கொஞ்ச நாளா வலைபக்கம் வரவே முடியாத அளவுக்கு பயங்கர வேலை..... ரொம்ப பிஸி......மூச்சு விட கூட நேரம் இல்ல.......தூக்கமே இல்ல......சாப்பிட முடியல....... கண்ண கட்டி காட்டுல விட்ட மாதிரி இருந்துச்சு........... தலைய பிச்சுக்கணும் போல இருந்தது.......அடுத்த நிமிஷம் என்ன நடக்க போகுதுன்னு நெனச்சு ஒரே கவல........
இப்படிலாம் சொல்ல ஆசை தான்...


ஆனா இப்படிலாம் சொன்னா என் சகோ/நண்பன் ஆஷிக் கம்பெடுத்துட்டு வந்துடுவான். ஏன்னா மேலே சொன்ன பயங்கர வேலை..... ரொம்ப பிஸி......மூச்சு விட கூட நேரம் இல்ல........ இதெல்லாம் என் கம்யூட்டருக்கும் அவனுக்கும் இடையில் நடந்த 1 வார போராட்டம். என் சிஸ்ட்டத்துல வைரஸ் சொல்லாம கொள்ளாம புகுந்தது என்னைய வெரட்டிவிட்டுடுச்சு :( 

மால்வேர், ஸ்பைவேர், அவிரா,AVG,அந்த ஸ்கேன், இந்த ஸ்கேன்னு என்னன்னமோ பண்ணி அழையா விருந்தாளியை பத்திவுட்டுட்டு நிம்மதியா உக்காந்துருக்கேன். நண்பேன்டா..................

இனி நிம்மதியா உக்காரலாம்னு பாத்தா மே மாச தேர்வுன்னு இப்பவே கைல புக் திணிச்சுட்டாங்க........ :( :( :(

  அதுனால எல்லாத்துக்கும் இதன் மூலம் அறிவிக்கிறது என்னான்னா????????
புக் திறந்து வச்சு சும்மா வேடிக்கை பார்த்தாவது நம்ம படிச்சோம்னு எல்லாரும் நம்பட்டும், அப்ப தான் தப்பி தவறி பரிச்சைல தவறி போனா கூட குடும்பமே நமக்கு சப்போர்ட் பண்ணி கொஸ்டீன் பேப்பர குடுத்த நல்லவங்கள ஓவரா புகழும்(??!!), அர்ச்சனை கொடுக்கும். ஷாம்க்கு அட்மிஷன்க்கு இன்னைக்கு க்யூல நின்னா தான் 2 மாசத்துலவாவது ஸ்கூல் கேட்ல  தல காட்ட முடியுமாம். இனி பதிவிட நேரம் இருக்காது. யாருடைய வலைக்கும் வர முடியாது, வந்தாலும் படிச்சாலும் கமெண்ட் போட முடியுமான்னு தெரியல... சோ கோவிச்சுக்காதீங்க மக்கா..... இப்ப போய்ட்டு  திரும்பி வரும் போது என்னைய யாருன்னு கேட்டா அழுதுடுவேன். மறக்காம ஞாபகம் வச்சுக்கோங்க....  (ஓவர் சென்டிமென்ட் ஒடம்புக்கு ஆகாது;)

அப்பப்ப வேணும்னா ஹாய் சொல்லிட்டு போறேன். எதாவது புதுசா சமைச்சா உங்களோடு சேர்ந்து சாப்பிடுறேன்...........

விரைவில் வருவேன் என்ற நம்பிக்கையில்
உங்கள் சகோதரி
ஆமினா


, ,

45 comments:

  1. >>> அக்கா, நீங்க வேலைய முடிச்சிட்டு வாங்க! உங்கள மறக்க மாட்டோம்.

    ReplyDelete
  2. //"அஸ்தமனமெல்லாம் நிரந்தறம் அல்ல...//

    >>> தலைப்பு எழுதும்போது அவசரத்துல "நிரந்தரம்" எனும் வார்த்தைய நிரந்தறம் அப்டின்னு போட்டுட்டு எஸ்கேப் ஆகிட்டீங்களா... ஹலோ..ஹலோ...ஆளையே காணும்!!

    ReplyDelete
  3. தொட‌ர்ந்து வ‌ர‌மாட்டேன்னு கூட‌ சுவையாத்தான் சொல்லியிருக்கீங்க‌ :)

    குட்டி சுவ‌ர்க்க‌த்தை ரொம்ப‌ நாள் பூட்டிவெச்சுடாதீங்க‌... சீக்கிர‌மா மறுதிற‌ப்பு விழா அழைப்பித‌ழோடு திரும்பிவாங்க‌... :)

    ReplyDelete
  4. hi how are you. this is puthiyathenral from sinthikkavum.net. your blog is good. please go to vist my website is www.sinthikkavum.net thank you. we can make friends. and say some comments to my site. thank you. nice to meet you. bye.

    ReplyDelete
  5. சலாம் ஆமினா! ஃப்ரீயா இருக்கும்போது வந்து தலைக்காட்டுங்க. அறிவிச்சுட்டு போறதுக்கு ஒரு தேங்க்ஸ்! :)

    ReplyDelete
  6. என்னதான் வேலை இருந்தாலும், வலையுலகைவிட்டு ( தற்காலிகமாகவேனும் ) போவது நல்லதல்ல!

    ReplyDelete
  7. சரி நான் அப்புறம் கேட்கலை இப்பவே கேட்கறேன் நீங்க யாரு ???

    ReplyDelete
  8. ஆமினா உங்கள் பணியை நல்ல படி முடித்து விரைவில் திரும்பி வலைச்சேவை புரிய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. தலைப்பு சூப்பர்... போய்ட்டு வாங்க.. வரவரைக்கும் நான் இங்க இருந்தா கண்டிப்பா ஞாபகம் வச்சிருப்பன்..(ஐ திங் சோ.!!)

    ReplyDelete
  10. //எதாவது புதுசா சமைச்சா உங்களோடு சேர்ந்து சாப்பிடுறேன்...........
    //

    யாரு சமைச்சா?? :))

    ReplyDelete
  11. தலைப்புல ரெண்டாவது றவுக்கு பதிலா ‘ர;வே போடுங்க.

    ஆனாலும் இந்த அலும்பலுக்கு இப்படி தலைப்பெல்லாம் ஓவர். கலைஞர் பார்த்தா ....வாணாம்...அழுதிருவார்.. :))

    ReplyDelete
  12. ஸலாம் சகோ..

    மேக்கால வெதச்சா கெழக்கால மொளைக்குமா??அதெப்புடி..எங்க விதைக்கிறோமோ..அங்கதான முளைக்கனும்..

    ம்ம்...நல்லா படிங்க சகொ,அரியர் வச்சுடீஙன்னா..நாளைக்கு ஷாம் கேப்பான்..ஏம்மா நீங்களே பாஸாகல,,,என்னையமட்டும் பாஸ் பண்ண சொல்லி படுத்துரீங்களேன்னு..ம்ம்..

    இந்த அவமானம் தேவையா???ம்ம்ஹும்..

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  13. ரொம்ப நாள் கழிச்சு உங்களைப் பார்த்ததில் (?) ரொம்ப சந்தோஷம்... நான் அடிக்கடி உங்கள் ப்ளாக் வந்தும் புதிய பதிவுகள் இல்லாததால் திரும்பிவிடுவேன்... இத்துணூன்டு வைரஸ் வந்து இப்படி நம்மளை பிரிச்சுடுச்சே :(... உங்களால ப்ளாக் பக்கம் வராம இருக்க முடியாது...;) பரீட்சைக்கு இன்னும் மூஊஊஊஊணு மாசம் இருக்குல்ல.... அதனால அப்புறம் படிச்சுக்கலாம்...;)... என்னத்த எப்படி படிச்சாலும் நீங்க பாஸ்னு உங்க தலையில எழுதிட்டான் இறைவன்...அதனால கவலைப்படாம இருங்க... ஆமா...என்ன படிக்கிறீங்க...டாக்குடருக்கா???!!;)))

    மகனுக்கு விரும்பிய பள்ளியில் அனுமதி கிடைக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. //விரைவில் வருவேன் என்ற நம்பிக்கையில்//

    போயிட்டு சீக்கிரமா வந்துருங்க......

    ReplyDelete
  15. மே மாத தேர்வுக்கு படிக்க போறீகளா.

    அவ்வ் வீட்டுல இத சொன்னா என்னையெல்லாம் படிக்கிற புள்ளையானு கேப்பாங்க.

    தேர்வு நன்றாக எழுதுங்கள். உங்கள் வருகைக்கு காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  16. கலகல்லா ந்னு சொன்னீஙக

    ReplyDelete
  17. ம்ம் வாங்க எல்லோரும் இங்கு தான் இருப்போம்
    லீவு முடிந்து வந்து என்ன மறந்துடாதீஙக்

    ReplyDelete
  18. ஏனுங்க...நீங்க ரொம்ப பில்டாப் விட்டுட்டு போறியளே !

    என்னமோ நக்கீரன் வார இதழின் பொறுப்பு ஆசிரியர் மாதிரியும், நீங்கள் போறதுனாலே இயந்திரம் இயங்காமல் நின்னு போகிற மாதிரியும் ரொம்ப அழுத்துக்கிட்டு போரியலேனு.......கேக்கனும்தான் ஆசைதான்.

    ஆனால் உங்கள் சகோ ஆசிக் கம்பை எடுத்துக் கொண்டு என்னை தேடி வந்திடக் கூடாது பாருங்கள் அதுனாலே அப்படீல்லாம் கேட்க்க மாட்டேன்.

    முதலில் உங்களின் அன்பு செல்லத்திற்கு படிப்பு வசதியை ஏற்ப்படுத்தி கொடுத்து விட்டு பிறகு மெதுவா வந்து கதையை சொல்லுங்கள்.

    நம்ம என்ன பெரிய முதலா போட்டு பத்திரிகை நடத்துறோம் ? (ஹா ..ஹா ..ஹ )

    நல்லபடியாக போயிட்டு வாங்கள் சகோதரி .

    ReplyDelete
  19. pass பண்ண வாழ்த்துகள்..

    சீக்கிரம் திரும்பி வாங்க..

    ReplyDelete
  20. //விரைவில் வருவேன் என்ற நம்பிக்கையில்
    உங்கள் சகோதரி
    ஆமினா//

    வெற்றிகரமாக முடித்துவிட்டு வாருங்கள் சகோ... நாங்கள் எப்போதும் இணைந்திருப்போம்..

    ReplyDelete
  21. மூச்சு விட கூட நேரம் இல்ல.......தூக்கமே இல்ல.//

    என்ன வேணும்னாலும் பண்ணுங்க ஆனா மூச்சுவிட மறக்காதீங்க. மறந்தீங்கன்ன நாங்க அழுதிருவோம் !!!!!.

    ReplyDelete
  22. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  23. என்ன சகோதரி ரொம்ப கவலையா இருக்கீங்க, இது நிலையற்ற உலகம். அப்படி இருக்க ப்ளாக் மட்டும் நிரந்தரமா என்ன ,கூகிள் என்னக்கி எல்லாருக்கும் ஆப்பு வைக்க போறாங்களோ, யாருக்கு தெரியும்.

    ReplyDelete
  24. போயும் போயும் அரியர்ஸ்க்கெல்லாமா இந்த பில்டப்பூ.....ஃபூ... :))

    ReplyDelete
  25. ஆமி வெற்றியுடன் சீக்கிரமே வாங்க. பையன் அட்மிஷனுக்கு ஆல் த பெஸ்ட்.

    ReplyDelete
  26. >>> சாரி, ஒன்ஸ் மோர்! மேலே படத்துல இருக்குற "நிரந்தறம்" நிரந்தரமா இருக்கே. "நிரந்தரம்" னு மாத்திடுங்க.. (எதுக்கு பல்லை கடிக்கிறீங்க...சொன்னது தப்பா?? He..He..)

    ReplyDelete
  27. சகோ போயிட்டு சீக்கிரமா வந்துருங்க.....

    ReplyDelete
  28. //எந்திரன் ல ஐஸ் போன மாதிரி போங்க ..நான் இங்கிருந்தே பதில் சொல்றேன் பரிட்சையில நீங்க பாஸ் :-)) //

    ஜெய்லானி பாய், அதுக்கு ஆமினா அவங்களாவே ஃபெயிலாயிக்கலாம்... ஹ ஹ் ஹா...

    ReplyDelete
  29. ஆமினா...மெய்யாலுமே படிச்சிட்டு இருக்கீங்களா?? சரி இப்ப பாக்கலாம்.

    1. இந்த கமெண்ட்டை பப்லிஷ் பண்ணினா நீங்க படிக்காம வலையுலகத்தில சுத்திட்டிருக்கீங்கன்னு அர்த்தம்.

    2. இந்த கமெண்ட்டை பப்லிஷ் பண்ணாட்டி, பதிவர்களை மதிக்கறதில்லைன்னு அர்த்தம்.

    ஹ ஹா.. இப்ப என்ன செய்வீங்க? இப்ப என்ன செய்வீங்க??

    ReplyDelete
  30. @அன்னு
    சலாம்

    புக்ல கேட்ட கொஸ்டீன்க்கு ஆன்ஸர் தேட கூகுளார்கிட்ட வரும் போது மேல இருந்த gmail கூப்பிட்டதுனால open பண்ணி பப்ளீஸ் பண்ணேன்னு சொன்னா என்னா பன்ணுவீங்க????

    //போயும் போயும் அரியர்ஸ்க்கெல்லாமா இந்த பில்டப்பூ.....ஃபூ... :))//
    :(( அழுகுறேன்..........

    @ஜெய்லானி
    என்னை தேடி வந்து அப்பிக்கிட்ட அழையா விருந்தாளி வந்தது பேஸ்புக்ல இருந்து தான்.... அதான் வேணாம்னு டாடா காட்டிட்டேன் ;)

    ReplyDelete
  31. mmm.Nabenda....Endrum maravatha......Basith KBR

    ReplyDelete
  32. comedy kalakkippittinga aamina...nice n good luck

    ReplyDelete
  33. //புக்ல கேட்ட கொஸ்டீன்க்கு ஆன்ஸர் தேட கூகுளார்கிட்ட வரும் போது மேல இருந்த gmail கூப்பிட்டதுனால open பண்ணி பப்ளீஸ் பண்ணேன்னு சொன்னா என்னா பன்ணுவீங்க????//

    இதெல்லாம் உங்க வீட்டு கிரிக்கெட் ஹீரோ கூட நம்ப மாட்டாரு... எங்ககிட்டயேவா??

    ////போயும் போயும் அரியர்ஸ்க்கெல்லாமா இந்த பில்டப்பூ.....ஃபூ... :))//
    :(( அழுகுறேன்..........//

    ஹெ ஹெ என்ன ஆமினா.. உண்மைய சொன்ன பொசுக்கு பொசுக்குன்னு அழுகற குணம் இன்னும் விடலையா? சின்னப்பிள்ளைத்தனம்மால்லே இருக்கு???? :))

    ReplyDelete
  34. This comment has been removed by the author.

    ReplyDelete
  35. வானமே எல்லை என்பதில் வலையுலகம் மட்டும் விதிவிலக்கா என பதிவுலகிலும் சாதிக்கும் உங்களுக்கு, மேட்டுப்பாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் இனிய நூறாவது மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..

    மகளிர் எழுச்சியே... மனித குல வளர்ச்சி..

    ReplyDelete
  36. என்னாதிது, எல்லா கமெண்ட்டும் பப்லிஷாயிட்டே வருது. ஒழுங்கா படிக்கற பிள்ளை மாதிரி காணமே. ஹ்ம்ம்... பாப்பம்!!

    ஆமினா.. உங்க எக்ஸாம் எல்லாம் முடிச்சிட்டு மெதுவா வந்து இந்த தொடரை தொடருங்க :)
    http://mydeartamilnadu.blogspot.com/2011/03/blog-post_22.html

    ReplyDelete
  37. This comment has been removed by the author.

    ReplyDelete
  38. அஹமத் ஆஷிக்,
    உங்களுடைய கருத்துக்கு மகிழ்ச்சியுடன் நன்றி சொல்லிக்கொள்கிறேன். நீங்கள் குறிப்பிட்ட அந்த விளம்பரம் குறித்து எனக்கு தொடர்ந்து மெயில் வந்து கொண்டே இருந்தது...மேலும் என்னுடைய நட்பு வட்டத்தில் இருந்தே அதுகுறித்து மெயில் வந்தது. இருப்பினும் எனக்கு அதைப்பற்றிய உறுதியான ஒரு முடிவு தெரியவில்லை அதனால்தான் அதை இங்கே "Check It Out" என்று கேட்டுக்கொண்டவாறே அதை இதில் தெரிவித்தேன். அதுகுறித்த தங்களது பயனுள்ள ஆலோசனை மற்றும் கருத்துக்களை நம்முடைய சகோக்கள் இங்கே தெரிவிப்பார்கள் என ஒரு எதிர்பார்ப்புடன் வெளியிட்டுள்ளேன்.அந்த விளம்பரத்தை "Check it Out" என்று குறிப்பிட்டு வெளியிட்டதன் நோக்கமே சகோதர சகோதரிகள் அதைப்பற்றி இங்கே விவாதிப்பார்கள் என்ற நோக்கில்தான். அவ்வாறு ஒரு விவாதம் நடக்கும் பட்சத்தில் அது குறித்த தெளிவான விஷயம் எல்லாருக்கும் சென்றடைய ஒரு வாய்ப்பாக இருக்குமில்லையா? அது போலி என்றால் எல்லாரும் தப்பித்துக்கொள்வார்கள்தானே. அது நம்பகமானது மற்றும் பயனுள்ளதாக இருந்தால் எல்லாரும் பலனடைவார்கள்தானே..எனவே உங்களை மாதிரி எல்லாரும் தங்களது கருத்துக்களை தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கிறேன். என்றாலும் எல்லாரும் இதை நீக்கிவிடும்படி அறிவுறுத்தும் பட்சத்தில் உடனடியாக நீக்கவும் உள்ளேன். மீண்டும் உங்களது அறிவுரைகளுக்கு எனது மனப்பூர்வமான நன்றீயயை தெரிவித்துக்கொள்கிறேன் சகோதரர் அஹமத் ஆஷிக் அவர்களே. Thank You Very Much :-)
    உங்கள் சகோதரி
    ஆமினா

    ReplyDelete
  39. சலாம் ஆமினா.., நலமா..?
    தாங்கள் எப்போது வருவீர்கள் இப்பக்கத்தை பர்வையிடுவீர்கள் என்பதை அறியேன்.அப்படி வரும் போது..தாங்களுக்கு என் நினைவாக ஒரு சான்றிதழை வழங்கியுள்ளேன்.முடிந்த போது என் இல்லம் வந்து பெற்றுக் கொள்ளவும்.
    நன்றி.

    அன்புடன்,
    அப்சரா.

    ReplyDelete
  40. நண்பர்களே.

    தயவுசெய்து இந்த காவல்துறை அதிகாரி துவங்கி இருக்கும் இந்த தளத்தில் இணைந்து உங்கள் ஆதரவை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    http://cpolicing.blogspot.com/2011/02/blog-post_10.html

    ReplyDelete
  41. என்ன செய்வது எனக்கும்தான் பதிவெழுத நேரம் கிடைப்பது என்பது பெரும் கஸ்ரம்தான்

    ReplyDelete
  42. இது தான் மே மாசம்.. தேர்வு முடிஞ்சிடுச்சா.!? இல்ல இனிமேல் தானா.? இனி தான் னா வாழ்த்துக்கள்.. முடிஞ்சாயிடுச்சுனா பதிவ போடுங்கப்பா.!!(நான் இன்னும் மறக்கல.!!)

    ReplyDelete
  43. சீக்கிரம் வாங்கம்மா ஆமீனாம்மா..

    ReplyDelete
  44. உங்களை வலைச்சரதில் அறிமுகபடுத்தியிருக்கேன்.
    நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.

    http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_6777.html

    ReplyDelete
  45. nalla padinga, pass pannunga.

    return varum pothu sweet udan varavum.

    makka yaaru anga, cut out banner elllam ready pannu.

    ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)