நான்பாட்டுக்கு சும்மா தான் இருந்தேன்! சில நாட்களுக்கு முன் ஒரு மெயில் வந்தது! அதில் ஒரு லிங்கும் கொடுத்து "நீங்க இதை செய்தே ஆகணும் என உங்களை மிரட்டிக்கேட்கிறேன்"ன்னு சொன்னாங்க! செம ஷாக்! ம்ம்ம்ம்ம் என்ன செய்ய பிரபலமாய்ட்டாலே இதுபோன்ற பிரச்சனைகளை சமாளிச்சுதானே ஆகணும்! ஹி..ஹி..ஹி..

மொக்கைகளின் திலகம் என்றென்றும் பதினாறு பானு தான் என்னை மிரட்டிய பதிவர்! இதுக்கெல்லாம் விக்கிபிடியா  லிங்க் தர முடியாது! த்தோ... இங்கே காப்பி பண்றேன் பாருங்க
//1. ஆமினா (இந்த பதிவை நீங்க எழுதியே ஆகணும்னு உங்கள மிரட்டறேன்....:))) // ஆதாரம் காண


அதாகப்பட்டது, சின்ன வயசுல, அறியாத வயசுல ஏதாவதொரு விஷயத்திற்கு நாமலே மொக்கையா ஒரு புரிதல் வைச்சிருப்போம்.
உதாரணமா "டீவில நடிகைங்க எப்படி டக்குடக்குன்னு அடுத்தடுத்து சேலை வேற போட்டுக்குறாங்க- அவங்களுக்கு மேஜிக் தெரியும் அதான்!"
இது போல் நம் வயதுக்கேற்ற விளக்கங்களை நாமே நமக்கு நாமே கொடுத்திருப்போம். இப்ப நெனச்சா அதெல்லாம் சிரிப்பா தோணும். நாமலா இப்படி முட்டாள்தனமா யோசிச்சோம்னு!

இப்ப என்ன பிரச்சனைன்னா!!
நானும் யோசிச்சு யோசிச்சு பார்த்தேன்! சின்ன வயசுல இப்படி எந்த சந்தேகமும் எனக்கு வந்ததில்லை! இதுக்கு என்ன காரணம்னு யோசிச்சு யோசிச்சு சிந்திச்சு சிந்திச்சு அதுக்கு பிறகு தான் விடை கிடைச்சுச்சு!

"ஆமி! நீயெல்லாம் பானு, சர்மிளா மாதிரி கிடையாது! நீ பொறக்கும் போது பெரிய அறிவாளி! புத்திசாலி! அதான்  உன் சின்ன வயசுல இந்த மாதிரி மொக்கை ஆராய்ச்சிகள்லாம் நீ செய்யல! அதுனால தான் உனக்கு அந்த மாதிரி மொக்கை தத்துவங்கள் எல்லாம் தெரியல...."

மனசாட்சி சொல்றதும் சரிதான்!

ஆக

சாரி பானு! மனச கொஞ்சம் திடப்படுத்திக்கோங்க! இது உங்களுக்கு நிச்சயம் அதிர்ச்சி தரக்கூடியதா இருக்கும். ஆனாலும் உண்மையை எவ்வளவு நாள் தான் பீரோக்குள்ள பூட்டி வைக்கிறது???  அதாவது.....

நான் ரொம்ப அறிவாளியா இருந்தேனாம் (கல்லெடுக்கப்படாது!) ரொம்ப புத்தியாசலியா இருந்தேனாம் ( நோ நோ... அழப்படாது) , என்னை மாதிரி யாராலும் திங்க் பண்ண முடியாதாம் ( நோ! சிரிக்கப்படாது)....

சரி சரி! உங்களுக்காக நான் கட்டிகாத்து வைத்த சில ரகசியங்களை சொல்றேன்! இத பார்த்து 'ஆமி நீ அப்பவே அப்படியா?'ன்னு கேட்டு கண்ணு வைக்க கூடாது சொல்லிட்டேன்!

1. சின்ன வயசுல  ரோட்ல நடந்து போறச்ச, வானத்தை பார்த்தா அதுவும் நம்ம கூட வரும்...  ஷாம்க்கு கிடைச்ச அறிவாளி அம்மா (நானேதான்) மாதிரி ஆமினாக்கு கிடைக்காததால் ஆமினாவே சுயமா சிந்திக்க ஆரம்பிச்சா! விளைவு????? ஆராய்ச்சி செய்த அடுத்த 2 மணி நேரத்திற்குள் பதில் கிடைத்தது!


மனுஷபயபுள்ளைகளுக்கு கால் இருக்குற மாதிரி வானத்துக்கும் ஸ்பெசல் கால் இருக்கு! அதான் அதுவும் நடக்குது!!! - எப்பூடி :-) :-) :-)

2. அதே சின்ன வயசுல ,  சந்திரனுக்கு ராக்கெட் போச்சுன்னு அடிக்கடி பெரியவங்க பேசிக்கிட்டாங்க. ஒடனே என் விஞ்ஞான மூளை வேலை செய்துச்சு!  வாசல்லையே உக்கார்ந்து நிலாவையே  பாத்துட்டிருந்தேன்!

-நிலாவில் தரையிறங்கிய ராக்கெட்டை எப்படியாவது பார்க்கணும்னு! அவ்வ்வ்

பட் என்னால பாக்கவே முடியல... எவ்வளவுதான் நானும் முயற்சி பண்றது! சாப்பாடு டைம் நெருங்கியதால நானே முடிவுக்கு வந்தேன்!
நிலாக்கு பின்புறமா தரையிறங்கியிருக்கானுங்க!அதான் நம்மால பாக்க முடியல! :-) :-) :-)

என் அக்கா , என்னை விட அதிபுத்திசாலி!

அக்கா- " ஆமி!நிலால மனுஷன் எறங்கினதா சொல்றாங்களே!  நீ நம்புறீயா???"

ஆமி- "ஆமாக்கா... போட்டோலாம் எடுத்து அனுப்புறாய்ங்களே"

அக்கா- "அதெல்லாம் எங்கேயாவது ஒரு மலைல போயி எடுத்துட்டு வந்திருப்பானுவ! நம்மகிட்டையே கத அளக்குறானுக!

ஆமி-"நீ சொல்றதும் சரிதான்.  அந்த நிலால ராக்கெட்ட நான் பாக்கவே இல்ல..அப்ப நிலாக்கு அவங்க போகலன்னுதானே அர்த்தம்???!!!!??????


எப்படி என் விஞ்ஞான மூளை :-)

____

ஷாம் என்னை மாதிரி தான் கேள்வி கேட்பான்னு நெனச்சு நிம்மதியா இருந்தேன்! அவன் கேக்குறதெல்லாம் "நிலா ஏன் சின்னதா அப்பறம் பெருசா ஆகுது?, எப்படி அலைலாம் வருது? மீன் தண்ணீக்குள்ள தானே இருக்கு! அதுக்கு சளிபிடிக்காதா? தேங்காய்க்குள்ள தண்ணீ எப்படி வந்துச்சு?"

இவனுக்கு  பதில் சொல்றதுக்கு செரமப்படுறத விட தப்பிக்க ரொம்ப சிரமப்படுறேன்! முடியல... கடைசி வரைக்கும் விடமாட்றான்... தெரியாதுன்னு சொன்னா நெத்தியில் கையை வச்சுட்டு  "அய்யோ...உனக்கெல்லாம் ஒன்னுமே தெரியாதாம்மா? ஏன்ம்மா"ன்னு   மானத்தை வாங்குறான்! அவ்வ்வ்வ்வ் (அவன் உண்மையதான் சொல்றான் என்பது வேற விஷயம் ஹி..ஹி..ஹி..)

முக்கியமான விஷயம்! இஸ்லாமிய பெண்மணியில் கட்டுரை போட்டி பற்றிய அறிவிப்பு வெளிவந்திருக்கு! என்ன சொல்றாங்கன்னு ஒருக்கா போயி பாருங்க... க்ளிக்குக  அனைவரும் கட்டாயமாக கலந்துக்கோங்க!

தொடர்பதிவெழுத அழைக்கவிருக்கும் நபர்கள்

1. தல மெட்ராஸ் பவன் சிவா
2. சமீரா
3. ராஜி
4. அன்னு

, ,