தன்னை விட இளையனிடம் தன் பலத்தை காட்ட நினைப்பது தான்
ஆதிக்கம் என்று பொருள்கொள்கிறோம். இதையே தான் கொஞ்சம் மாத்தி.......... ஆண் பெண்ணிடம் தன் அதிகாரத்தை செலுத்த முற்படும் போது அங்கே ஆணாதிக்கம்  உருவாகுது. இதற்கு ஆண்கள் தான் முழுக்க முழுக்க காரணம்னு நம் சமுதாயத்தில் ஒரு தோற்றம் வலுப்பெற்றது. என்னை பொறுத்த வரையில்  ஆண்கள் சரியா தான் இருக்காங்க. பெண்களுக்கு தன்னை ஆண்களிடத்தில் அடிமை என காட்ட முயலும்  முட்டாள்தனம் தான் எதற்கு என்று தெரியவில்லை. அவர்களிடத்தில் ஆணாதிக்கம் உருவாகியதற்கும் அதை அழியாமல் பாதுகாத்து வருவதற்கும் முழு பொறுப்பு பெண்கள் தான் என்பதை பற்றிய பதிவு தான் இது

காலை 5 மணிக்கு வாக்கிங் போயிட்டு வரும் போது நிறைய பெண்கள் வீடுதிரும்பிடுவாங்க. நம்ம தான் சோம்பேறி ஆச்சே... நமக்கு முன்னாடியே சீக்கிரமா வந்து எப்படி தன் நலனின் மேல் அக்கறைபடுறாங்கன்னு நெனச்சுக்கிட்டேன். அப்ப தான் ஒரு பெண் சொன்னார் "நீங்க என்ன ஆம்பிள்ளைங்க வர நேரத்துல வாக்கிங் வரீங்க?" . உடனே நான் ஐய்யய்யோ எனக்கு இப்படி ஒரு ரூல்ஸ் இருக்குறதா தெரியாது. தனித்தனியா நேரம் ஒதுக்கியிருக்காங்களா? எத்தன மணிக்கு பெண்கள் வரணும்?. அதற்கு அவர், இல்லை நானாதான் சொல்றேன். எப்பவும் ஆம்பிளைங்க 5 மணிக்கு மேல வரதுனால "நாங்களாம்" அவங்க வரதுக்கு முன்னாடியே போய்டுவோம்" ஒன்னும் பதில் சொல்ல முடியல....

கல்யாண பெண்ணுக்கு அவங்க அம்மா அட்வைஸ் பண்ணிட்டிருக்குறத கவனிச்சுருக்கீங்களா?
  • யார் என்ன சொன்னாலும் அமைதியா இரு. (நீ தான் இனி ஜடமாச்சே)
  • அவங்க என்ன சொல்றாங்களோ அதகேட்டு நடந்துக்கோ (நீ தான் இனி மெஷின் ஆச்சே)
  • சத்தமா பேசாத (நீ தான் இனி ஊமையாச்சே)
  • வீட்ல எல்லாரும் சாப்பிட்டதுக்கு அப்பறமாதான் சாப்பிடணும். (நீ தான் வேலக்காரி ஆச்சே)
  • வீட்ல பெரியவங்க பேசும் போது குறுக்க பேசாத ( நீ தான் இனி தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையாச்சே...)என்னது???? உன் தனிபட்ட கருத்தா??? ஹைய்ய்யோ ஹைய்ய்யோ.... காமெடி பண்ணாத.. அப்படி ஒன்னு இனி உன் அகராதியில் இல்லையாக்கும்)
  • மாமியார்,நாத்தனார் திட்டினாலும் ஒன்னும் எதிர்த்து பேசிடாத (இனி நீ தான் உணர்ச்சியற்ற பொம்மை ஆச்சே)
  • அவங்க என்ன சொன்னாலு சரிசரின்னு சொல்லி பொறுமையா போ (ஆமா சாமி போடு)

இப்படி நிறைய விஷயங்கள் சொல்லி அனுப்புவாங்க. இது கேக்குற பொம்மையும் சாரி சாரி பொண்ணும் இப்படிதேன் இருக்கணும் போலன்னு  புகுந்த வீட்டுக்குள் நுழையும் போதே  அடிமைசாசனத்தை எழுதி கொடுத்துடுவா. இத அப்பாவோ அண்ணாவோ சொல்லி கொடுப்பதில்லை. அடுத்த அடிமையை தயாராக்கும் பழைய அடிமை தான்... தன் உணர்வுகளை தீயிலிட்டு கொழுத்தி தன் பிறந்த வீட்டின் பெருமையை காப்பாற்ற நினைப்பதில் எந்த அளவுக்கு திருப்தி அவங்களுக்கு கிடைக்கும்னு தெரியல.. யாராச்சும் சந்தோஷமா இருக்கீங்களா... இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

இப்படி நிறைய விசயங்கள் சமுதாயத்தில் பாக்க முடியும்
1. தன் மருமகன் வந்ததும் முகத்தை மறைத்து வாங்க என்று அழைத்த உடன் ஒளிந்துக்கொள்ளும் மாமியார்

2. அனைத்து ஆண்களும் சாப்பிட்ட பின் சாப்பிடும் வீட்டுப்பெண்கள்

3. திருமண விஷேஷங்களில் முதல் பந்தியும் இரண்டாம் பந்தியும் ஆண்களுக்கு விட்டுகொடுத்து கடைசி பந்தியில் சாப்பிட நினைக்கும் பெண்கள்

4. தன் வீட்டில் உள்ள ஆண்கள் சிறுவேலைகளை செய்தாலும் தடுத்து "இதெல்லாம் பொம்ப்ளைங்க செய்ய வேண்டியது" என கூறும் பைத்தியங்கள்

5.சட்டியில இருக்குற கறி,மீனையெல்லாம் அரிச்சு எடுத்து கணவனுக்கு வைத்துவிட்டு கஞ்சி சாப்பிடுபவள்.

6.வரதட்சணையை, சடங்குகளை தீர்மானிக்கும் பெண்கள்


இப்படியாக ஒவ்வொரு செயலுக்கு பின்னும் தன்னை மட்டமானவளாய் காட்டிக்கொண்டு ஆண்களை உயர்த்திவிட முயற்சி செய்ததன் விளைவு தான் ஆண்களிடத்தில் தற்போதிருக்கும் "நா ஆம்ப்ளை டீ" என்ற குணம்.


தன் மகளை அடித்துக்கொண்டிருக்கும் மகனை அப்பவே ஓங்கி கன்னத்துல ஒன்னு விட்டா அவனும் எல்லாரும் சமம் என புரிஞ்சுருப்பான். அத விட்டுட்டு "ஆம்பிள புள்ளைய போயி அடிக்கிறீயான்னு மகளை திட்டுனா....???? இத பாத்து வளரும் அந்த சிறுவனும் காலர தூக்கிட்டு நடக்க ஆரம்பிச்சுடுவான். அடுத்த ஆணாதிக்கவாதி ரெடி...

 நாலு எடத்துக்கு போற ஆம்பிள்ளைங்க மொதல்ல சாப்பிடட்டும்னு விட்டுகொடுக்கும் பெண்களுக்கு  தெரியல மறைமுகமா அவள் தன்னை அயம் எ வெட்டி அன்ட்  ஒதவாக்கரையாக காட்டிகொண்டிருக்கிறோம் என்பதை....

 எனக்கு மட்டும் ஏன் டா தாலி,மெட்டி? அப்ப நீ கல்யாணம் ஆனவன்னு அடையாளபடுத்த என்ன வச்சுருக்கன்னு கேட்குறத விட்டுட்டு காலைல எழுந்ததும் தாலியை கண்ணுல ஒத்திக்கிடுறதும்,  அது தவறி விழுந்தாலும்  "அச்சச்சோ அவருக்கு எதுவோ ஆக போகுதுன்னு ஜோசியம் சொல்வதும்...... அப்பப்பப்பா.... இதெல்லாம் எந்த ஆண்களும் எதிர்பார்ப்பதில்லைங்குறது வேற விஷயம். ஆனாலும் இவுகதான் தன்னை அடிமைன்னு காட்டிக்கணுமே...

கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் சகிப்புதன்மை இருக்கவேண்டுங்குறத சம்ரதாயம் மூலமா சொல்லிகொடுக்கணுமாம்? எப்படி? அதாவது கணவன் சாப்பிட்ட  இலையில் பெண்கள் சாப்பிடணும்... என்னைக்காவது ஏன் நா மட்டும் சகிச்சுக்கணும். அவர என் எச்சில் இலையில் சாப்பிட சொல்லுங்கன்னு சொல்லி பார்த்தாதான் என்னவாம்? 


என்னமோ காலைல 4 மணிக்கு எந்திரிச்சு மெஷின் மாதிரி வேலை பார்த்துட்டு இரவு எல்லாரும் உறங்கிய பின் படுக்கைக்கு செல்வதை தியாயம்னு மேடைல சொல்றதெல்லாம் ஐய்யோ... கடவுளே........... கஷ்ட்டகாலம்.. ஏன்பெண்கள் அவர்களை இன்னும் சுருங்கிய எல்லைக்குள்ளாகவே வைத்திருக்க வேண்டும்? அப்பறம் இன்னொரு க்ரூப் அலையுது...  நாங்க ஊசி போட்டு  மீச வச்சா சரியா தவறா? பச்சை பச்சையா கேள்விகள் கேட்டா சரியா தவறா?? ஆண்கள் கொழந்தை பெத்துக்கிட்டா என்ன... அப்பதான் ஊருக்குள்ள ஆண்,பெண் என்ற பேதம் இருக்காது கத்திக்கிட்டே பத்து பயபுள்ளைகளோட ரோட்டுல டான்ஸ் ஆடி பிரச்சாரம் செய்யும்... கொடுமை!


முற்போக்குவாதிகளே... முதலில் ஆண்களை  வசைப்பாடுவதை விட்டுவிட்டு பெண்களின் மனநிலையை மாற்றுங்கள்.இல்லைன்னா எத்தன காலம் ஆனாலும் பெண்களின் அடிமை குணம் மாறாது... இப்படி தன்னை தானே தாழ்த்திக்கொள்ளும் பெண்கள் இருக்கும் வரையில் ஆணாதிக்கமும் ஓயாது. எதிர்த்து கேள்வி கேட்டா ஒரு பய வாய் தொறக்கணுமே? கேட்டுதான் பாருங்களேன் பெண்களே....

யோசிங்கோ

ஆக ஆண்களிடத்தில் ஆதிக்க மனப்பான்மை வளர்த்துவிட்டது பெண்களே பெண்களே பெண்களே என கூறி பட்டிமன்றத்தை (ஹி..ஹி...ஹி..) நிறைவு செய்கிறேன்

காளிமார்க் சோடா ப்ளீஸ்........

டிஸ்கி : பெண்கள் தாராளமா கமென்டில் திட்டலாம்... வாங்கிகட்டிக்க அயம் ரெடி அவ்வ்வ்வ்வ்

, , ,

75 comments:

  1. ஆஹா ! இதுக்கெல்லாம் போய் திட்டுவாங்களா? நல்ல பகிர்வு.

    ReplyDelete
  2. @ஆசியா

    எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான் ஹி..ஹி...ஹி...

    ReplyDelete
  3. இப்பதிவுக்கு ஆண்களாகிய நாம கமெண்டு போடலாமா மேடம்? :-)

    ReplyDelete
  4. வணக்கம் ஆமினா!
    அது சரி அந்த மணப்பெண்னுக்கு இந்த ஆலோசனைய சொல்லுமாறு கூறியதே அந்த பெண்னின் அப்பாவாகத்தானே இருக்கும்..? 

    ReplyDelete
  5. இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)

    அதுக்குத்தான 15 நிமிஷமா யோசிக்கிறேன் ஒன்னும் வரமாட்டேங்குது..

    என்னமோ சொல்றீங்க என்னன்னுதான் புரியல்ல.. பெண்கள திட்றிங்களா.. ஆண்கள திட்றிங்களா..

    பெண்களை திட்டுவது போல ஆண்களை திட்டுகிறீர்களா.. அல்லது ஆண்களை திட்டுவது போல பெண்களை திட்டுகிறீர்களா,,

    எங்க டேமேஜரும் இப்படித்தான்.. எவனாவது தப்பு செய்தா.. தப்பு செய்தவனையும் தப்பு செய்யாத இன்னொருத்தனையும் கூப்பிட்டு, தப்பு செய்தவன் செய்த தப்பெல்லாம் சுட்டிக்காட்டி தப்பு செய்யாதவனுக்கு திட்டுவார்,, அவனுக்கு ஒரே குழப்பம் நாமதான் ஒரு தப்பும் செய்யல்லயே நம்ம எதுக்கு திட்றார்.. தப்பு செய்தவனுக்கு மனசுல பட்றும் இதெல்லாம் நமக்குத்தான்.. அப்புறம் தப்பு செய்யாதவன தனியா கூப்பிட்டு.. இதெல்லாம் அவனுக்குத்தான் சொன்னேன் உனக்கில்லை அப்பிடின்னு சொல்லுவார்..

    புரிஞ்சுதா,, புரியாட்டி ஒரு சோடா குடிச்சிட்டு யோசிங்க,,

    ReplyDelete
  6.  நீங்க ரெம்பத்தான் கற்பனை செய்கிறீங்க..!!?
     இப்ப எந்த பெண் கணவர் சாப்பிட்டு முடித்தவுடன் அந்த இலையில் சாப்பிடுகிறார்கள்.? இப்போ இது சினிமாவில் மட்டுமே சாத்தியம் சகோதரி.. ;-))

    ReplyDelete
  7. ////இப்படி நிறைய விஷயங்கள் சொல்லி அனுப்புவாங்க. இது கேக்குற பொம்மையும் சாரி சாரி பொண்ணும் இப்படிதேன் இருக்கணும் போலன்னு புகுந்த வீட்டுக்குள் நுழையும் போதே அடிமைசாசனத்தை எழுதி கொடுத்துடுவா. இத அப்பாவோ அண்ணாவோ சொல்லி கொடுப்பதில்லை. அடுத்த அடிமையை தயாராக்கும் பழைய அடிமை தான்... ////

    இதுதான் யதார்த்தன் பெண்கள் இதில் முதலில் கவனம் செலுத்த வேண்டும்

    (அக்கா சத்தியமாக இது டெம்ளேட் கமண்ட் இல்லை இந்த நிரூபன் பாஸ் வேற பதிவுலகின் அரசியல் எல்லாம் பதிவாக போடுவதால் உண்மையாக ஒரு விடயத்தை காப்பி பண்ணி கமண்ட் போட ஏலாம இருக்கு அவ்வ்வ்வ்வ்வ்)

    ReplyDelete
  8. இப்ப எல்லாம் பசங்கதான் பொண்ணுங்களிடம் அடிமைப்பட்டு இருக்காங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  9. நல்ல ஒரு கருத்தை சொல்லியிருக்கிறீங்க பாராட்டுக்கள்(இதுவும் டெம்ளேட் கமண்ட் இல்லை எல்லாம் டெம்ளேட் கமண்ட் என்றால் எப்படி கமண்ட் போடுறது என்றே தெரியலை அவ்வ்வ்வ்வ்வ்)

    ReplyDelete
  10. உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

    என்னா ஒரு வேகம் :)

    நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான் - குர்ஆன் 33:35

    இறைவனின் பார்வையில் இரு பாலினரும் சமம் தான். அதே நேரம், இவ்வுலக வாழ்கையை பொருத்தவரை இரு பாலினருக்கும் வெவ்வேறு பொறுப்புகள் உள்ளன. இல்லையென்றால் ஒரே இனமாகவே இறைவன் படைத்திருக்கலாம்.

    முதலில் இந்த "சமம்" என்ற வார்த்தையே தவறு. ஆணுக்கு பெண்ணோ அல்லது பெண்ணுக்கு ஆணோ சமமாகவே முடியாது. இந்த விசயத்தில் அறியாமையால் உளறிக்கொண்டு இருப்பவர்களை பார்க்கும் போது பரிதாபம் தான் வருகின்றது.

    மற்றப்படி, நீங்கள் பதிவில் சொல்லியுள்ள தீர்ப்பில் எனக்கு உடன்பாடு கிடையாது. இது இயல்பு தான். உங்களுக்கான அனுபவத்தை வைத்து நீங்கள் சொல்லிருக்கிண்றீர்கள். என்னுடைய அனுபவத்தை வைத்து நான் சொல்வது, இந்த பிரச்னைக்கு காரணம் இரு பாலருமே ஆகும்.

    பெண்ணடிமைத்தனத்திற்கு விஞ்ஞானிகளும் ஒரு காரணமல்லவா? அந்த விஞ்ஞானிகள் ஆண்கள் தானே. என்னுடைய இந்த பதிவை படிக்கவில்லை என்றால் படித்து பாருங்கள். இன்ஷா அல்லாஹ்.

    கடைசியா ஒன்று கேட்கின்றேன். தவறாக நினைக்க வேண்டாம். இது ஆணாதிக்க பதிவா????? :) :)

    வஸ்ஸலாம்,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  11. நல்ல கட்டுரை தந்தமைக்கு முதலில் வாழ்த்துகள்.
    கல்யாண பெண்ணுக்கு அவங்க அம்மா கொடுத்த அட்வைஸ் 'உம்' போடுவதோடு சரி. இயல்பான குணம் மேலோங்கி நிற்கும்.
    அனைத்து ஆண்களும் சாப்பிட்ட பின் சாப்பிடும் வீட்டுப்பெண்களுக்கு பசி இருக்காது காரணம் சமைத்த உணவை சரி பார்ப்பதில் பசி போய்விடும்.
    குடும்ப மகிழ்வு வர மனைவி சொல் மந்திரம்தான்

    ReplyDelete
  12. உங்கள் பதிவின் முடிவில் பெண்கள்தான் காரணம் என்று முடித்திருப்பது எனகென்னவோ சரியாக மனதுக்கு படவில்லை. கல்யாணம் ஆகி புகுந்தவீட்டுக்கு போகும் பெண்ணுக்கு தாய் சொல்லி அனுப்புவதாக கூறியிருப்பதற்க்கு மூல காரணத்தை ஆராய்ந்து பார்த்தால் அதில் ஆண்கள் ஒளிந்திருப்பதை கண்கூடாக அறியாலாம். எப்போதும் தந்தை தன்பிள்ளைகளிடம் எதையும் நேராக கூறாமல் தன் மனைவியிடம் கூறி செய்தியை பிள்ளைகளிடம் பாஸ் செய்வது அனேக குடும்பங்களில் பார்க்கலாம். அது போலதான் இங்கேயும் தன் மனைவியிடம் இங்கேபாராடி அடுத்தவீட்டிற்கு போகும் பிள்ளையிடம் புத்திமதி கூறி அனுப்பு என்று ஆதிக்க மன்ப்பான்மைக்கு மனைவிமூலம் வித்து இருகிறான் ஆண். இங்கே தாய் என்பவள் ஒரு தூதுவர் போலதான் செயல்பட்டு இருக்கிறார். இங்கே நீங்கள் செய்தியை சொன்ன அரசனைவிட்டு விட்டு செய்தி கொண்டுவந்த தூதுவனை தூக்கில் போட்டுள்ளீரகள் என்பது எனது கருத்து. என் மனதில் பட்டதை சொல்லியுள்ளேன். தவறாக எடுது கொள்ள வேண்டாம் ஆமினாம்மா

    இறுதியாக இந்த கால புதுமை பெண்களுக்கு உங்கள் வலைத்தளம் மூலம் நான் சொல்லவிரும்பவது நாங்கள் ஆண்களுக்கு சமமாக வர வேண்டும் என்று சொல்வதைவிட ஆண்களே நீங்கள் எங்களுக்கு சமமாக வர வேண்டும் என்று போராடுங்கள்

    ReplyDelete
  13. 2 காளிமார்க் சோடா ப்ளீஸ்........ஓன்று உங்கள் பதிவை படித்தற்கு மற்றொன்று அதை படித்தபின் கொஞ்ச நஞ்சம் இருந்த என் மூளையை வேலை செய்யவைத்தற்கு

    ReplyDelete
  14. பொரிஞ்சு தள்ளிட்டீங்க ஆமினா .எனக்கொரு விஷயம்தான் சிரிப்பு வந்தது
    அந்த வரதட்சிணைய மட்டும் இவங்க டிசைட் செய்றதுதான் .

    //பெண்களின் மனநிலையை மாற்றுங்கள்.இல்லைன்னா எத்தன காலம் ஆனாலும் பெண்களின் அடிமை குணம் மாறாது..//
    சரியாக சொன்னீங்க .
    ஒரு கூட்டம் சுயமரியாதையை தொலைத்து அடிமைகளாகவும் அந்த மற்ற க்ரூப் அதான் மீசை ..... அந்த கூட்டம் பெண்சுதந்திரம் என்பதை தவறான முறையில் எடுத்துக்கொண்டு விதண்டாவாதம் செய்றாங்க .

    காளிமார்க் சோடா/பன்னீர் சோடா /
    எல்லாம் வீட்டுக்கு வரும் இப்போ .ஆன்லைன்ல ஆர்டர் கொடுத்திட்டேன்

    ReplyDelete
  15. இப்படி நிறைய விஷயங்கள் சொல்லி அனுப்புவாங்க. இது கேக்குற பொம்மையும் சாரி சாரி பொண்ணும் இப்படிதேன் இருக்கணும் போலன்னு புகுந்த வீட்டுக்குள் நுழையும் போதே அடிமைசாசனத்தை எழுதி கொடுத்துடுவா. இத அப்பாவோ அண்ணாவோ சொல்லி கொடுப்பதில்லை. அடுத்த அடிமையை தயாராக்கும் பழைய அடிமை தான்... தன் உணர்வுகளை தீயிலிட்டு கொழுத்தி தன் பிறந்த வீட்டின் பெருமையை காப்பாற்ற நினைப்பதில் எந்த அளவுக்கு திருப்தி அவங்களுக்கு கிடைக்கும்னு தெரியல..//

    ஆமி நீங்க எந்த யுகத்தில் இருக்கீங்கப்பா...?

    ReplyDelete
  16. அதிகாலை(!) 6.42AMக்கு உங்க பதிவைப் படிச்சிருக்கேன். ப்ரஸென்ட் சொல்லிட்டுப் போறேன்..அப்ப்ப்ப்ப்ப்பறமா வந்து தெளிவா படிக்கறேன்! ;)

    குட்டுநைட்டு ஆமினா!

    ReplyDelete
  17. ஸலாம் சகோ.ஆமினா,
    மிக நியாயமான சுய விமர்சனம்.
    ஆனால், நிறைய திட்டு எதிர்பார்க்கிறீர்கள். பலரிடமிருந்தும் பாராட்டுக்கள் மட்டுமே குவியும் என யூகிக்கிறேன்.

    எனக்கு ஒரு பிளாஷ்பேக் நியாபகம் வருது...

    சின்ன வயசில் எனக்கும் என் தங்கச்சிக்கும் செமை சண்டை வரும்... நான் -அண்ணன்-அதாவது ஆதிக்கவாதி - ஒரு கட்டத்தில் பொறுமை கடந்து அடித்து விடுவேன்.

    தங்கை- அழுது கொண்டே அம்மாவிடம் முறையிட, சிறு நீதி விசாரணைக்கு அப்புறம் இறுதியாக...

    அம்மா: என்னதான் தப்பு செஞ்சு இருந்தாலும் அவளை நீ இப்படி அடிச்சு இருக்க கூடாது. 'தப்பு. தெரியாம செஞ்சிட்டேன்' என்று சொல்லிவிடு.

    நான்: ஒகேடி...ஸாரிடி..

    தங்கை : ஐ.. ஆச.. தோசை.. அப்பளம்.. வடை.. நானும் அதேபோல அடிக்கணும். பசுக்கன்றுக்காக தன் மகனை தேர்க்காலில் இட்ட மன்னனை பத்தி படிக்கலையா நீங்கள் ..?

    அம்மா: அடிப்பாவி.. இப்போ என்னாடி செய்யணும் நான்..?

    தங்கை : அண்ணனை குனிந்து உட்கார சொல்லுங்க. (ஹி..ஹி.. என் தங்கை குள்ளம்) நான் முதுகில் என்னை அடிச்சா மாதிரி அதேபோல அடிப்பேன்.

    அம்மா: டேய்... தயவு செஞ்சு முதுகை காட்டுடா... எனக்காகடா... ப்ளீஸ்... உட்காருடா...

    இப்போதுதான் அந்த பெண்ணாதிக்கம் அரங்கேறும்..!
    நான் குனிந்து வாகாக முதுகை காட்டி உட்கார... என் தங்கை ஒன்றுக்கு பதிலாக இரண்டு அடி அடித்து விட...

    அட... இனி... விட்ருவோமா நாம்..?

    ஆதிக்க வெறி தலைக்கேறி நான் மூன்று அடி அடிப்பேன்..! அப்புறம்... நீதி விசாரணை முதுகு குனிதல் எல்லாம் கிடையாது.

    ஆகையால்... இதன்மூலம் நான் அறிவிப்பது என்னவெனில்... ஒரு அடிக்கு ஒரு அடி மட்டுமே அடிப்பதே சமநீதி. நம் நாட்டு சட்டம் இதில் வளைந்து கொடுப்பதால்தான்... நிறைய சிக்கல் வருகிறது.

    (டிஸ்கி: பதிவில் ஏதும் உள்குத்து இருக்காது என்ற முடிவோடு முதல் நாளே போட்டுவிட்ட பல்ப் பற்றி கவலை இல்லா கமென்ட் இது)

    ReplyDelete
  18. உண்மை உண்மை உண்மை அத்தனையும் உண்மை.நான் உங்க பக்கம் ஆமினா.ஆண்களைப் பரம்பரை பரம்பரையா உயர்த்தியே பழக்கபட்டு வந்திட்டாங்க.வெளிநாடுகளுக்கு வந்தபிறகுதான் எல்லாம் வெறும் நாடகம்ன்னு பட்டிச்சு எனக்கும் !

    ReplyDelete
  19. @ஐடியா மணி
    // இப்பதிவுக்கு ஆண்களாகிய நாம கமெண்டு போடலாமா மேடம்? :-)
    //

    ஹி...ஹி...ஹி..

    அதென்ன ஆண்களாகிய நாம? ஏற்கனவே ஒரு க்ரூப்பு என்னைய பொரி வச்சு தேடிட்டிருக்காய்ங்க.. நீங்க வேற :-) ஆணாகிய நான் என கமெண்டவும் :-)

    ReplyDelete
  20. @காட்டான் அண்ணா
    //
    அது சரி அந்த மணப்பெண்னுக்கு இந்த ஆலோசனைய சொல்லுமாறு கூறியதே அந்த பெண்னின் அப்பாவாகத்தானே இருக்கும்..?//

    புள்ளைக்கு நல்லவிதமா புத்திமதி சொல்லுன்னு சொல்றாங்க தான்.. ஆனா பெண்கள் அதை வேறுவிதமா மாற்றி எக்ஸ்ட்ராவா பயமுடுத்திடுறாங்க. அந்த பயம் தான் அவளை புகுந்தவீட்டில் அடிமையாக்கும் முதல் படி.

    ReplyDelete
  21. @ரியாஸ்
    //
    புரிஞ்சுதா,, புரியாட்டி ஒரு சோடா குடிச்சிட்டு யோசிங்க,,//
    அடப்பாவிகளா.. என்க்கிட்டேயேவா??? ஒருவாரம் பெட் ரெஸ்ட் எடுத்துட்டு வந்தா கூட தலசுத்தி மயக்கம்போட்டுடுவேன் போல அவ்வ்வ்வ்

    ReplyDelete
  22. @காட்டான் அண்ணா
    //இப்போ இது சினிமாவில் மட்டுமே சாத்தியம் சகோதரி.. ;-))//
    இப்ப சினிமால காட்டாததுனால தான் அப்படி நினைக்கிறீங்கன்னு நெனைக்கிறேன் அவ்வ்வ்

    எங்க ஊர் கிராமங்களில் இன்னும் விடாம கடைபிடிக்கிறாங்க. பெண்களே விரும்பி இதனை செய்வது தான் கொடுமை...
    இவை அனைத்தும் கற்பனை அல்ல... பாரீஸ் ல இருந்து இதை படிச்சா அப்படிதான் தெரியும். பட்டிக்காட்டுக்கு வந்து பாருங்கண்ணா... இன்னும் சொல்ல முடியாத கொடுமைலாம் இருக்கு!

    ReplyDelete
  23. @குட்டிபையன்
    //
    (அக்கா சத்தியமாக இது டெம்ளேட் கமண்ட் இல்லை இந்த நிரூபன் பாஸ் வேற பதிவுலகின் அரசியல் எல்லாம் பதிவாக போடுவதால் உண்மையாக ஒரு விடயத்தை காப்பி பண்ணி கமண்ட் போட ஏலாம இருக்கு அவ்வ்வ்வ்வ்வ்)///

    ஹா..ஹா..ஹா...
    ஒரு தோழி கவிதை எழுதியிருந்தாங்க. அந்த வரியை எடுத்து அருமையாக இருக்க்குன்னு சொன்னாலும் நம்மள தப்பா நெனச்சுடுவாங்களோனு பயந்து ஓடி வந்துட்டேன்.. எல்லாம் இந்த நிரூபனால் வந்தது... நிம்மதியா ஒரு எடத்துக்கு போக முடியல ஹி...ஹி...ஹி...

    ReplyDelete
  24. @குட்டிபையன்
    //இப்ப எல்லாம் பசங்கதான் பொண்ணுங்களிடம் அடிமைப்பட்டு இருக்காங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

    ஹா...ஹா...ஹா... பழமையில் ஊறியவர்களும் ஆங்காங்கே இருக்கதான் செய்றாங்க குட்டிபையன்

    ReplyDelete
  25. @குட்டிபையன்
    // நல்ல ஒரு கருத்தை சொல்லியிருக்கிறீங்க பாராட்டுக்கள்(இதுவும் டெம்ளேட் கமண்ட் இல்லை எல்லாம் டெம்ளேட் கமண்ட் என்றால் எப்படி கமண்ட் போடுறது என்றே தெரியலை அவ்வ்வ்வ்வ்வ்)
    //
    டெம்ப்ளேட் கமென்ட்போபியாவா ஹ...ஹா...ஹா...

    ReplyDelete
  26. @சகோ ஆஷிக் அஹ்மத்

    துஆவிற்கு மிக்க நன்றி. உங்களுக்கும் சாந்தியும் சமாதானமும் கிட்ட எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக ஆமீன்.

    சகோ ஆஷிக். இந்த பதிவு சமம் என்ற பதத்தை கருவாய் கொண்டதல்ல.. ஆண்களே சொல்லாத சில விசயங்களை கடைபிடித்து அதன் மூலம் கிடைக்கும் உரிமையை விட்டுகொடுக்கும் பெண்கள் என்ற அடிப்படையில் போடப்பட்டது. அதனால் நீங்க இந்த பதிவுக்காய் பரிதாபப்படலன்னு நானே நெனச்சுக்குறேன் :-)

    மற்றபடி நேரமின்மை... உங்கள் பதிவை கட்டாயம் படிக்கிறேன் இன்ஷா அல்லாஹ்

    //இது ஆணாதிக்க பதிவா????? :) :)//

    உங்கள் அகராதியில் என்ன அர்த்தம் கொள்ளணுமோ அப்படியாக எடுத்துக்கொள்ளுங்கள் சகோ :-) இப்படி சொன்னதுக்கு நீங்க தவறாக நினைக்கவில்லை தானே? :-)

    ReplyDelete
  27. @nidurali
    நானும் உம் போட்டதோட சரி... :-) ஆனா எல்லாரும் ஒரு விதபயத்தில் தான் புகுந்த வீட்டில் நுழைகிறார்கள். இந்த பயத்தை உருவாக்கியது பெண் தானே :-)
    //அனைத்து ஆண்களும் சாப்பிட்ட பின் சாப்பிடும் வீட்டுப்பெண்களுக்கு பசி இருக்காது காரணம் சமைத்த உணவை சரி பார்ப்பதில் பசி போய்விடும்.//
    ம்ம்.. இதென்னவோ உண்மை தான். நம்மூர் பக்கம் (நீங்க இளையான்குடின்னு நெனைக்கிறேன்) சாப்பாடு விசயத்தில் தன் கணவன் மேல் காட்டும் அக்கறையை நான் சொல்லியா தெரியணும்? :-)
    //குடும்ப மகிழ்வு வர மனைவி சொல் மந்திரம்தான்//
    அப்படி போடுங்க...
    :-)

    ReplyDelete
  28. @அவர்கள் உண்மைகள்
    எல்லாரும் புத்திமதி சொல்ல சொல்லுவாங்க சகோ... அதுல மாற்று கருத்தே இல்லை. இங்கே அம்மா எப்படி தன் மகளுக்கு பயத்தை விதைக்கிறாள் என்பது தான் சொல்ல வந்தேன். இதன் பின் உள்ள சுயநலம் என்ன தெரியுமா? அடங்கியிருந்தால் தான் இவள் புகுந்த வீட்டில் சண்டை போடாமால் இருப்பாள். இல்லைன்னா எதிர்த்து எதிர்த்து பேசி சண்டை போட்டுட்டு நம்ம வரவு செலவு பாக்கவேண்டியதாய்டும்ங்குற தொலை(குருகிய) நோக்கு பார்வை தான்...

    ReplyDelete
  29. @அவர்கள் உண்மைகள்
    //2 காளிமார்க் சோடா ப்ளீஸ்........ஓன்று உங்கள் பதிவை படித்தற்கு மற்றொன்று அதை படித்தபின் கொஞ்ச நஞ்சம் இருந்த என் மூளையை வேலை செய்யவைத்தற்கு//

    ஹி...ஹி...ஹி.. இன்னொன்றையும் நீங்களே குடிச்சுடுங்க... டயர்ட்டா இருக்கீங்க :-)

    ReplyDelete
  30. @ஏஞ்சலின்
    ஹா...ஹா...ஹா... சுதந்திரம் என்பதை தவறா பயன்படுத்த கூடிய அல்லது பொருளைதவறாக அர்த்தம் கொள்ள கூடிய நவநாகரிக மங்கைகளை பாக்கும் போது சிரிப்புதான் ஏஞ்சலின் வரும்... அப்ப்பா.......... இப்ப தான் வந்துச்சு... 2 சோடாவையும் மிக்ஸ் பண்ணி அடிச்சுட்டேன்.....:-)

    ReplyDelete
  31. @சாதிகா அக்கா
    //ஆமி நீங்க எந்த யுகத்தில் இருக்கீங்கப்பா...?//
    இதே யுகத்தில் தான் அக்கா... ஆனா சென்னையில் இல்லை... இன்னும் முன்னேறாத கிராமங்களில் இருக்கேன் :-)

    ReplyDelete
  32. @ரத்னவேல் ஐயா
    மிக்க நன்றி

    ReplyDelete
  33. @மகி
    இப்ப தான் எனக்கு குட்டு நைட்டு... மெதுவா வாங்க... :-)

    ReplyDelete
  34. @சகோ ஆஷிக்
    வ அலைக்கும் சலாம் வரஹ்...

    நீங்க இந்த கமெண்டில் குத்து விடல தானே :-) எனக்கென்னமோ பல்பு வாங்கிடுவேனோன்னு சந்தேகமா இருக்கு... நீங்க பதிவை ஆதரிக்கிறீங்களா எதிர்க்கிறீங்களா... அத மொதல்ல சொல்லுங்க :-) ஏன்னா வஞ்சபுகழ்ச்சி அணிக்கு பெயர் பெற்றவராச்சே நீங்க அவ்வ்வ்வ்வ்

    உங்கம்மாவாவது நீதிவிசாரணைக்கு உட்படுத்துனாங்க... எங்கம்மா கிட்ட திட்டு அடி வாங்கிட்டு அழுதிட்டிருக்குறத பார்த்து என் தம்பி சிரிப்பான் பாருங்க....... ஸ்ஸ்ப்பா

    //(டிஸ்கி: பதிவில் ஏதும் உள்குத்து இருக்காது என்ற முடிவோடு முதல் நாளே போட்டுவிட்ட பல்ப் பற்றி கவலை இல்லா கமென்ட் இது)//

    ஹி...ஹி...ஹி.. ஒரு முடிவோடு தான் வந்துருக்கீங்க போல...

    ReplyDelete
  35. @ஹேமா
    மிக்க நன்றி ஹேமா... இந்த உயர்த்துதல் தான் ஆதிக்கத்தை நொடிக்க விடாமல் செய்யுது :-(

    வருகைக்கு நன்றி ஹேமா...

    ReplyDelete
  36. என்ன ஒரு ஆதங்கமான பதிவு..நீங்கள் சொல்வதில் ஒரு சில வரிகள் மட்டுமே எங்க வீட்டில் ஒத்து போகுது..மற்றப்படி எங்கள் வீட்டில் பாகுபாடுகள் இல்லை...

    ReplyDelete
  37. இதுக்கெல்லாம் போய் திட்டுவாங்களா...நல்லா மொத்தப்போறாங்க...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  38. அஸ்ஸலாமு அலைக்கும்...

    தெளிவில்லாத விசயத்தில் இறைவசனதிற்கேற்ப நான் கருத்து சொல்லுவதில்லை. பதிவின் சாரம்சத்தை நன்கு உணர்ந்தே உள்ளேன்.

    "சமம்" குறித்த கருத்தை பொதுவாகவே சொன்னேன். இந்த பதிவு குறித்தான கருத்தில்லை அது. ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்லும் சிலர் இந்த பதிவை படிக்கலாம் என்பதாலேயே பொதுவாக அந்த கருத்தை சொல்லி வைத்தேன்.

    அந்த பின்னூட்டத்தை போஸ்ட் செய்த பிறகே யோசித்தேன், நீங்கள் தவறாக நினைத்துவிட போகின்றீர்கள் என்று. அதுபோலவே நினைக்குமாறு செய்துவிட்டது அந்த பின்னூட்டம்.

    இறைவனுக்காக மன்னிக்கவும்.

    வஸ்ஸலாம்,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ.

    ReplyDelete
  39. வணக்கம் அக்கா,
    எந்தக் குழந்தையும் மண்ணில் பிறக்கையில் நல்ல குழந்தைகளே...
    அவர் நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே!
    எனும் ஆன்றோர் வாக்குத் தான் இப் பதிவினைப் படித்து முடிக்கையில் மனதில் தோன்றுகின்றது.

    உண்மையில் எமது சமூகம் தான் தம்மைச் சுற்றிய காரணிகளைத் தோற்றுவிக்கின்றது.
    பெண்களைச் சுற்றி அவள் வாழும் சமூகத்தினால் அவளது வயதின் அடிப்படையில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் தான் அப் பெண்ணின் எதிர்கால வாழ்க்கையில் ஆதிக்கம் என்ற அடைமொழியின் கீழ் அவள் வாழ்வு செல்வதற்கு காரணமாக அமைகின்றது.

    இதனை லாஜிக் உதாரணங்களுடன் அருமையான கருத்துக்களாக கோர்த்து முன் வைத்திருக்கிறீங்க.
    பெண் தன்னைச் சார்ந்துள்ள கட்டுப்பாடுகள் சிலவற்றை களைகின்ற போது தான் ஆணாதிக்கம் எனும் அடிமை நிலை தானாக சமூகத்தினை விட்டு ஒழிக்கப்படும் என்பது என் கருத்து,

    தங்களின் பதிவிலுள்ள கருத்துக்களுடன் ஒன்றித்துப் போகின்றேன்,

    நல்ல பதிவு.

    ReplyDelete
  40. ஆமினா,நீங்கள் சொல்லியிருக்கும் பெரும்பாலான விஷயங்கள் நான் பழைய தமிழ்ப்படங்களில்(மட்டும்தான்) பார்த்திருக்கிறேன்.அதிர்ஷ்டவசமா எங்கூரு(கிராமத்து)ப் பக்கமும் இப்படியான நிலைமை இல்லை!

    /இன்னும் முன்னேறாத கிராமங்களில் இருக்கேன் :-)/எழுதுவதை அப்படியே நீங்கள் சொல்லியிருக்கும் அந்தப் பெண்மணிகளிடமும் சொல்லி விழிப்புணர்வு ஊட்டுங்க.உங்கள் சமுதாயப்பணிக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  41. ஆமினா said...
    (நீங்க இளையான்குடின்னு நெனைக்கிறேன்)
    நீங்கள் nidurali மீது ஒரு சொட்டு குத்து வையுங்கள் அவர் எந்த ஊர் (நீடூர்) என்று தெரிந்துவிடும்
    ----------------------------------------------
    nidurali கூறியது...

    ஆண்கள் மனதையும் கலங்க வைக்கும் கவிதையாகி கோடையிடியாக தாக்கும் வலிமை வாய்ந்தது . வாழ்த்துகள்.
    ஆனால் காலம் மாறி பெண்கள் செயல்பாட்டினால் ஆண்கள் வாயடைத்து தலையாட்டும் பொம்மையாகி இருகின்றதனையும் பார்க்க முடிகின்றது .அதுவும் பெண்கள் எழுதிய கவிதையில் காணலாம்.
    அவர்களிடத்தில் ஆணாதிக்கம் உருவாகியதற்கும் அதை அழியாமல் பாதுகாத்து வருவதற்கும் முழு பொறுப்பு பெண்கள் தான் என்பதை பற்றிய பதிவு தான் இது
    குட்டி சுவர்க்கம்: ஆணாதிக்கம்- பெண்ணே தான் காரணம்
    http://kuttisuvarkkam.blogspot.com/2012/01/patriarchy-patriarchy.html
    Plese visit
    http://niroodai.blogspot.com/2012/01/blog-post_20.html

    ReplyDelete
  42. முதல் பத்தியைப் படித்துவிட்டு உங்களை செமையாக திட்டணும் என்றிருந்தேன்..

    ReplyDelete
  43. நீங்கள் சொல்லும் நடைமுறைகள் இப்போது குறைந்து வருகிறது..
    அதாவது பெண்கள் என்றால் பொம்மைபோல், கணவனுக்கு பயந்து, எதிர்த்து கூட பேசாமல்.. என்பதுபோல..
    இப்ப யாருங்க இப்படி இருக்காங்க?

    ReplyDelete
  44. குழந்தைகள் முன் ஆண் பெண் சமம் என்பதை உணர்த்தும் வகையில் நடந்துகொள்ளச் சொன்ன கருத்துக்கள் யதார்த்தம்.

    ReplyDelete
  45. //Your comment will be visible after approval.//


    திட்றவங்க திட்டிக்கங்க.. வாங்கிகட்டிக்க தயார்னு சொல்லிட்டு இப்படி செஞ்சா என்ன அர்த்தம்????

    ReplyDelete
  46. அன்புநிறை சகோதரி,
    பதிவைப் படித்தேன்.
    பெண்களுக்கான படிப்பறிவு குறைந்திருந்த காலகட்டத்தில்
    இப்படியான அறிவுரைகள் அம்மாக்களிடமிருந்து மணப் பெண்களுக்கு பரிமாறப்பட்டது என்பது உண்மை. அன்றைய காலகட்டத்தில் கணவனின் துணையும் தயவும் இல்லாது போனால் அந்த பெண்ணால் தனித்து வாழ முடியாது என்ற காரணங்கள் தான் காட்டப்பட்டது.
    பெண்கல்வி வளர வளர இந்த எண்ணங்கள் சற்று குறைந்து கொண்டே வருகிறது என்றே கூறலாம்..
    ஆனாலும் முற்றிலும் மாறவில்லை. பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையே இனம் ஒன்று தான் வேறுபாடு என்ற நிலை வரும் நாள் வரும்போது இதெல்லாம் மறைந்தே போய்விடும்.

    நீங்கள் கூறிய அத்தனையும் உண்மைகள். ஏற்றுக்கொள்ளக் கூடியவை..
    நீங்கள் சமுதாயத்தில் அலசிய விடயங்களில் நான்காவதையும் ஆறாவதையும் நான் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். வரதட்சணைக்கு முக்கிய காரணமே ஒரு பெண் தான்.

    ஆனால் 1 ,2 ,3 ,5 ஆகியவை எல்லாம் தற்போது குறைந்து வருகிறது சகோதரி. இன்னும் சில கிராமிய மாமியார்கள் தான் இப்படி முகத்தை ஒளித்துக் கொள்கிறார்களே தவிர எல்லோரும் அல்ல.....

    அருமையான விவாதம்...

    ReplyDelete
  47. சலாம் சகோ ஆமினா,

    நான் உள்ளே வரலாமா???? ஹி .. ஹி .. ஹி பெண்கள் கூட்டம் அலை மோதும் அதான் கொஞ்சம் பயமா இருக்கு.

    ReplyDelete
  48. மிக தைரியமாக சுய விமர்சனம் செய்து கொண்டதற்காக பாராட்டுக்கள். அடிமை படுத்த நினைப்பதில் ஆண் பெண் பேதம் எல்லாம் கிடையாது . ஆனால் குறிப்பாக திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு நடக்கும் கொடுமைகளில் பெரும்பாலானது பெண்களால் தான் ஏற்படுகிறது. மற்ற சமூகங்களைப் பற்றி அவ்வளவ்வாக எனக்கு தெரியாது. ஆனால் இஸ்லாமிய சமூகத்தில் பையனின் அம்மாதான் பெரும்பாலும் வரதட்சணை லிஸ்டுகளை பெண் வீட்டாரிடம் கூறுகிறார்கள். அடுத்தவரிடம் பிச்சை எடுத்து சாப்பிட எப்படி தான் மனசு வருதோ????

    ReplyDelete
  49. நெறைய இருக்கு சகோதரி... பேசாம இதுக்கு ஆதரவு பதிவு ஒன்னு போற்றலாமான்னு யோசிக்கிறேன்... எதிர் பதிவு எழுதி எழுதி போர் அடிச்சிருச்சு....ஹி..ஹி ..ஹி

    ReplyDelete
  50. /* வீட்ல எல்லாரும் சாப்பிட்டதுக்கு அப்பறமாதான் சாப்பிடணும். */

    இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்... உங்க கிட்ட சொல்றதுக்கு என்ன.. இப்பொழுதெல்லாம் கடைசியா கூட நமக்கு கிடைக்க மாட்டேங்குது.... அப்படி இல்லையா, தோசையா போட்டு கொல்றாங்க....

    எனக்கு பிறகு என் பொண்டாட்டி சாப்பிட்டு நான் பார்த்ததே இல்ல சகோ... ஹ்ம்ம் .. விடுங்க... வருஷம் full லா பொலம்புற அளவுக்கு விஷயம் இருக்கு....

    நீங்க மாமியாரா ஆனா தயவு செய்து உங்க பொண்ணுகிட்ட "புருசன அடிக்காதன்னு" சொல்லி விடுங்க. எங்க சங்கம் சார்பா பாராட்டு விழா நடத்துறம்.

    ReplyDelete
  51. //பெண்ணே தான் காரணம்//

    ம்....புரியுது ஆனா புரியல

    ReplyDelete
  52. ஆண்களுக்காக வச்ச பேருதான் Wal(k)king. அது புரிஞ்சிக்காம சண்ட போட்டுக்கிட்டு :)

    ReplyDelete
  53. //வீட்ல எல்லாரும் சாப்பிட்டதுக்கு அப்பறமாதான் சாப்பிடணும்.//

    ஒன் மோர்: நீங்க சமைச்சதை கேள்வியே கேக்காம சாப்புடுங்கன்னு மிரட்டக்கூடாது.

    ReplyDelete
  54. @சிராஜ்

    Boss... நீங்க ஒரே மாதிரியா சமைக்காம வித்யாசமா சமைங்க. :)

    ReplyDelete
  55. கரெக்டாதான் சொல்லியிருக்கீங்க. உங்களுக்கு இந்த வருச நோபல் பரிசு உறுதி

    ReplyDelete
  56. நல்ல பதிவு சகோ. உங்களுடைய கருத்துக்கள்தான் எனக்கும். ஆனால் இதை நான் பல நேரங்களில் கூறி, ஆணாதிக்கவாதி என்று பல்பு வாங்கி இருக்கிறேன். பெண் கூறியதால் கொஞ்சம் நம்புவார்கள் என்று நினைக்கிறேன்.

    அப்புறம் ஒரு சில விஷயங்கள். பல பெண்கள் கணவன் சாப்பிட்டபின் சாப்பிடுவது அல்லது அவன் வரும்வரை சாப்பிடாமல் இருப்பது என்பதை காதலின் வெளிப்பாடு என்று நம்பிக்கொண்டிருப்பார்கள். ஆனால் ஆண்கள் இதை விரும்புவதில்லை அல்லது கண்டுகொள்வதில்லை. அதே போல பெரும்பாலான வீடுகளில் தங்கை அண்ணனை போடா என்று கூறினால் கண்டுகொள்ளப்படுவதில்லை, ஆனால் தங்கையை போடி என்று கூறினால், "அதென்ன பொம்பள புள்ளையை வாடி போடின்னு கூப்பிடுறது?" என்று திட்டுவார்கள்.

    புகுந்த வீட்டுக்கு செல்லும் பெண்ணிடம் சொல்லப்படும் அறிவுரைகள், மேனேஜ் செய்துகொள் என்ற நோக்கத்தில் சொல்லப்படுபவை. ஆனால் அவை பெண்ணை அடிமை படுத்தும் அர்த்தமாக மாறிவிடுகிறது.

    ஆண் செய்யும் எல்லாவற்றையும் செய்து விடுவதாலேயே பெண் சம உரிமை பெற்று விட்டாள் என்பது மிகப்பெரிய முட்டாள்தனம். அருமையாக கூறி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  57. @நீடூரலி அப்பா
    தெரிந்துக்கொண்டேன். வாஞ்சூர் அப்பாவுக்கு சகோதரர் என்ற எண்ணத்தில் நீங்களும் இளையான்குடி என எண்ணி வைத்திருந்தேன் :-)

    அருமையான கவிதை பகிர்வுக்கு நன்றி அப்பா.

    //ஆனால் காலம் மாறி பெண்கள் செயல்பாட்டினால் ஆண்கள் வாயடைத்து தலையாட்டும் பொம்மையாகி இருகின்றதனையும் பார்க்க முடிகின்றது .அதுவும் பெண்கள் எழுதிய கவிதையில் காணலாம்.//
    நிச்சயமாக காலம் மாறி வருவது கண்கூடு தான். பலர் //பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. (ஆதாரம்- குர்ஆன் 2:228)// என்ற இறைவசனத்தை முன்னிறுத்தி செயல்படுகின்றனர். சில பழமைவாத பெண்களை சாடியே இந்த கட்டுரை. என் பதிவை தங்கள் முகநூலில் பகிர்ந்தமைக்கு ஜஸக்கல்லாஹ் ஹைர்

    இறைவன் உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நல்வாழ்வளிக்க வேண்டுகிறேன்,

    ReplyDelete
  58. @இந்திரா
    //முதல் பத்தியைப் படித்துவிட்டு உங்களை செமையாக திட்டணும் என்றிருந்தேன்..//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
    இப்ப என்ன குறைஞ்சு போச்சு.. அப்படியே கொட்டுங்க :-)

    ReplyDelete
  59. @இந்திரா
    //இப்ப யாருங்க இப்படி இருக்காங்க?//
    ஹி...ஹி...ஹி...
    கிராமத்து பக்கம் வந்து பாருங்க :-) பெண்களால் தான் பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற உண்மை நிலமை புரியும்.

    ReplyDelete
  60. @இந்திரா
    //குழந்தைகள் முன் ஆண் பெண் சமம் என்பதை உணர்த்தும் வகையில் நடந்துகொள்ளச் சொன்ன கருத்துக்கள் யதார்த்தம்.//

    மிக்க நன்றி இந்திரா. பஞ்சு மரத்தில் இப்பவே ஆணி குத்திட்டா பின்னாலில் சிரமப்பட தேவையில்லை தானே :-)

    ReplyDelete
  61. @இந்திரா
    ////Your comment will be visible after approval.//


    திட்றவங்க திட்டிக்கங்க.. வாங்கிகட்டிக்க தயார்னு சொல்லிட்டு இப்படி செஞ்சா என்ன அர்த்தம்????//

    என்ன்ன்னா ஒரு கொலவெறி??????

    ReplyDelete
  62. @சகோ மகேந்திரன்
    ஆம் சகோ. பல பெற்றோர்கள் பயந்தது அதே காரணத்துக்கு தான். பெண்கல்வி வளர்ந்த பின்னும் இன்னும் அதன் பாதிப்பு தொடர தான் செய்கிறது. பெண்கள் ஆபரணங்கள் அணிவதற்கும் வயது வரம்பு உண்டு என சமீபத்தில் தான் உணர்ந்தேன் (30 வயதான உறவினர் கொலுசு போடவில்லை. ஏனென்று கேட்டால் மாமியார் திட்டுறாராம். குழந்தைவந்த பிறகு எதற்கு சின்னபுள்ள மாதிரி கொலுசு போட்டுட்டு திரியுறன்னு).
    //ஆனாலும் முற்றிலும் மாறவில்லை//
    இதான் இக்கட்டுரையின் சாரம். ஆண்களே கண்டுக்கொள்ளாத விஷயங்கள் ஏன் வம்படியாய் பெண்கள் இழுத்து செய்ய வேண்டும்? தன்னை அடிமையாக காட்ட வேண்டும் என்பதே என் கருத்தும். அதை சரியாக நீங்களும் புரிந்துக்கொண்டீர்கள். மிக்க நன்றி

    1,2,3,5 ஆகியவை எல்லாம் தற்போது குறைந்து வருகிறது சகோ. மறுப்பதற்கில்லை. ஆனாலும் முற்றிலும் மாறவில்லை :-) அடுத்த நம் தலைமுறையில் இந்த நிலை நிச்சயம் மாறும் என்பதற்கு தற்காலத்தில் நிகழும் சில மாற்றங்களே சாட்சி


    வருகைக்கும் அருமையான சிந்திக்கவைக்க தூண்டும் கருத்துக்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரர் மகேந்திரன்

    ReplyDelete
  63. @சகோ சிராஜ்
    வ அலைக்கும் சலாம் வரஹ்...

    //நான் உள்ளே வரலாமா???? ஹி .. ஹி .. ஹி பெண்கள் கூட்டம் அலை மோதும் அதான் கொஞ்சம் பயமா இருக்கு//

    நீங்க தான் எனக்கு ஆதரவு பதிவு போடுறதா சொல்லிட்டீங்கள... அதுனால தைரியமா வரலாம் ஹி...ஹி...ஹி...

    ReplyDelete
  64. @சகோ சிராஜ்
    //மற்ற சமூகங்களைப் பற்றி அவ்வளவ்வாக எனக்கு தெரியாது. ஆனால் இஸ்லாமிய சமூகத்தில் //
    இக்கட்டுரையும் எம் சமூகத்தில் நடத்தும் சில அவலங்களின் தொகுப்பு தான். அடிமைபடுத்துவதில் ஆண் பெண் பேதம் இல்லை என்ற போதும் ஆண்கள் ஏற்படுத்தாத சில விசயங்களை சமுதாயத்தில் புகுத்தியதில் பெண்களின் பங்கு எக்கச்சக்கம் என்பதை மறுப்பீர்களா சகோ. இப்படி தன்னை அடிமைப்பெண்ணாக காட்டிக்கொண்டதன் விளைவு தான் பெண்களின் பின்தங்கிய நிலைக்கு காரணம் என்பதே என் கருத்து,

    //அடுத்தவரிடம் பிச்சை எடுத்து சாப்பிட எப்படி தான் மனசு வருதோ????//
    என்னுடைய இந்த கட்டுரை படிக்கவில்லை என்றால் பாருங்கள். இதையே தான் நானும் கூறியுள்ளேன் :-) கருத்தொற்றுமை??? அல்ஹம்துலில்லாஹ்
    http://kuttisuvarkkam.blogspot.com/2011/10/blog-post_15.html

    ReplyDelete
  65. @சகோ சிராஜ்
    //நெறைய இருக்கு சகோதரி... பேசாம இதுக்கு ஆதரவு பதிவு ஒன்னு போற்றலாமான்னு யோசிக்கிறேன்... எதிர் பதிவு எழுதி எழுதி போர் அடிச்சிருச்சு....ஹி..ஹி ..ஹி//

    ஹி..ஹி...ஹி...

    ஆதரவு பதிவுக்கு ஆதரவு பதிவுன்னு போயிட்டே இருக்கும் பரவாயில்லையா ஹி...ஹி...ஹி...

    ReplyDelete
  66. @சகோ சிராஜ்
    //இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்... உங்க கிட்ட சொல்றதுக்கு என்ன.. இப்பொழுதெல்லாம் கடைசியா கூட நமக்கு கிடைக்க மாட்டேங்குது.... அப்படி இல்லையா, தோசையா போட்டு கொல்றாங்க....
    //

    சகோ சிராஜ். உங்கள் இந்த கமென்ட்டை பார்த்து அன்றே என்னை மீறி சிரிப்பு வந்தது. என் அத்தை (மாமியார்) பார்த்து என்னமோ ஆச்சுன்னு புலம்பிட்டு போனாங்க அவ்வ்வ்

    இப்ப படிக்கும் போதும் மீண்டும் சிரிக்க தோன்றியது. ஹைர்

    நீங்க கொடுத்து வச்ச மனுஷர் சகோ சிராஜ். எல்லா பெண்களும் என் மதனி மாதிரியே பெண் உரிமையை தங்கள் வீட்டில் நிலைநாட்டினால் நான் ஏன் வருஷம் fullல்லா பொலம்புற அளவுக்கு போறேன் :-)

    //நீங்க மாமியாரா ஆனா தயவு செய்து உங்க பொண்ணுகிட்ட "புருசன அடிக்காதன்னு" சொல்லி விடுங்க. எங்க சங்கம் சார்பா பாராட்டு விழா நடத்துறம்.///

    ஹா...ஹா...ஹா...
    என்னைய வச்சு காமீடி,கீமீடி????????
    எனக்கு மட்டும் இல்லை. இஸ்லாமிய கொள்கை வழுவாது கடைபிடிக்கும் ஆண்களாக அனைவரும் மாறும் போது அனைத்து மாமியார்களுக்கும் உங்கள் டீக்கடை,மெட்ராஸ்பவன் சங்கம் மூலமா பாராட்டு விழா நடத்தக்கூடும் :-)

    வருகைக்கும் அழகிய பின்னூட்டத்திற்கும் நன்றி சகோதரர்

    ReplyDelete
  67. @மனசாட்சி
    ////பெண்ணே தான் காரணம்//

    ம்....புரியுது ஆனா புரியல//

    நானும் அப்படிதான் புரியாம சுத்திட்டிருக்கேன்.. வாங்க ஜோதியில் ஐக்கியமாகலாம் அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  68. @சகோ சிவகுமார்
    //ஆண்களுக்காக வச்ச பேருதான் Wal(k)king. அது புரிஞ்சிக்காம சண்ட போட்டுக்கிட்டு :)//

    ஆணாதிக்கப்பதிவர் :-)

    ReplyDelete
  69. @சகோ சிவா
    //ஒன் மோர்: நீங்க சமைச்சதை கேள்வியே கேக்காம சாப்புடுங்கன்னு மிரட்டக்கூடாது.//

    ஹி...ஹி...ஹி..
    அதெல்லாம் கணக்குல யாரு சேர்க்க சொன்னா? அவ்வ்வ்வ்

    ReplyDelete
  70. @சகோ சிவா
    //

    Boss... நீங்க ஒரே மாதிரியா சமைக்காம வித்யாசமா சமைங்க. :)//

    ஓ!!!!!!! வீட்டில் சகோ சிராஜ் தான் சமையலா??????? சொல்லவே இல்ல.... :-)

    ReplyDelete
  71. @ராஜி
    நோபல் பரிசை மேடையேறி வாங்கினா ஒருநாள் மட்டும் தான் நியூஸ்ல வருவேன். அதனால "என்னை கொல்ல சதிதிட்டம் நடக்குது-இது உளவுதுறையின் எச்சரிக்கை"ன்னு வீட்டில் இருந்துக்கிட்டே பேட்டி கொடுத்தா ஒரு வருஷத்துக்க்கு எல்லா ஹெட்லைன்லையும் நான் தான். சீக்கிரம் தேதி சொல்லுங்க நோபல் பரிசுக்கு :-) ஹி..ஹி...ஹி..

    ReplyDelete
  72. @பாலா
    //பெண் கூறியதால் கொஞ்சம் நம்புவார்கள் என்று நினைக்கிறேன். //
    பல விவாதங்கள் நடத்திய பிறகு தான் பெண்களே பெண்கள் தான் காரணம் என ஒப்புக்கொண்டனர் சகோ.

    //
    ஆண் செய்யும் எல்லாவற்றையும் செய்து விடுவதாலேயே பெண் சம உரிமை பெற்று விட்டாள் என்பது மிகப்பெரிய முட்டாள்தனம்.//
    அப்படி சொல்லும் சில கவிதைகளையும் ஆட்களையும் பார்க்கும் போது சிரிக்கவும் பரிதாபப்படவும் தான் சகோ முடிகிறது. பாவம் ஆணாதிக்கத்தின் ஆணிவேரை தேடி ஆராயாமல் நுனிபுல்லிலேயே காலத்தை கழிக்கிறார்கள்!!!!

    நீங்கள் சொல்வது போல் கணவன் சாப்பிடும் வரை காத்திருப்பது என்பது சுத்த முட்டாள்தனம். அவரவர்க்கு பசிச்சா சாப்பிட வேண்டியது தானே... இதில் ஏன் காதல் என்ற ஒற்றை வார்த்தையை செலுத்த வேண்டும். காதலை வெளிபடுத்த வேறு வழியா இல்லை? கம்பெனி கொடுக்க தான் காத்திருக்கேன்னு சொல்லிட்டு போக வேண்டியது தானே... அதையே மரபாக, கலாச்சாரமாக கடைபிடித்து அடுத்த தலைமுறைக்கும் திணிக்கும் அவலத்தை நினைத்தால் தான் பாட்டிகள் மீது கோபம் வருகிறது.

    அழகிய பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சகோ பாலா

    ReplyDelete
  73. வலைச்சரத்தில் இன்று இந்த பதிவு. நேரம் கிடைத்தால் வருகை தாருங்கள். தங்களின் கருத்தினையும் தமிழ்மண வாக்கினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
    http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_17.html

    ReplyDelete
  74. சிந்திக்க வைத்த பதிவு..
    வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)