போன வாரம் 3rd number மார்க்கெட் போனேன். லக்னோல வாரத்துக்கு மூனு நாள்(செவ்வாய், வியாழன், சனி ) சந்தை இருக்கும். எங்க வீட்டுல இருந்து 5 கிலோ மீட்டர் பயணம். எப்போதும் ரொம்ப சீப்பா இருக்கும் என்பதால் கஷ்ட்டப்பட்டாவது அங்கே தான் போய்  வாங்குவேன் (சிக்கனத்தில் நம்மள மிஞ்ச ஆள் ஏது?).... ஆட்டோ செலவு எல்லாம் சரியா போகும்னு சொல்றீங்களா?????? எங்க வீட்டுல இருந்து போக வெறும் 5 ரூபாய் தான். நம்மளே சவாரிக்கு வான்னு கூப்பிட்டா கூட வரமாட்டாங்க. எல்லாமே சேர் ஆட்டோ தான்...



முதலில் மார்க்கெட் உள்ளே நுழைந்ததும் உருளை தான் மாட்டுச்சு. 1 கிலோ 5 ரூபாய். ஆஹா.... முகத்துல அப்படியொரு ப்ரகாசம். 2 கிலோ வாங்கிட்டு அங்கிருந்து நகர்ந்து வெங்காய கடைக்கு போனேன். 1 கிலோ எவ்வளவுன்னு கேட்டேன். என்னமோ  சொன்னாரு. நமக்கு ஹிந்தியே நேஹி மாலும். இதுல பணம் சொன்னா என்ன தெரியும்?  நானும் எடை போட்டு வாங்கிட்டேன். பைல சில்லற இல்லாததால 100 ரூபாய் தாளை நீட்டுனேன். மிச்ச பணம் 30 கொடுத்தான். நானும் இப்ப கொடுப்பான். அப்பா கொடுப்பான்னு வெயிட்

,

தொடர்பதிவுக்கு என்னை அழைத்த அதிரடி ஹாஜாவிற்கு என் மனமார்ந்த நன்றி.


பத்து வருடங்களில் அதிகம் கவர்ந்த அல்லது பிடிச்ச (ரெண்டும் ஒன்னு தானோ) பாட்டை செலக்ட் பண்ணனுமாம். ரொம்பவே கஷ்ட்டப்பட்டு (உண்மையாவே. சொன்னா நம்பவா போறீங்க) 2001 முதல் 2010 வரை பாடல்கள் ஒவ்வொரு வருடத்திலும் எனக்கு பிடிச்ச பாடலை கொடுத்துருக்கேன்.  உன் ரசனைக்கும் என் ரசனைக்கும் ஒத்து வரலன்னு நெனைக்காதீங்க. கஷ்ட்டப்பட்டாவது என் ரசனைகளை படிச்சுட்டு போங்க ;))


2001-பார்த்தாலே பரவசம்
ஆசைபட்ட பொருள் அருகிலிருக்க அப்போது அதை கண்டுக்கொள்வதில்லை. இல்லாத போது தான் அதன் அருமை தெரியும். இந்த பாடலும் அதையே தான் சொல்லும். தன் துணையை பிரிந்த தம்பதிகள் மீண்டும் பழைய நாட்கள் மீளாதா என சொல்வது போல் அமைந்த பாடல்.

பழைய தாலியில் புதிய முடிச்சுகள் கூடாதா???? 

என்ற வரி ஏக்கத்தில் ஒரு பெண் சொல்வது போலவும் கெஞ்சுவது போலவும் இரு அர்த்ததில் தொணிக்கும். எனக்கு பிடிச்ச வரி. அதே போல் தான் ஒரு

, , ,

ரொம்ப யோசிச்சு யோசிச்சு பார்த்து கடைசியா இன்னைக்கு ஒரு மேட்டர பத்தி பேசலாம்னு ஐடியா?!! நீங்க என்ன சொல்றீங்க??? (எத பத்தி பேச போறன்னு சொல்லாமலேயே ஐடியா நல்லா இருக்கான்னு கேட்டா கெட்ட கோபம் வரும்னு சொல்றீங்க!!அதானே). நேத்து காலைல நாளைக்கு கிருஸ்மஸ் செலிப்ரேஷனுக்காக அமினாபாத்க்கு போனேன்(காரணம் கீழே). சென்னைக்கு திநகர் ரங்கநாதன் தெருன்னா லக்னோக்கு அமினாபாத். வேற எதுக்காக? பாதி துணிக்கடையே வெலைக்கு வாங்கி வீட்டை நிரப்ப தான். பீரோல தூங்கிட்டு இருந்த என் செல்போனை தூசுதட்டி என் கைல திணிச்சு எதாவது வழி தெரியமாம லக்னோ மக்களை தமிழில் வழிகேட்டு பாடாபடுத்தாம அவர கூப்பிடுறதுக்கு. நான் வேண்டாம்னு சொல்லியும் கேட்காம கேன் பேக்கில் வச்சுட்டார். செல்போன் இல்லைன்னா எங்கேயும் போகத்தேவையே இல்லைன்னு பிடிவாதம்.கடைதெரு பட்டுபுடவைலாம் வா வான்னு கூப்பிடுற மாதிரியே பீலிங். என்ன பண்ண நமக்கு செல்போனா முக்கியம்???  அதுபாட்டுக்கு ஒரு மூலைல கத்தட்டும்னு சொல்லி மனசுல நெனச்சுட்டு வண்டில ஏறிட்டேன்.

இவ்வளவு சண்டைக்கு அப்பறம் செல்போனை வேண்டா வெறுப்பா வாங்குன

,


தகவல் அறியும் உரிமை சட்டம்---கொஞ்ச நாளாவே இந்த வார்த்தையை கேட்டுட்டே இருக்கேன். அதாவது எப்பவாவது பொழுது போகலைன்னா நியூஸ் பாக்கும் போதோ, அதுவுமில்லைன்னா ஷாம் கிழிச்ச பேப்பர்ஸை குப்பையில் போடும்போதோ (டீவிக்களும், செய்தி தாள்களும் கூலிக்கு மாரடிக்க ஆரம்பித்ததில் இருந்தே இப்படி தான்) படிச்சுருப்பேன். அதுல முக்கியமான ஒன்னு குறிப்பிட்டு சொல்லணும்னா சாப்பாடு வாங்கும் போது பொட்டலத்தில் வந்த பேப்பரில் வந்தசெய்தி.  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சோனியா காந்தியின் கரண்ட் பில், டெலிபோன் பில் எவ்வளவுன்னு கேட்டுருப்பாங்க போல... அத படிச்சதும் ரொம்ப இண்ட்ரஸ்டிங்கான விஷயமா பட்டுச்சு. அதுல எவ்வளவு பில் வந்துச்சு? எவ்வளவு அரசு கட்டுச்சு? எவ்வளவு சொந்தமா அவங்க கட்டுனாங்க?ன்னு எல்லா தகவலும் இருந்தது. நீங்களும் படிச்சுருப்பீங்கன்னு நெனைக்கிறேன். அந்த தகவல்களாம் உண்மையா என்னன்னுலாம் எனக்கு சத்தியமா தெரியாது. இது ஒரு பக்கம் இருக்கட்டும்

சமீப நாட்களா அதாவது கிட்டதட்ட 2 மாசமா தமிழ்நாட்டுல ரொம்ப பாபுலரா டீவியிலும் செய்திகளிலும் ஓடிட்டு இருக்குற செய்திகளை பாக்க போனேன். (வேற எந்த செய்தி? பிரபு தேவாவுக்கும் நயந்தாராவுக்கும் கல்யாணம் ஆச்சா? வனிதாக்கும் விஜயகுமாருக்கும் நடக்குற பஞ்ஜாயாத்து எந்த லெவல்ல இருக்கு?? போன்ற நாட்டுக்கு அதி முக்கியமான விஷயங்களை பாக்கதேன் ;)) அதுல எனக்கு பிடிச்ச அதே தகவல் அறியும் உரிமை சட்டம்ங்குற வார்த்தை. இன்னைக்கு எவனுக்கு ஆப்புன்னு ஆசையா பாக்க ஓடினா அந்த சட்டத்துக்கே ஆப்பு....

invisible ல இருக்குறவங்கல கண்டுபிடிக்கணும்னு எவ்வளவோ ட்ரை பண்ணேன்... ஹூம்...ஹூம்ம்... நம்ம மூளைக்கு எட்டவே இல்ல . ஆனா நான் ஒளிஞ்சுருந்தா மட்டும் திருட்டுபயபுள்ளைக என்னைய கண்டுபிடிச்சு மூஞ்சுல இருக்குற மூக்கை வெட்டிட்டுதான் அடுத்தா வேலையே பாக்குறேங்குதுக :( சரி சும்மா விளையாடுதுகன்னு பதில் போடாம விட்டா கொலவெறியோட பதில் வந்துடும் “நீ ஒளிஞ்சுட்டு இருக்கன்னு தெரியும். ஒழுங்கா மரியாதையா வந்துடு”ன்னு :(

 வாங்க வாங்க..............

இப்ப உங்கள எல்லாரையும் நான் கடந்த காலத்துக்கு கூடிட்டு போறேன்.  அட பஸ் டிக்கெட்லாம் கேட்க மாட்டேன். கவலபடாம பின்னாடியே வாங்கோ.......... 5 வயசுல தான் என்னை நம்பி ஒரு பள்ளிகூடத்தையே ஒப்படைக்க  முடிவுபண்ணி எங்க அப்பா,அம்மா,தாத்தா,மாமா எல்லாரும்  ஆத்துல விளையாடிட்டு இருந்த என்னை தரதரன்னு இழுத்துட்டு போனாங்க. மொத நாள் நைட்டே அவங்க பேசுனத கேட்டு அப்பவே ப்ளான் பண்ணி தான் எல்லாரும் எந்திரிக்குறதுக்கு முன்னாடி எஸ்கேப் ஆகிட்டேன் என்பது வேறு கதை.

மழைக்கு கூட ஒதுங்க கூடவே கூடாதுன்னு நெனச்ச எனக்கு பேரிடியாக விழுந்தது அந்த முதல்நாள் பள்ளிகூட வாசல்படியை மிதித்தது. கொள்கை போச்சே........

,

 
 
 
உன்னை போல் இன்னும்
யாரையும் கண்டதில்லை
நீ பேசும் மழலைக்கு முன்
எதுவும் உயர்வில்லை

செல்லமே உன்னை கொஞ்சி அழைத்திடவே
பல பெயர்களை தேடினேன்

 மர்மக் கோட்டை
பாகம்-4

இந்த தடவ எந்த மேட்டரும் கிடைக்கல. சோ நேரடியா கதைக்கு வாங்க....

என்னை பாத்து தமிழ்ல பணம் கேட்டதும் பயங்கர அதிர்ச்சில Mr.Mr. னு முழிச்சுகிட்டு இருந்தேன், தமிழில் சொன்னா திருதிருன்னு முழிச்சுட்டு இருந்தேன். கொஞ்சம் துட்டு கொடுத்தா அவன் விட்டுக்கொடுப்பானு பர்ஸை எடுக்கும்போது என்னுடன் வந்த ஃப்ரெண்ட் அதற்கு உடன் படவில்லை  “அக்கா,அவங்களுக்கு பணம் மட்டும் எல்லா மொழியிலையும் கேக்க தெரியும். நீங்க சும்மா எதையும் ஒளறிகொட்டாதீங்கன்னு மண்டையில கொட்டி என் சேவிங்க்ஸ சேவ் பண்ணான். நானும் அவ்வண்ணமே பர்ஸை மூடிட்டு, ஒரு முடிவோட ‘’நீ மொதல்ல எல்லா இடங்களையும் சுத்திகாட்டு, அப்பறமா பணம் தரேன்னு சொல்லி கரார் காட்டி அந்த வழிகாட்டிய வழிக்கு கொண்டுவந்து வழிகாட்ட சொன்னேன். அவனும் ஒரு வழியா வழிக்கு வந்தான். அவன் வழியிலேயே நடந்து பூல்புலையா அடைந்தோம். இங்கேயும் இருட்டு. சூரிய கசிவு கூட இல்லை. இருட்ட பார்த்ததும் ஷாம் நகரவே மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சார்.என் கையை இறுக்க பிடிச்சுட்டு “ஆனி நான் வரல” அப்படின்னு ஆனித்தரமா சொன்னான்(எனக்கு அவுக வச்ச பேரு ஆனி). அப்பறம் ஐஸ்க்ரீம் இல்லாமலே ஒரு வழியா அவனை சமாதானப்படுத்தி  வெளிச்சமான பக்கம் கூடிட்டு வந்ததும் ஆளு உற்சாகமா  “கியாவுவா ஆனி? ஷாம் இருக்கேன்.பயப்படாத”

கிரிக்கெட் பத்தி பேசதான் போறான்னு நெனச்சுட்டீங்களா? கிட்ட தட்ட அப்படி தான். ஆனா அது இல்ல :) எனக்கும் கிரிக்கெட்க்கும் பல கிலோ மீட்டர் டிஸ்டன்ஸ்.... அப்ப என்ன சொல்ல போறேன்னு கேக்குறீங்களா? கீழ படிங்க !!!

அப்பலாம் இந்தியா பாகிஸ்தான் மேட்ச் என்றால் ஊரே கூடி பார்க்கும். ஹோம் அப்லையன்ஸ் ஷாப்களில் கால் கடுக்க மக்கள் கூட்டம் வேடிக்கை பார்க்க கூடி இருக்கும்.சின்ன வயசுல (இப்ப ப்ளாஸ்பேக் ஓடுது)......
எங்க அத்தா(அப்பா) மேட்ச் பார்ப்பாங்க.  அந்த நேரத்துல கூட நான் புத்தகம் கையுமா தான் இருப்பேன்(வேற வழி இல்ல.இத நீங்க நம்பி தான் ஆகணும்). அதுனால அந்த மேட்ச் பாக்கல.



 மர்மக் கோட்டை
பாகம்-3
ரெண்டு ஃப்ரெண்ட்ஸ். ரெம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். எப்பவுமே ஒன்னாவே சுத்துவாங்க, காலார நடந்து ஊரைக்கடந்து ஊருக்கு வெளியே அந்த NH சாலை யின் பாலத்தில் ஓரத்தில் அமர்ந்து ரெம்ப நேரமா அரட்டை அடிச்சுட்டு இருட்டியவுடன் வீடுதிரும்பவுது பொழுதுபோக்காக வச்சுருந்தாங்க.ஒருவன் சைலன் மற்றவன் தருனா.சைலன் க்கு மும்பையிலிருந்து அப்பாய்ன்மெண்ட் ஆர்டர் வந்தது, தருனா சைலனை ரயிவேஸ்டேஷன் வரை போய் Send-Off பண்ணிட்டு வந்தான். இதெல்லாம் நடந்து ஒர் வாரம் கழிச்சு...நள்ளிரவு 1 மணிக்கு சொந்த ஊரில் உள்ள ரயில்வேஸ்டேஷனில் மீண்டும் வந்து இறங்கினான் சைலன். போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. அதுனால வீட்டுக்கு நடந்து வருவதை தவிர வேறு வழியில்லை. வரும் வழியில் மரங்களும் செடிகளும் இருட்டுக்குள் ஒழிந்து ஊதக்காத்தை ஊதிக் கொண்டிருந்தது. ஆள்நடமாட்டம் எதுவும் இல்லை. கும்மிருட்டு வேற, பீதிய
கிளப்புறமாதிரியான சூழலும் நேரமும் சேர்ந்து கொண்டது அந்த பகுதியில்.

, ,



மர்மக் கோட்டை
பாகம்-2
 முதல் பாகம் காண

தூக்குல தொங்கிட்டாரு அந்த ஸ்கூல் வாத்தியார் அந்த லெட்டர் படிச்சவுடனே!!! அப்படி என்னதான் அந்த லெட்டர்ல? அப்படினு அவர் மனைவி அத படிச்சிருக்காங்க. உடனே அவங்களுக்கு பைத்தியம் புடிச்சிருச்சு!. அந்தலெட்டர் அப்படியே ஒரு மளிகை கடைக்காரர் கைக்கு போயிருக்கு அதை படிச்ச அந்த மளிகை உடனே கடைய காலி பண்ணிட்டு ஊரைவிட்டு ஓடிருச்சு. அடுத்து அந்த மளிகையோட மனைவி கையில் அந்த லெட்டர் கிடைச்சிருக்கு. மனைவி அந்த லெட்டரை படிக்க விரிக்கும் அந்த நொடியில் காலிங்க் பெல் கூப்பிட்டது உடனே அதை கிச்சன்லேயே வச்சுட்டு யார்னு பார்க்க போய்ட்டு திரும்பி லெட்டர படிக்க வரும்போது அந்த லட்டர் பறந்து போயி அடுப்புல விழுந்து அழிஞ்சு போச்சு. கடைசிவரை அதுல என்ன இருக்குனு ஆமினாவுக்கு தெரியாமலே போயிருச்சு. அதுனால உங்களுக்கும் அதை என்னால சொல்லமுடியல :-(  சோ மர்மமா இருக்கிற எந்த ஒரு விஷயமும் சுவராஸ்யம்தான்...சரி அந்த பூல் புலையா பாதில விட்டேன்ல?! அதை சொல்றேன் கேளுங்க...

, , ,

பெண்கள் மனச வெளிபடுத்தும் பாட்டு, அதுவும் பெண் பாடுன பாட்டு, அதுவும் பெண் வாய்ஸ்லேயே இருக்குற பாட்டு, அதுவும் பத்து பாட்டு சொல்லணுமாம். நம்மளையும் தொடர்பதிவுக்கு கூப்பிட்டுருந்தாங்க. நம்மல பத்தி தான் எல்லாருக்கும் தெரியுமே ரொம்ப நல்லவன்னு (போதும் போதும் நிப்பாட்டு.....எவ்வளவு நாளாதான் இதையே சொல்லி எங்கள ஏமாத்துவ) பாட்டு செலக்ட் பண்றதுல ஒன்னும் சிரமம் இருக்கல. அதெல்லாம் 5 மணி நேரத்துல 50 பாட்டு எடுத்தாச்சு. அதுல இருந்து இந்த பாட்டுலாம் எடுக்குறதுக்குள்ள தான் பெரியபாடா போச்சு (இதுக்காகவே மறுபடியும் 2 முறை சாப்பிட்டு தெம்ப ஏத்திக்கிட்டேனா பாத்துக்கோங்களேன்).

,

  மர்மக் கோட்டை
பாகம்-1
                       ரெண்டு டப்பா இருக்கிறது ஒரு டப்பாவில் பொற்காசுகள், வெள்ளிக்காசுகள் என நிரப்பபட்டு திறந்த நிலையில் இருக்கிறது, மற்றொன்று மூடியே வைக்கப்பட்டுள்ளது அதனுள் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. இந்நிலையில் பொற்காசுகள் இருந்தும் கூட அதை விடுத்து, மூடிய டப்பாவில் என்ன இருக்கிறது என்பதை அறியவே நம் மனசு அலைபாயும் அப்படினு அந்தா.. அவரு சொன்னாரு (யாருன்னுல்லாம் கேட்க கூடாது). அதுனால ரகசியமாக இருக்கிற எந்த ஒரு விஷயமும் சுவராஸ்யம்தான்..அதை அறியவே எப்போதும் ஆர்வமா இருப்போம்

,

அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த இனிய தியாக திருநாள் நல்வாழ்த்துக்கள். எல்லார் வாழ்விலும் இன்பம் கிடைத்திடவும், அதுவே நிலைபெறவும் எல்லாம்  வல்ல அல்லாஹ் துணைபுரிவானாக....


தமிழக அரசின் நிறுவனம் அதாவது அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் 2 நாளைக்கு முன்னாடி ஒரு அறிவிப்பு கொடுத்தது. அதை எல்லாரும் படிச்சுருப்பீங்கன்னு நெனைக்கிறேன். படிக்காதவங்களுக்காகவே அல்லது நியூஸ் பேப்பர் பக்கமே போவதில்லை என சொல்லும் சகோக்களுக்காக இந்த பதிவு. (சட்டுபுட்டுன்னு மேட்டருக்கு வா. )


என்ன விஷயம் தெரியுமா? அரபு நாடுகளில் உள்ள பல பெரியகம்பெனி மற்றும் முன்னணி கம்பெனிகளுக்கு வேலை செய்ய ஆள் இல்லையாம். அதுனால வேலைஆட்கள் வேண்டுமாம். ஆனாலும் எல்லாரும் போய்விட முடியாது. சில தகுதிகள் வேண்டும்.கீழே படிங்க புரியும்

, ,


என்ன கொடுமை பாத்தீங்களா? ரகசிய காமிரா வச்சு லாட்ஜ்,டிரஸ்ஸிங் ரூம்......இந்த மாதிரி இடத்துல தான் வச்சு வக்கிர புத்திக்காரங்க வீடியோ எடுத்தாங்க. இப்ப கதையே வேற! ஹாஸ்பிட்டல்ல வச்சு எடுக்க ஆரம்பிச்சுட்டானுங்க. கடவுளுக்கு அடுத்தப்படியா இருக்கும் டாக்டரே அதுவும் பெண் மருத்துவரே இந்த மாதிரி ரகசிய காமிரா மூலம் தன் மருத்துவமனைக்கு வரும் பெண்களை வீடியோ எடுத்துருக்காங்க.

சென்னை ஆவடிக்கு அருகிலுள்ள  பட்டாபிராம் ரயில்வே கேட்டுக்கு பக்கத்துல இருக்குற கிரேஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் தான் இந்த வக்கிர செயலை செய்தது. அதுவும் இந்த ஹாஸ்பிட்டல் பிரசவத்துக்கு பெயர் போன இடம்.



இந்த மாதிரி மருத்துவமனைகள் அதுவும் குறிப்பாக லேடி டாக்டர் என்பதால் தான் பலரும் நம்பி போறாங்க. ஆனா அந்த நாய்ங்க ஒட்டுமொத்த ஹாஸ்பிட்டல் மேலேயே சந்தேகம் வர அளவுக்கு நடந்துகிட்டானுங்க. அந்த ஹாஸ்பிட்டலில் இருக்கும் நர்ஸ்,லேப்,டெக்னீஷியன் என எல்லா ரூம்களிலும் சி.சி.டி.வி வகை காமிரா பொருத்தப்பட்டுள்ளது. இதுவரை என்னன்ன அட்டூழியங்கள் நடந்தது என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம்.

இத்தனைக்கும் இந்த மருத்துவமனையின் எம் டி  மற்றும் மகப்பேரு

, ,




எனக்கு வந்த தகவலை மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொள்ளவே இந்த பதிவு!யாருக்காவது வேலை தேவை என்றாலும், வேலை இல்லாதவர்களுக்கும் தயவு செய்து இதை தெரியப்படுத்தி பயன் பெற உதவவும் !!!

, ,


சின்ன சின்ன பிரச்சனைகளில் சில்லரை பிரச்சனையும் ஒன்று. Bata செருப்புக்காரன் விலை வைப்பான் பாருங்க ரூபாய் 299.95னு அதாவாது 300 இல்லையாம். 300ரூபாய்னு சொன்னா விலை அதிகமா தெரிஞ்சுருமாம் அதுனால அவரு ரூ299.95. அதுக்கு அப்பறம்  சில்லரைக்கும் கண்டக்டருக்கும் எப்பவுமே ஏழரைதான். பஸ்ஸுல ஏறும் போதே கண்டெக்டர் குரல் கொடுப்பார். சில்லரைய ரெடியா வச்சுக்கோன்னு. அவர் பையில ஏற்கனவே தலைவர் வச்சுருப்பார். ஆனா எடுத்து கொடுக்க அலுப்பு. கொஞ்சம் கொஞ்சமா ஒவ்வொருத்தவங்க கிட்ட வம்படியாய் மிச்சம் செய்த பணத்தில் அடுத்த ஒரு வருஷத்தில் ஒரு ட்ராவல்ஸ்க்கு ஓனராவே ஆகிடுவார் :)

, ,

அந்தா இந்தான்னு நாட்கள் ஓடி போய் எல்லோரும் ஆவலாய் எதிர்பார்த்த  தீபாவளியும் வந்தாச்சு!


உலகம் முழுவதும் வேலைக்காக காத்திருப்போர் பட்டியல் நீளுதுன்னா அதை விட வேலையை கையிலேயே வச்சுட்டு ஆட்களை தேடும் கம்பெனிகளின் பட்டியலும் நீண்டுகிட்டு தான் இருக்கு.

டிஸ்கி: எதுக்கு இவ்வளவு நீளமா நீட்டிகிட்டே இருக்க. மேட்டருக்கு வா அம்மணி

சுருக்கமா தான் எப்போவும் பேச தெரியாதே.ம்ம் சரி இதை கேளுங்க. இப்பலாம் ஆமிக்கு நல்ல நல்ல எண்ணங்களா வருது. அதுனால நல்ல நல்ல விஷயங்களாம் செய்யலாம்னு முடிவு பண்ணி சில காரியங்கள எறங்க போகுது.

இன்னைக்கு எனக்கு தமிழ் பத்தி கொஞ்சம் ஞாபகப்படுத்திக்கொள்ளலாம்னு திடீர்னு ஒரு ஆசை வந்துச்சு. ஆமா திடீர்னுதான் :)) சத்தியமா திடீர்ன்னு தான்!
அன்னிய நாட்டு மோகத்தில் இப்பெல்லாம் திடீர் திடீர்னுதான் தமிழில் பேசும் நிலை எற்பட்டுள்ளது. சில தமிழ் வார்த்தைகள் உச்சரிக்கப்பட தயக்கம் எழுகிறது. உதாரணமாக முடி என்ற சொல்லுக்கு மயிர் என்றே தமிழ் சொல்ல சொல்கிறது. ஆனால யாரையாவது பாத்து நீ முடி அப்படினு சொன்ன சும்ம முழிச்சிட்டு போயிருவாங்க. ஆனா  “.........” னு சொன்னா நம்மள முடிச்சுட்டு போயிருவாங்க. ரெண்டுக்குமே ஒரே அர்த்தம்தான்.ஆனா மயிர்எனபதுக்கு மட்டும் ஏன் பிரச்சனைனு தெரியல.
டிஸ்கி : மயிர் நீங்கின் உயிர் வாழா கவரிமான் என சொல்ல கேட்டதுண்டு. அதனால் யாரும் முகம் சுழிக்க கூடாது சொல்லிபுட்டேன். 

, ,

ஆறு மாதங்களுக்கு முன்னால்..
 இப்ப தான் ஆமியோட கால் லக்னோல பதியுது. 2 நாள் ட்ராவலில் முழுவதும் நம்மூர் சீரியல்கள் ஞாபகம் தான். வீட்டுக்கு போனதும் முதல் வேலையா சன் டீவியை ஓபன் பண்ணனும்னு நெனச்சுட்டே போனா  “தமிழ் சேனல் நை”  அப்படின்னு சொல்லிட்டான் அந்த கேபிள் கடங்கார பயபுள்ள. என்ன செய்ய? சோகத்தோட சேனலை ஓபன் பண்ணி ஹிந்தி சீரியலாவது பாக்கலாம்னா நம்மூர் சீரியலே பெட்டர். ஒரு அழுகை சீனையே 4 எபிசோட்க்கு இழுத்தடிச்சுட்டாங்க. அந்த நேரத்துல பொலம்பிட்டிருக்கும் போது தான்  சில நல்ல புரோக்ராம்லாம் கண்ணுக்கு மாட்டுச்சு.