Museum :- அஞ்சாங் க்ளாஸ் படிக்கும்போது மியூசியம்..அப்படினா..எதோ Music Theater னு நினைச்சேன். இளையராஜா,தேவா இவங்கள்லாம் அங்கேயேதான் சுத்திகிட்டு இருப்பாங்க போல அப்படினு நினைச்சேன்.அப்பறமாதான்........ பழமைகளும் பண்பாடுகளும் சங்கமித்து, காலத்தின் முன்னோக்கிய ஓட்டத்திலிருந்து, விலகி கொஞ்சம் பின்னோக்கிய பார்வையும், ஓர்மையும் ஏற்படுத்தி, பழங்காலங்களை பத்திரப்படுத்தி தருவதுதான் அருங்காட்சியகம். காலத்தின் நீளங்களையும் கலாச்சார ஆழங்களையும் தன்னகத்தே கொண்டு முன்னோர்களையும் முன்னோர்கள் சார்ந்தவற்றையும் நினைவு கூர்ந்திட பொதுவான ஒரு நினைவிடம்.
Showing posts with label நூலகம். Show all posts
Showing posts with label நூலகம். Show all posts
இன்னைக்கு எனக்கு தமிழ் பத்தி கொஞ்சம் ஞாபகப்படுத்திக்கொள்ளலாம்னு திடீர்னு ஒரு ஆசை வந்துச்சு. ஆமா திடீர்னுதான் :)) சத்தியமா திடீர்ன்னு தான்!
அன்னிய நாட்டு மோகத்தில் இப்பெல்லாம் திடீர் திடீர்னுதான் தமிழில் பேசும் நிலை எற்பட்டுள்ளது. சில தமிழ் வார்த்தைகள் உச்சரிக்கப்பட தயக்கம் எழுகிறது. உதாரணமாக முடி என்ற சொல்லுக்கு “மயிர்” என்றே தமிழ் சொல்ல சொல்கிறது. ஆனால யாரையாவது பாத்து நீ ”முடி” அப்படினு சொன்ன சும்ம முழிச்சிட்டு போயிருவாங்க. ஆனா “.........” னு சொன்னா நம்மள முடிச்சுட்டு போயிருவாங்க. ரெண்டுக்குமே ஒரே அர்த்தம்தான்.ஆனா ”மயிர்” எனபதுக்கு மட்டும் ஏன் பிரச்சனைனு தெரியல.
டிஸ்கி : மயிர் நீங்கின் உயிர் வாழா கவரிமான் என சொல்ல கேட்டதுண்டு. அதனால் யாரும் முகம் சுழிக்க கூடாது சொல்லிபுட்டேன்.
ஆமினா
-
