உன்னை போல் இன்னும்
யாரையும் கண்டதில்லை
நீ பேசும் மழலைக்கு முன்
எதுவும் உயர்வில்லை
செல்லமே உன்னை கொஞ்சி அழைத்திடவே
பல பெயர்களை தேடினேன்
செல்லமாய் என்னை நீ அழைப்பது போல்
என்னம்மா கூட கொஞ்சியதில்லை
உறக்கத்திலும் புன்னகையால் மலரும் உன்னை காணவே
இரவெல்லாம் விழித்திருப்பேன்
முத்தமிட்டு என்னை எழுப்பும் சுகத்திற்காகவே
விடிந்தும் இமை மூடி நடிப்பேன்
இதழ் விரித்து சிரிக்கையில்
இன்று பூத்த மலர்களும் தோற்றுபோனது
உடல் முறித்து எழுகையில்
உலகதிசயங்களும் உன் காலில் சாய்ந்தது
யோசித்து யோசித்து கொஞ்சி கொஞ்சி
நீ பேசும் வார்த்தைகளில்
மழை பொழியும் இன்னிசையும் இனிமையிழந்து போனது
முகம் சுளித்து கைகளை கட்டி நீ கோபம்கொள்கையில்
சுடும் நெருப்பும் தணிந்தது
என்ன தவம் செய்தேனென்று
இன்றுவரை தெரியவில்லை
மொத்த அழகும் உன்னில் சங்கமித்த ரகசியமும்
இன்றுவரை புரியவில்லை
உலகமே உன் பின்னால் வரும்போதும்
உன் நிழலாய் வாழ்ந்திட வேண்டும்
உலகமே என் கையில் சரணடைந்தாலும்
உன் அன்புக்கு உரித்தானவளாய் என் வாழ்நாளை கழித்திட வேண்டும்
யாரையும் கண்டதில்லை
நீ பேசும் மழலைக்கு முன்
எதுவும் உயர்வில்லை
செல்லமே உன்னை கொஞ்சி அழைத்திடவே
பல பெயர்களை தேடினேன்
செல்லமாய் என்னை நீ அழைப்பது போல்
என்னம்மா கூட கொஞ்சியதில்லை
உறக்கத்திலும் புன்னகையால் மலரும் உன்னை காணவே
இரவெல்லாம் விழித்திருப்பேன்
முத்தமிட்டு என்னை எழுப்பும் சுகத்திற்காகவே
விடிந்தும் இமை மூடி நடிப்பேன்
இதழ் விரித்து சிரிக்கையில்
இன்று பூத்த மலர்களும் தோற்றுபோனது
உடல் முறித்து எழுகையில்
உலகதிசயங்களும் உன் காலில் சாய்ந்தது
யோசித்து யோசித்து கொஞ்சி கொஞ்சி
நீ பேசும் வார்த்தைகளில்
மழை பொழியும் இன்னிசையும் இனிமையிழந்து போனது
முகம் சுளித்து கைகளை கட்டி நீ கோபம்கொள்கையில்
சுடும் நெருப்பும் தணிந்தது
என்ன தவம் செய்தேனென்று
இன்றுவரை தெரியவில்லை
மொத்த அழகும் உன்னில் சங்கமித்த ரகசியமும்
இன்றுவரை புரியவில்லை
உலகமே உன் பின்னால் வரும்போதும்
உன் நிழலாய் வாழ்ந்திட வேண்டும்
உலகமே என் கையில் சரணடைந்தாலும்
உன் அன்புக்கு உரித்தானவளாய் என் வாழ்நாளை கழித்திட வேண்டும்
Tweet | ||||
கவிதை அருமை
ReplyDelete@ எல். கே
ReplyDeleteமிக்க நன்றி சகோ
good!
ReplyDelete//இதழ் விரித்து சிரிக்கையில்
ReplyDeleteஇன்று பூத்த மலர்களும் தோற்றுபோனது
உடல் முறித்து எழுகையில்
உலகதிசயங்களும் உன் காலில் சாய்ந்தது//
ரசிச்சு எழுதியிருக்கீங்க.
பாசக்கவிதை ரொம்ப நல்லாருக்குது.
நல்லா இருக்கு. தன்வீர் ஷாம் உங்க குழந்தையின் பேரா? இன்னும் 2 கவிதை எழுதலாம் அந்தப் படத்தைப் பார்த்தால்
ReplyDeleteவாவ்.. ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க ஆமி.. கவிதையில் உங்க தாய்பாசம் உணர்வுகள் மேலோங்குகிறது. ரொம்ப நெகிழவைத்த கவிதை. ரொம்ப நல்லாருக்கு.
ReplyDeleteசூப்பர்....உங்களின் குழந்தையா.....
ReplyDeleteதாய்மையின் நிலையில் வந்த கவிதை தாய்மையைப் போலவே சிறப்பு :)
ReplyDeleteகவிதையும் குழந்தையும் அழகு,பெயர் ரொம்ப நல்லாயிருக்கு.
ReplyDeleteNice one :)
ReplyDeleteஸலாம் சகோ...
ReplyDeleteபதிவ ஓப்பன் பண்ணி,ரொம்ப நேரம்,அந்த குழந்தையவே பாத்துகிட்டு இருந்தேன்.பச்சிளம் குழந்தைகள் தனி அழகுதான்.அது எதற்கும் ஒப்பாகாது.வல்ல அல்லாஹ் அக்குழந்தைக்கு,எல்லா நலமும்,வளமும் அருள பிராத்திக்கிறேன்.
அதுக்கப்பரம் உங்க கவிதை.தாய்மையை உணர்த்தக்கூடிய எளிமையான வரிகள்.
தமிழ்வினை சொன்னமாதிரி,இன்னும் 2 என்ன?எவ்ளோ எழுதுனாலும்,தாய்மையின் ஆழத்தை சொல்லிட முடியாது,மழலையின் அழகையும் வர்ணித்திட முடியாது.
அன்புடன்
ரஜின்
பாப்பா அழகா இருக்கு
ReplyDeletevalarmathi said...//
ReplyDeleteமிக்க நன்றி வளர்மதி
சுந்தரா said...//
ReplyDeleteமிக்க நன்றி சுந்தரா
//தமிழ் வினை said...//
ReplyDeleteரொம்ப நன்றி சகோ
என் மகன் பெயர் தான்.
@மின்மினி
ReplyDeleteமிக்க நன்றி மின்மினி உங்க கருத்துக்களுக்கு
@ஹாஜா மைதீன்
ReplyDeleteஆமாம் என் மகன் தான். மிக்க நன்றி சகோ
@பாலாஜி
ReplyDelete//தாய்மையின் நிலையில் வந்த கவிதை தாய்மையைப் போலவே சிறப்பு :)//
மிக்க நன்றி சகோ
@ஆசியா
ReplyDeleteமிக்க நன்றி ஆசியா
பெயரும் பிடிச்சுருக்கா :))
@ரஜின்
ReplyDelete//வல்ல அல்லாஹ் அக்குழந்தைக்கு,எல்லா நலமும்,வளமும் அருள பிராத்திக்கிறேன்.//
கண்டிப்பா துஆ செய்யுங்க. உண்மையிலேயே குழந்தைகளை பற்றி சொல்லணும்னா வார்த்தைகள் தீர்ந்தாலும் முடியாதது. காதல்பற்றிய கவிதை கூட ஆரம்பம் முதல் பிரிவு வரை தான் எழுத முடியும். ஆனா தான் குழந்தை பற்றி எழுதணும்னா புதுசுபுதுசா எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம். ஏன்னா காதலை விடவும் எல்லோரும் அதிகமாய் ரசிப்பது மழலையை தானே!!!
வருகைக்கு நன்றி சகோ
@ இளங்கோ
ReplyDeleteமிக்க நன்றி சகோ!!!
@பாலா
ReplyDelete//பாப்பா அழகா இருக்கு//
மிக்க நன்றி பாலா
Kutty paappa cute paappa
ReplyDeleteஇறைவனின் ஆசி கிடைக்கட்டும்...
சுத்திப்போடுங்க.....
ReplyDeleteஅட, ஒரு திருஷ்டி பொட்டாவது வைங்க...
ஆமீனா மகனா!! க்யூட்..கவிதையும் தான் ம் வாழ்த்துக்கள்..
ReplyDeleteகவிதை மிக அருமை ஆமீ.. குட்டிப்பாப்பாக்கு 3 வயசாச்சே.. கைப்புள்ளயா இருக்கும்போது அழகா இருக்கான். திருஷ்டி சுத்திப் போடுங்க.. கண்ணு படும்.
ReplyDeleteஎனக்கு ஊர் தாமிரபரணி வளம் கொழிக்கும் நெல்லை மாநகரம்.
வாழ்த்துகள்.
அழகிய கவிதை. எல்லாம் வல்ல இறைவன் அந்த குழந்தைக்கு //எல்லா நலமும்,வளமும் அருள பிராத்திக்கிறேன்.//
ReplyDeleteகவலை என்னும் நோய்க்கு அருமருந்து - மழலையின் சிரிப்பு..
நெகிழ்வான வரிகள்..
ReplyDeleteநல்லா இருக்குங்க
குழந்தையும் கவிதையும் அழகோ அழகு
ReplyDeleteஆமி எல்லா பக்கத்லயும் தூள்கிளப்புரீங்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆமி, எல்லாவிஷயங்கள்பத்தியும் பதிவு போட்டாச்சு.அடுத்துரெசிப்பி பதிவா?!!!!!!!!!. எது பண்ணின்னாலும்
ReplyDeleteசிறப்பா பண்ரீங்க.
ஆமி ஜோரா இருக்கு.
ReplyDeleteஓய் கவிதைலாம் கூட எழுதுவிங்களா!
ReplyDeleteநல்லா இருக்கு
வாழ்த்துக்கள்
@பிரதாப்
ReplyDelete//Kutty paappa cute paappa
இறைவனின் ஆசி கிடைக்கட்டும்..//
உங்க சொல் பலிக்கட்டும் :))
வருகைக்கும் கருத்துகும் மிக்க நன்றி
//சுத்திப்போடுங்க.....
ReplyDeleteஅட, ஒரு திருஷ்டி பொட்டாவது வைங்க...//
குட்டியா வச்சுருக்கேன் பாக்கல? :))
இப்பலாம் வச்சா பயங்கரமா கத்த ஆரம்பிச்சுடுவார். ஸ்டைல்லா இல்லையாம்..
@இர்ஷாத்
ReplyDeleteஎன் பையன் ல? அதான் என்னை மாதிரி இருக்கான் :))
@ ஸ்டார்ஜன் அண்ணா
ReplyDeleteஆமாண்ணா...
இது 3 மாசமா இருக்கும் போது எடுத்தது
//திருஷ்டி சுத்திப் போடுங்க.. கண்ணு படும்.//
எல்லாம் வல்ல அல்லாஹ் பாதுகாக்கட்டும். மிக்க நன்றி அண்ணா
@ அப்துல் பாஸித்
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி
//கவலை என்னும் நோய்க்கு அருமருந்து - மழலையின் சிரிப்பு..//
உண்மை சகோ
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
@அரசன்
ReplyDeleteமிக்க நன்றி சகோ
@ லெட்சுமிம்மா
ReplyDeleteமிக்க நன்றிம்மா!!
//ஆமி எல்லா பக்கத்லயும் தூள்கிளப்புரீங்க வாழ்த்துக்கள்.//
ReplyDeleteஅதான் எங்க வீட்டுல தூள் அடிக்கடி காலியாகுதோ :))
மிக்க நன்றி கோமு
@உமா
ReplyDeleteதொடர்ந்து நீங்க வரும் போது ரொம்ப உற்சாகமா இருக்கு உமா
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
@தொப்பி தொப்பி
ReplyDelete//ஓய் கவிதைலாம் கூட எழுதுவிங்களா//
இப்படிலாம் என்னை கிண்டல் பண்ண கூடாது சொல்லிட்டேன். நான் ஏதோ கிறுக்கி வச்சா கவிதைன்னு சொல்றதா?
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ
@ சித்ரா
ReplyDelete//ஆமி, எல்லாவிஷயங்கள்பத்தியும் பதிவு போட்டாச்சு.அடுத்துரெசிப்பி பதிவா?!!!!!!!!!.//
அந்தளவுக்குலாம் நம்மள நம்பி வரவங்களுக்கு துன்பம் கொடுக்க மாட்டேன் சித்ரா... அறுசுவைக்கு தான் போட்டோ குறிப்பு கொடுக்க முயற்சி பண்றேன். நடக்க மாட்டேங்குது :(
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பா
உங்கள் பொண்ணு அப்படியே உங்களை மாதுறியே இருக்கு ஆமி..
ReplyDeleteஉன்னை போல் இன்னும்
யாரையும் கண்டதில்லை
நீ பேசும் மழலைக்கு முன்
எதுவும் உயர்வில்லை
சரியா சொன்னீர்கள்,
அழகு சிரிப்பும்
அற்ப்புத பிறப்பும்
கடைக் கண் மிதப்பும்
கண் கொள்ளா காட்சி
மானாட மயிலாட
கூட நானும் ஆட
கூடியிருந்தோரும் இசை பாட
வாடாத மல்லிக்கும் இலக்கணமே
உமது செல்வன்.
த்தூப்..த்தூப்...த்தூப்..தப்பா நினைச்சுக்ராதியே..யாரு கண்ணும் பட்டுடக் கூடாதுன்னு தலை சுத்திப் போட்டேன்.அதுக்காக காசைலாம் தேடக் கூடாது.
@ அந்நியன்
ReplyDelete//உங்கள் பொண்ணு அப்படியே உங்களை மாதுறியே இருக்கு ஆமி..//
எனக்கு பொண்ணு இருக்குற விஷயம் நீங்க சொல்லி தான் தெரியும் :))
அந்நியன் எப்போ கம்பனானார்? :)))
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ
ஆமி குழந்தை ரொம்ப அழகு அதை பார்த்ததுக்கப்பறம் எங்க கவிதை எல்லாம் தெரியுது அந்த சிரிப்பே ஆயிரம் கவிதை சொல்லுதே
ReplyDeleteரொம்ப நேரம் கழிச்சு(ரசிச்சு) பின் கவிதையை படித்தேன்
கவிதை எழுதும் ஆமிக்கு
கவிதையாகவே குழந்தை
பையன் sooooo sweet
கலக்கறீங்க ஆமி
எல்லா விஷயம் பற்றியும் எழுதறீங்க
கடவுள் உங்களுக்கும் உங்க குட்டி உயிருக்கும் எல்லா வளமும் நலமும் அருளட்டும்
// உலகமே உன் பின்னால் வரும்போதும்
ReplyDeleteஉன் நிழலாய் வாழ்ந்திட வேண்டும்//
i like this statement....
//இதழ் விரித்து சிரிக்கையில்
ReplyDeleteஇன்று பூத்த மலர்களும் தோற்றுபோனது//
அட்டகாசமான வரிகள்!!!! ரசித்து ருசித்து படித்தேன்.
ஆமினாம்மாவுக்கு மகனாக எங்கள்
ReplyDelete(நபி) பிறந்தார்
எங்களின் அறிவுக்கண் திறந்தார்
மூடநம்பிக்கைகளை தன் காலில்
போட்டு மிதித்தார்
என் சகோதரி ஆமினாவிற்கு மகனாக பிறந்த என் மறுமகனே
நம் நபியின் வழிநின்று
வீழ்ந்த நம் சமுதாயத்தை
எழுந்து நடக்க செய்வீர்களா?
ஆமினாவின் மகனா?கவிதையைப்போல் மகனும் சூப்பர்.மாஷா அல்லாஹ்.
ReplyDelete@மீரா
ReplyDelete//கடவுள் உங்களுக்கும் உங்க குட்டி உயிருக்கும் எல்லா வளமும் நலமும் அருளட்டும்//
மிக்க நன்றி மீரா...
@ரவிகுமார் கருணாநிதி
ReplyDeleteமிக்க நன்றி சகோ
@myth-buster said...
ReplyDeleteமிக்க நன்றி சகோ
@ஹைதர் அலி அண்ணா
ReplyDelete//என் சகோதரி ஆமினாவிற்கு மகனாக பிறந்த என் மறுமகனே
நம் நபியின் வழிநின்று
வீழ்ந்த நம் சமுதாயத்தை
எழுந்து நடக்க செய்வீர்களா?///
உங்கள் சொல் நிறைவேற இறைவனிடம் துஆ செய்கிறேன்.. மிக்க நன்றி அண்ணா
@ஸாதிகா அக்கா
ReplyDeleteமிக்க நன்றி அக்கா
துஆ செய்யுங்க
ஆமி, எப்படிப்பா இப்படி எல்லாம் தோணுது!!!!! நல்லா இருக்கு கவிதை & போட்டோ.
ReplyDelete@ வானதி
ReplyDeleteஇப்பலாம் வானதியோட சேர்ந்துட்டேன்ல. அதான் நானும் கொஞ்சம் கவிதை எழுத ஆரம்பிச்சுட்டேன்னு நெனைக்கிறேன் :))
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாணி
//இப்பலாம் வானதியோட சேர்ந்துட்டேன்ல. அதான் நானும் கொஞ்சம் கவிதை எழுத ஆரம்பிச்சுட்டேன்னு நெனைக்கிறேன்//haha
ReplyDeleteஏதாச்சும் நம்புற மாதிரி சொல்லுங்க, ஆமி. எல்கே பார்த்தா பொங்கி எழப்போறார்.
//vanathy said...
ReplyDelete//இப்பலாம் வானதியோட சேர்ந்துட்டேன்ல. அதான் நானும் கொஞ்சம் கவிதை எழுத ஆரம்பிச்சுட்டேன்னு நெனைக்கிறேன்//haha
ஏதாச்சும் நம்புற மாதிரி சொல்லுங்க, ஆமி. எல்கே பார்த்தா பொங்கி எழப்போறார்.//
அட இதையே நம்ப முடியலையா? என்ன செய்வேன்?????
நீங்க எல் கே கிட்ட வேணா கேட்டு பாருங்க வாணி :)
குட்டி சுவர்க்கத்தை புகைப்படத்தில் பார்த்தேன்...
ReplyDelete//அந்த குழந்தைக்கு எல்லா நலமும்,வளமும் அருள பிராத்திக்கிறேன்.//
ReplyDelete//குட்டி சுவர்க்கத்தை புகைப்படத்தில் பார்த்தேன்//
ReplyDeleteரொம்ப சந்தோஷமா இருக்கு பாரத் பாரதி
ரொம்ப நன்றிங்க
//பாரத்... பாரதி... said...
ReplyDelete//அந்த குழந்தைக்கு எல்லா நலமும்,வளமும் அருள பிராத்திக்கிறேன்.////
உங்கள் பிரார்த்தனையில் என் மகனின் வாழ்வு செழிக்கட்டும்
சான்ஸே இல்லங்க.. எவ்வளவு பாசம் வரிகளில்.. எல்லாரும் அம்மாவைப் பற்றி நார்மலாகக் கவிதை எழுதுவாங்க.. நீங்க உங்க குழந்தையைப் பற்றி எழுதியிருக்கீங்க.. சூப்பர்..
ReplyDeleteஅருமை .
ReplyDeleteகவிதையும் குழந்தையும் அழகோ அழகு. உங்களுடையதாச்சே !! இருக்காதா பின்னே??
ReplyDelete//எல்லாரும் அம்மாவைப் பற்றி நார்மலாகக் கவிதை எழுதுவாங்க.. நீங்க உங்க குழந்தையைப் பற்றி எழுதியிருக்கீங்க.//
ReplyDeleteதாலாட்டு பாடுவாங்க கேட்டிருப்போம் தானே?! அந்த குழந்தையை தூங்க வைக்க அந்த அம்மா எவ்வளவு அழகான வார்த்தைலாம் கோர்த்து வடித்து கொடுப்பாங்க? கேட்கவே அருமையா இருக்கும். தன் குழந்தை எப்படியிருந்தாலும் தாய்க்கு அது பொன்னாகவே தெரியும். அதான் தாய்மையின் சிறப்பு
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பாபு
@அப்துல் காதர்
ReplyDelete//உங்களுடையதாச்சே !! இருக்காதா பின்னே??//
ஹீ..ஹீ...ஹீ...
ஒத்துக்கிட்டீங்களா? :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
@வெங்கட்
ReplyDeleteமிக்க நன்றி சகோ
எங்கள் ஷாம் க்கு பதிவு போடலேனா யாம் யாருக்கு பதிவு போட?
ReplyDeleteஇந்த கவிதையை படிக்கும்போதே ஒரு தாயின் ஸ்பரிசங்களின்
அந்த லேசான வெப்பம் உணரமுடிகிறது.
ஒரு குழந்தையை கையிலேந்தி கொஞ்சுவது போல்
ஒரு உணர்வு வந்து போகிறது.
பத்திர படுத்தி பாதுகாக்கப்பட்டு கொண்டிருக்கும்
ஒரு மழலையின் சுகமான தாக்குதலை அணைவரது
உணர்வுக்குள்ளும் செலுத்திவிட்ட இந்த இஞ்செக்ஷன்
வரிகள் ஒரு தாயின் தாலாட்டு,அந்த தாலாட்டிற்கு என் பாராட்டு.
குழந்தைக்கு முத்தம் கொடுக்கனுமா, அல்லது
குழந்தையிடமிருந்து முத்தம் வாங்கனுமா என்று
இரண்டாக ஒரு கேள்விகேட்டால் கொஞ்சம் யோசிக்கதான் செய்வோம்
இல்லையா? அது போல்தான்
கவிக்கு அழகு சேர்ந்த குழந்தை அழகா? அல்லது
குழந்தைக்கு கூடுதல் அழகு சேர்த்த இந்த கவி அழகா?
என்று ஒரு கேள்வியை எழுப்பிக் கொண்டு கொஞ்சம் குழம்பினேன்
எப்படியோ கண்ணுக்கு கண்ணான இந்த கவிக்குழந்தை என்றும் பத்திரமாக
வளர என்னுடைய சின்சியரான வாழ்த்துக்கள், சீரியசான பிரார்த்தனைகள்.
வாழ்த்துக்களுடனும், பிரார்த்தனைகளுடனும்
என்றும் மாறாத அன்புடன்
உண்மை நண்பன்
பஹ்ருதீன்
//உலகமே உன் பின்னால் வரும்போதும்
ReplyDeleteஉன் நிழலாய் வாழ்ந்திட வேண்டும்
உலகமே என் கையில் சரணடைந்தாலும்
உன் அன்புக்கு உரித்தானவளாய் என் வாழ்நாளை கழித்திட வேண்டும்//
அருமையாகவும் சிறப்பாகவும் பதிவு செய்துள்ளீர்கள்
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
வாழ்க வளமுடன்
பெறுமதியான தூய வரிகள்
ReplyDeleteவாழ்த்துக்கள்
அன்னைக்கே வந்து வோட்டு மட்டும் போட்டு போயிட்டேன் ஆமி...பட் கவிதை எல்லாம் நிதானமா படிக்கணும்..அப்போ தானே உணரமுடியும்...இப்போ படிச்சேன்...அற்புதம் ஆமினா,ஷாம் பாப்பா மாதிரி...நீங்கள் கவிதையில் தான் கில்லாடி னு தெரியுமே...தொடர்ந்து கலக்குங்க...:)))
ReplyDelete@BACQRUDEEN
ReplyDeleteஎன்ன சொல்றதுன்னே தெரியல. மருமகன் மேல் நீ வச்ச பாசத்த பாத்து கண் கலங்கிட்டேன் பா. இதுக்கு மேல என்ன சொறது? வார்த்தைய தான் தேடணும். நன்றி ஆஷிக்
உயிர் தோழி
ஆமினா
@ மாணவன்
ReplyDeleteமிக்க நன்றி சகோ உங்க வருகைக்கும் கருத்துக்களுக்கும்
//மகாதேவன்-V.K said...
ReplyDeleteபெறுமதியான தூய வரிகள்
வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி சகோ
உங்கள பத்தி தெரியாதா ஆனந்தி...
ReplyDelete//அற்புதம் ஆமினா,ஷாம் பாப்பா மாதிரி...நீங்கள் கவிதையில் தான் கில்லாடி னு தெரியுமே...தொடர்ந்து கலக்குங்க...:)))//
சூ..சூ..... எல்லாரும் என்னை தப்பா நெனச்சுட போறாங்க. என்னத்தஒயோ கிறுக்கி வச்சுட்டு கவிதைன்னா சொல்றன்னு போராட்டம் பண்ணிட போறாங்க ஆனந்தி :))
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி/அக்கா ஆனந்தி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ReplyDeleteமாஷா அல்லாஹ் அல்லாஹ்வின் மாபெரும் கொடை., குழந்தை செல்வம் அச்செல்வத்தை பெற்ற தாங்களுக்கும் என் வாழ்த்துக்கள்., கைர்.,
எல்லாவிதத்திலும் சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் நல்ல மனிதனாக அக்குழந்தையை உருவாக்கும் பொறுப்பு தங்களுக்கு இருக்கிறது சகோதரி., அதற்கு அல்லாஹ் தவ்ஃபீக் செய்தருள்வானாக! தாங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் குறிப்பாக அம்மழலை செல்வத்திற்கும் வல்ல ரஹ்மான் நன்மையே ஏற்படுத்துவனாக
(கவிதைக்காக குழந்தையா... அல்லது குழந்தைக்காக கவிதையா...?
என்று எண்ணத்தோன்றுகிறது உங்கள் எண்ணங்களில் உருவான எழுத்துக்கள்)அப்படியே., குழந்தையின் பெயருக்கான விளக்கமும் தந்தால் இன்னும் நலம்
கவிதை அருமை அக்கா...
ReplyDeleteவ அலைகும் சலாம் வரஹ்..
ReplyDeleteசகோதரர் குலாம் அவர்களுக்கு,
கண்டிப்பாக இச்செல்வத்தை பெற்றதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு தான் நன்றி சொல்ல வேண்டும். துஆ செய்யுங்க. தன்விர் சம்சுதீன் என்பது தான் என் மகனின் பெயர்(பெர்த் சர்ட்டிபிகேட்ல). நம்மூர் பத்தி தான் உங்களுக்கு தெரியுமே. ஞாபகார்த்தாமா பெரியவங்க பேரை வைப்பாங்க. ஆனா அப்படி சொல்ல மாட்டாங்கன்னு. என் மாமனாரோடைய அத்தா பேரு சம்சுதீன் ராவுத்தர். அப்படி கூப்பிட்டா தலைல அடிச்ச மாதிரி இருக்குன்னு செல்லமா ஷாம் என்று சொல்கிறோம்.
Thanveer (تنویر) - Rays Of Light(Origin Islamic)
Shams-ud-Din(شمس الدین) - Son of the religion (Islam).
//பிரஷா said...
ReplyDeleteகவிதை அருமை அக்கா...//
மிக்க நன்றி பிரஷா
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ReplyDeleteசகோதரி., ஸாரி பெயரின் அர்த்தம் என கேட்பதற்கு பதிலாக பெயரின் விளக்கம் எனக்கேட்டுவிட்டேன். எனினும் தங்களின் பொறுமையான நீண்ண்ண்ண்ட விளக்கத்திற்கு நன்றி.,
அல்லாஹ் நம் யாவருக்கும் நன்மை ஏற்படுத்துவானாக!
@ குலாம் அண்ணா
ReplyDeleteஎதுக்கு அண்ணா சாரிலாம்? நிறைய பேரு எங்கிட்ட சாதாரணமா கேட்கும் கேள்வி தான். அதானால் இதற்கு பதில் சொல்ல எப்போதும் நான் நேரம் எடுத்துக்கொள்வதில்ல. நீங்க கேட்டதால் பலருக்கும் மனதில் இருந்த பெயருக்கான சந்தேகம் விலகியிருக்கும் தானே?! அதுக்கு உங்கலுக்கு தான் நான் நன்றி சொல்லணும்!!
மிக்க நன்றி அண்ணா
அழகான வரிகளில் மெய்ச்சிலிர்கிறது
ReplyDeleteமனதுக்கு தாலாட்டுக்கேட்ட உணர்வு பெறுகிறது சகோதரி
வாழ்த்துகள்
இறைவன் உங்களை நலங்காக்கட்டும்
//செல்லமே உன்னை கொஞ்சி அழைத்திடவே
ReplyDeleteபல பெயர்களை தேடினேன்
செல்லமாய் என்னை நீ அழைப்பது போல் என்னம்மா கூட கொஞ்சியதில்லை// இயல்பான இதயம் வருடும் வரிகள்!
தங்கள் பதிவுகளை Follow செய்பவர்கள் பட்டியலில் இணைகிறேன், இன்று முதல்! நேரம் இருப்பின்....நான் குப்பை கொட்டும் இடத்திற்கு வருக.... madrasbhavan.blogspot.com and nanbendaa.blogspot.com
@ஹாசிம்
ReplyDeleteமிக்க நன்றிங்க. நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நலம் வாழ எந்நாளும் எல்லாம் வல்ல அல்லாஹ் துணையிருப்பான்.
@குலாம் அண்ணா போன முறை ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகிடுச்சு. son வராது sun தான் சரியானது. சம்ஸ் நா சூரியன்னு அர்த்தம். தீன் - மார்க்கம். சம்சுதீன் - மார்க்கத்தின் சூரியன் :)
@சிவகுமார்
ReplyDeleteபாராட்டுக்கும் என்னை நம்பி என்னை பின்தொடர்வதற்கும் மிக்க நன்றிங்க!!!
//்....நான் குப்பை கொட்டும் இடத்திற்கு வருக....//
சரியா சொல்லுங்க. குப்பை கொட்டும் இடத்துக்கா? சாப்பாடு கொட்டும் இடத்துக்கா? :))
அருமையான கவிதை.
ReplyDeleteஷாம் குட்டியும் அழகு
@ ஜலீலாக்கா
ReplyDeleteமிக்க நன்றி அக்கா
//திருஷ்டி சுத்திப் போடுங்க.. கண்ணு படும்.//
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDelete//பாரத்... பாரதி... said...
ReplyDelete//திருஷ்டி சுத்திப் போடுங்க.. கண்ணு படும்.////
:))
கண்டிப்பாக....
//இளம் தூயவன் said...
ReplyDeleteகவிதை அருமை.//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ
Superb..
ReplyDelete@ Thanglish Payan
ReplyDeleteTHANKS BROTHER
..படத்தை பார்த்ததில் கவிதை மறந்து போச்சி ,கவிதையை படித்ததில் படம் மறந்து போச்சி மொத்தத்தில படமும் கவிதையும் அழகோ அழகு . கவிதையில் மொத்த பாசமும் புரியுது
ReplyDelete@ஜெய்லானி
ReplyDelete//படத்தை பார்த்ததில் கவிதை மறந்து போச்சி ,கவிதையை படித்ததில் படம் மறந்து போச்சி//
மறந்து மறந்து போகுதா? எங்கேயோ கேட்ட குரல்.........
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெய்
ஹாய் ஆமி,எப்படி இருக்கீங்க?
ReplyDeleteஉங்களின் நீயில்லாத வாழ்க்கையா கவிதையையே மிஞ்சிவிட்டது இந்தக்கவிதை!!! மிகவும் அற்புதமான ஒரு படைப்பு.ஒவ்வொரு வார்த்தையையும் உணர்ந்து படைத்துள்ளீர்கள்.ஒவ்வொரு வரியுமே அற்புதம்.எனக்கு மிகவும் பிடித்த வரிகள்
//என்ன தவம் செய்தேனென்று
இன்றுவரை தெரியவில்லை
மொத்த அழகும் உன்னில் சங்கமித்த ரகசியமும்
இன்றுவரை புரியவில்லை///
அழகான குழந்தை,அழகான கவிதை,அழகான கவி,வாழ்த்துக்கள்,ஆமி.
ஹாய் நித்திலா....
ReplyDeleteநான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கேள்??
உங்க வாயாலேயே கவிதைக்கு பாராட்டு வாங்குனது ரொம்ப சந்தொஷம் ஶ்ரீ...
அடிக்கடி வாங்க!!!