந்து கொண்டால், விவாகம் செய்யப்பட்ட சுதந்தரமான பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு விதிக்கப்பெறும்; தவிர, உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடும் என்று(அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ - அவருக்குத்தான் இந்த சட்டம். எனினும் நீங்கள் பொறுமையாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லதாகும்; இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.

    ReplyDelete
  14. தொடர்கிறேன்
    piragu :
    {5:5} இன்றைய தினம் உங்களுக்கு (உண்ண) எல்லா நல்ல தூய பொருட்களும் ஹலாலாக்கப் பட்டுள்ளன; வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவும் உங்களுக்கு ஹலாலானதே; உங்களுடைய உணவும் அவர்களுக்கு (சாப்பிட) ஆகுமானதே, முஃமின்களான கற்புடைய பெண்களும், உங்களுக்கு முன்னர் வேதம் அளிக்கப்ட்டவர்களிலுள்ள கற்புடைய பெண்களும் விலைப் பெண்டிராகவோ, ஆசை நாயகிகளாகவோ வைத்துக் கொள்ளாது, அவர்களுக்குரிய மஹரை அவர்களுக்கு அளித்து, மண முடித்துக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது; மேலும் எவர் ஈமானை நிராகரிக்கிறாரோ, அவருடைய அமல் (செயல்) அழிந்து போகும் - மேலும் அவர் மறுமையில் நஷ்டமடைந்தோரில் ஒருவராகவே இருப்பார்.

    piragu :
    {33:50} நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்); இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்); மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.

    piragu :
    {60:10} ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்கள் ஹிஜ்ரத் செய்து (நாடு துறந்தவர்களாக) உங்களிடம் வந்தால், அவர்களை நீங்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள்; அல்லாஹ் அவர்கள் ஈமானை நன்கறிந்தவன்; எனவே அவர்கள் முஃமினான (பெண்கள்) என நீங்கள் அறிந்தால், காஃபிர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பி விடாதீர்கள்; ஏனெனில், அந்த பெண்கள் அந்த ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. அந்த ஆண்கள் இந்தப் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. (ஆனால், இப் பெண்களுக்காக) அவர்கள் செலவு செய்திருந்ததை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்; அன்றியும் நீங்கள் அப்பெண்களுக்குரிய மஹரை கொடுத்து அவர்களை விவாகம் செய்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை; மேலும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பெண்களின் விவாக பந்தத்தை நீங்கள் பற்றிப்பிடித்துக் கொள்ள வேண்டாம்; அன்றியும், நீங்கள் செலவு செய்திருந்ததை (அவர்கள் போய்ச் சேருவோரிடம்) கேளுங்கள்; (அவ்வாறே ஈமான் கொண்டு உங்களிடம் வந்து விட்டோருக்காகத்) தாங்கள் செலவு செய்ததை அவர்கள் (உங்களிடம்) கேட்கலாம் - இதுவே அல்லாஹ்வுடைய கட்டளையாகும்; உங்களிடையே அவன் (இவ்வாறே) தீர்ப்பு வழங்குகிறான் - மேலும், அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.

    Almost, in tha al-qur'aan, there isn't any part where it said that it must be monetary value or something else...

    ithukku ellam vidiya kalaam theriyumna, ellam thiru qur'aanai avanganga thai moliyil padikaventhum...appo achu unmai ennanu theriyum insha'allah...

    And everyone have to know that : islathin pengalukku athigama urimai ondru... All muslim women feel free, personally i feel very free as a muslim woman...ALHAMDULLILAH !!!

    உங்கள் பதிவு மிக அருமையானது மாஷா'அல்லாஹ் ...
    மீதும் தொடருகள்...இன்ஷா'அல்லாஹ் ...


    உங்கள் சகோதரி,
    எம்.ஷமீனா

    ReplyDelete
  15. பகிர்வுக்கு நன்றி சகோதரி... இஸ்லாத்தில் பெண்ணுரிமை என்றால் புர்காவுக்குள் அடங்கிவிடும் இன்றைய சூழலில் புதிய விடயங்களை முன்வைத்திருக்கிறீர்கள். தொடருங்கள், பல விடயங்களையும் அறிந்துகொள்வோம்.

    ReplyDelete
  16. ஆமினா: நல்ல முயற்சி தொடருங்கள். "விதவைப்பெண்ணாக இருந்தாலும் அவளது சம்மதம் பெறவேண்டும்" இன்றைய பெரும்பாலானவர்கள் செய்யும் தவறு சம்மதம் கேட்காமல் செய்வதுதான்.

    ReplyDelete
  17. இஸ்லாம்-பலவிடயங்களை அறிந்து கொண்டேன் நன்றி சகோ

    ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. ஈத் முபாரக். இந்தபதிவு படிச்சதும் உடனே பதில் எழுத ஆர்வம்தான். மனதில் உள்ளதெல்லாம் எழுத்தில் வந்துடுமே. அதனால வேனாம்னு விட்டுட்டேன்.

    ReplyDelete
  19. இனிய காலை வணக்கம் அக்கா,
    நலமா?
    உண்மையிலே ஆச்சரியமாக இருக்கிறது.

    வாழ்வியலைப் பற்றி அன்றைய காலத்திலே இஸ்லாம் புதிய தோர் பாதையில் செல்வதற்கேற்ற வகையிலும், சமூகத்தில் நிலவும் மூட நம்பிகைகளுக்கு எதிரான விடயத்திலும் கருத்துக்களைச் சொல்லியிருக்கிறது.

    பகிர்விற்கு நன்றி அக்கா.

    ReplyDelete
  20. இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் உலகளாவிய அனைத்து முஸ்லீம் சமுதாய‌த்திலும் தொடர்ந்த தொடரும் உண்மை நிகழ்வுகளை சித்தரிக்கும் ஆழமான அழகிய முழு திரைகதையும் அடங்கிய விடியோ கீழுள்ள சுட்டியை சொடுக்கி காணுங்கள்.



    **** ஆதாமின்டே மகன் அபு *****



    .

    ReplyDelete
  21. ஈகைத்திருநாளுக்கேற்ற கருத்தாழமிக்க பதிவிற்கு நன்றி சகோ.

    ReplyDelete
  22. ஈகைத்திருநாளுக்கேற்ற கருத்தாழமிக்க பதிவிற்கு நன்றி சகோ.

    ReplyDelete
  23. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

    ஈத் முபாரக்....

    இன்று என் வலையில் ..


    http://tamilyaz.blogspot.com/2011/11/dirty-picture-first-on-net.html

    ReplyDelete
  24. அப்போதே நல்ல எண்ணங்கள். நன்றி சகோ.

    ReplyDelete
  25. இது தேவையான ஒன்றா? கலாச்சாரத்தை கட்டி காப்பாத்துறோம் என்ற பேரில் பெண்களை இழிவுபடுத்துவதா?
    ///நியாமான வினா ஆமினா.நல்ல விஷயங்களை பகிர்ந்துள்ளீர்கள்.தொடருங்கள்!

    ReplyDelete
  26. எத்தனை விதமான வாழ்வியல் பழக்கவழக்கங்கள்.

    ஈத் முபாரக் வாழ்த்துகள் தோழி !

    ReplyDelete
  27. அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரி, முஸ்லிம்கள் தெரியாமல் செய்யும் மூடநம்பிக்கைதான் இஸ்லாம் என்று மாற்றுமத சகோதரர்கள் பலரும் நினைகிறார்கள். அதைபற்றியும் கொஞ்சம் எழுதவும். ஈத் முபாரக்

    வணக்கம் ஆமீனா நானும் சகோதரர் சொல்வது போல் எங்களைப்போன்றவர்கள் இதுதான் இஸ்லாம் என்று தவராக நினைப்பதை உங்களை போன்றவர்களால் உங்களைப்போன்றவர்களால் மாற்ற முடியும்..தொடருங்கள்

    ReplyDelete
  28. பெருநாள் சிறப்பாக கொண்டாடியிருப்பீர்கள்.தொடர்ந்து எழுதுங்க,வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  29. அஸ்ஸலாமு அலைக்கும்

    மாஷா அல்லாஹ்...அருமையான பதிவு.தொடருங்கள்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  30. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!

    அருமையான எழுதியுள்ளீர்கள். மேலும் தொடருங்கள்.

    ReplyDelete
  31. தலை வணங்குகிறேன்.
    உண்மையான இஸ்லாத்துக்கும் இஸ்லாமியர்களுக்கும்,

    ReplyDelete
  32. மாஷா அல்லாஹ்....
    எத்தனைபேரை இந்தப்பதிவு தட்டி எழுப்பியிருக்கும்.....

    அருமை ஆமினா...
    வாழ்த்துக்கள்....

    ஈத் முபாரக்.....

    ReplyDelete
  33. 11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  34. வ அலைக்கும் சலாம் வரஹ்....

    ReplyDelete
  35. மாஷா அல்லாஹ்..அருமையான பதிப்பு தொடரட்டும்

    ReplyDelete
  36. மாஷா அல்லாஹ்....அருமையான பதிவு

    ReplyDelete
  37. உங்களை தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்.
    http://asiyaomar.blogspot.com/2011/11/blog-post_16.html

    ReplyDelete
  38. ஆமினா said...
    தங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரமிருக்கும் போது பார்வையிடவும்!
    http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_30.html

    வாழ்த்துக்கள்

    ----------------
    சகோ ஆமீனா அவர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்.

    நீங்கள் எப்பவோ எனது வலைப் பூவில் கருத்து இட்டதிற்க்கும் வலை சரத்தில் என்னை அறிமுகப் படுத்தியதற்கும் உங்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    அல்லாவின் கிருபையால் ஒரு பெரிய கம்பெனியில் சேருவதற்கு ட்ரைனிங் போவதற்கும் பரீட்சை எழுவதற்கும் கடந்த ஒன்னரை மாதங்கள் எனக்கு தேவைப் பட்டதால் எதையும் கவனிக்கவோ அல்லது பிறரின் வலைப் பூவிற்கு வரவோ இயலவில்லை.

    மனம் பொறுக்கவும்

    வஸ்ஸலாம்.

    ReplyDelete
  39. அஸ்ஸலாமு அலைக்கும் ஆமினா.... அடிக்கடி வரமுடியலைன்னாலும் உங்க பதிவுகளை நேரம் கிடைக்கும் போது சேர்த்து வைத்து வாசித்துவிடுவேன். சமையல் எக்ஸ்பிரஸுக்கும் வலைச்சர ஆசிரியப்பதவி வகித்தததுக்கும் முதல் வருடத்தை வெற்றிகரமாக கடந்ததுக்கும் பல சுவாரஸ்யமான பதிவுகளைப் பகிர்ந்ததுக்கும் (ஷூ... அப்பா) நன்றி மற்றும் வாழ்த்துக்கள்...

    பரமக்குடி கலவரத்தின் போது எங்களுக்காக செய்தி தொடர்பாளராக செய்திகளை சேகரித்து தந்ததுக்கும் நன்றி. ஆமா நீங்க தமிழ் நாட்டிலதான் இருக்கீங்களா? முன்பு ஏதோ வட மாநிலத்து பேர் அடிபட்டதா ஞாபகம்?!

    இந்த பதிவைக் கண்டிப்பாகத் தொடருங்கள.

    ReplyDelete
  40. என் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதை இப்ப தான் பார்த்தேன் ஆமினா. ரொம்ப நன்றி ஆமினா. வித்தியாசமான முறையில் பலரை அறிமுகப்படுத்திய விதம் சிறப்பாகயிருந்தது.

    ReplyDelete
  41. மிக அருமையான முறையில் எடுத்துச்சொல்லியிருக்கிறீர்கள் சகோதரி.

    இதேபோன்று தெளிவாய் விளக்கங்கள் கொடுக்க கொடுக்க இஸ்லாத்தின்மேல் பிறமக்களுக்கு இருக்கும் அச்சத்தையும் அதனுள் இருக்கும் நல்லது கெட்டதுகளையும் உணர்த்த முன்வருது மிகவும் நல்லது. இன்ஷா அல்லாஹ் இறைவன் அதற்கான நற்கூலிய வழங்குவான்..

    ReplyDelete
  42. அக்கா இஸ்லாம் மார்க்கத்தின் சில கருத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்..

    ஒரு இடத்தில் உன் எதிரியின் பிணம் வந்தாலும் அதற்கு மரியாதை செய் என்று வருமே... அது சின்னனில் படித்தது ஆனால் மனதில் நிற்கிறது..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution

    ReplyDelete
  43. From:
    Date: Wed, Nov 23, 2011 at 10:28 AM
    Subject: E-Mail To Dr.Kalam
    To: glomoinc@gmail.com


    Name :Vinoth Kumar.M
    From :glomoinc@gmail.com
    To :apj@abdulkalam.com
    Date :23-Nov-2011
    Message :Respected Sir, I would like to know about ur view on the following articles. http://tinyurl.com/cv6nh25 http://tinyurl.com/c54roz6 http://anubavajothidam.com/automic-power/ As i am bleongs to tamil nadu and my wife from Ramanathapuram, We really feel proud about u. But now a days we feel you are acting as a agent for this cheating govt and atomic power companies. You are well known figure, given several lectures in schools, many of the people believes you( but i am suspecting you) i can understand that power, money and enjoyment of power can change any person, another chance is even if you want to be simple then also if govt want to use your fame for them, then they can threaten you. ( this is not the case if you like to join hands with govt) very simply with the petrol price we can know this cheating govt runs for whom. you know in and out about the so called Indian govt. life is one time. you already in 60s no family, only persons like you can talk the truth. speak it out .. i hope you will do it... today is your day... regards Vinoth Kumar.M +919003650160

    ஆமினா சொன்னது…

    //ஆளு வச்சு புக் போடுறது, டிவி ல பேட்டி கொடுக்கிறது//

    பலரால் கொண்டாடப்பட்ட மனிதர்........................

    :-(

    அவரின் பல நாள் சாதனைகளை ஒரே அறிக்கைக்காக இப்படி கேவலப்படுத்துவது வேதனை அளிக்கிறது

    ஒருவேளை கூடங்குளத்தில் அணு உலைகள் பாதுகாப்பானதாக இல்லைன்னு சொல்லியிருந்தா எல்லாரும் ஆஹா....ஓஹோன்னு தூக்கி வச்சு கொண்டாடியிருப்பாங்க இல்லையா?

    வேதனை அளிக்கிறது இது போன்ற பதிவுகளை படித்து! எல்லோருக்கும் இருக்கும் வேதனை தான்.... கூடங்குளம் மூடப்பட வேண்டும் என்பது! ஆனால் அதுக்காக இப்படியா? :-(

    சாரி சகோ

    வருத்தப்படுகிறேன் உங்களின் இப்படியொரு பதிவுக்கு!
    Wednesday, November 09, 2011 4:36:00 AM

    ReplyDelete
  44. வணக்கம் அமீனா...
    உங்க பதிவு பாத்தேன்.
    //இஸ்லாமிய ஆண் பெண்ணை திருமணம் செய்ய விரும்பினால் அப்பெண்ணிற்கு குறிப்பிட்ட தொகை (மஹர்) கொடுக்க வேண்டும்//

    இந்து மதத்துல இருக்கும் 'பைசாவும் குடுத்து பொண்ணையும் குடுக்கற' கீழ்த்தனமான ஒரு சடங்கோட இது எப்படி உயர்ந்ததுனு புரியலியே.
    இது, ஒரு பொருள சந்தைல பணம் குடுத்து வாங்கறா மாதிரிதான இருக்கு. இது இன்னமும் ஆபத்தானது. ஒரு கரடி பொம்மை வாங்கறோம். அதுக்கு கலர் பென்சிலால மீசை வரையறோம், சட்டை வரைஞ்சி விடறோம். ஏன் இப்படி நாசம் பண்றனு யாராவது கேட்டா....நான் பைசா குடுத்து வாங்கின பொம்மை...நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன்...கேக்க நீ யாருன்னு சொல்லுவோம்னு தான் நெனைக்கறேன்.
    இங்க பொம்மை மாதிரி, அந்த திருமணம் செஞ்சிக்குற ஆண்...அந்த பொண்ண வெலைக்கு வாங்கறதாத்தான ஆர்த்தம்??

    //பாத்தீங்களா? இஸ்லாத்தில் பெண்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமையை?//
    இத படிக்கும் போது எனக்கு நினைவுக்கு வர்றது...
    சிறை கண்காணிப்பாளர் ஒருத்தர் ஒரு நேர்க்காணல் போது, "கைதிகளுக்கு, வாரத்துல ரெண்டு தடவை அவங்க சொந்தகாரங்கள பாக்க 'உரிமை' வழங்கறோம்"னு சொன்னதுதான்.
    யாரோ நமக்கு உரிமை 'கொடுக்கறாங்க'னா அவங்க நம்ம அடிமை படுத்தி வச்சிருக்காங்கன்னு தான பொருள் படுது??

    ReplyDelete
  45. //இந்து மதத்துல இருக்கும் //'பைசாவும் குடுத்து பொண்ணையும் குடுக்கற' கீழ்த்தனமான ஒரு சடங்கோட இது எப்படி உயர்ந்ததுனு புரியலியே.//

    இந்து மதம் என ஏன் குறிப்பிட்டு சொல்றீங்கன்னு தெரியல. எல்லா மதத்துலையும் இம்முறை இருக்கு. சில இஸ்லாமியர்கள் கூட இந்த கேவலமான செயலை செய்கிறார்கள். சரி விஷயத்துக்கு வரலாம்.

    இது எப்படி உயர்ந்தது?
    மற்ற மதத்தில் உள்ளதை போல் சாகும் வரை பணம் பரிமாற்றம் இல்லை.

    சீர் வரிசை இல்லை.

    குழந்தை பிறந்தால் தாய்மாமன் கொலுசு, செயின் மோதிரம் போடுறது, பூப்பெய்தால் சம்மந்தம் பண்ண வீட்டிலிருந்து தாய்மாமன் சீர் கேட்பது இல்லை.

    மறுவீட்டு சீர் இல்லை. தலை என ஆரம்பிக்கும் பண்டிகைகளுக்கு பெண்வீடு பணமும் துணியும் கொடுக்க தேவையில்லை.

    பெண் கற்பமானால் சீர் கொடுக்குறது, வளைகாப்புக்கு 11 வகை சோறு கட்டி மாப்பிள்ளை வீட்டில் கொடுப்பதும் "எங்க பொண்ண பிரசவத்துக்கு எங்க வீட்டுக்கு கூடிட்டு போறேனுங்க"ன்னு கேட்டு 5/7/9/11/13/15 ன்னு தாம்பூலத்தட்டில் ஒரு தட்டில் பத்தாயிரமோ அதற்கு மேலோ கொடுக்க தேவையில்லை.

    இவையெல்லாமும் சேர்ந்து "இருக்கு இருக்கு"ன்னு போட்டா அது தானே இன்று பரவியிருக்கும் கல்யாண முறையின் உடன்படிக்கை??? இதெல்லாம் "இல்ல. தேவையில்ல, கண்டிப்பா கூடாது" என சொல்வது இஸ்லாத்தில். அது தான் கீழ்த்தனமான எல்லா சடங்கையும் அடக்கிய திருமண முறைக்கும் பெண்ணிடம் மஹர் கொடுத்து இஸ்லாமிய முறைப்படியான ஒப்பந்த திருமணம் எப்படி உயர்ந்தது என்பது :-)

    //இது இன்னமும் ஆபத்தானது//
    இந்த வரியை மறுமுறை பரிசீலிக்க முடியுமா? எப்படி ஆணுக்கு பெண் கொடுப்பதை விட பெண்ணுக்கு ஆண் கொடுப்பது "இது இன்னும்" கொடியதுன்னு சொல்ல முடியும்? இந்த கூற்று படி பார்த்தா ஆணுக்கு பெண் கொடுப்பது லேசான ஆபத்து. ஆனா பெண்ணுக்கு ஆண் கொடுப்பது ரொம்ப பெரிய ஆபத்துன்னு சொல்ற மாதிரி இருக்கு. அப்படி தான் நினைத்து நீங்கள் சொன்னால் அதற்கான விளக்கத்தை முன் வைங்க. அதையும் விவாதிக்கலாம் :-)

    //இங்க பொம்மை மாதிரி, அந்த திருமணம் செஞ்சிக்குற ஆண்...அந்த பொண்ண வெலைக்கு வாங்கறதாத்தான ஆர்த்தம்??//
    இன்றைய திருமண முறை - கரடி பொம்மையை குத்தகைக்கு எடுத்துக்கொள்வது. கரடி பொம்மையாகிய ஆணை ஒரு குறிப்பிட்ட தொகைக்கு சந்தையில் குத்தகை பணம் கொடுத்து எடுத்து, அந்த கரடி பொம்மைக்கும் குத்தகைக்கு எடுத்தவருக்கும் பந்தம் தொடரும் வரை பணம் செலுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.

    இஸ்லாமிய திருமண முறை- ஆண் பெண்ணை திருமணம் செய்து பின்னர் சில காரணங்களுக்காக ஒதுக்கி வைத்தால் அதன் மூலம் அவள் நடுதெருவுக்கோ அல்லது ஆதரவில்லாமல் நிற்பதற்கோ வழியில்லாமல் செய்து கொடுப்பது தான் மஹர்.

    விபச்சாரியின் வாழ்க்கை ஆரம்பிப்பதே கணவனால் கைவிடப்பட்டு/ குடும்பத்தால் ஆதரவு கிடைக்காமல்/ வேறு வழியில்லாமல் கடைசி முடிவு தான் விபச்சாரி வேலை இல்லையா? ஒன்னு சாகணும், சாக முடியலன்னா விபச்சாரியா இருக்கணும்.

    கைல பணம் இருந்தா சுயமாக தொழில் செய்யலாம். எல்லாத்தையும் விட தன் கையில் பணமோ பொருளோ இருப்பது எவ்வளவு பாதுகாப்பானது? விட்டுட்டு போனவன் புதுமாப்பிள்ளைன்னா விடபட்டவள் இங்கே அவலைப்பெண் இல்லை. அவளுக்கும் புதிதாய் ஒரு வாழ்க்கை உண்டு. அதற்கு ஆதாரம் மஹர் தொகை/பொருள்.

    //யாரோ நமக்கு உரிமை 'கொடுக்கறாங்க'னா அவங்க நம்ம அடிமை படுத்தி வச்சிருக்காங்கன்னு தான பொருள் படுது?? //
    சுதந்திர இந்தியாவில் தானே நாம் வசிக்கிறோம்? அப்ப எதுக்கு அரசியலமைப்பை பின்பற்றி நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளணும்? அப்ப ஒரு அரசு நம் மீது சட்டம் விதிக்கிறதென்றால் நாம் அடிமைநாட்டில் தான் வசிக்கிறோமா? அரசியலமைப்பு சட்டம் நமக்கு உரிமை வழங்கியுள்ளது என்றால் நாம் அடிமைகளா? இத்தகைய கடமைகள் குடிமகனுக்கு உண்டு என்று இந்தியச்சட்டம் சொன்னால் நம்ம மேல கடமை விதிப்பது சர்வாதிகார இந்தியாவா?

    கொடுக்கப்பட்டது உரிமை என்பது அடிமை என்றால், போராட்டம் நடத்திய பிறகு கிடைக்கும் 33 சதவீத இட ஒதுக்கீடு பிச்சை தானே? இல்லை அப்படியே இட ஒதுக்கீடு கிடைத்தாலும் அதுவும் "கொடுக்கப்பட்ட உரிமை" அடிமை ஆக்கும் முறை தானே? 33 சதவீதம் கிடைக்கும் வரையும் அடிமை தான். கெடைச்சதுக்கு பிறகும் அடிமைக்கு போட்ட பிச்சைன்னு எடுத்துப்பீங்களா? ஆணுக்கு எப்படி உரிமை உண்டோ அதே போல் பெண்களுக்கும் உரிமை உண்டு என கத்தியின்றி ரத்தமின்றி வேதனையின்றி போராட்டங்களும் புரட்சிகளும் நடத்தப்படாமல் ஆரம்ப காலத்திலேயே விதிக்கப்பட்டு விட்டால் அது எப்படி அடிமைத்தனமா இருக்க முடியும்?

    எல்லாத்தையும் விட உரிமை கொடுத்தவன் என் இறைவன். இறைவனுக்கு நான் அடிமை. அவன் எனக்கு கொடுக்கும் உரிமையும் சலுகையும் என்னை அவன் பக்கம் அடிமைப்படுத்துவதில் என்ன தவறு இருக்கு? கடலில் சென்று வீணாய் கலக்கும் நீர் அணைகட்டி கட்டுபடுத்தினால் லாபம் யாருக்கு :-)

    ReplyDelete
  46. சகோ.அனு,

    சகோ.ஆமினாவின் தங்களுக்கான பதில் மிக அருமையாகவும் தெளிவாகவும் கருத்துச்செரிவோடும் இருக்கிறது.

    மேலும்,

    //அந்த திருமணம் செஞ்சிக்குற ஆண்...அந்த பொண்ண வெலைக்கு வாங்கறதாத்தான ஆர்த்தம்??//---?!

    எனக்கொரு சந்தேகம்.

    ஒரு பொருளை அல்லது 'உங்கள் பாஷையில்' ஒரு கரடி பொம்மையை கடையில் நீங்கள் வாங்கினால், அந்த பொருளிடம்(கரடி பொம்மையிடம்)தான் பணத்தை கொடுப்பீர்களா..?

    அல்லது

    அந்த பொருளுக்குரியவரிடம் (கடைக்காரரிடம்) பணத்தை கொடுப்பீர்களா..?

    அந்த கரடி பொம்மையிடமே பணத்தை கொடுத்தால் அதற்கு என்ன அர்த்தம்..?

    அப்புறம்,

    அந்த சிறை அதிகாரிக்கு அரசாங்கம் தந்த உரிமைகள்/கட்டுப்பாடுகள் பற்றி தங்கள் கருத்து..? அரசுக்கு சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடப்பது அடிமைத்தனமா..?

    சரி... எதற்கு இங்கே குற்றவாளிகளுடன் ஒப்புமை..? எனில், திருமணம் செய்வதே குற்றமா..? செய்து கொள்பவர்கள் சுதந்திரமானவர்கள் அல்லரா..? அவர்கள் குற்றவாளிகளா..?

    திருமணம் குறித்தான தங்கள் நிலை குறித்து அறிய ஆவல்.

    ReplyDelete
  47. //மற்ற மதத்தில் உள்ளதை போல் சாகும் வரை பணம் பரிமாற்றம் இல்லை.//
    அடிப்படைல பாத்தா எல்லா மதமும் ஒரு பொண்ண விலைப் பொருளாவும், திருமணத்த ஒரு வியாபாரமாவும் தான் சித்தரிச்சிருக்கு. என்ன...ஒரு மதத்துல வாங்கறவன் கொடுக்கறான், இன்னொன்னுல, விக்கறவனே கொடுக்கறான்.
    இந்த கேவலமான நிலை மாறும் வரைக்கும்,, மதங்கள்ல எந்த மதம் ஒரு பொண்ண அதிகம் கீழ்த்தனமா நடத்துதுன்னு வேணும்னா போட்டி வச்சு, உயர்ந்தது, தாழ்ந்ததுனு பரிசு வழங்கலாம்.
    //இந்த வரியை மறுமுறை பரிசீலிக்க முடியுமா?...அப்படி தான் நினைத்து நீங்கள் சொன்னால் அதற்கான விளக்கத்தை முன் வைங்க. அதையும் விவாதிக்கலாம் :-) //
    இதுக்கு என்ன விளக்கம் எதிர்ப்பாக்கறீங்கனு தெரியல. ஒரு பொண்ண பணம் குடுத்து வாங்கினதுக்கு அப்பறம், நல்ல துனைவியா நடத்தனும்னு நினைக்கறவன் ஒழுங்கா நடத்துவான்; ஆணாதிக்கம் மிக்க வெறியர்கள், வெலை குடுத்து வாங்கின மாதுதான இவ...கேக்கறதுக்கு யாரு இருக்கான்னு அந்த இளம்பெண்ண சீர்க்குலைப்பாங்க
    நன்னெறி படுத்தறதா சொல்லப்படற ஒரு மதமே, பெண்ணின் சீரழிவுக்கு வாய்ப்பு வழங்குதுனா...அது ஆபத்தானது இல்லாம வேற என்னவா இருக்க முடியும்?
    //இஸ்லாமிய திருமண முறை- ஆண் பெண்ணை திருமணம் செய்து பின்னர் சில காரணங்களுக்காக ஒதுக்கி வைத்தால் அதன் மூலம் அவள் நடுதெருவுக்கோ அல்லது ஆதரவில்லாமல் நிற்பதற்கோ வழியில்லாமல் செய்து கொடுப்பது தான் மஹர்.//
    மஹர் என்பதின் விளக்கம் நீங்க சொல்றதுதான்னா....அது ஆண்கள இழிவு படுத்தறா மாதிரிதான் இருக்கு. "தம்பி...நீ கல்யாணம் முடிஞ்சு கொஞ்ச நாள்ல ஊர் மேய போய்டுவ...பாவம் அந்த பொண்ணுக்கு ஏதாவது பாத்து செய்ப்பா", னு சொல்றா மாதிரி இருக்கு.
    உங்களின் இந்த விளக்கத்துக்கு, பின்னூட்டமிட்ட ஆண் வாசகர்கள் யாருமே எதிர்ப்பு இல்ல மாற்றுவிளக்கம் அளிக்காதது...ஆச்சரியமா இருக்கு.
    //விபச்சாரியின் வாழ்க்கை ஆரம்பிப்பதே கணவனால் கைவிடப்பட்டு/ குடும்பத்தால் ஆதரவு கிடைக்காமல்/ வேறு வழியில்லாமல் கடைசி முடிவு தான் விபச்சாரி வேலை இல்லையா? ஒன்னு சாகணும், சாக முடியலன்னா விபச்சாரியா இருக்கணும்.//
    "ஒரு பெண்ணானவள், ஆண் ஒருவன நம்பித்தான் இருக்கணும். அந்த ஆதரவு இல்லாத போது...தன் உடல வித்துதான் பிழைக்கணும்"னு நீங்க சொல்றது....உங்க அறியாமைய பாத்து பரிதாபப்பட வைக்குது.
    ஒன்னு மட்டும் நிச்சயம் "பெண்களுக்குனு அறிவோ, சாமர்த்தியமோ..எதுவுமே கெடையாது...பொழைக்கனுமா உடம்ப தான் விக்கனும்"னு ஒரு குறுகிய மனப்பான்மை பெண்களிடையே இருக்கும்னா....ஆண்கள் அவங்கள அடிமைபடுத்த சிறிதளவும் எத்தனிக்கவே தேவையில்லை.
    //எல்லாத்தையும் விட உரிமை கொடுத்தவன் என் இறைவன். இறைவனுக்கு நான் அடிமை.//

    "என் வாழ்க்கையின் நல்லது கெட்டதுக்கு நான் மட்டும் தான் பொறுப்பு. நல்லது நடந்தா...என் முயற்சியால கெடைச்சது; தீயது நடந்தா...நான் எங்கையோ கொளருபொடி செஞ்சுட்டேன், அடுத்தவாட்டி திருத்திக்கனும்" இத விட்டுட்டு, அல்லா/இயேசு/சிவன் விருப்பப்பட்டு குடுத்தா ஏத்துக்கறேன்னு சப்பகட்டு கட்றதுல எனக்கு உடன்பாடில்லை.
    "இறைவன், மதம்....இதெல்லாமே ஆண் வர்க்கம், பெண்கள அடக்கி ஆள உருவாக்கிய கருவிகள் தான்னு நான் சொல்றேன். அந்த இறைவனும் மதமும் தான் எனக்கு சுதந்திரம் வழங்கி இருக்குனு நீங்க சொல்றீங்க.
    அடிப்படையிலேயே இறை நம்பிக்கையாகட்டும் இல்ல பெண் விடுதலை ஆகட்டும், நம்ம கருத்துக்கள் முற்றிலும் வேறுபட்டு இருக்கும் போது, மேலும் ஒரு ஆரோக்கியமான விவாதம் சாத்தியம்னு எனக்கு தோணல

    ReplyDelete
  48. //அடிப்படைல பாத்தா எல்லா மதமும் ஒரு பொண்ண விலைப் பொருளாவும், திருமணத்த ஒரு வியாபாரமாவும் தான் சித்தரிச்சிருக்கு.//

    எல்லா மதத்துலையும்னு நீங்க சொல்றது ரொம்ப வருத்தமா இருக்கு. மதத்தை விடுங்க. மதத்திற்கு அப்பாற்பட்டு இந்த சமூகம் பெண்களுக்கு கொடுக்கும் நிலை என்ன அனு?

    திருமணத்தை வியாபாரமாக இஸ்லாம் சித்தரிக்குது என்பதற்கு ஆதாரம் தர முடியுமா??? சடங்குகள், சம்ரதாயங்கள், சீர், இத்யாதி இத்யாதி என எதுவுமே இல்லாத இடத்தில் (பணபரிமாற்றம் இல்லாத இடத்தில்) எப்படி திருமணம் வியாபாரமாக முடியும்??


    //. என்ன...ஒரு மதத்துல வாங்கறவன் கொடுக்கறான், இன்னொன்னுல, விக்கறவனே கொடுக்கறான்.//
    ஹா...ஹா...ஹா...ஹா...
    மஹர்க்கும் வரதட்சணைக்கும் உள்ள வித்தியாசத்தை எடுத்துரைத்துமா இரண்டையும் ஒன்னாக்கி பாக்குறீங்க? அதான் சகோ ஆஷிக் சொன்னாரே.... வரதட்சணை முறையில் ஆணின் பெற்றோர்க்கு பணம் கொடுக்குறாங்க. ஆனா மஹர் முறையில் பெண்ணின் பாதுகாப்பு கருதி பெண்ணிடம் தான் (பெண்ணிடம் மட்டுமே என்பது தான் கட்டாயம்) கொடுத்தாக வேண்டும். அதில் உரிமை கொண்டாட திருமணத்திற்கு பிறகு உறவாகும் கணவனுக்கு அதிகாரம் இல்லை. பெண்ணை பெற்றவர்களுக்கும் உரிமை இல்லை! ஒரு விஷயத்தை ஒப்பீடு செய்யும் முன் அதனுள் புதைந்துள்ள மறைமுக அம்சங்களையும் ஆராய்ந்து பார்த்து பிறகு வாங்குறவன் கொடுக்குறான் விக்கிறவனே கொடுக்குறான் என அடையாளப்படுத்துங்க. ஒரு வரைமுறை மற்றும் கட்டுப்பாட்டோடு கொண்டு வரும் சட்டமான மஹர்க்கும் ஏதோ குருட்டாம் போக்கில் எதுக்கு வாங்குறோம் எதுக்கு கொடுக்குறோம்னு தெரியாமலெயே வியாதியா பரவியிருக்கும் வரதட்சணைக்கும் இன்னுமா உங்களுக்கு வித்தியாசம் தெரியல????

    //இதுக்கு என்ன விளக்கம் எதிர்ப்பாக்கறீங்கனு தெரியல. //
    நான் கேட்ட கேள்விக்கும் நீங்க கீழே கொடுத்துள்ள பதிலுக்கும் சம்மந்தமே இல்லையே? நான் கேட்டது "இது இன்னும் கொடியது" என நீங்க சொன்னீங்க இல்லையா? ஆணுக்கு பெண்வீட்டார் கொடுப்பது கொடியது. பெண்ணுக்கு ஆண் கொடுப்பது இன்னும் கொடியது என்ற அர்த்தத்தில் பொதிந்துள்ள வார்த்தையில் "இன்னும்" என மிகுதியான வார்த்தை ப்ரயோகத்திற்கு என்ன காரணம்னு கேட்டேன் தோழி. சரி விடுங்க. அதற்கு உங்களின் விளக்கம்.
    //ஒரு பொண்ண பணம் குடுத்து வாங்கினதுக்கு அப்பறம், நல்ல துனைவியா நடத்தனும்னு நினைக்கறவன் ஒழுங்கா நடத்துவான்; ஆணாதிக்கம் மிக்க வெறியர்கள், வெலை குடுத்து வாங்கின மாதுதான இவ...//
    இந்த வரிய நினைத்து அழுவதா சிரிப்பதா என எனக்கு தெரியல. வரும் கோபத்தையும் அடக்க முடியவில்லை அனு. சாரி
    பெண்ணை விலைபொருளா சித்தரிக்கும் உங்களின் குறுகிய மனப்பான்மைக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
    அதெப்படிங்க? வரதட்சணை கொடுத்து வாங்குனா பத்திரமா வச்சுருப்பானா? இல்லைன்னா நடுத்தெருவுல நிப்பாட்டுவானா? அப்ப பெண்ணுக்கு எதிர்காலத்திற்கான பாதுகாப்பே இல்லாத ஒருவனுடன் தன்னை ஒப்படைப்பது தான் கேவலமான இன்றைய சமுதாயத்தில் பரவியிருக்கும் கேவலமான திருமண முறை.

    மாறாக " நான் என்ன அடிமையா? நா உனக்கு பணம் கொடுக்குறதுக்கு? நீ விட்டுட்டு போயிட்டீன்னா என்னையும் உன்னை நம்பி நா பெத்த புள்ளைக்கும் என்ன ஆதாரம்?" என முன்னெச்சரிக்கையோடு பாதுகாப்பையும் உறுதிபடுத்தும் மஹர் முறையோடு ஒரு பெண் செயல்பட்ட பிறகு எப்படி மாதுவாக இருக்க முடியும்???

    ReplyDelete
  49. //.அது ஆண்கள இழிவு படுத்தறா மாதிரிதான் இருக்கு. //
    காலங்காலமா நாம் இழிவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளோமே? பெண் இழிவு பட்டா சரியா?
    ஒருவனிடம் தன்னை ஒப்படைத்தது மட்டுமல்லாமல் சாகும் வரை அவளை நன்முறையில் பராமரிப்பதற்கு வக்கத்து போயி மாமனார் காலையே நாய் போல் சுற்றி வரும் வரதட்சணை வாங்கும் ஈன ஆண் வர்க்கத்தை விட மஹர் கொடுத்து திருமணம் செய்யும் ஆண் எந்த விதத்தில் இழிவானவன்?

    //உங்களின் இந்த விளக்கத்துக்கு, பின்னூட்டமிட்ட ஆண் வாசகர்கள் யாருமே எதிர்ப்பு இல்ல மாற்றுவிளக்கம் அளிக்காதது...ஆச்சரியமா இருக்கு.//
    வரதட்சணையின் கொடுமைகளை வெறுப்பவர்களாகவும் அல்லது அத்தகைய கொடுமைகளை தன் வீட்டில் உள்ள பெண்கள் மூலம் அனுபவித்துக்கொண்டிருக்கும் தகப்பனாகவும்/சகோதரனாகவும் இருக்கலாம். எல்லாத்தையும் விட வரதட்சணைக்கும் மஹர்க்கும் உள்ள வித்தியாசம் தெரிஞ்சிருக்கலாம். அதுனால இன்னும் யாரும் மறுப்பு தெரிவிக்கலன்னு நெனைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க? :-)


    //"ஒரு பெண்ணானவள், ஆண் ஒருவன நம்பித்தான் இருக்கணும். அந்த ஆதரவு இல்லாத போது...தன் உடல வித்துதான் பிழைக்கணும்"னு//
    வாழ்க்கைக்கு ஆதாரம் இல்லாத போது கடைசி வழியாக அவளுக்கு கண்ணில் தெரிவது மரணம். அல்லது விபச்சாரம் என தெளிவாக குறிப்பிட்டேனே? முற்போக்கு சிந்தனை கொண்ட அனுவிற்கு பெண்கள் விபச்சாரம் என்னும் இழிநிலைக்கு தள்ளப்படுவதற்கான காரணங்கள் பற்றி அறியாமையில் மூழ்கியிருக்கும் ஆமினா சொல்லி தெரியவேண்டுமா என்ன :-)

    மதத்திற்கு அப்பாற்பட்டு நீங்க யோசிச்சு பார்த்தாலும் கூட நீங்க ஒத்துகிட்டாலும் இல்லைன்னாலும் சமுதாயத்தில் பெண் ஆணை சார்ந்தே தான் இருக்கிறாள். இது கணவனாகவும் இருக்கலாம். இல்ல தகப்பன் சகோதரனாகவும் இருக்கலாம். இப்படி அவளை பாதுகாக்கும் உறவுகள் அவளை சுற்றி இல்லாத போது ஆதரவற்ற போது அவளின் யோசனை என்னவாக இருக்கும் அனு? படிப்பிருந்தா வேலைல சேரலாம். ஆனா அவளுக்கு பாதுகாப்பு இருக்குமா?

    என் அறிவை, சாமர்த்தியத்தை பயன்படுத்தி என் வீட்டிலும் சமுதாயத்திலும் "உனக்குள்ள உரிமை எனக்கும் இருக்கு" என ஆணிடம் என் உரிமை நிலைநாட்ட முடியும் அனு. ஆனா கணவன் இல்லாம நிற்கதியா நிக்கும் போது அவளின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கு என்ன இருக்கு இன்றைய திருமண முறையில் என்பதே என் கேள்வி?

    //"என் வாழ்க்கையின் நல்லது கெட்டதுக்கு நான் மட்டும் தான் பொறுப்பு. நல்லது நடந்தா...என் முயற்சியால கெடைச்சது; தீயது நடந்தா...நான் எங்கையோ கொளருபொடி செஞ்சுட்டேன், //
    அறியாமையில் மூழ்கியவன் மட்டும் தான் நல்லது கடவுளால் நடந்தது. கெட்டதும் கடவுளால் நடந்தது என சப்பைகட்டு கட்டுவான். உண்மையாய் மார்க்கத்தை கடைபிடித்தவன் எப்படி நினைப்பான் தெரியுமா? " என் முயற்சிக்கு" இறைவன் கொடுத்த பரிசு தான் நல்லது நடந்ததற்கான காரணம். தீயது நடந்தா- இப்ப போனா என்ன? இறைவன் துணை இருப்பான். what next? ன்னு போய்ட்டே இருப்பான். உங்க பாஷையிலேயே சொல்வதானால் முயற்சி திருவினையாக்கும் என்பதும் மார்க்க வாழ்வியலில் ஓர் அங்கம் தான். அதவிட்டுட்டு போலியான இறைபக்தியுள்ளவன் நல்லதுக்கு இறைவன் காரணம்னு தலைல வச்சுட்டு கொண்டாடுவதும், தீயது நடந்தா எல்லாம் அவனால தான் என இறைவனை சபிப்பதும் செய்வான். இது தான் இஸ்லாம் போதனைக்கும் மற்றவற்றிற்கும் உள்ள வித்தியாசம். ஆக உங்கள் வரியில் நீங்கள் சொன்ன உங்கள் வாழ்வியல் கொள்கையில் கடவுள் நம்பிக்கை இல்லாத அனு கடைபிடிக்கும் கொள்கைக்கும் இறைவன் இருக்கிறான் என நான் கடைபிடிக்கும் கொள்கைக்கும் உள்ள ஒரே வித்தியாசம் தான். நான் கடவுளை முன்னிறுத்துகிறேன் என்பது மட்டுமே :-)

    ReplyDelete
  50. //"இறைவன், மதம்....இதெல்லாமே ஆண் வர்க்கம், பெண்கள அடக்கி ஆள உருவாக்கிய கருவிகள் தான்னு நான் சொல்றேன். அந்த இறைவனும் மதமும் தான் எனக்கு சுதந்திரம் வழங்கி இருக்குனு நீங்க சொல்றீங்க.//

    ஓர் அரசாங்கத்துக்கு கட்டுப்படுவது அடக்கியாளும் முயற்சி என நான் நினைக்கவில்லை அனு. கட்டுப்பாடு இருக்கும் போது மட்டுமே பாதுகாப்பு உறுதிபடுத்தப்படும். போகுற போக்கில் வாழும் வாழ்க்கைக்கும் இப்படி தான் வாழ வேண்டும் என நினைப்பதற்கும் அதிகப்படியான வித்தியாசம் உள்ளது, ஆனா வட்டம் போட்டு நடத்தும் என் வாழ்க்கையில் பிரச்சனைகள் ரொம்ப ரொம்ப ரொம்ப (எத்தனை வேண்டுமானாலும் போட்டுக்கோங்க) கம்மி. அதற்கு காரணம் இறைவன் என்பதால் அவனுக்கு என் நன்றி!

    நங்கூரம் இருந்தா மட்டும் தான் கடலில் கப்பல் நிலை நிறுத்திக்கொள்வதற்கான வழி இல்லையா? அது போல் தான் இறைநம்பிக்கையும். ஒருவனை நல்வழிபடுத்த மட்டும் தான் எல்லா வேதமும். நீயாரு எனக்கு நல்ல வழி பத்தி அட்வைஸ் பண்றதுக்குன்னு கேட்பதில் எனக்கு உடன்பாடில்லை.

    //அடிப்படையிலேயே இறை நம்பிக்கையாகட்டும் இல்ல பெண் விடுதலை ஆகட்டும், நம்ம கருத்துக்கள் முற்றிலும் வேறுபட்டு இருக்கும் போது, மேலும் ஒரு ஆரோக்கியமான விவாதம் சாத்தியம்னு எனக்கு தோணல//
    இது உங்களின் கண்ணோட்டமாக இருக்கலாம். இறை நம்பிக்கையில் மட்டுமே நாம் இருவரும் வேறுபட்டுள்ளோம். பெண் விடுதலையில் இல்லை (பெண்ணின் விடுதலையை இஸ்லாத்தின் வழிமுறைக்குட்பட்டு விவாதிப்பது மட்டும் தான் வித்தியாசம்). ஆரோக்ய விவாதம் சாத்தியமில்லைன்னு நீங்க பீல் பண்ணுவதால் இதற்கு மேல் தொடர்வதும் எனக்கு உடன்பாடில்லை. மற்றபடி இதுவரை பேசியதில் ஏதேனும் உங்களை சங்கடப்படுத்தியிருந்தால் பொருத்தருளவும். பல கருத்துக்களை முன்வைத்ததற்கு நன்றி அனு. அடிக்கடி வாங்க :-)

    அன்புடன் உங்கள் தோழி
    ஆமினா

    ReplyDelete
  51. //“இன்னும் பணம் வாங்கிட்டு வா” என மறைமுகமாக பல காரியங்களில் ஈடுபட்டு தன் மனைவியை பிறந்த வீட்டுக்கு துரத்துவதும், அவ்வாறு கிடைக்கவில்லை என்றால் பெண்களை கொடுமைப்படுத்தி சாகும் அளவுக்கு பிரச்சனையை கொண்டு வருவதும் செய்திதாள்களின் மூலமாகவும் அண்டை வீட்டிலோ நம் நெருங்கிய வட்டத்திலோ அடிக்கடி கேள்விபடும் விஷயம். //

    வரதட்ச​ணை ​கொடு​மை என்ற ​பெயரில் பல கட்டுக்க​தைகள் பு​னையபlட்பட்டு பல குடும்பங்கள் சீரலிக்கப்படுகன்றது..

    ஒய்விருந்தால் இந்த வ​லைபூ​வை பார்கவும்

    http://ipc498a-victim.blogspot.com

    ReplyDelete
  52. வலைச்சரத்தில் இன்று இந்தப் பதிவினை அறிமுகம் செய்துள்ளேன். நேரமிருப்பின் வந்து பாருங்கள். தங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
    http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_19.html

    ReplyDelete
  53. சகோதர சகோதரிகளே.. அஸ்ஸலாமு அழைக்கும் .. திருமணத்திற்கு முன் காதல் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது. இந்த காலகட்டத்துடன் ஒப்பிட்டு விலகவும்..
    இப்போ இந்த விளக்கம் எனக்கு கண்டிப்பா தேவை படுகிறது. உதவுங்கள் .. please sent to thariqbsc@gmail.com

    ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)